Sunday 5 August 2012

எனக்கு கிடைத்த ” சன்சைன் ப்ளாக்கர் விருது (SUNSHINE BLOGGER AWARD) “


சன்சைன் ப்ளாக்கர் விருது   (SUNSHINE BLOGGER AWARD) “ என்ற இந்த விருதினை எனக்குத் தந்த திரு. VGK (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களுக்கு நன்றி! வலைப் பதிவர் திருமதி R.புனிதா அவர்கள் இந்த விருதினை
(www.southindiafoodrecipes.blogspot.in)  அவருக்குத் தந்துள்ளார். திருமதி R.புனிதா அவர்களுக்கும் எனது நன்றி. திரு VGK  அவர்கள் தனக்குக் கிடைத்த இந்த விருதினை 108 வலைப் பதிவர்களுக்கு பகிர்ந்து தந்துள்ளார். விருதினைப் பெற்ற மற்ற வலைப் பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இந்த விருதினைப் பற்றிய விவரத்தினை வழக்கம் போல கூகிள் (GOOGLE) உதவியுடன் தேடினேன். . இந்த விருதினைப் பெற்றவர்கள் யாரும் முழுதாக விருதின் விவரம் பற்றி ஏதும் சொல்லவில்லை.  தனது எழுத்துக்களில் உறுதியும்,  படைப்புத் திறனும் கொண்ட வலைப் பதிவர்களுக்கு இந்த விருதினைத் தர வேண்டும். ( This prize is awarded to “ bloggers who positively and creatively inspire others in the blogosphere” ) என்பதுதான் இந்த விருதின் அடிப்படை . கிடைத்த விவரங்களின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதியுள்ளேன். 

ஒவ்வொரு விருதும் பெறும் போது  நாம் நம்மைப் பற்றிய விவரங்களைச் சொல்ல வேண்டும். என்பார்கள். அதிக விருதுகள் பெற்ற திரு. VGK அவர்கள் ஏற்கனவே தன்னைப் பற்றிய விவரங்களை அதிகமாகவே சொல்லிவிட்டார்.  சன்சைன் ப்ளாக்கர் விருது   (SUNSHINE BLOGGER AWARD) “ பெற்றவர் தன்னைப் பற்றிய பத்து விஷயங்களைச் சொல்ல வேண்டும். எனவே நான் இந்த விருதினைப்  பெற்றமைக்காக எனக்குப் பிடித்த  பத்து விஷயங்களைத் தந்துள்ளேன். இதில் முதல் ஏழும் VERSATILE BLOGGER AWARD பெற்றபோது தெரிவிக்கப் பட்டவை.  (அப்போது இவற்றின் அதிகமான விவரத்தினை நான் சொல்லவில்லை)

எனக்குப் பிடித்த பத்து:

1.புத்தகம் படித்தல்:
 சின்ன வயதிலிருதே இந்த பழக்கம். மனம் ஒன்றி, அதிலேயே லயித்து புத்தகம் படித்தலும் ஒருவிதமான யோக நிலைதான்.

2.காபி (COFFEE )
வங்கி பணிக்கு சென்றவுடன் அடிக்கடி காபி அருந்தும் பழக்கம் வந்து விட்டது.

3.பழைய தமிழ் சினிமா பாடல்கள்.
 கல்லூரி படிப்பின் போது இலங்கை வானொலி ஒலிபரப்பிய பழைய தமிழ் சினிமாப் பாடல்களை அடிக்கடி கேட்பேன். நானும் பாடுவேன்.

4.பயணம் செய்தல்
வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லும் பயணம் உண்மையிலேயே ஆனந்தமான விஷயம்தான்.

5.போட்டோகிராபி
ஆரம்பத்தில் NATIONAL-35, YASHICA  FX-3 SUPER (பெரியது)  ஆகிய காமிராக்களை பயன்படுத்தினேன். போட்டோகிராபி சம்பந்தப்பட்ட நூலகளையும்  வாங்கினேன். படித்தேன். பெரிய காமிரா யாசிகா பழுதடைந்து விட்டது. இப்போது CANON – Power Shot A100  என்ற சிறிய டிஜிடல் காமிராவைப் பயன்படுத்துகிறேன். வலைப் பதிவிற்கு இது போதும்.

6.கூகிள் ( GOOGLE )
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று பாடினார் கண்ணதாசன். எந்த விஷயமானாலும் கேட்டதும் கொடுக்கும் இந்த தேடுபொறி ( SEARCH ENGINE ) இண்டர்நெட்டைப் பயன் படுத்தும் அனைவருக்கும் பிடித்தமானதுதான்.       

7.வலைப் பதிவு
என்னுடைய ஆத்ம திருப்தி தரும் விஷயம்.

8.எங்கள் வீட்டு நாய் “ஜாக்கி
நல்ல நண்பன். நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட எனது கால் வலி, ஜாக்கியை நடைப் பயிற்சிக்கு தினமும் அழைத்துச் சென்றதாலேயே குணமாகிவிட்டது.

9.மற்றவர்களுக்கு என்னால் முடிந்த உதவி.
அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் உள்ள மகிழ்ச்சியை சொன்னால் தெரியாது.

10.பிடித்த திரைப்பட கதாநாயகன் எம்.ஜி.ஆர்
பழைய தமிழ் திரைப் படங்களில் எப்போதும் மகிழ்ச்சியாகவே வலம் வரும் எம்.ஜி.ஆர் தான் எனக்குப் பிடித்த திரைப்பட கதாநாயகன்.
 
விருதினைப் பெற்ற வலைப் பதிவர்கள் (BLOGGERS) செய்ய வேண்டியது.

1.சன்சைன் ப்ளாக்கர் விருது   (SUNSHINE BLOGGER AWARD) “ என்ற இந்த விருதின் அடையாளத்தினை (LOGO) உங்கள் வலைப் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

2 உங்களைப் பற்றிய பத்து விவரங்களைச் சொல்லவும்..

3. இந்த விருதினை 10 அல்லது 12 பேருக்கு ( மற்ற பதிவர்களுக்கு)  பகிர்ந்தளியுங்கள்.

4. இந்த விருது கொடுக்கப் பட்ட  செய்தியினை அவர்களது பதிவில் சென்று தெரியப் படுத்தவும்.

5. உங்களால் தெரிவு செய்யபட்டவர்களுக்கும் உங்களுக்கும் இடையில் உள்ள நட்பைப் பற்றி தெரியப் படுத்தவும்.

6. உங்கள் வலைப் பதிவில் இது பற்றிய மற்றவர்களது கருத்துரைகளை வெளியிடுங்கள்.





தகுதி வாய்ந்த நிறைய பதிவர்களுக்கு திரு.வை.கோபால கிருஷ்ணன் அவர்கள் இந்த விருதினை பகிர்ந்து தந்துவிட்டார். எனவே எனக்கு இந்த வேலை இல்லாமல் போய்விடடது.. எனவே கருத்துரைகளை மட்டும் வரவேற்கிறேன்.
   
                      ( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )








24 comments:

  1. எதையும் மிகத் தெளிவாகவும்
    வித்தியாசமாகவும் செய்யக் கூடியவ பதிவர்
    வை.கோ அவர்கள்.அவர் தேர்ந்தெடுத்துள்ள 108 பதிவர்களும்
    அருமையான பதிவுகளைத் தருவதுடன்
    தொடர்ந்தும் பதிவினைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்
    அவர்கள் அனைவரின் சார்பாக வை.கோ அவர்களுக்கும்
    விருதிற்கான விளக்கத்தினை அருமையான பதிவாகக்
    கொடுத்த தங்களுக்கும் என மனமார்ந்த நன்றியினைத்
    தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  2. விருதினைப் பெற்ற தங்களுக்கும் விருது வழங்கிய வை.கோ.ஜி அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    இனிய பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  4. அன்புக்கும் மரியாதைக்கும் உரிய என் அருமை நண்பர் திரு. தமிழ் இளங்கோ அவர்களுக்கு முதற்கண் வணக்கங்கள்.

