Sunday 31 March 2013

விடை பெற்றுக் கொள்கின்றேன்




ஐந்தாண்டிற்கும் மேலாக வலைப்பதிவினில்
வலைய வந்து விட்டேன்!  
ஓராண்டிற்கும் மேலாக வலைப்பதிவினில்
எழுதியும் வந்து விட்டேன்! இன்னும்
எனது பயணம் நிற்கவில்லை!

அப்படி இப்படி என்றே சமாளித்தாலும்
கண்ணில் ஒருகுறை என்பதால்
என்ன செய்ய முடியும்?

இடைக்கால ஓய்வாக செல்கின்றேன்!
ஒரு சின்ன இடைவெளி மட்டுமே!
யாரிடமிருந்தும் நான் பிரியவில்லை!
எனது எண்ணங்கள் இவ்விடமே!

விடை பெற்றுக் கொள்கின்றேன்
நண்பர்களே! தற்காலிகமாக!
மீண்டு வருவேன்!
மீண்டும் சந்திப்போம்!




  ( Second Picture Thanks to http://blogs.trb.com )

                       இதுவும் கடந்து போகும் ( THIS TOO SHALL PASS )
 










29 comments:

  1. அன்புள்ள ஐயா, வணக்கம், ஐயா.

    //அப்படி இப்படி என்றே சமாளித்தாலும் கண்ணில் ஒருகுறை என்பதால் என்ன செய்ய முடியும்?//

    உடல் நலத்தைப்பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா.

    ReplyDelete
  2. //இடைக்கால ஓய்வாக செல்கின்றேன்! ஒரு சின்ன இடைவெளி மட்டுமே!//

    சரி ஐயா, நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள், ஐயா.

    //யாரிடமிருந்தும் நான் பிரியவில்லை! எனது எண்ணங்கள் இவ்விடமே!//

    சந்தோஷம் ஐயா. உங்களை என்றும் என்னாலும் மறக்க இயலாது ஐயா.

    >>>>

    ReplyDelete
  3. மிக விரைவில் எல்லாம் சரியாகி மீண்டும் வழமை போல பதிவிட எல்லாம் வல்ல இயற்கை உங்களுக்கு துணை இருக்கும்.

    ReplyDelete
  4. //விடை பெற்றுக் கொள்கின்றேன் நண்பர்களே! தற்காலிகமாக! மீண்டு வருவேன்! மீண்டும் சந்திப்போம்!//

    மீண்டு வாருங்கள். மீண்டும் வாருங்கள். மகிழ்ச்சியுடன் காத்திருப்போம், ஐயா.

    ReplyDelete
  5. விரைவில் பரிபூரணமாக குணமடைந்து விரைவில் திரும்ப வேண்டும் சார்...

    காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  6. அய்யா, விரைவில் நலமுடன் வலைப் பூவிற்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் அய்யா. நான் மதுரை அரவிந்த கண் மருத்துவமனையின் கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவன் அய்யா. வலது கண்ணில் லென்ஸ் பொறுத்தியுள்ளேன். ஒரு வாரம் மட்டுமே, டி.வி. பார்க்காமலும் படிக்காமலும் இருக்கச் சொன்னார்கள். ஒரு மாதம் கழித்து, கண்ணாடி அணிந்து கொண்டேன் அய்யா., தற்பொழுது ஒரு சிரமமும் இல்லை. நன்றாக பார்வை உள்ளது அய்யா. அடுத்த மாதம் அடுத்த கண்ணிற்கும் அறுவை சிகிச்ச் மேற்கொள்ள உள்ளேன் அய்யா.
    இன்றைய நவீன மருத்துவத்தில் கண் சிகிச்சை என்பது ஒரு சாதாரண செயலாகி விட்டது அய்யா. கண்ணில் லென்ஸ் பொறுத்திய சில மணி நேரங்களிலேயே, தற்போழுது டிஸ்சார்ஜ் செய்து விடுகின்றார்கள்.
    விரைவில் குணமடைந்து நலமடைய , எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன் அய்யா.
    விரைவில் மீண்டும் சந்திப்போம் அய்யா.
    வணக்கம்.

    ReplyDelete
  7. விரைவில் நலமடைந்து புது உற்சாகத்துடன் திரும்பி வாருங்கள்.பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  8. விரைவில் பரிபூரணமாக குணமடைந்து விரைவில் திரும்ப பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  9. தி.தமிழ் இளங்கோ சார்,

    மனித உடலும் எந்திரம் போன்றதே தேய்மானம் உண்டு, விரைவில் சரி செய்துக்கொண்டு , தற்காலிக ஓய்வுக்கு பின்னர் புத்துணர்ச்சியுடன் வாருங்கள்,விரைவில் நலமாக வாழ்த்துக்கள்!

    ச்சியர்ஸ்!!!

    ReplyDelete
  10. விரைவில் நலமாக வாழ்த்துக்கள்! புத்துணர்ச்சியுடன் மீண்டும் வாருங்கள்

    ReplyDelete
  11. அன்பின் தமிழ் இளங்கோ

    கண் சிகிட்சை பெறுக - விரைவினில் பூரண குணமடைந்து இணையத்திற்கு வர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. விரைவில் பூரண நலம் பெற வேண்டுகிறேன் இறைவனை.

    ReplyDelete
  13. கூடிய சீக்கிரத்திலேயே பூரணமாக நலம் பெற்று மீண்டும் உற்சாகமுடன் வந்து எம்மைச் சந்திக்க உங்களுக்காய் நானும் இறைவனை வேண்டுகிறேன் ஐயா!

    ReplyDelete
  14. ஓய்வெடுத்து மீண்டும் புத்துணர்வோடு பதிவிட வாருங்கள். அதுவரை காத்திருப்போம்!

    ReplyDelete
  15. இனிய பதிவுகள். சுறுசுறுப்பான ஒரு தேனீயை போன்று ஓய்வறிய எழுத்துகள். மீண்டும் நலமுடன் பதிவுலகம் திரும்ப வாழ்த்துகள்!!!.

    ReplyDelete

  16. எனக்கு இரு கண்களிலும் அறுவைச் சிகிச்சை நடந்துஅடுத்த நாளிலிருந்தே தொலைக்காட்சி பார்ப்பது முதல் படிப்பது வரை எல்லாம் செய்யலாம் என்றார்கள். விரைவில் நல்ல குணமாக வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. இதுவும் கடந்து போகும் ( THIS TOO SHALL PASS )அருமையான விளக்கம் கொடுத்திருக்கீங்க உங்க தன்னம்பிக்கையின் வெளிப்பாடும் இதுவே...வெல்கம்!

    ReplyDelete
  18. நீங்கள் பூரண நலம் பெற்று மீண்டும் பதிவுலகத்திற்கு திரும்பி வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன் .

    ReplyDelete
  19. விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்லவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  20. விடை பெற்றுக் கொள்கின்றேன்
    நண்பர்களே! தற்காலிகமாக!
    மீண்டு வருவேன்!
    மீண்டும் சந்திப்போம்!////

    விரைவில் குணமடைந்து பதிவுலகில் புத்துணர்ச்சி பொங்க வாருங்கள்.

    ReplyDelete
  21. விரைவில் முற்றிலும் குணமடைந்து உடல் தெம்பு மற்றும் மனத்தேம்போடும் உற்சாகத்தோடும் வாருங்கள்.இறைவன் அருள் என்றும் துணை இருக்கும்

    ReplyDelete
  22. சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.




    ReplyDelete
  23. விரைவில் மீண்டும் வருக!
    இனிய விஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  24. Greetings!
    If you're looking for an excellent way to convert your Blog visitors into revenue-generating customers, join the PayOffers.in Ad Network today!
    PayOffers India which is one of the fastest growing Indian Ad Network.
    Why to Join PayOffers India?
    * We Make Your Blog Into Money Making Machine.
    * Promote Campaigns With Multiple Size Banner Ads.
    * Top Paying and High Quality Campaigns/Offers...
    * Earn Daily & Get Paid Weekly Through check,Bank deposit.
    * 24/7, 365 Days Online Customer Support.
    Click here and join now the PayOffers India Ad Network for free:
    http://payoffers.co.in/join.php?pid=21454
    For any other queries please mail us at Neha@PayOffers.co.in
    With Regards
    Neha K
    Sr.Manager Business Development
    Neha@PayOffers.co.in
    www.payoffers.co.in
    Safe Unsubscribe, You are receiving this relationship message, if you don't want to receive in the future, Reply to Unsubscribe@PayOffers.co.in Unsubscribe

    ReplyDelete
  25. வெகுவிரைவில் நலம் பெறுவீர்கள். மீண்டும் எங்கள் மனம் கவர பதிவுகள் தருவீர்கள். உடல் நலத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா

    ReplyDelete
  26. எனது இடது கண்ணில் ஏற்பட்ட கண் எரிச்சல், கண் அரிப்பு காரணமாக சிலநாட்கள் வலைப்பதிவுகள் பக்கம் அதிகம் வராமல் ஓய்வில் இருந்தேன். அண்மையில், தஞ்சையில் உள்ள ஒரு நம்பிக்கையான கண் டாக்டரைக் கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டேன். அவர் கண் ஆபரேஷன் தேவையில்லை, கண்ணாடியை (லென்ஸ்) மட்டும் மாற்றினால் போதும் என்று சொல்லி கண் சொட்டுமருந்தும் எழுதிக் கொடுத்துள்ளார். இறைவன் அருளால் இன்னும் கொஞ்சநாளில் எல்லாம் சரியாகிவிடும். வழக்கம் போல வலைப்பூ உலகில் வலம் வருவேன். எனது நலன் விசாரித்து ஆறுதலும் தைரியமும் யோசனைகளும் சொன்ன வலைப்பதிவு சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நன்றி!

    ReplyDelete
  27. thaangal kunamadaindhathum meendum thodarndhu pathivezhutha vandhathum athika santhosham tharukirathu.thoandhu santhippom pathivilum
    mudindhaal nerilum vaazhththukkaludan...

    ReplyDelete