நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம். எங்கள் வீட்டிற்கு அருகில்
பொன்மலை ரெயில்வே தொழிற்சாலையில் தச்சு வேலை செய்த ஒரு கிறிஸ்தவ பெரியவர்
இருந்தார். ஒருநாள்
அவரோடு பேசிக் கொண்டு இருந்தபோது அவர் ” பத்து
கட்டளைகள்” (THE TEN COMMANDMENTS) பட காட்சிகள் பற்றி பிரமிப்போடு
சொன்னார். அன்றிலிருந்து அந்த படத்தை பார்க்க ஆவலாக இருந்தேன். பெரியவனாகி கல்லூரி
சேர்ந்த பிறகுதான் அந்த வாய்ப்பு
அமைந்தது. அப்போதெல்லாம் ஆங்கிலப் படங்களை திருச்சியில் மத்திய பேருந்து நிலையம்
அருகில் உள்ள பிளாஸா தியேட்டரில் போடுவார்கள். (இன்னொரு தியேட்டர் சிங்காரத்
தோப்பு அருகே உள்ள கெயிட்டி) பிளாஸா தியேட்டரில் ஒரு மாலை வேளை பத்து கடடளைகள் (THE TEN COMMANDMENTS) படம் பார்க்கும் வாய்ப்பு
கிடைத்தது. ஆனால் படம் பார்த்த திருப்தி இல்லை. ஏனெனில் படம் ஆரம்பம் முதல்
முடியும் வரை தியேட்டருக்குள் ஆட்கள் வருவதும் போவதுமாக வாசல் கதவுகளை திறந்தும்
மூடியும் படத்தை ரசிக்க முடியாமல் செய்து விட்டார்கள். காரணம், தியேட்டருக்கு
அருகில் வெளியூர் பேருந்து நிலையம் இருந்ததுதான். அப்புறம் திருச்சியில் டிஜிடல்
தொழில் நுட்பத்துடன் ஏசி தியேடடர்கள் வந்தன. இருக்கின்ற தியேட்டர்களில் சிப்பியில்
படம் பார்த்தால் அருமையாக இருக்கும். அந்த தியேட்டரில் இந்த படத்தை ரசித்துப்
பார்த்தேன். அந்த படத்தின் காட்சிகளை அந்த பெரியவர் ஏன் அவ்வளவு பிரமிப்பாக
சொன்னார் என்று அப்போதுதான் தெரிந்தது. அதன்பிறகு சிப்பி
தியேட்டரில் அந்த படத்தையும் பென்ஹர் (BENHUR) படத்தையும் இரண்டு தடவை பார்த்து இருக்கிறேன். இப்போது இந்த தியேட்டரை மூடி விட்டார்கள். வருத்தமான விஷயம்தான்.
படத்தின் கதையும் காட்சிகளும்:
திரைப்படத்தின் மற்ற விவரங்கள்:
இந்த பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS) என்ற திரைப்படத்தை டைரக்ட் செய்தவர் Cecil B. Demile . அவரும் Henry Wilcoxo என்பவரும் இணைந்து அதிக
பொருட் செலவில் தயாரித்து இப் படத்தை வெளியிட்டுள்ளனர். படத்தினை விநியோகம் செய்தவர்கள்
புகழ்பெற்ற பாரமவுண்ட் பிக்சர்ஸ் (PARAMOUNT PICTURES) இதில் நடித்த நடிகர்கள்
ஒவ்வொருவரும் அந்த படத்தோடு ஒன்றி கதாபாத்திரமாகவே மாறி நடித்துள்ளனர். மோஸஸ் வேடத்தில் Charlton
Heston
சிறப்பாக நடித்தார். ( இவரே பென்ஹர் படத்திலும் நடித்து இருக்கிறார்) எகிப்து தேச
பாரோ மன்னன் RAMESES .II வேடத்தில் கம்பீரமாக நடித்தவர் Yul Brynner. இவரது கம்பீரமான முகபாவங்கள், உடல் அசைவுகள் இன்றும் என் கண் முன் நிற்கின்றன. எகிப்து ராணியாக காதல்,
உருக்கம என்று நடித்தவர் Anne Baxter. மோஸசின் மனைவியாக Yvonne
De Carlo நடித்து
இருந்தார். மற்றும் Debra Paget என்ற நடிகையும் John Derek மற்றும் Edward G. Robinson ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இசை அமைத்துத் தந்தவர் Elmer
Bernstein. சினிமாடோக்ராபி Loyal
Griggs. எடிட்டிங் Anne
Bauchens.
(THE TEN COMMANDMENTS திரைப்பட டைரக்டர் Cecil B. Demile )
(THE TEN COMMANDMENTS திரைப்பட டைரக்டர் Cecil B. Demile )
விருதுகள் பலவற்றை பெற்றுள்ள, இந்த திரைப் படம் வெளியிடப்பட்டு
56 ஆண்டுகள் ஆன போதும், இன்றும் ரசிகர்கள்
மத்தியில் வரவேற்புள்ளதாகவே உள்ளது. படம் வெளியான தேதி: அக்டோபர்
5, 1956.
(
ALL PICTURES : THANKS TO “ GOOGLE ” )
ஆண்டுகள் பல என்றாலும் அழியாத கதை பற்றிய தங்கள் விளக்கமும் படங்களும் அருமை.
ReplyDeleteஇருமுறை பார்த்திருந்தாலும் மறுமுறை படத்தின் சிறப்புக்களை படிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது... மிக்க நன்றி சார்...
ReplyDeleteREPLY TO …….Sasi Kala said...
ReplyDeleteஆம். நீங்கள் சொன்னதைப் போல ஆண்டுகள் பல என்றாலும் அழியாத கதைதான். இந்த திரைப் படமும் அவ்வாறே. சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!
REPLY TO ……. திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஎத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் இது. தங்கள் வருகைக்கு நன்றி!
அருமை. மிக அருமையான பதிவு தான்.
ReplyDeleteபட இணைப்புகளும், கதை விளக்கமும் மிகவும் சூப்பரோ சூப்பராகத் தந்துள்ளீர்கள்.
பிளாஸா தியேட்டரையும் சிப்பி தியேட்டரையும் அநியாயமாக மூடிவிட்டார்கள். அதுபோலவே நம் ஊரில் இருந்த ராஜா டாக்கீஸ் + பிரபாத் டாக்கீஸ் நான் எவ்வளவு படங்கள் பார்த்திருக்கிறேன்.
இப்போது ராஜ டாக்கீஸ் என்ற பெயரில் பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளது. ;(((((
இந்த குறிப்பிட்ட படத்தை நான் என் சிறுவயதில் பார்க்க ஆசைப்பட்டும் வீட்டில் யாரும் அனுமதிக்கவும் இல்லை. நான் போய் வர காசு தரவும் இல்லை. அந்தக்குறையை நீங்கள் இப்போது தீர்த்து வைத்து விட்டீர்கள். நன்றியோ நன்றிகள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன்
VGK
REPLY TO ….. வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதிரு VGK அவர்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி! பள்ளி பருவத்திலிருந்தே இந்த படத்தை பார்க்க ஆசைப்பட்டு கடைசியில் கல்லூரி மாணவனாக ஆன பின்புதான் என்னால் படம் பார்க்க முடிந்தது. அன்றைய சூழ்நிலை அப்படி. திருச்சியில் கிட்டதட்ட எல்லா தியேட்டர்களையும் மூடி விட்டார்கள் என்பது வருத்தமான செய்திதான்.
இப்படம் பற்றி நான் இட்ட பதிவைப் பார்க்க: http://dondu.blogspot.in/2010/09/blog-post_898.html
ReplyDeleteஅன்புட்ன்,
டோண்டு ராகவன்
REPLY TO ……. dondu(#11168674346665545885) said...
ReplyDeleteடோண்டு ராகவன் அவர்களுக்கு வணக்கம்! எனது பதிவை வெளியிடுவதற்கு முன்னர் இதே தலைப்பில் அல்லது இதே கருத்தில் வேறு யாரேனும் பதிவு எழுதி இருக்கிறார்களா என்று கூகிள் மூலம் பார்த்துக் கொள்வேன். அதேபோல் பார்த்தபோது உங்கள் பதிவினையும் பார்வையிட்டுளேன். உங்கள் பாணியில் நீங்கள் எழுதியதோடு விமர்சனங்களுக்கும் உங்கள் பாணியிலேயே பதில் தந்துள்ளீர்கள். தங்களின் வருகைக்கு நன்றி!
நானும் இந்தப் படத்தைப் பார்த்துப் பிரமித்துப் போயிருக்கிறேன்
ReplyDeleteஆயினும் இத்தனைத் தகவல்கள் தெரியாது
விரிவாக முக்கியக் காட்சிகளுடன் விரிவாகப் பதிவினைத்
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
tha.ma 3
ReplyDeleteREPLY TO ……. Ramani said...
ReplyDeleteகவிஞரின் கருத்துரைக்கு நன்றி! இந்த படத்தை முதன் முதல் பார்ர்க்கும் எவரும் பிரமித்துத்தான் போவார்கள்.
படங்களுடன் அருமையான இடுகை..அந்த நாளில் வீட்டில் பார்க்க விடவில்லை(ஆங்கிலப்படம் என்றாலே ஏதோ ஆபாசம் என்று வீட்டுப்பெண்கள் நினைப்பார்கள்:) அன்றுஅப்பா மட்டும் பார்த்துவிட்டுவந்து கதை சொன்னார். அருமையான படத்தைப்பி்றகு பார்த்தேன் நினைவுகள் மறுபடி சுழல்கிறது!!
ReplyDeleteநானும் பார்த்து ரசித்த மறக்கமுடியாத படம்!
ReplyDeleteத.ம.4
ReplyDeleteREPLY TO ……. ஷைலஜா said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
REPLY TO ……. குட்டன் said...
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_7.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
அருமையான படத்தைப்பற்றி சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteREPLY TO … … .. திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசகோதரரின் தகவலுக்கு நன்றி! இங்கு திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான தொடர் மின்வெட்டு காரணமாக வலைப் பதிவுகள் பக்கம் எட்டிகூட பார்க்க முடியவில்லை.
REPLY TO … … .. இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கு நன்றி! உங்கள் வலைப்பதிவை படிக்கும்போதெல்லாம் உங்கள் பதிவுகளில் உள்ள பெரிய பெரிய படங்களைப் போன்று எனது பதிவிலும் பதிய வேண்டும் என்ற நீண்டநாள் ஆசை இந்த பதிவின் மூலம்தான் நிறைவேறியது.
திரும்பவும் படத்தைப் பார்த்தது போன்ற பிரமிப்பு தங்களது பதிவை படித்ததும் ஏற்பட்டது. வாழ்த்துக்கள்! திருச்சியில் 1960 ல் புனித வளவனார் கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்தபோது பிளாஸா தியேட்டரில் ஆங்கிலப் படங்கள் அநேகம் பார்த்திருக்கிறேன். அந்த தியேட்டர் இப்போது மூடப்பட்டுவிட்டது அறிந்து வருத்தமே.
ReplyDeleteREPLY TO … … Mohan P said...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி! ( உங்கள் Profile இல் சரியான விவரம் கொடுத்தால் நல்லது )
REPLY TO … வே.நடனசபாபதி said...
ReplyDeleteநீங்களும் எங்கள் திருச்சியில் படித்தவர் என்றதும் மிக்க மகிழ்ச்சி! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
சிறப்பான பகிர்வின் மூலம் மீண்டும் நினைவு கொள்கின்றோம்.
ReplyDeleteREPLY TO ……. மாதேவி said...
ReplyDeleteசகோதரியின் அன்பான கருத்துக்கு நன்றி!
அன்பின் தமிழ் இளங்கோ - பட விமர்சனம் நன்று - விளக்கமாக கதையினக் கூறும் விதம் நன்று - படங்கள் அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteREPLY TO … … cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் ”வலைச்சரம்” சீனா அவர்களுக்கு வணக்கம்! படத்தின் பிரமாண்டம்தான் என்னை இந்த கட்டுரையை எழுத வைத்தது. தங்கள் பாராட்டிற்கு நன்றி!
THE TEN கோம்மண்ட்மேன்த்ஸ், நானும் சிப்பியில் பார்த்திருக்கிறேன் ,அருமையான படம் .
ReplyDeleteமறுமொழி > அஜீம்பாஷா said...
ReplyDelete// THE TEN கோம்மண்ட்மேன்த்ஸ், நானும் சிப்பியில் பார்த்திருக்கிறேன் ,அருமையான படம் //
.
சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! அந்த அருமையான சிப்பி தியேட்டரை மூடி விட்டார்கள். அந்த தியேட்டரில் படம் பார்த்த அந்த இனிமையான நாட்கள் இனி வராது.
அருமையான இந்த பதிவு, இன்றைய வலைச்சரத்தில்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_26.html
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரிhttp://blogintamil.blogspot.com/2013/12/blog-post_26.html?showComment=1388023369804#c6732373831674887856
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
ReplyDeleteஇன்றைய ( 26.12.2013 ) வலைச்சரத்தில் எனது வலைப் பதிவை அறிமுகப்படுத்திய , இந்தவார, வலைச்சர ஆசிரியை சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு நன்றி!
ReplyDeleteநான் இன்று ( 26.12.2013 ) அதிகாலையிலேயே திருக்கடையூர் சென்று விட்டு, இப்பொழுதுதான் வீடு திரும்பினேன். இந்த தகவலை எனக்கு செல்போன் மூலம் முதன் முதல் எனக்குத் தெரியப்படுத்திய மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி! மேலும் எனது பதிவினில் வந்து சேதி சொன்ன வலைச்சர ஆசிரியை கோமதி அரசு அவர்களுக்கும், சகோதரர் ரூபன் அவர்களுக்கும், சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள்!
பத்துக்கட்டளைகள் பற்றிய உஙகள் விளக்கமும் படங்களும் அருமை இப்பணி தெடர்க தங்கள் தொலைபேசி எண் கிடைத்தால் உரையாடல்மூலம் வாழ்த்துவேன்
ReplyDeleteஎனது எண் 9034281538