Monday, 13 August 2012

சமயபுரம் கோயில்: நண்பர்கள் அன்னதானம்.

தமிழ் நாட்டில் திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலாகும். இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் ஆடி மாதம் முழுக்க பக்தர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த வண்ணம் இருப்பார்கள். மேலும் சமயபுரத்தைச் சுற்றியுள்ள அரியலூர், பெரம்பலூர்,புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாரியம்மன் பக்தர்கள் குழுவாக அவர்கள் ஊரிலிருந்து நடைப் பயணமாக மஞ்சள் ஆடை அணிந்து (சிறுவர்கள் உட்பட) சமயபுரம் கோயிலுக்கு வருவார்கள். அதுசமயம் வழியெங்கும் பக்தர்களுக்கு பன், டீ, தண்ணீர் பாக்கெட், நீர்மோர், அன்னதானம் என்று சில பக்தர்கள் தர்ம சிந்தனையில் வழங்குவார்கள்.

திருச்சி நகரப் பகுதியில் உள்ள கிளைகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் சிலர் நண்பர்களுடன் இணைந்து கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ஆவணி மாதத்தில் ஒருநாள் இந்த அன்னதானம் செய்து வருகின்றனர். இதனை ஆரம்ப காலத்தில் தொடங்கி வைத்தவர் திரு A.கலைச் செல்வம் அவர்கள். இவர் திருமயம் அருகே உள்ள சிறுகூடல் பட்டி அருகே உள்ள அரிபுரம் என்ற ஊர்க்காரர். முன்பு புளியோதரை பொட்டலங்கள் கொடுக்கப்பட்டன. அதில் பல பக்தர்களால் வீணடிக்கப் படுவதால், சென்ற ஆண்டிலிருந்து புளியோதரைக்குப் பதில், ஒரு அட்டை தட்டில் வெண் பொங்கல் சுடச் சுட சாம்பாரோடு கொடுக்கப்பட்டது. மேலும் பன்னும், பாலும், தண்ணீர் பாக்கெட்டும் வழங்கப் பட்டன. காலை வேளை என்பதால் பசி உள்ளவர்கள் மட்டுமே இந்த வெண்பொங்கலை வாங்கி சாப்பிட்டார்கள். எதுவும் பக்தர்களால் வீணடிக்கப் படவில்லை. இந்த வருடம் இன்று (13.08.12) அருள்மிகு கருப்பண்ணசாமி மதுரைவீரன் சாமி கோயில்கள் வாசல் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று அங்கு நான் எடுத்த  புகைப்படங்கள் சில. (நான் ஸ்டேட் பாங்கிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு கடந்த ஐந்து வருடங்களாக அந்த அன்னதான நண்பர்களோடு இணைந்துள்ளேன்) 

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள நுழைவு வாயில்:


கோயிலின் முகப்பு (கிழக்கு) வாயில்:

 கோயிலின் தெற்கு வாயில்:

 

அன்னதானம் நடந்த இடம்:


 அன்னதான காட்சிகள்: 

 கோயில் திருமண மண்டபத்தில் உள்ள தேர்:


29 comments:

 1. தி.த.இளங்கோ சார்,

  கோவில் உண்டியலில் போடுவதை விட இப்படியான அன்னதானங்களே சிறந்தது, எனக்கு பக்தி எல்லாம் இல்லை என்றாலும் அன்னதான திட்டத்தினை ஆதரிக்கவே செய்வேன்.

  பசியினை பிணி என்றே சொல்வார்கள் எனவே பசிப்பிணி நீக்குதல் எவ்வடிவில் என்றாலும் ஆதரிக்கப்பட வேண்டும்.

  இந்த வகையில் வள்ளலார் முன்னோடி எனலாம், இன்றும் அங்கு அன்ன தானம் தினமும் நடக்கிறது ,அணையா அடுப்பு என்கிறார்கள், பெரும்பாலான கோவில்களுக்கு போயிட்டு காரில் உட்கார்ந்துவிடுவேன் , மற்றவர்கள் தான் பக்தியில் மூழ்க போவாங்க :-))

  ReplyDelete
 2. சிறப்பான பகிர்வு...
  படங்கள் அனைத்தும் அருமை...
  வாழ்த்துக்கள்... நன்றி… (த.ம.1)

  ReplyDelete
 3. அன்புள்ள ஐயா, தங்கள் குழுவினரின் அருட்தொண்டு மிகவும் பாராட்டத்தக்கது.

  படங்களும் பதிவும் வெகு அருமை.

  இன்று 13.08.2012 மாலையில் என் மூத்த பிள்ளை + மருமகள் + பேரன் + பேத்தி, நால்வரும் குணசீலம் + சமயபுரம் காரில் போய்விட்டு, இப்போது தான் பிரஸாதத்துடன் வந்தார்கள்.

  பிரஸாதம் இட்டுக் கொண்டு வந்தால் தங்களின் இந்தப்பதிவு. எனக்கு ஒரே ஆச்சர்ய்மாக உள்ளது.

  பாராட்டுக்கள்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 4. மிகச்சிறப்பான அற்ப்பணிகளுக்குப் பாராட்டுக்களும்
  மனம் நிறைந்த இனிய வாழ்த்துகளும்..

  ReplyDelete
 5. அன்னதானம் மிக உயர்ந்த சேவை.போற்றுதற்குரியது.
  படங்கள் அருமை

  ReplyDelete
 6. REPLY TO … … … வவ்வால் said...

  // பசியினை பிணி என்றே சொல்வார்கள் எனவே பசிப்பிணி நீக்குதல் எவ்வடிவில் என்றாலும் ஆதரிக்கப்பட வேண்டும் //

  என்ற தங்களது கருத்தினை வரவேற்கிறேன். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  சென்ற எனது பதிவில் // டோகோமோ சிக்னல் கிடைக்கும் எனில் அதனை முயற்சிக்கலாம் // என்று சொல்லியிருந்தீர்கள். இப்போது எங்கள் கம்ப்யூட்டரில் BROADBAND – இணைப்பிற்கு டோகோமோதான். யோசனைக்கு நன்றி!


  ReplyDelete
 7. REPLY TO …. … … திண்டுக்கல் தனபாலன் said...

  உங்கள் அன்பான வருகைக்கு நன்றி!
  உங்கள் ஊர் தகவல் ஒன்று. ஞான சித்தன், ஞானவெட்டியான், ஆலயங்கள் என்று ஆன்மீக கட்டுரைகள் எழுதி வரும் ஆசிரியர் திண்டுக்கல்லில் தான் இருக்கிறார். அவர் எங்கள் வங்கியில் அதிகாரியாக பணியாற்றியவர்.


  ReplyDelete

 8. REPLY TO …. … … வை.கோபாலகிருஷ்ணன் said...

  திரு VGK அவர்களுக்கு வணக்கம்!

  // பிரஸாதம் இட்டுக் கொண்டு வந்தால் தங்களின் இந்தப்பதிவு. எனக்கு ஒரே ஆச்சர்ய்மாக உள்ளது. //

  “Everything happens for a reason“ என்பார்கள். சென்ற வாரம் ஏழைப் பிள்ளையார் கோயில் பக்கம் வந்தபோது உங்கள் “ ஏழாவது பிள்ளையார் “ என்ற கருத்து நினைவுக்கு வந்தது. தங்கள் அன்பான கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 9. REPLY TO …. … … இராஜராஜேஸ்வரி said...

  சகோதரி அவர்களது பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 10. REPLY TO …. … … T.N.MURALIDHARAN said...

  தங்கள் பாராட்டிற்கு நன்றி! கோயில்களின் படங்கள் என்றால் திருமதி. இராஜராஜேஸ்வரி ( மணிராஜ் ) பதிவுகளில் சிறப்பாக இருக்கும்.

  ReplyDelete
 11. நண்பர் வவ்வாலின் கருத்தை நான் அப்படியே வழிமொழிகிறேன்! நல்ல பதிவு ஐயா! பதிவை வாசிக்கையில் சகோதரி ராஜராஜேஸ்வரி வலைத்தளம் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை!

  ReplyDelete
 12. அருமையான பணி
  அதை படங்களுடன்பகிர்ந்தவிதம் அருமை
  நிச்சய்ம் இது உடன் திருப்பணி செய்தவர்களுக்கு
  கூடுதல் மகிழ்ச்சி தரும்
  மனம் கவர்ந்த செயல் மற்றும் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. அன்றைய வாழ்வியலில் கிராமத்தின் சொத்தாக திருவிழா வாழ்ந்திருந்தது. இன்று சாமி கும்பிடப் போனால் திருடர்கள் ஜாக்கிரதை என்கிற அறிவிப்பே அதிகமாய் கேட்கிறது.

  ReplyDelete
 14. REPLY TO ……………. வரலாற்று சுவடுகள் said...
  சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 15. REPLY TO ……………. Ramani said...

  கவிஞர் ரமணி அவர்களின் வாழ்த்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 16. REPLY TO …. Sasi Kala said...

  // இன்று சாமி கும்பிடப் போனால் திருடர்கள் ஜாக்கிரதை என்கிற அறிவிப்பே அதிகமாய் கேட்கிறது. //

  திருடர்களும் சாமி கும்பிட்டு விட்டுத்தான் திருட வருகிறார்கள். சகோதரி கவிஞர் “தென்றல் “ சசிகலாவின் கருத்துரைக்கு நன்றி!


  ReplyDelete
 17. தங்களின் பணி பாராட்டுக்குரியது. பக்தர்கள் மனம் மகிழ நிறைய பாடுபட்டிருக்கிற நெஞ்சங்களுக்கு நன்றி!

  ReplyDelete
 18. அழகிய படங்கள்.நற்பணிக்குப் பாராட்டுகளும்,வாழ்த்துகளும்

  ReplyDelete
 19. நல்ல சேவை. தொடருங்கள்.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. REPLY TO … … கே. பி. ஜனா... said...
  எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

  ReplyDelete
 21. REPLY TO … … சென்னை பித்தன் said...
  தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

  ReplyDelete
 22. REPLY TO … … மாதேவி said...
  தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி! ( மிளகாய் பற்றிய உங்கள் பதிவு நல்ல சுவை. நிறைய தகவல்கள், படங்களுடன். மற்றைய பதிவுகளை இனிமேல்தான் படிக்க வேண்டும்.) நன்றி!  ReplyDelete
 23. தங்களது திருப்பணி தொடர வாழ்த்துக்கள் சார்! படங்களுடம் தங்களது பதிவுக்கு நன்றி சார்!

  ReplyDelete
 24. REPLY TO …….யுவராணி தமிழரசன் said...
  சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 25. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் ஐயா....

  ReplyDelete
 26. REPLY TO ….. இராஜராஜேஸ்வரி said...

  சகோதரி அவர்களது பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 27. அன்பின் தமிழ் இளங்கோ - அருமையான பதிவு - தானங்களில் சிறந்தது அன்னதானம் தான் - பசியினைப் போக்கும் நற்செயல் நன்று - படங்கள் அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 28. அன்பின் சீனா அவர்களின் கருத்துரைக்கும் , நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  ReplyDelete