Wednesday, 9 December 2015

உயிரா/ உடைமையா? – சென்னை அவலம்சென்னையில், இந்த வருட (2015) தீபாவளியை (நவம்பர், 10 ஆம் தேதி) யாரும் சரியாகக் கொண்டாடி இருக்க மாட்டார்கள். காரணம்  சென்ற நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து இன்றுவரை ஒருமாதமாக சென்னையில் நல்ல மழை.

முன்னறிவிப்பு:

சென்னை வானிலை மையம் வரப் போகும் புயல், மழை விவரத்தை முன்கூட்டியே சொன்னது. யாரும் அதனை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. ரமணன் சார் சொன்னால் பள்ளிக்கூடங்களுக்கு லீவு கிடைக்கும் என்றே இருந்து விட்டார்கள். இந்த அரசாங்கமும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக எதுவும் செய்யவில்லை. முழுதும் நிரம்பிக் கொண்டு இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடப் போகிறோம் என்ற அறிவிப்பு கூட செய்யவில்லை என்கிறார்கள். இன்னும் சிலர், போலீஸ் மூலம் அறிவிப்பு செய்ததாகச் சொல்கிறார்கள். முன்பெல்லாம் இதுமாதிரியான சமயங்களில் மக்கள் கூடும் இடங்களில் அல்லது தெருக்களில் தமுக்கு அடித்து அறிவிப்பு செய்வார்கள். அவர்களே எதிர்பாராத பேரிடர் இது.

உயிரா/ உடைமையா?

சாதாரணமாக யாரும் உயிருக்கு ஆபத்து என்றால், பாதுகாப்பான இடம் தேடி ஓடுவது இயல்பு. ( 1977 இல் திருச்சியில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளத்தின் போது, போட்டிருந்த பேண்ட், சட்டையோடு,  நான் உயிர் தப்பியது தனிக்கதை) ஆனால் இப்போது ஏற்பட்ட பெரும் மழையின் போது, உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும், சென்னை நகர மக்கள் பலரும் ( நகர், புறநகர் இரண்டிலுமே ) தங்கள் குடியிருப்புகளை விட்டு உடனே வெளியே வர முடியவில்லை. எப்போதும் போல மழை பெய்யும், தண்ணீர் இரண்டுநாள் இருக்கும், அப்புறம் வடிந்துவிடும் என்றே நம்பினார்கள். வெளியே வந்தால் பாதுகாப்பு இருக்காது என்றும்; எங்கே நம் வீட்டில் இருக்கும் கார், பைக், டீவி, கம்ப்யூட்டர் போன்ற பொருட்களும் மற்றும் நகைகளும் காணாமல் போய் விடுமோ என்று பயந்தும் அவற்றை பாதுகாப்பதிலேயே கவனமாக இருந்து விட்டார்கள். தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர், படகுகளில் வந்து கூப்பிட்டபோது கூட பலரும் வராததை டீவி செய்திகளில் காண முடிந்தது.

திருட்டு பயம்:

மக்கள் அச்சப்பட்டதிலும் காரணம் இருக்கிறது. நல்ல நாளிலேயே பூட்டிய வீட்டை கொள்ளை அடிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் நடக்கும் திருட்டுக்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. வெளியில் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. விளைவு அதிக உயிர்ச்சேதம் மற்றும் அவஸ்தைகள். இப்போதும் பல இடங்களில் பூட்டிய வீடுகளில் கொள்ளைகள் நடப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. சினிமா துறையில் வேலைபார்க்கும், எனது உறவினர் ஒருவர் தனது விலையுயர்ந்த கேமரா, வீடியோ கேமரா போன்ற பொருட்களை, அப்படி அப்படியே போட்டு , தனது ஸ்டுடியோவை பூட்டி விட்டு, கடவுள் மீது பாரத்தைப் போட்டு விட்டு, சொந்த ஊர் வந்து விட்டார். அவரது மனமெல்லாம் இப்போது அங்கேதான். ஊரே வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும்போது காவல்துறை மட்டும் என்ன செய்ய முடியும். அவர்கள் அவர்களது குடும்பத்தை மட்டுமே கவலைப்பட முடியும்.

ரியல் எஸ்டேட் விளம்பரங்கள்:

’வாங்க வாங்க … தாம்பரத்திற்கு அருகில்தான்……  முடிச்சூரிலிருந்து சென்னைக்கு முப்பது நிமிசம்தான் …செங்கல்பட்டிலிருந்து கொஞ்ச தூரம்தான்….. ” – என்று கூவிக் கூவி அழைக்கும் சின்னத்திரை, பெரியத்திரை நட்சத்திரங்களின் ரியல் எஸ்டேட் விளம்பரங்களை இப்போது டீவியில் காணவில்லை. மழை நின்று, வானம் வெளுத்து, வெயில் வந்து, பூமி காய்ந்ததும் மறுபடியும் வந்து விடுவார்கள்.

சென்னையில் ஓடும் கூவத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று பல வருடங்களாக சொல்லிக் கொண்டு இருந்தார்கள். கூவம் தன்னைத்தானே சுத்தம் செய்து கொண்டு விட்டது.

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

‘அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்” (படம்: அன்னை) https://www.youtube.com/watch?v=U4e2qAlHLzg

‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” (படம்: அனுபவி ராஜா அனுபவி)

மெட்ராஸை சுத்திப் பாக்கப் போறேன்” (படம்: மே மாதம் )

’சென்னை வட சென்னை” (படம் மெட்ராஸ்)

ஆகிய திரைப்பாடல்களில் வரும் அந்த சுவாரஸ்யமான பழைய மெட்ராஸை எப்போது மீட்டெடுக்கப் போகிறோம்?

(பாடல்களை youtube இல் கண்டு கேட்டிட அந்தந்த இணைய முகவரிகளை க்ளிக் செய்யவும்) 
41 comments:

 1. மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை, தகுந்த சினிமாப் பாட்டுக்களுடன் கொடுத்து அசத்தியுள்ளீர்கள். ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் பற்றி நல்ல நகைச்சுவையுடன் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மூத்த வலைப்பதிவர் அய்யா VGK அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

   Delete
 2. //வாங்க வாங்க … தாம்பரத்திற்கு அருகில்தான்…… முடிச்சூரிலிருந்து சென்னைக்கு முப்பது நிமிசம்தான் …செங்கல்பட்டிலிருந்து கொஞ்ச தூரம்தான்….. ” – என்று கூவிக் கூவி அழைக்கும் சின்னத்திரை, பெரியத்திரை நட்சத்திரங்களின் ரியல் எஸ்டேட் விளம்பரங்களை இப்போது டீவியில் காணவில்லை. மழை நின்று, வானம் வெளுத்து, வெயில் வந்து, பூமி காய்ந்ததும் மறுபடியும் வந்து விடுவார்கள்//
  அழகான விசயத்தை சொன்னீர்கள் நண்பரே மனசாட்சி இல்லாமல் பேசியவர்கள் மீண்டும் வரும்போது இவர்களுக்கும் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் பதிவு நன்று
  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 3. பட்டணம் தான் போகலாமடி பொம்பள....சேர்த்தால் இன்னும் நல்லாயிருக்கும் ஐயா....உங்கள் ஆதங்கம் எட்டவேண்டிய இடத்துக்கு எட்ட வேண்டும்....

  ReplyDelete
  Replies
  1. நண்பர் புதுக்கோட்டை செல்வா அவர்களுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிடும் பாடல், செட்டிங்ஸ் போட்டு, பாடப்படும் ,சென்னை பட்டணம் பற்றிய பாடல். சென்னை நகரக் காட்சிகள் இதில் கிடையாது. நான் மேலே சொன்ன பாடல்களில், அன்றைய மெட்ராஸ் வீதிகளையும் மக்களையும் காணலாம்.

   Delete
 4. நடுத்தர மக்கள் நடுத் தெருவுக்கு வந்துவிட்டார்கள்!என்பதுதான் இன்றைய உண்மை!

  ReplyDelete
  Replies
  1. புலவர் அய்யாவின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

   Delete
 5. இயல்பு நிலை திரும்பும் நாளை எதிர்பார்ப்போம்.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அவர்களுக்கு நன்றி.

   Delete
 6. இயல்பு நிலை விரைவில் திரும்பட்டும்.....

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்னதைப் போல நல்லது நடக்க வேண்டும். இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

   Delete
 7. vannakkam chennai' 'aniurth chennai,chennai. pattu arumaiyanath 'ethai' hiphoptamilan'writer

  ReplyDelete
  Replies
  1. சகோதரரே நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

   Delete
 8. சென்னை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப இறைவனைப் பிரார்திப்போம்.!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோதரி! இறைவனிடம் வேண்டுவோம்!

   Delete
 9. பாதிப்பு அதிக அளவில் நடுத்தர மக்களுக்குத்தான்
  ஆனாலும் இதில் இருந்த பாடம் கற்போமா
  என்பது சந்தேகம்தான்
  தம+1

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

   Delete
 10. உண்மையில் பலருக்கு சென்னை விட்டு சென்று விடலாம்என்ற எண்ணம் வந்து தெரிகிறது
  நிச்சயம் சென்னை மீண்டு வரும்

  ReplyDelete
  Replies
  1. கருத்துரை தந்த சகோதரருக்கு நன்றி. இந்த பயங்கரம் பலருடைய மனநிலையை – குறிப்பாக முதியவர்களை – பாதித்து இருக்கும். அதனால் அவர்கள் சொந்த ஊருக்கே திரும்பி போய் விடலாம் என்று நினைப்பார்கள். ஆனால் சென்னையிலேயே வேலை பார்க்கும் அவர்களது பிள்ளைகள் என்ன செய்ய முடியும்.

   Delete
 11. மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வாழ்வை தொடங்கவேண்டும் என்ற நிலையில்தான் பலரும் இருக்கிறார்கள்.
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. பத்திரிகையாளர் எஸ்.பி.எஸ் அவர்களே நீங்கள் சொல்வது சரிதான். மனதை நெருட வைக்கும் செய்தி.

