Wednesday, 30 December 2015

ஆரவல்லி சூரவல்லி கதை - இலக்கியமும் சினிமாவும்” ஆண்கள் செய்யும் வேலைகளை எல்லாம் பெண்கள் பார்த்துக் கொள்வார்கள்; பெண்கள் செய்யும் வேலைகளை எல்லாம் ஆண்கள் செய்ய வேண்டும்; ஆண்கள் இனி பெண்களுக்கு அடிமைகள் ‘ – இப்படி ஒரு ஆணை பிறப்பித்தால் எப்படி இருக்கும்? ஆனால் காலங் காலமாக பேசப்பட்டு வரும் ’ஆரவல்லி சூரவல்லி’ கதையின் மையக்கருத்துதான் இது. அண்மையில் Youtube இல் ’ஆரவல்லி’ என்ற பழைய சினிமாவைப் பார்த்தேன் அதன் எதிரொலி இந்த கட்டுரை.

பெரிய எழுத்து கதைகள்:

பள்ளிப்பருவத்தில், எங்கள் தாத்தாவின் (அம்மாவின் அப்பா} கிராமத்திற்கு போயிருந்தபோது, அங்கே வீட்டு இறவாணத்தில் (பேச்சு வழக்கில் எறவாணம் ; உட் கூரையின் கீழ்ப்புறம்)  ‘ஆரவல்லி  சூரவல்லி கதை’ என்ற B. இரத்னநாயகர் அண்ட் ஸன்ஸ் வெளியிட்ட பெரிய எழுத்து கதை புத்தகம் இருந்தது. (அந்த காலத்தில்: இந்த புத்தக கம்பெனியார் - ராமாயணம். மகாபாரதம், விக்கிரமாதித்தன் கதைகள், மதனகாமராஜன் கதைகள், பொன்னர் சங்கர் கதை போன்றவற்றை பெரியவர்களும் படிக்கும் வண்ணம் பெரிய பெரிய எழுத்துக்களில், ஐதீகப் படங்களுடன் வெளியிட்டு வந்தார்கள். இவை பெரிய எழுத்து கதைகள் எனப்படும்.) அந்தக் கால தெருக்கூத்து கலைஞர்களுக்கு இந்த புத்தகங்கள் நன்றாகவே உதவி புரிந்தன. அந்த நூல்களின் உரைநடையை ஆரம்பத்தில் படிக்க எனக்கு, கஷ்டமாக இருந்தது. ஆனால் அதுபோன்ற புத்தகங்களை அடிக்கடி படித்து பழக்கம் வந்துவிட்டதால், இந்த ஆரவல்லி  சூரவல்லி கதையையும் படித்து கதையைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படவில்லை.

மகாபாரதம் எனப்படும் பாரதக்கதைகளில் கிளைக்கதை இது என்கிறார்கள். இதனை எழுதியவர் புகழேந்திப் புலவர் என்று சொல்கிறார்கள்இந்த புகழேந்திப்புலவர் எழுதியதாக இன்னும் சில நூல்கள் உண்டு. . ( நூலின் நடையைப் பார்க்கும்போது,  புகழேந்தி என்ற பெயரில், மணிப்பிரவாள உரைநடையாக  புத்தக பதிப்பிற்காக  ஒரு  தமிழ்ப் புலவர் இதனை எழுதியிருப்பதாகவேத் தெரிகிறது)

கதைச்சுருக்கம்:

பஞ்சபாண்டவர்களுக்கும் துரியோதனன் வகையறாக்களுக்குக்கும் பகைமை உண்டாகாத நாளில், தருமன் தனது தம்பிகளுடன் அரசாண்டு கொண்டு இருந்த சமயம், துவாரகையிலிருந்து வந்த கிருஷ்ணன் ஒரு சேதி சொன்னார். அதாவது, “ஆரவல்லி, சூரவல்லி, வீரவல்லி என்ற பெண்கள் நெல்லூரு பட்டணம் எனப்பட்ட ஆரவல்லி நாட்டை ஆண்டு வருகின்றனர். அவர்கள் மொத்தம் ஏழு பேர்; ரெட்டிப் பெண்கள். மாயவித்தைகள் தெரிந்த அவர்கள் வஞ்சகமான போட்டிகள் வைத்து ஆண்களை அடிமையாக்கி வைத்து இருக்கிறார்கள்; அவர்களை அடக்கி அடிமையானவர்களை விடுதலை செய்தால் உங்களுக்கு கீர்த்தி உண்டாகும்”.  என்று சொல்கிறார். உடனே வீமன் வீரிட்டு கிளம்புகிறான். ஆனால் அவனுடைய வீரம் ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகளின் மந்திர தந்திர மாயாஜாலங்கள் முன் செல்லுபடி ஆகவில்லை. அவர்கள் வீமனை கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர். கிருஷ்ணன் ஒரு யானை வடிவம் கொண்டு வீமனைக் காப்பாற்றி மீண்டும் தனது நாட்டுக்கே தப்பி வரச் செய்கிறார். ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகள் , எங்களிடம் தோற்றுப் போன வீமனை தங்களிடமே ஒப்படைக்க கூறுகின்றனர். தருமனும் வீமனை மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார்.

ஆரவல்லி, சூரவல்லிகளை போட்டியில் வெல்ல யாரால் முடியும் என்று ஜோதிடம் பார்க்கும் போது , ஆரவல்லியின் ஒரே மகளான அலங்காரவல்லி எனப்படும் பல்வரிசை என்பவளை மணம்புரிபவனுக்கே அந்த வெற்றி கிட்டும்’ அவன் பெயர் அல்லிமுத்து என்று இருக்கும் என்றும் குறிப்பு சொல்லிற்று. அந்த பெயர் கொண்ட ஒருவன் பஞ்சபாண்டவர்களின் தங்கை சங்கவதியின் மகன் என்று கண்டு, அந்த அல்லிமுத்துவை அனுப்பி வைக்கிறார்கள். அவன் தனது இஷ்ட தெய்வமான வனபத்ரகாளியை வணங்கிச் செல்லுகிறான். அப்போது காளியானவள், அல்லிமுத்துவுக்கு மந்திரித்த திருநீறையும் (விபூதி) ஒரு நீண்ட வாளையும், தந்து, ‘ வெற்றி பெற்று வரும்வரை, இவை இரண்டையும் எந்ததருணத்திலும் மறந்து விடாதே” என்று வாழ்த்தி அனுப்பி வைக்கிறாள். அல்லிமுத்து அவ்வாறே அவற்றின் துணையால், போட்டிகளில் வெற்றி பெற்று எல்லோரையும் விடுவிக்கிறான். ஆரவல்லி மகள் அலங்காரவல்லி (பல்வரிசை)யை தனது மாமன்கள் (பஞ்சபாண்டவர்) முன்னிலையில் மணம்புரிய அழைத்துச் செல்கிறான். அதற்குமுன்னர் ஆரவல்லி, விஷம் கலந்த எலுமிச்சை பழ தண்ணீரை, ”போகும் வழியில் தாகத்தை தீர்க்க இந்த தண்ணீரை உன் புருசனுக்கு கொடு “ என்று சொல்லி ஒரு குடுவையைக் கொடுக்கிறாள். இது அலங்காரவல்லிக்கு தெரியாது. வழியில் தாகம் எடுக்க இந்த தண்ணிரை அருந்திய அல்லிமுத்து இறந்துவிடுகிறான். சூது அறியாத அலங்காரவல்லி, அவனை அங்கேயே விட்டுவிட்டு தாய் சூரவல்லியிடம் வந்து நடந்ததைச் சொல்லி புலம்புகிறாள். ஆரவல்லியோ மனம் மகிழ்கிறாள். அலங்காரவல்லி இறந்த தன் கணவனுக்காக புலம்பிக்கொண்டே இருக்க, அல்லிமுத்துவின் குதிரை, பஞ்சபாண்டவர்களிடம் சென்று விவரம் சொல்ல, அவர்கள் ஆரவல்லி, சூரவல்லி இருக்கும் நெல்லுர் பட்டணம் மீது படையெடுத்து போனார்கள். ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள் ஏழுபேரில் ஒருத்தி தப்பிவிட, மற்ற ஆறுபேரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இதற்கிடையே அபிமன்யு மேலுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை ஒரு குடுவையில் மீட்டெடுத்து வந்து காப்பாற்றுகிறான். அலங்காரவல்லி நிரபராதி என்று தெரியவர அவளை அல்லிமுத்து ஏற்றுக் கொள்கிறான்.

சினிமாக் கதை:

தமிழ் சினிமா என்று எடுத்துக் கொண்டால், இந்த ஆரவல்லி, சூரவைல்லி கதையை வைத்து இரண்டு படங்கள் வெளி வந்துள்ளதாகத் தெரிகிறது. 1946 ஆம் ஆண்டு, வி.ஏ.செல்லப்பா, செருகளத்தூர் சாமா ஆகியோர் நடித்த ‘ஆரவல்லி சூரவல்லி’. இதனை இயக்கியவர் சி.வி.ராமன்.

அப்புறம் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘ஆரவல்லி’ என்ற திரைப்படம் – இதன் திரைக்கதை, வசனம் – V N சம்மந்தம் டைரக்‌ஷன் – கிருஷ்ணராவ் (இந்த படத்தைத்தான் நான் இப்போது பார்த்தது)

(படம் மேலே) - ஆரவல்லி (G.வரலஷ்மி) சூரவல்லி (S.மோகனா)

(படம் மேலே) - ஆராய்ச்சி (காகா ராதா கிருஷ்ணன்) அல்லிமுத்து (S.G.ஈஸ்வர்)

(படம் மேலே) - அலங்காரவல்லி(M. மைனாவதி)

இதில் நடிகர்கள் – S.G.ஈஸ்வர், V.கோபாலகிருஷ்ணன், காகா ராதாகிருஷ்ணன், A. கருணாநிதி, K.சாய்ராம் முதலானவர்கள் மற்றும்  நடிகைகள் – G.வரலஷ்மி, M. மைனாவதி, M.S.துரௌபதி, S.மோகனா,
T.P. முத்துலக்ஷ்மி, G.சகுந்தலா,  M. சரோஜா ஆகியோர் நடித்துள்ளனர். இசை G. ராமனாதன் பாடல்களை எழுதியவர்கள் – A. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வில்லிபுத்தன் ஆகியோர். பின்னணி பாடியவர்கள் – சி.எஸ்.ஜெயராமன், டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, டி,வி.ரத்னம், மற்றும் ஏ.ரத்னமாலா வழக்கம் போல, இந்த படத்திலும். திரைக்கதை என்பது மூலக்கதையினின்று வேறுபட்டு நிற்கிறது. அங்கு அல்லிமுத்து எலுமிச்ச பழரசம் சாப்பிட சாகிறான். இங்கு அதிரசம் சாப்பிடுவது போல காட்டியுள்ளனர்.

இந்த படத்தில், ஆரவல்லி, சூரவல்லி ஆட்சியில் ஆண்கள் எப்படி அடிமைகளாக இருந்தனர் என்பதைக் காட்டும் ”கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா’ என்ற பாடல் படு தமாஷாவாக இருக்கும். இந்த பாடலைப் பாடியவர் ஏ.ரத்னமாலா எனப்படும் ரத்னமாலா கணேசன். (இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது இரண்டாவது மனைவி என்பது பலரும் அறியாத செய்தி). இதோ அந்த பாடல் …. கண்டு கேட்டு மகிழ சொடுக்குங்கள். (CLICK)காகா ராதா கிருஷ்ணன் செய்யும் நகைச்சுவையை மறக்க முடியாதது. கதாநாயகன் அல்லிமுத்துவின் தோழன் வேடம். பெயர் ஆராய்ச்சி. எதற்கெடுத்தாலும் காதிற்குள் ஒரு நீண்ட நூலை விட்டு ஆராய்ச்சி செய்து பதில் சொல்லுவார்.  ’துணிந்தவனுக்குத் துக்கமில்லை அழுதவனுக்கு வெட்கமில்லை’ நீ சமாளி – என்ற வசனத்தை அடிக்கடி சொல்லி படத்தில் கலகலப்பை உண்டு பண்ணுவார். (வசூல் சக்கரவர்த்தி படத்தில் கமல்ஹாசனோடு கேரம் விளையாடும் அந்த தாத்தா தான் இந்த காகா ராதா கிருஷ்ணன்)

(படம் மேலே) - அடுப்பங்கரை புருஷனாக K.சாய்ராம்

இன்னொரு சிரிப்பு நடிகர் K.சாய்ராம் பெண்ணைப் போல உடை அணிந்து கொண்டு, வீட்டு வேலைகளைக் கவனிக்க, அவரது மனைவி  G.சகுந்தலா அரண்மனை உத்தியோகம் சென்று வருவார். படம் முழுக்க இவர் தனது கணவரை “புருஷா … புருஷா … “ என்று அழைப்பார். 

(படம் மேலே) - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தங்கள் குழுவினருடன் நாடகம் நடத்திவிட்டு, சரியான வசூல் இல்லை. எனவே சாப்பிடாமல் பசியோடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை சோர்வடையாமல் இருக்க பட்டுக்கோட்டையார் எழுதி பாடிய

‘சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!”

என்ற பாடலை இந்த படத்திற்கு கொடுத்து விட்டார். (தகவல் நன்றி: தினகரன் (இலங்கை) ஆகஸ்ட்,19,2014)

இந்த கட்டுரையை எழுத துணை நின்றவை (நன்றியுடன்)
Google
Youtube (Modern Theatre’s ‘Aravalli’ (Movie)
புகழேந்திப் புலவர் இயற்றிய – பெரிய எழுத்து - ‘ஆரவல்லி  சூரவல்லி கதை’ (B. இரத்னநாயகர் அண்ட் ஸன்ஸ்) மின்னூல் வடிவம் (போட்டோ காப்பி) tamilnavarasam.com
(படங்கள் யாவும் Youtube இலிருந்து Snapshot முறையில் எடுக்கப்பட்டவை)

49 comments:

 1. அருமை ஐயா..எனக்கு இதுப் போன்ற ஆரவல்லி, சூரவல்லி போன்றோர் மகாபாரத கதையில் இருப்பது தெரியாது தாங்கள் கூறியதில் தான் அறிந்துக் கொண்டேன்..நாளை என் கல்லூரி தோழிகளிடம் இதை பகிர்ந்துக் கொள்வேன்..

  அதன் தொடர்ச்சியோ என்னமோ இன்றும் சில ஆண்கள் அடிமையாக காணப்படுகிறார்களோ..??


  நன்றி ஐயா..

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களுக்கு நன்றி. எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!
   மணிப்பிரவாள நடையில் உள்ள, இதுபோன்ற பெரிய எழுத்து கதைகளை, எளிமையான தமிழ் நடையில் அநுராகம், மணிமேகலைப் பிரசுரம் ஆகிய பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. கிடைத்தால் வாங்கிப் படிக்கவும். எல்லாமே சுவாரஸ்யமானவை.

   Delete
 2. அறியாத படத்தினைப் பற்றி அற்புதமான செய்திகள் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

   Delete
 3. வணக்கம்
  ஐயா
  அறியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி... த.ம2
  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இறந்த சடலத்தின் கற்பனை அழுகை.:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றியும், உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்களும்.

   Delete
 4. அடேங்கப்பா! புதிய தகவல்கள்.
  அக்காலத்தில் கலைஞன் பசி யுணர்ந்ததால் தானோ என்னமோ பாடல் வரிகள் அர்த்தமாய் அமர்க்களப்பட்டது. ஆரவல்லி, சூரவல்ல்லி குறித்து புதிய தகவல் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி...! இன்னும் தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களூக்கு நன்றி!

   Delete
 5. அப்படத்தில் சின்னக்குட்டி நாத்தனா உட்பட நான்கு பாடல்களைப் பாடிய
  பிரபல பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதனின் பெயர் Title இல் இருட்ட
  டிப்புச் செய்யப்பட்டு விட்டது. A .M .ராஜா-ஜிக்கி குரலில் தவழ்ந்த 'சின்னப் பெண்ணான போதிலே' அற்புதமான பாடல். ஆனால் அதன் மெட்டு 'ஹிட்ச்காக்' இன் 'the man who knew too much ' {1956} என்ற ஆங்கிலப் படத்தில் இடம்பெற்ற
  'கே சரா சரா ' என ஆரம்பிக்கும் பிரபலமான பாடலின் அப்பட்டமான
  'உருவல்' என்பதால், தயாரிப்பாளர் நஷ்ட ஈடு கொடுக்க நேரிட்டது.
  சிவாஜி நாடக மன்றப் பாடகியாக 50களில் திகழ்ந்த A .G .ரத்ன
  மாலா, அறிவிப்பாளர் S .புண்ணியமுர்த்தி இலங்கைஇ வானொலியில்
  அவரைப் பேட்டி கண்ட போதுதான் Sivaji கணேசனே தனது கணவர் என்ற
  உண்மையை வெளிப் படுத்தினார்,

  ReplyDelete
  Replies
  1. கிரிகோரி வேதா (வேதா/மறைமுதல்வன்) அவர்களின் அன்பான கருத்துரைக்கும், சுவையான தகவல்களுக்கும் நன்றி! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

   Delete
 6. இனிய ஆங்கிலப் புத்தாண்டு
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சகோதரி ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி. எனது உளங்கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

   Delete
 7. நீங்கள் போட்டிருக்கும் பாடலை கேட்டிருக்கிறேன். அந்தக் காலத்தில் இப்படியொரு பாடலா என்றும் வியந்திருக்கிறேன். படம் பார்த்ததில்லை. ஆரவல்லி, சூரவல்லி கதையை இன்று உங்கள் பதிவு மூலம் அறிந்துகொண்டேன்.

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்! நேரம் கிடைக்கும் போது இந்த ‘ஆரவல்லி’ படத்தை யூடியூப்பில் பாருங்கள். அந்தக் காலத்திலேயே படத்தை போரடிக்காமல் எடுத்து இருக்கிறார்கள்.

   Delete
 8. நல்ல பகிர்வு, நன்றி ஐயா,

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் புத்தாண்டு வாழ்த்தினுக்கும் நன்றி! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

   Delete
 9. அன்புள்ள அய்யா
  வணக்கம்.

  "இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"
  TM +
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

   Delete
 10. ஆரவல்லி சூரவல்லி கதை என் ஆத்தா (அப்பாவின் அம்மா) சொல்லக் கேட்டிருக்கிறேன். தற்போது தங்கள்மூலமாக அதிகமாகத் தெரிந்துகொண்டேன். ஓர் ஆய்வுக்கட்டுரையைப் போலிருந்தது பதிவு. நன்றி. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் வலைத்தளம் சென்று கருத்துரையும் எழுதி விட்டேன் அய்யா! வாழ்த்துக்கள்>

   Delete
 11. பிரமாண்டமான தகவல் களஞ்சியம் நண்பரே
  தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், எமது 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள்
  தமிழ் மணம் 4

  ReplyDelete
  Replies
  1. நண்பர் தேவகோட்டை, கில்லர்ஜி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

   Delete
 12. ஆரவல்லி சூரவல்லி கதை இப்போதுதான் அறிந்தேன்.
  //ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள் ஏழுபேரில் ஒருவள் தப்பிவிட,//
  ஒருவள் -என்ற வார்த்தை சரிதானா?
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. ஒருத்தி என்பதே சரி! (ஒருவள் என்பது தவறு. இந்த சொல் எப்படியோ வந்து விழுந்து விட்டது.) மேலே பதிவினில் திருத்தி விட்டேன். தவற்றினைச் சுட்டிக் காட்டிய சகோதரர் டி.என்.முரளிதரன் அவர்களுக்கு நன்றி.
   எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

   Delete

 13. ஆரவல்லி கதையை கேட்டிருந்தாலும் முழுமையான கதையை தங்கள் மூலம் தெரிந்துகொண்டேன். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ஆரவல்லி படத்தில் வந்த ‘சின்னக்குட்டி நாத்தானா’ என்ற பாட்டு அப்போது மிகவும் பிரபலம். பகிர்வுக்கு நன்றி!

  தங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

   Delete

 14. சின்னக்குட்டி நாத்தனா என்பது தட்டச்சு செய்யும்போது ‘சின்னக்குட்டி நாத்தானா’ என்று வந்துவிட்டது.

  ReplyDelete
 15. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

   Delete
 16. எல்லா நலமும் பெற்று வாழ்க நலமுடன்..
  அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

   Delete
 17. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் வாழ்த்துரைக்கு நன்றி! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

   Delete
 18. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

   Delete
 19. நீங்களும் பதிவர் அமுதவனும் கூட்டு சேர்ந்தா பதிவுலகம் கொஞ்சம் கலை கட்டும் போல தெரியுதே! பகிர்வுக்கு நன்றி. புத்தாண்டு இனிய நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் ராஜ நடராஜன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி! நடிகர் சிவகுமார் போன்ற பிரபலமானவர்களுடன் நட்பு உள்ளவரான, என்னில் மூத்த, அனுபவம் மிக்க, மூத்த எழுத்தாளரான அமுதவன் அய்யாவோடு என்னை இணைத்துப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர் எங்கே? நான் எங்கே? எனக்குத் தெரிந்த, நான் பார்த்த சினிமாவோடு, நான் படித்த தமிழ் இலக்கியத்தோடு கலந்து எனக்குத் தெரிந்த நடையில் எழுதுகிறேன். அவ்வளவுதான்.

   Delete
 20. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  (வேதாவின் வலை

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

   Delete
 21. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

  - சாமானியன்

  எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்தினுக்கு நன்றி நண்பரே!

   Delete
 22. இன்றுதான் உங்களின் இந்தப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. அருமையான பதிவை மிஸ் செய்திருக்கின்றோம். கதை கேட்டதுண்டு. படம் பார்த்தது இல்லை.

  பாட்டு மட்டும் கேட்டதுண்டு ஆனால் அதன் படம் பெயர் தெரிந்திருக்கவில்லை. படம் பார்க்க வேண்டும். நிறைய கலைஞர்கள் தெரிந்திருக்கவில்லை. சிவாஜி கணேசன் தகவல் அறியாத ஒன்றுதான். வாசித்த போது வியப்பு. வெளியில் அவ்வளவாகப் பேசப்பட்டது இல்லை என்று. மிக்க நன்றி படத்தைப் பற்றிய தகவல்களுக்கு.

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 23. நடுவில் கொஞ்சம் நெட் பக்கம் தற்காலிக விடுப்பு எடுத்துக் கொண்டேன் .
  இன்று தான் பதிவைப் பார்த்தேன் . சினிமா படத்தை ஒரு ஆய்வுக் கட்டுரை போல எழதி உள்ளீர்கள் , பல தகவல்கள் தெரியாதவை .நன்றி .

  ReplyDelete
 24. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 25. தெரிந்த/தெரியாத, அந்தக்காலத் திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், பாடல்கள், நகைச்சுவைகள், கிசுகிசுக்கள் என பல்சுவையான பல தகவல்களுடன் மிக அருமையான பதிவு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 26. மாடர்ன் தியேட்டர்ஸ் ஆரவல்லி சிறுவனாக இருந்தபோது பார்த்து ரசித்திருக்கிறேன்.அருமையாக எழுதியுள்ளீர்கள்

  ReplyDelete
  Replies
  1. மூத்த வலைப்பதிவர் அய்யா சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி!

   Delete