Thursday 15 August 2013

உங்கள் வலைத்தளம் - எப்படி?



ஒரு வலைப்பதிவைத் தொடங்குகிறோம். முதல்பதிவின் மகிழ்ச்சியைப் பற்றிச் சொல்ல் வேண்டியதில்லை. “ காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு “ எனபது பழமொழி. தொடர் பதிவாக பல பதிவர்கள் தங்கள் முதல்பதிவின் அருமை பெருமைகளைச் சொன்னார்கள். தமிழ்மணம் போன்ற  திரட்டிகளில் இணைத்து விட்டு, யாராவது ஏதேனும் சொல்லி இருக்கிறார்களா என்று நமது கருத்துரைப் பெட்டியை (COMMENTS BOX) எட்டிப் பார்ப்பதும் மூடுவதுமாக நமது பதிவுகளை நமக்கு நாமே பலமுறை படித்துப் பார்க்கிறோம். முகப்புப் பலகை (DASSH BOARD ) இல் உள்ள STATS  வழியாக வாசகர்களின் எண்ணிக்கையையும், அவர்களது நாடுகளையும் பார்த்து மகிழ்கிறோம். ஒருவழியாக அப்படி இப்படி என்று மேலே வந்தவுடன் ஓட்டுப் பட்டையில் நமக்கு எத்தனை வாக்குகள் என்றும், தமிழ்மணம் எத்தனையாவது ரேங்கில் இருக்கிறோம் என்றும் அறிய ஆவலாக இருக்கிறோம். 




எல்லாவற்றிற்கும் மேலாக நமது வலைப்பதிவினைப்  பற்றி அறிந்து
கொள்ள STATSCROP  என்ற இணையதளம் ஒன்று உள்ளது. இது முழுக்க முழுக்க இலவசமே! தரவிறக்கம் எதுவும் செய்ய வேண்டாம்.    அந்த தளத்தினுள் நமது வலைப்பதிவினைப் பற்றிய  கீழ் கண்ட விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மற்ற வலைத்தளங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
 
1.     Alexa Traffic
2.     Website Load Time
3.     How to optimize website
4.     Website SEO Score
5.     Website Daily Pageviews
6.     Website Daily Visitors
7.     Website Daily Revenue
8.     Website Worth
9.     Website IP Address
10. Website Server Location
11. Website Daily Bandwidth/Monthly Bandwidth
12. Website Categories
13. Daily Visitors Country Map
14. Domain Information
15. Directory listing
16. HTTP Headers
17. Theme Colors
18. Website Metas
19. Similar websites
20. Same IP websites
21. Same network websites
22. DNS Records
23. Website Keywords
24. Keyword Ranking Position
25. Other related domains
26. Websites with similar rank
27. Similar websites
28. Similar websites
29. Indexed Pages Graph
30. Backward Links Graph
31. Google Pagerank Graph
32. W3C HTML Validation Graph

மேலும் பல புள்ளிவிவரங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள சென்று வாருங்கள். அந்த இணைய தளத்தின் முகவரி www.statscrop.com

அனைவருக்கும் சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
 


 


 

20 comments:

  1. புதிய தகவலுக்கு நன்றி! சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அருமையான தகவல் .
    சுதந்திர தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கண்ணாடியில் நம்மை நாமே பார்த்துக் கொள்ள உதவும்
    அருமையான தளம்.
    நான் அவ்வப்போது பார்த்துக் கொள்வேன்
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மறுமொழி > வே.நடனசபாபதி said... // புதிய தகவலுக்கு நன்றி! சுதந்திர தின வாழ்த்துக்கள்! //
    வங்கி மேல் அதிகாரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  6. மறுமொழி > rajalakshmi paramasivam said...
    சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  7. மறுமொழி > Ramani S said... ( 1, 2 ) // கண்ணாடியில் நம்மை நாமே பார்த்துக் கொள்ள உதவும அருமையான தளம்.
    நான் அவ்வப்போது பார்த்துக் கொள்வேன் பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் //

    சென்றவாரம்தான் இந்த தளத்தினைப் பற்றி கூகிளில், எதேச்சையாக தெரிந்து கொண்டேன். இதுபோன்ற விஷயங்கள் உங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால் பதிவாக எழுதவும். கவிஞரின் கருத்துரைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  8. மறுமொழி > ஸ்கூல் பையன் said... // புதிய தகவல், நன்றி ஐயா... // நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. மறுமொழி > Sasi Kala said... // சுதந்திர தின வாழ்த்துக்கள். //
    நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. சுதந்திரதின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. மறுமொழி >கவியாழி கண்ணதாசன் said...

    கவிஞருக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  14. தகவலுக்கு மிக்க நன்றி.

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  15. பலருக்கும் பயன் தரும் தகவலாகக்கொடுத்துள்ளீர்கள், ஐயா.மகிழ்ச்சி.

    தங்களுக்கு என் இனிய சுதந்திரத்திருநாள் நல்வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  16. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    திரு VGK அவர்களின் அன்பான பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  18. இப்படி ஒரு தளம் இருப்பது பலருக்கும் தெரியாது. பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete