Tuesday, 23 December 2014

என்னே கம்ப்யூட்டருக்கு வந்த சோதனை?திருவிளையாடல் படத்தில் நடிகர் பாலையா சொல்லும் ஒரு வசனம். “என்னே மதுரைக்கு வந்த சோதனை?என்பதாகும். அதே போன்று எங்கள் வீட்டு கம்ப்யூட்டருக்கும் சில சோதனைகள். என்னே கம்ப்யூட்டருக்கு வந்த சோதனை?. சில மாதங்களாகவே வீட்டிலுள்ள கம்யூட்டர் ரொம்பவும் மெதுவாகவே இயங்கிக் கொண்டு இருந்தது. நானும் கம்ப்யூட்டரில் DISK CLEANUP, SYSTOM RESTORE – என்று எனக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் காட்டி வந்தேன். அது எதற்கும் மசியவில்லை. எங்கள் வீட்டு கம்யூட்டரை அடிக்கடி வந்து பழுது நீக்கும், சர்வீஸ் சென்டர்காரர்கள் புதிதாக ஒன்று வாங்கும்படி சொன்னார்கள். எனது மகனும் அவ்வாறே புதிதாக ஒன்றை வாங்கி விடலாம்என்றே சொன்னார்.

நானும் ஒரு சராசரி இந்தியன்

பொதுவாகவே இந்தியர்களுக்கு ஒரு நல்ல குணம். பொருட்களை உபயோகப் படுத்தும் விஷயத்தில் இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் காண்பவர்கள். ஜப்பானியர்,அமெரிக்கர் போன்று, இந்த பயன்படுத்து / தூக்கியெறி (USE  & THROW)  என்ற சித்தாந்தத்தை கடை பிடிக்க விரும்பாதவர்கள்.. என்ன ரிப்பேர் ஆனாலும், ஸ்பேர் பார்ட்ஸ் (SPARE PARTS) வாங்கிப் போட்டு ஓட்ட பார்ப்பார்கள். சிலசமயம் ஒவ்வொரு முறையும் செய்யும் ரிப்பேர் செலவை மொத்தமாக கூட்டிப் பார்த்தால், அந்த பொருளின் வாங்கிய விலையை விட அதிகம் போய்விடும்.

இப்போதுதான் ஸ்மார்ட் போன் ஒன்று வாங்கினேன். மேலும் எதிர்பாராத செலவுகள்.  எனவே இப்போதைக்கு வேண்டாம் என்று கம்ப்யூட்டர் வாங்கும் விஷயத்தை தள்ளிப் போட்டேன். நானும் ஒரு சராசரி இந்தியன் தானே. இந்த கொள்கை காரணமாக அடிக்கடி செலவு.

NHM தமிழ் எழுதியை மீட்டேன்

ஆரம்பத்தில் தமிழ்வலையுலகில் கருத்துரை எழுதுவதற்கு இகலப்பை (‘ikalappai) என்னும் தமிழ் எழுதியை பயன்படுத்தினேன். சில மாதங்கள் கழித்து அது எனது கம்யூட்டரில் டக்கப்போர்  செய்ய ஆரம்பித்து காணாமலே போய்விட்டது. அப்புறம் ஒரு வழியாக NHM Writer  பற்றி தெரிந்து கொண்டு அதன் தமிழ் எழுதியை தரவிறக்கம் செய்து, ஐந்து வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறேன். இதற்கும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இதுவும் சென்ற மாதம் சில நாட்கள் டக்கப்போர்செய்து கம்ப்யூட்டரை விட்டு காணாமல் போனது. சரி, என்று வழக்கம் போல் கூகிள் (GOOGLE) உதவியுடன் NHM Writer 2.0 என்ற புதிய பதிப்பை (New version) தரவிறக்கம் செய்தேன். ஆனால் இது கடைசிவரை எனது கம்ப்யூட்டர் திரைக்கு வரவில்லை. எனது மகன் “ நமது கம்ப்யூட்டர் வாங்கி ரொம்ப நாள் ஆகி விட்டது. அதனால் அது புதியவற்றை (LATEST DOWNLOADS)  ஏற்றுக் கொள்ளாது. ஒன்று கம்யூட்டரை மாற்றுங்கள். இல்லையேல் பழைய பதிப்பையே (Old Version) வைத்துக் கொள்ளுங்கள்என்றார். (அவருக்கென்று தனியே லேப் டாப் இருப்பதால், அவருக்கு பிரச்சினை இல்லை.) எனக்கு மின்னல் வெட்டாய் அப்போதுதான் “ AUTOMATIC DOWNLOAD “ காரணமாக, புதியவை வந்து நமது பழைய கம்ப்யூட்டரில் பழைய தமிழ் எழுதிகளை காலியாக்கி விட்டன, என்ற ஞானோதயம் வந்தது. உடனே “ AUTOMATIC DOWNLOAD “ இற்கு வேண்டாம் (NO) சொல்லி விட்டு NHM Tamil Writer இன் பழைய பதிப்பையே (NHM Writer 1.5.1.1 Beta) தரவிறக்கம் செய்தேன். இப்போது எல்லாம் சரியாகி விட்டது. இப்போது வலைப்பக்கம் எனக்கு எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்று மீண்டும் வந்து விட்டேன்.

BSNL நெட்நொர்க் காலி

தமிழ் எழுதி பிரச்சினை முடிந்த கையோடு அடுத்த பிரச்சினை BSNL BROADBAND வடிவில் வந்தது. நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அடுத்த பகுதியில், இரண்டு வாரத்திற்கு முன்னர், மாநகர கார்ப்பரேசன் ஊழியர்கள், குடிநீர் பதிப்பதற்காக சாலைகளில் பொக்ளின் உதவியோடு பள்ளங்கள் தோண்டினார்கள். இதில் B.S.N.L நெட்வொர்க் முழுதும் காலி. எனவே எனது மகனிடம் லேப்டேப்பில் இருக்கும் TATA நெட்வொர்க்கை அவ்வப்போது இரவலாக வாங்கி பயன்படுத்த வேண்டி இருந்தது. இதனால் வலைப்பக்கம் அதிகம் வர முடியாமலும், கருத்துரைகள் அதிகம் எழுத இயலாமலும் போய்விட்டது. நேற்று மாலைதான் BSNL ஊழியர்கள் சரி செய்தனர்.

திரையின் ஆட்டம்

வரிசையில் வந்த அடுத்த பிரச்சினை இது. கடந்த மூன்று நாட்களாக  கம்ப்யூட்டர் மானிட்டரின் திரை ஆடிக் கொண்டிருந்தது.

நான் வங்கிப் பணியில் இருந்தபோது, இது மாதிரி ஆட்டம் போடும் கம்ப்யூட்டர் மானிட்டரின் தலையிலும், பக்கவாட்டிலும் என்னடா கண்ணுஎன்று செல்லமாக தட்டுவோம். சரியாகி விடும். எல்லாம் மாலைநேரம் வரைதான். சிலசமயம் சில ரொம்பவே அடம் பிடிக்கும். அப்புறம் சர்வீஸ் என்ஜீனியர்கள் வந்து வேறு ஒன்றை வைத்து விடுவார்கள்.

எங்கள் வீட்டு கம்ப்யூட்டரை சரி பார்க்கும்  சர்வீஸ் சென்டர்காரர்களும் வேறு மானிட்டரை வைக்க வேண்டும் என்றார்கள். நான் முன்பு இருந்த COMPAQ  கம்பெனி மானிட்டரையே வைக்கச் சொன்னேன். அவர்களோ DELL 21.5 மானிட்டர்தான் தங்களிடம் கிடைக்கும் என்று சொல்லி அதனை வைத்து விட்டார்கள் விட்டாலாச்சாரியா படத்தில் வருவது போல, இப்போது எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் DELL மானிட்டரும் COMPAQ – CPU வும் உள்ளன. கம்ப்யூட்டரும் வேகமாக செயல்படுகிறது. எல்லாம் நன்மைக்கே. கடந்த இரண்டு வார காலமாக விட்டுப்போன கம்ப்யூட்டர் பணிகளை முடிக்க வேண்டும்.

ஒரு வழியாக கம்ப்யூட்டருக்கு வந்த எல்லா பிரச்சினைகளும்  இப்போதைக்கு முடிந்துள்ளன. அலைகள் ஓய்வதில்லை. அடுத்து என்ன? (What is next?) 


                    (ALL PICTURES THANKS TO GOOGLE)   
30 comments:

 1. #அடுத்து என்ன?#
  மலை போல் வரும் துன்பங்கள் யாவும் பனி போல் விலகிவிடும் என்று ஆடிப் பாடுங்கள் :)
  த ம 1

  ReplyDelete
 2. அடுத்து என்ன? (What is next?)

  மளமளவென்று என் பதிவுகளுக்கு வருகை தந்து கருத்துச்சொல்லுங்கோ, அதுவே இப்போதைக்குப் போதும். :)

  கணினியோடு தங்களின் அனுபவங்கள் சுவாரஸ்யமாக உள்ளன. பாராட்டுக்கள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
 3. பரவாயில்லையே... நண்பரே இதைக்கூட பதிவாக்கி விட்டீர்களே...
  அது சரி ”அக்கப்போர்” தெரியும் இதென்ன ”டக்கப்போர்”

  மானிட்டரின் தலையிலும், பக்கவாட்டிலும் ” என்னடா கண்ணு” என்று செல்லமாக தட்டினால். சரியாகி விடுமா ?இனிமேல் நானும் செய்து பார்க்கிறேன்
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 4. "டக் ஆப் வார்" தான் "டக்கப்போர்" ஆகியுள்ளது போலும். எப்படியோ பழனி கந்தன் (நான்தான்) கருணையினால் இப்போதைக்கு கம்ப்யூட்டர் நன்றாக இருக்கிறது. ஜமாயுங்கள்.

  ReplyDelete
 5. முதலில் பழனி ஐயாவிற்கு... இப்போது தங்களுக்கு... சிரமம் தான்...

  ReplyDelete
 6. // பொதுவாகவே இந்தியர்களுக்கு ஒரு நல்ல குணம். பொருட்களை உபயோகப் படுத்தும் விஷயத்தில் இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் காண்பவர்கள்.//

  சரியாய் சொன்னீர்கள்.

  தமிழில் தடங்கல் இல்லாமல் தட்டச்சு செய்ய http://bhashaindia.com/ilit/ இல் குறிப்பிட்டுள்ள Microsoft Indic Language Input Tool ஐ பதிவிறக்கம் (Download) செய்து உங்கள் கணினியில் நிறுவி பாருங்களேன். நான் கடந்த 5 ஆண்டுகளாக அந்த முறையில் தான் தமிழில் தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். எந்த வித பிரச்சினையும் இல்லை. .

  ReplyDelete
 7. ஆகா தொடர்ந்து பிரச்சினை மேல் பிரச்சினை வந்தால் என்ன செய்வது
  கடினம்தான்

  ReplyDelete
 8. சிரித்துக் கொண்டே சிரமங்களை வெல்கின்றீர்கள்!.. சொல்கின்றீர்கள்!..
  எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.. நானும் இப்படியே..
  அன்பின் சகோதரர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. வணக்கம்
  ஐயா
  நடந்த சம்பவத்தை இரசிக்கும்படி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் எல்லாம் நண்மைக்காக பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம5

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. அடாது மழை பெய்தாலும் விடாது நடக்கும் நாடகங்கள் போல எத்தனை இடர்கள் வந்தாலும் விடாது உங்கள் கணணியை பயன்படுத்தி வருவதற்கு பாராட்டுக்கள். உங்களது அனுபவத்திலிருந்து மற்றவர்களும் பாடம் கற்கலாம். டவுன்லோட் என்றாலே கொஞ்சம் யோசனையாகத்தான் இருக்கிறது. அதனால் அந்தப் பக்கமே போவதில்லை. இடர்களையும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள், அதற்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. எல்லோருக்கும் எப்போதும் ஏற்படும் பிரச்சினைகள் தான் என்றாலும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். மானிட்டர் ஆடும் அனுபவம் மட்டும் இன்னும் வரவில்லை.

  தமிழில் சுலபமாக எழுத வேறு ஒரு வழி இருக்கிறது. நான் இதைத்தான் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். பதிவிறக்கம் எல்லாம் செய்யத்தேவையில்லை.
  http://www.tamileditor.org/
  இப்படி டைப் அடித்தால் ஒரு பாக்ஸ் வரும். அதில் என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே டைப் அடிக்க வேண்டியது தான்.

  ReplyDelete
 12. மறுமொழி > Bagawanjee KA said...

  // #அடுத்து என்ன?# மலை போல் வரும் துன்பங்கள் யாவும் பனி போல் விலகிவிடும் என்று ஆடிப் பாடுங்கள் :) //

  சகோதரர் கே ஏ பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.


  ReplyDelete
 13. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! கருத்துரை தந்து பாராட்டியதற்கு நன்றி.

