Monday 4 March 2013

தேவை: பயோகேஸ் சிலிண்டர்கள்



பதிவு பண்ணி பதினைந்து நாளாச்சு. இன்னும் கேஸ் சிலிண்டர் வரவில்லை!”
சமையல் எரிவாயு விலை இன்னும் உயரும்
இனி கேஸ் சிலிண்டருக்கு மானியம் கிடையாது
மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைப்பு



இப்படியாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் பற்றிய செய்திகளை பத்திரிகைகளிலும் , தொலைகாட்சிகளிலும், மக்கள் மத்தியிலும்  
பேசப்படுவதை பார்க்கலாம்.







சமையலுக்கு விறகு அடுப்பு, கெரசின் ஸ்டவ் எனப்படும் மண்ணென்ணெய் அடுப்பு, கரி அடுப்பு, கேஸ் ஸ்டவ், மின்சார ஸ்டவ் ( INDUCTION STOVE),  என்று காலம்தோறும் மனிதன் தனது தேவைக்கேற்ப பயன்படுத்தி வருகிறான். மின்சார  ஸ்டவ்வை  ( INDUCTION STOVEமின்வெட்டின் காரணமாக  தேவையான நேரத்திற்கு பயன்படுத்த இயலவில்லை.  

 
இப்போது இந்தியாவில் மக்களிடையே அதிக பயன்பாட்டில் இருப்பது இயற்கை எரிவாயு எனப்படும் LPG GAS  ( Liquefied petroleum gas)  - தான். இப்போது வாகனங்களை இயக்கவும் இந்த கேஸ் பயன்படுகிறது. இதனாலும்நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வருவதாலும் தட்டுப்பாடு அதிகம். ரேஷன் முறையிலும் ஏகப்பட்ட தில்லுமுல்லு வேலைகள். சட்ட விதிகளை மீறி வீட்டு உபயோகத்திற்கான LPG கேஸ் சிலிண்டர்கள் ஓட்டல்கள், வாகனங்களுக்கு திருட்டுத்தனமாக விற்கப்படுகின்றன.

எனவே இந்த இயற்கை எரிவாயு (NATURAL GAS)   முறையிலிருந்து மாறி, உயிரிவாயு (BIO GAS) முறைக்கு நாடு மாறவேண்டும். இரண்டு விதமான முறையும் இருந்தால் எரிவாயு தட்டுப்பாடின்றி இருக்கும். ஏற்கனவே நமது நாட்டில் உயிரிவாயு (BIO GAS) பயன்பாடு இங்கும் அங்குமாய் இருந்து வருகிறது. இதுபற்றிய செய்திகள் தமிழ் நாட்டு பத்திரிகைகளிலும் வந்துள்ளன. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராலாயாவின் சக்தி சுரபி“, - திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அவர்களது சொந்த உபயோகத்திற்கென ஏற்படுத்திக் கொண்ட (பெரிய அளவிலான) பயோகேஸ் யூனிட், -  கோயம்புத்தூர், சாய்பாபா காலனியில் பிரபு என்பவரின் வீட்டில் அவரது சொந்த உபயோகத்திற்கென உற்பத்தி செய்யப்படும் பயோகேஸ் , - கடலூர் பிள்ளையார் குப்பத்தில் மக்கள் தங்களுக்காக தயாரித்துக் கொள்ளும் பயோகேஸ் பயனபாடு பரங்கிப் பேட்டையில் பயோகேஸ் யூனிட் - என்று செய்திகள் வந்துள்ளன. இவை  பயோகேஸ் பயன்பாட்டிற்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பை உணர்த்தும்.



 

ஆனாலும், இதற்கான உபகரணங்கள் இடத்தை அடைத்துக் கொள்வதாலும் பாதுகாப்பு காரணங்களினாலும் இன்னும் அதிக பயன்பாட்டிற்கு வரவில்லை.எனவே இந்த உயிரிவாயு (BIO GAS) திட்டத்தை பெரிய அளவில் தொடங்கி, கிடைக்கும் எரிவாயுவை இப்போதுள்ள கேஸ் சிலிண்டர்களில் அடைத்து விற்பனை செய்யலாம். மேலும் இதற்கு அரசு மானியம் உண்டு என்பதால் அரசாங்கம் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களையும்  அனுமதிக்கலாம். உயிரிவாயு (BIO GAS) சிலிண்டர்களுக்கு பச்சை வண்ணம் பூசி தனியே வித்தியாசப் படுத்தலாம். அல்லது  மேலே உள்ள படத்தில் ள்ளது போன்ற PORTABLE BIOGAS சிலிண்டர்களையும் தயார் செய்து சந்தைப் படுத்தலாம். இதனால் இப்போதைய கேஸ் தட்டுப்பாடு நீங்கும். தொழில் முனைவோர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும் இருக்கும். இதனால் பலருக்கு வேலைவாய்ப்பும்  அமையும்.

கடுமையான மின்வெட்டு காரணமாக சூரிய சக்தியை (SOLAR ENERGY) மாற்று சக்தியாக மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் யாரும் எடுக்காத ஒரு துணிச்சலான காரியத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செய்து இருக்கிறார்கள். ஒரு தொலை நோக்கு திட்டத்தோடு தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” ( Tamil Nadu Solar Energy Policy 2012 )என்ற ஆவணத்தை  சென்ற ஆண்டு, 20.10.2012 அன்று  தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இப்போது எங்கு பார்த்தாலும் சூரிய சக்தி (SOLAR ENERGY) தேவைப் படுவோர் அணுகவேண்டிய விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாற்றத்திற்கு காரணமான கொள்கை அறிவிப்பைத் தந்த, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டுக்கள். இதைப் போலவே உயிரிவாயு (BIO GAS) திட்டத்தினையும் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும். LPG சிலிண்டர்கள் போன்று
உயிரிவாயு (BIO GAS) சிலிண்டர்களும் மக்கள் மத்தியில் பயன்பாட்டுக்கு வரவேண்டும்.

சீனாவிலிருந்து மலிவு விலை சைக்கிள்கள் இறகுமதி செய்ய முயற்சி நடந்தபோது, இங்கிருக்கும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் சுதேசி விதேசி என்று தடை செய்தார்கள். அதேபோல் பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க பல தடைகள். இந்த உயிரிவாயு (BIO GAS) திட்டத்தினை செயல்படுத்த விடாமல் தடுக்கவும் உள்குத்து அரசியல் நம்நாட்டில் நடக்கும். இருந்தாலும் நாட்டு மக்கள் நலன் கருதி -  நாட்டிற்கு இப்போது தேவை: பயோ கேஸ் சிலிண்டர்கள்

ஊதுகிற சங்கை ஊதி வைப்போம். நல்லது நடந்தால் சரி!



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
 



42 comments:

  1. மிகவும் தேவையான ஒன்று தான்...

    பயோகேஸ் பயன்பாடு விரைவில் வந்தால் சரி...

    ReplyDelete
  2. அவசியமான பதிவு...செயல்பட்டால் நல்லது..அப்புறம் வலைச்சரத்தில் அன்றே நான் உங்களுக்கு நன்றி தெரிவித்து மடலிட்டேன் ஏனோ இருமுறையும் அங்கே அது போகவே இல்லை):

    ReplyDelete
  3. பயனுள்ள பகிர்வு நடைமுறைக்கு வந்தால் சிறப்பு.

    ReplyDelete
  4. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  5. மறுமொழி > ஷைலஜா said..
    .
    // அவசியமான பதிவு...செயல்பட்டால் நல்லது..//
    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    //அப்புறம் வலைச்சரத்தில் அன்றே நான் உங்களுக்கு நன்றி தெரிவித்து மடலிட்டேன் ஏனோ இருமுறையும் அங்கே அது போகவே இல்லை)://

    எனக்கும் காரணம் தெரியவில்லை. கலையரசன் என்பவர் அளித்த கருத்துரையும் வலைச்சரத்தில் பதிவாகவில்லை. தொழிநுட்பக் கோளாறாக இருக்கலாம். மன்னிக்கவும்.