   Delete
 12. உயிருக்கு மதிப்பளித்த காலம் போய் இப்போது உடமைகளைப் பிரதானமாக எண்ணும் காலமாகிவிட்டது. ஆனால் இப்பெருமழை பல புரிதல்களை உண்டாக்கியிருக்கிறது. பல தப்பிதமான கற்பிதங்களை காணாமற்போகச் செய்திருக்கிறது என்பது உண்மை.. மண்ணின் ஈரம் வற்றியதும் மனங்களின் ஈரமும் வற்றிப்போகாமல் இருக்கவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களே! நீங்கள் சொல்வது போல, மண்ணின் ஈரம் காய்ந்தாலும், மக்களின் மனதிலுள்ள ஈரம் காயக் கூடாது.

   Delete
 13. இயற்கையை மதிக்கவில்லையென்றால் அது நம்மை அது மிதித்துவிடும்
  என்ற பாடத்தை இந்த மழையும் வெள்ளமும் சென்னை மக்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே கற்றுத் தந்திருக்கிறது. அந்த கால சென்னையை பார்க்கவேண்டுமானால் இனி நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் வரும் காட்சிகளை Youtube இல் தான் பார்க்கக்வேண்டும் போல. பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 14. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 15. கால ஓட்டத்தில் இதுவும் கடந்து போகும் ,எதுவும் மாறாது !

  ReplyDelete
  Replies
  1. தோழர் பகவான்ஜீ நீங்கள் சொல்வது தவறு. சில விஷயங்கள் காலச்சுவடுகளாக மாறி மனதில், வரலாற்றில் பதிந்து விடும். அதில் இந்த பயங்கரமும் ஒன்று. வாக்காளர்கள் சென்னையில் மட்டும்தான் இருக்கிறார்களா, என்ன?

   Delete
 16. எனக்கு பகவன் ஜியும் கில்லர் ஜியும் ஒரே பெயர் குழப்பம்.ராமேஷ்வரம் அழிந்து போனதையும்,சுனாமியையும் மறந்து விட்டோம். அடுத்து தேர்தல் அல்லது ஏதாவது திரைப்படம் அல்லது மாற்று பிரச்சினை வந்து விட்டால் இப்போதைய துயரம் பின் தள்ளப்படும் என்பதே உண்மை.

  ReplyDelete
  Replies
  1. தொப்பி போட்டிருந்தா கில்லர்ஜி,கண்ணாடி மாட்டியிருந்தா பகவான்ஜி ,இனி பெயர் குழப்பம் வராதே :)

   Delete
  2. சகோதரர் ராஜ நடராஜன் அவர்களுக்கு, தனுஷ்கோடியையும் சுனாமியையும் யாரும் மறக்கவில்லை. நம்நாட்டில் ஜாதி, மதம் என்ற இரண்டு அபிமானங்களும் இருக்கும் வரை இந்த அரசியல் நடந்து கொண்டுதான் இருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 17. செம்பரம்பாக்கம் ஏரி நிறைய இருக்கும் போதே தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும் ஆனால் ஏரி நிரம்பிய பின் திறந்ததால் எல்லா உபரி நீரையும் அடையாற்றில் விட அது பெரு வெள்ளமாக மாறி விட்டது. ஒரே நேரத்தில் வெள்ள நீர் அனைத்தையும் திறந்து விட்டது தவறோ என்று தோன்றுகிறது. you become wiser on hindsight....!

  ReplyDelete
  Replies
  1. அய்யா G.M.B அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

   Delete
 18. இயல்பு நிலை திரும்ப இறைவனை வேண்டுவோம்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அய்யா! இறைவனிடம்தான் வேண்ட வேண்டும்.

   Delete
 19. சிலர் வெள்ளத்தோடு போய்விட்டனர்..சிலருக்கு பூஜ்யத்தில் இருந்து வாழ்வைத் துவங்க வேண்டும்..மனம் வருத்தும் பேரிடர்!
  ஆனால் கற்றுக்கொண்ட பாடம் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் என்று நம்புவோம் ஐயா..நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோதரி! நீங்கள் சொல்வது சரிதான். ஆனாலும், மீண்டும் முதலில் இருந்து வாழ்க்கையை தொடங்க இருப்பவர்கள் நிலைமைதான் மிக்க கவலைதரும் விஷயம்.

   Delete
 20. நிச்சயமாக இது ஒரு பாடம். இயற்கை விடுத்திருக்கும் ஒரு எச்சரிக்கை மணி. ஆனால் இந்தப் பாடத்தக் கற்க விலை பெரிது எனவே இனியேனும் அரசும் மக்களும் ஒழுங்காகச் செயல்பட வேண்டும் ஐயா.

  கீதா: அடையாறும் சரி கூவமும் சரி இன்னும் நாறிக்கொண்டுதான் இருக்கின்றன ஐயா. மழை வெள்ளம் வடிந்து தங்கள் இயல்பு நிலைக்கு வந்த்விட்டனவே. என்ன கொஞ்சம் தண்ணீர் கூடுதல் அல்லாமல் அழுக்க்குகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. சகோதரரின் கருத்துரைக்கு நன்றி.

   Delete