Monday 23 June 2014

பயன்படும் இணையதளங்கள் – 1




இண்டர்நெட்டில் (INTERNET) இன்று எவ்வளவோ விஷயங்கள். நமக்கு அடிக்கடி பயன்படும் தளங்களும் இருக்கின்றன. குப்பைகளும் இருக்கின்றன. சிறு துரும்பும் பல் குத்த உதவும் இது அவரவர் பயன்பாட்டைப் பொறுத்தது. இங்கு நான் அடிக்கடி எனக்காகவும், மற்றவர்களுக்காகவும் பயன்படுத்தும் இணையதளங்களைப் பற்றிய சிறு குறிப்புகளைத் தருகிறேன். எல்லோருக்கும் நன்கு தெரிந்த அடிக்கடி பயன்படும் தளங்களை இங்கு மீண்டும் சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. கீழே உள்ள இணையதள முகவரிகளை சொடுக்கினால் (CLICK) இந்த பதிவிலிருந்தே அவை ஒவ்வொன்றையும் பார்க்கலாம்.

இன்றைய தேதி, கிழமை காலநிலை  எப்படி?

நீங்கள் இருக்கும் இடத்தின் இன்றைய தேதி, கிழமை, உள்ளூர் நேரம் இவற்றை மிகவும் துல்லியமாகக் காட்டும் இணையதளம் இது. மேலும் இன்று,நாளை, நாளை மறுநாள் இருக்கப் போகும் காலநிலை (CLIMATE) இவைகள் குறித்தும் முன்னதாகவே அறிந்து கொள்ளலாம். மேலும் அதிகப்படியான தகவல்களும் உண்டு.


உங்களுக்கு வயது என்ன? பேப்பர் பென்சிலை வைத்துக் கொண்டு கணக்கு போடுவதை விட , மேலே குறிப்பிட்ட இணையதளம் சென்று ந்மது பிறந்த தேதியைத் தந்தால் போதும், நமக்கு எத்தனை வயது, மாதம், வாரம், நாள், நிமிஷம் என்ற விவரம் வந்துவிடும். இது பற்றி ஏற்கனவே தனியாகவும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கீழே சொன்ன இணையதள தகவல்கள் பயன்படும்.

மேலே உள்ள இணையதளத்தில் உங்களுடைய பிறந்தநாள், நேரத்தைக் கொடுத்துவிட்டு உங்களுடைய பிறந்த நட்ச்சத்திரம் மற்றும் இராசி கணனம் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம். அதேபோல் இன்று பிறந்த குழந்தைக்கும் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

காலையில் எழுந்தவுடன் தினசரி நாட்காட்டியில் தேதியை கிழித்துவிட்டு, இன்று என்ன சொல்லி இருக்கிறது என்று படிக்கிறோம். இந்த இணையதளம் சென்றால் அந்த நாட்காட்டி விவரத்தைக் காணலாம்.

நாள், நட்சத்திரம், ராசி பலன், பிறந்தநாள் பலன், எண் ஜோதிடம் இவைகளுக்கு மேலே சொன்ன தினத்தந்தி, தினமலர் இணைய தளங்கள் செல்லவும்.

காய்கறி - தினசரி விலை விபரம்

மேலே உள்ள இணையதளம் ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் சந்தைகளின் தினசரி காய்கறிகள், பழ வகைகள், மற்றும்  விலை விபரத்தினையும் அதனை நடத்தும் கடை முகவர்களின் தொடர்பு முகவரியினையும் அளிக்கிறது

மளிகை பொருட்கள்:

வீட்டில் இருந்தபடியே இன்றைய மளிகை சாமான்களின் விலையை கீழே உள்ள இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


அயல்நாட்டுப் பொருட்கள்:


இப்போது நாடெங்கும் வெளிநாட்டுப் பொருட்கள் குறிப்பாக சீன பொருட்கள் கிடைக்கின்றன. பர்மாபஜார் பக்கம் அவர்கள் சொல்வதுதான் விலை. நமக்கும் அவர்கள் சொல்லும் விலை சரியானதுதானா அல்லது என்ன விலைக்கு அவர்களிடம் பேரம் பேசுவது என்ற சந்தேகம் வரும். உங்கள் சந்தேகத்தை தீர்க்கும் வண்ணம் சீன பொருட்களின் விலையை கீழே உள்ள தளங்கண் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



நுகர்வோர் (CONSUMER)

இந்த இணையதளத்தில் நாம் வாங்க நினைக்கும் பொருட்களைப் பற்றிய முழு விவரத்தினையும் அதே போன்ற மற்ற பொருட்களின் ஒப்பீட்டையும் காணலாம்.

மேலே சொன்ன  இணையதளங்களில் நாம் வாங்க நினைக்கும் அல்லது வாங்கிய பொருட்களைப் பற்றிய மற்றவர்களது அனுபவங்கள் மற்றும் குறைகளைக் காண்லாம். நாமும் நமது அனுபவங்களையும் குறைகளையும் சொல்லலாம்.

கணக்கீடுகள் ( CALCULATIONS)

நமது இந்தியா குடியரசாக மாறிய பிறகு ஏப்ரல் 1, 1957 முதல் நமது நாட்டில் மெட்ரிக் முறை அமுலுக்கு வந்தது. ஆனாலும் நாம் இன்னும் நமது நாட்டில் பழைய அளவுகளையே பழக்கத்தில் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இதனால் அடிக்கடி  நமக்கு ஒரு மீட்டர் என்றால் எத்தனை அடி?; எத்த்னை கிலோ மீட்டர் ஒரு மைல்? போன்ற சந்தேக வினாக்கள் வந்து கொண்டே இருக்கும். இவற்றை தீர்த்து வைக்கும் இணையதளம் இது.

இந்த இணையதளத்தில், உங்களுடைய சேமிப்புக் கணக்கு(SAVINGS BANK), தொடர் வைப்பு (RECURRING DEPOSITS), பிக்ஸட் டெபாசிட்டுகள்(FIXED DEPOSITS), வீட்டுக் கடன் (HOME LOAN) போன்ற அனைத்து கணக்குகளுக்குமான வட்டி, முதிர்வுத் தொகை போன்றவற்றை கணக்கிட்டுக் கொள்ளலாம். மேலும் உடல்நலம், கட்டிட வேலை சமபந்தமான கணக்கீடுகளையும் மற்ற கணக்குகளையும் நீங்களே போட்டு தெரிந்து கொள்ளலாம்.

பயணம் செய்யும்போது

நாம் பயணம் செய்ய வேண்டிய ஊர் எவ்வளவு தொலைவில் உள்ளது, பயண நேரம், பஸ் கட்டணம், சாலை வழியே பயணம் செய்யும் போது எது நேர்வழி முதலான விவரங்களை மேலே சொன்ன இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பயனர் பெயர் (USERNAME)

நாம் நமது பெயரைக் கொண்டோ அல்லது விருப்பமான பெயரைக் கொண்டோ வெவ்வேறு தளங்களில் இமெயில் போன்ற பல கணக்குகளை தொடங்குகிறோம். நாம் தொடங்க விரும்பும் பயனர் பெயர் (USERNAME) தற்சமயம் எந்தெந்த தளங்களில் இருக்கிறது , தொடங்கலாம் என்பதைக் காட்டும் இணைய தளங்கள் இவை.

பின்கோடு (இந்தியா)

இந்த இணைய தளத்தில், உங்களுக்குத் தெரிந்த பின்கோடு (இந்தியா) எண்ணைக் கொடுத்தால், அந்த தபால் அலுவலகம் இருக்கும் இடத்தின் முழு விவரங்களையும் (மேப் உள்பட) தந்துவிடும். அதே போல உங்களுக்குத் தெரிய வேண்டிய தபால் நிலையம் பற்றி பெயரைக் கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

செல்ல நாய்கள்:

என்ற தளத்தில் செல்லநாய்களின் வகைகள், அவற்றிற்கான உணவு, வளர்க்கும் முறை, ஒரு நாயின் வயது என்பது மனிதனின் வயதோடு ஒப்பிடும்போது என்ன என்பது போன்ற பல விவரங்களை காணலாம்,.

பொன்மொழிகள் (GOLDEN SAYINGS)

உங்களுக்குத் தேவையான அறிஞர்களின் பொன்மொழிகளை மேலே கண்ட இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

நகர்ப்புற விவரம்:


மேலே உள்ள இணையதளம் மூலம் சென்னையைப் பற்றிய காய்கனி விலையிலிருந்து ரியல் எஸ்டேட் வரை அன்றாட முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் திருச்சி, மதுரை, கோவை போன்ற மற்றைய ஊர்களின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்

(PICTURES THANKS TO GOOGLE)



51 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா
    குறித்து வைத்துக் கொண்டேன்
    மிக்க நன்றி
    தம 1

    ReplyDelete
  2. Bookmark செய்து கொண்டேன்...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  3. மண் பயனுற வேண்டும் !.. - மகாகவி பாரதியாரின் வாக்கு..
    தாங்களும் அந்த அளவில் இன்றைய பதிவினை வழங்கியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. வாழ்க நலம்..

    ReplyDelete
  4. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  5. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  6. மறுமொழி > துரை செல்வராஜூ said...
    சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி! கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, தாங்கள் கவிஞரைப் பற்றிய எழுதிய பதிவினுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா.

    நேற்று நீங்கள் போட்டவுடன் ஓடிவந்து பார்த்தால் பதிவு நீக்கப்பட்டுள்ளது் பின்புதான் பார்த்தேன் இருக்கிறது. மிகவும் பயனுள்ள தகவலை நன்றாக தொகுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. #http://easycalculation.com/date-day/age-calculator.phpல் சென்று பார்த்தேன் நொடிக்கணக்கில் துல்லியமாய் இருக்கிறது ,இன்னும் இருக்கின்ற நாளை துல்லியமாய் சொன்னால் நன்றாய் இருக்கும் !
    த ம +1

    ReplyDelete
  9. மிகவும் பயனுள்ள தளங்களின் அறிமுகங்கள்..பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. மிக மிக அற்புதமான தொகுப்பு. என் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றேன். ஒவ்வொரு தளத்திற்கு இணைப்பு கொடுக்கும் போது அந்த தளம் மட்டும் திறக்க வேண்டும். உங்கள் பதிவு அப்படியே இருக்க வேண்டும். அதன் படி மாற்றி விடுங்க. ஒவ்வொரு முறையும் அங்கே சென்று விட்டு வர வேண்டியதாக உள்ளது. நன்றி

    ReplyDelete
  11. அனைத்துமே பயனுள்ளவை. நன்றி.

    ReplyDelete
  12. மறுமொழி > ரூபன் said...

    // வணக்கம் ஐயா. நேற்று நீங்கள் போட்டவுடன் ஓடிவந்து
    பார்த்தால் பதிவு நீக்கப்பட்டுள்ளது் பின்புதான் பார்த்தேன் இருக்கிறது. மிகவும் பயனுள்ள தகவலை நன்றாக தொகுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா -நன்றி- //

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம். இந்த பதிவினை இரண்டு வாரங்களுக்கு முன்பே தயார் செய்து விட்டேன். நேற்று முதல் தடவை இதனை வலைத் தளத்தில் வெளியிட்டு சோதனை செய்தபோது இதில் குறிப்பிட்டு இருந்த சில இணைய தளங்கள் சரியாக வரவில்லை. Error Code காட்டின. எனவே முதல்தடவை வெளியிட்ட பதிவை சில நிமிடங்களிலேயே நீக்கி விட்டு, அவற்றை சரி செய்து மீண்டும் வெளியிட்டுள்ளேன்.

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி > முனைவர் இரா.குணசீலன் said...

    பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி > முனைவர் இரா.குணசீலன் said...

    பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete

  15. மறுமொழி > Bagawanjee KA said...

    // #http://easycalculation.com/date-day/age-calculator.phpல் சென்று பார்த்தேன் நொடிக்கணக்கில் துல்லியமாய் இருக்கிறது ,இன்னும் இருக்கின்ற நாளை துல்லியமாய் சொன்னால் நன்றாய் இருக்கும் ! த ம +1 //

    பகவான்ஜீ.கே.ஏ அவர்களுக்கு எல்லாமே ஜோக்தான்! DEATH CALCULATOR என்று ஒன்று இருக்கிறது. அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. நூறு ஆண்டுகள் வாழ்வது எப்படி? என்று புத்தகம் எழுதியவர்களே நூறு ஆண்டுகள் வாழ முடியவில்லை. பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. வாழும்வரை வாழுவோம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! டேஷ்போர்டு பிரச்சினையால் உடனுக்குடன் உங்கள் பதிவின் பக்கம் வர இயலவில்லை. யார் என்ன எழுதி இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    ReplyDelete
  17. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது வலைத்தளம் வந்த சகோதரருக்கு நன்றி!

    // மிக மிக அற்புதமான தொகுப்பு. என் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றேன். ஒவ்வொரு தளத்திற்கு இணைப்பு கொடுக்கும் போது அந்த தளம் மட்டும் திறக்க வேண்டும். உங்கள் பதிவு அப்படியே இருக்க வேண்டும். அதன் படி மாற்றி விடுங்க. ஒவ்வொரு முறையும் அங்கே சென்று விட்டு வர வேண்டியதாக உள்ளது. நன்றி //

    டெக்னிகலாக நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. எல்லோருக்கும் உண்டான டேஷ் போர்டு பிரச்சினை எனக்கும் இப்போது வந்துள்ளது. நீங்கள் இந்த தளத்தினை புக் மார்க் செய்து கொண்டால் நீங்கள் சொன்னபடி அமையும் என்று நினைக்கிறேன்.



    ReplyDelete
  18. -பயனுள்ள இணையதளங்கள் http://natsathra.blogspot.in/2014/04/blog-post.html

    ReplyDelete
  19. நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  20. பயனுள்ள முகவரிகள். தேடிப் பிடித்து எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  21. மறுமொழி > Andi CHAMY said...

    // -பயனுள்ள இணையதளங்கள் http://natsathra.blogspot.in/2014/04/blog-post.html //

    அய்யா நெய்வேலி ஆண்டிசாமி அவர்களுக்கு வணக்கம்.! நீங்கள் குறிப்பிட்ட இணையதள்ம் சென்று பார்த்தேன். தலைப்பு ஒன்று போலவே இருந்தாலும், நல்லவேளையாக அதிலுள்ள இணையதள முகவரிகள் என்னுடைய பதிவில் இல்லை. இருந்திருந்தால் எல்லோரும் வேறு மாதிரி நினைத்து இருப்பார்கள். தகவலுக்கு நன்றி!

    மேற்படி எனது பதிவில் நான் அடிக்கடி எனக்காகவும், மற்றவர்களுக்காகவும் பயன்படுத்தும் இணையதள முகவரிகளில் முக்கியமானவற்றை மட்டுமே தந்துள்ளேன்.


    ReplyDelete
  22. மறுமொழி > மாதேவி said...

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  23. மறுமொழி > சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

    அய்யா முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  24. அத்தனையும் குறித்து கொள்ளவேண்டிய அற்புதமான விசயங்கள் அருமை.
    ஐயா தங்களின் பெயரை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் (இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?) எனது பதிவை காணவும்.

    ReplyDelete
  25. பயனுள்ள தகவலை பகிர்ந்து என்னை படிக்க வரவழைத்த தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  26. ‘டாஷ் போர்டு’ பிரச்சினையால் உங்களது தளத்தை முன்பே பார்க்க இயலவில்லை. உபயோகமான தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    // அத்தனையும் குறித்து கொள்ளவேண்டிய அற்புதமான விசயங்கள் அருமை.//

    தேவகோட்டை கில்லர்ஜியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    // ஐயா தங்களின் பெயரை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் (இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?) எனது பதிவை காணவும். //

    தொடர்பதிவு எழுத அழைதமைக்கு நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி > வலிப் போக்கன் said...

    சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // ‘டாஷ் போர்டு’ பிரச்சினையால் உங்களது தளத்தை முன்பே பார்க்க இயலவில்லை. உபயோகமான தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி! //

    அய்யா வே.நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு ந்ன்றி! ‘டாஷ் போர்டு’ பிரச்சினையால் இந்த பதிவு நிறையபேரை சென்றடையவில்லை என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  30. மிகவும் பயனுள்ள தகவல்/தளங்கள்

    ReplyDelete
  31. அன்புள்ள ஐயா, வணக்கம்.

    மிகவும் பயனுள்ள தளங்களின் அறிமுகங்கள் தந்துள்ளீர்கள். இந்தத்தங்களின் இணைப்பையே சேமித்து வைத்துக்கொண்டேன். தேவைப்படும்போது உபயோகித்துக்கொள்வேன். 4-5 நாட்கள் டேஷ் போர்டு வேலை செய்யாமல் இருந்ததால் தங்களின் இந்தப்பதிவினை இப்போதுதான் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது.

    பாராட்டுக்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். அன்புடன் VGK

    ReplyDelete
  32. பயனுள்ள இணைப்புகள். சேமித்துக் கொண்டேன்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  33. பயனுள்ள தகவல்.
    பயனுள்ள இணைப்புகள் நன்றி.

    ReplyDelete
  34. அன்பின் தமிழ் இளங்கோ

    அருமையான பயனுள்ள பதிவு - தகவல்களைத் தேடிப் பிடித்து பகிர்ந்தமைக்கு நன்றி - பயன் படுத்த - சுட்டிகளையும் சிறு குறிப்புகளையும் ஆவனப் படுத்திக் கொண்டேன். நல்லதொரு பயனுள்ள பதிவுக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா


    ReplyDelete
  35. அன்பின் தமிழ் இளங்கோ - வலைச்சர அறிமுகம் வழியாக இங்கு வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  36. மறுமொழி > Jeevalingam Kasirajalingam said...

    சகோதரர் ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  37. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // அன்புள்ள ஐயா, வணக்கம். மிகவும் பயனுள்ள தளங்களின் அறிமுகங்கள் தந்துள்ளீர்கள். இந்தத்தங்களின் இணைப்பையே சேமித்து வைத்துக்கொண்டேன். தேவைப்படும்போது உபயோகித்துக்கொள்வேன். 4-5 நாட்கள் டேஷ் போர்டு வேலை செய்யாமல் இருந்ததால் தங்களின் இந்தப்பதிவினை இப்போதுதான் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. //

    அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! டேஷ் போர்டு பிரச்சினை என்பது இப்போது எல்லா ப்ளாக்கர்களுக்குமே இருக்கிறது போலிருக்கிறது. இந்த பிரச்சினையால் இந்த பதிவு நிறையபேரை சென்றடையவில்லை.

    // பாராட்டுக்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். அன்புடன் VGK //

    தங்கள் பாராட்டிற்கும் அன்பிற்கும் நன்றி!

    ReplyDelete
  38. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // பயனுள்ள இணைப்புகள். சேமித்துக் கொண்டேன்.
    பகிர்வுக்கு நன்றி. //

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! கம்ப்யூட்டர் பிரச்சினையினால் உங்கள் பதிவுகளில் பலவற்ரை படிக்க இயலாமல் போய்விட்டது. மன்னிக்கவும்!

    ReplyDelete
  39. மறுமொழி > கோமதி அரசு said...

    // பயனுள்ள தகவல். பயனுள்ள இணைப்புகள் நன்றி. //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  40. மறுமொழி > cheena (சீனா) said... ( 1 )

    // அன்பின் தமிழ் இளங்கோ அருமையான பயனுள்ள பதிவு - தகவல்களைத் தேடிப் பிடித்து பகிர்ந்தமைக்கு நன்றி - பயன் படுத்த - சுட்டிகளையும் சிறு குறிப்புகளையும் ஆவனப் படுத்திக் கொண்டேன். நல்லதொரு பயனுள்ள பதிவுக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

    அன்பின் சீனா அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்!


    ReplyDelete
  41. மறுமொழி > cheena (சீனா) said... ( 2 )
    // அன்பின் தமிழ் இளங்கோ - வலைச்சர அறிமுகம் வழியாக இங்கு வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

    அன்பின் சீனா அவர்களுக்கு வணக்கம்! டேஷ் போர்டு பிரச்சினையால் இந்த பதிவு நிறையபேரை சென்றடையவில்லை. இந்த பதிவினை வலைச்சரத்தில் ஆசிரியர் அ.பாண்டியன் அவர்கள் அறிமுகம் செய்ததால், அந்த குறையை உங்களின் வலைச்சரம் தீர்த்து வைத்தது. உங்களுக்கு நன்றி!


    ReplyDelete
  42. உங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் பாராட்டப்பட்டுள்ளது .
    இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/3.html

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள். தேடிப் பிடித்து எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.

    -பயனுள்ள இணயதளம் இயற்கை உணவு பொருட்கள் சென்னையில் வாங்க: Online Organic Store Chennai

    ReplyDelete
    Replies
    1. அன்பரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete