Monday, 21 April 2014

கண்ணீர் அஞ்சலி! - பதிவர் திருமதி. T.V. தங்கமணி அவர்கள் மறைவு!நேற்று இரவு வலைப்பக்கத்தை பார்த்துக் கொண்டு இருந்த போது எனது DASH BOARD – இல்  http://kavidhaithuligal.blogspot.in/2014/04/blog-post.html  
இல்  திருமதி T.V.தங்கமணி  தோற்றம்  : 05-10-1939  மறைவு  : 28-03-2014 “ என்ற செய்தியைக் காண நேரிட்டது.

திருமதி. T.V. தங்கமணி அவர்கள் எமது கவிதைகள  http://kavidhaithuligal.blogspot.in என்ற வலைத் தளத்தில் வண்ண விருத்தங்களை இசையோடு வலைப் பதிவில் பாடி வந்தார். இவரைப் பற்றி வலைச்சர அறிமுகத்தில் நான் எழுதிய வரிகள் இவை: ( http://blogintamil.blogspot.in/2013/02/2.html )

எழுபத்துயிரண்டு வயது நிரம்பிய திருமதி. T.V. தங்கமணி அவர்கள். தானுண்டு தன் கவிதையுண்டு என்று எதனையும் எதிர்பாராது என் பணி அரன் துதி என்று வண்ண விருத்தங்களை இசையோடு வலைப் பதிவில் பாடுகிறார். எங்கள் ஊரான திருமழபாடியைப் பற்றிய இவரது கவிதையைப் பாடியதிலிருந்து இவரது கவிதைகளைப் படித்து வருகிறேன்..

வண்ணவிருத்தம் - "தனனா தனனா .. தனதான"
-----------------------------------------------

வலைமீ தினிலே.. படுமீனாய்
...
வதையே செயுமூ..ழதுவீழும்
கலைசேர் மதிசூ.. டிடுநேசன்
...
கழலே தருவான்..துணையாக
நிலையா மிறைவோன்..அருளேதம்
...
நினைவா யடியார்..தொழுமீசன்
அலையார் புனல்சேர்.. மழபாடி
...
அகலா துறைமா..மணிதானே!...
டேராடூனில் (உத்தரகாண்ட்) உள்ள “ TAPKESHWAR MANDHIR “  என்ற பழமை வாய்ந்த சிவன் கோவிலில் திருமதி. T.V. தங்கமணி அம்மாவின் "என் பணி அரன்  துதி"என்ற வண்ண விருத்தங்கள் அடங்கிய நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது என்று செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. ஒசூரில் மகள் இல்லத்தில்தான் இருந்தார். மகன் ராமசாமி, மருமகள் அகிலா ஆகியோரது முயற்சியில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. திருமதி. T.V. தங்கமணியின் பேத்தி ஐஷ்வர்யா அவர்கள் அட்டைப்படம் வரைந்துள்ளார். (தகவல்: கூகிள்)
 
திருமதி. T.V. தங்கமணி அம்மா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி! அவரது ஆனமா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்! அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!


PHOTOS  THANKS TO:  

20 comments:

 1. அவரது ஆன்மா சாந்தியடைய
  பிரார்த்தித்துக் கொள்கிறேன்

  ReplyDelete
 2. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  ReplyDelete
 3. திருமதி. T.V. தங்கமணி அம்மா அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 4. திருமதி.T.V. தங்கமணி அம்மா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி! அவரது ஆனமா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்! அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  ReplyDelete
 5. சிவனோடு கலந்து விட்டது அவரது சீவன்.
  ஆழ்ந்த இரங்கல்கள்

  ReplyDelete
 6. T.V. தங்கமணி அம்மாள் அவர்களின் ஆன்மா சாந்தியடைய
  எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

  ReplyDelete
 7. மூத்த வயதிலும் பதிவெழுதி தமக்கான இடத்தையும், நினைவலைகளையும் விதைத்துச் சென்ற அம்மையார் இயற்கையோடு இரண்டற கலந்துவிட்டமைக்கு, ஆழ்ந்த இரங்கல்கள்..

  ReplyDelete
 8. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 9. பதிவர் T.V. தங்கமணி அம்மாள் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  ReplyDelete
 10. பதிவர் டி.வி. தங்கமணி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவருடைய குடும்பத்தினருக்கு இறைவன் ஆத்ம பலம் தர வேண்டுகிறேன்.

  ReplyDelete
 11. கண்களைக் குளமாக்கும் செய்தி கண்டேன் :((
  T .V .தங்கமணி அமாவிற்கு என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் !!
  இந்த அம்மையாரின் கவிதை வரிகளைக் கண்டு இவை நாயன்மார்களினால்
  எழுதப்பட்டவை அதைத் தொகுத்தே இங்கு தருகின்றார்கள் என்று நான்
  பல தடவைகள் எண்ணியதுண்டு .வியத்தகு எழுத்தின் உயிர் நாடி
  இவர்களை நான் வலைச்சர ஆசிரியைப் பணியில் இருந்த போது மிக
  மகிழ்வுடன் அறிமுகம் செய்து வைத்தேன் .http://blogintamil.blogspot.ch/2013/07/blog-post_23.htmlஅன்னாரின் ஆன்ம சாந்தி பெறவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் அம்மையாரின் உறவினர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் .இத் தகவலை எங்களுக்கு வழங்கிய தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா :((

  ReplyDelete
 12. நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார். பிறப்பவர் ஒரு நாள் மறையத்தானே வேண்டும் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  ReplyDelete
 13. மிகவும் வருத்தமான செய்தியாக உள்ளது. திருமதி. T.V. தங்கமணி அம்மா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி! அவரது ஆனமா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்! அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

  ReplyDelete
 14. திருமதி. T.V. தங்கமணி அம்மா அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 15. எளிமையும் அடக்கமும் மிகுந்த அமைமையாரின் மறைவு கேட்டு துயரம் மண்டுகிறது அவர் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்!

  ReplyDelete
 16. திருமதி.T.V.தங்கமணி அம்மாளின் ஆன்மா அமைதியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 17. டி.வி.தங்கமணி அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா

  ReplyDelete
 18. கண்ணீர் அஞ்சலிyum அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  ReplyDelete
 19. மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு இறைவனாடியை அடைந்திருக்கிறார் இந்த அம்மையார். அங்கும் தனது கவிதை பாடும் பணியைத் தொடர்ந்திருப்பார் நிச்சயம். மேன்மையான அந்த ஆன்மா சாந்தியடையட்டும்!

  ReplyDelete