Friday 4 April 2014

வருண் என்ற அடாவடி பதிவர்



வலையுலகம் என்பது பொதுவானது. இங்கு அவரவர், அவரவர் எண்ணங்களை எழுதுகின்றனர். நானும் எனது எண்ணங்களை எழுதுகிறேன். விமர்சனம் செய்பவர்களுக்கு மறுமொழி தராமல் இருந்ததில்லை. கடுமையான விமர்சனம் செய்பவர்களையும் எதிரியாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. வருண் என்ற பதிவர் “ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற பதிவை எழுதி வருகிறார். அவருக்கு என்மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. ஒரு பதிவில் எனது பெயரை வெளிப்படையாகச் சொல்லி ஏதேதோ எழுதி இருக்கிறார். நான் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்ற கொள்கை உடையவன். மதவாதி கிடையாது. ஆத்திகத்தைப் பற்றி எழுதும்போது கூட நாத்திகத்தை கடுமையாக விமர்சனம் செய்தது கிடையாது.

// பெரியவர் தமிழ் இளங்கோ ஒரு பின்னூட்டத்தில் தன்னுடைய இந்துமதப் பெருமையை அடக்கமாகவும் பெருமையாகவும் இப்படிச் சொல்லியுள்ளார்.
நாத்திகமதம் எனப்படும் புத்தமததையே உள்வாங்கிக் கொண்டு புத்தரையும் ஒரு அவதாரமாக்கிய பெருமை இந்து மதத்திற்கு உண்டு.
இதிலே என்ன பெருமை இருக்குனு எனக்குத் தெரியலை. ஒரு சின்ன கம்பெணி நல்லா முன்ன்னேறியதென்றால் அதை விலை கொடுத்து வாங்கி அந்த கம்பெணியை ஒண்ணுமில்லாமல் செய்யும் ஒரு பணபலம் படைத்த இன்னொரு திமிங்கலம் கம்பெணி செய்வதுபோல் ஒரு  செயல் இது! //

இது வருண் அவர்களின் கருத்து.

வவ்வால் அவர்களுக்கு நான் எழுதிய ஒரு மறுமொழியில் // நாத்திகமதம் எனப்படும் புத்தமததையே உள்வாங்கிக் கொண்டு புத்தரையும் ஒரு அவதாரமாக்கிய பெருமை இந்து மதத்திற்கு உண்டு. // என்ற வரிகளில் இந்துமதம் புத்தமதத்தை கபகளீரம் செய்துவிட்டது என்பதனை, வஞ்சப் புகழ்ச்சியாகவே எழுதி இருந்தேன். இன்னும் பொதுவான கருத்துகளும் உண்டு. வருண் என்ற பதிவருக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஏதேதோ சொல்லி குதிக்கிறார். இவரது குணாதிசயமே, வலைப்பதிவில் விமர்சனம் என்ற பெயரில், அடிக்கடி இப்படி அடுத்தவர்களை வம்புக்கு இழுத்து எழுதுவதுதான் என்று தெரிகிறது. இதோ அவரது அடுத்த வரிகள்.

// பெரியவருக்குப்  பொறந்தநாள் வாழ்த்துச் சொல்லப் போன இடத்தில், சில அதிகப்பிரசங்கி ஆத்திகர்களின் வாய்திமிருடன் வந்த பின்னூட்டங்கள் சம்மந்தமாக அவருடன் விவாதிக்கும்போது பெரியவரின்  "நேர்மை" என்னை மெய்சிலிர்க்க வைத்தது.//

என்னுடைய நேர்மையைப் பற்றி நீங்கள் பேச வேண்டியதில்லை. நீங்கள் நேர்மையாளர், யோக்கியர்  என்றால் நீங்கள் யார் என்பதனை முதலில் வெளிக்காட்டுங்கள். ஒரு முகமூடியைப் போட்டுக் கொண்டு எழுதாதீர்கள்.

பெரியார் என்றால் யார் என்று எல்லோருக்கும் தெரியும். பெரியார் வெளிப்படையான நாத்திகவாதி. இன்ன ஊரில் இன்ன இடத்தில் இன்ன நேரத்தில் கூட்டம் நடக்கும் என்று வெளிப்படையாகச் சொல்லி கூட்டம் நடத்தினார். இந்த வருண் என்ற பதிவர் யார் எப்படிப்பட்டவர் என்று தெரியவில்லை.

ஒரு வீட்டின் வரவேற்பறையில் இன்ன இன்ன இருக்க வேண்டும் என்று அந்த வீட்டின் சொந்தக்காரன் வைத்து இருப்பான். அந்த வீட்டில் நுழைந்து கொண்டு அதனை அங்கு வைக்காதே ,இதனை  இங்கு வைக்காதே என்று மற்றவர்கள் அதிகாரம் செய்ய முடியுமா?. வேண்டுமானால் யோசனை சொல்லலாம். அதைப்  போலவே வலைப்பதிவும்.

கருத்துரைகளும், மறுமொழிகளும்:

(http://tthamizhelango.blogspot.com/2014/03/60.html ) ஒரு பிதற்றல் - இன்று எனக்கு வயது 60 தொடக்கம்! - என்ற எனது பதிவில் வெளிவந்த அவர் சம்பந்தப்பட்ட பின்னூட்டங்களை மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்காக கீழே தந்துள்ளேன்.


Jayadev Das said...

60 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

மிகவும் சரியான வழியில் உங்கள் சிந்தனை இருக்கிறது, மகிழ்ச்சி. ஏன் என்றால் எத்தனை வயது ஆனாலும் யாரை ஏமாற்றி பொருள் சேர்க்கலாம் என்று குறுக்கு வழி பற்றியே சிந்திக்கும் எண்ணற்றோர் மத்தியில், "வாழ்ந்து என்ன சாதித்தேன், வாழ்க்கை வெறுமையாகத் தோன்றுகிறதே" என்ற சிந்தனை அபூர்வம், அது தங்களுக்கு வந்திருப்பது நல்லதே.

நாம் சாதிப்பது அத்தனையும் பூஜ்ஜியங்கள், அதாவது கல்வி ஒரு "0", நல்ல வேலை, இன்னொரு "0", பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு ஆளாக்குவது மற்றொரு "0" என்று பூஜ்ஜியங்கள் சேருகின்றன. இவற்றோடு, இறைவனை அறிந்து கொள்வதில் வெற்றில் கொண்டால் அது 1, அந்த ஒன்றோடு இந்த பூஜ்ஜியங்கள் சேர்ந்தால் 10, 100, 1000 என மதிப்பளிக்கும். அது இல்லாத பட்சத்தில் 0, 00, 000 என பூஜ்ஜியங்களாகவே நின்று போகும்.

இறைவனைப் பற்றி அறிய முற்படுபவர் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும், அதை செய்யாதவர் வாழ்க்கை வெறுமையாகவே தோன்றும், இவர்கள் வாழ்க்கைக்கும் ஆடு மாடுகளுக்கும் வேறுபாடே கிடையாது. இதை சிலர் விரைந்து உணர்கிறார்கள், சிலர் கால தாமதமாக தெரிந்துகொள்கிறார்கள், பலர் 89 வயதானாலும் இன்னமும் கொள்ளையடிக்க வழி ஏதாவது இருக்கிறதா என்று தேடிக்கொண்டே இருப்பார்கள்.

தாங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள், மகிழ்ச்சியாக இருங்கள்!!


வருண் said...
***இறைவனைப் பற்றி அறிய முற்படுபவர் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும், அதை செய்யாதவர் வாழ்க்கை வெறுமையாகவே தோன்றும், இவர்கள் வாழ்க்கைக்கும் ஆடு மாடுகளுக்கும் வேறுபாடே கிடையாது. ***

வந்தா, பொறந்த நாள் வாழ்த்து வாழ்த்திட்டு போகாமல், கடவுள் பக்தர் ஆரம்பிச்சுட்டாரு.. நான் யோக்கியன்! கடவுளை வணங்காதவன் எல்லாம் அயோக்கியன்னு! இதென்ன புதுமாதிரியான வியாதியா என்ன? அவனுக வாழ்க்கை எல்லாம் வெறுமை! பக்தன் என் வாழ்க்கைதான் புதுமை. பதுமைனு சொல்லிக்கிட்டு..வெட்கமே இல்லாமல் உங்களுக்கே நீங்க எப்படிப்பா சான்றிதழ் வழங்கிக்கிறீங்க?

***
நாம் சாதிப்பது அத்தனையும் பூஜ்ஜியங்கள், அதாவது கல்வி ஒரு "0", நல்ல வேலை, இன்னொரு "0", பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு ஆளாக்குவது மற்றொரு "0" என்று பூஜ்ஜியங்கள் சேருகின்றன. இவற்றோடு, இறைவனை அறிந்து கொள்வதில் வெற்றில் கொண்டால் அது 1, அந்த ஒன்றோடு இந்த பூஜ்ஜியங்கள் சேர்ந்தால் 10, 100, 1000 என மதிப்பளிக்கும். அது இல்லாத பட்சத்தில் 0, 00, 000 என பூஜ்ஜியங்களாகவே நின்று போகும்.***

செம காமடி!!! நான் சாதித்ததுனு உங்களைப் பத்தி சொல்லிட்டுப் போங்கப்பா! "நாம்"னு எதுக்கு எல்லாரையும் சேர்த்துக்கிட்டு??

தி தமிழ் இளங்கோ அவர்களே!

உங்களுக்கு 59 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்ன ஒரு வயதை கூட்டிச் சொல்றீங்க?!

நீங்க ஆத்திகரோ, நாத்திகரோ, அது எனக்கு முக்கியமில்லை! ஏன் இப்படி ஜெயதேவ் போன்ற ஆட்களை இஷ்டத்துக்கு பேச விடுறீங்கனு தெரியலை! :(

ஆமா, உங்க தப்புதான் இது!


மறுமொழி > வருண் said...

சகோதரர் வருண் அவர்களது நீண்ட கருத்துரைக்கும் அன்பிற்கும் நன்றி!

ஜெயதேவ் X வருண் உரையாடல்களை அடிக்கடி பதிவுகளில் படிக்கும்போது இருவரிடமிருந்தும், நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

//
தி தமிழ் இளங்கோ அவர்களே! உங்களுக்கு 59 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்ன ஒரு வயதை கூட்டிச் சொல்றீங்க?! //

வருண் அவர்களே! அவசரப்பட வேண்டாம்! இந்த பதிவின் தலைப்பை நன்றாகப் படியுங்கள். ஒரு பிதற்றல் - இன்று எனக்கு வயது 60 தொடக்கம்! ” – இதுதான் தலைப்பு. எனக்கு வயது அறுபது என்றோ அல்லது அறுபதாவது பிறந்தநாள் என்றோ எனது பதிவில் குறிப்பிடவில்லை. பதிவில் என்ன எழுத வேண்டும் என்று நினைத்தபோது வந்த தலைப்புதான் இது.

//
நீங்க ஆத்திகரோ, நாத்திகரோ, அது எனக்கு முக்கியமில்லை! ஏன் இப்படி ஜெயதேவ் போன்ற ஆட்களை இஷ்டத்துக்கு பேச விடுறீங்கனு தெரியலை! ஆமா, உங்க தப்புதான் இது! //

நான் இறை நம்பிக்கை உள்ளவன்தான், உங்களைப் போலவே அவரும் எனக்கு வலைப் பதிவில் அறிமுகமான ஒரு பதிவர்தான். எனது பதிவினில் அவருடைய வாழ்த்தையும் கருத்தையும் சொன்னார். இதில் தப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

5 March 2014 10:51

வருண் said...
***அதை செய்யாதவர் வாழ்க்கை வெறுமையாகவே தோன்றும், இவர்கள் வாழ்க்கைக்கும் ஆடு மாடுகளுக்கும் வேறுபாடே கிடையாது****

So, according to him, my life (who is not a BELIEVER) is just like "animals life"? That's what Mr. Jeyadev is implying here.

Mr. Ilango seems to agree with that statement!

I wonder who is Jeyadev, to talk about MY LIFE? And compare that with ANIMALS" life?

Thank you very much, Mr. thamizh Ilango avargaLe!

BTW, I know you are much older than me, sometimes I need to explain things even to my mom and dad and grandparents too! Take it easy, Mr. Ilango!

ps: My tamil fonts had a small glitch and so I had to write in English. My apologies for that.

மறுமொழி > வருண் said...

// ***
அதை செய்யாதவர் வாழ்க்கை வெறுமையாகவே தோன்றும், இவர்கள் வாழ்க்கைக்கும் ஆடு மாடுகளுக்கும் வேறுபாடே கிடையாது****

So, according to him, my life (who is not a BELIEVER) is just like "animals life"? That's what Mr. Jeyadev is implying here.

Mr. Ilango seems to agree with that statement! //

அன்புள்ள வருண் அவர்களுக்கு! சகோதரர் ஜெயதேவ் தாஸ் என்னுடைய பதிவில் வந்து பொதுவாகச் சொன்னதெல்லாம் உங்களுக்காக சொன்னது என்று ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள்.?

// I wonder who is Jeyadev, to talk about MY LIFE? And compare that with ANIMALS" life? Thank you very much, Mr. thamizh Ilango avargaLe!
BTW, I know you are much older than me, sometimes I need to explain things even to my mom and dad and grandparents too! Take it easy, Mr. Ilango!
ps: My tamil fonts had a small glitch and so I had to write in English. My apologies for that. //

ஆத்த மானார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்

என்று பாடுகிறார் மாணிக்க வாசகர் (திருவாசகம் - போற்றித் திருஅகவல் ) இதனால் இவர் என்னைப் பற்றித்தான் சொல்கிறார் என்று யாரேனும் சண்டைக்கு செல்ல முடியுமா?

வலைப்பதிவில் அவரவர் எண்ணங்களைச் சொல்கிறார்கள். நீங்களும் உங்கள் பதிவில் உங்கள் கருத்துக்களை முன் வைக்கிறீர்கள். மற்றவர் சொல்வதெல்லாம் நமக்குத்தான் என்று நாம் எடுத்துக் கொளவது என்பது சரியாகத் தெரியவில்லை.


வருண் said...
மாணிக்கவாசகர்னா என்ன சார், இல்லைனா இறையனார்னா என்ன சார்? தான் ஆத்திகனாக இருக்கும்போது நாத்திகர்களை தேவையே இல்லாமல் இகழ்வது தவறு. மாணிக்கவாசகர், இல்லைனா பகவான் கிருஷ்ண பரமாத்மாவே வந்து உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துச்சொல்லி பின்னூட்டுமிட்டுவிட்டு போவதைவிட்டுவிட்டு இதுபோல் நாத்திகர்களை ஆடு மாடுகளுக்கு சமம்னு சொல்லி இருந்தால், ஜெயதேவை விமர்சித்ததுபோல அவர்களை விமர்சித்துத்தான் இருப்பேன்.

யாருனா என்ன சார்? அடுத்துவர்களை இறக்கி தன்னை உயர்வாக சொல்லிக்கொள்பவன் அனாகரிகமானவன். அவர்களை எனக்குப் பிடிக்காது.

நீங்க சொல்றதைப் பார்த்தால்
தமிழனை திட்டினால் உனக்கென்ன?
இந்தியனை திட்டினால் உனக்கென்ன?
தமிழைத் இகழ்ந்தால் உனக்கென்ன?னு உங்களையும், தமிழனையும் பிரித்து, உங்களையும் இந்தியனையும் பிரித்து,
உங்களையும் தமிழையும் பிரித்து, நீங்க பாட்டுக்குப் போயிடுவீங்க போல. :)

எல்லாருக்கும் உங்களைப் போல் பக்குவமோ, வயதோ, அனுபவமோ அடைய வில்லை பாருங்க. அதான் ...
சரி விடுங்க. நீங்க தொடர்ந்து என்னை முட்டாள் னு சொல்லாமல் சொல்லப் போறீங்க. அதனால் என்ன இப்போ?
உங்க வரிகள்..

****
இத்தனை நாட்கள் வாழ்ந்த நாட்களில் நாம் அடைந்த துயரம், துரோகம், அவமானம், ஏமாற்றம் ஆகியவை தானாகவே முன்னே வந்து நிழலாடுகின்றன. ****

எனக்கெல்லாம் அப்படி நிழலாடாது. துரோகம் செய்தது, அவமானப்படுத்தியது, ஏமாற்றியது எல்லாம் இன்னொருவ்ர்தானே? நான் இல்லையே? நான் எதுக்காக கவலைப்படனும்? அது அவருடைய பிரச்சினை..

OK Sir, I am glad I could get to know you from this "argument" or "debate" or whatever you wish to call. My time well spent as I know about you bit more now and I promise I would carefully keep away from you and let you live happily in the blog world! Thanks :)


மறுமொழி > வருண் said... ( 3 )

சகோதரர் வருண் அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி!

//
மாணிக்கவாசகர்னா என்ன சார், இல்லைனா இறையனார்னா என்ன சார்? தான் ஆத்திகனாக இருக்கும்போது நாத்திகர்களை தேவையே இல்லாமல் இகழ்வது தவறு. மாணிக்கவாசகர், இல்லைனா பகவான் கிருஷ்ண பரமாத்மாவே வந்து உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துச்சொல்லி பின்னூட்டுமிட்டுவிட்டு போவதைவிட்டுவிட்டு இதுபோல் நாத்திகர்களை ஆடு மாடுகளுக்கு சமம்னு சொல்லி இருந்தால், ஜெயதேவை விமர்சித்ததுபோல அவர்களை விமர்சித்துத்தான் இருப்பேன். //

நீங்கள் ஒரு நல்ல விமர்சகர்தான்! நானும் ஒரு காலத்தில் நாத்திகனாக இருந்தவன்தான்!


//
யாருனா என்ன சார்? அடுத்துவர்களை இறக்கி தன்னை உயர்வாக சொல்லிக்கொள்பவன் அனாகரிகமானவன். அவர்களை எனக்குப் பிடிக்காது.//

உங்கள் பதிவுகளின் தலைப்புகளிலேயே பார்த்தேன்!

//
நீங்க சொல்றதைப் பார்த்தால் தமிழனை திட்டினால் உனக்கென்ன? இந்தியனை திட்டினால் உனக்கென்ன?
தமிழைத் இகழ்ந்தால் உனக்கென்ன?னு உங்களையும், தமிழனையும் பிரித்து, உங்களையும் இந்தியனையும் பிரித்து, உங்களையும் தமிழையும் பிரித்து, நீங்க பாட்டுக்குப் போயிடுவீங்க போல. :) //

என்னுடைய வேலை அதுவல்ல! அதற்கென்று பதில் கூற நிறைய பேர் இருப்பதால், நான் அந்த வேலையை எடுத்துக் கொள்வதில்லை.

//
எல்லாருக்கும் உங்களைப் போல் பக்குவமோ, வயதோ, அனுபவமோ அடைய வில்லை பாருங்க. அதான் ... //

பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்த கதைதான்.

//
சரி விடுங்க. நீங்க தொடர்ந்து என்னை முட்டாள் னு சொல்லாமல் சொல்லப் போறீங்க. அதனால் என்ன இப்போ?
உங்க வரிகள்..//

நிச்சயம் உங்களைப் போல எடுத்தெறிந்து பேச மாட்டேன்!

// ****
இத்தனை நாட்கள் வாழ்ந்த நாட்களில் நாம் அடைந்த துயரம், துரோகம், அவமானம், ஏமாற்றம் ஆகியவை தானாகவே முன்னே வந்து நிழலாடுகின்றன. ****

எனக்கெல்லாம் அப்படி நிழலாடாது. துரோகம் செய்தது, அவமானப்படுத்தியது, ஏமாற்றியது எல்லாம் இன்னொருவ்ர்தானே? நான் இல்லையே? நான் எதுக்காக கவலைப்படனும்? அது அவருடைய பிரச்சினை.. //

நல்ல விமர்சனம்!

// OK Sir, I am glad I could get to know you from this "argument" or "debate" or whatever you wish to call. My time well spent as I know about you bit more now and I promise I would carefully keep away from you and let you live happily in the blog world! Thanks :) //

நன்றி! உங்களுடைய பயணம் வெல்லட்டும்!

கடுமையான வார்த்தைகள் எதற்கு?

முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆத்திகமும், நாத்திகமும் இருவேறு துருவங்கள். வாதத்தால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதால் வீண் பகைமைதான் மிஞ்சும். ஏதோ நீங்கள்தான் ரொம்ப அறிவாளிபோல் அடுத்தவர்களை கடுமையான வார்த்தைகளால் தாக்குகிறீர்கள். இது சரியா.? நான் பதிலுக்கு உங்களை மெண்டல் என்றும்  லூசு என்றும் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா? பதிலுக்கு பதில் எழுதி லாவணி பாட வேண்டாம். “ரிலாக்ஸ் ப்ளீஸ் 

29 comments:

  1. தங்களின் பிறந்த நாள் பதிவுக்கு "STOP RECEIVING COMMENTS" போட்ட பின்னர் பெரிய லாவணியே நடந்திருப்பது இன்று காலை தான் தெரிய வந்தது!! தற்போது மற்றுமோர் பதிவு. பொதுவாகவே நீங்கள் மென்மையானவர், ஒருபோதும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்த மாட்டீர்கள், எனினும் தங்கள் மனம் புண்பட்டிருக்கிறது என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது, என்னுடைய பின்னூட்டம் அதற்க்கு காரணமாயிருக்கிறது என்பது வருந்தத் தக்க ஒன்று. பொதுவெளி என்று வந்தாலே எல்லா வித மனிதர்களையும் சந்திக்கத்தான் [I mean "to deal with"] வேண்டி இருக்கிறது. இது மனதைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள், தொடர்ந்து எழுதுங்கள்................

    ReplyDelete
  2. வருண் எழுதுவதில் காட்டம் அதிகமாகவே உள்ளது .
    ஆனால் அவர் எழுதுவதில் நியாயம் உள்ளதாகவே படுகிறது.
    ஜெயதேவ் அவர்கள் எழுதுவதில் காட்டம் சற்று குறைவாக இருந்தாலும், இன்றைய காலத்திலும் அறிவிற்கு பொருந்தாதவைகளை எழுதுவதாக தெரிகிறது. கடவுள் பற்றிய கற்பிதம் மனிதனால் ஏற்படுத்த பட்டது.
    எக்காலத்திலும் யாரும் பார்த்ததாகவோ பேசியதாகவோ தெரியவில்லை.(புளுகை தவிர)
    மக்கள் துன்ப படுவது இறைவனின் விதியா ? நம் நாட்டை விட மோசமான நிலையில் இருந்தவர்கள் சிந்தித்து செயலாற்றியதால் மக்களின் துன்பத்தை குறைத்து உள்ளனர். ஆக மனிதன் செயல்கள் முக்கியம்.
    குறிப்பிட்ட கடவுளை தினம் கூப்பிடுவதால் அவருக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பாரா கடவுள்.
    இந்நாள் வரை கடவுளை கொண்டாடிய தேசங்கள் முன்னேறியதாக தெரியவில்லை. அங்கும் ஆத்திக அன்பர்கள் இருக்கலாம். இந்த கடவுளை பற்றி நினைக்காமல் மனித செயல்களை நம்பிய நாடுகள் முன்னேறி உள்ளதாக தோன்றுகிறது. மனிதனை முன்னேற்றத்தில் இருந்து தடுக்கும் ஒரு கொடிய சங்கிலி எல்லாவற்றிற்கும் கடவுளை கொண்டு இருப்பது.

    ReplyDelete
  3. மறுமொழி > Jayadev Das said...

    சகோதரர் ஜெயதேவதாஸ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // தங்களின் பிறந்த நாள் பதிவுக்கு "STOP RECEIVING COMMENTS" போட்ட பின்னர் பெரிய லாவணியே நடந்திருப்பது இன்று காலை தான் தெரிய வந்தது!! தற்போது மற்றுமோர் பதிவு. பொதுவாகவே நீங்கள் மென்மையானவர், ஒருபோதும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்த மாட்டீர்கள், எனினும் தங்கள் மனம் புண்பட்டிருக்கிறது என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது, என்னுடைய பின்னூட்டம் அதற்க்கு காரணமாயிருக்கிறது என்பது வருந்தத் தக்க ஒன்று. //

    உங்கள் பின்னூட்டம் காரணம் இல்லை. அவருக்கு தனது மன உளைச்சலை நீக்க இப்போது நான் கிடைத்து இருக்கிறேன் அவ்வளவுதான்.

    // பொதுவெளி என்று வந்தாலே எல்லா வித மனிதர்களையும் சந்திக்கத்தான் [I mean "to deal with"] வேண்டி இருக்கிறது. இது மனதைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள், தொடர்ந்து எழுதுங்கள்................ //

    முதலில் அவரை முற்றிலும் புறக்கணிப்பதாகவே இருந்தேன். ஆனாலும் தனிநபர் தாக்குதலாக தொடர்ந்து அவர் என்னை சீண்டிக் கொண்டே இருந்தபடியினால் இந்த பதிவை எழுத வேண்டியதாயிற்று.

    ReplyDelete
  4. மறுமொழி > Anonymous said... ( 1 )

    அனானிமஸ் ( 1 ) அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.! அவர் தனது கருத்துக்களை முன் வைப்பதில், விமர்சனம் செய்வதில் ஆட்சேபணை இல்லை. ஆனாலும் மாற்றுக் கருத்து கொண்டு இருப்பவர்கள் மீது மரியாதைக் குறைவாக தனிநபர் தாக்குதல் நடத்துவது சரியா?

    ReplyDelete
  5. இந்தப் பதிவிற்கு எதுவும் சொல்லப் போவதில்லை...

    /// உங்களின் பாட்டுக்கு பாட்டிற்கு யார் எதிர் பாட்டு பாடப் போகிறார்கள்? மனிதனின் மனதை மட்டுமே படம் பிடிக்காமல், கொஞ்சம் வெளி உலகைப் பற்றியும் எழுதுங்கள்! ///

    இது நீங்கள் இட்ட கருத்துரை... பதிவு : உன்னை அறிந்தால்... (பகுதி 3)

    சுருக்கமாக சொல்லிக் கொள்கிறேன்... 30 ஆண்டு வெளி உலகம் தான் வாழ்க்கை... அதாவது சொந்த ஊரில் இல்லாமல், பலப்பல ஊர்களில் - பலபல பொறுப்புகளில் - பிழைப்பிற்காக அல்ல - பல்வேறு துறைகளிலும் கொண்ட ஆர்வத்தால்... மற்றவைகளை நேரில் சந்திக்கும் போது உரையாடுகிறேன்...

    நேரம் கிடைப்பின் அந்தப் பதிவை மறுமுறை எனக்காக வாசிக்கவும்... குறிப்பாக எதிர்ப்பாட்டில் highlight செய்யப்பட்ட வரிகளை... சிறியதாக உங்கள் மனதிற்கு ஆறுதல் அளித்தாலும் சந்தோசம்...

    நன்றி...

    வணக்கம் ஐயா...

    ReplyDelete
  6. சாதிய அமைப்பில் சிலவகுப்பினர் தங்களை உயர்வாக கருதிக் கொள்வதை போல் மதம் தொடர்பான கொள்கைகளில் நாத்திகம் பின்பற்றும் அவர்கள் தங்களை மற்றவர்களை காட்டிலும் உயர்வானவர்களாக கருதும் மனப்பான்மை அத்தகைய நபர்களாக காட்டிக்க கொள்ளும் பதிவர்களிடம் உள்ளதை காணமுடிகிறது.

    ஒன்றை நிறுபிக்க முடியவில்லை என்பதால் அது இல்லை என்று ஆகிவிடாது. பார்வையற்றவர்கள் காட்சிகளை உணர்வது எவ்வாறு? செவித்திறனற்றோர் ஒசை இருப்பதை எவ்வாறு எப்படி அறிய முடியும்? பார்வை உடையவை‌ர்கள் கண்களுக்கு புலப்படுவது அணைத்துமே அதை அப்படியே பிரதிபளிப்பதில்லை உதாரணம் சிலராலும் சில விலங்குகளாலும் வண்ணங்களை காண இயலாது ஆனால் காட்சி புலப்படும். அவர்கள் அல்லது எவ்வாறு வண்ணங்கள் உள்ளதை அறிய முடியும்?

    ReplyDelete
  7. தி.தமிழ் இளங்கோ,

    இதுக்கு முன்னரே கொஞ்சம் உரசல் ஆகி இருக்கும் போல, முந்தைப்பதிவுகளையும் படிச்சு பார்க்கிறேன்.

    ஆனால் இதுக்குலாம் டென்ஷ்ன் ஆகாமல் வழக்கம் போல "உங்க பாணியில்" மிதவாதமாக கருத்துக்களை எடுத்து வைக்கவும்! "Dog(god) fight" லாம் உங்களுக்கு சரியா வராது :-))

    ReplyDelete
  8. திரு.வௌவால் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமை. என்னைப்பொறுத்தவரை யாரும் யாரையும் மாற்றிவிடமுடியாது. யார் எப்படி இருந்தாலும் நம் அமைதிதான் முக்கியம். மனதுக்கு சரி என்று எண்ணுவதை செய்துகொண்டு நகர்வது நல்லது என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
  9. அறுபதை எட்டியதற்கு வாழ்த்துகள்.
    வருண் அப்படித்தான் பேசுவாரு. அதை எல்லோரிடமும் பேசுவது மிக தவறான செயல் என புரியலையே அவருக்கு. வருணுக்கு இடுகையே அடுத்த பதிவர்களை பற்றி எழுதுவது தான். வவ்வாலுக்கு பதில் சொன்னிங்க, அவரை கொதற முடியாதுன்னு அவரு உங்களை கொதறுறாரு. எல்லாம் "போலி டோண்டு" டெக்னிக் தான். வவ்வாலுக்கிட்டயும் வம்பு பண்ணுனார் ஆனா எதிர் தாக்குதல் பலமா இருந்தது, முடியாம பின்வாங்கிட்டார். எல்லாரும் வவ்வால் மாதிரி இருக்க முடியுமா? உங்க சிக்கலுக்கு காரணம் வவ்வால் தான் :).

    ReplyDelete
  10. கருத்துரை தந்த
    திண்டுக்கல் தனபாலன் (1,2)
    Ant
    வவ்வால்
    Packirisamy N
    குறும்பன்
    ஆகிய அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி >வவ்வால் said...

    வவ்வால் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // தி.தமிழிளங்கோ சார், நமக்கு பதில் சொன்ன பின்னூட்டம் இன்னொரு "விவாதம்" கிளைவிட வழிவகுக்கிறதே :-)) //

    சிலசமயம் அப்படித்தான் ஆகிவிடுகிறது. இவர்கள்; அடித்துக் கொள்ள அடுத்தவர்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்

    // நீங்க மிதவாத ஆத்திகர் அப்படி இருந்தும் இந்த விடயத்தில் பொங்குவது சற்றே ஆச்சர்யம் தான்! ஒரு வேளை தான் நம்பும் மத உணர்வு என்பதால் தானாக ஒரு "வேகம்" பிறக்குமோ?//

    நான் மிதவாதமோ தீவிரவாதமோ இல்லை. தனிப்பட்ட முறையில் அடுத்தவரை இழுப்பதுதான் பிடிக்கவில்லை.

    மீண்டும் மீண்டும் மதம் பற்றிய் உங்கள் சர்ச்சைக்குள நுழையவேண்டாம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. இந்த பதிவுக்கு சம்பந்தப்படாத கருத்துக்கள் அனைத்தும் நீக்கப் படுகின்றன. மேலும் சில விரும்பத்தகாத, தேவையற்ற வாக்குவாதங்களத் தவிர்க்கும் பொருட்டு நானும் எனது பதிவில்
    COMMENTS MODERATION – ஐ அமைத்துவிட்டேன். அன்பர்கள் மன்னிக்கவும்.

    ReplyDelete
  13. //என்னுடைய நேர்மையைப் பற்றி நீங்கள் பேச வேண்டியதில்லை. நீங்கள் நேர்மையாளர், யோக்கியர் என்றால் நீங்கள் யார் என்பதனை முதலில் வெளிக்காட்டுங்கள். ஒரு முகமூடியைப் போட்டுக் கொண்டு எழுதாதீர்கள்.பெரியார் என்றால் யார் என்று எல்லோருக்கும் தெரியும். பெரியார் வெளிப்படையான நாத்திகவாதி. இன்ன ஊரில் இன்ன இடத்தில் இன்ன நேரத்தில் கூட்டம் நடக்கும் என்று வெளிப்படையாகச் சொல்லி கூட்டம் நடத்தினார். இந்த வருண் என்ற பதிவர் யார் எப்படிப்பட்டவர் என்று தெரியவில்லை.//

    உங்கள் வயது 60. வலைபதிவு எழுதாரம்பித்து சில்லாண்டுகளே ஆகின்றன. இல்லையா? வாலிபத்தில் அலலது வேலையில் ஒரு பொது அரசமைப்பில் இருந்த காலகட்டத்தில் நீங்கள் வலைபதிவை ஆரம்பித்து மத ஜாதி இன சம்பந்தமாகவோ, அல்லது அரசின் கொள்கைகளையோ விமர்சனங்கள் செய்யவில்லை ஏன்?. அரசு சட்டம் அதை அனுமதிக்கவில்லை அரசு ஊழியர்களுக்கும். தனியாரும் தடை செய்வார்கள். ஆக, உங்களுக்கு தைரியம் இப்போது வந்திருக்கிறது. வலைபதிவில் எழுதும் இளையவர்கள் தங்கள் முகங்களை மறைத்துக்கொள்வது பாதுகாப்பு கருதியேயொழிய, கோழைத்தனமென எடுக்கவியலாது. பெரியார் எந்த பொது அமைப்பிலும் பணியாற்றவில்லை. எனவே மனம் போனபடி பேசினார்; வாழ்ந்தார். மற்றவர்களால் முடியுமா? வருண் அப்படியே எழுதட்டும். ஜயமோகன் அரசு ஊழியராக இருந்த போது தம் பேச்சுரிமைக்கு முழு சுதந்திரம் கிடைக்காது என்றே விலகி தற்போது தனக்குத்தோன்றியவாறு எழுதிக்கொண்டிருக்கிறாரில்லையா/ அதைப்போல.

    ReplyDelete
  14. //ஒரு வீட்டின் வரவேற்பறையில் இன்ன இன்ன இருக்க வேண்டும் என்று அந்த வீட்டின் சொந்தக்காரன் வைத்து இருப்பான். அந்த வீட்டில் நுழைந்து கொண்டு அதனை அங்கு வைக்காதே ,இதனை இங்கு வைக்காதே என்று மற்றவர்கள் அதிகாரம் செய்ய முடியுமா?. வேண்டுமானால் யோசனை சொல்லலாம். அதைப் போலவே வலைப்பதிவும்.//

    சரியில்லா வாதம். வலைப்பதிவில் தனிநபர் வலைப்பதிவை நீங்களும் வருணும் எழுதுகிறீர்கள். ஆனால் அதை பொதுவெளியில் - தமிழ்மணத்தில் இணைத்து - உலகெல்லோரும் படிக்கும்படி வைத்துவிடுகிறீர்கள். உலகெல்லோரும் அதைப்படித்துவிட்டு நீங்களிருவரும் எழுதியதை அப்படியே ஏற்றுக் கைதட்ட வேண்டும்; அல்லது உங்களுக்குப்பிடித்தவண்ணமே விமர்சனம் செய்யலாமென எதிர்பார்ப்பது என்ன நியாயம் தமிழ் இளங்கோ? அபத்தமான கருத்துக்களுக்கு எப்படி விமர்சனம் செய்வது? மேலும், விமர்சகரெல்லாம் ஒரேமாதிரி உணர்வுகள் உள்ள்வராயிருப்பரா? சபை நாகரிகமுண்டு சரி. வாடா போடா என்றா வருண் எழுதியிருக்கிறார்?

    சிலர் தனிநபர் வலைபதிவு வைத்திருக்கிறார்கள். ஆனால் அதைப்பொதுவில் திறந்து வைப்பதில்லை. அவர்கள் அனுமதி பெற்றவர்கள்தான் பின்னூட்டமிடமுடியும். எ.கா. ஜயமோகன். தேசிகன். அதைப்போல செய்துவிடுங்கள். அதே நேரத்தில் உங்கள் பதிவுக்கருத்துக்களை பற்றி அவர்கள் தங்கள்தங்கள் வலைபதிவுகளில் - தற்போது வருண் செய்ததைப்போல - காரசார விமர்சனங்கள் எழுதுவதை நீங்கள் தடுக்க முடியாது.

    வாதங்களை வாதங்களால் எதிர்நோக்குங்கள்.

    ReplyDelete
  15. மறுமொழி > குலசேகரன் சொன்னது ( 1 & 2 )

    சகோதரர் குலசேகரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! ஒரு வீட்டின் வரவேற்பறை என்று சொன்னது மற்றவர்கள் புரிந்துகொள்ள ஒரு உதாரணம்தான். பொதுவெளி, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நாகரிகமாக கருத்துரை சொன்னால் பரவாயில்லை. தனது கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக தனிநபர் விமர்சனம் எதற்குச் செய்ய வேண்டும் என்பதுதான் கேள்வி.” வாடா, போடா” என்று எழுதுவது மட்டும்தான் அவதூறா? ஜெயதேவ்தாஸ் என்ற பதிவர் ஒரு கருத்தை எனது பதிவில் எழுதினார். வருண் அவரைச் சீண்டி ஒரு கருத்தை எழுத, ஜெயதேவ்தாஸ் எதிர்வினையாக அவர் எழுத – இப்படியே போனது. விவாதம் ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்லிக் கொண்டதால் ஒருகட்டத்தில் முடிந்துவிடும் என்றே நினைத்தேன். ஆனால் வருணோ என்னை எனது பதிவில் மட்டுமல்லாது அவரது பதிவிலும் குதற ஆரம்பித்தார். அதற்குப் பிறகுதான் இந்த பதிவை எழுதினேன்.

    --------------

    அதாவது தனக்கு பாதுகாப்பாக ஒரு முகமூடி போட்டுக் கொண்டால் மற்றவர்களை எப்படி வேண்டுமானாலும் சீண்டலாம் எழுதலாம் என்று அர்த்தமா? என்னைப் போன்றவர்கள் வெளிப்படையாக இருப்பதால்தானே ஒரு கட்டுப்பாட்டுக்குள் எழுத முடிகிறது. அந்த சுயகட்டுப்பாடு உங்களுக்கெல்லாம் கிடையாதா? நானும் எனது பதிவில் இப்போது வேறு வழியில்லாமல் COMMENTS MODERATION – ஐ அமைத்துவிட்டேன்
    பெரியார் எந்த அரசு உத்தியோகமும் பார்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் பொதுவாழ்வில் அவர் தன்மீது நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்பார்த்தே இருந்தார். நானும் பொதுவாழ்வில் தொழிற்சங்க நிர்வாகிகளில் ஒருவனாக இருந்து நிர்வாகத்தை கேள்விகள் கேட்டவன்தான்.. முதலில் உங்கள் நண்பரை சாதாரண்மாக, யாரையும் எதிரியாக பாவிக்காமல் இயல்பாக தன்னுடைய கருத்தை எழுதச் சொல்லுங்கள். அது அவருடைய பாணி என்றால் வேறு என்ன சொல்ல முடியும்.?



    ReplyDelete
  16. வலையுலக கருத்து மோதல் வருத்தத்தை அளிக்கிறது ஐயா.
    மாறுபட்ட கருத்துக்களை முன் வைப்பதில் தவறில்லை.
    ஆனாலும் நாகரிகம் காக்கப்பட வேண்டும் என்பது என் எண்ணமாகும்.

    ReplyDelete
  17. COMMENTS MODERATION – ஐ வைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி ஐயா... இதை முதலில் சொல்லலாம் என்று நினைத்தேன்... தவறாக எடுத்துக் கொள்வீர்கள் என்று தான் சொல்லவில்லை...

    எனது தளத்தில் Followers (At present 527)-யை கைபேசியில் உரையாடும் வலைத்தள நண்பர்கள் இரு மடங்கு... இதை விட வேறென்ன வேண்டும்...? இதை எதற்காக சொல்கிறேன் என்றால் - ஒரு ஆன்மீக மூத்த பதிவரைப் பற்றி சில... பெயர் சொல்ல விரும்பவில்லை... அவரின் நிஜ வாழ்வின் அனுபவங்கள் பல எனக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது... அது வேறு விசயம்... பிறகு நேரில் சந்திக்கும் போது சொல்கிறேன்...

    தொடர்ந்து ஒரு Special அன்பரின் கருத்துரைகளால் அவருக்கு மன சங்கடங்கள்... அதனால் அவர்கள் பதிவுகளும் சில மாதங்கள் வரவில்லை... அந்த சமயம் அவரிடம் ஓரிருமுறை தான் பேசியிருந்தேன்... ஒரு நாள் உரையாடலில் இதைப் பற்றி பேச்சு வந்த போது தான், விளக்கமாக கூறினார்... அதன் பின் பதிவு எழுதவும் மனமில்லை என்றார்... எனக்கு முதலில் வியப்பு + வருத்தம்... சின்னதாக ஒரு யோசனை... வேறு ஒன்றுமில்லை... இதோ இப்போது நீங்கள் செய்த COMMENTS MODERATION...! + அப்படி செய்த பிறகு (முக்கியமாக) "கருத்துரைகள் மின்னஞ்சலுக்கு வருமா...?" என்றேன்... "ஆமாம்" என்றார்... அப்படியானால், இனி Blogger சென்று கருத்துரைகளை படித்து விட்டு வெளியிட வேண்டும் என்று அவசியமில்லை... ஏனென்றால் அதில் படிக்க நேரிடும்... அதனால், கொடுத்த மின்னஞ்சலுக்கு வரும் கருத்துரைகளில், அந்த Special நண்பரின் பெயர் இருந்தால், பக்கத்தில் உள்ள பெட்டியில் டிக் அடுத்து உடனே delete.... "அதை ஏன் படிக்கணும்...?" என்றேன்... புரிந்து உணர்ந்து கொண்டார்... இப்போது தொந்தரவு இல்லை... மகிழ்ச்சியாக பகிர்வுகள் தொடர்கிறது...

    (கருத்துரைகள் மின்னஞ்சலுக்கு வர : Settings ---> Mobile and email ---> Comment Notification Email ---> தேவைப்படும் மின்னஞ்சல்களை இடலாம்...)

    இனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...! - புதியவர்களுக்கான தொழில்நுட்ப பதிவில் 1) Who can comment 2) Comment Moderation - இந்த இரண்டைப் பற்றியும் இனி வரும் பதிவுகளில் என்று சொல்லியிருக்கிறேன்... (இதையும் எழுதி விட்டுத் தான் விடை பெற வேண்டும் என்று எண்ணியுள்ளேன்... ம்... பார்ப்போம்...)

    இனி வலைத்தளம் பற்றிய கணினி வகுப்பிலும், வரப் போகும் (?) பகிர்விலும் உங்கள் பதிவு(ம்) உதவும் ஐயா... நன்றி...

    ReplyDelete

  18. Amudhavan said...
    தங்களுக்கு அறுபதாவது பிறந்தநாள் என்பது தாமதமாகத்தான் தெரிந்தது. என்னுடைய வாழ்த்துக்கள்.
    4 April 2014 20:49

    ReplyDelete
  19. தி.தமிழிளங்கோ சார்,

    என்ன ஒருப்பின்னூட்டத்தக்காணோம், உங்க வரையறையை தாண்டிட்டனோ அவ்வ்!

    முந்தைய பதிவில் "அமுதவன் சாருக்கு" நான் சொன்னப்பதில் ஏன்னு இப்போ தெரியுமே :-))

    மோப்பக்குழையும் அனிச்சமலர் போல மெல்லிதயம் கொண்டவராக இருக்கீங்களே :-))

    # வருண் என்ன செய்தாரோ அதை சரி என நான் சொல்லவில்லை,ஆனால் அதுக்கெல்லாம் "உணர்ச்சிவசப்படக்கூடாது" என்பதெ நான் சொல்ல வந்தது,அவரைப்போல நாத்திகர்கள் மட்டும் பேசுவதில்லை ,ஆத்திகர்களும் பேசுறாங்கனு,உதாரணம் கூட கொடுத்தேன்.

    எப்படி ஒருக்கருத்தினை எடுத்துக்கொள்வது என்பது அவரவர் மனம் சொல்வதை பொறுத்து,ஆனால் எல்லாத்துக்கும் "பதட்டம்" அடைந்தால் , பதறிக்கிட்டே தான் இருக்க நேரிடும்.

    எனக்கு எதுக்கு இந்த விளம்பரம், ஆனாலும் உங்க விளம்பரத்துக்கு நன்றினு வருணுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு , கடந்து வந்திருந்தால் ,அவருக்கு "சப்புனு" போயிருக்கும், இப்போ அவர் எதிர்ப்பார்த்தாப்போல பதட்டமாகிட்டிங்களே அவ்வ்!

    அப்படியில்லைனா பதிலுக்கு பதற விட்டிருக்கணும் ,வேண்டும்னா சொல்லுங்க, உங்க சார்பா அவரை "பதற" விடுறேன் ,ஹி...ஹி கூலிப்படை ரேஞ்சில வேலை செய்வோம்ல :-))

    ---------------------

    ஓய் குறும்பன்,

    //எல்லாரும் வவ்வால் மாதிரி இருக்க முடியுமா? உங்க சிக்கலுக்கு காரணம் வவ்வால் தான் :).//

    என்ன பாராட்டுறப்போல போட்டுக்கொடுக்க பார்க்கிறாப்போல இருக்கே ஆவ்வ்!
    ------------
    பக்கிரிசாமி,

    மலேசிய விமானம் போல மாயமா பின்னூட்டம் மறையும் முன்னரே படிச்சிட்டிங்க போல,நன்றி!
    ------------------

    ReplyDelete
  20. இளங்கோ சார்,

    "நான் வெளிப்படையானவன், சமரசம் செய்துகொள்ளாதவன்" என்று சொல்லிக்கொள்வது ஒரு பேஷன் ஆகிவிட்டது.இணையத்தில் பலதரப்பட்ட மனிதர்கள் புழங்குகிறார்கள். யாராவது இப்படி அதிகமாக பேசிவிட்டு போவது சகஜம்.அதை உள்வாங்கமல் கடந்துசெல்வதே சாலச்சிறந்தது.

    வவ்வால்,

    //அப்படியில்லைனா பதிலுக்கு பதற விட்டிருக்கணும் ,வேண்டும்னா சொல்லுங்க, உங்க சார்பா அவரை "பதற" விடுறேன் ,ஹி...ஹி கூலிப்படை ரேஞ்சில வேலை செய்வோம்ல :-)) //

    இது என்ன சைடு பிசினஸா?

    ReplyDelete
  21. பதிவுகளும்பின்னூட்டங்களும் வலையுலகச் சூழலை அனுமானிக்கச் செய்கிறாஊ

    ReplyDelete
  22. //வவ்வால் said...
    எனக்கு எதுக்கு இந்த விளம்பரம், ஆனாலும் உங்க விளம்பரத்துக்கு நன்றினு வருணுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு , கடந்து வந்திருந்தால் ,அவருக்கு "சப்புனு" போயிருக்கும், இப்போ அவர் எதிர்ப்பார்த்தாப்போல பதட்டமாகிட்டிங்களே அவ்வ்! //
    ஏன் வவ்வால் நீங்களும் உங்க மீது தாக்குதல் வந்தபோ எனக்கு எதுக்கு இந்த விளம்பரம் ஆனாலும் உங்க விளம்பரத்துக்கு நன்றினு வருணுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு கடந்து வந்திருக்காமில்லையா ஏன் அப்படி நீங்க செய்யல்ல?

    ReplyDelete
  23. குட்டிப்பிசாசு,

    ஹி...ஹி மனுஷாளுக்கு மனுஷா ஒரு ஒத்தாசை தான் ஓய் :-))

    இணைய கூலிப்படை தலைவனாகலாம்னு பார்த்தா விட மாட்டீரே அவ்வ்!
    ------------

    வேகநரிங்ண்ணா,

    சொன்னதை நல்லாப்பாரும் ,நாம பதறாம கடந்து விடனும், அல்லது அவங்களை பதற விடனும்னு சொல்லி இருக்கேன்.

    நான் தனியா பதிவெல்லாம் போட்டு பொலம்பலையே அங்கேயே போய் சலம்பல் தானே செய்தேன். எல்லாத்திலயும் உமக்கு அவசரம் ,பாத்து வாய் சுட்டுறப்போவுது :-))

    இந்த பாகவதர் கூட தான் என் மேல பாய்ஞ்சார் நானென்ன பதிவு போட்டு நேரமா வீணாக்கினேன் ,நேரா அங்கேயே போய் கச்சேரி வச்சு கதற விட்டாச்சுல ,இணையத்தில சண்டியர் தனம் செய்றது தான் ரொம்ப ஈசி , இதுக்கு போய் பயப்படலாமா?

    ReplyDelete
  24. மறுமொழி > (II )

    மேலே கருத்துரை தந்த,

    எழுத்தாளர் அமுதவன்,
    திரு.குலசேகரன்,
    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயகுமார்,
    சகோதரர் திண்டுக்கல் தனபாலன்,
    வவ்வால் சார்,
    குட்டி பிசாசு,
    பெரியவர் அய்யா G.M.பாலசுப்ரமண்யம்,
    வேகநரி,

    ஆகிய அனைவருக்கும் நன்றி!

    தமிழ்மணத்தில் வாக்களித்த, எதிர் வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி!


    ReplyDelete
  25. Varun blog padichale relax aganum. Adhuku than name 'relax please' nu vechurukar. Avarudaiya comments kuda apdithan. Tension agakudathu. Relax please

    ReplyDelete
  26. தங்களின் பிறந்த நாள் (60 ஆம் வயது தொடக்கம்) பற்றி செய்திக்கு இத்தனை விவாதங்களா? தனிப்பட்டோரின் கருத்தை விமர்சிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது பதிவுலகின் துரதிஷ்டமே!

    ReplyDelete
  27. குழந்தை பிறந்த ஓரிரு நாளில், பெற்றோரிடம் அதைப்பற்றி தெரியாத ஒருவர் உங்கள் குழந்தையின் வயது என்ன என்று கேட்டால், நீங்கள் வயது 1 (ஒன்று) தொடக்கம் என்று கூறுவீர்களா? பிறந்து ஒரு வயது ஆனபின்னே 1 வயது (தொடக்கமோ அல்லது முடிவோ) என்று கூறலாம். உங்களுக்கு 59 வயது முடிந்தபின்னே, 'எனக்கு 59 வயது என்று கூறிக்கொள்ளலாம்'. 60 வயது தொடக்கம் என்பது சரியல்ல. 60 வயது முடிந்தபின் மட்டுமே, எனக்கு 60 என்று கூறிக்கொண்டு, சீனியர் சிட்டிசன் ஆகலாம். ஆண்கள் பொதுவாக அதிகமாக வயதை கூறிக்கொள்வதும், பெண்கள் குறைவாக கூறிகொள்வதும் இயல்பு.

    ReplyDelete
  28. கருத்துரை தந்த,
    அன்பழகன் ராமலிங்கம்,
    அய்யா வே.நடனசபாபதி,
    வந்தவாசி ஜகதீச பாகவதர் - ஆகியோருக்கு நன்றி!

    ReplyDelete