எனக்கு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில், உதவி பதிவாளர் – ஆக
பணிபுரிந்து ஓய்வு பெற்ற, முனைவர் திரு B.ஜம்புலிங்கம் அய்யா அவர்களை ஒரு வலைப்பதிவர்
என்ற முறையில்தான் முதன்முதல் தெரியும். தமிழ் வலையுலகில் அவர் எழுதி வரும் http://drbjambulingam.blogspot.com
முனைவர் ஜம்புலிங்கம் மற்றும் http://ponnibuddha.blogspot.com
சோழநாட்டில் பௌத்தம் (Buddhism in Chola Country) ஆகிய இரண்டு வலைப்பதிவுகளில், பௌத்தம்
பற்றிய கட்டுரைகளை ஆர்வமுடன் படிப்பதில் அவருடனான தொடர்பு ஏற்பட்டது. முதன்முதல் அவரது
பௌத்தம் சம்பந்தமான கட்டுரைகளைப் படித்தபோது அவர் புத்தமதத்தைச் சேர்ந்தவர்
(Buddhist) என்றே நினைத்திருந்தேன். 2014இல் புதுக்கோட்டையில் நடந்த இணையத் தமிழ்ப்
பயிற்சி பட்டறையில்தான் அவர்களை முதன்முதல் நேரில் சந்தித்தேன். அவர் பௌத்தம் பற்றிய
ஆராய்ச்சி மேற்கொண்ட சைவசமயத்தவர்.
கூட்டத்திற்கான அழைப்பு
நேற்று முன்தினம், தஞ்சையிலிருந்து ஜம்புலிங்கம் அய்யா அவர்கள்,
தனது செல்போனில் ”திருச்சியில் நாளை மாலை (03.11.17 – வெள்ளிக் கிழமை) திருச்சியில்
ஒரு சிறப்புரை கூட்டம். என்னை பேச அழைத்து இருக்கிறார்கள்” என்று விவரம் சொன்னதோடு, அடுத்தநாள் வாட்ஸ்அப்பில் (Whatsapp) எனக்கு அழைப்பும் விடுத்தார்.
முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களின் பௌத்த ஆய்வு தொடர்பான கட்டுரைகள் மற்றும் பத்திரிகைகளில்
வெளிவந்த தகவல்களைப் படித்த, திருச்சியிலுள்ள மகாபோதி சங்கத்தினர், தங்களது 23 ஆவது,
பவுர்ணமி விழாவில் இவரை சிறப்புரை ஆற்றும்படி அழைத்து இருந்தனர்.
கூட்டம் துவங்குவதற்கு
முன்னர்
(படம் மேலே – முனைவர் அவர்களுக்கு வல்லிக்கண்ணன் எழுதிய
’புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலினை நான் பரிசாகக் கொடுத்தபோது)
சென்னையில் கடும் மழை, வெள்ளம் என்று ஊடகங்கள், செய்திகள் வாசித்துக்
கொண்டு இருந்த நிலையில், திருச்சியில் மழை வருவதும் நிற்பதுமாகவே போக்கு காட்டிக் கொண்டு
இருந்தது. இருந்த போதும், கூட்டம் நடைபெறும் BHEL – SCUU சங்க அலுவலகக் கட்டிடத்திற்கு
குறித்த நேரத்திற்கு சென்று விட்டேன் நான் சென்றபோது எனக்குப் பழக்கமான நண்பர்களும்
அங்கு இருந்ததில் மகிழ்ச்சி. அங்கே முன்னதாகவே வந்துவிட்ட ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு
எல்லோருமே புதியவர்கள். மேலும் நாங்கள் இருவருமே இந்த சங்கத்து உறுப்பினர்கள் இல்லை.
கூட்டம் துவங்கும் முன் எடுத்த படங்கள் (கீழே)
முனைவரின் சிறப்புரை
அன்றைய கூட்டத்தில் போதி அம்பேத்கர் மற்றும் திரு தங்கசாமி ஆகியோர் வழிகாட்ட, புத்தர் திருவுருவச் சிலைக்கு முன்னர் விளக்கேற்றுதல், புத்த வந்தனம் ஆகியவற்றிற்குப் பிறகு திரு சிவானந்தம் ( BHEL ) அவர்கள் முனைவர் பற்றி அறிமுகம் செய்திட திரு B.ஜம்புலிங்கம் அவர்கள் தனது சிறப்புரையை செய்தார்.
தனது
எம்ஃபில் (M.Phil) பட்டத்திற்கு, ‘தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம்’ என்ற தலைப்பில்
ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்ததையும், முனைவர் (Doctorate) பட்டத்திற்கு ”சோழ நாட்டில்
பௌத்தம்’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் சுவைபட சில நிகழ்வுகளோடு
சொன்னார்.
மேலும்
1993இல் தொடங்கி தொடர்ந்து தான் மேற்கொண்டுவரும் பௌத்த ஆய்வு தொடர்பாகக் களப்பணி சென்றபோது
தனக்கு ஏற்பட்ட, பல அனுபவங்கள் குறித்தும், ஏற்பட்ட இன்னல்கள் குறித்தும் விவரித்தார்.
இன்னும்,
பௌத்த சமய வரலாற்றில் சங்க காலத்தில் பௌத்த காவிரி பூம்பட்டினமும், இடைக்காலத்தில்
நாகப்பட்டினமும் சிறப்பான இடத்தை வகித்தமை,
சோழ நாட்டில் மக்கள், புத்தரை சிவனார்,
அமணர், சாம்பான், செட்டியார், நாட்டுக்கோட்டை செட்டியார், பழுப்பர் எனப் பலவாறான பெயர்களில்
அழைத்து வழிபாடு செய்து வருவது குறித்தும்
கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர்
மாவட்டத்தில் பவுத்தம் இருந்ததற்கான சான்று (கல்வெட்டு) கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில்
இருக்கிறது என்பதனையும்,
மீசையுடன் கூடிய புத்தர் சிலை மற்றும்
தலையில்லாத புத்தர் சிலை பற்றிய தகவல்கள்.
மேலும், தனது ஆய்வின்போது, சமண தீர்த்தங்கரர்
சிற்பங்கள் பலவற்றை மக்கள் புத்தர் என அழைப்பதையும் சுவைபடச் சொன்னார். இருந்த போதும் அருங் காட்சியகத்தில்
இருக்கும் சில புத்தர் சிலைகள், தனது களப் பணிகளால் வெளிக் கொணர்ந்து தகவல்கள் தந்திருந்த போதும்
தனது பெயரை அங்கு குறிப்பிடவில்லை எனும் ஆதங்கத்தையும் வெளிப்படச் சொன்னார்.
கூட்டத்தின் முடிவில் திரு தமிழ்தாசன் ( BHEL ) அவர்கள் நன்றி கூறிட,
இனிய இரவு சிற்றுண்டிக்குப் பிறகு விழா இனிதே முடிந்தது, கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திரு செல்வம் (BHEL) அவர்கள் செய்து இருந்தார்.
இந்தமகாபோதி சங்கம் அண்மையில் துவக்கப்பட்டதாக இருக்க வேண்டும் முனைவருக்கு பாராட்டுகள் அவர் புகழ் வளரட்டும்
ReplyDeleteமரியாதைக்குரிய மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இங்கே குறிக்கப்பட்டுள்ள மகா போதி சங்கம் என்பதன் முழுப் பெயர் ’மகா போதி பௌத்த சங்கம்’ என்பதாகும். இது ஒரு தொழிற்சங்க அமைப்பு இல்லை. பவுத்த மதம் தழுவிய, திருச்சி BHEL ஊழியர்கள் அமைப்பு ஆகும்.
Deleteநானும்தொழிற் சங்க அமைப்பு என்று சொல்ல வில்லையே நான் திருச்சியில் இருந்தபோது இந்த அமைப்பு இருக்கவில்லை என்றே சொல்ல வந்தேன்
Deleteநன்றி அய்யா மன்னிக்கவும்.
Deleteபடங்களும் பகிர்வும் அருமை ஐயா
ReplyDeleteமுனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் தேடல் போற்றுதலுக்கு உரியது
தம =1
ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. முனைவர் ஜம்புலிங்கம் அய்யா அவர்களின் பதிவுகளைப் படித்தபோது கூட தெரியாத, அவருடைய களப்பணி சிரமங்களை, நேரில் அவர் உரையில் சொன்னதைக் கேட்ட போது, ஒரு தனி ஆளாக எவ்வளவு உழைத்து இருக்கிறார் என்பதனை அறிய வியப்புதான் மேலிடுகிறது.
Deleteநிகழ்வுப் பகிர்வுக்கு நன்றி அய்யா
ReplyDeleteநண்பர் ஜம்புலிங்கம் அவர்களின் தேடல் அரிது. அது சரி, மேடையிலிருக்கும் அம்பேத்கர் பற்றி யாரும் பேசவில்லையா? அல்லது உங்கள் குறிப்பில் விடுபட்டதா?
ஆசிரியர் அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. கூட்டம் நடந்த அன்று மாலை, திருச்சியில் மழை விட்டு, விட்டு பெய்தது. எனவே கூட்டத்திற்கு வந்த பலரும் சற்று தாமதமாகவே வந்தனர். கூட்டமும் தாமதமாகவே தொடங்கியது. காலத்தின் அருமை கருதி முனைவர் அவர்களை நேரடியாகவே சிறப்புரை செய்ய அழைத்து விட்டனர். மேலும் அடிக்கடி கூட்டம் நடத்தும் அவர்கள் ஒவ்வொரு கூட்டதிலும் அம்பேத்கர் பற்றி பேசி இருப்பார்கள்.
Deleteஇப்பதிவு முனைவர் அவர்களுக்கு மேலுமொரு மகுடம்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே.
த.ம.பிறகு கணினி வழி.
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.
Deleteமுனைவர் பல்லாண்டு வாழ்க!
ReplyDeleteபுலவர் அய்யாவிற்கு நன்றி.
Deleteநல்லதோர் விழா. உங்கள் மூலம் தகவல்கள் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. படங்கள் அருமை.
ReplyDeleteநண்பரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநேரமின்மை காரணமாக முன்கூட்டி நண்பர்களிடம் தெரிவிக்க முடியவில்லை. உங்களிடம் மட்டுமே கடைசி நேரத்தில் தெரிவித்திருந்தேன். நீங்கள் வந்திருந்து முழுமையாகக் கலந்துகொண்டு, அதனைப் பற்றி அழகான ஒரு பதிவினை புகைப்படங்களோடு எழுதியமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களைப் போன்றோரின் ஊக்கமே என்னை இந்த கால் நூற்றாண்டு கால பௌத்த ஆய்வினை தொடர்ந்து மேற்கொள்ள உதவியாக இருக்கிறது. நம் சந்திப்பு நினைவாக நீங்கள் மேடையில் நூல் வழங்கியது என்னை நெகிழவைத்துவிட்டது. மறுபடியும் என் மனம் நிறைந்த நன்றி.
ReplyDeleteமுனைவர் அவர்களுக்கு நன்றி. இந்த கூட்டத்தின் மூலம் தொடர்பு விட்டுப் போன பழைய நண்பர்கள் சிலரையும், உங்கள் வலைப்பூவை தொடர்ந்து படித்து வரும், தமிழ்மணம் வாசகர் ஆனந்த பாபு அவர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.- உங்கள் ஆய்வுக் கட்டுரையின் அட்டைப் படத்தை கூகிள் இமேஜில் பார்த்தேன். அது நூலாக வந்துள்ளதா என்பதனைத் தெரிவிக்கவும்.
Deleteஐயா, தங்களின் ஆர்வத்திற்கு நன்றி. தற்போது நூலாக்க முயற்சியில் உள்ளேன். நூல் வடிவம் பெற்றதும் தெரிவிப்பேன்.
Deleteநல்ல நிகழ்வு
ReplyDeleteபதிவு அருமை
பாராட்டுகள்.
நன்றி அய்யா. உங்கள் வலைப்பக்கம் வந்து பார்க்க வேண்டும்.
Deleteமுடிஞ்சா யூ ட்யுபில் அப்லோட் செஞ்சு, எங்களுக்கு தகவல் சொல்லுங்க
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நிகழ்ச்சியில் புகைப்படம் மட்டும்தான் எடுத்தேன். எனவே யூடியூப்பில் பதிய இயலாது.
Deleteஐயா அவர்களின் உழைப்பும், ஆற்றலும், பன்முகத்தன்மையும் வியக்கற்பாலது.
ReplyDeleteபுகைப்படங்கள் அருமை. காட்சிகளைக் கண்முன் நிறுத்தின.
தங்களின் முயற்சிகளுக்குப் பாராட்டுகள்.
மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஒரு தனி மனிதராகவும், எந்த அரசியல் பின்புலம் இல்லாதவராகவும் களப்பணி செய்ததால் இவருக்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மை./
Deleteஇனிமையான, தகவல்கள் அடங்கிய பதிவு.
ReplyDeleteசகோதரர் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
நன்றி மேடம்.
Deleteமுனைவர் ஜம்புலிங்கம் சாரின் ஆர்வமும், பௌத்தத்தைப் பற்றிய கடின ஆய்வுகளும் பாராட்டுதலுக்கு உரியன.
ReplyDeleteஅன்பரின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் Blogger Profile இல் அடிப்படை விவரங்களை மட்டுமாவது தந்து இருக்கலாம்.
ReplyDeleteமுனைவர் ஐயா அவர்களின் பௌத்தம் பற்றிய ஆய்வுகளும். அயராத உழைப்பும் போற்றுதலுக்குரியவை. நான் விஜயவாடா அருகிலுள்ள அமராவதியில் இருக்கும் பௌத்த அருங்காட்சியகம், மற்றும் ஸ்தூபி ஆகியவற்றைப் பார்த்த அனுபவத்தையும் அதைப் பற்றியும் பதிவு எழுதிய போது ஐயா அவர்கள் என்னை அழைத்து அது ஆய்வுக்கட்டுரை போன்று சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி பாராட்டி வாழ்த்தியதை என்றும் மறக்க முடியாது. முனைவர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்! என் நன்றியும்.
ReplyDeleteகீதா
நிகழ்வை மிக அருமையாக வழக்கம் போல அழகான படங்களுடன் தொகுத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.
ReplyDeleteகீதா
நன்றி சகோதரி.
Deleteநான் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவன். மிக பயன் உள்ளதாக இருந்தது. நம் திருச்சியில் பௌத்தம் இருந்தது செய்தி அவர் சொன்னபோது மிக மகிழ்ச்சி அடைந்தேன். முனைவர் அவர்களுக்கு நன்றி
ReplyDeleteநண்பர் K.சண்முகம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்களுடைய Google Plus பக்கம் சென்று ஆல்பங்களைப் பார்த்தேன். பாராட்டுகள்.
Deleteமுனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களின் பௌத்தம் பற்றி ஆய்வு செய்து M.Phil. மற்றும் முனைவர் பட்டம் பெற்றதை விட, திருச்சி மகா போதி பௌத்த சங்கம் நடத்திய 23 ஆவது பௌர்ணமி பெரு விழாவில் சிறப்புரையாற்ற அவரை சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டதே அவர் ஆற்றிய பணிக்கு கிடைத்த மேன்மையான அங்கீகாரம் எனலாம்.
ReplyDeleteஅவர் பங்கேற்ற விழா பற்றிய தகவல்களை அழகிய புகைப்படங்களுடன் சிறப்பாக பதிவிட்டமைக்கு பாராட்டுகள்!
முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துகள்!
மூத்த வலைப்பதிவர் அய்யா V.N.S அவர்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி.
Deleteமுனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் ஆய்வுப் பணி பாராட்டுதற்குரியது.
ReplyDeleteஅருமையான நிகழ்வுத் தொகுப்பு
பாராட்டுகள்
கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.
Deleteகள ஆய்வில் அவர் ஆற்றியிருக்கிற பணி மகத்துவம் மிக்கது ...
ReplyDeleteநன்றிகள் பகிர்வுக்கு
ஆசிரியர் மது அவர்களுக்கு நன்றி.
Deleteதகவலுக்கு நன்றி! படங்கள் அருமை...........
ReplyDelete