Sunday, 7 December 2014

தன் வினை தன்னைச் சுடும்


எனது மாமா ஒருவர் அட்வகேட் கடவுள் நம்பிக்கை மிகுந்தவர். சிவநெறி பக்தியாளர். சின்ன வயதில், நான் பள்ளி மாணவனாக இருந்தபோது அவரிடம் அடிக்கடி கேள்விகள் கேட்டு வாதம் செய்வேன். அவரும் இவன் சின்னப் பையன்தானே உனக்கு எதற்கு இந்தக் கேள்வி என்று நினைக்காது சலிக்காது பதில் சொல்லுவார். (வக்கீல் அல்லவா?)

என் கேள்விக்கென்ன பதில்?

ஒருமுறை அப்போது அவரிடம் நான் கேட்ட கேள்வி இதுதான். “ ஒருவன் குற்றவாளி என்று தெரிந்தும் , அவன் உங்களிடம் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட பிறகும் அவனுக்காக கோர்ட்டில் ஒரு வக்கீல் வாதாடி அவனைக் காப்பாற்றுவது எந்த விதத்தில் நியாயம்? குற்றவாளியைக் காப்பாற்றுவது சரியா?” என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் “ஒருவன் குற்றவாளி என்று தெரிந்தாலும்,, தன்னிடம் வந்த ஒருவனைக் காபபாற்ற வேண்டியது வக்கீல் தொழில் தர்மம். அந்த வக்கீல் அவனுக்காக வாதாடவில்லை என்றால் அவன் இன்னொரு வக்கீலிடம் போவான். அவ்வளவுதான். மேலும் எந்த ஒரு குற்றவாளியும் கோர்ட்டில் தண்டனையிலிருந்து தப்பித்தாலும் கடவுள் அளிக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இது உறுதி.  என்றார். அப்போது சில உதாரணங்களையும் சில தத்துவ விளக்கங்களையும் சொன்னார். அந்த வயதில் எனக்கு அவை அவ்வளவாக எனக்கு புரியவில்லை. இப்போது கேள்வி மட்டுமே மிஞ்சியது அவை நினைவில் இல்லை..

கௌரவம்  - திரைப்படம்:


நடிகர்திலகம் சிவாஜி கணேசன் (இரட்டை வேடங்களில்) நடித்த் ஒரு படம் “கௌரவம்.அந்த படத்தில் சிவாஜி ஒரு பெரிய அட்வகேட். (பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற வேடம்.) எந்த வழக்காக இருந்தாலும் தனது திறமையினால் ஜெயித்துக் காட்டுபவர். ஆனாலும் அவருக்கு ஜஸ்டிஸ் பதவி கிடைக்கவில்லை. எனவே அந்த வெறுப்பில், கொலைக் குற்றத்தை செய்த மோகன்தாஸ் (இந்த வேடத்தில் சுந்தரராஜன்) வழக்கில் தானாகவே ஆஜர் ஆகி, தனது வாதத் திறமையால் அவரை நிரபராதி என்று காப்பாற்றி விடுவார். தான் செய்த கொலைக் குற்றத்திலிருந்து தன்னைக் காப்பாறியதற்காக நன்றி சொல்ல சிவாஜியின் வீடு தேடி, சுந்தரராஜன் வருவார். அப்போது சிவாஜி பேசும் ஒரு வசனம்.  

மை டியர் யங் மேன்! சட்ட்த்திலிருந்து உன்னை காப்பாத்திட்டேன். ஆனா நீ செய்த காரியமே உன்னை சித்ரவதை செய்து அணு அணுவா கொன்னுடும். அதிலே இருந்து நீ தப்பவே முடியாது .... ... நீ இனிமே தப்பு ஏதாவது பண்ணுனே இந்த ஆத்து வாச படிய மிதிக்கவே கூடாது

அதே மோகன்தாஸ் (சுந்தரராஜன்) தான் செய்யாத ஒரு கொலையில், தான் மாட்டிக் கொண்டதாக  தன்னைக் காப்பாற்றும்படி பாரிஸ்டர் ரஜினிகாந்த்திடம் (சிவாஜி) இன்னொரு தடவை வருவார். வக்கீல் தொழில் தர்மம் அடிப்படையில் அவனது வழக்கை எடுத்துக் கொள்வார். அவர் எவ்வளவோ தனது திறமையைக் காட்டி வாதாடிய போதும் , ஒரு சின்ன சட்ட நுணுக்கத்தில் (LAW POINT) அவர் தோற்று விடுகிறார். அவரால் மோகன்தாஸைக் காப்பாற்ற முடியவில்லை.. செய்த தண்டனையில் தப்பிய ஒருவன், செய்யாத குறறத்திற்கு தண்டனை அடைகிறான்.

(இங்கு பாரிஸ்டராக நடித்த சிவாஜியை எதிர்த்து இளம் வக்கீலாக சிவாஜிக்கு இன்னொரு வேடம். (சிவாஜியை சிவாஜிதானே வெல்ல வேண்டும்? வேறொருவர் வரக் கூடாதே)

இந்த கௌரவம் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கியவர் வியட்நாம் வீடு சுந்தரம். இந்தக் கதை அவரது உறவினர் ஒருவரது சொந்தக்கதை; அதை சுந்தரம் சினிமாவுக்காக மாற்றி எழுதினார் என்று எனக்குத் தெரிந்த புத்தகக் கடை நண்பர் ஒருவர் சொன்னார். இந்த புத்தகக் கடைக்கு அடிக்கடி செல்லும்போது அவரது கடையில் உட்கார்ந்து பேசுவது வழக்கம். அப்போது அவர் சொன்ன தகவல் இது.

தண்டனை உண்டு.

நாம் சில விடை தெரியாத சில கேள்விகளுக்கு, நம் நாட்டு அரசியல்வாதிகளையும் மற்றும் நமது கண் முன்னே அடாது செய்யும் சிலரையும் வைத்து எடை போட்டுக் கொண்டு இருக்கிறோம். அதேபோல நாம் நல்லவராக நினைக்கும் ஒருவரை இன்னொருவர் கெட்டவர் என்கிறார். அவருக்கு துன்பம் வந்தால், இந்த நல்லவருக்கு இப்படி ஒரு சோதனையா என்று நாம் சொல்கிறோம். இன்னொருவரோ  அவன் செய்த பாவத்திற்கு அனுபவிக்கிறான் என்று அவரைப் பற்றி சொல்வதையும் கேட்டு இருக்கலாம். உண்மையில் அவரவர்கள் நன்றாக இருக்கிறார்களா இல்லையா என்பதனை அவரவர் வாழ்க்கையை கூர்ந்து பார்த்தால்தான் தெரியும். ஊரே கண்டு பயப்படும் ஒருவன் தனக்கு யாரோ செய்வினை செய்துவிட்டதாக உடம்பு முழுக்க மாந்திரீக கயிறுகள் கட்டிக் கொண்டு, பயந்து பயந்து வாழ்வதையும் காணலாம்.

எனவே யாராக இருந்தாலும் , குற்றம் செய்தவருக்கு ஏதோ ஒரு வழியில் நிச்சயம் தண்டனை உண்டு. இதனைத்தான் “ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் “ என்றும், “அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்என்றும் நம் முன்னோர்கள் சொன்னார்கள். சிலப்பதிகாரம் “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்று சொல்லுகிறது. முக்கியமாக “தன் வினை தன்னைச் சுடும் “ என்பது போல அவரவர் மனசாட்சியே அவரவரைக் கொல்லும்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்    -  ( திருவள்ளுவர் )

என்பது திருக்குறள்.

வலைப்பதிவர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தனது வலைத் தளத்தில் (http://karanthaijayakumar.blogspot.com) எழுதிய ஒரு கட்டுரையில் அவர் கேட்ட கேள்விக்கு நான் எழுதிய கருத்துரை இது.

// நண்பர்களே, எனக்கு ஒரு சந்தேகம், அடிக்கடித் தோன்றிக் கொண்டே இருக்கிறது. வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை.//

இந்த சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே உண்டு. விடை தெரியா கேள்விகளில் இதனையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.

இதே சந்தேகத்தை கவிஞர் கண்ணதாசன் அவர்களும் எழுப்பி அதற்கு சில விளக்கமும் அர்த்தமுள்ள இந்து மதம் - 10 ஆவது பாகத்தில், நூலின் இறுதி அத்தியாயத்தில் தந்துள்ளார். ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் மன பக்குவத்தைப் பொறுத்தது.

( ALL PICTURES THANKS TO GOOGLE)

50 comments:

 1. அருமையான பதிவு ஐயா
  ///ஊரே கண்டு பயப்படும் ஒருவன் தனக்கு யாரோ செய்வினை செய்துவிட்டதாக உடம்பு முழுக்க மாந்திரீக கயிறுகள் கட்டிக் கொண்டு, பயந்து பயந்து வாழ்வதையும் காணலாம்.///
  உண்மைதான் ஐயா
  நன்றி

  ReplyDelete
 2. அவரவர் மனச்சாட்சியே சரியான நீதிபதி... தரும் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது...

  ReplyDelete
 3. கௌரவம் படம் இதுவரை முழுமையாக பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
  தவறு செய்பவர்களுக்கு வேறு ஒரு வகையில் தண்டனை கிடைத்து விடுகிறது என்பது பலருடைய அனுபவங்கள் சொல்கின்றன.

  ReplyDelete
 4. ‘உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கவேண்டும். தப்பு செய்தால் தண்டனை பெறவேண்டும்.’ என்பது பழமொழி. எனவே தப்பு செய்தவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்தாலும், அவர்களது மனச்சாட்சியே அவர்களை தண்டித்துவிடும்.

  ReplyDelete
 5. தவறு செய்பவர்களுக்குத்தணடனை கிடைத்தால் சரிதான்..

  ReplyDelete
 6. அய்யா,
  வணக்கம்.
  உங்களுக்கு மட்டுமல்ல. வள்ளுவனுக்கும் விடை தெரியாத கேள்விதான் இது,

  “ அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
  கேடும் நினைக்கப் படும் “

  என்றும் வள்ளுவனாலேயே தீர்வு சொல்ல முடியாத குறளின்பொருள்,

  “வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை“

  என்பதுதானே?

  பதிவு வழக்கம் போல அருமை அய்யா!

  த ம 4

  ReplyDelete
 7. தவறு செய்பவர்களுக்கு மன சாட்சியும் இருப்பதில்லையே ஐயா....

  ReplyDelete
 8. தர்மத்தின் முன்னிலையில் - யாராக இருந்தாலும் , குற்றம் செய்தவருக்கு ஏதோ ஒரு வழியில் நிச்சயம் தண்டனை உண்டு. அதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.

  அந்தத் தண்டனை -
  ஊரறியவும் கிடைக்கலாம். அல்லது - உளமறியவும் கிடைக்கலாம்.

  எல்லாமும் எல்லாருக்கும் வெளிப்படையாகத் தெரிய வேண்டிய அவசியமில்லை!..

  ஒருவரும் அறியமாட்டார்கள் என்று பெருந்தவறு ஒன்றைச் செய்தாலும் - ஊழ்வினை நிச்சயம் உறுத்து வந்து ஊட்டும். அந்த வேளையில் துயரமும் கண்ணீரும் கடலை விடப் பெரிதாக இருக்கும்!..

  அர்த்தமுள்ள இந்து மதத்தில் (எந்த பாகத்தில் என்பது நினைவில் இல்லை) - கவியரசரும் அன்பில் தர்மலிங்கம் அவர்களும் - தூக்கு தண்டனைக் கைதியைச் சந்தித்த நிகழ்வினைக் குறிப்பிட்டுள்ளதையும் நினைவு கூர விரும்புகின்றேன்.

  தாங்கள் சொல்வதுபோல -
  ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் மன பக்குவத்தைப் பொறுத்தது.

  நல்லதொரு பதிவு.. வாழ்க நலம்!..

  ReplyDelete
 9. தப்பு செய்யும்போது போதையில் இருந்திருக்கலாம் ,போதை தெளியும் போது, மனசாட்சி உறுத்தும் ,உயிருடன் இருக்கும்வரை மனசாட்சியும் இருக்கும் என நம்புகிறேன் !
  த ம 5

  ReplyDelete
 10. அருமையான பதிவு.
  செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் என்பது தான் உண்மை.

  ReplyDelete
 11. / நண்பர்களே, எனக்கு ஒரு சந்தேகம், அடிக்கடித் தோன்றிக் கொண்டே இருக்கிறது. வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை.//


  சிலப்பதிகாரத்தில் கோவலன் படும் துன்பத்திற்கு காரணம் மாடலன் சொல்வது போல் இந்தபிறவியில் நல்லது தான் செய்தாய் நீ , போன பிறவியில் செய்த துன்பத்திற்கு கஷ்டப்படுகிறாய் என்பது போல்,
  இந்த பிறவியில் துன்பபடுவதற்கு போன பிறவியின் வினைபயன் என்று தான் கொள்ளவேண்டும்.

  ReplyDelete
 12. பல விளக்கங்களுடன் உள்ள நல்ல
  வரிகளிற்கு மிக நன்றி
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 13. குற்றம் புரிந்தவன் தண்டனையை எவ் வகையிலேனும் பெறுவான்!

  ReplyDelete
 14. தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே... மனசாட்சிக்கு பயந்து வாழ்பவன் நிச்சயமாக நியாயமான வழியிலேயே போக முடியும் நண்பரே... இது எக்காலத்துக்கும் எல்லா மதமனிதனுக்கும் பொருந்தும்
  (சிவாஜியை சிவாஜிதானே வெல்ல வேண்டும்? வேறொருவர் வரக் கூடாதே) இந்த வரிகளை ரசித்தேன். வாழ்த்துகள் த.ம.9

  ReplyDelete
 15. சைவ சித்தாந்தத்தில் சஞ்சிதம், ஆகாமியம், பிராரத்தம் என்ற மூன்று வகை வினைகள் உண்டு. அவ்வாறான வினைகளை எவரும் எதிர்கொண்டே ஆகவேண்டும். இது இயற்கை நியதி.

  ReplyDelete
 16. நீங்கள் எழுதியிருக்கிற எல்லாம் மிடில்க்கிளாஸ்களுக்கே எனத்தோணுகிறது.இங்கே மத்தியமர்களின் மனசாட்சியும்,இல்லாதவனின் மனசாட்சியும் மிகப்பெரியதாய்,,,/

  ReplyDelete
 17. ‘தன் வினை தன்னைச் சுடும்’ என்பது சந்தேகமற நிரூபிக்கப்பட்டால் குற்றம் செய்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு நிரூபிப்பது இன்றளவும் சாத்தியப்படவில்லை என்பதே என்னுடைய கருத்தும். காரணம், இன்றளவும் அத்தகையோர் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை.

  சான்றோர்களின் கருத்துகளை முன்வைத்து மிகச் சிறப்பாக ஆராய்ந்திருக்கிறீர்கள். தொடர்ந்து சிந்திக்கத் தூண்டும் தரமான பதிவு.

  ReplyDelete
 18. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

  // அருமையான பதிவு ஐயா ///ஊரே கண்டு பயப்படும் ஒருவன் தனக்கு யாரோ செய்வினை செய்துவிட்டதாக உடம்பு முழுக்க மாந்திரீக கயிறுகள் கட்டிக் கொண்டு, பயந்து பயந்து வாழ்வதையும் காணலாம்./// உண்மைதான் ஐயா நன்றி தம 1 //

  நான் இதனைக் கண்கூடாக கண்டதால்தான் இவ்வாறு எழுதினேன்.

  எனது பதிவுகளுக்கு தொடர்ந்து ஆதரவும், தமிழ்மணத்தில் வாக்கும் அளித்து, என்னை ஊக்குவிக்கும், ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 19. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  // அவரவர் மனச்சாட்சியே சரியான நீதிபதி... தரும் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது... //

  நன்றி சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே. உங்கள் பாணியிலேயே சொல்வதென்றால்
  “நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி – அது
  நீதி தேவனின் அரசாட்சி”

  ReplyDelete
 20. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

  // கௌரவம் படம் இதுவரை முழுமையாக பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தவறு செய்பவர்களுக்கு வேறு ஒரு வகையில் தண்டனை கிடைத்து விடுகிறது என்பது பலருடைய அனுபவங்கள் சொல்கின்றன. //

  சகோதரர் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. சிவாஜியின் நடிப்பு, வியட்நாம் வீடு சுந்தரத்தின் நறுக்குத் தெரித்த வசனங்கள் கொணட கௌரவம் ஒரு நல்ல படம். சந்தர்ப்பம் அமையும்போது அவசியம் பாருங்கள்.

  ReplyDelete
 21. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  // ‘உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கவேண்டும். தப்பு செய்தால் தண்டனை பெறவேண்டும்.’ என்பது பழமொழி. எனவே தப்பு செய்தவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்தாலும், அவர்களது மனச்சாட்சியே அவர்களை தண்டித்துவிடும். //

  உண்மைதான் அய்யா. இந்த பதிவினை எழுதும்போது ஒரு பழமொழி, ஒரு பழமொழி என்று மனம் அரித்துக் கொண்டே இருந்தது. சட்டென்று நினைவுக்கு வரவில்லை. இந்த பழமொழியை நினவூட்டிய தங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 22. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

  // தவறு செய்பவர்களுக்குத்தணடனை கிடைத்தால் சரிதான்.. //

  ஆன்மீகப் பதிவரான சகோதரியின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 23. மறுமொழி > ஊமைக்கனவுகள். said...

  கருத்துரை ஆசிரியர் ஜோசப் விஜு அவர்களுக்கு நன்றி!

  // அய்யா, வணக்கம். உங்களுக்கு மட்டுமல்ல. வள்ளுவனுக்கும் விடை தெரியாத கேள்விதான் இது, //
  வள்ளுவராலேயே முடியாது எனும்போது நானெல்லாம் எம்மாத்திரம்?

  // “ அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான
  கேடும் நினைக்கப் படும் “

  என்றும் வள்ளுவனாலேயே தீர்வு சொல்ல முடியாத குறளின்பொருள், “வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை“ என்பதுதானே? //

  ஒரு அருமையான திருக்குறளை மேற்கோளாகக் காட்டி என்னை இன்னும் யோசிக்க வைத்து விட்டீர்கள்.

  // பதிவு வழக்கம் போல அருமை அய்யா! த ம 4 //

  சகோதரரின் பாராட்டிற்கு நன்றி.

  ReplyDelete
 24. மறுமொழி > ezhil said...

  // தவறு செய்பவர்களுக்கு மன சாட்சியும் இருப்பதில்லையே
  ஐயா.... //

  இதனை மறுக்கிறேன் சகோதரி! பெரியாரின் தீவிர அன்புத் தொண்டர்களான திருவாரூர் தங்கராசு அவர்களின் கதை வசனத்தில், நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த புரட்சிகரமான “இரத்தக் கண்ணீர்” படத்தில் வரும் ஒரு பாடலின் முதல் வரி

  “ குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்
  நிம்மதி கொள்வதென்பதேது ”

  என்பதாகும். (பாடல்: தஞ்சை ராமையாதாஸ்) இதன் மையக் கருத்து எது என்பது சொல்லாமலே விளங்கும்.

  ReplyDelete
 25. "சிரித்துக் கொண்டே தவறு செய்யும் யாரும்
  அழுது கொண்டே தண்டனை பெற நேரும்"
  -என்று பாடகர் காயல் ஏ. ஆர். ஷேக் முகமது பாடிய
  பாடல் நினைவுக்கு வருகிறது உங்கள் பதிவைப் படித்து!

  (இந்த வரிகளை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை.)

  ReplyDelete
 26. மறுமொழி > துரை செல்வராஜூ said...

  சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் ஆழமான கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 27. மறுமொழி > Bagawanjee KA said...

  நகைச்சுவையாய் கருத்துரை தந்த ஜோக்காளி கே.ஏ.பகவான்ஜி அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 28. மறுமொழி > கோமதி அரசு said... (1, 2 )

  இலக்கிய மேற்கோள்களுடன் கருத்துரை தந்த சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 29. மறுமொழி > G.M Balasubramaniam said... ( 1 )

  அய்யா G.M.B அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.

  // என் பதிவு ஒன்றில் நான் இப்படி எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது

  /நான்:- மக்களிடம், உன்னை ஆச்சரியப் படுத்துவது எது.?
  கடவுள்:-கஷ்டங்களை அனுபவிக்கும்போது “ ஏன் எனக்கு “
  என்பவர்கள் வளர்ச்சி யடைகையில் ”எனக்கு ஏன் “ என்று
  கேட்பதேயில்லை. உண்மை அவர்கள் பக்கம் இருப்பதை
  விரும்புவோர் அநேகர். உண்மையின் பக்கம் இருப்பதை
  விரும்புவோர் சிலரே./ //

  கேள்வி – பதில் அடிப்படையில் நீங்கள் எழுதிய பதிவுகளைப் படைத்தது நினைவுக்கு வருகிறது.

  // மன சாட்சி என்பதெல்லாம் ஏதும் இல்லை. எந்தச் செயலையும் செய்பவனும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்வதாகத்தான் கூறுவான்.மன சாட்சி ஆளுக்கு ஆள் வேறுபடும். எல்லோருக்கும் பொதுவான அளவுகோல் அதில் இல்லை.மற்றபடி ஊழ்வினை என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விக்கான சப்பைக் கட்டுகளே. //

  இது உங்கள் கருத்து. இதிலிருந்து நான் மாறுபடுகின்றேன். வள்ளுவர், இளங்கோ அடிகள், பட்டினத்தார் போன்ற ஞானிகள் சொன்னதையே இங்கு பிரதிபலித்தேன்.

  ReplyDelete
 30. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

  // அருமையான பதிவு. த.ம. 7.... //

  சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 31. மறுமொழி > kovaikkavi said...

  // பல விளக்கங்களுடன் உள்ள நல்ல வரிகளிற்கு மிக நன்றி//

  சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 32. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

  புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 33. மறுமொழி > KILLERGEE Devakottai said...

  நன்கு ரசித்து கருத்துரை தந்த, நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 34. மறுமொழி > Dr B Jambulingam said...

  // சைவ சித்தாந்தத்தில் சஞ்சிதம், ஆகாமியம், பிராரத்தம் என்ற மூன்று வகை வினைகள் உண்டு. அவ்வாறான வினைகளை எவரும் எதிர்கொண்டே ஆகவேண்டும். இது இயற்கை நியதி. //

  முனைவர் அய்யாவின் சைவ சித்தாந்த நெறியுடன் சொன்ன கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 35. மறுமொழி > Vimalan Perali said...

  சகோதரரின் கருத்துரைக்கு நன்றி.

  // நீங்கள் எழுதியிருக்கிற எல்லாம் மிடில்க்கிளாஸ்களுக்கே எனத் தோணுகிறது. இங்கே மத்தியமர்களின் மனசாட்சியும், இல்லாதவனின் மனசாட்சியும் மிகப்பெரியதாய்,,,/ //

  ஞானிகள் தங்கள் கருத்துரைகளை, மனிதன், மனித வாழ்க்கை என்ற பொதுவான கருத்தின் அடிப்படையிலேயே சில கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார்கள். இதில் ஹை கிளாஸ், மிடில் கிளாஸ் , லோ கிளாஸ் என்று பிரிக்கவில்லை. அய்யா G.M.B அவர்களுக்குச் சொன்ன, “ வள்ளுவர், இளங்கோ அடிகள், பட்டினத்தார் போன்ற ஞானிகள் சொன்னதையே இங்கு பிரதிபலித்தேன்.” என்ற பதிலையே இங்கும் சொல்ல விரும்புகிறேன்.

  ReplyDelete
 36. மறுமொழி > 'பசி’பரமசிவம் said...

  சகோதரர் 'பசி’பரமசிவம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  // ‘தன் வினை தன்னைச் சுடும்’ என்பது சந்தேகமற நிரூபிக்கப்பட்டால் குற்றம் செய்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு நிரூபிப்பது இன்றளவும் சாத்தியப்படவில்லை என்பதே என்னுடைய கருத்தும். காரணம், இன்றளவும் அத்தகையோர் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை.//

  இன்றைய காலகட்டத்தில் குற்றம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைவா அல்லது அதிகமாக என்பது இந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் செய்யும் மிகைப்படுத்தலைப் பொறுத்தே இருக்கிறது.

  உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் மறைந்து இருக்கும் சில உண்மைகளைக் கண்டறிந்தாலே “ தன் வினை தன்னைச் சுடும் ” என்பதன் நம்பகத் தனமையை நாம் தெரிந்து கொள்ளலாம். தன்னைச் சுற்றி இவ்வளவு மரணங்கள் நிகழ்ந்தபோதும், அந்த பயமே இல்லாத மனிதனின் அதிசய குணத்தைப் பற்றி, தருமர் அதிசயித்ததாக சொல்லும் மகாபாரத காட்சியை இங்கு ஒப்பிட்டுப் பாருங்கள். எனவே குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

  காதுள்ளவன் கேட்கக்கடவன் என்ற அடிப்படையிலேயே இயேசுநாதர் போன்ற இறைத்தூதர்கள் அல்லது ஞானிகள் தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள்.

  // சான்றோர்களின் கருத்துகளை முன்வைத்து மிகச் சிறப்பாக ஆராய்ந்திருக்கிறீர்கள். தொடர்ந்து சிந்திக்கத் தூண்டும் தரமான பதிவு. //

  தங்களின் மேலான பாராட்டுரைக்கு நன்றி. விரைவில் உங்கள் வலைத்தளம் வந்து பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 37. பல முறை நானும் இதை பார்த்திருக்கிறேன். செய்த தவறுக்கு கட்டாயம் தண்டனை உண்டு என்ற உங்கள் கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன்.

  ReplyDelete
 38. அய்யா G.M.B அவர்களின் கருத்துரை தவறுதலாக நீக்கம்(DELETE) ஆகி விட்டது. மேலே அய்யாவின், கருத்துரையையும், எனது மறு மொழியையும் கொடுத்துள்ளேன். இருந்த போதிலும் G.M.B அவர்கள் தவறாக ஏதும் நினைத்து விடக் கூடாது என்பதற்காக எனது GMAIL இல், INBOX இல் நிற்கும் அவரது கருத்துரையை, இங்கு தருகிறேன்.

  G.M Balasubramaniam has left a new comment on your post "தன் வினை தன்னைச் சுடும்":

  என் பதிவு ஒன்றில் நான் இப்படி எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது/நான்:- மக்களிடம், உன்னை ஆச்சரியப் படுத்துவது எது.?

  கடவுள்:-கஷ்டங்களை அனுபவிக்கும்போது “ ஏன் எனக்கு “
  என்பவர்கள் வளர்ச்சி யடைகையில் ”எனக்கு ஏன் “ என்று
  கேட்பதேயில்லை. உண்மை அவர்கள் பக்கம் இருப்பதை
  விரும்புவோர் அநேகர். உண்மையின் பக்கம் இருப்பதை
  விரும்புவோர் சிலரே./

  மன சாட்சி என்பதெல்லாம் ஏதும் இல்லை. எந்தச் செயலையும் செய்பவனும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்வதாகத்தான் கூறுவான்.மன சாட்சி ஆளுக்கு ஆள் வேறுபடும். எல்லோருக்கும் பொதுவான அளவுகோல் அதில் இல்லை.மற்றபடி ஊழ்வினை என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விக்கான சப்பைக் கட்டுகளே.

  ReplyDelete
 39. இந்த பயம் கொள்ளையடிக்கும் அரசியவாதிங்க மனசில இருந்தா மக்கள் நிம்மதியா இருந்திருப்பாங்க, ஆனா இல்லியே...........

  ReplyDelete
 40. நண்பர்களே, எனக்கு ஒரு சந்தேகம், அடிக்கடித் தோன்றிக் கொண்டே இருக்கிறது. வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை.//

  தீயவர்கள் நலமாய் இருப்பது போலத் தோன்றும். ஆனால் அவர்களுக்கும் தண்டனை கிடைக்கத்தான் செய்கிறது. அவர்கள் அதை உணருவதில்லை. அவர்களது இளைய தலைமுறையை இவர்களது பாவங்கள் நிச்சயம் தாக்கும். சந்தேகமேயில்லை. நமக்கு வரும் வலியை நாம் தாங்கிக் கொள்வோம். ஆனால் நம் குழந்தைகளுக்கு சின்ன வலி என்றால் கூட நாம் எப்படி பதறுகிறோம், இல்லையா? அதேபோலத் தான் இவர்களது பாவங்களுக்கு இவர்களுக்கு பிறந்தவர்கள் அனுபவிக்கும்போது இவர்கள் தங்கள் தவறுகளை உணருவார்கள் என்று இறைவன் இப்படி தண்டனை கொடுக்கிறான் என்று எனக்குத் தோன்றும்.

  ReplyDelete
 41. குற்றங்கள் இழைத்தவனுக்கு தண்டணைகள் உண்டு என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை! மிகச்சிறப்பான பதிவு! நன்றி!

  ReplyDelete
 42. மறுமொழி > அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

  // "சிரித்துக் கொண்டே தவறு செய்யும் யாரும்
  அழுது கொண்டே தண்டனை பெற நேரும்"
  -என்று பாடகர் காயல் ஏ. ஆர். ஷேக் முகமது பாடிய
  பாடல் நினைவுக்கு வருகிறது உங்கள் பதிவைப் படித்து!
  (இந்த வரிகளை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை.) //

  ஒரு பாடலின் மேற்கோள்களோடு கருத்துரை தந்த சகோதரர் அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 43. மறுமொழி >bandhu said...

  // பல முறை நானும் இதை பார்த்திருக்கிறேன். செய்த தவறுக்கு கட்டாயம் தண்டனை உண்டு என்ற உங்கள் கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன். //

  கருத்துரை தந்த சகோதரர் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 44. மறுமொழி >Jayadev Das said...

  // இந்த பயம் கொள்ளையடிக்கும் அரசியவாதிங்க மனசில இருந்தா மக்கள் நிம்மதியா இருந்திருப்பாங்க, ஆனா இல்லியே........... //

  கொள்ளையடிக்கும் அரசியல்வாதிக்கு, இந்த பயம் அல்லது தெளிவு வர வேண்டிய நேரத்தில் காலமே உணர்த்தி விடும். என்ன, அதற்குள் இன்னொரு ஆசாமி அல்லது வாரிசு வந்து விடுவான். அப்பன் செய்த தப்பிற்கு தண்டனையாக அவன் பிள்ளை படும்போது உணருவான்.

  ReplyDelete
 45. மறுமொழி > Ranjani Narayanan said...

  சகோதரி அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி. உங்களுடையை கருத்தை அப்படியே ஒத்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 46. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

  சகோதரர் அவர்களுக்கு நன்றி

  ReplyDelete
 47. கண்ணதாசன் எழுதியுள்ளவற்றை ஒரு தனிப்பதிவாக தந்து விடலாமே?

  ReplyDelete
 48. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

  கருத்துரை தந்த சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி. அலைச்சல் காரணமாக மறுமொழி சொல்ல தாமதம் ஆகி விட்டது, மன்னிக்கவும்.

  // கண்ணதாசன் எழுதியுள்ளவற்றை ஒரு தனிப்பதிவாக தந்து விடலாமே? //

  கவிஞர் கண்ணதாசன் எழுதியுள்ள அனைத்தையும் ஒரே சமயத்தில், ஒருவரே சொன்னால் திகட்டிவிடும். அப்போதைக்கு அப்போது கவிஞரை ரசிப்பதுதான் நல்லது.

  ReplyDelete