அடுத்து என்ன தலைப்பில் எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் திரு. VGK அவர்கள் (வை.கோபாலகிருஷ்ணன்) (http://gopu1949.blogspot.in ) இந்த லிப்ஸ்டர் விருதினை (LIEBSTER AWARD) தந்துள்ளார்கள். ஆக எனக்கு எழுதுவதற்கும் ஒரு தலைப்பும் கிடைத்து விட்டது. இந்த விருதினை அவருக்குத் தந்தவர் திருமதி. லீலா கோவிந்த் அவர்கள். ( http://leelashobbies.blogspot.in) திரு VGK அவர்கள் தான் பெற்ற இந்த விருதினை 108 பேருக்கு இந்த சுதந்திர தினத்தில் (15.08.12) பகிர்ந்து தந்துள்ளார். இருவருக்கும் நன்றி. விருதினைப் பெற்ற மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
இந்த விருதினைப் பற்றி சில வார்த்தைகள்:
இந்த விருதின் தொடக்கம் ஜெர்மனி என்று மட்டும் தெரிகிறது. Liebster என்ற ஜெர்மன் சொல்லிற்கு அன்பான (Dearest) என்று அர்த்தம் சொல்லுகிறார்கள். யார் இந்த விருதினை தொடங்கி வைத்து வழங்கினார்கள் என்று கூகிள் (GOOGLE ) உதவியில் தேடியும் வரலாறு தெரியவில்லை. ஆங்கில மொழியிலும் விருதினைப் பெற்றவர்களின் நன்றிக் கட்டுரைகள்தான் உள்ளன.
இந்த லிப்ஸ்டர் விருதினைப் பெற்றவர் தன்னைப் பற்றிய பதினோரு விவரங்களைச் சொல்ல வேண்டும். மேலும் சில விதிகள்.
1. இந்த விருதினைத் தந்த வலைப் பதிவருக்கு தனது பதிவின் மூலம் நன்றி சொல்ல வேண்டும்.
2. இந்த விருதினத் தந்தவர் பதிவில் இணைய வேண்டும்.
3. இந்த விருதிற்கு கொடுக்கப்பட்ட அடையாளத்தினை தனது பதிவில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
4. இந்த விருதினை (பின் தொடர்பவர்கள் 200 பேருக்கு குறைவாக உள்ள) ஐந்து வலைப் பதிவர்களுக்கு தர வேண்டும்.
5. இந்த விவரத்தினை விருது பெற்றவர்களுக்கு அவர்கள் பதிவிற்கு சென்று தெரியப் படுத்த வேண்டும்.
என்னைப் பற்றிய விவரங்கள் பதினொன்று :
ஏற்கனவே ” VERSATILE BLOGGER AWARD” மற்றும் “SUNSHINE BLOGGER AWARD” - விருதுகள் பெற்ற போது என்னைப் பற்றி சொன்ன விவரங்களில் எனக்குப் பிடித்த பத்து குறிப்பிட்டு இருந்தேன். (1.புத்தகம் படித்தல். 2.காபி (COFFEE ) 3.பழைய தமிழ் சினிமா பாடல்கள். 4.பயணம் செய்தல் 5.போட்டோகிராபி 6.கூகிள் ( GOOGLE ) 7.வலைப் பதிவு 8.எங்கள் வீட்டு நாய் “ஜாக்கி” 9.மற்றவர்களுக்கு என்னால் முடிந்த உதவி. 10.பிடித்த திரைப்பட கதாநாயகன் – எம்.ஜி.ஆர்) எனவே 11 ஆவதாக குறிப்பிடுவது எனது வீட்டு நூலகம். அப்பா சேர்த்து வைத்து இருந்த புத்தகங்களோடு எனது சேகரிப்பும் நிறைந்தது. வெள்ளத்தில் போனவை, இரவல் கொடுத்து திரும்ப வாராமல் போனவை போக மீதமுள்ள கவிதை, கட்டுரை, வரலாறு, மானிடவியல், உள்வியல், கதைகள், இலக்கியம் என்று பல துறையைச் சார்ந்த நிறைய நூல்கள். பெரும்பாலும் தமிழ் நூல்கள்.
வலைப் பதிவில் விருதுகள் என்பவை வலைப் பதிவருக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருபவை. சிலசமயம் ஒரே விருது, பலமுறை ஒரு பதிவருக்கு வெவ்வேறு பதிவர்களால் வழங்கப்பட்டுவிடும். அதிக ஆர்வம்தான் இதற்கு காரணம்.விருதுகள் வழங்கும் அளவுக்கு நான் பெரிய ஆளோ அல்லது பெரிய வலைப் பதிவரோ கிடையாது. எனக்கு வலைப் பதிவில் அறிமுகமான ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதினை பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
1..திரு.காளிதாஸ் முருகையா – தொடுவானம்
தஞ்சை மண்ணுக்கு சொந்தக்காரர். கவிதை, கட்டுரைகளை தனது வலைப் பதிவில் தருபவர்.
நூல் விமர்சனம் முதல் சமுதாயக் க்ண்ணோட்டம் வரை பல் வேறு தலைப்புகளில் மனதில் பட்டதை எழுதி வருகிறார்.
கோவைக்காரர். கல்வித்துறை. அனுபவங்களையும், தகவல்களையும் அள்ளித் தருகிறார்.
4.வல்லத்தான் - http://duraigowtham.blogspot.in
தஞ்சைக்கும் திருச்சிக்கும் இடையில் உள்ள வல்லம் என்ற ஊர்க்காரர். சினிமா, அரசியல், சொந்த மண் பெருமை என்று வலைப் பூவில் வலம் வருகிறார்.
5.திரு த.மணிகண்டன் – மதன்மணி அன்பைத் தேடி
ஈரோட்டுக்காரர். தமிழ் இலக்கிய மாணவன். தனது வலைப்பூவில் தமிழ் இலக்கிய மணம் கமழ எழுதுகிறார். கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி.திருச்செங்கோடு .நாமக்கல் மாவட்டம்2009-2012 பாரதியார் பல்கலைக்கழகம் கோவை 2012-2014
நன்றி! எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்!
விருதுபெற்றமைக்கும்
ReplyDeleteஅதனை உடன் சிறந்த பதிவர்களுக்கு
பகிர்ந்து கொடுத்தமைக்கும்
நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteவாழ்த்துக்கள் விருதினை பெற்றுக்கொண்டாவர்களுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteதி.த.இளங்கோ சார்,
ReplyDeleteவாழ்த்துக்கள்!
மறுபடியும் ஆரம்பத்தில இருந்தா :-))
விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்... தேடிக் கண்டுபிடித்து விருதின் விவரத்தை பதிவிட்டதற்கு பாராட்டுக்கள் ஐயா... நன்றி... (TM 2)
ReplyDeleteபதிவர்களை ஊக்குவிப்பதற்கு அவரைத் தவிர யாராலும் முடியாது... ஐயா எனக்கும் அளித்துள்ளார்... (நேரமின்மையால் பதிவு எழுத இயலவில்லை... விரைவில் எழுத வேண்டும்)
REPLY TO …… Ramani said...
ReplyDeleteஎனது பதிவுகளுக்கு எப்போதும் ஊக்கம் தந்து வரும் கவிஞர் ரமணி அவர்ளின் பாராட்டிற்கு நன்றி!
REPLY TO ….. Sasi Kala said...
ReplyDeleteகவிமழை பொழிந்து வரும் சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!
REPLY TO ….. வவ்வால் said...
ReplyDelete// தி.த.இளங்கோ சார், வாழ்த்துக்கள்!மறுபடியும் ஆரம்பத்தில இருந்தா :-)) //
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி! உங்கள் பதிவுகளில் பல ஆங்கில சொற்களுக்கும் ,வீட்டு உபயோக பொருட்களுக்கும் நல்ல தமிழ் சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் எப்போதும் என் பெயரை சொல்லும் போது மட்டும் “தமிழ்” என்ற அந்த மூன்றெழுத்தை விட்டு விடுவது ஏனோ? நினைத்துப் பார்த்தால் வாழ்க்கையில் ஆரம்பமும் முடிவும் ஒன்றுதான்!
REPLY TO …… திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// பதிவர்களை ஊக்குவிப்பதற்கு அவரைத் தவிர யாராலும் முடியாது... ஐயா எனக்கும் அளித்துள்ளார்... (நேரமின்மையால் பதிவு எழுத இயலவில்லை... விரைவில் எழுத வேண்டும்) //
பதிவர்களை ஊக்குவிப்பதில் திரு VGK அவர்கள் முன்னணியில் உள்ளார்! உங்களுக்கு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள். எப்போதும் பதிவைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டாம் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்.....
ReplyDeleteசிறப்புகள் வாய்ந்த விருதை எனக்கும் அளித்தமைக்கு நன்றிகள் சார்..
அன்புள்ள ஐயா, வணக்கம். வாழ்த்துகள்.
ReplyDeleteவிருதினை அன்புடன் ஏற்றுகொண்டு அதைப்பற்றிய ஒருசில விஷயங்களைப்பகிர்ந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
//அடுத்து என்ன தலைப்பில் எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் திரு. VGK அவர்கள் (வை.கோபாலகிருஷ்ணன்) (http://gopu1949.blogspot.in ) இந்த லிப்ஸ்டர் விருதினை (LIEBSTAR AWARD) தந்துள்ளார்கள். ஆக எனக்கு எழுதுவதற்கும் ஒரு தலைப்பும் கிடைத்து விட்டது. //
ஆஹா! அந்தக் கவலையே தங்களுக்கு வேண்டாம். வெகு விரைவில் என்னிடமிருந்து தங்களுக்கு மேலும் ஓர் விருது கிடைக்க உள்ளது. ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் வந்து சேரும்.
அன்புடன்,
vgk
தங்களிடமிருந்து இந்த விருதினைப் பெறும் ஐவருக்கும் என் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeletevgk
நேசத்திற்கு உரிய,ஒரு பதிவராய் போற்றி லிப்ஸ்டர் விருது (LIEBSTAR AWARD) பகிர்ந்துகொண்ட திரு.தமிழ் இளங்கோ அவர்களுக்கு மனமார்ந்த என் நன்றிகள். இந்தப் பாராட்டு மேலும் பண்பட உதவும் என நம்புகிறேன்.விருதுக்கான நோக்கமும் விதிமுறையும் புரிந்து வழி நடக்க முயற்சிப்பேன்.
ReplyDeleteஎன்றும் அன்புடன் .
தி. தமிழ் இளங்கோ சார்,
ReplyDeleteமுழுப்பெயரும் தட்டச்சு செய்ய சோம்பல் எனவே தான் சுருக்கி சொன்னேன் மற்றபடி "தமிழ்" என சொல்ல தயங்கி அல்ல, தமிழ் தான் எனக்கு நன்கு வரும், தாய்மொழி ஆச்சே அப்படி இருக்கும் போது தவிர்ப்பேனா. எனது பதிவுகளிலும் தேவையான அளவுக்கு தமிழை கொண்டுவந்துவிடுவேன், கொஞ்சம் பேச்சு வழக்கில் இருக்கட்டும் என ஆங்கிலமும் கலந்து கொள்வேன் , கட்டுப்பாடான விதி வைத்துக்கொள்வதில்லை.
முடிவில் இருந்தே ஆரம்பம் என்பது யுனிவர்சல் தத்துவம், பிக் பேங் தியரி அதானே சொல்லுது.
நீங்கள் தப்பாக நினைக்கவில்லை எனில் ஏன் லிப்ஸ்டர் அவார்ட் கொடுத்துவிட்டு அதன் பேனரை இணைக்க சொல்கிறார்கள் என்பதனை சொல்வேன்,உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.
எனவே ஒரு பதிவருக்கு அவார்ட் கொடுக்க நினைத்தால் பதிவர்களே உருவாக்கி கொடுக்கலாம் என்பது எனது கருத்து.
REPLY TO ……..வை.கோபாலகிருஷ்ணன் said...(1, 2)
ReplyDeleteVGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
REPLY TO ……..Kalidoss Murugaiya said...
ReplyDeleteதங்கள் அன்பிற்கும் விருதினை ஏற்றுக் கொண்டமைக்கும் நன்றி!
REPLY TO …….. வவ்வால் said...
ReplyDelete// எனது பதிவுகளிலும் தேவையான அளவுக்கு தமிழை கொண்டுவந்துவிடுவேன், கொஞ்சம் பேச்சு வழக்கில் இருக்கட்டும் என ஆங்கிலமும் கலந்து கொள்வேன் , கட்டுப்பாடான விதி வைத்துக்கொள்வதில்லை.//
நானும் தாய் மொழி தமிழ் விஷயத்தில் என்னைச் சுற்றி வட்டம் எதுவும் போட்டுக் கொள்ளவில்லை.
// நீங்கள் தப்பாக நினைக்கவில்லை எனில் ஏன் லிப்ஸ்டர் அவார்ட் கொடுத்துவிட்டு அதன் பேனரை இணைக்க சொல்கிறார்கள் என்பதனை சொல்வேன்,உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.//
எனக்குத் தெரியவில்லை. வலைப்பதிவில் மற்றவர்களை சங்கடப்படுத்தாத செய்தி என்றால் தெரிவிக்கலாம்.
Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
ReplyDeleteREPLY TO …….. இராஜராஜேஸ்வரி said... // Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR.. //
ReplyDeleteசகோதரியின் தகவலுக்கு நன்றி! வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் பதிவில் எனது வரிகள் ...
// திரு VGK அவர்களுக்கு வணக்கம்! முதல் தடவை நான்கு நாட்களுக்கு முன்னர் இந்த பதிவை நீங்கள் போட்ட போது உள் நுழைய முடியவில்லை. இப்போது சகோதரி திருமதி இராஜராஜேஸ்வரி (மணிராஜ்) எனது பதிவில் சொன்ன பிறகுதான் தெரிந்தது. அதற்குள் எனது Dash Boad – இல் உங்கள் பதிவுகளுக்கு மேல் நிறைய பதிவுகள். “FABULOUS BLOG RIBBON AWARD “ – என்ற இந்த விருதினை எனக்குத் தந்தமைக்கு நன்றி! மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! //
மிக்க நன்றி நண்பரே.. இன்றே என்னால் வலைப்பக்கம் வர இயன்றது.. தாமதத்திற்கு மன்னிக்கவும். எனது முதல் அங்கீகாரம். மிக்க நன்றி நண்பரே.. இந்த விருது மென்மேலும் என்னை ஊக்குவிக்கும்.. நன்றி..
ReplyDeleteREPLY TO ….. .. கோவி said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! வாழ்த்துக்கள்!