    நான் அளித்த இந்த விருதினை தாங்கள் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

    மேலும் அந்த விருதினைப்பற்றி நானே அறியாத பல தகவல்களைத் தேடிக்கண்டு பிடித்துக் கொடுத்துள்ளது தங்களின் தனிச்சிறப்பாகும். அதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    தொடரும்.....

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஐயா!.தங்களோடு இணைந்து சன்ஷைன் பிளாக்கர் விருது பெறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    ReplyDelete
  6. //திரு VGK அவர்கள் தனக்குக் கிடைத்த இந்த விருதினை 108 வலைப் பதிவர்களுக்கு பகிர்ந்து தந்துள்ளார்//

    எனக்கு இதுவரை என் பதிவுகள் பலவற்றில், பின்னூட்டம் என்ற உற்சாக பானத்தை ஒரு சொட்டாவது கொடுத்துள்ள சுமார் 1008 பேர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும் என்று தான் நான் ஆசைப்பட்டேன்.

    அவ்வாறு செய்ய என் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை ஐயா.

    அதனால் ஏதோ Random ஆக இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒருசில பதிவுகளில் தென்பட்ட ஒரு 108 நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்தேன்.

    அதிலும் ஒருசில முக்கியமான நபர்களின் பெயர்கள் விடுபட்டுப் போய் உள்ளதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன்.

    தொடரும்....

    ReplyDelete
  7. //எனவே நான் இந்த விருதினைப் பெற்றமைக்காக எனக்குப் பிடித்த பத்து விஷயங்களைத் தந்துள்ளேன்.//

    அனைத்துமே அருமை ஐயா.

    அதில் 4 + 8 தவிர, மீதி அனைத்தும் எனக்கும் மிகவும் பொருந்துவதாகவே உள்ளன.

    நானும் ஒரு 50 வயதுவரை பயணங்களில் மிகவும் ஆசைப்பட்டவன் தான். பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளவன் தான். இப்போது அது என்னவோ எனக்கு சுத்தமாகப் பிடிப்பதில்லை.

    நேற்று முன்தினம் கூட, திரு.மதுமதி அவர்களும், புலவர் திரு. இராமாநுசம் ஐயா அவர்களும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நீண்ட நேரம் என்னுடன் பேசி, சென்னையில் நடைபெறும் பதிவர்கள் மாநாட்டுக்கு அவசியமாக நான் வரவேண்டும், வந்து கலந்துகொள்ள வேண்டும் என அன்புக்கட்டளை இட்டனர்.

    மூத்த பதிவர்களை ஸ்பெஷலாக கெளரவிக்கும் திட்டம் வைத்துள்ளார்களாம்.

    பயணங்கள் பிடிக்காததால் என்னால் அதை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    “ஆகட்டும் ஐயா, முயற்சிக்கிறேன், ஒருவேளை வரமுடியாமல் போனால், மன்னித்துக்கொள்ளுங்கள்” எனச் சொல்லியுள்ளேன்.

    சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, நாய் கடித்து என் தூரத்து உறவினர் பையன் ஒருவனுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பினாலும், உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளாததால், அவனுக்கு ஏற்பட்ட பரிதாபமான முடிவினாலும், எனக்கு இந்த நாய் பூனை போன்ற எந்த ஒரு வளர்ப்புப் பிராணிகளையும் பிடிப்பதில்லை.

    தொடரும்....

    ReplyDelete
  8. //பிடித்த திரைப்பட கதாநாயகன் – எம்.ஜி.ஆர்//

    எனக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி, பாக்யராஜ், ரஜினி, கமல் என பல கதாநாயகர்களையும் பிடிக்கும். நகைச்சுவைக் காட்சிகள் மிகவும் பிடிக்கும்.

    பழைய படத்தின் பாடல்களையும், பாடல் வரிகளை மிகவும் ரஸிப்பேன்.

    தொடரும்.....

    ReplyDelete
  9. அழகான தங்களின் இந்தப்பதிவுக்கும், பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மேலும் பல்வேறு விருதுகள் பெற்றிட வாழ்த்துகள்.

    பிரியமுள்ள,
    vgk

    ReplyDelete
  10. என்னால் மேற்படி விருதினை பகிர்ந்து கொண்ட 108 பதிவர்களில், பலருக்கும் முதல் தகவல் தங்களாலேயே கொடுக்கப்பட்டுள்ளது, என்பதையும் அறிந்து கொண்டேன்.

    அதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

    அன்புடன் vgk

    ReplyDelete
  11. REPLY TO …… ….. Ramani said...
    // எதையும் மிகத் தெளிவாகவும் வித்தியாசமாகவும் செய்யக் கூடியவர் பதிவர் வை.கோ அவர்கள் //

    கவிஞர் ரமணி அவர்களே நீங்கள் சொல்வது சரிதான். நமது VGK அவர்கள் எழுதியுள்ள பதிவுகளின் மூலமாகவே இதனைத் தெரிந்து கொள்ளலாம். நான் அவர் இருக்கும் திருச்சியிலேயே இருந்தும் ஒருமுறை கூட அவரை நான் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது இல்லை. எனக்கே ஆச்சரியமாகததான் உள்ளது. தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!

    ReplyDelete
  12. REPLY TO … ….. வெங்கட் நாகராஜ் said...

    தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

    ReplyDelete
  13. REPLY TO …… வரலாற்று சுவடுகள் said...

    உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  14. REPLY TO …… தமிழானவன் said...

    தமிழ்வினை ஆற்றும் தமிழானவன் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  15. REPLY TO …… T.N.MURALIDHARAN said...

    வாழ்த்துக்கள்! வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  16. REPLY TO …… வை.கோபாலகிருஷ்ணன் said... 1, 2, 3, 4, 5, 6.

    1) அன்புள்ள VGK அவர்களின் வருகைக்கு நன்றி!

    2) உங்கள் உடல் நிலையை கவனித்துக் கொள்ளவும்.

    //அதிலும் ஒருசில முக்கியமான நபர்களின் பெயர்கள்
    விடுபட்டுப் போய் உள்ளதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன் //

    சில சமயம் இப்படித்தான் ஆகிவிடுகிறது. மீண்டும் ஒரு விருது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். அப்போது விடுபட்டு
    போனவர்களை நினைவில் கொள்ளலாம்.

    3)
    எனது கால் வீக்கம் காரணமாக நானும் சென்னை பதிவர் சந்திப்பிற்கு வருவது சந்தேகம்தான்.

    வளர்ப்புப் பிராணிகள் விஷயத்தில் உஙகளுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் எனக்கும் எனது சிறு வயதில் ஏற்பட்டது. கிராமத்தில் என்னுடைய தாத்தா வீட்டில் இருந்த நாட்டு நாய் எல்லோரிடமும் அன்பாக இருந்தது. எங்கள் அம்மாவின் சித்தப்பா ஒருவர் கிராமத்தில் வேறு இடத்திலிருந்து வந்த வெறிநாய் கடித்து இறந்தார். அப்போது எங்கள் வீட்டு நாய் உட்பட கிராமத்தில் இருந்த எல்லா நாய்களையும் பிடித்துக் கொண்டு போய் விடார்கள். அதிலிருந்து எனக்கும் நாய் என்றால் ஒருவித்மான பயம் இருந்தது. எனது மகன் ஏழு வருடங்களுக்கு முன்னர் TIN TIN கார்ட்டூன் படம் பார்த்து விட்டு கொண்டு வந்த நாய்தான் இப்போது எங்கள் வீட்டில் இருக்கும் ” ஜாக்கி “.வேறு வழியில்லாமல் அது எனது நண்பனாகி விட்டது.

    4)
    பழைய பாடல்களில் உள்ள இனிமை, இசை, கருத்து இப்போதுள்ள பாடல்களில் இல்லை.

    5)
    உங்கள் ஆசீர்வாதம் எனக்கு பலிக்கட்டும்.

    6)
    நான் கருத்துரை சொன்ன பதிவர்களுக்கு மட்டும் அவர்கள் இந்த விருது பெற்றமையை தெரிவித்தேன். எல்லோருக்கும் சொல்லவில்லை.

    ReplyDelete
  17. முதலில் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார் !

    விருதைப் பற்றி விரிவான தகவல்... பாராட்டுக்கள்...

    எனக்கும் விருது வழங்கி உள்ளார்... வாரம் ஒரு முறை ஒரு பதிவு எழுதவே முடிவதில்லை... நேரம் கிடைப்பது சனிக்கிழமை and ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான்... ஏற்கனவே ஒரு தலைப்பை யோசித்து வைத்து இருந்தேன்... பாடல்களை சேர்த்தால் முடியாது என்பதால், எப்படியும் இந்த விருதை தெரிவிப்பதற்காக ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து முடித்து விட்டேன்...( உன்னால் முடியம் பகுதி 3-யை தவிர்த்து விட்டு)
    இன்றைய பதிவில் அதைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்...

    நன்றி…
    (T.M. 4)

    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  18. விருதினை பகிர்ந்தளித்த ஐயாவுக்கும் பெற்றுக்கொண்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. REPLY TO …… திண்டுக்கல் தனபாலன் said..

    உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள், இரண்டாம் முறையாக. நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். வீட்டு வேலைகளையும் கவனியுங்கள். உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றையும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

    ReplyDelete
  20. REPLY TO …. Sasi Kala said...
    சகோதரி கவிஞர் “தென்றல்” சசிகலா அவர்களே திரு VGK உங்களுக்கும் இந்த விருதினை தந்துள்ளார். இரண்டாம் தடவை ஒருமுறை எனது வாழ்த்துக்கள். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

    ReplyDelete
  21. //Ramani said...
    எதையும் மிகத் தெளிவாகவும் வித்தியாசமாகவும் செய்யக் கூடியவ பதிவர் வை.கோ அவர்கள்.

    அவர் தேர்ந்தெடுத்துள்ள 108 பதிவர்களும் அருமையான பதிவுகளைத் தருவதுடன்
    தொடர்ந்தும் பதிவினைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்//

    My Dear Mr. RAMANI Sir,

    இன்று மிகப்பிரபலமான + மிகச்சிறந்த பதிவராகவும் இருந்துகொண்டு, மிகத்தரம் வாய்ந்த படைப்புகளை மட்டும் தந்துகொண்டு, நான் செல்லும் அனைத்து வலைத்தளங்களுக்கும் [ஏன் .... நான் செல்லாத வலைத்தளங்கள் பலவற்றிற்கும் கூட] சென்று, அவர்கள் அத்தனை பேர்களுக்கும் மிகவும் அருமையான + தெளிவான + ஊக்கமும் உற்சாகமும் அளிக்கக்கூடிய பின்னூட்டங்களை அளித்து, வோட்டும் அளித்து வரும் தங்கள் கைப்பட இப்படி என்னை எடைபோட்டு எழுதியுள்ளது எனக்கு மிகப் பெரியதோர் விருது கிடைத்ததாக உணர்கிறேன். மனம் மகிழ்கிறேன்.

    தங்களின் அனைத்துப்பதிவுகளுக்கும் முன்பெல்லாம் என்னால் வருகை தந்து கருத்தளிக்க முடிந்தது. இப்போது அதுபோல முடியாமல் இருப்பினும் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கிறேன்.

    நான் செல்லும் பதிவுகளில் உள்ளவற்றை முழுவதுமாகப் படித்து மனதில் ஓரளவு ஏற்றிக்கொண்ட பிறகே, பின்னூட்டம் அளிக்கப்பட வேண்டும் என்று ஓர் கொள்கையை நான் வைத்துக் கொண்டுள்ளதால், எனக்கு சிலசமயங்களில், பல பதிவுகளைப் படித்து புரிந்துகொண்டு, மனதில் ஏற்றி, பின்னூட்டம் இட நேரம் கிடைக்காமல் போய் விடுகிறது. அதனால் என்னை தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம்.

    தாங்கள் என் மீது வைத்துள்ள நல்லெண்ணத்திற்கு, என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள்.
    VGK

    ReplyDelete