வலைப்பதிவுகளில் அடிக்கடி நான் காணும் ஒரு வாசகம் ”இதுவும் கடந்து போகும்” என்பது. ஆங்கிலத்தில் “THIS
TOO SHALL PASS ” . இந்த வாக்கியத்தை எப்போதோ எதிலோ படித்ததாக நினைவு! உடனே நினைவுக்கு வரவில்லை. எனவே அங்கும் இங்கும் தேடியதில் எழுதியது இந்த கட்டுரை.
சாலமன் மன்னன் ( KING SOLOMON)
பண்டைய ஒன்றுபட்ட யூதா – இஸ்ரேல் நாட்டின் மன்னராக இருந்தவர் மன்னன் சாலமன் (King
Solomon). இவர் தாவீதின் குமாரர். இசுலாமியர்கள் இவரை சுலைமான் என்று அழைக்கிறார்கள். இவரது ஆட்சியில் ஜெருசலேம்(Jerusalem) நாட்டின் தலைநகராக இருந்தது. இங்கு உலகின் முதல் கோயிலை (First temple) சாலமன் கட்டியதாகச் சொல்கிறார்கள். மன்னன் சாலமனைப் பற்றி பல கதைகள் உண்டு. மன்னன் சாலமனின்
தீர்ப்புகள் ( Solomon's birth and judgments); மன்னன் சாலமனின் அறிவுக் கூர்மை (Solomon's
wisdom and knowledge); மன்னன் சாலமனின் அதிகாரமும் பெருமையும் (Solomon's
power and magnificence); மன்னன் சாலமனின் மந்திரக் கம்பளம் (Solomon's
magic carpet); மன்னன் சாலமனும் இளவரசி ஷீபாவும் (Solomon
and the Queen of Sheba; daughter of the pharaoh) என்று நிறைய கதைகள்.
சாலமன் என்றதும் எனது நினைவுக்கு வருவது சின்ன வயதில் நான் படித்த “ SOLOMON GRUNDY” என்ற ஆங்கிலக் கவிதைதான். இந்த கவிதையை 1842 –
இல் முதன் முதலில் தொகுத்து வெளியிட்டவர் James
Orchard Halliwell என்பவர்.
Solomon Grundy,
Born on a Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Grew worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday.
That was the end,
Of Solomon Grundy.
மேலே சொல்லப்பட்ட ஆங்கில கவிதை (Nursery rhyme) சொல்லும் சாலமன் க்ரண்டி, மன்னன் சாலமனைக் குறிக்கவில்லை.
மேலே சொல்லப்பட்ட ஆங்கில கவிதை (Nursery rhyme) சொல்லும் சாலமன் க்ரண்டி, மன்னன் சாலமனைக் குறிக்கவில்லை.
மன்னன் சாலமன் கேட்ட அதிசய மோதிரம்:
மன்னன் சாலமனுக்கு விசுவாசமான ஒரு அமைச்சர் இருந்தார். பெயர் பெனையா பென் யெஹோயடா ( Benaiah ben Yehoyada.) ஒருநாள் அந்த அமைச்சரிடம் சாலமன் ”அமைச்சரே! ஒரு அதிசயமான மோதிரம் ஒன்று உள்ளது. அதனை நீ கொண்டு வரவேண்டும். உங்களுக்கு அதனைக் கண்டுபிடிக்க ஆறுமாத காலம் அவகாசம் தருகிறேன். வரும் சுகோட் (Sukkot) திருவிழா சமயம் அதனை நான் என் கைவிரலில் அணிய வேண்டும் “ என்றார். அமைச்சர் உடனே “ மாட்சிமை பொருந்திய மன்னரே! இந்த உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் நான் அந்த மோதிரத்தைக் கண்டு கொண்டு வருவேன்! அந்த மோதிரத்தில் அப்படி என்ன அதிசயம் உள்ளது?” என்று கேட்டார். அதற்கு மன்னன் சாலமன் " மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவன் அந்த மோதிரத்தைப் பார்த்தால் துயரமாகி விடுவான்; துயரமாக இருக்கும் ஒருவன் அதனை பார்த்தால் மகிழ்ச்சியாகி விடுவான்” (“If a happy man looks at it, he becomes sad, and if a sad man looks at it, he becomes happy.") என்று சொன்னார்.
மன்னன் சாலமனுக்கு விசுவாசமான ஒரு அமைச்சர் இருந்தார். பெயர் பெனையா பென் யெஹோயடா ( Benaiah ben Yehoyada.) ஒருநாள் அந்த அமைச்சரிடம் சாலமன் ”அமைச்சரே! ஒரு அதிசயமான மோதிரம் ஒன்று உள்ளது. அதனை நீ கொண்டு வரவேண்டும். உங்களுக்கு அதனைக் கண்டுபிடிக்க ஆறுமாத காலம் அவகாசம் தருகிறேன். வரும் சுகோட் (Sukkot) திருவிழா சமயம் அதனை நான் என் கைவிரலில் அணிய வேண்டும் “ என்றார். அமைச்சர் உடனே “ மாட்சிமை பொருந்திய மன்னரே! இந்த உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் நான் அந்த மோதிரத்தைக் கண்டு கொண்டு வருவேன்! அந்த மோதிரத்தில் அப்படி என்ன அதிசயம் உள்ளது?” என்று கேட்டார். அதற்கு மன்னன் சாலமன் " மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவன் அந்த மோதிரத்தைப் பார்த்தால் துயரமாகி விடுவான்; துயரமாக இருக்கும் ஒருவன் அதனை பார்த்தால் மகிழ்ச்சியாகி விடுவான்” (“If a happy man looks at it, he becomes sad, and if a sad man looks at it, he becomes happy.") என்று சொன்னார்.
வசந்தகாலம் முடிந்து கோடைகாலமும் வந்தது. அமைச்சரால் எங்கு தேடியும் அந்த அதிசய மோதிரத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி ஒரு மோதிரமே கிடையாது. மன்னன் விளையாட்டாகச் சொன்னதைக் கேட்டு அமைச்சர் அதனை தேடிக் கொண்டிருந்தார். சுகோட் திருவிழாவிற்கு முதல்நாள் ஜெருசலேம் நகரின் கடைத் தெருவில் சோகமாக சென்று கொண்டிருந்தார் அமைச்சர். அப்போது வியாபாரத்தை முடித்துவிட்டு தனது பொருட்களை பழைய கம்பள விரிப்பு ஒன்றில் வைத்து மூட்டை கட்டிக் கொண்டிருந்த பெரியவர் ஒருவரைக் கண்டார். தான் வந்த காரியத்தை அவரிடம் சொன்னார். அந்த பெரியவர் தனது கம்பளவிரிப்பைத் திறந்து ஒரு தங்க மோதிரத்தை எடுத்து அதன்மேல் சில சொற்களை செதுக்கி கொடுத்தார். அந்த மோதிரத்தில் இருந்த வாக்கியத்தைப் படித்துப் பார்த்த அமைச்சரின் முகத்திலே புன்னகை தோன்றியது. மோதிரம் கிடைத்து விட்டது.
அடுத்தநாள் சுகோட் திருவிழா. அரசவையில் மன்னன் சாலமன் அமைச்சரிடம் புன்னகைத்தவாறே ” என்ன நண்பரே! பொருள் கிடைத்ததா?” என்று கேட்டார். எல்லோரும் நகைப்புடன் அமைச்சரைப் பார்த்தனர். உடனே அமைச்சர் அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் “ மாட்சிமை பொருந்திய மன்னருக்கு! இதோ!” என்று தான் வாங்கிய மோதிரத்தைக் கொடுத்தார். மோதிரத்தை வாங்கிய மன்னர் சாலமன் அதன்மேல் இருந்த வாசகங்களைப் படித்தார்.அவரது முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.
அந்த மோதிரத்தின் மேல் ” இதுவும் கடந்து போகும் (THIS TOO SHALL PASS ) “ என்ற அர்த்தம் பொதிந்த மூன்று ஹீப்ருமொழி சொற்கள் இருந்தன. அதனைப் படித்த மன்னன் சாலமனுக்கு தன்னிடம் இப்போது இருக்கும் அதிகாரம், அளவற்ற செல்வம், அறிவு யாவும் ஒருநாள் நீங்கிவிடும் என்ற ஞானம் பிறந்தது.. இதனால் அவருடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்து துயரம் வந்தது. கொஞ்சநேரம் சிந்தனையில் இருந்த மன்னன் சாலமன் தான் அணிந்து இருந்த
வைரமோதிரத்தை எடுத்துவிட்டு அமைச்சர் கொடுத்த அந்த அதிசய மோதிரத்தை அணிந்து
கொண்டார்.
பழமொழியின் உட்பொருள்:
” இதுவும் கடந்து போகும் ( THIS TOO SHALL PASS )” என்ற இந்த வாக்கியத்தின் உட்பொருள் ”எதுவும் நிலையில்லாதது” என்பதுதான். மனித வாழ்வில் மகிழ்வும் துயரமும் மாறி மாறி வருவன.எல்லையில்லா மகிழ்ச்சியில் இருப்பவனின் மகிழ்ச்சியும் ஒருநாள் முடிந்து போகும். துயரத்தையே நினைத்துக் கொண்டிருப்பவனின் துயரமும் ஒருநாள் முடிந்து போகும். எனவே எல்லாமே சிலநாட்கள் மட்டுமே.
இது ஒரு நாட்டுப்புற இலக்கியம் (Folklore) ஆகும். மக்கள் மத்தியில் சொல்லப்படும் கிராமிய நாடோடிக் கதைகளில் ஒன்று. பைபிளில் (Bible) இந்தகதை இல்லை. இந்த பழமொழியானது துருக்கி நாட்டு பழங்கதைகளிலும் பாடல்களிலும் அதிகமாக இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தனது சொற்பொழிவு ஒன்றில் இந்த வாக்கியத்தை மேற்கோள் காட்டி பேசினார். அன்று முதல் இந்த சொற்றொடர் பிரபலமாகி விட்டது.
இந்த வாக்கியம் பொறிக்கப்பட்ட ஸ்டெர்லிங் சில்வர் மோதிரம் அணிந்து கொள்வதும் நாகரிகம் (Fashion) ஆக உள்ளது.
கட்டுரை எழுத உதவியவை:
https://www.google.co.in
இந்தத்தங்களின் கட்டுரை அருமையாக உள்ளது.
ReplyDelete’இதுவும் கடந்து போகும்’ என்பதை இப்போது பலரும் சொல்கிறார்கள், எழுதுகிறார்கள்.
அதற்கான தங்களின் விளக்கம் + கதை சிறப்பாக உள்ளது.
சந்தோஷமோ துக்கமோ எதுவும் நிரந்தரம் இல்லை தான்.
>>>>>
//Solomon Grundy,
ReplyDeleteBorn on a Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Grew worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday.
That was the end,
Of Solomon Grundy.//
ஆஹா, நம் பள்ளிநாட்களை நினைவுப் படுத்தியுள்ளீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது.
பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. பாராட்டுக்கள்.
தவலுக்கு நன்றி!
ReplyDelete
ReplyDeleteஅர்த்தமுள்ள பதிவு...பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )
ReplyDelete// இந்தத்தங்களின் கட்டுரை அருமையாக உள்ளது .... ... சந்தோஷமோ துக்கமோ எதுவும் நிரந்தரம் இல்லை தான் //
திரு VGK அவர்களின் பாராட்டிற்கு நன்றி! வாழ்க்கையில் ஏற்படும் சந்தோஷமோ துக்கமோ எதுவும் நிரந்தரம் இல்லை தான் என்று சொல்லிக் கொண்டாலும் தொடர்ந்து வரும் துக்கங்கள் ஏற்படுத்தும் வடுக்கள் மனதிற்குள் மறைவதில்லை.
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...( 2 )
ReplyDelete//ஆஹா, நம் பள்ளிநாட்களை நினைவுப் படுத்தியுள்ளீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. பாராட்டுக்கள்.//
திரு VGK அவர்களுக்கு மீண்டும் நன்றி! நான் திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தபோது இந்த பாடல் (Solomon Grundy) பாடமாக இருந்ததாக நினைவு.
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > Avargal Unmaigal said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
இது ஒரு அருமையான வாசகம்! அதற்கு நீங்கள் இணைத்திருக்கும் சிறுகதையும் அருமையாக இருக்கிறது.
ReplyDeleteகதையும் அதைத்தொடர்ந்து கொடுத்திருக்கும் கருத்துரையும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteமறுமொழி > மனோ சாமிநாதன் said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > ezhil said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
அர்த்தம் பொதிந்த வாக்கியம் - அதன் ஆழத்தினை பார்க்கும்படி இருந்தது கதை....
ReplyDeleteசிறப்பான பகிர்வு நண்பரே..... வாழ்த்துகள்.
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said..
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
நல்ல பகிர்வு. விளக்கமும் கதையும் நன்று.
ReplyDeleteமறுமொழி > மாதேவி said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
ஒரு நல்ல கதையை தெரிந்துகொண்டேன் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமறுமொழி > T.N.MURALIDHARAN said...
ReplyDeleteசகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
இந்த வாசகத்தின் பின் இப்படி ஒரு கதை இருப்பதே உங்கள் இந்தப் பதிவு படித்த பின் தான் தெரிந்தது.
ReplyDeleteகருத்து செறிவு நிறைந்த வாசகம்!நிறைய யோசிக்க வைத்துவிட்டது!
துன்பப்படும்போது இந்த வாசகம் நினைவுக்கு வந்தால் சந்தோஷம் வருகிறது. சந்தோஷமாக இருக்கும் போது நினைவுக்கு வந்தால்.... நினைவுக்கு வர வேண்டமே என்று தோன்றுகிறது!
உங்கள் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் வரவழைப்பது எப்படி?
ReplyDeletefollow பட்டன் இல்லையே?
மறுமொழி > Ranjani Narayanan said... (1)
ReplyDeleteசகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > Ranjani Narayanan said... ( 2 )
ReplyDelete// உங்கள் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் வரவழைப்பது எப்படி? follow பட்டன் இல்லையே? //
சகோதரிக்கு நன்றி! எனது வலைத்தளத்தில் உள்ள FOLLOWERS எனும் இடத்தில் உள்ள Join this site என்ற வாக்கியத்தை க்ளிக் செய்து Google account மூலம் சேர்ந்து கொள்ளவும்.
நீங்களும் உங்களுடைய (திருவரங்கத்திலிருந்து என்ற) Blogger – இல் FOLLOWERS என்ற Widget ஐ வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். Google Bloggers தொடர வசதியாக இருக்கும்.
அற்புத வாக்கியம்! அபாரமான விளக்கம்!
ReplyDeleteமறுமொழி > கே. பி. ஜனா... said...
ReplyDelete// அற்புத வாக்கியம்! அபாரமான விளக்கம்! //
சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
இதுவும் கடந்து போம்.
ReplyDeleteஎனும் வாக்கியம் நிலையாமையைக் குறிப்பதாம்.
தேகம் அனித்தியம். மரணம் நிச்சயம். சிவனை மறவாதிரு மனமே எனும் வாக்கியத்திற்கு ஒப்ப
எதை நாம் இருக்கிறது என நினைக்கிறோமோ அது நிகழ்காலம்.
