Friday 19 October 2012

கூகிளில் நாம் உட்கொள்ளும் ஆங்கில மருந்துகளின் விவரம்



இப்போது ஊருக்கு ஊர் டாக்டர்கள். தடுக்கி விழுந்தால் ஒரு டாக்டர். கண்ணில் தூசி விழுந்தால் ஒரு டாக்டர். புரையேறினால் ஒரு டாக்டர். என்று விதம் விதமான டாக்டர்கள். முன்னேற்றமான விஷயம்தான் நான் சிறுவனாக இருந்த காலத்தில் இவ்வளவு டாக்டர்களும்,  கிளினிக்குகளும், மெடிக்கல் ஷாப்புகளும் கிடையாது. மருந்து வாங்க வேண்டுமென்றால் “பாசமலர்” சிவாஜி கணேசன் மாதிரி கடைவீதிக்கு ஓடவேண்டும். கிராமப்புறத்தில் சொல்ல வேண்டியதில்லை.டாக்டர் என்றால் ஆங்கில மருத்துவரையும் மருத்துவர் என்றால் தமிழ் வைத்தியரையும் குறிக்கும். அதேபோல மெடிக்கல் ஷாப் ( Medical Shop ) என்றால் ஆங்கில மருந்துகள் விற்கும் இடத்தையும், மருந்துக்கடை என்றால் தமிழ் மருந்து ( Tamil Medicines ) கடையையும் குறிக்கும்.



பெரும்பாலும் அப்போது எல்லோருக்கும் தர்ம ஆஸ்பத்திரி எனப்படும் அரசாங்க ஆஸ்பத்திரிகள்தான். உண்மையிலேயே அன்று அவைகளை சுத்தமாக வைத்து இருந்தார்கள். நன்றாகவும் கவனித்தார்கள். என்னுடைய அப்பா ரெயில்வேயில் திருச்சி பொன்மலையில் ( அப்போது அவர் ஒரு எழுத்தர் ) இருந்தபடியினால் நாங்கள் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு செல்வோம். அப்புறம் திருச்சிக்கு BHEL வந்ததும் அவர்களுக்கென்று தனியே ஒரு மருத்துவமனை. எல்லா மருத்துவ மனைகளிலும் மருந்து கொடுக்கும் இடத்தில் பள்ளிக்கூட லேப் (LAB) இல் இருப்பது போல் ஒரு பெரிய பாட்டில் இருக்கும். அதில் பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு கரைசல் இருக்கும். அதனை மிக்சர் என்பார்கள்.ஆஸ்பத்திரிக்கென்று போய்விட்டால் அந்த மிகசரில் ஒரு கப் கொடுத்து விடுவார்கள். நாம்தான் கையோடு பாட்டிலையும் எடுத்துச்  செல்ல வேண்டும். பிளாஸ்டிக் பேப்பர்கள் அவ்வளவாக பயன்பாட்டில் இல்லாத காலம். அந்த மிக்சரைப் பற்றிய விவரமெல்லாம் தெரியாது. அதே போல் அவர்கள் தரும் ஆங்கில மருந்துகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியாது. விவரம் கேடடால் டாக்டர் கோபித்துக் கொள்வாரோ என்ற பயம்.


ஒருமுறை பதிவெழுதும்போது வழக்கம்போல கூகிள் (GOOGLE) இல் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டு இருந்தேன்.திடீரென்று ஒரு  எண்ணம் தோன்றியது. நாம் ஏதாவது ஒன்று என்றால் டாக்டரிடம் போகிறோம். அவர்கள் எழுதித் தரும் மருந்துகளைப் பற்றி அவர்களும் சொல்வதில்லை. நாமும் கேட்பதில்லை. அந்த மருந்துகளைப் பற்றி கூகிள் இல் தேடுவோம் என்று கேட்டுப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! அந்த மருந்தைப் பற்றிய அனைத்து விவரங்களும் வந்துவிட்டன. சாப்பிட்டால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடிகிறது. மருந்து கம்பெனியின் பெயரோடு தேடினால் நமக்கு இன்னும் நல்லது.  அது மட்டுமன்றி அறுவை சிகிச்சை முறைகள் உட்பட அனைத்து சிகிச்சை முறைகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் நமது பயங்களையும் சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளலாம். கூகிள் படங்கள் ( GOOGLE IMAGES )  வழியாக இன்னும் சுலபமாகத் துல்லியமாகத் தேடலாம். ஆங்கிலத்தில் மட்டுமே தேட வேண்டும். சில விவரங்கள் தமிழிலும் கிடைக்கின்றன. 

இதற்கு காரணம் இப்போது அனைத்து மருத்துவக் கம்பெனிகளும் பிரபல மருத்துவ மனைகளும் தங்களை இணையதளத்தில் இணைத்துக் கொண்டுள்ளன. நீங்களும் உங்கள் மருந்துகளைப் பற்றியும் சிகிச்சை முறைகளைப் பற்றியும் கூகிள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க இண்டர்நெட்! ( INTERNET ) வளர்க கூகிளின் சேவை!



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ”)











29 comments:

  1. எதை எதையோ தேடுகிறோம் உயிர் காக்கும் மருந்தைப்பற்றியும் தெரிந்து கொள்வோமே பயனுள்ள பகிர்வுங்க.

    ReplyDelete
  2. அப்படியெனில் கூகுளை ஒரு மருத்துவர் எனவும் சொல்லலாம்! நல்ல பகிர்வு அய்யா! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. இன்று மின்சாரம் வந்தவுடன் கீழே குறிப்பிட்ட தளத்தில் கருத்திட்டேன்... உங்கள் தளத்திற்கு வந்து திடுக்கிட்டேன்... கவனிங்க சார்...

    /// அனைவருக்கும் பயன் படும் பகிர்வு...

    நண்பர்களிடம் பகிர்கிறேன்... நன்றி...

    Google + நீங்கள் பகிர்ந்ததில் மூலம் உங்கள் தளம் தெரியும்... Followers ஆகி விட்டேன்... இனி தொடர்கிறேன்... நன்றி...

    http://azifair-sirkali.blogspot.in/2012/10/blog-post_18.html ///

    ReplyDelete
  4. REPLY TO ….. திண்டுக்கல் தனபாலன்

    அன்புள்ள சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு வணக்கம்! நான் எனது அனுபவத்தில் யோசித்து யோசித்து எழுதிய ஒரு கட்டுரையை வலைப் பதிவில் ஒரு பதிவர்
    ( http://azifair-sirkali.blogspot.in/2012/10/blog-post_18.html ) தனது பெயரில் தான் எழுதியது போன்று போட்டுள்ளார். நன்றி என்று எனது பெயர் போட்டு இருந்தாலும் பரவாயில்லை. இது மாதிரி ஆசாமிகளை என்னவென்று சொல்வது. இது போல் எனது கட்டுரைகளை எத்தனை பேர் காப்பி எடுத்து தங்களது பெயரில் போட்டுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை! தங்கள் தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  5. REPLY TO … … .. Sasi Kala said...
    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  6. REPLY TO … … .. வே.சுப்ரமணியன். said...
    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  7. ஐயா, மிக நல்ல பதிவு. இன்று கூகுள் மூலம் பலவிஷயங்களை அறிய முடிகிறது என்பது மிகவும் சரியே.

    தாங்கள் கஷ்டப்பட்டு எழுதின பதிவை வேறொருவர் COPY + PASTE செய்துள்ளார் என்பது கேட்க மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.

    உங்களிடம் அனுபதி பெற்று அதனை அவர் வெளியிட்டு, அதில் உங்களின் பெயரையும் எழுதி ”நன்றி” எனப்போட்டிருந்தால் நாகரீகமாக இருந்திருக்கும்.

    உங்கள் தளத்தில் உள்ள செய்திகளை யாரும் COPY செய்ய முடியாதபடி செய்வதற்கு வழிமுறைகள் உள்ளன. அவற்றைப்பற்றிய தொழில்நுட்பம் தெரிந்தவர்களிடம் கேட்டு, அதன்படி செய்து, தடை போட்டுக் கொள்ளுங்கள், ஐயா. அதுதான் நல்லது.


    தொடரும் ...

    ReplyDelete
  8. நானும் பல நேரம் அப்படித் தேடிப்பார்த்திருக்கிறேன்!

    ReplyDelete
  9. டாக்டர் - வைத்தியர்
    மெடிகல் ஷாப் - மருந்துக்கடை
    தர்ம ஆஸ்பத்தரி + மிக்சர்

    எல்லாமே உண்மை, நல்ல நகைச்சுவையும் தான்.

    //இப்போது ஊருக்கு ஊர் டாக்டர்கள். தடுக்கி விழுந்தால் ஒரு டாக்டர். கண்ணில் தூசி விழுந்தால் ஒரு டாக்டர். புரையேறினால் ஒரு டாக்டர். என்று விதம் விதமான டாக்டர்கள். முன்னேற்றமான விஷயம்தான்.//

    ஆஹா! அருமையாகவே சொல்லிட்டீங்க.

    ஆமாம். கண் என்றால் கண்விழிக்கு ஒருவர், கண் இமைக்கு ஒருவர், கண்புரைக்கு ஒருவர், கண்ணிலுள்ள பொடி நரம்புகளுக்கு ஒருவர் என அதிலேயே பல்வேறு ஸ்பெஷலிஸ்டுகள்.

    கண் ஆபரேஷன், லேஸர் ஆபரேஷன், டயபடீஸ் ரெடினோபதி, குளுக்கோமா என்று ஒவ்வொன்றிலும் ஏராளமான விஷயங்கள் தாராளமான சிகிச்சைகள் என ஆகிவிட்டது.

    ஃபர்ஸ்ட் ஒபினியன், செகண்ட் ஒபினியன், தேர்டு ஒபினியன் என்று நாம் நம்முடைய ஒவ்வொரு உறுப்புக்களுக்கும், அவற்றின் உதிரிபாகங்களுக்கும் [Spare Parts] அலையோ அலையென அலைந்தே வாழ்க்கையின் பாதி நாட்களைக் கழிக்க வேண்டியுள்ளது.

    ஆனாலும் இவற்றையெல்லாம் உத்தேசித்து தான் நம் ஆயுட்காலம் முன்பு போல இல்லாமல், நவீன மருத்துவ முன்னேற்றத்தால் சற்றே நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் இங்கு மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

    அதனால் இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ள ஆயுட்காலம் முழுவதும், நாமும் ஒவ்வொரு ஸ்பெஷலிஸ்டுகளாகத் தேடித்தேடி அலைந்து கொண்டே இருப்போமாக.

    அந்தக்காலத்தில் எல்லாவற்றிற்கும்
    ஒரே டாக்டர், ஒரே மாத்திரை, ஒரே மிக்சர். !
    ஆனால் அற்ப ஆயுள் மட்டுமே ....... ;)

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  10. முதல் படத்தில் காட்டியுள்ள மாத்திரைகளும், கேப்சூல்களும் கலர்கலராக அழகாக உள்ளன.

    ஏனோ எனக்கு அவற்றைப் பார்த்த்தும்
    சீரகமிட்டாயே நினைவுக்கு வந்தது. ;))))))

    VGK

    ReplyDelete
  11. ஒவ்வொரு முறையும் இணையத்தில் தேவையான தகவல்களை தமிழ் மூலம் தான் அதிகம் பெறுகின்றேன். நிச்சயம் இது இன்று வரையிலும் அதிக ஆச்சரியம்அளிக்கின்றது. எது குறித்து வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் எழுத வாய்ப்பு இருப்பதால் கடைசியில் தமிழ் மொழியில் இல்லாத தகவலே இல்லை என்கிற அளவுக்கு கொட்டிக் கிடக்கின்றது. தேவையான, தேவையற்ற அத்தனை தகவல்களும் இருக்கிறது. நிச்சயம் அடுத்த தலைமுறை தமிழ்மொழியை (இப்போதுள்ள ஆங்கில பள்ளிக்கூட மகிமையால்) இணையத்தில் எழுதும் அளவிற்கு இருப்பார்களா? படிப்பார்களா? என்று யோசித்தாலும் முடிந்தவரைக்கும் இப்போதுள்ள தமிழ் இணைய வளர்ச்சி பிரமிக்கக்கூடியதாக இருக்கிறது இளங்கோ.

    தமிழ் மருத்துவ குறிப்புகளை அதிகம் தேடிப் பார்த்துள்ளேன். நிறைய தகவல்கள் இருக்கிறது.

    ReplyDelete
  12. இதுவரை அறியாத அருமையான
    தகவலை பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. சிறப்பான பகிர்வு.... தேவையானதும் கூட.

    ReplyDelete
  14. மறுமொழி > குட்டன் said... ( 1, 2 )

    // நானும் பல நேரம் அப்படித் தேடிப்பார்த்திருக்கிறேன்! //

    உங்கள் அனுபவத்தினை நீங்கள் அப்போதே எழுதி இருக்கலாம். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  15. மாலை 6 மணிக்கு தான் மின்சாரம் வந்தது... அதனால் தாமதம்...

    http://tamilcomputercollege.blogspot.in

    இந்த தளத்தில் நிறைய உள்ளன... தேவைப்படுவதை பயன்படுத்திக் கொள்ளவும்...

    முக்கியமாக : இவை இரண்டும் மிகவும் உதவும்...

    (1) http://tamilcomputercollege.blogspot.in/2012/09/blog-post_19.html (திருடப்பட்ட பதிவுகளை கண்டுபிடித்து திருட்டு வலைப்பக்கங்களில் இருந்து நீக்குவது எப்படி?)

    (2) http://tamilcomputercollege.blogspot.in/2012/08/jquery-methord.html (பதிவு திருடர்களுக்கு நிரந்தர தீர்வு (jQuery Method)...)

    நன்றி சார்...

    ReplyDelete
  16. எளிதாக HTML-இல் சேர்க்கலாம்... (இரண்டாவது)

    சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளவும்...

    dindiguldhanabalan@yahoo.com
    9944345233

    ReplyDelete
  17. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    // தாங்கள் கஷ்டப்பட்டு எழுதின பதிவை வேறொருவர் COPY + PASTE செய்துள்ளார் என்பது கேட்க மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.//

    ஒரு பதிவரே இதுமாதிரி செய்து இருப்பது மிக்க வருத்தமாக உள்ளது. அவரது Comment Box – இல் எனது கருத்தினை தெரிவித்து இருக்கிறேன். பார்ப்போம்!

    //உங்கள் தளத்தில் உள்ள செய்திகளை யாரும் COPY செய்ய முடியாதபடி செய்வதற்கு வழிமுறைகள் உள்ளன. அவற்றைப்பற்றிய தொழில்நுட்பம் தெரிந்தவர்களிடம் கேட்டு, அதன்படி செய்து, தடை போட்டுக் கொள்ளுங்கள், ஐயா. அதுதான் நல்லது.//

    உங்களிடம் செல்போனில் பேசிய பிறகு எனது பதற்றம் பாதி தணிந்தது. தங்கள் மறுமொழியைக் கண்டவுடன் இன்னும் ஆறுதல்.

    மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )

    //ஆனாலும் இவற்றையெல்லாம் உத்தேசித்து தான் நம் ஆயுட்காலம் முன்பு போல இல்லாமல், நவீன மருத்துவ முன்னேற்றத்தால் சற்றே நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் இங்கு மறுக்கவோ மறைக்கவோ முடியாது.//

    //அந்தக்காலத்தில் எல்லாவற்றிற்கும்
    ஒரே டாக்டர், ஒரே மாத்திரை, ஒரே மிக்சர். !
    ஆனால் அற்ப ஆயுள் மட்டுமே ....... ;) //

    உண்மைதான்! உங்கள் கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்! பாராட்டிற்கு நன்றி!

    மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 3 )
    எனக்கும் இன்னும் சீரக மிட்டாய் நினைவுகள் உண்டு. ஸ்பூனில் அள்ளி பேப்பரில் மடித்து கொடுப்பார்கள்.


    ReplyDelete
  18. மறுமொழி > துரைடேனியல் said...
    சகோதரரின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said..

    உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி தருகிறது. நானும் தமிழ் மருத்துவ குறிப்புகளை இணையத்தில் படித்துள்ளேன். படித்தும் வருகிறேன். கட்டுரை ஆங்கில மருந்துகளைப் பற்றி என்பதால் அவைகளைப் பற்றி எழுதினேன். தங்கள் கருத்துரைக்கு நன்றி1

    ReplyDelete
  20. மறுமொழி > Ramani said...( 1 , 2 )

    எனக்கு எப்போதும் உற்சாகம் தந்து வரும் கவிஞர் ரமணியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... ( 1, 2 )

    உங்களுக்கு நான் எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை. நமக்கு என்ன என்று ஒதுங்கிச் செல்லும் இந்நாளில் எனக்கு உதவியமைக்கு நன்றி! நீங்கள் சொன்ன தளங்களுக்கும் சென்று பார்க்கிறேன். தேவைப் படும்போது தொடர்பு கொள்கிறேன்.

    ReplyDelete
  22. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  23. பயனுள்ள தகவல்.

    சில தளங்களில் தவறான தகவல்கள் இருக்கின்றன. மிகப் பிரபலமான நாளிதழ் தளத்தில் தப்பான தகவல் இருந்தது. அதை நான் நம்பி எடுத்து எழுத அது தவறு என்று இன்னொருவர் நிரூபித்தார் என்னுடன் தொடர்பு கொண்டு.

    ReplyDelete
  24. மறுமொழி > ரிஷபன் said...

    நீங்கள் சொல்லும் கருத்தும் யோசனை செய்ய வேண்டிய விஷயம்தான். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  25. அருமையான தகவல் சார்! நான் மருந்துகள் பற்றி அறிந்து கொள்ள கூகிள் பயன்படுத்தியதில்லை சார்! முயர்ச்சித்துப்பார்க்கிறேன் சார்! தங்களது பதிவினை ஒருவர் காப்பி அடித்துப்போட்டிருப்பது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது! பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயத்தை உரியவரின் ஒப்புதல் கேட்டுக்கொண்டு பகிரவேண்டும் என்பதே பலர் அறிவதில்லை!

    ReplyDelete
  26. REPLY TO … யுவராணி தமிழரசன் said...
    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete