Sunday, 21 October 2012

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு.



இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் யாரும் எடுக்காத ஒரு துணிச்சலான காரியத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செய்து இருக்கிறார்கள். ஒரு தொலை நோக்கு திட்டத்தோடு  தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” ( Tamil Nadu Solar Energy Policy 2012 )என்ற ஆவணத்தை நேற்று ( 20.10.2012 ) தலைமைச் செயலகத்தில் வெளியிட்டுள்ளார்.



பொதுவாகவே ஆட்சிக்கு வருபவர்கள் எந்த திட்டம் போட்டாலும் தங்களுக்கு இதில் என்ன லாபம் என்றுதான் கவனித்தார்கள். குறிப்பாக தாங்கள் ஒரு திட்டத்தை கொண்டுவந்து, பின்னர் தாங்கள் ஆட்சிக்கு வரமுடியாமல் எதிர்க் கட்சியினர் ஆட்சிக்கு வந்து அவர்களது காலத்தில் இந்த திட்டம் செயல்பட்டால் என்ன ஆவது என்று தெரிந்தால் அதனை செயல்படுத்த மாட்டார்கள். இதனாலேயே தமிழ்நாட்டில் பல நல்ல தொலைநோக்கு திட்டங்கள் அரசியல் காரணமாக செயல்படாமல் போய்விட்டது. இன்று தமிழ்நாடு முழுவதும்  இருக்கும் தலையாய பிரச்சினை மின்வெட்டுதான். தற்காலிகமாக இந்த பிரச்சினையைத் தீர்க்க அண்டை மாநிலங்களை மட்டுமே நம்பியிராமல் சூரிய சக்தியைக் கொண்டு தன்னிறைவு அடைவதுதான் ஒரேவழி என்பதனை அறிந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இதனைக் கொண்டு வந்துள்ளார்கள். இதனால் அவரை உண்மையிலேயே பாராட்ட வேண்டும். இந்த திட்டத்தை இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்து இருந்தால் தமிழ்நாடு இந்த அளவுக்கு மின்வெட்டால் பாதித்து இருக்காது.


இதுபற்றி தினமணி தந்துள்ள தகவல்:


தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை 2012-ன் சிறப்பு அம்சங்கள்:
சூரிய சக்தி பூங்காக்களை உருவாக்குதல்.
வீட்டு உபயோக மின் நுகர்வோர்கள் மேற்கூரை சூரியசக்தி அமைப்புக்களை நிறுவ ஊக்குவிக்கும் வகையில் மின் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை அளித்தல்.
அனைத்து புதிய அரசு கட்டடங்கள் / உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது கட்டாயமாக்கப்படும்.
தற்போதுள்ள அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது படிப்படியாக செயல்படுத்தப்படும்.
உள்ளாட்சி நிறுவனங்களின் அனைத்து தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் வழங்கும் அமைப்புகள் படிப்படியாக சூரிய சக்தியைக் கொண்டு இயக்கப்படும்.
பெரும் தொழிற்சாலைகள் மற்றும் உயர் அழுத்த மின் நுகர்வோர் குறிப்பிட்ட சதவீத மின்சாரத்தை சூரிய சக்தி மின்சாரத்திலிருந்து பயன்படுத்த வேண்டும்.
சூரிய சக்தி சாதனங்களைத் தயாரிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும்.

சூரிய சக்தி மின் உற்பத்தி தயாரிப்பாளர்களுக்கு கீழ்க்கண்ட முனைப்பான கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
அ) நிகர அளவியல்
ஆ) மின்சாரவரி செலுத்துவதிலிருந்து விலக்களித்தல்
இ)  மின்தேவை வெட்டிலிருந்து விலக்களித்தல்

(நன்றி: தினமணி (e- Paper ) ஞாயிறு, அக்டோபர் 21, 2012)


எந்த திட்டமாக இருந்தாலும் அதனை நிறைவேற்றும் பொறுப்பு அரசு அதிகாரிகளின் பொறுப்பில் அரசு ஊழியர்கள் கையில்தான் உள்ளது. இந்த திட்டம் முறைப்படி செவ்வனே நடந்தால் நாட்டுக்கு நல்லது.

ஒரு நல்ல நோக்கத்தோடு , தொலைநோக்கோடு இந்த தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” (Tamil Nadu Solar Energy Policy 2012) திட்டத்தினை கொண்டு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டு.


18 comments:

  1. திட்டம் முறையாக நிறைவேற்றம் செய்யப்பட்டால் உண்மையில் மிகப்பெரிய பாராட்டுதான்.

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. நல்ல திட்டம். பெரிய பெரிய அடுக்கு மாடி குடியிருப்புகளில் நிச்சயம் சோலார் பேனல்கள் வைக்கமுடியும். சரியான முறையில் இத்திட்டத்தினை நிறைவேற்றினால் பயன் அடைய முடியும்.. பொறுத்திருந்து பார்ப்போம்....

    ReplyDelete
  4. //ஒரு நல்ல நோக்கத்தோடு , தொலைநோக்கோடு இந்த “தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” (Tamil Nadu Solar Energy Policy 2012) திட்டத்தினை கொண்டு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டு.//

    மிகவும் நல்ல திட்டம்.

    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு என் பாராட்டுக்களையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன், ஐயா.

    கேள்விப்பட்ட நல்லதொரு செய்தியினை இங்கு பதிவாகத் தந்துள்ள தங்களுக்கும் என் பாராட்டுக்கள்.

    என்றும் அன்புடன்
    VGK

    ReplyDelete
  5. நல்ல திட்டம்
    திட்டம் சிறப்பாக செயல்பட அதிகாரிகளின்
    ஒத்துழைப்பும் இருந்தால் நல்லது
    உடன் இதை பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மறுமொழி > வே.சுப்ரமணியன். said...

    // திட்டம் முறையாக நிறைவேற்றம் செய்யப்பட்டால் உண்மையில் மிகப்பெரிய பாராட்டுதான்.//

    உண்மையிலேயே நல்ல திட்டம்தான்.




    ReplyDelete
  7. மறுமொழி > Sasi Kala said...

    சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  8. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // சரியான முறையில் இத்திட்டத்தினை நிறைவேற்றினால் பயன் அடைய முடியும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...//

    ஆமாம்! திட்டத்தை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ளது. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! .

    ReplyDelete
  9. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // கேள்விப்பட்ட நல்லதொரு செய்தியினை இங்கு பதிவாகத் தந்துள்ள தங்களுக்கும் என் பாராட்டுக்கள்.//

    அன்புள்ளம் கொண்ட திரு VGK அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > Ramani said.. (1,2 )

    //நல்ல திட்டம் .
    திட்டம் சிறப்பாக செயல்பட அதிகாரிகளின்
    ஒத்துழைப்பும் இருந்தால் நல்லது.//

    எல்லோருடைய எதிர்பார்ப்பும் இதுவாகத்தான் இருக்கிறது. கவிஞரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  11. எதிர் காலத்தில் மின் தேவையை சமாளிக்கக் பயன்போடப் போகும் ஒரே அஸ்திரம் சூரிய ஒளிதான்
    த.ம 3

    ReplyDelete
  12. மறுமொழி > T.N.MURALIDHARAN said...

    எதிர் காலத்தில் மின் தேவையை சமாளிக்க சூரிய ஒளி தேவை என்ற தங்கள் கருத்துரைக்கு நன்றி! .

    ReplyDelete
  13. இருளில் இருந்து காப்பாற்றும் அருமையான திட்டம்

    ReplyDelete
  14. மறுமொழி > indrayavanam.blogspot.com said...
    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  15. இத்திட்டம் மறுபடி பந்தாடப்படாமல் நல்ல முறையில் செயலாக்கம் பெறட்டும்.

    என் விகடன் பார்த்து வாழ்த்திய தங்கள் பேரன்பிற்கு நன்றி.

    ReplyDelete
  16. மறுமொழி > ரிஷபன் said...
    எழுத்தாளர் ரிஷபன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  17. REPLY TO …. Itsdifferent said...

    Dear Sir, Thank You for your visit. Further details are not available in Tamil Nadu Govt Press release. Please search in Google.

    ReplyDelete