அண்மையில் நமது ஆசிரியர் N.முத்துநிலவன் அய்யா அவர்கள் வலைப்பதிவர்
சந்திப்பு பற்றிய ஆலோசனை கூட்டம் நடக்க இருப்பது குறித்து ‘புத்தகத்
திருவிழா - வலைப்பதிவர் சந்திப்புக்கு அழைப்பு’ http://valarumkavithai.blogspot.com/2017/11/blog-post_17.html
என்ற தனது பதிவினில் சொல்லி இருந்தார்கள்;
உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம்தான். கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில்தான்
நானும் இருக்கிறேன்.
சந்திப்புகளும், மாநாடுகளும்
பொதுவாகவே தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு என்பது ஆங்காங்கே, எண்ணிக்கையில்
அதிகம் இல்லாத பதிவர்கள் கூட்டமாக, நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதுசமயம் பதிவர்கள்
தமக்குள் ஒரு கலந்துரையாடல் மூலம் பதிவர் சந்திப்பு என்பதன் நோக்கம் நிறைவேறுகிறது.
ஆனால் எப்போதோ நடக்கும், பெரிதான வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில், வலைப்பதிவர் கலந்துரையாடல் என்பதே இல்லாமல் நோக்கம் நிறைவேறாமல் போய்விடுகிறது. அதிலும் முக்கியமான பெரியமனிதர் அந்த விழாவில் கலந்து கொண்டால், அவரை வரவேற்பதிலும், அவரைப் புகழ்வதிலும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் என்று மேடை நிகழ்வுகள் நகர்ந்து விடுகின்றன.
எனது முந்தைய பதிவு
மேலே சொன்ன ஆதங்கத்தை வெளிப்படுத்தி, ( வலைப்பதிவர்கள் சந்திப்பும் ஆதங்கமும் http://tthamizhelango.blogspot.com/2015/10/blog-post_60.html
) என்ற எனது பதிவினில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டேன்.
// பொதுவாகவே ஆங்காங்கே நடைபெறும் வலைப்பதிவர்களின் சிறிய சந்திப்புகள் இந்த ஆதங்கம் இல்லாமல் செய்து விடுகின்றன. இதில் உள்ள மனநிறைவு, கலந்துரையாடல் (Discussion) குறித்து அவரவர் பதிவுகளில் எதிரொலிக்கக் காண்கிறோம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, பல உறவினர்களைச் சந்திக்கிறோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பவர்களோடு நீண்ட நேரம் அளவளாவுகிறோம். யாரும் கட்டுப் படுத்துவதில்லை. ஆனால், வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் போது, மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று, நமக்கு நாமே ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்கிறோம். அல்லது மேடையில் இருப்பவர்களே சொல்லி விடுகிறார்கள். இதனால் யாருடனும் யாரும் பேச முடிவதில்லை. இதுவே இந்த ஆதங்கத்திற்கு காரணம். இதை நீக்க ஒரே வழி, இனி வரும் நிகழ்ச்சிகளில், ”வலைப்பதிவர்கள் சந்திப்பு” என்ற தலைப்பிற்கேற்ப கலந்துரையாடல் மட்டுமே நிகழ்த்துவது. அல்லது மேனாட்டுப் பதிவர்கள் நடத்துவது போன்று இரண்டு நாள் நிகழ்ச்சிகள்; அல்லது காலையில் கலந்துரையாடல், உணவு இடைவேளைக்குப் பிறகு மற்ற நிகழ்ச்சிகள் என்று வைத்துக் கொள்ளலாம். //
இந்த பதிவினுக்கு பின்னூட்டம் எழுதிய நண்பர்கள் பலரது கருத்தினில்
வலைப்பதிவர்கள் கலந்துரையாடலுக்கு ஆதரவு இருந்ததையும், இரண்டுநாள் கூட்டம் என்பதற்கு
வரவேற்பு இல்லாததையும் அறிந்து கொள்ள முடிந்தது.
மேலும் தொலைவில் இருந்து வருபவர்கள் மதியம் ஊர் திரும்பும் அவசரத்தில் இருப்பார்கள்.
எனவே அவர்கள் வசதிக்காக மதிய உணவுக்கு முன்னரேயே வலைப்பதிவர்கள் அறிமுகம், மற்றும்
கலந்துரையாடல் இருந்தால் நலம்.
நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் சொல்வதற்கு இன்னும் நிறையவே
இருக்கின்றன. பார்ப்போம்.
ஏதாவது செய்யுங்க. எப்படியாவது பதிவுலகத்தை தூக்கி நிறுத்துங்க.
ReplyDeleteமுனைவர் அய்யா அவர்களின் கருத்தினுக்கு நன்றி. நீங்களும் ஒரு கை கொடுத்தால் இன்னும் கூடுதல் பலம்.
Deleteநல்ல ஆலோசனைகள். நீங்கள் சொல்வது போல முதலில் வலைப்பதிவர்கள் ஒருவடோருவர் கலந்துரையாடுவதை வைத்து விட்டு பின்னர் மற்ற நிகழ்ச்சிகள் வைக்கலாம்.
ReplyDeleteநண்பர் 'எங்கள் ப்ளாக்' ஶ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteபதிவர்கள் கலந்துரையாடல் நல்ல ஆலோசனை.
ReplyDeleteஇரண்டு நாள் என்பது நிறைய பேருக்கு ஒத்து வராது.
நண்பரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteதங்கள கருத்தோடு ஒத்துப் போகின்றேன் ஐயா
ReplyDeleteஞாயிற்றுக் கிழமைத் தங்களையும், மற்ற வலையுலகத் தோழமைகளையும்
சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
நன்றி
தம+1
ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி. நானும் நண்பர்கள் அனைவரையும் சந்திக்கும் ஆவலில்தான் இருக்கிறேன் அய்யா.
Deleteநல்லபடியாக வலைப்பதிவர்கள் சந்திப்பு நடக்கணும் எமது பங்களிப்பு என்றும் உண்டு
ReplyDeleteநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஞாயிற்றுக்கிழமை சந்திப்போம்.
ReplyDeleteவலையுலக நண்பர்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது அய்யா.
Deleteநான் வரவேற்கிறேன்..
ReplyDeleteஅன்பரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteபதிவர்கள் சந்திப்பு எப்போதும் நல்லாத்தான் இருக்கும். ஆனால், விழா, மேடைப் பேச்சு போன்றவையெல்லாம் ரொம்ப சாதாரணமா ஆக்கிவிடும். அவங்க அவங்க சொல்லவேண்டியதைத்தான் பதிவுலயே சொல்லிடறாங்களே.
ReplyDeleteஎழுத்தை மட்டுமே படித்தவர்கள், எழுதுபவர்களைப் பார்க்கவும் பேசவும் விரும்புவர். அது நட்பை வளர்க்கும். சந்திப்பைப் பற்றி எழுதுங்கள்.
நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteவாழ்க வளர்க வலைபதிவர் சந்திப்பு
ReplyDeleteபுலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.
Deleteமுகமும் முகவரியும் காட்ட விரும்பாதவர்கள் என்ன சொல்கிறர்கள்
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் மதுரைத் தமிழன் (அவர்கள் உண்மைகள்) ஓருவேளை மாறுவேடத்தில் வந்து போக வாய்ப்பு இருக்கிறது. முன்பு ஒருமுறை வேலூரில் நடந்த ஒரு விழாவில் அவர் வந்து சென்றதாக ஒரு வலைப்பதிவு உண்டு.
DeleteMINNESOTA BLOGGERS CONFERENCE படம் பார்த்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteஅங்கு கூட பத்து பத்து பேராக தனித்தனியாக அமர்ந்து ஒருவொருக்கொருவர் அறிமுகம் கொண்டு கலந்துரையாடலாகத் தான் இருக்கும் போலிருக்கு!..
'எழுத்தை மட்டுமே படித்தவர்கள், எழுதுபவர்களைப் பார்க்கவும் பேசவும் விரும்புவர். அது நட்பை வளர்க்கும்' என்று நெல்லைத் தமிழன் சொல்வது உண்மை தான்!..
மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. எனக்கு உங்களை நேரில் சந்திக்க வேண்டும் பேச வேண்டும் என்ற ஆர்வம் உண்டு.
Deleteஉங்களுக்கு தெரிந்து இருக்கும். Youtube இல் நிறையவே மேனாட்டு Bloggers Conference பற்றிய தகவல்களை காணலாம்
இந்தத் தடவை சந்தித்து விடலாம், சார்.
Deleteஅப்படியா?.. தெரியாத தகவல் தான். யூ ட்யூப்பில் பார்க்கிறேன்.
பிரபலங்களை கூப்பிடகூடாது. ஆடம்பரமான செலவுகள் கூடாது, சிலரை மட்டும் முன்னிறுத்தக்கூடாது. இப்போதைக்கு இதுதான் தோணுச்சு
ReplyDeleteசகோதரி அவர்களது கருத்துரை சுருக்கமாகவே இருந்தாலும், விளக்கமாக எதார்த்தத்தை உணர்த்துவதாக உள்ளது.
Deleteஆம் ஒருமுறை அப்படி சிறப்பு விருந்தினர்கள்
ReplyDeleteஎன யாரும் இல்லாமல் செய்து பார்க்கலாம்
எந்தப் பதிவர் சந்திப்பின் போதும்
முதல் நாள் முன்னதாக வந்திருந்து
சிலரைச் சந்தித்து அளவளாக முடிந்தால்
மட்டுமே சிலருடனேனும் தொடர்பு கொள்ள முடிகிறது
நிகழ்வு தொடங்கிடும் பட்சத்தில்
அமைதிக் காத்துப் பின் கிளம்பவே
சரியாக இருக்கிறது என்பதுவே என் கருத்தும்
கவிஞர் S.ரமணி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete