Saturday 3 August 2013

கல்யாண வீட்டில் கருப்புக்கொடி காட்டுபவர்கள்



வரலாற்றுச் சிறப்புகள் பல உடையது புதுக்கோட்டை மாவட்டம். அங்குள்ள ஒவ்வொரு குன்றும் ஒரு வரலாறு சொல்லும். அப்போதைய ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தில் புதுக்கோட்டையும் அதனைச் சார்ந்த பகுதிகளும் இருந்தன. பின்னர் அந்த பகுதி மக்களின் முன்னேற்றம் கருதி, புதுக்கோட்டை மாவட்டம  என்ற  பெயரில் தனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது தஞசாவூர் மாவட்டத்தில் இருந்த சில பகுதிகளும் சேர்க்கப்பட்டன. புதிதாகத் தொடங்கப்பட்ட அந்த மாவட்டம் இன்று வரை சரியாக வளர்ச்சி அடையவில்லை. கல்குவாரிகள் மூலம் பல குன்றுகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.  பெரிதாக அரசு நிறுவனங்களோ அல்லது தொழிற்சாலைகளோ அங்கு தொடங்கப்படவே இல்லை. இன்னும் மக்கள் அப்படியேதான் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். இன்னும் பலர் கூலித் தொழிலாளர்களாகவே உள்ளனர். இத்தனைக்கும் தமிழ்நாட்டில் 1967 முதல் திமுக அல்லது அதிமுகதான் மாநில ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள்.

இப்போதுதான் புதுக்கோட்டையை அடுத்த திருமயத்தில் மத்திய அரசு நிறுவனமான  BHEL கிளையாக  மற்றொரு தொழிற்சாலையைத் தொடங்கி உள்ளார்கள்.  வேலைவாய்ப்பு, மாவட்ட வளர்ச்சி என்று பார்க்கும்போது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இந்த BHEL நிறுவனத்தை துவக்கி  வைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்  நேற்று (02.08.2013) திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார். அங்கிருந்து அவர் திருமயம் புறப்பட்டுச் சென்றார். அங்கு BHEL நிறுவனத்தை தொடங்கி வைத்தார். அவர் வந்து செல்லும் வரை ஒரே பரபரப்பு.

இதற்கிடையே, கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத இந்திய அரசை கண்டித்தும், மீனவர்கள் மீதான சிங்கள் கடற்படையினரின் தாக்குதலை தடுக்காததை கண்டித்தும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திருச்சி விமான நிலையத்தில் ருப்புக்கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். அதன்படி வைகோ தனது கட்சியினருடன் திருச்சி விமான நிலையத்திற்கு இரண்டு கிலோ மீட்டர் முன்பு கூடியிருந்தார். பிரதமர் வருகையின் போது கருப்புக் கொடி காட்ட செல்ல முயன்றார், அவரை போலீசார் கைது செய்தனர், வைகோவுடன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ. மணியரசன், தந்தைப் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் கோவை கு. ராமகிருஷ்ணன்  உட்பட அவர்களது கட்சியினரும் கைது செய்யப்பட்டனர். விமான நிலையம் எதிரே உள்ள சாலையில் மாணவர் அமைப்பினர் ( கருப்புக்கொடி, ஆர்ப்பாட்டம் செய்வதற்கென்றே இருக்கிறார்கள் )ருப்புக்கொடி காட்ட முயன்றனர், அவர்களையும் போலீசார் கைது செய்தனர் சிலர் சாலை மறியல் செய்தார்கள். இதேபோல புதுக்கோட்டையில் கருப்புக்கொடி காட்டிய நாம்தமிழர் கட்சியினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் கைது செய்யப்பட்டனர்.

கருப்புக்கொடி காட்ட வேறு நாளே கிடைக்கவில்லையா? வேறு சந்தர்ப்பமே வராதா? ஒரு பிற்பட்ட மாவட்டத்தில் தொழிற்சாலை தொடங்கப்படும் நாள்தானா உங்களுக்கு கிடைத்தது? வடக்கே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எல்லா கட்சியினரும் தங்களுக்குள்ள வேறுபாடுகளை மற்ந்து கலந்து கொள்கின்றனரே? இங்கு மட்டும் ஏன் இவ்வாறு? அழைப்பிதழ் இல்லையென்றாலும் அமைதியாக இருந்திருக்கலாம் அல்லவா? கல்யாண வீட்டில் கருப்புக்கொடி காட்டுவதைப் போன்றது இது. மத்திய அரசு என்றாலே எதைச் செய்தாலும் எதிர்ப்பதுதான் இவர்கள் அரசியல் போலிருக்கிறது.
 


( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )




33 comments:

  1. அவர்களுக்கு தெரிந்த அரசியல் அவ்வளவு தான்....!

    ReplyDelete
  2. //கல்யாண வீட்டில் கருப்புக்கொடி காட்டுவதைப் போன்றது //

    சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். என்ன செய்வது? எல்லாமே அரசியல் தான், ஐயா. அதுவும் தமிழ்நாட்டு அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பார்கள்.

    ReplyDelete
  3. புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் எல்லாமே திருச்சி மாவட்டத்தை சேர்ந்ததாக இருந்ததே.

    இந்தத்தங்களின் பதிவினைப்படித்ததும், அந்த நாட்களெல்லாம் இப்போது என் நினைவுக்கு வருகின்றது.

    ReplyDelete
  4. தொடர் பதிவு :

    அழைப்பு : http://kuttikkunjan.blogspot.in/2013/08/blog-post_3.html

    ReplyDelete

  5. இதையே நான் என் பல பதிவுகளில் எழுதி இருக்கிறேன்.அரசு செய்துவரும்பல நலத் திட்டங்களும் இருட்டடிப்பு செய்யப் பட்டு எதிர்க் கட்சிகள் எதிரிக் கட்சிகளாகவே செயல் படுகின்றன. சரியாகச் சொன்னீர்கள். இடம் பொருள் ஏவல் தெரியாமல் தங்களை முன் நிறுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்.

    ReplyDelete
  6. மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  7. அரசியல் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கருதுகிறார்கள்.

    ReplyDelete
  8. உங்கள் தகவலுக்காக........

    அங்கே தொடங்கும் இந்த தொழிற்சாலையினால் அடிப்படை மக்களுக்கு எந்த பலனும்இல்லை.

    வேலை வாய்ப்புகள் தேர்வு மூலமே
    பொட்டக்காடுகள் விலை இனி விண் தொட்டு நிற்கும்.

    இதற்கு காரணம்?

    நிறைய எழுத இருக்கிறது.

    ReplyDelete
  9. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said... // அவர்களுக்கு தெரிந்த அரசியல் அவ்வளவு தான்....! //
    நான் “ பிளேட்டோவின் அரசியல் “ என்ற தமிழ் நூலை படித்து இருக்கிறேன். ஆனால் இதுமாதிரி அரசியல் எங்குமே இல்லை. சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 ) // சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். என்ன செய்வது? எல்லாமே அரசியல் தான், ஐயா. அதுவும் தமிழ்நாட்டு அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பார்கள். //

    திரு VGK அவர்களுக்கு வணக்கம்! இதெல்லாம் சகஜம் என்று ரொம்பவும் சிம்பிளாகச் சொல்லி விட்டீர்கள். ஆனால் அதுதான் உண்மை.

    ReplyDelete
  11. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... (2)
    // புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் எல்லாமே திருச்சி மாவட்டத்தை சேர்ந்ததாக இருந்ததே. இந்தத் தங்களின் பதிவினைப்படித்ததும், அந்த நாட்களெல்லாம் இப்போது என் நினைவுக்கு வருகின்றது. //

    ஆமாம் சார்! நான் பள்ளி புத்தகத்திலும் படித்து இருக்கிறேன். அப்போது தமிழ்நாட்டில் மாவட்டங்கள் குறைவு.

    ReplyDelete
  12. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said... (2)// தொடர் பதிவு :அழைப்பு : http://kuttikkunjan.blogspot.in/2013/08/blog-post_3.html //

    தகவலைத் தந்த திண்டுக்கல்லாருக்கு நன்றி! இனிமேல்தான் நான் அங்கு சென்று பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  13. மறுமொழி> G.M Balasubramaniam said... // இதையே நான் என் பல பதிவுகளில் எழுதி இருக்கிறேன்.அரசு செய்துவரும்பல நலத் திட்டங்களும் இருட்டடிப்பு செய்யப் பட்டு எதிர்க் கட்சிகள் எதிரிக் கட்சிகளாகவே செயல் படுகின்றன. சரியாகச் சொன்னீர்கள். இடம் பொருள் ஏவல் தெரியாமல் தங்களை முன் நிறுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். //

    GMB அவர்களுக்கு வணக்கம். தாங்கள் சொல்வதைப் போல இடம் பொருள் ஏவல் தெரியாமல் சிலர்
    ” பந்தலிலே பாவக்காய் “ பாடுகிறார்கள். தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete

  14. மறுமொழி> வேகநரி said...
    // மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள். //

    அரசியல் பற்றி எதுவும் எழுதக் கூடாது என்று இருந்தேன். இருந்தாலும் சிலரின் கோமாளித்தனம் தாங்க முடியவில்லை. மீண்டும் எனது தளம் வந்து கருத்துரை தந்ததற்கு நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி> Sasi Kala said... // அரசியல் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கருதுகிறார்கள். //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி> ஜோதிஜி திருப்பூர் said... // உங்கள் தகவலுக்காக........
    அங்கே தொடங்கும் இந்த தொழிற்சாலையினால் அடிப்படை மக்களுக்கு எந்த பலனும்இல்லை. வேலை வாய்ப்புகள் தேர்வு மூலமே //

    ஜோதிஜி அவர்களுக்கு வணக்கம். புதுக்கோட்டை என்றதும் நிச்சயம் கருத்துரை தருவீர்கள் என்று நினைத்தேன். எனது கணிப்பு வீணாகவில்லை. நன்றி!

    இப்போதைக்கு எந்த பலன் இல்லையென்றாலும் பின்னாளில் அந்த தொழிற்சாலையை ஒட்டி துணை நிறுவனங்கள் வர வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்.

    // பொட்டக்காடுகள் விலை இனி விண் தொட்டு நிற்கும்.
    இதற்கு காரணம்? நிறைய எழுத இருக்கிறது. //

    எல்லா இடத்திலும் அப்படித்தான் ரியல் எஸ்டேட் மனிதர்கள் சொல்கிறார்கள் வாங்க முடிந்தவர்கள்தான் வாங்குகிறார்கள். இதுபற்றி உங்கள் பதிவில் நிறைய எழுதுங்கள்.


    ReplyDelete
  17. //மத்திய அரசு என்றாலே எதைச் செய்தாலும் எதிர்ப்பதுதான் இவர்கள் அரசியல் போலிருக்கிறது.//

    அதுதான் உண்மை. பலருடைய எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. நல்ல பகிர்வு......

    அரசியல்... :(

    ReplyDelete
  19. பதிவின் கருவும் அதற்கான தலைப்பும்
    மிக மிகப் பொருத்தம்
    தங்கள் ஆதங்கம் மிகச் சரியே
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. மறுமொழி > வே.நடனசபாபதி said... // அதுதான் உண்மை. பலருடைய எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! //

    தங்களின் அன்பான பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said... // நல்ல பகிர்வு...... அரசியல்... :( //

    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி > Ramani S said..(1, 2. )
    //பதிவின் கருவும் அதற்கான தலைப்பும் மிக மிகப் பொருத்தம் தங்கள் ஆதங்கம் மிகச் சரியே தொடர வாழ்த்துக்கள் //

    கவிஞரின் அன்பான கருத்துரைக்கும் தந்து வரும் ஊக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  23. // கல்யாண வீட்டில் கருப்புக்கொடி காட்டுவதைப் போன்றது இது.//
    மிகப் பொருத்தமான உவமை

    ReplyDelete
  24. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
    // நல்ல கேள்வி //

    கவிஞரின் எளிமையான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > சென்னை பித்தன் said... // மிகப் பொருத்தமான உவமை //
    தங்கள் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  26. மத்திய அரசு என்றாலே எதைச் செய்தாலும் எதிர்ப்பதுதான் இவர்கள் அரசியல் போலிருக்கிறது.//

    கரெக்ட். அத்தோட அவங்களுக்கும் வேற வேலை இல்லையேங்க. போலி அரசியல்வாதிகள்னு சொன்னா ரொம்பவும் பொருத்தமா இருக்கும்.

    ReplyDelete
  27. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... // கரெக்ட். அத்தோட அவங்களுக்கும் வேற வேலை இல்லையேங்க. போலி அரசியல்வாதிகள்னு சொன்னா ரொம்பவும் பொருத்தமா இருக்கும். //

    அவர்களுக்கு வேலையே அதுதான். கருத்துரை தந்த சகோதரருக்கு நன்றி

    ReplyDelete
  28. ஆமங்கய்யா எல்லாம் அரசியல் , பாவம் ராசபக்ஷே சாமி கும்பிட வர்ரப்ப கூட கருப்புக் கொடி காட்டினாங்க

    ReplyDelete
  29. மறுமொழி > Anonymous said...
    // ஆமங்கய்யா எல்லாம் அரசியல் , பாவம் ராசபக்ஷே சாமி கும்பிட வர்ரப்ப கூட கருப்புக் கொடி காட்டினாங்க //

    வாருங்கள் அனானிமஸ் அவர்களே! இன்னும் ஒருவரும் வரவில்லையே என்று நினைத்தேன். ராசபக்சேவுக்கு கருப்புக்கொடி காட்டியது பற்றி இந்த பதிவில் எங்கும் சொல்லவில்லை.

    ReplyDelete
  30. http://kovaikkavi.wordpress.com/2013/08/04/28-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/

    Thank you very much. Vetha.Elangathilakam.

    ReplyDelete
  31. எனது கணனி அனுபவம் பற்றி சுருக்கமாக எழுதியுள்ளேன் .
    இந்த இணைப்பே மேலே உள்ளது.
    அதற்கு நன்றி தெரிவித்தேன்.

    ReplyDelete