    ReplyDelete
  6. மறுமொழி > Sasi Kala said...

    // பயனுள்ள பகிர்வு நடைமுறைக்கு வந்தால் சிறப்பு. //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  7. ‘உயிரிவாயு’ திட்டத்திற்கு 1974 ஆம் ஆண்டிலேயே அரசு ஆதரவு தந்தும் வங்கிகள் கடனுதவி செய்தும் ஒரு சில நடைமுறை சிக்கல்களால் அது ஏனோ பிரபலமாகவில்லை. அரசு இந்த சிக்கல்களை ஆராய்ந்து நீக்கினால் நிச்சயம் நீங்கள் விரும்புவது நடக்கும்.

    ReplyDelete
  8. தி.தமிழ் இளங்கோ சார்,

    நல்லப்பதிவு.

    பயோ கேஸ் என்பதில் இரு வகை இரூகு, மாட்டு சாணத்தில் இருந்து கோபார் கேஸ்/சாண எரிவாயு, தாவரக்கழிவில் இருந்தும் தயாரிக்கலாம்.

    நீங்க எதனை சொல்கிறீர்கள் என தெரியவில்லை.

    நான் சாண எரிவாயு உற்பத்தி செய்வது பற்றி முன்னர் எழுதிய பதிவு,ஓரளவுக்கு சாண எரிவாயு உற்பத்தி மற்றும் செயல்பாடு பற்றி சொல்லி இருக்கிறேன் பார்க்கவும்.

    வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மாற்று எரிபொருள்: GOBAR GAS PLANT CONSTRUCTION.

    ReplyDelete

  9. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // ‘உயிரிவாயு’ திட்டத்திற்கு 1974 ஆம் ஆண்டிலேயே அரசு ஆதரவு தந்தும் வங்கிகள் கடனுதவி செய்தும் ஒரு சில நடைமுறை சிக்கல்களால் அது ஏனோ பிரபலமாகவில்லை. அரசு இந்த சிக்கல்களை ஆராய்ந்து நீக்கினால் நிச்சயம் நீங்கள் விரும்புவது நடக்கும். //

    ஒரு நல்ல தகவலைத் தந்தீர்கள். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > வவ்வால் said...
    வவ்வால் அவர்களின் வருகைக்கு நன்றி!

    // பயோ கேஸ் என்பதில் இரு வகை இரூகு, மாட்டு சாணத்தில் இருந்து கோபார் கேஸ்/சாண எரிவாயு, தாவரக்கழிவில் இருந்தும் தயாரிக்கலாம். //

    இந்த பதிவை எழுதுவதற்கு முன்னர் உங்கள் ஞாபகம்தான் வந்தது. உங்களிடம் சொல்லி பயோ கேஸ் சிலிண்டர்கள் ( அதில் எந்த எரிவாயு இருந்தால் என்ன? சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு நுகர்வோரை அடைய வேண்டும்) பற்றி புள்ளி விவரங்களோடு எழுதச் சொல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தேன். LPG முறையில் உள்ள MONOPOLY நீங்கினால் நல்லதுதானே!

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு . பயன்பாட்டுக்கு வந்தால் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  12. தி.தமிழ் இளங்கோ சார்,

    ரொம்ப வேகமா இருக்கிங்களே, :-))

    உங்க பின்னூட்டம் கோபர் கேஸ் பதிவில் பார்த்தேன்.

    பொதுவாக பயோ கேஸ் என எடுத்துக்கொண்டால் ,கோபார் கேஸ் பிளாண்ட்டே நல்ல பலன் தரவல்லது.

    தாவ்ர/சமையல் கழிவு பயன்ப்படுத்தி தயாரிக்கும் முறையில் தாவரக்கழிவுகளை பல்வரைஸ் செய்து கூழாக செய்ய வேண்டும், மேலும் சில நுண்ண்யிர்களை சேர்த்தால் தான் நல்ல வாயு உற்பத்தி இருக்கும், அப்படியே செய்தால் வாயு உற்பத்தி அளவு குறைவாக இருக்கும்.

    இரு முறையிலும் பயோ கேஸ்(மீத்தேன்) உற்பத்தி செய்யலாம்.

    இதனை நீங்கள் சொல்வது போல பெரிய அளவில் செய்து சிலிண்டர்களில் அடைத்து விநியோகம்ம் செய்யும் போது விலை உயர வாய்ப்புள்ளது ஏன் எனில் பெரிய அளவில் தாவரக்கழிவுகள்/சாணத்தினை சேகரித்து ,உற்பத்தி இடத்துக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு அதிகமாகிவிடும்.

    எனவே மேக்ரோ லெவலில் செய்யாமல் தாவர/சாணி கிடைக்கும் இடத்திலேயே வாயு உற்பத்தி செய்வது லாபகரமாக இருக்கும்.

    மேலும் நகர,தாலுக்கா அளவில் பெரிய உற்பத்தி மையங்கள் அமைக்கலாம், இதில் உள்ல முக்கியமான சவாலே உற்பத்தி செலவினை கட்டுப்படுத்தி செயல்ப்படுத்துவதில் தான் உள்ளது.

    மக்கள் தங்கள் வீட்டில் ஒரு பயோகேஸ் கலனை அமைத்து சுய தேவைகளை பூர்த்தி செய்வதே அனைத்திலும் சிறந்த ஒன்று,ஆனால் தற்போதைய காலத்தில் எல்லாம் இலகுவாக ,அதிக வேலை இல்லாமல் நடக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள் ,ஆன் லைனில் டிக்கெட் புக் செய்வதில் ஆரம்பித்து, போன் செய்தால் பிஸ்ஸா என்பது போல எளிதாக காரியம் ஆக வேண்டும் எனவே பயோ கேஸ் கலனை அமைத்து பராமாரிக்க சிறிது உழைப்பும்,நேரமும் செலவிட வேண்டும், அந்த நேரத்தில் தொ.காவில் சீரியல் பார்க்கலாம் என நினைப்பதால் யாரும் முன் வரவிரும்புவதில்லை ,எனவே இது குறித்து விழிப்புணர்வினை அரசோ தன்னார்வ நிறுவனங்களோ ஏற்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு....

    புரிய வேண்டியவர்களுக்குப் புரியவேண்டும்!

    ReplyDelete
  14. நல்லதொரு சிந்தனையை அனைவருக்கும் புரியும்படி அழகாக எடுத்துச்சொல்லியுள்ளீர்கள்.

    மாற்று எரிபொருட்களை ஊக்குவிக்க வேண்டியது மிகவும் அவசியம் தான்.

    //மக்கள் தங்கள் வீட்டில் ஒரு பயோகேஸ் கலனை அமைத்து சுய தேவைகளை பூர்த்தி செய்வதே அனைத்திலும் சிறந்த ஒன்று.

    ஆனால் தற்போதைய காலத்தில் எல்லாம் இலகுவாக அதிக வேலை இல்லாமல் நடக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள் //

    ஆமாம் ஐயா, இதெல்லாம் எல்லோராலும் செயல் படுத்த இயலாது தான்.

    //இது குறித்து விழிப்புணர்வினை அரசோ தன்னார்வ நிறுவனங்களோ ஏற்படுத்த வேண்டும்.//

    ஆம். அவர்களே ஏதாவது செய்து, உற்பத்திசெலவையும் குறைத்து ஆங்காங்கே பாதுகாப்பான முறையில் செய்து சப்ளி கொடுத்தால் நல்லது.

    சமுதாய சிந்தனையுடன் கூடிய நல்ல பகிர்வு. பாராட்டுக்கள் ஐயா.

    ReplyDelete
  15. பயோகேஸ் பயன்பாடு விரைவில் வந்தால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  16. மறுமொழி > மாதேவி said...
    // நல்ல பகிர்வு. பயன்பாட்டுக்கு வந்தால் உதவியாக இருக்கும்//.

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > வவ்வால் said...

    // தி.தமிழ் இளங்கோ சார்,
    ரொம்ப வேகமா இருக்கிங்களே, :-)) //

    வவ்வால் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    // உங்க பின்னூட்டம் கோபர் கேஸ் பதிவில் பார்த்தேன். ....... ...

    மக்கள் தங்கள் வீட்டில் ஒரு பயோகேஸ் கலனை அமைத்து சுய தேவைகளை பூர்த்தி செய்வதே அனைத்திலும் சிறந்த ஒன்று,ஆனால் தற்போதைய காலத்தில் எல்லாம் இலகுவாக ,அதிக வேலை இல்லாமல் நடக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள் , ... ... //

    நல்ல விரிவான விளக்கமான தங்களது கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // சமுதாய சிந்தனையுடன் கூடிய நல்ல பகிர்வு. பாராட்டுக்கள் ஐயா. //

    வவ்வால் சாரின் கருத்துக்களை எடுத்துக் காட்டி, பாராட்டிய அன்புள்ள VGK அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > கோவை2தில்லி said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  21. //நல்லது நடந்தால் சரி!//
    நடக்க வேண்டுவோம்!

    ReplyDelete
  22. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

    ReplyDelete
  23. மறுமொழி > சென்னை பித்தன் said...

    // நல்லது நடந்தால் சரி!//
    நடக்க வேண்டுவோம்! //
    மூத்த பதிவரின் வாக்கு பலிக்கட்டும்.

    ReplyDelete
  24. மறுமொழி > வே.நடனசபாபதி said..
    .
    // தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க. //

    மிக்க மகிழ்ச்சி! நன்றி அய்யா!

    ReplyDelete
  25. நல்லது நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் கருத்தை வெளிப்படுத்துகிறீர்கள். நல்லது நடக்கும் என நம்புவோமாக‌

    ReplyDelete
  26. வணக்கம் தமிழ் இளங்கோ . உங்களது டாலர் நகரம் விமர்சனத்தை புன்னகை உலகம் மாத இதழில் பிரசுரிக்க ஜோதிஜியிடம் கேட்டோம் அவரும் சம்மத்தித்துள்ளார் . உங்கள் அனுமதியும் வேண்டுகிறோம் . உங்கள் புகைப்படத்துடன் பிரசுரிக்கப் படும் .

    su.senthilkumaran@gmail.com

    நன்றி

    ReplyDelete
  27. மறுமொழி > வர்மா said...

    // நல்லது நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் கருத்தை வெளிப்படுத்துகிறீர்கள். நல்லது நடக்கும் என நம்புவோமாக‌ //

    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி > சு.செந்தில் குமரன் said...
    அன்புடையீர் வணக்கம்!
    எனது வலைப் பதிவில் நான் எழுதிய “ ஜோதிஜி (திருப்பூர்) எழுதிய “டாலர் நகரம்” – நூல் விமர்சனம். “ என்ற கட்டுரையை உங்களது புன்னகை உலகம் மாத இதழில், எனது புகைப் படத்துடன் பிரசுரிக்க சம்மதம் இதற்குக் காரணாமாயிருந்த ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) அவர்களுக்கு நன்றி!
    தங்கள் அன்பிற்கு நன்றி! - அன்புடன் – தி.தமிழ் இளங்கோ

    ReplyDelete
  29. பயோ கேஸ் பற்றி ஜீவன் மலையாளம் சான்னலில் பெண்களைப்பற்றிய ஒரு நிகழ்ச்சியில் காண்பித்தார்கள். நாம் வீட்டில் அன்றாடம் மிச்சமாகும் உணவுப் பண்டங்களை வெளியே எறியாமல் சிறிய பைபர் டாங்குகளில் சேமித்து வைத்தால் அதில் பாக்டீரியா உருவாகி காஸ் உண்டாகும். நாம் எத்தனை கிலோ உணவு பண்டங்களை போடுகிறோமோ அதே அளவு தண்ணீரும் போட வேண்டும்.இந்த டாங்குகள் நிறுவ இருபது ஆயிரம் முதல் முப்பது ஆயிரம் வரையே செலவாகும் என்றும் அதற்கு கேரள அரசின் மானியமும் கிடைக்கிறது என்றார். இந்த பழைய உணவுப்பண்டங்களை போடும்போது அசிடிடி உண்டாக்கும் எதுவும் போடக்கூடாது என்றார் அந்த அம்மையார். உதாரணமாக எலுமிச்சை பழம் போன்றவற்றை அதனுடன் கலந்து போட்டால் பாக்டிரீயா உண்டாவதை அது தடுத்து விடும் பிறகு காஸ் உற்பத்தி ஆகாது என்றார்.கொல்லம் மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் வீட்டில் வைத்தே இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
    பரங்கிப்பேட்டையில் நான் முப்பது வருடங்களுக்கு முன்பே பார்த்திருக்கிறேன் அன்னம்மா என்ற பெண்மணி சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார் அவர் வீட்டில் பெரிய பயோ கேஸ் டாங்க் பார்த்திருக்கிறேன்.
    தாங்கள் பதிவை படித்தவுடன் இதெல்லாம் நியாபகம் வந்து விட்டது அதுதான் பகிர்ந்து கொண்டேன்.

    .

    ReplyDelete
  30. மறுமொழி > அஜீம்பாஷா said...

    பயோ கேஸ் பற்றி ஜீவன் மலையாளம் சான்னலில் தெரிவிக்கப்பட்ட // இந்த பழைய உணவுப்பண்டங்களை போடும்போது அசிடிடி உண்டாக்கும் எதுவும் போடக்கூடாது என்றார் அந்த அம்மையார். உதாரணமாக எலுமிச்சை பழம் போன்றவற்றை அதனுடன் கலந்து போட்டால் பாக்டிரீயா உண்டாவதை அது தடுத்து விடும் பிறகு காஸ் உற்பத்தி ஆகாது என்றார். // என்ற தகவல் பயனுள்ள தகவல். உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி1

    ReplyDelete
  31. சரியாக சொன்னீர்கள் சார், இப்போது எல்லாம் சமையல் எரிவாயுவின் விலை மாதத்திற்கு ஒரு முறை ஏற்றி விடுகின்றனர். இது போல மாற்று தொழில்நுட்பம் வந்தால்தான் மக்களுக்கு நன்மை. உங்கள் சங்கின் ஒலி திக்கெட்டும் பரவட்டும்.....

    ReplyDelete
  32. மறுமொழி > Suresh Kumar said...

    சகோதரர் ”கடல் பயணங்கள்” சுரேஷ்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  33. நாட்டு நடப்பையும் இப்படியும் அறிய முடிகிறது. ஓரு படியாக என்.சி.ஆர் லிங்க் சகோதரிகள் மூலமாகக் கிடைத்து தங்கள் வலைக்கு வந்துள்ளேன். ஆடவில்லை.
    மீண்டும் சந்திப்போம்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  34. பயனுள்ள நல்ல தகவல்கள்!

    ReplyDelete
  35. பல வருடங்களுக்கு முன் ஒரு முறை திருக்கண்ணபுரத்தில் ஒரு வீட்டில் கோபர் காஸ் அடுப்பு தினசரி உபயோகத்தில் இருந்தது. கொஞ்சம் வியப்பாகவே இருந்தது.
    தாவரக்கழிவிலிருந்து தயார் செய்யப்படும் காஸ் அல்லது கோபர் காஸ் இரண்டுமே நகரங்களில் எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியும் என்று தெரியவில்லை.

    மாற்று எரிபொருளின் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவது கண்கூடு. அரசாங்கம் விரைவில் ஏதாவது செய்ய வேண்டும்.

    பயனுள்ள தகவல் களஞ்சியம் இந்த பதிவு.

    ReplyDelete
  36. //வே.நடனசபாபதி said...

    ‘உயிரிவாயு’ திட்டத்திற்கு 1974 ஆம் ஆண்டிலேயே அரசு ஆதரவு தந்தும் வங்கிகள் கடனுதவி செய்தும் ஒரு சில நடைமுறை சிக்கல்களால் அது ஏனோ பிரபலமாகவில்லை. அரசு இந்த சிக்கல்களை ஆராய்ந்து நீக்கினால் நிச்சயம் நீங்கள் விரும்புவது நடக்கும்.//

    இந்த திட்டம் தோல்வி அடைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் கடன், தொழில் நுட்ப்பம், பயிற்ச்சி பெற்ற பனியாளர்கள் என அனைத்தையும் ஏஜண்ட்கள் மூலம் ஏற்ப்பாடு செய்த அரசு அதனை இயக்கி கொடுக்குமாறு சொல்லவில்லை. அதனால் 90% க்கும் அதிகமானோர் எரிவாயு கலன் அமைத்தும் ஒருமுறைகூட பயன்படுத்தவில்லை. ஒரு முறை துவங்கிவிட்டால் அதன்பின் எந்த தடையும் வருவதில்லை. எங்கள் வீட்டில் 1996 ஆம் ஆண்டுமுதல் பயன்படுத்திவருகிறோம், விழா மற்றும் விருந்துக்காலங்களில் மட்டுமே பற்றாகுறை ஏற்படும் அதனால் ஒரு எச்.பி சிலிண்டரை கூடுதலாக 6 மாதம் வரை பயன்படுத்துகிறோம் வருடத்திற்கு இரண்டு சிலிண்டர்மட்டுமே தேவையானதாய் இருக்கிறது.

    ReplyDelete
  37. நீங்கள் சொல்லும் bio gas அருமையாகத்தான் இருக்கும்.
    சென்னையில் ஒரு பிரபலமான பள்ளியின் மாணவியரின் உணவுத் தயாரிப்புக்கு bio gas அடுப்புத். தான் உபயோகப் படுத்துகிறார்கள்.

    பார்த்தால் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.சமைக்கும் நேரத்திலும் வித்தியாசம் இல்லை என்று தான் சொல்கிறார்கள்.

    bio gas புழக்கத்திர்கு வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
    நன்றி பகிர்விற்கு

    ReplyDelete
  38. மறுமொழி > kovaikkavi said..
    .
    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  39. மறுமொழி > கே. பி. ஜனா... said...
    எழுத்தாளர் கே பி ஜனா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  40. மறுமொழி > Ranjani Narayanan said..

    // மாற்று எரிபொருளின் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவது கண்கூடு. அரசாங்கம் விரைவில் ஏதாவது செய்ய வேண்டும்.//

    // பயனுள்ள தகவல் களஞ்சியம் இந்த பதிவு. //

    சகோதரி ரஞ்சனி நாராயணனின் கருத்துரைக்கு நன்றி!


    ReplyDelete
  41. மறுமொழி > புரட்சி தமிழன் said...

    // ஒரு முறை துவங்கிவிட்டால் அதன்பின் எந்த தடையும் வருவதில்லை. எங்கள் வீட்டில் 1996 ஆம் ஆண்டுமுதல் பயன்படுத்திவருகிறோம், விழா மற்றும் விருந்துக்காலங்களில் மட்டுமே பற்றாகுறை ஏற்படும் அதனால் ஒரு எச்.பி சிலிண்டரை கூடுதலாக 6 மாதம் வரை பயன்படுத்துகிறோம் வருடத்திற்கு இரண்டு சிலிண்டர்மட்டுமே தேவையானதாய் இருக்கிறது. //

    ஒரு சிறப்பான தகவலை தந்த புரட்சித் தமிழனுக்கு நன்றி!

    ReplyDelete
  42. மறுமொழி > rajalakshmi paramasivam said...
    // பார்த்தால் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.சமைக்கும் நேரத்திலும் வித்தியாசம் இல்லை என்று தான் சொல்கிறார்கள். //

    // bio gas புழக்கத்திர்கு வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
    நன்றி பகிர்விற்கு //
    சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete