Tuesday 22 April 2014

இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் (1951 – 1952)



இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அதன் முதல் பொதுத் தேர்தல் நடந்தபோது நான் பிறக்கவே இல்லை. எனவே அந்த தேர்தல் எவ்வாறு நடந்தது நடந்தது என்று அறிய GOOGLE SEARCH – இல் தேடினேன். அதில் கிடைத்த சில சுவாரஸ்யமான தகவல்களையும் புகைப்படங்களையும் இங்கு தொகுத்து தருகிறேன். அப்போதைய சென்னை மாகாணம் பற்றிய தேர்தல் படங்கள் இல்லை.

இந்தியாவின் முதல் பாராளுமன்றத் தேர்தல் 1951 ஆம் ஆண்டிலேயே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிர்வாகக் காரணங்களினால் தள்ளி வைக்கப்பட்டு 1951 1952 என்று பல கட்டங்களாக நடைபெற்றது. எனவே இந்த தேர்தல் இந்திய பொதுத் தேர்தல் -1951 என்றும் இந்திய பொதுத் தேர்தல் -1952 என்றும் இரு தலைப்புகளில் அழைக்கப்படுகிறது.


(படம் மேலே) காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு காரில் வலம் வரும் காங்கிரசார். அப்போது காங்கிரஸின் சின்னமாக இரட்டைக் காளைகள் இருந்தன.
  
(படம் மேலே) கம்யூனிஸ்டு ஆதரவாளர்கள் டோங்கா எனப்படும் குதிரை வண்டியில் ஆதரவு திரட்டுகின்றனர்.
  
(படம் மேலே) ஜனசங்கத்திற்கு ஆதரவாக ஓட்டு கேட்டு காரில் வலம் வரும் அவர்களது ஆதரவாளர்கள்..


(படம் மேலே) கண்பார்வையற்ற தனது தந்தையை ஓட்டு போட உறவினர்களோடு தூக்கி வந்த மகன்.

(படம் மேலே) ஓட்டு போட வரிசையில் நிற்கும் பெண்கள்
  
(படம் மேலே) மரநிழலில் ஓட்டு போட வரிசையில் நிற்கும் ஆண்கள், பெண்கள்

(படம் மேலே) அன்றைய ஓட்டுப் பெட்டிகள்

(படம் மேலே) ஓட்டு போடும் ஒரு பெண்மணி.

தேர்தல் முடிவுகள்: 

இந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று, ஜவகர்லால் நேரு , இந்தியக் குடியரசின் முதல் பிரதமர் ஆனார்.
அன்றைய கட்சி நிலவரம்:

Party
Abbr.
Votes
 %
Seats
ABHM

0.95
4
RRP

1.97
3
BJS
3,246,288
3.06
3
BPI

0.02
0
CPI
3,484,401
3.29
16
FB(M)

0.91
1
FB(R)

0.13
0
INC
47,665,875
44.99
364
KLP

1.41
1
KMPP
6,156,558
5.79
9
RCPI

0.06
0
RSP

0.44
3
SCF

2.38
2
SP
11,266,779
10.59
12
REP

0.04
0
RPP

0.05
0
UKS

0.06
0
AMNU

0.02
0
APP

0.03
0
CNSPJP

0.22
1
CP

0.01
0
CWP

0.31
3
GP

0.91
6
GSS

0.01
0
HPP

0.02
0
HR

0.00
0
HSPP

0.01
0
JKP

0.71
3
JP

0.06
0
KKP

0.13
0
KSP

0.1
0
KJD

0.03
0
KJSP

0.01
0
KMM

0.01
0
KNA

0.01
0
LSS

0.29
2
MSMLP

0.08
1
NPI

0.00
0
PWPI

0.94
2
PDF

1.29
7
PP

0.02
0
PDCL

0.01
0
PURP

0.01
0
RSP(UP)

0.02
0
SAD

0.99
4
SKP

0.13
0
SKS

0.03
0
TNTP

0.84
4
TNCP

0.03
0
TS

0.11
0
TTNC

0.11
1
UPP

0.2
0
ZP

0.27
0
Independents
16,817,910
15.9
37
Nominated Anglo-Indians
-
-
2
Total
105,944,495
100
489
நன்றி: WIKIPEDIA

இந்திய தேர்தல் ஆணையம்:

இந்திய தேர்தல் ஆணையம் ( ELECTION COMMISSION OF INDIA , NEW DELHI) இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் பற்றிய புள்ளி விவரங்களை STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1951 TO THE FIRST LOK SABHA என்ற தலைப்பில் சமர்ப்பித்தது. அதில், தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள், தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் என்று அனைத்து விவரங்களும் உள்ளன.


MY THANKS TO GOOGLE SEARCH  & GOOGLE IMAGES


29 comments:

  1. தகவல்களும் புகைப்படங்களும் அருமை!

    ReplyDelete
  2. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

    // தகவல்களும் புகைப்படங்களும் அருமை! //

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! பாராட்டுக்கள் அனைத்தும் கூகிளுக்கே சேரும்.

    ReplyDelete
  3. மறுமொழி > நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

    தங்களின் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி!

    ReplyDelete
  4. முதல் தேர்தல் பற்றிய செய்திகள் அறியாதவை. புகைப்படங்களும், செய்திகளையும் படிக்கும்போது நாம் அங்கிருந்து எவ்வளவு தூரம் வந்து விட்டோம் என்பது விளங்குகிறது. பெருமைப்பட வைக்கும் அளவிற்கு நாம் முன்னேறியிருந்தாலும், பல தற்போதைய நிகழ்வுகள் நாம் சில வகைகளில் முன்னேறவில்லை என்பதையும் நினைவுபடுத்துகிறது.
    நல்ல தொகுப்பு, சுவாரஸ்யம் அளிக்கிறது.

    ReplyDelete
  5. அரிய தகவல்கள்.
    அந்த இரட்டை காளை சின்னம் இன்னும் நினைவில் உள்ளது. அப்போது சுதந்திரா கட்சி என்று கூட ஒன்று இருந்தது அதன் சின்னம் நட்சத்திரம் தானே!..

    இரட்டைக் காளைகளுக்கு இயல்பாகவே - பாரம்பர்ய பெருமை. அதற்கப்புறம், ராட்டை சுற்றும் பெண், ஏர் உழவன், பசுவும் கன்றும் என்று ஆகி - தற்போது கை.. பல்வேறு அனர்த்தங்களை உள்ளடக்கிய - வெறும் கை!..

    இந்தப் பக்கம் மலையிடுக்கில் சூரியன். இரட்டை இலை துளிர்த்ததும் - பின் சேவல் இரட்டைப் புறா என்றாகி - திரும்பவும் இலை. எத்தனை எத்தனையோ மாற்றங்கள் - எல்லாம் அவர்கள் வாழ்வில் மட்டும்!..

    ஏழை எளிய மக்களின் கட்சி என்ற பிலாக்கணம் பாடியவர்கள் - இன்றைய மகா கோடீஸ்வரர்கள் - அன்றைக்கு சாமான்யர் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள். உங்களுக்கு உழைக்க எங்களுக்கு உத்தரவிடுங்கள் என்று பிதற்றினார்கள்.

    இன்றைக்கும், கேவலம் - பிரியாணிக்கும் குவாட்டருக்கும் ஏங்கிக் கிடக்கும் மக்களை உடைய தமிழகம் என்பதே நிரந்தர அவலம்!..

    ReplyDelete
  6. முதல் இரண்டு மூன்று தேர்தல்கள் வரை காங்கிரஸ் கட்சிக்கு இரட்டைக்காளைச் சின்னமே இருந்து வந்தது. நான் ஒரு 12-15 வயது சிறுவனாக இருந்த போது, மற்றொருவரால் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டேன்.

    திருச்சி அருணாசல மன்றத்தில் வோட்டர்ஸ் லிஸ்ட் கையினால் கார்பன் வைத்து எழுதிக்கொடுத்துள்ளேன். கையெழுத்து அழகாக உள்ளவர்களை மட்டும் ஈடுபடுத்துவார்கள். 100 பெயர்கள் எழுதிக்கொடுத்தால் 6 அணா வீதம் கூலியும் தருவார்கள்.

    மாட்டுப்பெட்டிக்கு ஓட்டுப்போடுங்க என கோஷம் இட்டுச் செல்வார்கள்.

    பூத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு ஓட்டுப்பெட்டி தனித்தனியே வைத்திருப்பார்களாம்.

    சுவாரஸ்யமான பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  7. காணக்கிடைக்காதப் புகைப்படங்கள்
    அரிய செய்திகள் ஐயா
    நன்றி

    ReplyDelete
  8. அந்த முதல் தேர்தல் வந்தபோது நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். வேட்பாளர்கள் (அப்போது அபேட்சகர்கள்!) எங்கள் ஊருக்கு வரும்போது என்னைப் போன்ற பிள்ளைகள் அவர்களின் மோட்டார் வாகனங்களின் பின்னால் அவர்கள் தரும் நோட்டீசை பெற போட்டி போட்டுக்கொண்டு ஓடியது நினைவுக்கு வருகிறது.

    அப்போது வாக்குப் பெட்டியின் முன்பக்கத்தில் வேட்பாளருடைய சின்னம் ஒட்டியிருக்கும். வாக்கு கேட்கும்போது அவர்களது சின்னத்தை சொல்லி அந்த பெட்டியில் ஓட்டு போடுங்கள் என்பார்கள். விவரம் தெரியாதவர்கள் அவர்களது வாக்கு சீட்டை உள்ளே போடாமல் மேலேயே வைத்துவிட்டு வந்ததுண்டு. பின்னால் வருபவர்கள் அதை எடுத்து தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு போட்டதும் உண்டு.

    சுவாரஸ்யமான தகவலைத் தந்தமைக்கு நன்றி!.

    ReplyDelete
  9. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // முதல் தேர்தல் பற்றிய செய்திகள் அறியாதவை. புகைப்படங்களும், செய்திகளையும் படிக்கும்போது நாம் அங்கிருந்து எவ்வளவு தூரம் வந்து விட்டோம் என்பது விளங்குகிறது. //

    நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் உள்ளன.

    // பெருமைப்பட வைக்கும் அளவிற்கு நாம் முன்னேறியிருந்தாலும், பல தற்போதைய நிகழ்வுகள் நாம் சில வகைகளில் முன்னேறவில்லை என்பதையும் நினைவுபடுத்துகிறது.//

    நீங்கள் சொல்வது சரிதான் சகோதரியாரே! வாக்காளர்கள் அன்றும் வரிசையில் நின்று, வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்துதான் ஓட்டு போட்டாகள். இன்றும் அப்படித்தான். வாக்காளர்களைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.நாளை எப்படியோ?

    // நல்ல தொகுப்பு, சுவாரஸ்யம் அளிக்கிறது. //

    நன்றி! பாராட்டுக்கள் அனைத்தும் கூகிளுக்கே சேரும்.


    ReplyDelete
  10. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // அரிய தகவல்கள். அந்த இரட்டை காளை சின்னம் இன்னும் நினைவில் உள்ளது. அப்போது சுதந்திரா கட்சி என்று கூட ஒன்று இருந்தது அதன் சின்னம் நட்சத்திரம் தானே!.. //

    அப்போதெல்லாம் தேர்தல் சமயத்தில் வீடுவீடாக இரட்டை காளைகளை ஓட்டி வருவார்கள். காங்கிரஸ்காரர்க்ள் வீட்டில் மாடுகளுக்கு பழங்களும் தண்ணீரும் வைப்பார்கள். சுதந்திரா கட்சிக்கு கொடியில்தான் நட்சத்திரம் இருந்ததாக நினைவு. சரியாக நினைவில் இல்லை.

    // இரட்டைக் காளைகளுக்கு இயல்பாகவே - பாரம்பர்ய பெருமை. அதற்கப்புறம், ராட்டை சுற்றும் பெண், ஏர் உழவன், பசுவும் கன்றும் என்று ஆகி - தற்போது கை.. பல்வேறு அனர்த்தங்களை உள்ளடக்கிய - வெறும் கை!.. //

    கட்சிகள் உட்கட்சி ஜனநாயகத்தில் உடையும்போது சின்னங்கள் சின்னாபின்னம் ஆகத்தான் செய்கின்றன.

    // இந்தப் பக்கம் மலையிடுக்கில் சூரியன். இரட்டை இலை துளிர்த்ததும் - பின் சேவல் இரட்டைப் புறா என்றாகி - திரும்பவும் இலை. எத்தனை எத்தனையோ மாற்றங்கள் - எல்லாம் அவர்கள் வாழ்வில் மட்டும்!.. //

    // ஏழை எளிய மக்களின் கட்சி என்ற பிலாக்கணம் பாடியவர்கள் - இன்றைய மகா கோடீஸ்வரர்கள் - அன்றைக்கு சாமான்யர் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள். உங்களுக்கு உழைக்க எங்களுக்கு உத்தரவிடுங்கள் என்று பிதற்றினார்கள். //

    இந்தநிலை என்றைக்குமே மாறாது போலிருக்கிறது. இப்போது பிரபல அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு கோடீஸ்வரராக இருக்கிறார்.

    // இன்றைக்கும், கேவலம் - பிரியாணிக்கும் குவாட்டருக்கும் ஏங்கிக் கிடக்கும் மக்களை உடைய தமிழகம் என்பதே நிரந்தர அவலம்!.. //

    உண்டு கெட்டான் தமிழன்.

    ReplyDelete
  11. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்!

    // முதல் இரண்டு மூன்று தேர்தல்கள் வரை காங்கிரஸ் கட்சிக்கு இரட்டைக்காளைச் சின்னமே இருந்து வந்தது. நான் ஒரு 12-15 வயது சிறுவனாக இருந்த போது, மற்றொருவரால் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டேன். திருச்சி அருணாசல மன்றத்தில் வோட்டர்ஸ் லிஸ்ட் கையினால் கார்பன் வைத்து எழுதிக்கொடுத்துள்ளேன். கையெழுத்து அழகாக உள்ளவர்களை மட்டும் ஈடுபடுத்துவார்கள். 100 பெயர்கள் எழுதிக்கொடுத்தால் 6 அணா வீதம் கூலியும் தருவார்கள். //

    தேர்தல் சமயம் மட்டும் திருச்சி அருணாசலம் மன்றம் கதர்சட்டைகளால் நிரம்பி வழியும். பள்ளி மாணவனாக இருந்தபோதே பார்த்து இருக்கிறேன்.

    // மாட்டுப் பெட்டிக்கு ஓட்டுப்போடுங்க என கோஷம் இட்டுச் செல்வார்கள். பூத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு ஓட்டுப்பெட்டி தனித்தனியே வைத்திருப்பார்களாம்.//

    நானும் கேள்விப் பட்டதுதான்.

    // சுவாரஸ்யமான பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. //

    நன்றி! பாராட்டுக்கள் அனைத்தும் கூகிளுக்கே சேரும்.


    ReplyDelete
  12. சுவாரஸ்யமான தகவல்கள்...பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. சுவாரஸ்யமான தகவல்கள்... படங்கள் பொக்கிசம்... நன்றி ஐயா...

    ReplyDelete
  14. சுவாரசியமான பதிவு .
    டேட்டா கலெக்ட் பண்ணி .......மிகவும் சிரமம் எடுத்து செய்த பதிவு .

    ReplyDelete
  15. வணக்கம்
    ஐயா.

    அறிய முடியாத பொக்கிஷம் மிக்க பதிவு...தங்களின் பல பதிவுகளை தவற விட்டேன் ஐயா.... படித்த பின் எழுதுவேன்...
    சில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. பழைய விஷயங்களை எப்போது நினைத்துப் பார்த்தாலும் இனிமை தான். புதிய வாக்காளர்களுக்கு நமது பாரம்பரியம் பற்றி அறிந்து கொள்ள இப்பதிவு உதவும். பகிர்வுக்கு நன்றிகள் ஐய்யா. .

    ReplyDelete
  17. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    மலரும் நினைவுகளாக , அந்தக் கால அனுபவங்களைச் சொன்ன அய்யா அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  19. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said

    கருத்துரை தந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > அபயாஅருணா said...

    சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி > ரூபன் said...

    // வணக்கம் ஐயா. அறிய முடியாத பொக்கிஷம் மிக்க பதிவு... //

    சகோதரர் கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்! கருத்துரைக்கு நன்றி!

    // தங்களின் பல பதிவுகளை தவற விட்டேன் ஐயா.... படித்த பின் எழுதுவேன்... சில நாட்கள் இணையம் வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..//

    சிலசமயம் இதுபோல் எல்லோருக்கும் நிகழ்ந்து விடுகிறது


    ReplyDelete
  23. மறுமொழி > இல. விக்னேஷ் said..

    சகோதரர் இல.விக்னேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!.

    ReplyDelete
  24. ஒரு காலத்தில் கட்சிசின்னங்களுக்குப் பதில்வண்ணப் பெட்டிகள் வைத்து இந்தக்கட்சிக்கு இந்த வண்ணப் பெட்டி என்றும் இருந்ததாக நினைவு.ஒரு வேளை அவை சுதந்திரம் கிடைக்கும் முன்போ என்னவோ தெரியவில்லை. சுவாரசியமான தகவல்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. முதல் தேர்தலைப் பற்றிய தகவல்கள் அருமை. சமீப காலமாகத் தான் வாக்குப்பதிவு இயந்திரங்கள். அதற்கு முன் மேலே இருப்பது போல பெட்டிகள் தான்.
    இந்த முறை தெற்கு பெங்களூரில் வாக்குப் பதிவு செய்ய பட்டனை அழுத்தியவுடன் நாம் வாக்களித்த சின்னம் ஒரு சின்னத்திரையில் தோன்றியது. நாம் சரியான பட்டனை (நமக்கு வேண்டிய சின்னத்தில்) அழுத்தினோமா என்று பார்க்கலாம்.

    ReplyDelete
  26. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // ஒரு காலத்தில் கட்சிசின்னங்களுக்குப் பதில்வண்ணப் பெட்டிகள் வைத்து இந்தக்கட்சிக்கு இந்த வண்ணப் பெட்டி என்றும் இருந்ததாக நினைவு.ஒரு வேளை அவை சுதந்திரம் கிடைக்கும் முன்போ என்னவோ தெரியவில்லை. சுவாரசியமான தகவல்களுக்கு வாழ்த்துக்கள். //

    நீங்கள் சொல்வது சரிதான். இந்த தேர்தல் நடந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நான் நான்காவதோ அல்லது ஐந்தாவது படிக்கும் போது, நீங்கள் சொன்ன வண்ண வாக்கு பெட்டிகளை மாதிரியாக வைத்து பள்ளியில் ஆசிரியைகள் விளக்கியது நினைவில் இருக்கிறது.


    ReplyDelete

  27. மறுமொழி > Ranjani Narayanan said...

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // முதல் தேர்தலைப் பற்றிய தகவல்கள் அருமை. சமீப காலமாகத் தான் வாக்குப்பதிவு இயந்திரங்கள். அதற்கு முன் மேலே இருப்பது போல பெட்டிகள் தான். இந்த முறை தெற்கு பெங்களூரில் வாக்குப் பதிவு செய்ய பட்டனை அழுத்தியவுடன் நாம் வாக்களித்த சின்னம் ஒரு சின்னத்திரையில் தோன்றியது. நாம் சரியான பட்டனை (நமக்கு வேண்டிய சின்னத்தில்) அழுத்தினோமா என்று பார்க்கலாம். //

    தாங்கள் வாக்களித்த அனுபவத்தை சொன்னதற்கு நன்றி.


    ReplyDelete
  28. தகவல்களுக்கு நன்றி. முதல் தேர்தலிலேயே எத்தனை கட்சிகள் போட்டி போட்டு இருக்கின்றன எனப் பார்க்கும்போது வியப்பு....

    ReplyDelete
  29. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!.

    // தகவல்களுக்கு நன்றி. முதல் தேர்தலிலேயே எத்தனை கட்சிகள் போட்டி போட்டு இருக்கின்றன எனப் பார்க்கும்போது வியப்பு.... //

    எனக்கும் ஆச்சரியம்தான். சுதந்திரம் கிடைத்தவுடனேயே நிறைய கட்சிகள் வந்து விட்டன.

    ReplyDelete