(புத்தகத் திருவிழா என்றால் திரும்பத்
திரும்ப என்ன எழுதுவது என்று தெரியவில்லை. எனவே இந்த பதிவைப் படிக்கும் போது சலிப்பு
ஏற்பட்டால் ( அதாவது Bore அடித்தால்) மன்னிக்கவும்)
சென்றவாரம், புதுக்கோட்டை புரவலர், கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா
அவர்கள் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா –
2017 இற்கான அழைப்பிதழை அனுப்பி இருந்தார். அவருக்கு நன்றி. நேற்று தொடங்கிய தொடக்க
விழாவிற்கு என்னால் செல்ல இயலவில்லை. புதுக்கோட்டை ஃபேஸ்புக் நண்பர்கள் பலரும் தொடக்க
விழாவை சிலாகித்து, வண்ணப் படங்களுடன் எழுதி இருந்தனர். எனவே இன்று (25.11.17 – சனிக்கிழமை),
முற்பகல் 11.00 மணி அளவில் திருச்சி – கே.கே.நகரிலிருந்து புறப்பட்டு புதுக்கோட்டைக்கு
பஸ்சில் சென்றேன். பேருந்து நிலையத்திற்கு எதிரே இருந்த, வழக்கமாக நான் உணவருந்தும்
விடுதியில் மதிய உணவை முடித்துக் கொண்டு, புத்தகத் திருவிழா நடைபெ றும் நகர்மன்றம் சென்றேன்.
நகர்மன்றத்தில்
ஒருமுறை வீதி – இலக்கிய கூட்டத்தில் பூமணி எழுதிய ஒரு நூலினைப்
பற்றி, மறைந்த ஆசிரியர் குருநாதசுந்தரம் (வலைப்பதிவரும் கூட) அவர்கள் விமர்சனம் செய்து
இருந்தார். ஆனால் எனக்கு நூலின் பெயர் மறந்து விட்டது; இதே நூலினைப் பற்றி கவிஞர் மீரா
செல்வகுமார் அவர்களும் சொல்லி இருந்த படியினால், அவரிடமே செல்போனில் தொடர்பு கொண்டு
கேட்ட போது அவர் ‘அஞ்ஞாடி’ (காலச்சுவடு வெளியீடு) என்று சொன்னார். இந்த நூலும் கிடைக்கவில்லை.
– பொதுவாகவே எல்லா புத்தகத் திருவிழாவிலும், பதிப்பாளர்கள், அவர்களது எல்லா வெளியீடுகளையுமே
எடுத்து வருவதில்லை; ( சென்னை மட்டும் விதிவிலக்கு என்று நினைக்கிறேன்) அவற்றை கொண்டு
வந்து விட்டு, மறுபடியும், மூட்டை கட்டிக் கொண்டு போவதில் உள்ள சிரமம்தான் காரணம் என்பதை
புரிந்து கொள்ள முடிந்தது
.
ஒருசில நூல்கள் மட்டும்
(படம் மேலே – நக்கீரன் முகவர் திரு காஜா மொய்தீன் ( சக்சஸ்
புக் ஷாப் ) அவர்களது அரங்கில், நூல் ஒன்றை வாங்கிய போது)
எனவே இருப்பதில் வாங்கிக் கொள்வோம் என்று ஒரு சில புதிய நூல்களை
மட்டும் வாங்கினேன். என்னதான் இனிமேல் எந்த புத்தகமும் வாங்கக் கூடாது என்று நினைத்தாலும்,
நான் பாட்டுக்கு புத்தக வாசிப்பில் உள்ள ஆர்வம் காரணமாக வீட்டு நூலகத்திற்கு புத்தகங்கள்
வாங்கிக் கொண்டே இருக்கிறேன். எனக்குப் பிறகு இவை என்ன ஆகுமோ என்று தெரியவில்லை.
நான் இன்று வாங்கிய நூல்கள்:
வணக்கம் – வலம்புரி ஜான் (நக்கீரன்,
சென்னை வெளியீடு)
தேவதைகளால் தேடப்படுபவன் – கவிஞர்
தங்கம் மூர்த்தி ( படி, சென்னை வெளியீடு )
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
– அசோகமித்திரன் (காலச்சுவடு, நாகர்கோவில்)
குமரிக்கண்டமா சுமேரியமா? – பா.பிரபாகரன்
(கிழக்கு பதிப்பகம், சென்னை)
தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி?
– ம.வெங்கடேசன் (கிழக்கு பதிப்பகம்)
பறையன் பாட்டு – தலித்தல்லாதோர் கலகக்
குரல் – தொகுப்பாசிரியர் கோ.ரகுபதி (தடாகம், சென்னை வெளியீடு)
மேயோ கிளினிக் – நீரிழிவைச் சமாளிப்பது
எப்படி? – மரியா கொலாசோ கிளவெல் (தமிழில் மருத்துவர் சிவசுப்ரமணிய ஜெயசேகர் – அடையாளம்,
புத்தாநத்தம் வெளியீடு)
படங்கள் கீழே ( சில அரங்குகளில் எடுத்த படம்)
ஒவ்வொரு அரங்காக சுற்றி வந்த போதும் எனக்கு தெரிந்த முகமாக யாரும்
இல்லை. ஒருவேளை மாலையில் சென்று இருந்தால் பார்த்து இருக்கலாம்.
நாணயவியல் கழகம்
புத்தக அரங்குகளை விட்டு வெளியே வந்த போது,, ‘இளங்கோ சார் … இளங்கோ
சார்’ ‘ என்று யாரோ அழைப்பது கேட்டு திரும்பினேன். ஃபேஸ்புக் நண்பர், திரு ஷேக் தாவூத்
பஷீர் அலி (புதுக்கோட்டை நாணயவியல் கழக செயலர்) அவர்கள் தான் அழைத்து இருந்தார். உடனே அவரது மேற்பார்வையில் இருந்த உலக பணத்தாள், காசுகள் மற்றும் தபால்தலை
கண்காட்சி அரங்கிற்கு சென்று வந்தேன். இங்குள்ள நிறைய சேகரிப்பு மற்றும் குறிப்புகளுக்கு
பாராட்டுகள்.
புத்தகங்கள் பற்றி படிப்பதும் சுவாரஸ்யம்தான்.
ReplyDeleteநண்பர் எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteவாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteநண்பரின் வாழ்த்துகளுக்கு நன்றி.
Deleteதங்களின் அன்பான பதிவு அருமை. நன்றி தோழரே...
ReplyDeleteநண்பரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteசுருக்கமான பதிவு. வலம்புரிஜானின் வணக்கம் புத்தகம் மிகவும் பழையது அல்லவா. அது சம்பந்தப்பட்டவர்களில் ச்சிகலாவை குரூப்பைத் தவிர யாரும் உயிருடன் இல்லை. நான் முன்பே வாங்கிப் படித்திருக்கிறேன். இந்தப் புத்தகம் உங்களுக்குப் பிடித்திருந்தால், ஆட்டோ சங்கர் எழுதிய நக்கீரன் பதிப்பு புத்தகத்தையும் படித்துப்பாருங்கள்.
ReplyDeleteநண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete// வலம்புரிஜானின் வணக்கம் புத்தகம் மிகவும் பழையது அல்லவா. //
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் வலம்புரி ஜான் சுவாரஸ்யமானவர். அரசியலைப் பொறுத்த வரையில் அவர் இன்னொரு கண்ணதாசன். அண்மையில் ஜெயலலிதா இறந்தபிறகு, வலம்புரிஜான் எழுதிய ஜெயலலிதாவைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த புத்தகத்திலிருந்து எடுத்து காட்டி இருந்தார்கள்.அன்றிலிருந்து இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆர்வம். வாங்கி விட்டேன். படித்து விடுவேன்.
நீங்கள் சொன்ன ஆட்டோசங்கர் வாங்கி படிக்கிறேன். தகவலுக்கு நன்றி.
சொன்னால் நம்பமாட்டீர்கள். வலம்புரி ஜான் அவர்கள் இந்தப் புத்தகத்தில், வட நாட்டு ஜோதிடர் சொன்னதாக எழுதியிருப்பது, '2017 வரை இந்த அம்மாவை அரசியலில் அடித்துக்கொள்ளமுடியாது' எப்போதோ படித்தேன். ஜெ. அவர்கள் 2017வரை ஸ்டாராக இருந்திருந்தார். மிச்சத்தையும் படியுங்கள். வலம்புரி ஜான் அவர்கள் உண்மையை மறைத்துச் சொல்வதுபோல் தோணவில்லை, ஆனால் அவரது, 'தொடர்ந்த விசுவாசம் காட்டும் தன்மையின்மையும், தானும் மேலே வரவேண்டும்-இவர்களைவிட நான் புத்திசாலியல்லவா' என்ற நினைப்பும் அவரது கடைசி காலத்தை ரொம்பவும் புரட்டிப்போட்டு விட்டது.
Deleteஇன்று பிற்பகல் புதுகைக்க வருகிறோம் ஐயா
ReplyDeleteதாங்களும் வாருங்கள்
தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்
தம +1
ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. நானும் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.
Deleteதஞ்சையிலிருந்த வந்த உங்களையும், முனைவர் ஜம்புலிங்கம் அய்யாவையும் மற்றும் மற்ற வலைப்பதிவர்களையும், இன்று மாலை புதுக்கோட்டையில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அய்யா. நேரில் பார்த்த போது, "அவசியம் திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே கல்லணை அருகில் உள்ள கச்சமங்கலம் நீர்த்தேக்கம் பற்றி எழுதுங்கள்" என்று சொல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தேன். மறந்து விட்டேன். அங்கே சென்று வரவும்.
Deleteஉங்களை நேற்று புத்தக விழாவில் சந்தித்தது மகிழ்ச்சி. தொடர்ந்து நீங்கள் வருவது உங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தியது. மகிழ்ச்சி.
Deleteபுத்தகங்களை அள்ளி வந்த தினம் குறித்த பகிர்வு...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
நண்பர் பரிவை சே.குமார் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.
Deleteபுஸ் தகாவில் பலரதுமின்னூல்கள் இருக்கின்றன. அங்கு தேடலாமே என் மின்னூல்களும் உண்டு
ReplyDeleteமரியாதைக்குரிய ஜீ.எம்.பி அய்யா அவர்களின் நினைவூட்டலுக்கு நன்றி. ஏற்கனவே இதுபற்றி நான் சொல்லி இருப்பது நினைவில் வந்தது. எனக்கும் நெருடலாகத்தான் இருக்கிறது. மற்ற மின்னூல் தளங்களில் உள்ளே செல்வது எளிதாக இருக்கிறது; ஆனால் புஸ்தகாவில் ( நீங்கள் எனக்கு பரிசாக அளித்தபோதும்) அவ்வாறு செல்ல இயலவில்லை. எனக்கும் காரணம் தெரியவில்லை.
Deleteபுத்தகங்களைப் பற்றி எழுதி இருப்பதும் ஸ்வாரஸ்யம் தான். தலைநகரில் புத்தக திருவிழா என்றாலும் பெரும்பாலான தமிழ் பதிப்பகங்கள் வருவதில்லை. இவ்வளவு தூரம் சுமந்து வந்தாலும் எதிர்பார்க்கும் அளவு விற்பனை இருப்பதில்லை என்பதே காரணம் - ஆன்லைனில் வாங்கிக் கொள்ளுங்கள் என்பது தான் அவர்கள் சொல்வது!
ReplyDeleteதமிழகத்தில் இருந்திருந்தால் நானும் வந்திருப்பேன்.
நண்பர் வெங்கட்நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteகாந்தியின் பொன்மொழி புத்தகம் மிகச் சிறந்த நண்பன் என்பதும், விவேகானந்தரின் பொன் மொழியான "ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்பதும் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துகள் சகோ!!
ReplyDeleteகீதா
மேடம் அவர்களின் மேற்கோள்களுக்கு நன்றி.
Deleteபாவை விளக்கு அகிலன் புதுக்கோட்டைக்காரர் என்பதில் புதுக்கோட்டைக்கும் பெருமை தான்.
ReplyDeleteமு.வ.வின் புத்தகங்களைப் படத்தில் பார்க்கும் பொழுதே மனசில் பழைய நினைவுகள் நிறைய கிளர்ந்தெழுந்தன. அந்த ஸ்டால் நியூ செஞ்சுரி புக் ஹவுஸோ?..
லா.ச.ரா.வின் 'புத்ர', எம்.வி.வெங்கட்ராமின் 'காதுகள்', அசோக மித்திரனின் 'ஒற்றன்', தி.ஜா.வின் 'நளபாகம்'-'செம்பருத்தி', பூமணியின் 'பிறகு' -'வெக்கை', ஜி. நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே' -- இவையெல்லாம்
வாங்கப் போகிறவர்களுக்கான எனது பரிந்துரைகள்!..
ஜெயமோகன் போன்ற இன்றைய நவீன எழுத்தாளர்களின் தரிசனமே கிடைக்கவில்லையே!..
This comment has been removed by the author.
Delete// அந்த ஸ்டால் நியூ செஞ்சுரி புக் ஹவுஸோ?//
Deleteஆரம்ப காலங்களில் பாரி நிலையம் தான் மு.வ.வின் புத்தகங்களுக்கு விற்பனை உரிமை பெற்றிருந்தது. இப்பொழுதெல்லாம் எல்லாப் புத்தகங்களையும் எல்லோரும் காட்சி படுத்தி விற்பனை செய்வதால் எதுவும் சொல்வதற்கில்லை.
மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீ.வி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Delete//மு.வ.வின் புத்தகங்களைப் படத்தில் பார்க்கும் பொழுதே மனசில் பழைய நினைவுகள் நிறைய கிளர்ந்தெழுந்தன. அந்த ஸ்டால் நியூ செஞ்சுரி புக் ஹவுஸோ?.. //
மேற்படி புத்தகக் கண்காட்சியில் டாக்டர் மு.வ நூல்கள் இருந்த அரங்கு எதுவென்று நினைவில் வரவில்லை. மு.வ.வின் நூல்களுக்கு அருகில் பி.ஶ்ரீ எழுதிய ஶ்ரீராமானுஜர் என்ற நூல் இருப்பதால், இந்த அரங்கு நிச்சயம் NCBH ஆக இருக்க வாய்ப்பில்லை. எனக்கும் மு,வ. நூல்களை நூலகத்தில் எடுத்து படித்தது பற்றிய நினைவலைகள் வந்தன.
எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பக்கம் அடிக்கடி சென்று இருக்கிறேன். அவரது நூல்களை வாசித்தது இல்லை.
//மு.வ.வின் நூல்களுக்கு அருகில் பி.ஶ்ரீ எழுதிய ஶ்ரீராமானுஜர் என்ற நூல் இருப்பதால், இந்த அரங்கு நிச்சயம் NCBH ஆக இருக்க வாய்ப்பில்லை. எனக்கும் மு,வ. //
Deleteஅப்படியும் சொல்வதற்கில்லை, சார்.. இப்பொழுது NCBH-ல் ஜனரஞ்சகமான எல்லா நூல்களும் கிடைக்கின்றன. தங்கள் தகவலுக்காக.
புத்தகங்களின் அணிவகுப்பு பார்பதற்க்கே பரவசம் வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteஎங்க ஊர்ல இப்படிலாம் புத்தக கண்காட்சி நடத்துறதில்லண்ணே.
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் ஊர்ப்பக்கம் உள்ள ரோட்டரிகிளப்பிற்கு ஒரு கடிதம் எழுதுங்கள். மாணவர்கள் பயன்கருதி, அவர்கள் புத்தக கண்காட்சி நடத்த வாய்ப்பு இருக்கிறது.
Deleteவாசிப்பில் உள்ள தங்கள் ஆர்வம் பாராட்டத் தக்கது!
ReplyDeleteபுலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.
Delete