Sunday 9 June 2013

பண்டைத் தமிழர்களின் காட்டுமிராண்டிப் போர்:


ஒருமுறை புதுமைப் பித்தன்,  கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி  (புறப்பொருள் வெண்பாமாலை (பாடல் எண்.35) என்ற வாக்கியத்திற்கு   உலகில் குரங்குதான் முதலில் பிறந்தது என்றால் அதிலும் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குரங்கு தமிழ்க் குரங்கே என்று கேலி செய்தார். இது நகைச்சுவைக்காக சொல்லப்பட்டது  என்பதால், அப்போது  யாரும் இதனை பெரிது படுத்தவில்லை. அதேபோல பெரியார் ஒருமுறைதமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழிஎன்று சொன்னார். அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்பதற்கு அவர் தொண்டர்கள், கருத்துரை தந்தார்கள். யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எது எப்படி இருப்பினும், தமிழர் நடத்திய போர் முறையைப் பார்க்கும்போதுதமிழர் வீரம்என்பது காட்டுமிராண்டிகள் செயல் என்றே தெரிகிறது.

பண்டைத் தமிழர் வரலாற்றைப் பற்றி எழுதும்போது தமிழ்நாடு இப்போது பல்வேறு, மாவட்டங்களாக இருப்பதைப் போன்று, அன்றும் இருந்தன என்பதைப் போன்ற ஒரு பிம்பத்தை உண்டு பண்ணி விட்டார்கள். உண்மையில் தமிழர்கள் ஆங்காங்கே சின்னச் சின்ன குழுக்களாகத்தான் ( TRIBES) இயங்கி வந்தனர்.ஒவ்வொருவரும் தாங்கள் இருந்த பகுதியை நாடு என்று அழைத்துக் கொண்டனர். வலுவான ஒரு குழுவினர் மற்ற குழுவினரை அடக்கி தம் நாட்டை விரிவு படுத்திக் கொண்டனர். இப்போது அரசியல் கூட்டணி இருப்பது போன்று அன்று சில குழுவினர் தங்கள் தலைமையில் குழுக்களை சேர்த்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் படையெடுத்து போரிட்டுக் கொண்டனர். மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர், மலைக்கு அப்பால் இருந்த தமிழ் மக்களை முற்றிலும் பிரித்து விட்டது. இன்றைய அரசியல் கூட்டணி மாறுவதைப் போல அன்று குழுக்களும் அணி மாறிக் கொண்டே இருந்தனர். பின்னாளில் இந்த குழுக்கள் ஒன்றோடொன்று கலந்து, சேர சோழ பாண்டியர் என்று உருவாக்கம் பெற்றன. தமிழ்நாடு என்ற பெயரில் அப்போது நாடு ஏதும் கிடையாது

தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி
பன்றிஅருவா அதன்வடக்கு நன்றாய
சீதமலநாடு புனல்நாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிரு நாட்டெண்.


என்பது ஒரு பழம் பாடல். இது அந்த காலத்தில் இருந்த செந்தமிழ் நாட்டின் பன்னிரண்டு பிரிவுகளைச் சொல்லும்.

ஆணாதிக்கம் மிக்க இந்தக் குழுக்களில் பெண்கள் அடிமையாகத்தான் வைக்கப்பட்டு இருந்தனர். அனைத்துக் குழுவினராலும் தமிழ் பொதுவாகப் பேசப்பட்டாலும் ஒவ்வொரு குழுவினரும் தமிழை ஒவ்வொருவிதமாக உச்சரித்தார்கள்.

தமிழர் போர் முறைகள்:

தமிழர்கள் போர் நெறியைப் பற்றி சொல்லும் நூல்புறப்பொருள் வெண்பாமாலைஎன்பதாகும். இதனை எழுதியவர் ஐயனாரிதனார்.  இவர் அந்தகாலத்தில் தமிழர்களிடையே இருந்த போர்நடை முறையைத் தொகுத்து எழுதியுள்ளார். அதிலுள்ள சில விவரங்களைப் பார்ப்போம்.

வெட்சியும் கரந்தையும்:

அன்று ஒவ்வொரு குழுவினரிடமும் ஆநிரைகள் எனப்படும் கால்நடைச் செல்வம் இருந்தது. அவற்றை கைப்பற்ற ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டின் மீது போர் தொடுத்தனர். இந்த போர் முறையைவெட்சிஎன்றார்கள். அப்போது அடையாளமாக வெட்சி மலர் அணிந்து சென்றனர். அவ்வாறு ஆநிரைகளைக் கவர வருபவர்களை எதிர்த்து போர் நடக்கும. இவ்வாறு எதிர் தாக்குதல் நடத்துவது கரந்தை எனப்பட்டது. அப்போது  அடையாளமாக கரந்தை மலர் அணிந்து கொண்டனர்.

வஞ்சியும் காஞ்சியும்:

சிலசமயம் மன்னனுக்கு அடுத்த நாட்டையும் தனது நாட்டுடன் சேர்த்துக் கொள்ளும் மண்ணாசை வந்துவிடும். அப்போது எதிரி நாட்டை கைப்பற்ற போர் நடக்கும். இந்த போர்வஞ்சிஎனப்பட்டது. அப்போது வஞ்சிப் பூ அணிந்து செல்வார்கள். இவ்வாறு மண்ணாசை கொண்டு வருபவர்களை எதிர்த்து போர் செய்தல்காஞ்சிஎனப்பட்டது. அப்போது காஞ்சி மலர் அணிந்தனர்.

உழிஞையும் நொச்சியும் தும்பையும்:

வேற்று நாட்டு மன்னன் கோட்டை ஒன்றைக் கட்டிக் கொண்டு அதனுள் இருப்பான். அவன் கோட்டையைக் கைப்பற்ற நடக்கும் போர் உழிஞை எனப்படும். அப்போது வீரர்கள் உழிஞைப் பூ சூட்டிக் கொண்டனர். கோட்டைக்குள் இருக்கும் மன்னன் எதிரிகளை, எதிர்த்து செய்யும் போர் நொச்சி எனப்பட்டது. அப்போது நொச்சிப்பூ அணிந்து கொண்டனர்.  

இவற்றிற்கும் மேலாக தரையிலும் போர் நடந்தது. இந்த யுத்தத்தை தும்பை என்றனர். அப்போது இருபக்க வீரர்களும் தும்பைப் பூவை அணிந்தனர். 

வாகை :

இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் பலம் உள்ள நாடு வெற்றி பெறுவது என்பது இயற்கை. வெற்றியை வாகைப் பூ சூடி கொண்டாடினார்கள். இது வாகை எனப்பட்டது.

போர்க்கருவிகளும் உபாயங்களும்:

இன்று, போர் என்றாலே மக்கள் வெறுக்கின்றனர். போர் வெறியன் என்று
முகம் சுழிக்கின்றனர். அன்றைய போர் முறையானது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும். வாளால் வெட்டிக் கொண்டும் இறப்பதாகத்தான் இருந்தன. யாரிடம் (எந்த குழுவினரிடம்) போர் வீரர்கள் அல்லது போர் (தீ வைத்துக் கொளுத்துதல் போன்ற) உபாயங்கள் அதிகம் இருந்ததோ அவர்கள் வென்றார்கள். ( கற்காலத்தில் கற்களும், இரும்பு காலத்தில் இரும்பால் ஆன ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன.) தமிழர்களின் போரின்போது, வாள், வேல், ஈட்டி, அம்பு, அரிவாள், கோடரி, வளரி, மடுவு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தினர். எதிரி நாட்டுப் பெண்கள் சூறையாடப் பட்டனர்; கணவனை இழந்த மகளிர் அவர்களது உறவினர்களால் உடன்கட்டைக்கு வற்புறுத்தப்பட்டனர்.. குடியிருப்புகள் கொளுத்தப்பட்டன. விளைநிலங்கள் அழிக்கப்பட்டன. பொருட்கள் களவாடப்பட்டன



இங்கு ஒரு சில காட்சிகள்... ...

ஆநிரைகளை கவருவதற்கு முன்னர் அந்த ஊரினைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்டனர். பின்னர் ஊரைச் சுற்றி வளைக்கின்றனர். ஊரிலுள்ள ஒருவரும் தப்ப இயலாது போயிற்று. பின்னர் ஆநிரைகளையும் பொருட்களையும் கொள்ளையடிக்கின்றனர்.



உய்த்து ஒழிவார் ஈங்கு இல்லை ஊழிக்கண் தீயே போல்
முந்து அமருள் ஏற்றார் முரண் முருங்கத் - தம் தமரின்
ஒற்றினால் ஆய்ந்து ஆய்ந்து உரவோர் குறும்பினைச்
சுற்றினார் போகாமல் சூழ்ந்து  

-          புறப்பொருள் வெண்பா மாலை (பாடல் எண்.7)
          
தனது ஊரை அழிக்க வந்த வெட்சிப் பகைவர்களை எதிர்த்து போரிடுகிறான்
ஒரு கரந்தை வீரன். அவன் தனது எதிரியின் மார்பினை தனது வேலால் பிளக்கிறான். பின்னர் எதிரியின் குடலை உருவி தனது வேலில் மாலையாக சுற்றிக் கொண்டு ஆடுகிறான்.

மாட்டிய பிள்ளை மறவர் நிறம் திறந்து
கூட்டிய ·கம் குடர் மாலை - சூட்டிய பின்
மாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட
வேல் திரிய விம்மும் துடி
-          புறப்பொருள் வெண்பா மாலை (பாடல் எண். 30)

அந்த ஊர் இதுவரை அமைதியாகத்தான் இருந்தது. சோலைகளில் குயில்கள் அகவும். மக்கள் வருவதும் போவதுமாக இயல்பான வாழ்க்கை. அந்த ஊரைக் கைபபற்ற வந்த எதிரிகள் ஊரைத் தாக்கினர். பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர்.

அயில் அன்ன கண் புதைத்து அஞ்சி அலறி
மயில் அன்னார் மன்றம் படரக் - குயில் அகவ
ஆடு இரிய வண்டு இமிரும் செம்மல் அடையார் நாட்டு
ஓடு எரியுள் வைகின ஊர்
-          புறப்பொருள் வெண்பா மாலை (பாடல் எண். 49)
        
கோட்டையை யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை என்று அனைத்து படைகளின் துணை கொண்டு தாக்குகின்றனர். கோட்டை மதிலின் மீது உயரமான ஏணிகளை வைத்து ஏறுகின்றனர். உள்ளே இருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? கோட்டை மீதிருந்து இவர்கள் மீது பாம்புகளை வீசுகின்றனர். கடிக்கப் பழகிய குரங்குகளை ஏவுகின்றனர். நெருப்பை அள்ளி அள்ளிக் கொட்டுகின்றனர். உள்ளேயிருந்து எறியும் கருவி கொண்டு பெருங்கற்களை வீசுகின்றனர்.

கல்பொறியும் பாம்பும் கனலும் கடிகுரங்கும்
வில்பொறியும் வேலும் விலக்கவும் - பொற்புடைய
பாணிநடைப் புரவி பல்களிற்றார் சார்த்தினார்
ஏணி பலவும் எயில்
-          புறப்பொருள் வெண்பாமாலை (பாடல் எண். 112)

போர் காரணமாக ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருமே இறந்து விடுகின்றனர். தனது மகனும் இவ்வாறு இறக்க ஆற்றாத ஒரு தாய், “ முன்னம் நடந்த ஒரு போரில் எனது தந்தை போரிட்டு இறந்தான். இன்னொரு போரில் எனது கணவன் போரிட்டு மாண்டான். அவ்வாறே என்னுடைய தமையன்மாரும் போரிட்டு வீழ்ந்தனர். இப்போழுது எனது மகனும் பகைவர் அம்புகளால் இறந்து பட்டான்  என்று அரற்றுகிறாள்.

கல் நின்றான் எந்தைக் கணவன் களப்பட்டான்
முன் நின்று மொய் அவிந்தார் என்னையர் - பின்நின்று
கைபோய் கணை உதைப்பக் காவலன் மேலோடி
எய்ப்பன்றிக் கிடந்தான் என் ஏறு  
                                     -  புறப்பொருள் வெண்பாமாலை (பாடல் எண்.176)

இவ்வாறு இரக்கமற்ற நெஞ்சினராகப் போரிட்டதைத்தான்தமிழர் வீரம்என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். “நமது தமிழர்கள் வீரம் செறிந்தவர்கள்என்று சொல்பவர்கள், தமிழர்கள் தங்களுக்குள் தமிழர்களோடு, ஒருவருக்கொருவர் போரிட்டார்கள் என்று சொல்வதில்லை. பகைவர்களோடு போரிட்டார்கள் என்று மழுப்புவார்கள். பகைவர்கள் யார் என்றால் இங்கே தமிழனுக்கு தமிழன்தான்.
 

அகமும் புறமும்:

அகம் எனப்படும், தமிழ் இலக்கியப் பாடல்கள் அமைதியானவை. இலக்கிய இன்பம் மிகுந்தவை. காரணம் அவை புலவர்கள் கற்பனையில் எழுந்தவை. ஆனால் பேராசை பிடித்த மன்னர்களால் நடத்தப் பெற்ற போர்களில் வெற்றி ஒன்றே இலக்கு. எனவே. காட்டுமிராண்டித்தனம்தான் இருந்தது. நாகரிகம் இல்லை


(குறிப்பு: இது ஒரு மாற்றுச் சிந்தனை கொண்ட கட்டுரை) 



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )

36 comments:

  1. அன்று நேர்மையான விரோதம் இருந்தது நேரில் சண்டையிட்டுக் கொண்டார்கள்.இப்போது துரோகமே மிஞ்சுகிறது அதனால்தான் கொலை கற்பழிப்புப் போன்றவை மிகுதியாகி விட்டன.

    ReplyDelete
  2. pl.refer: panmozhi pulavar: Mr.APPADURAI's
    PANDAIYA THAMIZHAR POR NILANGAL!
    r.k.seethapathi naidu
    pathiplans@sify.com

    ReplyDelete
  3. // பேராசை பிடித்த மன்னர்களால் நடத்தப் பெற்ற போர்களில் வெற்றி ஒன்றே இலக்கு. எனவே. காட்டுமிராண்டித்தனம்தான் இருந்தது. நாகரிகம் இல்லை.//
    பேராசை பிடித்தவர்களிடம் நாகரிகமான போரை எதிர்பார்க்கமுடியுமா? மேலும் போர் என்றாலே எதிரியை வீழ்த்துவதுதானே.
    தங்கள் கட்டுரை மாற்றுச் சிந்தனை கொண்டதாயினும் படிப்போரை சிந்திக்க வைக்கிறது என்பது உண்மை.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இது மாற்றுச் சிந்தனைபோல் இல்லை
    இதுதான் சரியான சிந்தனை
    வீரத்திற்கான இலக்கணமும் வெற்றிக்கான
    இலக்கணமும் காட்டுமிராண்டித்தனமாகத்தான்
    இருந்திருக்கிறது.அறியாத பல விஷயங்களை
    இந்தப்பதிவின் மூலம் அறிந்துகொண்டேன்
    விரிவான அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மறுமொழி> கவியாழி கண்ணதாசன் said..

    // அன்று நேர்மையான விரோதம் இருந்தது நேரில் சண்டையிட்டுக் கொண்டார்கள்.இப்போது துரோகமே மிஞ்சுகிறது அதனால்தான் கொலை கற்பழிப்புப் போன்றவை மிகுதியாகி விட்டன. //

    அன்றும் இன்றும் என்றும் யுத்தம் என்றாலே, போர்முறைகள் ஒன்றுதான். கவிஞர் கவியாழியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  6. மறுமொழி> Anonymous said...

    வணக்கம்! நான் தமிழ் இலக்கியத்தைப் பாடமாகவும்
    ( இளங்கலை, முதுகலை இரண்டிலும்) விருப்பத்தோடும் படித்தபோது பன்மொழிபுலவர் அப்பாத்துரையாரின் நூல்களையும் படித்து இருக்கிறேன். தங்கள் வருகைக்கும், தகவலுக்கும் நன்றி!

    ReplyDelete
  7. மறுமொழி> வே.நடனசபாபதி said...

    // பேராசை பிடித்தவர்களிடம் நாகரிகமான போரை எதிர்பார்க்கமுடியுமா? மேலும் போர் என்றாலே எதிரியை வீழ்த்துவதுதானே. தங்கள் கட்டுரை மாற்றுச் சிந்தனை கொண்டதாயினும் படிப்போரை சிந்திக்க வைக்கிறது என்பது உண்மை.வாழ்த்துக்கள்! //

    தங்களைப் போன்றவர்களிடமிருந்து கடுமையான விமர்சனம் வருமோ என்று நினைத்து இருந்தேன். தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  8. மறுமொழி> Ramani S said... (1, 2 )

    // இது மாற்றுச் சிந்தனைபோல் இல்லை இதுதான் சரியான சிந்தனை //

    கவிஞரின் ஆதரவான குரலிற்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  9. நல்ல சிந்தனை தமிழர்கள் தமிழ் மன்னர்கள் என்பதாலேயே அவர்கள் நடத்திய போர் இனியதாகாது, போர் என்றுமே மனிதகுலத்திற்கு எதிரிதான், போர் வெறியர்கள் எல்லோரும் மண்ணிற்கு பேராசைப்பட்ட மன்னர்களே .

    ReplyDelete
  10. நிறையவே சிந்திக்க வைத்துள்ளீர்கள்.
    //தமிழர்களின் போரின்போது,வாள்,வேல்,ஈட்டி,அம்பு, அரிவாள்,கோடரி,வளரி,மடுவு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தினர். எதிரி நாட்டுப் பெண்கள் சூறையாடப் பட்டனர்; கணவனை இழந்த மகளிர் அவர்களது உறவினர்களால் உடன்கட்டைக்கு வற்புறுத்தப்பட்டனர்.. குடியிருப்புகள் கொளுத்தப்பட்டன. விளைநிலங்கள் அழிக்கப்பட்டன. பொருட்கள் களவாடப்பட்டன.//
    கொடுமை கொடுமை கொடுமை.
    இதையெல்லாம் தமிழர் பெருமை என்று சொல் பெருமைபடுவது போல் அருவருப்பானது வேறில்லை.

    ReplyDelete
  11. மறுமொழி > தமிழானவன் said.
    ..
    // நல்ல சிந்தனை தமிழர்கள் தமிழ் மன்னர்கள் என்பதாலேயே அவர்கள் நடத்திய போர் இனியதாகாது, போர் என்றுமே மனிதகுலத்திற்கு எதிரிதான், போர் வெறியர்கள் எல்லோரும் மண்ணிற்கு பேராசைப்பட்ட மன்னர்களே . //

    தமிழானவன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > வேகநரி said...

    // நிறையவே சிந்திக்க வைத்துள்ளீர்கள் //

    வேகநரி அவர்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  13. இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை. அன்று அப்படி இருந்தோம் இன்று எப்படி இருக்கிறோம் என்பதே முக்கியம்

    ReplyDelete
  14. ஐயா, ஏனைய மொழிகளில் எழுத்துக்களே தோன்றியிராத காலகட்டத்தில் திருக்குறள் போன்ற நூலினை எழுதும் அளவுக்கு மக்கள் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஆங்கிலத்தின் வயது அறுநூறு. ஹிந்தியின் வயது முன்னூறு மட்டுமே. மொழியில்லாமல் அறிவையும் முதிர்ச்சியையும் அடுத்த சந்ததியினருக்கு எப்படி எடுத்துச் செல்லமுடியும்? நடந்த நிகழ்ச்சிகளை நம்மவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
    குணம் மற்றும் குற்றத்தில் மிகையையே நாம் எடுத்துக்கொள்வோமே.

    ReplyDelete
  15. மறுமொழி > R.Puratchimani said...

    // இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை. அன்று அப்படி இருந்தோம் இன்று எப்படி இருக்கிறோம் என்பதே முக்கியம் //

    நாட்டில் நடக்கும் மதக் கலவரங்கள், ஜாதிக் கலவரங்களைப் பார்க்கும்போது, இன்றும் நிலைமை அப்படியேதான் உள்ளது என்று தெரிகிறது. சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > Packirisamy N said...

    // நடந்த நிகழ்ச்சிகளை நம்மவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
    குணம் மற்றும் குற்றத்தில் மிகையையே நாம எடுத்துக் கொள்வோமே. //

    குணம் நாடி குற்றமும் நாடி அதில் மிகுந்தவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் தமிழ், தமிழன் என்ற முகமூடிகள் அணிந்து கொண்டு ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்களே என்ற ஆதங்கம்தான். வேறொன்றும் இல்லை. சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  17. அறியாத பல விஷயங்களை
    இந்தப்பதிவின் மூலம் அறிந்துகொண்டேன்.
    பகிர்வுக்கு வாழ்த்து.
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  18. மறுமொழி > kovaikkavi said...

    சகோதரி கோவைகவி வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  19. மண்ணாசை பொருளாசை பெண்ணாசை போர்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதில் எந்தக் காலத்திலும் காட்டுமிராண்டித் தனமே மேலோங்கி இருக்கிறது.
    தெரியாத பல செய்திகளை தெரிந்து கொண்டோம். நன்றி ஐயா!

    ReplyDelete
  20. மறுமொழி > T.N.MURALIDHARAN said...

    மூங்கிற்காற்று முரளிதரன் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  21. எல்லாக் காலத்திலும் ஆசையே போருக்குக் காரணமாக இருந்திருக்கிறது - மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை....

    ஆயுதங்களைப் பார்க்கும்போதே பயமாய் இருக்கிறதே.... அவற்றால் குத்துப் பட்டால்......

    ReplyDelete
  22. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
    // ஆயுதங்களைப் பார்க்கும்போதே பயமாய் இருக்கிறதே.... அவற்றால் குத்துப் பட்டால்..... //
    ரத்தக்களரிதான்! அன்றுமுதல் இன்றுவரை இந்த ரத்தக்களரியைத்தான் வீரம் என்று ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  23. போர் என்றுமே மனிதகுலத்திற்கு எதிரிதான்.
    தகவல்களிற்கு மிåக்க நன்றி.
    இனிய வாழ்த்து
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  24. உலகில் பல இனங்களும் இவ்வாறே காட்டு மிராண்டிகளாக இருந்தனர். இன்று வரை பல இடங்களில் இது தொடர்கின்றதுவே. தமிழர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்ன அன்று நாங்கள் நல்லவர், வல்லவர் என்ற பழம் பெருமை பேசுவோர் தான் கடுப்பைக் கிளப்புகின்றனர். கள்ளுண்ணல், கொலை, கொள்ளை, பலாத்காரங்கள், மாமிசம் உண்ணல், பாலியல் உறவுகள், விபச்சாரங்கள் எல்லாம் அன்றும் இன்றும் என்றும் மனித சமூகத்தில் இருக்கும் தான் போல.

    ReplyDelete
  25. போர் வெறி பிடித்த தமிழர்களை அமைதியாக்கியது சமண பவுத்த மதங்கள் என்பது உண்மையா? அதுக் குறித்தும் 12 தமிழ் பிரதேசங்கள் குறித்தும் விரிவாக எழுதலாமே, அறிய ஆவல்.

    ReplyDelete
  26. மறுமொழி > kovaikkavi said...

    // போர் என்றுமே மனிதகுலத்திற்கு எதிரிதான்.
    தகவல்களிற்கு மிக்க நன்றி. இனிய வாழ்த்து //

    ஆம் சகோதரி! போர் என்றாலே அழிவுதான். தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி > நிரஞ்சன் தம்பி said... ( 1 )

    // உலகில் பல இனங்களும் இவ்வாறே காட்டு மிராண்டிகளாக இருந்தனர். இன்று வரை பல இடங்களில் இது தொடர்கின்றதுவே. தமிழர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்ன அன்று நாங்கள் நல்லவர், வல்லவர் என்ற பழம் பெருமை பேசுவோர் தான் கடுப்பைக் கிளப்புகின்றனர். //

    உண்மைதான்! அன்று நாங்கள் நல்லவர், வல்லவர் என்ற பழம் பெருமை பேசுவோர் தான் கடுப்பைக் கிளப்புகின்றனர். சகோதரர் அடர்வனம் நிரஞ்சன் தம்பியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி > நிரஞ்சன் தம்பி said... ( 2 )

    // போர் வெறி பிடித்த தமிழர்களை அமைதியாக்கியது சமண பவுத்த மதங்கள் என்பது உண்மையா? //

    சரியாகத் தெரியவில்லை. அதிக நீதிநெறி நூல்களைத் தந்தது சமணம் என்பது யாவருக்கும் தெரியும். சகோதரர் அடர்வனம் நிரஞ்சன் தம்பியின் வருகைக்கும், கேள்விக்கும், யோசனைக்கும் நன்றி!

    ReplyDelete
  29. வணக்கம் ஐயா. இன்றைய 21.01.2014 வலைச்சரம் மூலம் வந்துள்ளேன் ஐயா. அருமையான படைப்பினை அசத்தலான படங்களுடன் அற்புதமாகக் கொடுத்துள்ளீர்கள், ஐயா.

    http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_21.html

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள், ஐயா. அன்புடன் VGK

    ReplyDelete
  30. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_21.html?showComment=1390260727952#c4402202584474342055

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  31. வலைச்சரம் மூலம் இங்கு வந்தேன்..நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் என்றாலும் எந்த நாட்டிலும் எந்த நேரத்திலும் போர் என்றாலே இப்படிதானே இருந்திருக்கிறது. ஒருபக்கம் காட்டுமிராண்டித்தனமாய் இருந்தாலும் மறுபக்கம் மனித நேயத்துடனும் இருந்திருக்கின்றனர் என்பதும் உண்மைதானே....நீங்கள் சொல்லியிருக்கும் கருத்திற்கு எதிராகச் சொல்லவில்லை, ஆனால் மொத்தமாக தமிழ் மன்னர்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என்று சொல்லலாமா என்பதில் எனக்கு ஐயமே! போர் வெறி கொண்ட மன்னர்கள் தமிழர்களோ மற்றவரோ ..யாராக இருந்தாலும் தவறுதான் என்று தோன்றுகிறது..ஆனால் அன்றைய வாழ்வுமுறை அப்படித்தானோ? இன்று நாம் போர் வேண்டாம் என்று யோசிப்பதால் மன்னர்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என்று தோன்றுகிறதோ...

    ReplyDelete
  32. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // வணக்கம் ஐயா. இன்றைய 21.01.2014 வலைச்சரம் மூலம் வந்துள்ளேன் ஐயா. அருமையான படைப்பினை அசத்தலான படங்களுடன் அற்புதமாகக் கொடுத்துள்ளீர்கள், ஐயா.

    http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_21.html

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள், ஐயா. அன்புடன் VGK //

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! சகோதரி கீதமஞ்சரி அவர்கள், இன்றைய வலைச்சரத்தில் எனது தளத்தினை அறிமுகப்படுத்தியதை முதல் தகவலாக தெரிவித்த தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  33. மறுமொழி > 2008rupan said...
    // வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_21.html?showComment=1390260727952#c4402202584474342055 //

    அன்பு சகோதரர் கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  34. மறுமொழி > கிரேஸ் said...

    ”தேன்மதுரத் தமிழ்” சகோதரி கிரேஸ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // வலைச்சரம் மூலம் இங்கு வந்தேன்..நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் என்றாலும் எந்த நாட்டிலும் எந்த நேரத்திலும் போர் என்றாலே இப்படிதானே இருந்திருக்கிறது.//

    போர் என்றாலே அழிவு. காட்டுமிராண்டி குணம்தான். இதில் நல்ல போர்! கெட்ட போர் என்று எதுவுமே இல்லை! அன்று போர் இன்று அரசியல். அன்று மன்னர்கள். இன்று தலைவர்கள்.

    // ஒரு பக்கம் காட்டு மிராண்டித்தனமாய் இருந்தாலும் மறுபக்கம் மனித நேயத்துடனும் இருந்திருக்கின்றனர் என்பதும் உண்மைதானே.... //

    மனிதனை விலங்கிலிருந்து பிரிப்பது ஆறாவது அறிவு. போர்க்குணம் மட்டுமே இருக்கும்போது அவன் ஒரு விலங்கு. வெற்றி மட்டுமே குறிக்கோள். ஐய்ந்தறிவோடு ஆறாவது அறிவும் சேர்ந்து இயங்கும் போதுதான் போதுதான் மனிதனுக்கு இரக்கம், தர்ம சிந்தனை போன்ற மனித நேய குணங்கள் இருக்கின்றன. எனவே இருவேறு இயல்பு கொண்ட மனித இனத்தில் நாம் மனிதநேயத்தைப் பாராட்டுகிறோம். போர்க் குணத்தை இகழ்கிறோம்.

    // நீங்கள் சொல்லியிருக்கும் கருத்திற்கு எதிராகச் சொல்லவில்லை, //

    இது மாற்று சிந்தனை கட்டுரை. எனவே விமர்சனக் கண்ணோட்டத்தில் உங்களுடைய கருத்து இந்த கட்டுரைக்கு எதிரானதாகவே இருந்தாலும் வரவேற்கிறேன்.

    // ஆனால் மொத்தமாக தமிழ் மன்னர்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என்று சொல்லலாமா என்பதில் எனக்கு ஐயமே! போர் வெறி கொண்ட மன்னர்கள் தமிழர்களோ மற்றவரோ ..யாராக இருந்தாலும் தவறுதான் என்று தோன்றுகிறது.. ஆனால் அன்றைய வாழ்வுமுறை அப்படித்தானோ? //

    போர் என்று வந்து விட்டாலே, (மற்ற இனத்தாரைப் போலவே) தமிழர்களுக்கும், காட்டுமிராண்டி குணம் வந்து விடுகிறது. இங்கு கட்டுரையில் பண்டைத் தமிழர்களின் போர் முறையைப் பற்றியும், உபயோகித்த கருவிகளைப் பற்றியும் மட்டுமே காட்டுமிராண்டித்தனம் என்று குறிப்பிட்டு இருக்கிறேன். தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்று சொல்லவில்லை.


    தமிழர்களாகிய நமது மனதில் காலங் காலமாக நாம் வீரமானவர்கள் என்ற எண்ணம் விதைக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் வீரம் என்றால் எதிராளியைத் தீர்த்துக் கட்டுவது என்றுதான் இன்றும் நினைக்கிறார்கள். தமிழன் தமிழன் மீது படையெடுத்தான்: தமிழனைக் கொன்றான். அந்தந்த மன்னரை அவரவருக்கு வேண்டிய புலவர்கள் இதனை வீரச் செயல் என்றனர். ( அவ்வையார் ஒருவர் மட்டுமே “தோற்பது நும் குடியே” என்று சுட்டிக் காட்டினார்)

    // இன்று நாம் போர் வேண்டாம் என்று யோசிப்பதால் மன்னர்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என்று தோன்றுகிறதோ... //

    இன்று மட்டுமல்ல! என்றுமே மனித இனம் போரை விரும்பியது கிடையாது. போரினால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது கண்கூடு.

    நாம் இந்த வீரத்தை (பண்பாட்டிற்கு விரோதமான ஒன்றை) அது, இது, பண்பாடு என்று இன்றும் போற்றி வருகிறோம். போற்ற வேண்டிய மனித நேயத்தை தூக்கிப் பிடிப்பதில்லை. அதன் ஆதங்கமே இந்த கட்டுரை.




    ReplyDelete
  35. //தி.தமிழ் இளங்கோ said... போர் என்றாலே அழிவு. காட்டுமிராண்டி குணம்தான். இதில் நல்ல போர்! கெட்ட போர் என்று எதுவுமே இல்லை! அன்று போர் இன்று அரசியல். அன்று மன்னர்கள். இன்று தலைவர்கள்.//
    முற்று முழுதான உண்மை. அருமையா விளக்கம் தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  36. மறுமொழி > வேகநரி said...

    // முற்று முழுதான உண்மை. அருமையா விளக்கம் தந்துள்ளீர்கள். //

    வேகநரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete