Tuesday 15 April 2014

நோட்டா என்ன செய்யும்?



நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க , எல்லாவற்றையும் விட்டுவிட்டு , தேர்த்ல் அறிவிப்பு வந்ததிலிருந்து சிலர் வாயில் வருவது நோட்டாஎன்ற சொல். அபபடி என்ன நோட்டாவில் இருக்கிறது. ஐ.நா சபையில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பயன்படுத்தும் வீட்டோ  போன்று அதிக அதிகாரம் படைத்ததா என்றால் இல்லை. நோட்டோ என்பது  ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் ஒரு வாக்காளருக்கு பிடிக்கவில்லை என்றால், இருக்கின்ற வேலையை எல்லாம் விட்டுவிட்டு அந்த வாக்காளர் நடந்தோ அல்லது சொந்த வண்டியிலோ வந்து வேர்க்க விறுவிறுக்க கியூ வரிசையில் நின்று, தான் இன்னார்தான் என்று நிரூபித்துவிட்டு  “நோட்டாபட்டனைத் தட்டிவிட்டு செல்ல வேண்டும். நோட்டா (NOTA) என்ற ஆங்கில சொல்லுக்கு NONE OF THE ABOVE  என்று சொல்லிக் கொள்கிறார்கள். கிராமத்து மக்களிடம் சொன்னால்.அது என்ன லோட்டா? என்று கேட்கிறார்கள். வழக்கம் போல சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் இதைத் தூக்கிக் கொண்டு நோட்டீஸ் கொடுப்பதிலும், வீடுவீடாகச் சென்று  பிரச்சாரம் செய்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்காள். அவர்கள் உண்மையிலேயே நோட்டா ஆர்வலர்களா அல்லது வேறு ஏதேனும் எண்ணம் கொண்டவர்களா என்று தெரியவில்லை.

                                       (PHOTO ABOVE THANKS TO HINDUSTANTIMES)

சாதாரணமாக ஒரு சிறு குழந்தைகூட தனக்கு ஒரு சின்ன கோபம் என்றாலும் தனது கோபத்தைக் காட்ட சாப்பாட்டை புறக்கணிக்கிறது. வக்கீல்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட நீதிமன்ற புறக்கணிப்பு செய்கிறார்கள். இதுபோல அவரவர் நிலைக்கு ஏற்ப புறக்கணிப்பு செய்கிறார்கள். சரி அப்படியே நோட்டா ஓட்டு போட்டாலும் என்ன நடந்து விடப் போகிறது? உதாரணத்திற்கு ஒரு தொகுதியில் வேட்பாளர்களுக்கு விழும் ஓட்டுகளை விட நோட்டோ அதிகம் இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியவில்லை. ஒரு தொகுதியில்
  
X     - 10000 வாக்குகள்
Y     - 20000 வாக்குகள்
Z     - 30000 வாக்குகள்
NOTA 40000  வாக்குகள்

என்று வாக்குகள் விழுந்தால் என்ன செய்யப் போகிறார்கள். 30000 வாக்குகளைப் பெற்ற Z ஐத்தான் வெற்றி பெற்றவராக அறிவிப்பார்க்ள்.

தினமணி தரும் செய்தி “ நோட்டாவுக்கு ஒரு தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகள் பதிவானால் என்ன செய்வது என்பதற்கு இப்போதுள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் பதில் இல்லை. இது குறித்து விவாதித்து உரிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தால்தான் நோட்டாவை வேகமாகப் பிரபலப்படுத்த முடியும்.

அப்புற்ம் எதற்கு அய்யா நோட்டோவுக்கு என்று ஒரு பட்டன். அதை எண்ணுவதற்கு ஏகப்பட்ட அலுவலர்கள். இதனால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது. வேண்டுமானால் சிலர் எங்களால்தான் நோட்டோ ஓட்டுக்கள் அதிகம் விழுந்தன என்று சொல்லி விளம்பரம் செய்து  கொள்ளலாம். சில வேட்பாளர்கள் எதிர் வேட்பாளருக்கு ஓட்டு போய்விடக் கூடாது என்பதற்காக இந்த நோட்டோவை தவறாகப் பயன்படுத்தவும் வழியுண்டு.

இப்போது தேர்தலுக்கு முன்னர் சில கூட்டணி காட்சிகள். நாம் தேர்தலில் வாக்களித்த பின்னர் , ரிசல்ட் வந்த பின்னர் மறுபடியும் கூட்டணியை கலைத்து போடுவார்கள். அப்போது தேர்தலுக்குப் பின்னர் ஒரு கூட்ட்ணி. வழக்கம் போல எல்லாம் நடைபெறும். மளிகைக்கடையை மாற்றுவது போலத்தான்.

எனவே மக்களே உங்கள் ஓட்டை அடுத்தவர் போட்டு விடுவதற்கு முன்னர் போய் போட்டு விடுங்கள். உங்கள் விருப்பம்!



PHOTOS THANKS TO GOOGLE IMAGES



35 comments:

  1. அப்ப நோட்டாவினால் ஒரு பலனுமில்லையா??!1

    ReplyDelete
  2. இப்போதுள்ள அரசியல் என்பது சிலர் பிழைப்பு நடத்துவதற்காக உபயோகிக்கும் இடம். எந்தத் தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் ஒவ்வொரு கட்சியாளரும் பேசிக்கொள்வதைக் கேட்பது வெறுப்படைய வைக்கிறது. எங்கும், எதிலும் நேர்மையற்றவர்கள் நிறைந்திருக்கும் கூட்டணிக் கேளிக்கைகள் மிகுந்த இடம். தனது தொகுதியில் எவராவது நேர்மை மிக்க வேட்பாளர் கிடைக்க மாட்டாரா என்று ஒருவர் ஏங்கு இடம்.

    இவர்கள் எல்லோருக்கும் சொரணை வரவேண்டும் என்று நினைப்பவர்களுக்குக் கையில் கிடைக்கும் ஒரே ஆயுதம்தான் நோட்டா.

    கோபாலன்

    ReplyDelete
  3. நிச்சயமாக நோட்டோவினால்
    பயனில்லை
    சுமார் கெட்டவனை தேர்ந்தெடுப்பதைத் தவிர
    நமக்கு வேறு வழியில்லை
    நோட்டோ ஓட்டுக்கள் எல்லாம் நிச்சயம்
    சுமார் கெட்டவனுக்கான ஓட்டாகத்தான் இருக்க வாய்ப்பு
    எனவே நோட்டோவை பயன்படுத்தாமல் இருப்பதே
    சரியென எனக்குப் படுகிறது
    பயனுள்ள பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. NOTA வோட்டு இப்போதிருக்கும் நிலையில் உபயோகமில்லாதது மக்கள் யாரையும் விரும்பவில்லை என்று தெரிந்தால் அரசியல் வாதிகள் திருந்தப் போகிறார்களா என்ன. வாக்குரிமை சட்டம் திருத்தப்பட இது ஒரு முன்னோடியாக இருக்கலாம். சிந்திக்க வேண்டிய விஷயம்

    ReplyDelete
  5. தற்போதைய நிலையில் NOTA Button ஐ அழுத்துவதன் மூலம் தகுதியில்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை நம்மால் நிறுத்த இயலாது. எனவே திரு இரமணி அவர்கள் சொல்வதைப்போல இருப்பவர்களில் யார் Better என நினைக்கிறோமோ அவருக்கு வாக்களிப்போம்.

    ReplyDelete
  6. என்ன இவ்வளவு கோவம் நண்பரே?
    மாற்றத்துக்கான முயற்சி தவறாக முடியலாம், அந்தத் தோல்வியே கூட மற்றொரு முயற்சிக்கு வழிகாட்டலாமே? “ஜனநாயகம்“ என்பதன் சொல் தரும் விவாதம் நம் நாட்டைப பொறுத்தவரை ஆழ்ந்த பின்னணி உடையதல்லவா? இந்தத் தளத்தின் கருத்தையும் பின்னூட்டங்களையும் அன்பு கூர்ந்து பாருங்கள். ஒரேயடியாக நோட்டா வேண்டாம் என்பதை விட, அதன் நன்மை தீமைகளை அலசுவது நல்லதல்லவா? http://www.sivakasikaran.com/2014/03/nota-49o.html நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. நீங்கள் போட்டுள்ள படத்தில் இருக்கும் யாருமே நமது தேர்தலிலே நிற்பவர் போல் தெரியவில்லை. அவங்க சின்னமும் என்னன்னு புரியல்.

    இட் இஸ் எ மேட் வர்ல்டு அப்படின்னு எதோ புதுசா கண்டு புடிச்சா மாதிரி சொல்றாக.
    அதனாலே, இமீடியட்டா ஒரு நோட்டா போட்டு விட்டேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  8. //வழக்கம் போல சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் இதைத் தூக்கிக் கொண்டு நோட்டீஸ் கொடுப்பதிலும், வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே நோட்டா ஆர்வலர்களா அல்லது வேறு ஏதேனும் எண்ணம் கொண்டவர்களா என்று தெரியவில்லை!..//

    உள்ளறுப்பு வேலைகளில் சமர்த்தர்கள்!..
    சில தினங்களாக நானும் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.
    இது எதில் போய் முடியும் என்று!..

    ReplyDelete
  9. மறுமொழி > ராஜி said...

    // அப்ப நோட்டாவினால் ஒரு பலனுமில்லையா??! //

    கருத்துரை தந்த சகோதரிக்கு நன்றி! எனக்கு தெரிந்தவரை இதனால் எந்த பின் விளைவும் ஏற்படப் போவதில்லை.

    ReplyDelete
  10. மறுமொழி > K Gopaalan said...

    // இப்போதுள்ள அரசியல் என்பது சிலர் பிழைப்பு நடத்துவதற்காக உபயோகிக்கும் இடம். எந்தத் தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் ஒவ்வொரு கட்சியாளரும் பேசிக்கொள்வதைக் கேட்பது வெறுப்படைய வைக்கிறது. எங்கும், எதிலும் நேர்மையற்றவர்கள் நிறைந்திருக்கும் கூட்டணிக் கேளிக்கைகள் மிகுந்த இடம். தனது தொகுதியில் எவராவது நேர்மை மிக்க வேட்பாளர் கிடைக்க மாட்டாரா என்று ஒருவர் ஏங்கு இடம். //

    எல்லோருக்கும் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்திய சகோதரர் K கோபாலன் அவர்களுக்கு நன்றி!

    // இவர்கள் எல்லோருக்கும் சொரணை வரவேண்டும் என்று நினைப்பவர்களுக்குக் கையில் கிடைக்கும் ஒரே ஆயுதம்தான் நோட்டா. //

    தேர்தலுக்குப் பிறகு நோட்டாவை என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.



    ReplyDelete
  11. மறுமொழி > Ramani S said... (1 , 2 )

    // நிச்சயமாக நோட்டோவினால் பயனில்லை சுமார் கெட்டவனை தேர்ந்தெடுப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை நோட்டோ ஓட்டுக்கள் எல்லாம் நிச்சயம் சுமார் கெட்டவனுக்கான ஓட்டாகத்தான் இருக்க வாய்ப்பு எனவே நோட்டோவை பயன்படுத்தாமல் இருப்பதே சரியென எனக்குப் படுகிறது பயனுள்ள பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் //

    கவிஞர் ரமணி அவர்களின் கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இதுதான் நடைமுறை உண்மை. நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // NOTA வோட்டு இப்போதிருக்கும் நிலையில் உபயோகமில்லாதது மக்கள் யாரையும் விரும்பவில்லை என்று தெரிந்தால் அரசியல் வாதிகள் திருந்தப் போகிறார்களா என்ன. வாக்குரிமை சட்டம் திருத்தப்பட இது ஒரு முன்னோடியாக இருக்கலாம். சிந்திக்க வேண்டிய விஷயம் //

    அரசியல்வாதிகள் இதற்கு உடன்படுவார்களா என்பது சந்தேகமே. இன்னும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.


    ReplyDelete
  13. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா வே.நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // தற்போதைய நிலையில் NOTA Button ஐ அழுத்துவதன் மூலம் தகுதியில்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை நம்மால் நிறுத்த இயலாது. எனவே திரு இரமணி அவர்கள் சொல்வதைப்போல இருப்பவர்களில் யார் Better என நினைக்கிறோமோ அவருக்கு வாக்களிப்போம். //

    முதன்முதல் நான் வாக்களித்தபோது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. நான் ஓட்டுப்போட்ட ஆள் ஜெயித்தாரா தோற்றாரா என்பதிலும் ஆர்வம் இருந்தது. இரண்டு அணிகளுக்கு இடையே விளையாட்டு போட்டி நடக்கும் போது நம்மையும் அறியாமல் ஒரு அணியைச் சார்ந்துவிடும் மனநிலைதான் அப்போது. இப்போது இல்லை.


    ReplyDelete
  14. மறுனொழி > நா.முத்துநிலவன் said...

    கவிஞருக்கு நன்றி!

    // என்ன இவ்வளவு கோவம் நண்பரே? மாற்றத்துக்கான முயற்சி தவறாக முடியலாம், அந்தத் தோல்வியே கூட மற்றொரு முயற்சிக்கு வழிகாட்டலாமே? “ஜனநாயகம்“ என்பதன் சொல் தரும் விவாதம் நம் நாட்டைப பொறுத்தவரை ஆழ்ந்த பின்னணி உடையதல்லவா? //

    கோபம் ஏதும் இல்லை. ஒரு பதிவர் என்ற முறையில் எல்லோருக்கும் தோன்றும் ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இது.

    // இந்தத் தளத்தின் கருத்தையும் பின்னூட்டங்களையும் அன்பு கூர்ந்து பாருங்கள். ஒரேயடியாக நோட்டா வேண்டாம் என்பதை விட, அதன் நன்மை தீமைகளை அலசுவது நல்லதல்லவா? http://www.sivakasikaran.com/2014/03/nota-49o.html நன்றி நண்பரே. //

    சில நாட்களாக வலைப்பக்கம் தொடர்ந்து வர இயலவில்லை. இதனால் ” சிவகாசிக்காரன் “ கட்டுரையை பார்க்க இயலாமல் போய்விட்டது. நோட்டா என்ற தலைப்பில் அவர் எழுதியது தெரிந்து இருந்தால் இந்த பதிவை எழுதி இருக்க மாட்டேன். கருத்துரை மட்டும் தந்து இருப்பேன். தகவலுக்கு நன்றி. அந்த பதிவை சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  15. வேட்பாளர்கள் எதிர் வேட்பாளருக்கு ஓட்டு போய்விடக் கூடாது என்பதற்காக இந்த நோட்டோவை தவறாகப் பயன்படுத்தவும் வழியுண்டு.இந்த அரசியல் மோசடியைத் தவிர்ப்பதற்கு மக்கள் தான் உசாராக இருக்க வேண்டும் .தக்க தருணத்தில் இடப்பட்ட சிறப்பான அறிவுரை கலந்த பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  16. நானும் முதலில் நோட்டாவிற்குத்தான் ஓட்டளிப்பது என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் இப்போது இப்படி வாக்குகளை வீணடிப்பது முறையல்ல என்று தோன்றுகிறது. ஆகவே எந்த கட்சிக்கு வாக்களித்தால் ஒட்டுமொத்த நாட்டிற்கு நல்லது என்று தோன்றுகிறதோ அந்த கட்சிக்கு வாக்களிப்பது என்று முடிவெடுத்துள்ளேன்.

    ReplyDelete

  17. மறுமொழி > sury Siva said...

    சுப்புதாத்தா அவர்களுக்கு வணக்கம்! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // நீங்கள் போட்டுள்ள படத்தில் இருக்கும் யாருமே நமது தேர்தலிலே நிற்பவர் போல் தெரியவில்லை. அவங்க சின்னமும் என்னன்னு புரியல்.//

    // இட் இஸ் எ மேட் வர்ல்டு அப்படின்னு எதோ புதுசா கண்டு புடிச்சா மாதிரி சொல்றாக. அதனாலே, இமீடியட்டா ஒரு நோட்டா போட்டு விட்டேன்.//

    அவர்கள் யாரும் தேர்தலில் நிற்கவில்லை. நோட்டா விஷயத்தில் ஒரே குழப்பம் என்பதால் முன்பு வந்த இந்த திரைப்படத்தின் தலைப்பு நினைவுக்கு வந்தது. நேரம் கிடைக்கும் போது யூடியூப்பில் ” IT’S A MAD MAD MAD MAD WORLD ” என்ற இந்த திரைப்படத்தை பார்க்கவும்.


    ReplyDelete
  18. உடனடியாக இதனால் பயன் ஏதும் இருப்பதாகத் தெரியா விட்டாலும், நோட்டா பற்றிய தங்களின் விளக்கங்களால், அதனால் ஏற்படக்கூடிய ஒருசில எதிர்விளைவுகளையும் மிக அருமையாக அலசியுள்ளீர்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  19. யாருக்கு ஓட்டுப்போடறதுன்னே இந்த தேர்தல்ல எல்லாரும் குழப்பமா இருப்பாங்க போலிருக்கு!

    ReplyDelete
  20. நோட்டா என்பது வாக்களிக்காமலும், யாருமே சரியில்லை எதற்காக வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்குச் சாவடி பக்கமே வராதவர்களை, வாக்குச் சாவடிக்கு வரவழைக்கும் ஒரு முயற்சி. இது ஒரு தொடக்கம் மட்டுமே என்று எண்ணுகின்றேன்.
    சில தொகுதிகளின் வேட்பாளர்க்ளுக்கு கிடைத்த ஓட்டுக்களை விட நோட்டாவுக்கு வாக்கு அதிகம் கிடைத்தால், மக்களின் நிலையினை , இன்றைய அரசியல் வாதிகளுக்குத் தெரியப்படுத்த, ஒரு வாய்ப்பு அல்லவா?
    உடனடிப் பயன் கிடைக்காவிட்டாலும், கால ஓட்டத்தில், பல மாறுதல்கள் வரலாம் அல்லவா
    நன்றி ஐயா

    ReplyDelete
  21. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // உள்ளறுப்பு வேலைகளில் சமர்த்தர்கள்!.. சில தினங்களாக நானும் யோசித்துக் கொண்டிருக்கின்றேன். இது எதில் போய் முடியும் என்று!..//

    ஆமாம் சகோதரரே! முன்பெல்லாம் சமூக ஆர்வலர்கள் பொது மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பாலமாக இருந்து பொதுமக்களுக்கு வேண்டியதை பெற்றுத் தந்தார்கள். ஆனால் இப்போது சமூக ஆர்வலர்கள் என்ற பெய்ரில் பொது மக்களுக்கும் நாட்டிற்கும் இடையில் பிளவு உண்டு பண்ணும் குழுவினர் உருவாக்கப்பட்டு வருகிறார்கள்.

    ReplyDelete
  22. மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said...

    // வேட்பாளர்கள் எதிர் வேட்பாளருக்கு ஓட்டு போய்விடக் கூடாது என்பதற்காக இந்த நோட்டோவை தவறாகப் பயன்படுத்தவும் வழியுண்டு.இந்த அரசியல் மோசடியைத் தவிர்ப்பதற்கு மக்கள் தான் உசாராக இருக்க வேண்டும் .தக்க தருணத்தில் இடப்பட்ட சிறப்பான அறிவுரை கலந்த பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா//

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! .

    ReplyDelete
  23. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    // நானும் முதலில் நோட்டாவிற்குத்தான் ஓட்டளிப்பது என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் இப்போது இப்படி வாக்குகளை வீணடிப்பது முறையல்ல என்று தோன்றுகிறது. ஆகவே எந்த கட்சிக்கு வாக்களித்தால் ஒட்டுமொத்த நாட்டிற்கு நல்லது என்று தோன்றுகிறதோ அந்த கட்சிக்கு வாக்களிப்பது என்று முடிவெடுத்துள்ளேன். //

    நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். பின்னாளில் சொல்லி மகிழ அல்லது ஒரு பதிவாக எழுத அது ஒரு அனுபவமாக அமையும்.

    ReplyDelete
  24. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // உடனடியாக இதனால் பயன் ஏதும் இருப்பதாகத் தெரியா விட்டாலும், நோட்டா பற்றிய தங்களின் விளக்கங்களால், அதனால் ஏற்படக்கூடிய ஒருசில எதிர்விளைவுகளையும் மிக அருமையாக அலசியுள்ளீர்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். //

    அன்பிற்குரிய V.G.K அவர்களுக்கு வணக்கம்! தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > கவிப்ரியன் கலிங்கநகர் said...

    // யாருக்கு ஓட்டுப்போடறதுன்னே இந்த தேர்தல்ல எல்லாரும் குழப்பமா இருப்பாங்க போலிருக்கு!//

    சகோதரர் கவிப்ரியன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள். பின்னாளில் சொல்லி மகிழ அல்லது ஒரு பதிவாக எழுத அது ஒரு அனுபவமாகவும் அமையலாம்.

    ReplyDelete
  26. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

    // நோட்டா என்பது வாக்களிக்காமலும், யாருமே சரியில்லை எதற்காக வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்குச் சாவடி பக்கமே வராதவர்களை, வாக்குச் சாவடிக்கு வரவழைக்கும் ஒரு முயற்சி. இது ஒரு தொடக்கம் மட்டுமே என்று எண்ணுகின்றேன்.//

    // சில தொகுதிகளின் வேட்பாளர்க்ளுக்கு கிடைத்த ஓட்டுக்களை விட நோட்டாவுக்கு வாக்கு அதிகம் கிடைத்தால், மக்களின் நிலையினை , இன்றைய அரசியல் வாதிகளுக்குத் தெரியப்படுத்த, ஒரு வாய்ப்பு அல்லவா? உடனடிப் பயன் கிடைக்காவிட்டாலும், கால ஓட்டத்தில், பல மாறுதல்கள் வரலாம் அல்லவா நன்றி ஐயா //

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! எதிர்காலத்தில் நல்லது நடந்தால் சரி! ஆனாலும் இன்றைய நிலைமை செல்லாத ஓட்டுகளுக்கு என்ன மதிப்போ அதே மதிப்புதான் , நோட்டா ஓட்டுகளுக்கும் இருக்கின்றது.

    ReplyDelete
  27. என்னமோ போங்க ஐயா...

    திரு. முத்து நிலவன் ஐயா சொல்லி விட்டார்கள்...

    ReplyDelete
  28. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // என்னமோ போங்க ஐயா...திரு. முத்து நிலவன் ஐயா சொல்லி விட்டார்கள்... //

    தேர்தல் முடிவுக்குப் பிறகு அய்யா கவிஞர் முத்துநிலவன் என்ன சொல்வார் என்று பார்ப்போம்.

    ReplyDelete
  29. அரசியலில் பங்குபெறக்கூடாது, தனக்கு மட்டும் பாதுகாப்பான வேலை வேண்டும் என்று அனைவரும் ஒதுங்கிக்கொள்ளும் நிலை மாறவேண்டும். அது இல்லாதவரை நேர்மையில்லாதவர்கள்தான் அதிகமாக அரசியலில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது. நோட்டோ வெற்றிபெற்றுவிட்டது என்று ஒத்துக்கொண்டால் ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை என்றும் பொருள்படுகிறது. அது மிகவும் மோசமான நிலை.

    ReplyDelete
  30. மறுமொழி > Packirisamy N said...

    கருத்துரை தந்த N.பக்கிரிசாமி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  31. நோட்டா - ஒரு புதிய முயற்சி. மேலும் சில மாற்றங்கள் வரலாம். வரும் என எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
  32. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    //நோட்டா - ஒரு புதிய முயற்சி. மேலும் சில மாற்றங்கள் வரலாம். வரும் என எதிர்பார்ப்போம். //

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
    மாற்றம் வந்தால் நல்லதுதான்!

    ReplyDelete
  33. matrankal enpathu sirithu sirithga than varum ethir kallathil nigalum vakku aliiral nithathum kidaipathu suthnthiam alla rutchium alla matrangal ellam sirithu sirithuvgave nakkum enve ehir kalathil nikkalum nottaukku votu poda oru katturai vlthuvigal

    ReplyDelete