Sunday 15 June 2014

சிந்துபாத்



வலைப்பதிவில் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து இந்த தலைப்பில் எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. காரணம் சின்ன வயதில் படித்த கதைகளில் மறக்க முடியாத சிந்துபாத் என்ற கதாபாத்திரமும் ஒன்று.

கன்னித்தீவு:

எனக்கு சிந்துபாத்தை அறிமுகம் செய்து வைத்தது தினத்தந்திதான். அப்போதுதான் பள்ளியில் முதலாம் வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்பு படிக்கத் தொடங்கிய சமயம். பாடப்படிப்பு அல்லாத ஒன்றை எழுத்துக் கூட்டி படித்த பத்திரிகை எது என்றால் அது தினத்தந்திதான். காலையில் தினத்தந்தி வந்தவுடன் முதல் ஆளாக முதலில் படித்தது இரண்டாம் பக்கத்தில் உள்ள கன்னித்தீவு படக்கதைதான். அதில் வரும் சிந்துபாத்தின் சாகசங்கள் அப்போதைய வயதில் படிக்க ரொம்பவும் பிரமிப்பாக இருக்கும். ஆரம்பத்தில் தினத்தந்தியின் இரண்டாம் பக்கத்தில் சிந்துபாத்தின் மூலக் கதையை அப்படியே படக்கதையாக தொடர்ந்து வெளியிட்டார்கள்.  ஓவியர் கணு என்பவர் படங்களை வரைந்தார். பிறகு பாலன் போன்றவர்கள் வரைந்தனர். எல்லாம் கறுப்பு வெள்ளை படங்கள்தான். இப்போது வண்ணப் படங்களாக இந்த கதை வருகிறது. அப்புறம் சிந்துபாதின் ஏழு பயணங்களும் முடிந்த பிறகு கதை என்பது வேறு திசையில் கற்பனையாக வந்து கொண்டு இருக்கிறது. ஒரு சாதனைக்காக நிறையபேர் இந்த கதையை மாறி மாறி இன்றுவரை தொடர்ந்து எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். 1960 இல் தொடங்கிய இந்த படக்கதைக்கு, இன்றைக்கு (15.06.2014) தொடரும் சி:19188 என்று போட்டு இருக்கிறார்கள். அதாவது 19188 ஆவது நாளாக தினத்தந்தியில் கன்னித்தீவு கதை வந்து கொண்டு இருக்கிறது.


இந்தக் கதையை வைத்து நிறைய விஷயங்களில் மற்றவர்களை கிண்டலடிப்பது வழக்கம். பிரச்சினைகள் அல்லது வழக்குகள் வழ வழ என்று  இழுத்துக் கொண்டே போனால் தினத்தந்தி கன்னித்தீவு மாதிரி போகிறது என்பார்கள். இந்த கதையை புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். இந்த கதையில் வரும் சிந்துபாத், லைலா, மூசா மந்திரவாதி இவர்களை மறக்க முடியாது. நானும் படித்து முடித்து வேலையில் சேர்ந்து ஓய்வும் பெற்று விட்டேன். இன்னும் லைலா அப்படியே குள்ளமாகவே இருக்கிறாள். அவளுக்கு எப்போது முழு வடிவம் கிடைக்கும்? வருகின்ற தலைமுறைதான் பதில் சொல்ல வேண்டும்.

அரேபிய இரவுகள்:

உயர்நிலை பள்ளியில் படிக்கும் போது சிந்துபாத்தின் கடல்பயணங்கள் “ என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான நூல் கிடைத்தது. அப்புறம் ஆயிரத்தோரு இரவு அராபியக் கதைகளில் சிந்துபாத்தின் சாகசங்களை மனக் கண்ணில் ரசிக்க முடிந்தது.

படம் மேலே - சிந்துபாத் பாக்தாத் நகர வியாபாரி. தனது வியாபாரத்தைப் பெருக்க அடிக்கடி கப்பலில் பயணம் செய்பவன். அவன் பயணம் செய்த போது பலமுறை கப்பல் உடைந்து ஆளில்லாத தீவுகளில் ஒதுங்குகிறது. அப்போது  தனக்கு ஏற்பட்ட பல திகிலான அனுபவங்களை நண்பர்களிடம் சொல்லுகிறான்.

படம் மேலே ஒருமுறை கடற் பயணத்தின் போது வழியில் ஒரு தீவு. கப்பலில் சென்ற எல்லோரும் இளைப்பாற இறங்குகின்றனர். மீண்டும் செல்லும் போது சிந்துபாத் தூங்கிவிட அவனை அங்கேயே விட்டு விட்டு  மற்றவர்கள் கப்பலில் சென்று விடுகின்றனர். கோட்டைச் சுவர் போல  இருக்கும் ரூக் என்ற ராட்சதப் பறவையின் முட்டையைப் பார்க்கிறான். இரவு அந்த முட்டையில் வந்து அமரும் ரூக் பறவையின் கால்களில் தன்னைக் கட்டிக் கொள்கிறான். காலையில் அது பறக்கும் போது அவனும் தப்பிக்கிறான்
..
படம் மேலே: ஐந்தாவது கடற் பயணத்தின் போது ஆள் இல்லாத தீவு ஒன்றில் கிழவன் ஒருவன் மீது இரக்கம் ஏற்பட்டு தனது முதுகில் ஏற்றிக் கொள்கிறான். ஆற்றைக் கடந்து  இறங்கச் சொன்னால் அவன்  மறுக்கிறான். அந்த கிழவனிடமிருந்து எப்படி மீண்டான் என்று ஒரு கதை.

படம் மேலே -ஆறாவது கடற் பயணத்தின் போது கப்பல் திசைமாறி ஒரு தீவில் ஒதுங்குகிறது. அங்கு மணலில் கிடக்கும் மாணிக்கக் கற்களை மூட்டை கட்டுகிறான். பின்னர் ஒரு தெப்பம் செய்து அதன் மூலம் அந்த தீவை விட்டு ஒரு ஆற்றின் வழியே வெளியேறுகிறான்.
  
குரங்குகள் தீவு , அவலட்சணமான பூதம் , நரமாமிசம் உண்ணும் காட்டு மிராண்டிகள், மரணக் கிணறு, கடற் கொள்ளையர்கள், யானைகள் கல்லறை என்று சிந்துபாத் செய்த ஏழு கடற்பயணங்களும் சாகசங்களாகச் செல்லுகின்றன. உண்மையிலேயே அவை  பிரமிப்பானவைதான். அந்தகாலத்து அராபியக் கதைகளை ரசித்துப் படிப்பதே தனி சுகம்தான்.

ஹாலிவுட் படங்கள்:

சிந்துபாதின் கடற் பயணங்களை  மையமாக வைத்து ஆங்கில திரைப் படங்களும் வந்தன.

Sinbad the Sailor (1947)
The Magic Voyage of Sinbad (1953)
The 7th Voyage of Sinbad (1958)
The Golden Voyage of Sinbad (1973)
Captain Sinbad (1963)
Sinbad and the Eye of the Tiger (1977)
Sinbad of the Seven Seas (1989)
Sinbad: Legend of the Seven Seas (2003)
Sinbad and the Minotaur (2010)
Sinbad: The Fifth Voyage (2011)
Sinbad: Beyond the Veil of Mists (2000)
Sinbad: The Fifth Voyage (2014)




ஆனால் திரைக்கதை என்பது முற்றிலும் மாறுபட்டது. சிந்துபாத் எதிர்கொள்ளும் மந்திரவாதியின் மந்திர தந்திரங்கள், வீரதீர செயல்கள் என்று கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றன.

படம் மேலே: Sinbad and the Eye of the Tiger (1977) படத்தில் ஒரு காட்சி


(PICTURES THANKS TO GOOGLE IMAGES)

படித்துவிட்டு தமிழ்மணத்தில் கணக்கு உள்ளவர்கள் மறக்காமல் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி!



44 comments:

  1. சிறு வயது இனிய நினைவுகள் ஞாபகங்கள் வந்தது ஐயா... அந்த சந்தோசமே தனி...

    அரேபிய இரவுகள் படங்கள் அருமை...

    ReplyDelete
  2. அந்த சின்ன வயதில் கன்னித்தீவு சிந்துபாத் கதையைப் படிப்பதில் இருந்த ஆர்வம் - பள்ளி வயதில் போய் விட்டது.

    ஆனாலும் உண்மை (!?) எது என அறியும் ஆவலில் நூலகத்தைக் குடைந்ததில் -
    தாங்கள் குறிப்பிட்டுள்ள சிந்துபாத்தின் கடல்பயணங்கள் என்ற புத்தகமும் ஆயிரத்தோரு இரவு அராபியக் கதைகளும் கிடைத்தன.

    நாங்கள் கூறுவது போல அரேபிய சாகசக் கதைகளை படிப்பது அலாதியான சந்தோஷம் தான்..

    பழைய நினைவுகளில் - மனம் மகிழ்கின்றது. இனிய பதிவினுக்கு நன்றி..

    ReplyDelete
  3. கண்டிப்பாய்த் தங்களின் பதிவு பரவலாய் தமிழ் வாசிப்போரின் மனக்குழந்தையை வெளியிழுத்துப் போட்டிருக்கும். அதிலொன்று இங்கே கருத்திட்டுப் போகிறது.
    நன்றி!

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.!

    ReplyDelete

  5. சிந்துபாத் கதை, டாம்& ஜெர்ரி கார்ட்டூன் போல. எந்த வயதினரும் இரசிக்கலாம். தங்கள் பதிவைப் படித்தபின் இப்போது கூட சிந்துபாத் கதைகளை படிக்க மனம் விரும்புகிறது.எண்ண அலையை தூண்டிவிட்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. உண்மை ஒன்று சொல்லப் போனால் சிந்துபாத் கதைகளை நான் படித்ததே இல்லை. தினத் தந்தியில் படக்கதையாக வருவது தெரியும்

    ReplyDelete
  7. பல ஆண்டுகளுக்குப் படிக்காமல் விட்டுவிட்டுச் சிறிது நாட்களாக மறுபடியும் தினத்தந்தியில் படிக்கத்தொடங்கினேன். இப்போதும் நன்றாகத்தான் இருக்கிறது. காரணம் அதனைத் தொடர்ந்து எழுதும் பிரபல எழுத்தாளரின் கைவண்ணமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சொல்லியிருப்பதுபோல் முன்பு கணுவும் அதைத் தொடர்ந்து பாலனும் வரைந்தார்களே அந்த 'அழகு' இப்போதைய படங்களில் இல்லை. படங்கள் மிகவும் செயற்கையாக இருக்கின்றன.
    ஆங்கிலத்தில் வரைவதற்கு எடுத்துக்கொள்ளும் சிரத்தையில் ஒரு சதவீதம்கூட தமிழில் வரைகிறவர்கள் எடுத்துக்கொள்ளமாட்டார்கள் போலும். ஆங்கிலத்தில் வரும் தொடர்களைப் பாருங்கள் என்ன அற்புதமாக இருக்கின்றன. தமிழில் இப்படியெல்லாம் வரைகிறவர்கள் இல்லை.
    என்னவொன்று, அந்தக் கால அம்புலிமாமா வண்ணப்படங்களை நீண்ட நேரத்திற்குப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. நான் கூட சின்ன வயதில் தூங்கும் போது அடுத்த நாள் சிந்துபாத் என்ன செய்வான் இப்படிச் செய்வானோ அப்படிச் செய்வானோ என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பேன். பழைய நினைவுகளைக் கண் முன் நிறுத்திய பதிவு.

    ReplyDelete
  9. தந்தையர் தின வாழ்த்துக்கள் என் அன்புச் சகோதரனே !

    ReplyDelete
  10. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // அந்த சின்ன வயதில் கன்னித்தீவு சிந்துபாத் கதையைப் படிப்பதில் இருந்த ஆர்வம் - பள்ளி வயதில் போய் விட்டது. ஆனாலும் உண்மை (!?) எது என அறியும் ஆவலில் நூலகத்தைக் குடைந்ததில் - தாங்கள் குறிப்பிட்டுள்ள சிந்துபாத்தின் கடல்பயணங்கள் என்ற புத்தகமும் ஆயிரத்தோரு இரவு அராபியக் கதைகளும் கிடைத்தன. நாங்கள் கூறுவது போல அரேபிய சாகசக் கதைகளை படிப்பது அலாதியான சந்தோஷம் தான்.. //

    ஆமாம் அய்யா! கன்னித்தீவின் மீது ஆர்வம் பள்ளிப் படிப்போடேயே போய்விட்டதுதான். கட்டுரைக்காக சிந்துபாத்தின் ஏழு பயணங்களையும் மீண்டும் படித்தேன். இப்போதுதான் புதிதாகப் படிப்பது போல சுவாரஸ்யம்.

    // பழைய நினைவுகளில் - மனம் மகிழ்கின்றது. இனிய பதிவினுக்கு நன்றி.//

    சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > ஊமைக்கனவுகள். said...
    நண்பர் ஜோசப் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! உங்கள் பதிவில் தன்விவரம் (PROFILE) கொடுத்தால் உங்களுக்கும் எல்லோருக்கும் நல்லது. அல்லது பெயரை மட்டுமாவது தெரிவிக்கவும்.

    ReplyDelete
  13. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    கருத்துரை தந்த அய்யா வே.நடனசபாபதி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // உண்மை ஒன்று சொல்லப் போனால் சிந்துபாத் கதைகளை நான் படித்ததே இல்லை. தினத் தந்தியில் படக்கதையாக வருவது தெரியும் //

    இன்னும் நீங்கள் சிந்துபாத் கதைகளை படித்ததே இல்லை என்னும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அவசியம் படிக்கவும்.

    ReplyDelete
  15. மறுமொழி > Amudhavan said...

    அய்யா அமுதவன் அவர்களின் வருகைக்கும் அன்பான நீண்ட கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > அபயாஅருணா said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  17. மற்மொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said...

    // தந்தையர் தின வாழ்த்துக்கள் என் அன்புச் சகோதரனே ! //

    நானும் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன். சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  18. சிறுவயதில் தினத்தந்தி படித்தது ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே....
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  19. மிகவும் அருமையான சுவாரஸ்யமான நினைவலைகளைத் தட்டி எழுப்பியுள்ளீர்கள்.

    தினத்தந்தி கன்னித்தீவு நானும் அவ்வப்போது ஆர்வமாகப் படித்ததுண்டு.

    //ரச்சினைகள் அல்லது வழக்குகள் வழ வழ என்று இழுத்துக் கொண்டே போனால் தினத்தந்தி கன்னித்தீவு மாதிரி போகிறது என்பார்கள். //

    ஆமாம் ...... ஆமாம் .... அப்படித்தான் சொல்லுவார்கள்.

    சிந்துபாத் கதைகளும் நான் கொஞ்சம் படித்துள்ளேன். அழகிய படங்களுடன் அற்புதமாக பதிவு கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  20. இளமைக்கால நினைவலைகள் கிளர்ந்து எழுகின்றன ஐயா
    விவரம் புரியாமல் ஆர்வத்தின் காரணமாக, கன்னித் தீவு படக் கதையினை நாள்தோறும் வெட்டி எடுத்து சேர்த்த நாட்களும் உண்டு, பிறகுதான் தெரிந்தது, இன்னும் பல தலைமுறைகளை கழிந்தாலும், கதைமுடியாது என்பது.
    அருமையான பதிவு ஐயா
    நன்றி

    ReplyDelete
  21. சிந்துபாத் கதையை படிக்காதவர்களும் அதை விரும்பாதவர்களும் இருக்க முடியுமா என்ன? அதையும் அதுபோன்ற பல கதைகளையும் பிரபலப்படுத்திய தினத்தந்தியையும் மறக்க முடியுமா? அவற்றை மீண்டும் ஒருமுறை நினைவுக்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  22. நல்ல தகவல் அய்யா ...
    ரசித்துப் படித்தேன்.
    படங்கள் ஜோர்
    தம ஐந்து

    த.ம
    http://www.malartharu.org/2014/05/x-men-days-of-future-past.html

    ReplyDelete
  23. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    சகோதரர் கில்லர் ஜீ ,தேவகோட்டை அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  24. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ள V.G.K அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... (1, 2 )

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // இளமைக்கால நினைவலைகள் கிளர்ந்து எழுகின்றன ஐயா
    விவரம் புரியாமல் ஆர்வத்தின் காரணமாக, கன்னித் தீவு படக் கதையினை நாள்தோறும் வெட்டி எடுத்து சேர்த்த நாட்களும் உண்டு, பிறகுதான் தெரிந்தது, இன்னும் பல தலைமுறைகளை கழிந்தாலும், கதைமுடியாது என்பது. அருமையான பதிவு ஐயா
    நன்றி //

    நானும் உங்களைப் போல தினத்தந்தி கன்னித்தீவு படக்கதையை கத்தரித்து எடுத்து சேகரித்து வைத்ததும் உண்டு. ஆனால் எல்லாமே வீண்.

    ReplyDelete
  26. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    அய்யா டிபிஆர்.ஜோசப் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி > Mathu S said...

    சகோதரர் மலர்தரு S.மது அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  28. சிந்துபாத் கதையை படிக்க அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை.
    இத்தனை பேரைகவர்ந்திருப்பது ஒருசாதனைதான். அருமையாக விவரித்ததோடு தொட்ர்பான திரைப்படங்களப் பற்றிக் கூறியதும் பொருத்தம்
    சிறப்பான பதிவு

    ReplyDelete
  29. வணக்கம் நலம் தானே... பல நாட்களுக்கு பிறகு தங்களை காண வருகிறேன். அழகிய பழைய நினைவுகளை திரும்ப நினைவுபடுத்தும் படியான பகிர்வை பார்த்ததும் மகிழ்ந்தேன். நன்றிங்க.

    ReplyDelete
  30. சிந்துபாத் கதை வாசித்ததில்லை. ஆனால் இழுவையான நிகழ்வுகளுக்கு கன்னித்தீவு போல என்று உதாரணம் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இளவயதில் தங்களை ஈர்த்த சிந்துபாத் பற்றிய பல தகவல்களையும் படங்களோடு சுவாரசியமாய்ப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  31. வணக்கம் !
    அன்புச் சகோதரா இத் தொடர் பகிர்வு ஒன்றிக்குத் தங்களை அன்போடு
    அழைக்கின்றேன் என் தாழ்மையான இவ் வேண்டுகோளுக்கு இணங்கித் தாங்கள்
    கொடுக்கவிருக்கும் அன்பான பதில்களையும் காணும் ஆவலுடன் .சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும் .

    ReplyDelete
  32. நான் சிறுவனாக இருந்தபோது சிறுவர்களுக்கான கதைகள் படிப்தற்க்கான வாய்ப்பும் வசதியும் இருந்ததில்லை. இப்போது படிக்கலாம் என்றால் படிக்க முடிவதில்லை

    ReplyDelete
  33. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    மூங்கில் காற்று – டி.என்.முரளிதரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  34. மறுமொழி > Sasi Kala said...

    நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வலையுலகம் வந்த சகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  35. மறுமொழி > கீத மஞ்சரி said...

    சகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  36. மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said...

    // வணக்கம் ! அன்புச் சகோதரா இத் தொடர் பகிர்வு ஒன்றிக்குத் தங்களை அன்போடு அழைக்கின்றேன் என் தாழ்மையான இவ் வேண்டுகோளுக்கு இணங்கித் தாங்கள் கொடுக்கவிருக்கும் அன்பான பதில்களையும் காணும் ஆவலுடன் .சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும் //

    சகோதரிக்கு வணக்கம்! தொடர்பதிவு எழுத முயற்சிக்கிறேன்! நன்றி1

    ReplyDelete
  37. மறுமொழி > வலிப் போக்கன் said...

    அன்பு சகோதரருக்கு வணக்கம்! உங்கள் சிவப்பு சிந்தனைக் கட்டுரைகளை தொடர்ந்து படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். ஒன்றிரண்டு பதிவுகளுக்கு கருத்துரை எழுதி இருக்கிறேன்.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  38. இவைகள் வாசித்த நினைவு.ஆனால் இப்பொது மறந்து விட்டது.
    தாங்கள் நினைவு படுத்தியது நன்று.
    பதிவு மகிழ்வு தந்தது.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  39. தினத்தந்தி கையில் எடுத்ததும் முதலில் வாசித்தது சிந்துபாத் மட்டுமே..... நினைவுகளை மீட்டிய பதிவு.

    ReplyDelete
  40. கலக்கல். 1980 முதல் 1984 வரை உள்ள ஊர் நியாபகம் வந்து போகின்றது. வெறியாய் வந்து டீக்கடையில் படித்துள்ளேன்.

    ReplyDelete
  41. மறுமொழி > kovaikkavi said...
    மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
    மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    கருத்துரை தந்த சகோதரி கோவைக்கவி கவிஞர் வேதா.இலங்கா திலகம் , சகோதரர் வெங்கட் நாகராஜ் மற்றும் ஜோதிஜி திருப்பூர் மூவருக்கும் நன்றி!

    ReplyDelete
  42. சிந்துபாத கடற்பயணங்கள் படித்து இருக்கிறேன். அவன் செய்யும் சாகஸங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கும்.கழுகின் காலில் தன்னைக் கட்டிக் கொண்டு பெரிய பள்ளத்தில் இறங்கி புதையலை கொண்டுவரும் வீரசாகஸ கதைகள் எல்லாம் நன்றாக இருக்கும்.
    உங்கள் பகிர்வும் படங்களும் மிக அருமை.
    சின்ன வயது நினைவுகளை மீட்டு வந்தது பதிவு.

    ReplyDelete
  43. மறுமொழி > கோமதி அரசு said...

    சகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete