Tuesday, 20 August 2013

சமயபுரத்தில் நண்பர்களின் அன்னதானம் (2013)இந்த கட்டுரையை ஒரு விளம்பரம் கருதியோ அல்லது சுய தம்பட்டத்திற்காகவோ எழுதவில்லை. இந்த காலத்தில் இதுபோன்ற அன்னதான காரியங்களில் அதிக சிரத்தை எடுத்து  குழுவாக யாரும் முன்வந்து செய்வதில்லை. இங்கு யாரிடமும் யாரும் போய் நன்கொடை வாங்கவில்லை. திரு A.கலைச் செல்வம்  அவர்களோடு இணைந்த, இந்த குழுவில் உள்ளவர்கள் மட்டும் அவரவர்கள் விருப்பப்பட்டு கொடுப்பதை வைத்து அன்னதானம் ஒரு ஆத்ம திருப்திக்காக செய்யப்பட்டு வருகிறது. சிலர் பணம் மட்டும் தருகிறார்கள். சில நண்பர்கள் உடல் உழைப்பைத் தருகின்றனர். எனவே அந்த நல்ல இதயங்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் அதிக படங்களோடு இந்த பதிவை பதிந்துள்ளேன். 

திருச்சி நகரப் பகுதியில் உள்ள கிளைகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் சிலர் நண்பர்களுடன் இணைந்து கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ஆவணி மாதத்தில் ஒருநாள் இந்த அன்னதானம் செய்து வருகின்றனர். இதனை ஆரம்ப காலத்தில் தனியாக தொடங்கி வைத்தவர் திரு A.கலைச் செல்வம் அவர்கள்.(படத்தில் இருப்பவர்) இவர் திருமயம் அருகே உள்ள சிறுகூடல் பட்டி அருகே உள்ள அரிபுரம் என்ற ஊர்க்காரர். நான் ஸ்டேட் வங்கியிலிருந்து, விருப்ப ஓய்வில் வந்த பின்னர் இந்த நண்பர்களோடு இணைந்துள்ளேன்.   இந்த நற்பணியில் என்னை இணைத்து வைத்தவர் என்னோடு பணிபுரிந்த திரு V சங்கர் (ஸ்ரீரங்கம்) அவர்கள். இருவருக்கும் நன்றி!  ( மேலும் அதிக விவரங்களுக்கு  http://tthamizhelango.blogspot.com/2012/08/blog-post_13.html )

இந்த ஆண்டும் சென்ற ஆண்டைப் போலவே நேற்று (19.08.2013 ) அருள்மிகு கருப்பண்ணசாமி மதுரைவீரன் சாமி கோயில்கள் வாசல் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கோயில் பரம்பரையினர் வழிவந்த திரு.ராதாகிருஷ்ணன் (படத்தில் இருப்பவர்) அவர்கள் சென்ற ஆண்டைப் போலவே நேற்றும் , கோயில் இடத்தில் அன்னதானம் செய்ய அனுமதி வாங்கித் தந்தார். இந்த கோயில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே கடைத் தெருவில் உல்ளது. ( முன்பெல்லாம் சமயபுரத்தில்  திருமண சத்திரங்களை வாடகைக்கு எடுத்து அங்கு உணவுப் பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டன.)

அருள்மிகு கருப்பண்ணசாமி மதுரைவீரன் சாமி கோயில்கள்கோயில் படங்கள (கீழே)முதலில் காலையில், சமயபுரம் கோயில் வரும் பக்தர்களுக்கு பன் ரொட்டியும் காபியும் தரப்பட்டது. பின்னர் அன்னதானமாக காலை எட்டு மணி அளவில்  பக்தர்களுக்கு இட்லியும் சாம்பாரும் வழங்கப்பட்டது. அனைவரும் மகிழ்வுடன் வாங்கிச் சாப்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து தந்தவர் திரு ரகுநாதன் ( ஸ்ரீ கோகுல் சமாஜ் ட்ரஸ்ட், தெப்பகுளம், ஸ்ரீரங்கம் )அவர்கள். 

அன்னதான காட்சிகளின் படங்கள் (கீழே) 


 
 அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயில் வாசல்களில் எடுத்த படம் (கீழே)சமயபுரத்தில் அன்னதானம் முடிந்ததும் நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, அருகில் மாகாளிக்குடி என்ற ஊரில் இருக்கும் அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் சென்று வந்தேன். ( இது பற்றி தனியே ஒரு பதிவு எழுதுவதாக இருக்கிறேன் )

35 comments:

 1. மிகவும் நல்ல விஷயம் ஐயா...

  த.ம.2

  ReplyDelete
 2. திரு A.கலைச் செல்வம் உட்பட சேவை புரியும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... கோயில் படங்கள் அருமை...

  ReplyDelete
 3. நல்ல தொண்டு செய்த நல்லோருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. மனம் மிக மகிழ்வு கொண்டது
  நல்ல செய்தியை படங்களுடன் அருமையாகப்
  பதிவிட்டு அனைவருக்குள்ளும் இதுபோல்
  செய்யலாம் என ஆர்வமூட்டியமைக்கு
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. பசி தீர்க்கும் அன்ன தானம் மிகப் பெரிய பலன்கள் தர வல்லது. அந்தப் புண்ணியத்திற்கு ஈடு இனியே கிடையாது.

  அன்னதானம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. மறுமொழி> ஸ்கூல் பையன் said... ( 1, 2 )
  // மிகவும் நல்ல விஷயம் ஐயா... //
  சகோதரருக்கு நன்றி!

  ReplyDelete
 7. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...
  // திரு A.கலைச் செல்வம் உட்பட சேவை புரியும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... கோயில் படங்கள் அருமை... //

  தங்கள் வாழ்த்துக்களுக்கும், படங்களைப் பற்றிய பாராட்டிற்கும் நன்றி!

  ReplyDelete
 8. மறுமொழி> கவியாழி கண்ணதாசன் said...
  // நல்ல தொண்டு செய்த நல்லோருக்கு வாழ்த்துக்கள் //
  கவிஞருக்கு நன்றி!

  ReplyDelete
 9. மறுமொழி> Ramani S said... (1, 2 )
  // மனம் மிக மகிழ்வு கொண்டது. நல்ல செய்தியை படங்களுடன் அருமையாகப் பதிவிட்டு அனைவருக்குள்ளும் இதுபோல்
  செய்யலாம் என ஆர்வமூட்டியமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் //
  கவிஞரின் நல்ல விரிவான கருத்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி!

  ReplyDelete
 10. மறுமொழி> rajalakshmi paramasivam said...
  // பசி தீர்க்கும் அன்ன தானம் மிகப் பெரிய பலன்கள் தர வல்லது. அந்தப் புண்ணியத்திற்கு ஈடு இனியே கிடையாது.
  அன்னதானம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். //

  சகோதரியின் ஆசீர்வாதம் பலிக்கட்டும்!

  ReplyDelete
 11. மிக அற்புதமான செயல் எந்த வித எதிர்பார்ப்புமின்றி செய்யும் அன்ன தானம் பாராட்டுக்குரியது. எல்லா வளமும் நலமும் கிடைக்கட்டும்.

  ReplyDelete
 12. மிகவும் பாராட்டுக்குரிய செயல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  சென்ற ஆண்டும் இதைப்பற்றி சொல்லிருந்தீர்கள் என்ற ஞாபகம் உள்ளது.

  இந்தமுறை படங்கள் மிக அதிகம். எல்லாமே அழகாக உள்ளன.

  பாராட்டுக்கள், ஐயா.

  ReplyDelete
 13. என் அப்பாவிடம் கடைசி வரைக்கும் முரண்படாது அப்படியே ஏற்றுக்கொண்ட ஒரே விசயம் இந்த அன்னதானம். வருடந்தோறும் குலதெய்வம் கோவிலில் குறைந்தபட்சம் 1000 பேர்களுக்கு அன்னதானம் வழங்குவது இன்று வரைக்கும் குடும்பத்தினர் மூலம் நடந்து கொண்டு இருக்கின்றது.
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete

 14. கர்நாடகத்தில் பெரும்பாலான கோவில்களில் தினமும் அன்னதானம் வழங்கப் படுகிறது. தனிநபரோ குழுவோ அன்னதானம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. இங்கு பெங்களூரில் நான் இருக்கும்பகுதியில் உள்ள ஜலஹள்ளி ஐயப்பன் கோயிலிலும் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. , என்னை பொறுத்தவரை இந்த தானங்கள் தேவைப்படும், உரியவருக்குப் போய்ச் சேர்ந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.

  ReplyDelete
 15. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.இதுபோன்ற பதிவுகள் பிறருக்கும் ஒரு உந்துதலைக் கொடுக்கும்.

  ReplyDelete
 16. மறுமொழி> Sasi Kala said... // மிக அற்புதமான செயல் எந்த வித எதிர்பார்ப்புமின்றி செய்யும் அன்ன தானம் பாராட்டுக்குரியது. எல்லா வளமும் நலமும் கிடைக்கட்டும். //

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 17. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...
  //சென்ற ஆண்டும் இதைப்பற்றி சொல்லிருந்தீர்கள் என்ற ஞாபகம் உள்ளது. //
  சென்ற ஆண்டு நாங்கள் செய்த அன்னதானத்தை மறக்காமல் சொன்னதற்கு நன்றி!

  //இந்தமுறை படங்கள் மிக அதிகம். எல்லாமே அழகாக உள்ளன.
  பாராட்டுக்கள், ஐயா. //

  சென்ற ஆண்டில் இருந்த படங்களைவிட இந்த முறை படங்களை அதிகம் போட வேண்டும் என்பதற்காகவே குறைவாக எழுதினேன். திரு VGK அவர்களின் அன்பிற்கு நன்றி!

  ReplyDelete
 18. மறுமொழி> ஜோதிஜி திருப்பூர் said...
  // என் அப்பாவிடம் கடைசி வரைக்கும் முரண்படாது அப்படியே ஏற்றுக்கொண்ட ஒரே விசயம் இந்த அன்னதானம். //

  ஆரம்பத்தில் அன்னதானம் என்றால் ஒருவேளை சாப்பாடு போட்டால் ஆச்சா? என்றுதான் நான் நினைத்தேன். அப்புறம் அதில் உள்ள ஆத்ம திருப்தி சுயநலமில்லாத அன்னதானத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.

  //வருடந்தோறும் குலதெய்வம் கோவிலில் குறைந்தபட்சம் 1000 பேர்களுக்கு அன்னதானம் வழங்குவது இன்று வரைக்கும் குடும்பத்தினர் மூலம் நடந்து கொண்டு இருக்கின்றது.
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய வாழ்த்துகள். //
  விருப்பப்பட்டால் உங்களது குடும்பத்தினர் நடத்தும் குலதெய்வம் கோயில் அன்னதானம் பற்றியும் பதிவுகள் எழுதவும்.
  ஜோதிஜியின் கருத்துரைக்கு நன்றி!


  ReplyDelete
 19. மறுமொழி> G.M Balasubramaniam said...
  // கர்நாடகத்தில் பெரும்பாலான கோவில்களில் தினமும் அன்னதானம் வழங்கப் படுகிறது. தனிநபரோ குழுவோ அன்னதானம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது இங்கு பெங்களூரில் நான் இருக்கும்பகுதியில் உள்ள ஜலஹள்ளி ஐயப்பன் கோயிலிலும் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.//

  உங்கள் பகுதியில் நடக்கும் அன்னதானம் பற்றிய தங்கள் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. முடிந்தால் படங்களோடு நீங்களும் பதிவு ஒன்றை எழுதவும்.

  //என்னை பொறுத்தவரை இந்த தானங்கள் தேவைப்படும், உரியவருக்குப் போய்ச் சேர்ந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி. //

  முன்பு அன்னதானமாக சாப்பாடு பொட்டலங்கள் வழ்ங்கிய போது சிலர் வாங்கி விட்டு சாப்பிடாமல் வீணாக்கினர். இப்போது தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில்களில் அரசாங்க ஆணைப்படி அன்னதானம் பெருமளவில் நடைபெறுகிறது. எனவே எனது நண்பர்கள் காலைநேர உணவாக பன், காபி பிறகு இட்லி சாம்பார் வழங்கினர். உரியவர்களுக்கு சரியாக போய்ச் சேருகிறது.

  பெரியவர் GMB அவர்களின் கருத்துரைக்கு நன்றி!  ReplyDelete
 20. மறுமொழி> கலியபெருமாள் புதுச்சேரி said...
  //உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.இதுபோன்ற பதிவுகள் பிறருக்கும் ஒரு உந்துதலைக் கொடுக்கும் //

  சகோதரரின் ஆதரவான கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 21. மிக நல்லதொரு நற்பணி அன்னதானம்.சிறு வயதில் கோவிலுக்குச் சென்று அன்னதானம் உண்டது நினைவிற்கு வந்தது.
  நல்ல தெளிவான படங்களும்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 22. மறுமொழி>kovaikkavi said...
  சகோதரி கோவைக்கவி, வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 23. அன்னதான சேவை செய்யும் தங்களுக்கும் தங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!.

  ReplyDelete
 24. மறுமொழி> வே.நடனசபாபதி said...
  தங்களின் அன்பான கருத்துரைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

  ReplyDelete
 25. நல்லதோர் சேவை. வாழ்த்துகள்.

  ReplyDelete
 26. அன்பின் தமிழ் இளங்கோ - அன்ன தானம் பற்றிய பதிவு அருமை. நற்செயல் புரியும் நல்லுங்களுக்கு நல்வாழ்த்துகள்.

  எத்த்னைஅ எத்த்னை படங்கள் - கண்ணைக் கவருகின்றன - விளக்கங்கள் அருமை.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 27. அன்பின் தமிழ் இளங்கோ

  இன்றைய வலைச்சர அறிமுகம் மூலமாக வந்து படித்து இரசித்து மகிழ்ந்தேன்

  http://blogintamil.blogspot.co.uk/2013/08/4_22.html

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 28. மறுமொழி> மாதேவி said...
  // நல்லதோர் சேவை. வாழ்த்துகள். //
  சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

  ReplyDelete
 29. மறுமொழி> cheena (சீனா) said...

  // அன்பின் தமிழ் இளங்கோ - அன்ன தானம் பற்றிய பதிவு அருமை. நற்செயல் புரியும் நல்லுங்களுக்கு நல்வாழ்த்துகள். //

  நண்பர்களின் அன்னதானம் பற்றிய தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

  // எத்த்னைஅ எத்த்னை படங்கள் - கண்ணைக் கவருகின்றன - விளக்கங்கள் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

  நண்பர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் அதிக படங்கள்.

  ReplyDelete
 30. மறுமொழி> cheena (சீனா) said...
  // அன்பின் தமிழ் இளங்கோ இன்றைய வலைச்சர அறிமுகம் மூலமாக வந்து படித்து இரசித்து மகிழ்ந்தேன்
  http://blogintamil.blogspot.co.uk/2013/08/4_22.html
  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //
  தங்களின் அன்பான கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரி அகிலா அவர்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 31. எல்ல தானமும் செய்த கர்ணன் அன்னதான செய்யவில் லையாம்; எனவே சொர்க்கத்தில் ச்சொறு கிடைக்கவில்லை.
  மிகச் சிறந்த தானம் அன்னதானம்.குழுவினர்க்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. மறுமொழி >குட்டன் said...

  // எல்ல தானமும் செய்த கர்ணன் அன்னதான செய்யவில் லையாம்; எனவே சொர்க்கத்தில் சோறு கிடைக்கவில்லை.//

  இந்த செய்தி எனக்கு புதிதாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி! கர்ணன் கதையை மீண்டும் படிக்க வேண்டும்.

  // மிகச் சிறந்த தானம் அன்னதானம்.குழுவினர்க்கு வாழ்த்துக்கள் //
  சகோதரர் குட்டனின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

  ReplyDelete

 33. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
  Hotels in Nungambakkam | Hotels near Chetpet | Hotels near Egmore


  ReplyDelete