இருக்கிறது என்ற வார்த்தையில் முதல் எழுத்து இ. கடை எழுத்து து
இரண்டும் சேர்ந்தது இது.
இது என்பது ஆகவே இன்றைய நிலை.
இன்று என்பது நேற்று என்று ஆகும்பொழுது
இது அது ஆகிறது.
அது கடந்து போயிற்று என்பது நிதர்சனம் ஆனதால்,
ஒரு லாஜிகல் அடிப்படையில், இதுவும் அதாவது இப்பொழுதைய நடப்புகளும் நம்மை விட்டு விலகிப்போம்.
ஒருவன் தனது மகிழ்ச்சி, துயரம் இரண்டிலிருந்தும் விடுபட்டு நடப்பவைகளை ஒரு சாட்சியாக இருந்து எதுவுமே தன்னால்
நிகழவில்லை என்ற உணர்வுடன் இருந்தால், மன நிம்மதி கிடைக்கும்.
சுப்பு ரத்தினம்.
www.subbuthatha.blogspot.in
மறுமொழி > sury Siva said...
ReplyDelete// ஒருவன் தனது மகிழ்ச்சி, துயரம் இரண்டிலிருந்தும் விடுபட்டு நடப்பவைகளை ஒரு சாட்சியாக இருந்து எதுவுமே தன்னால் நிகழவில்லை என்ற உணர்வுடன் இருந்தால், மன நிம்மதி கிடைக்கும். //
தங்கள் சீரிய சிந்தனை எண்ணும்தோறும் அருமை! அருமை!
அசரீரி என்ன என நான் எழுதி முடிக்குமுன்பாகவே
ReplyDeleteஎன் பதிவினைப் படித்து விட்டீர்கள் போல் தோன்றுகிறது.
சுப்பு ரத்தினம்.
www.vazhvuneri.blogspot.com
மறுமொழி > sury Siva said...
ReplyDelete//அசரீரி என்ன என நான் எழுதி முடிக்குமுன்பாகவே
என் பதிவினைப் படித்து விட்டீர்கள் போல் தோன்றுகிறது.//
நீங்கள் எழுதி வெளியிட்ட ( PUBLISHED ) உங்கள் பதிவினைப் படித்துவிட்டுத்தான் கருத்துரை தந்து இருந்தேன்.
வலைச்சரத்தில் எனது வலைப்பக்கத்தை சிறப்பாக அறிமுகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஸ்ரீ....
மறுமொழி > ஸ்ரீ.... said...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி!
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தனது சொற்பொழிவு ஒன்றில் இந்த வாக்கியத்தை மேற்கோள் காட்டி பேசினார். அன்று முதல் இந்த சொற்றொடர் பிரபலமாகி விட்டது.
ReplyDeleteசாலமன் மன்னனைப்பற்றி நிறைய கதைகள் புத்திசாலித்தனமானவை ..
நமது கையில் ஓடும் புத்தி ரேகைக்கு சாலமன் ரேகை என்றே பெயர் ..
சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete// நமது கையில் ஓடும் புத்தி ரேகைக்கு சாலமன் ரேகை என்றே பெயர் .. //
சிலசமயம் சில தகவல்கள் மறந்து விடுகின்றன. நான் எப்போதோ ஒரு ஜோதிட புத்தகத்தில் படித்த , புத்திரேகை (சாலமன் ரேகை) பற்றிய செய்தி நினைவூட்டலுக்கு நன்றி!
வலைச்சர ஆசிரியர் பணி இனிதே முடிந்ததாங்க. தங்களின் பகிர்வு சிறப்பு. பல செய்திகளை தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteமறுமொழி > Sasi Kala said...
ReplyDeleteசகோதரி தென்றல் அவர்களது கருத்துரைக்கு நன்றி! வலைச்சரம் பணி இனிதே முடிந்தது. இனி மற்றைய பதிவர்கள் பக்கமும் புதிய பதிவுகள் எழுதுவதையும் கவனிக்க வேண்டும்.