நான் மேலே சொன்ன த.மு.எ.க.ச மற்றும் வயல் எதிலும் உறுப்பினர் கிடையாது.
சிறப்பு சொற்பொழிவாளரான ஆசிரியர் நா. முத்துநிலவன் அய்யா அவர்கள், வாட்ஸ்அப்பில் கூட்டத்திற்கான
அழைப்பிதழை அனுப்பி இருந்தார். நானும் சென்று
இருந்தேன். வீட்டை விட்டு கிளம்பும் முன் மழை. கொஞ்சம் விட்டதும் ஆட்டோவில் சென்று வந்தேன்.
கூட்டம் துவங்கும் முன் எடுக்கப்பட்ட படங்கள்.(கீழே)
கூட்டம் துவங்கிய பின்
புதுக்கோட்டை கவிஞர் – ஆசிரியர் நா. முத்துநிலவன் அய்யா அவர்கள்
‘வீழ்வோம் என்று நினைத்தாயோ?” என்ற தலைப்பினில் சிறப்புரை ஆற்றினார். ஜார் மன்னர் காலம்
தொடங்கி சோவியத் புரட்சி நடந்த 1917 நவம்பர் வரையில் நிகழ்ந்த நிகழ்வுகளை நன்கு விவரமாக
எடுத்துரைத்தார்; மேலும் இரண்டாம் உலகப்போர், ஹிட்லரின் பாசிச வெறி மற்றும் அவனது கடைசி
நாட்கள், இந்தியாவில் நுழைந்துள்ள கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் பண மதிப்பிழப்பு மற்றும்
ஜீ.எஸ்.டியால் மக்களுக்குண்டான இன்னல்கள் பற்றியும் தனக்கே உரிய நடையில் விளக்கினார்.
புகைப்படங்கள் அருமையாக இருக்கிறது விழாவில் கலந்து கொண்டமைக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteமேலிருந்து கீழாக 8, 9, மற்றும் 10 வது படங்கள் இப்பொழுதுதான் முழுமையாக திறந்தது தெளிவு இல்லாமல் இருக்கிறது.
Deleteநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete// புகைப்படங்கள் அருமையாக இருக்கிறது //
புகைப்படங்கள் சரியாக அமையவில்லை என்பதே உண்மை. தெளிவற்ற அந்த படங்களை நீக்கி விட்டேன்.
விழாவில் கலந்து கொண்ட உணர்வு
ReplyDeleteநன்றி ஐயா
தம 1
ReplyDeleteமிக நல்ல தொகுப்பு
ReplyDeleteகவிஞர் அவர்களுக்கு நன்றி.
Deleteநல்ல தொகுப்பு. தகவல் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநண்பருக்கு நன்றி.
Deleteவால்காவிலிருந்து கங்கை வரை மாதிரி ஜார்மன்னலிருந்து ஜிஎஸ்டி வரை..
ReplyDeleteசோவியத் நூற்றாண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் வாழ்க! வெல்க!..
மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களுக்கு நன்றி. நீங்கள் எழுத்தாளர் அல்லவா?
Delete// ஜார்மன்னலிருந்து ஜிஎஸ்டி வரை.. //
என்று ஒரு தலைப்பையே தந்து விட்டீர்கள். ராகுல சாங்கிருத்தியன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ஒரு அற்புதமான நூல். இரண்டுமுறை படித்து இருக்கிறேன்.
ராகுல சாங்கிருத்தியன் > ராகுல சாங்கிருத்யாயன் என்று வாசிக்கவும்.
Deleteஎன்னதான் சொன்னாலும் சோவியத் பல துண்டாக உடைந்து போனது ,வருத்தம் தரும் சரித்திரம் ,முத்துநிலவன் அய்யா இதைப் பற்றி என்ன பேசினார் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கலாம் :)
ReplyDeleteதோழர் பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள் சோவியத் ரஷ்யா உடைந்தது பற்றி பொதுவாகவே சொல்லி பேசினார்.
Deleteவிழாவில் கலந்துகொண்டது போல் இருந்தது தங்களின் பதிவைப் படித்ததும். பாராட்டுகள்! ராகுல சாங்கிருத்தியனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை நானும் படித்திருக்கிறேன். நீங்கள் சொன்னதுபோல் அது ஒரு அற்புதமான நூல்.
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி.
Deleteராகுல சாங்கிருத்தியன் > ராகுல சாங்கிருத்யாயன் என்று வாசிக்கவும்.
Deleteநல்லதொரு பகிர்வு ஐயா...
ReplyDeleteநண்பருக்கு நன்றி
Deleteநல்ல பகிர்வு. நானும் 'வால்காவிலிருந்து.... ' புத்தகம் வாங்கிப் படிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்... வாய்ப்பு வந்தபாடில்லை.
ReplyDeleteநண்பர் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு நன்றி.
Deleteபல நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறீர்கள் பலரதுகருத்துகளும் சிந்திக்க வைக்க வேண்டும்
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மாணவப் பருவத்தில் இருந்தே அனைவரின் கருத்துகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு.
Deleteதொகுப்பு நன்று!
ReplyDelete