Sunday 6 December 2015

அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” – நூல் விமர்சனம்


சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருச்சியில் உள்ள ‘மணற்கேணி பதிப்பகம்’ சென்று இருந்தேன். சில நூல்களை வாங்கினேன். அவற்றுள் ஒன்று. நீதிபதி K. சந்துரு அவர்கள் எழுதிய “அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்”. அண்மையில்தான் இந்த நூலை படித்து முடித்தேன். அந்நூலைப் பற்றிய எனது பார்வை இது.
                                                                                                                                                                   
                                                                                                                                                               
ஏன் இந்த நூல்?

நீதிபதி K. சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த காலத்தில் இவரைப் பற்றிய செய்திகளை, இவரது பேட்டிகளை பத்திரிகைகளில் படித்து இருக்கிறேன். தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர், இடதுசாரி சிந்தனை உள்ளவர், நேர்மையானவர் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். “

/// ’குற்றம் செய்தவரைக்கூடத் தமது வாதத் திறமையால் நிரபராதி என நிரூபித்துக் காட்டுபவர்தான் நல்ல வழக்கறிஞர்’ என்பது நமது பொதுப் புத்தியில் பதிந்திருக்கும் கருத்து. அதற்கு மாறாக ‘குற்றம் செய்தவர் எனத் தனக்குத் தெரிந்த எவருக்காகவும் வாதாடுவதில்லை’ என்ற கொள்கையைக் கொண்ட வழக்கறிஞராக இருந்தவர் திரு. சந்துரு /// -
(இவர்தான் சந்துரு, (ஆசிரியர் ரவிக்குமார் - நூல் – பக்கம்.4 -5 )

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய K.சந்துரு அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், தனக்கு பிரிவு உபசார விழா ஏதும் வேண்டாம் என்று மறுத்ததோடு, உயர்நீதிமன்றம் வழங்கிய காரை ஒப்படைத்துவிட்டு நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்றார். “ – என்பது செய்தி. 

இந்த நூல் எதற்கு என்று சிலர் மனதில் எழலாம். அவர்களுக்கு பதில் அளிப்பது போல் இந்த நூலின் ஆரம்பத்தில் ’ஏன் இந்த நூல்?’ என்ற தலைப்பில் விடை தந்துள்ளார். நீதிபதி K. சந்துரு அவர்கள் நீதிபதியாக இருந்த காலத்தில் ஜாதி, மதம், தீண்டாமை, தலித்துகளின் சம்பந்தப்பட்ட உரிமை வழக்குகளிலும் தீர்ப்புகள் எழுதியுள்ளார். இந்த தீர்ப்புகளை தருவதற்கு பெரிதும் உதவியது டாக்டர் அம்பேத்கரின் எழுத்துக்களும் அவரது உரைகளுமே என்று சொல்லும் இவர், தனது தீர்ப்புகளை பலரும் பாராட்டிய நிலையில், சட்ட சஞ்சிகைகளில் (LAW JOURNALS) இந்த தீர்ப்புகள் வெளியிடப்படவில்லை என்றும், இது ஒரு நவீன தீண்டாமை என்றும் குறிப்பிடுகிறார்.

/// இன்றிருக்கும் சூழ்நிலையில் அப்படிப்பட்ட தீர்ப்புகளை ஆவணப்படுத்தாவிட்டால் அவை சட்ட சரித்திரங்களிலிருந்து மறைக்கப்பட்டுவிடும் வாய்ப்புகளுமுண்டு. அந்நேரத்தில்தான் தலித் சமூக சிந்தனையாளர் ரவிக்குமார் இந்நூலை எழுதுவதற்கு என்னை ஊக்கப்படுத்தினார். அவருக்கு எனது நன்றி. ///  (இந் நூல் பக்கம் - 20)

எனவே, இதுவே இந்த நூல் வெளிவந்ததற்கான காரணம் எனலாம்.

நூலின் அமைப்பு:

நீதிபதி K. சந்துரு அவர்கள் எழுதிய இந்த நூலின் முதற்பதிப்பு ஏப்ரல் – 2014 இல் வெளிவந்தது. திருத்திய மூன்றாவது பதிப்பாக அண்மையில் (நவம்பர், 2014) வெளிவந்துள்ளது. இந்த பதிப்பினில் ரவிக்குமார் அவர்களின் பதிப்புரை, நூலாசிரியரின் ”ஏன் இந்த நூல்?” என்ற தலைப்பில் விளக்கவுரை மற்றும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் அணிந்துரையோடு நூலாசிரியரின் முன்னுரை ஆகியவை நூலின் ஆரம்பத்தில் இருக்கின்றன. நூலின் பிற்பகுதியில் கலைஞர் மு.கருணாநிதி, தொல்.திருமாவளவன், ‘இந்து’ என்.ராம், பத்திரிகையாளர் போன்றோரது மதிப்புரைகள் இணைக்கப் பட்டுள்ளன. இந்த நூலில் கீழ்க் கண்ட பதினைந்து கட்டுரைகள் உள்ளன

1.பெளத்தம் ஏன்?
2.மத மாற்றம்.
3.பஞ்சமி நிலம்
4.கல்லறையில் சமத்துவம்
5.பொதுச் சேவைகளில் பாரபட்சமற்ற தன்மை
6.இடஒதுக்கீடு
7.நூலகத்திற்கு வந்த கேடு
8.கழிப்பறைகளுக்கு வந்த கஷ்டம்
9.சாதி மறுப்புத் திருமணங்கள்
10.பாலியல் கொடுமைக்குள்ளாக்கப் பட்ட தலித் சிறுமிகள்
11.உணவு உண்ணும் உரிமை
12.வன்கொடுமை இழைத்த காவலர்களுக்கு நிவாரணம் மறுப்பு 13.தீண்டாமைச் சுவர் தகர்ந்தது
14.கோவில்களில் வழிபாட்டுரிமை
15.தலித்துகளின் வாழ்வுரிமை

ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பையும் வைத்தே, அவை இன்ன பொருள் உள்ளடக்கியவை என்று புரிந்து கொள்ளலாம்.

சில தகவல்கள்:

மதம் மாறிய பௌத்தர்களுக்கு இட ஒதுக்கீடு: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு இருந்தாலும், இந்து மதத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறியவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டது. 34 வருட போராட்டத்திற்குப் பிறகு,. மதம் மாறிய பௌத்தர்களுக்கும் இடஒதுக்கீடு உரிமை உண்டு என்று 1990 ஆன் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamilnadu Public Service Commission) இந்த உண்மையை மறைத்துவிட்டு மதம் மாறிய பௌத்தர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்றே சொல்லி வந்தது. நீதிபதி K. சந்துரு அவர்கள் TNPSC இன் இந்த போக்கைக் கண்டித்ததோடு, அதன் உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.

மீனாட்சிபுரம் ரஹமத் நகராக மாறிய சம்பவம்: 1981 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் சுமார் நூறு இந்து தலித் குடும்பத்தினர் இஸ்லாம் மதம் தழுவினர். மீனாட்சிபுரம் என்ற பெயர் ரஹமத் நகர் என்று மாறியது. அன்றைய காலகட்டத்தில் இந்த சம்பவம் இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது. இதனையொட்டி தமிழ்நாட்டில் வந்த மதமாற்ற தடைசட்டம் (2002) பற்றியும், அது திரும்பப்பெறப்பட்டதையும் நினைவுகூர்ந்த நூலாசிரியர், மீனாட்சிபுரங்கள் உருவானதைப் பற்றி கவிஞர் வாலி அவர்கள் எழுதிய கவிதை வரிகளை சுட்டிக்காட்டுகிறார் ( இந்நூல் பக்கம் – 42 )

ஆறுமுகம் என்றிருந்தோன்
அப்துல்லா ஆனதுவும்
அய்யனார் என்றிருந்தோன்
அந்தோனி ஆனதுவும்
வேறுமுகம் நாம் காட்டி
வித்தியாசம் பல பேசி
உடன் பிறந்தோரையெல்லாம்
ஒதுக்கியதால் வந்த வினை
-    கவிஞர் வாலி

கல்லறையில் சமத்துவம்: மதுரை தத்தநேரி என்ற மாநகராட்சி சுடுகாட்டில் ஜாதி அடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆரிய வைசிய சமூகத்தினர் தங்களுக்கு தனியிடம் வேண்டுமென கேட்க, அவர்களுக்கும் இவ்வாறே ஒதுக்கப்பட்டது. மாநகராட்சி கூட்டத்தில் இது பிரச்சினையானதும், இந்த உத்தரவை மாநகராட்சி ஆணையர் ரத்து செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடுத்தனர்.  கோர்ட்டுக்கு போனார்கள். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ( மதுரைக் கிளை ) மாநகராட்சி சட்டத்தில் ஜாதிக்கொரு இடம் சுடுகாட்டில் ஒதுக்க வழியேதுமில்லை என்று சொல்லி, தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி சுடுகாடுகளிலும்  முதலில் வருபவருக்கு முதலிடம் என்ற அடிப்படையில் இறந்தவர்களின் உடலை எரியூட்ட வசதி செய்ய ஆணையிட்டது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி K. சந்துரு அவர்கள், தமது தீர்ப்பினில் ‘ரம்பையின் காதல்’ என்ற திரைப்படத்தில் வரும்

சமரசம் உலாவும் இடமே,
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே,
ஜாதியில் மேலோரென்றும்,
தாழ்ந்தவர் கீழோரென்றும்,
பேதமில்லாது எல்லோரும்,
முடிவினில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு

என்ற பாடலை (பாடலாசிரியர் மருதகாசி), மேற்கோளாக எடுத்துக் காட்டியதையும் இங்கு குறிப்பிட்டு இருக்கிறார்.(இந்நூல் பக்கம் 49 – 51 )

மேலே சொன்ன தகவல்களோடு இன்னும் நிறைய செய்திகள், சட்ட நுணுக்கங்கள் இந்த நூலில் இருக்கின்றன. ஒவ்வொரு வழக்கைப் பற்றியும் சொல்லி, அந்த வழக்குகளுக்கான தீர்ப்புகள் எப்படி சட்டப்படி அம்பேதகர் வழியில் அமைந்தன என்பதையும் நூலாசிரியர் சொல்லி இருக்கிறார். நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒரு ஆவணம் எனலாம். இந்த நூலின் மூன்றாம் பதிப்பே இந்த நூலுக்கு இருக்கும் வரவேற்பினை எடுத்துக் காட்டும். வழக்கறிஞர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் இந்த நூல். ஒரு நல்ல கையேடாகவும், வழிகாட்டியாகவும் விளங்கும்

நூலின் பெயர்: அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்
நூலாசிரியர்: நீதிபதி K. சந்துரு
பக்கங்கள்:  208  விலை ரூ 150/= (திருத்திய மூன்றாம் பதிப்பு)
நூல் வெளியீடு: மணற்கேணி பதிப்பகம்,
முதல் தளம், புதிய எண்.10 (பழைய எண்: 288),
டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005
செல் போன்:  944033305


29 comments:

  1. மிகச்சிறப்பானதோர் நூல் பற்றிய, தங்களின் தனிப்பாணியில் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள மூத்த வலைப்பதிவர் VGK அவர்களின் அன்பான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

      Delete
  2. நீதி அனைவருக்கும் ஒன்றே!..

    மதிப்பிற்குரிய நீதிபதி K. சந்துரு அவர்கள் எழுதிய நூலின் விம்ர்சனம் அருமை..
    நல்ல விஷயங்களுடன் பதிவு.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ளம் கொண்ட தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

      Delete

  3. மிக அருமையான நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி! தங்களின் நூல் மதிப்பீட்டை படிக்கும்போது உடனே அதை வாங்கி படிக்க ஆசை உண்டாகிறது. மழை நின்றதும் வாங்கி படிக்க இருக்கிறேன். திரும்பவும் நன்றி

    ReplyDelete
  4. அருமையான நூலைப் பற்றிய அருமையான அறிமுகம். நீதியரசர் சந்துரு அவர்கள் எழுதிய "கனம் கோர்ட்டார் அவர்களே" என்றொரு நூல் வந்துள்ளது. நீதித்துறை குளறுபடிகளை அக்கக்காக அலசியிருப்பார்

    ReplyDelete
    Replies
    1. தோழர் S. ராமன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட "கனம் கோர்ட்டார் அவர்களே" நூலையும் வாங்கி படிக்க வேண்டும். தகவலுக்கு நன்றி.

      Delete
  5. அய்யா வணக்கம். அரியதொரு வேலை செய்திருக்கிறீர்கள். தங்களின் இந்த விமர்சனத்தை, நீதியரசர் திரு சந்துரு அவர்களுக்கே -இந்தப் பக்கத்தை அப்படியே- மின்னஞ்சல் வழி அனுப்பியிருக்கிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களின் அன்பிற்கு நன்றி. தாங்கள் எனக்காக செய்த நற்காரியத்திற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

      Delete
  6. “சட்ட சஞ்சிகைகளில் (LAW JOURNALS) இந்த தீர்ப்புகள் வெளியிடப்படவில்லை , இது ஒரு நவீன தீண்டாமை“ - இந்தக் கொடுமைகள் தீருமட்டும் இதுபோலும் நூல்கள் மட்டுமல்ல இவர்போலும் நீதியரசர்களும் தேவை. நன்றி அய்யா.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  7. 'குற்றம் செய்தவர் எனத் தனக்குத் தெரிந்த எவருக்காகவும் வாதாடுவதில்லை'
    நீதிபதி கே. சந்துரு அவர்கள் பாராட்டுக்குறியவரே...
    இந்த ஒரு விடயமே போதும் அவரின் முகம் காட்டுகின்றது நண்பரே..
    கவிஞர் வாலி பாடல் வரிகள் மிகவும் பொருள் பதிந்தது அருமை
    தங்களின் விமர்சனம் நூலை வாங்க வைக்கும் நன்றி நண்பரே
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  8. அருமையான நூல் விமர்சனம்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  9. தங்களின் விமர்சனதுக்கும் தகவலுக்கு நன்றி! அய்யா.....

    ReplyDelete
    Replies
    1. தோழர் வலிப்போக்கன் அவர்களின் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  10. நூலறிமுகம் நன்று
    சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  11. நீதியரசர் சந்துருவின் இந்நூலினைப் படித்து உள்ளேன் ஐயா
    இதுமட்டுமல்ல உயர் நீதி மன்றங்களில் நீதியரசர் சந்துரு நீதியரசராகப்
    பணியாற்றிய காட்சியையும் பார்த்திருக்கிறேன் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  12. நல்ல நூல் அறிமுகம். விரைவாக பல வழக்குகளை முடித்தவர் என்ற பெருமைக்குரியவர்

    ReplyDelete
  13. வணக்கம்
    ஐயா
    நூல் விமர்சனம் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் படிக்கவேண்டும் ஆசை இந்த நூலை.த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன-

    ReplyDelete
  14. இந்த நூலில் இத்தனை விஷயங்களா என்று ஆச்சரியப்பட வைத்தது தங்கள் பதிவு. அருமையான பதிவு.

    ReplyDelete
  15. உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
    சில வேண்டுதல்கள்...

    இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
    மணிதம் இன்னும் மரிக்கவில்லை
    என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
    நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
    நிறையவே நாம் ஜாக்கிரதையாக
    செயல்பட வேண்டிய தருணம் இது...

    அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
    வேண்டுதல்கள்..

    1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

    2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

    3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

    4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

    5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..

    நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.

    உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  16. நான் வாங்கிப்படிக்க ஆசைப்பட்டேன். தங்களது விமர்சனம் எனது ஆவலை மேம்படுத்திவிட்டது. நன்றி.

    ReplyDelete
  17. நாங்கள் வாங்க நினைத்த நூல் தங்கள் விமர்சனம் கண்டு வாங்கிவிடும் எண்ணம் ஓங்கிவிட்டது. அரசு கொடுத்த காரை ஒப்படைத்துவிட்டு மின்சார ரயிலில் பயணம், குற்றம் புரிந்தவர் என்று தெரிந்தால் அவருக்காக வாதாடுவதில்லை என்ற கொள்கை இவை அனைத்துமே அவரைப் பற்றிப் பறைசாற்றி விட்டது. எப்படிப்பட்டவர் என்று.

    கீதா: இப்போது ஆட்சி மாற்றம் தேவை எனும் நிலையில், நீதியரசர் நீதி தெரிந்தவர், ஊழலுக்குத் துணை போகாதவர் என்ற நிலையில் இவரைப் போன்ற, ஐ ஏ எஸ் சகாயம் போன்ற மனிதர்கள் நம்மை ஆள வந்தால் நன்றாக இருக்குமோ என்ற ஒரு பேராசையும் வருகின்றது ஐயா..

    ReplyDelete
  18. இத்திருநாட்டில் ஊழலும் சூதும் நிரம்பியது..அதனால் தான் என்னவோ நிதீத் தாய் கருப்பு துணியை கண்ணில் கட்டிய நிலையில் காணப்படுகிறார் ஐயா..

    அருமையான பகிர்வு..வாழ்த்துக்கள்..

    ReplyDelete