  // அடுத்து என்ன? (What is next?) மளமளவென்று என் பதிவுகளுக்கு வருகை தந்து கருத்துச்சொல்லுங்கோ, அதுவே இப்போதைக்குப் போதும். :) //

  உங்கள் துபாய் பயணக் கட்டுரைகளை நேற்று வரை படித்து. கருத்துரையும் தந்து விட்டேன்.

  ReplyDelete
 14. நண்பர் தேவகோட்டை கில்ல்ர்ஜி அவர்களுக்கு நன்றி.

  // பரவாயில்லையே... நண்பரே இதைக்கூட பதிவாக்கி விட்டீர்களே...அது சரி ”அக்கப்போர்” தெரியும் இதென்ன ”டக்கப்போர்” //

  திருச்சியில், ஏன் மதுரைப் பக்கமும் அக்கப்போர் என்பதை மாற்றி, டக்கப்போர் என்று சொல்வார்கள். (உ-ம்: இரண்டு பேருக்குள் ஒரே டக்கப் போர்) . கீழே அய்யா பழனி.கந்தசாமி அவர்கள் சொன்னதையும் கவனியுங்கள்.

  // மானிட்டரின் தலையிலும், பக்கவாட்டிலும் ” என்னடா கண்ணு” என்று செல்லமாக தட்டினால். சரியாகி விடுமா ?இனிமேல் நானும் செய்து பார்க்கிறேன் தமிழ் மணம் 2//

  வங்கிப் பணியின்போது கம்ப்யூட்டரை, ஒரு உயிருள்ள ஜீவனாகவே நாங்கள் பாவிப்போம்.


  ReplyDelete
 15. மறுமொழி > பழனி. கந்தசாமி said...

  // "டக் ஆப் வார்" தான் "டக்கப்போர்" ஆகியுள்ளது போலும். எப்படியோ பழனி கந்தன் (நான்தான்) கருணையினால் இப்போதைக்கு கம்ப்யூட்டர் நன்றாக இருக்கிறது. ஜமாயுங்கள். //

  ஆம் அய்யா! ஓடும் வரை ஓடட்டும். அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.


  ReplyDelete
 16. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  // முதலில் பழனி ஐயாவிற்கு... இப்போது தங்களுக்கு... சிரமம் தான்... //

  திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 17. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  // சரியாய் சொன்னீர்கள். //

  கருத்துரை தந்த அய்யா V.N.S அவர்களுக்கு நழ்ன்றி.

  // தமிழில் தடங்கல் இல்லாமல் தட்டச்சு செய்ய http://bhashaindia.com/ilit/ இல் குறிப்பிட்டுள்ள Microsoft Indic Language Input Tool ஐ பதிவிறக்கம் (Download) செய்து உங்கள் கணினியில் நிறுவி பாருங்களேன். நான் கடந்த 5 ஆண்டுகளாக அந்த முறையில் தான் தமிழில் தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். எந்த வித பிரச்சினையும் இல்லை. //

  தகவலுக்கு நன்றி. சென்று பார்க்கிறேன். பிரச்சினை NHM ரைட்டரில் இல்லை. பழசாகிப் போன, NEW VERSION டவுன்லோடுகளை ஏற்றுக் கொள்ளாத, எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில்தான். அடுத்த மாதம் வேறு ஒன்று புதிதாக வாங்கலாம் என்று இருக்கிறோம்.

  ReplyDelete
 18. . மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... (1, 2)

  // ஆகா தொடர்ந்து பிரச்சினை மேல் பிரச்சினை வந்தால் என்ன செய்வது கடினம்தான் தம 4 //

  சோதனை மேல் சோதனை. போதுமடா சாமி. கருத்துரை தந்த ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 19. மறுமொழி > துரை செல்வராஜூ said...

  // சிரித்துக் கொண்டே சிரமங்களை வெல்கின்றீர்கள்!.. சொல்கின்றீர்கள்!.. எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.. நானும் இப்படியே..அன்பின் சகோதரர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.. //

  வேறு ஒன்றுமில்லை. “இதுவும் கடந்து போகும்” என்ற நம்பிக்கைதான். அன்பு தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 20. மறுமொழி > ரூபன் said...

  கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்.

  ReplyDelete
 21. மறுமொழி > Ranjani Narayanan said...

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது வலைப்பக்கம் வந்து, கருத்துரை தந்த சகோதரிக்கு நன்றி.


  // டவுன்லோட் என்றாலே கொஞ்சம் யோசனையாகத்தான் இருக்கிறது //

  என்ற உங்கள் கருத்துரையை ஆமோதிக்கிறேன். இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக, எல்லாவற்றையும், இப்போதெல்லாம் நான் டவுன்லோட் செய்வது இல்லை

  ReplyDelete
 22. இத்தனை பெரிய போராட்டம் நடத்தி வென்றிருகிறீர்கள்:) அடுத்தடுத்து பதிவு போட்டு கலக்குங்க அண்ணா!

  ReplyDelete
 23. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

  // எல்லோருக்கும் எப்போதும் ஏற்படும் பிரச்சினைகள் தான் என்றாலும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். மானிட்டர் ஆடும் அனுபவம் மட்டும் இன்னும் வரவில்லை. //

  சகோதரி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

  // தமிழில் சுலபமாக எழுத வேறு ஒரு வழி இருக்கிறது. நான் இதைத்தான் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். பதிவிறக்கம் எல்லாம் செய்யத்தேவையில்லை.
  http://www.tamileditor.org/
  இப்படி டைப் அடித்தால் ஒரு பாக்ஸ் வரும். அதில் என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே டைப் அடிக்க வேண்டியது தான். //

  தகவலுக்கு நன்றி. எங்கள் கம்ப்யூட்டரில் Book Mark செய்து கொண்டேன்.

  ReplyDelete
 24. மறுமொழி > Mythily kasthuri rengan said...

  சகோதரி மைதிலி டீச்சரின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி.

  // இத்தனை பெரிய போராட்டம் நடத்தி வென்றிருகிறீர்கள்:) அடுத்தடுத்து பதிவு போட்டு கலக்குங்க அண்ணா! //

  புதிய தொழில் நுட்பங்களை முன்னிட்டு, இந்த பழைய கம்ப்யூட்டரோடு, வேறு ஒன்றும் புதிதாக வாங்கலாம் என்று இருக்கிறோம். உங்கள் வாழ்த்திற்கு நன்றி.  ReplyDelete
 25. என்எச்எம் ரைட்டரில் தாங்கள் சொன்ன குழப்பங்களை நானும் எதிர்கொண்டேன். தங்கள் பதிவு உதவியாக இருந்ததோடு, தெளிவுபடுத்தியது. நன்றி.

  ReplyDelete
 26. மறுமொழி > Dr B Jambulingam said...

  // என்எச்எம் ரைட்டரில் தாங்கள் சொன்ன குழப்பங்களை நானும் எதிர்கொண்டேன். தங்கள் பதிவு உதவியாக இருந்ததோடு, தெளிவுபடுத்தியது. நன்றி. //

  எனது அனுபவம் தங்களது ஒரு சந்தேகத்தை தெளிவு படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 27. நான் "இ-கலப்பை" தான் தொடர்ந்து உபயோகித்து வருகிறேன். பனிரண்டு வருடங்களாக. அவ்வப்போது அப்டேட் செய்து விடுவேன். மடிக்கணினியிலும் அதான்! கணினியிலும் அதான்! எனக்கு நன்றாகவே வேலை செய்கிறது. கணினி தான் இப்போக் கொஞ்சம் படுத்துகிறது! என்னனு பார்க்கணும்! :)

  ReplyDelete
 28. மற்றபடி கணினி தொல்லையெல்லாம் வழக்கம் போல் உள்ளதே! இணையமும் இப்போத் தனியார்! அதுவும் போயிட்டுப் போயிட்டுத் தான் வரும். அதைப் புகார் கொடுத்தால் வந்து பார்க்கும் சிறுவர் ஒரு அறைக்கு ஒரு மோடம் போடணும்னு சொல்றார். ஹிஹிஹிஹி! பிஎஸ் என் எல் மோடம் இருக்கிறச்சே ஒரே சமயத்தில் எங்க பையர் லாப்டாப், நான் லாப்டாப், மருமகள் ஐபாட் என வைத்துக் கொண்டு வேலை செய்வோம். :)

  ReplyDelete
 29. சில சமயங்களில் கணினி இப்படி பிரச்சனை தருவதுண்டு! ஆனாலும் விடாது முயற்சித்து ஒரு வழி செய்து விடுவது தான் எனது வழக்கம்! :)

  ReplyDelete