Tuesday 23 October 2012

தங்கம் விலை – 86 வருட பட்டியல்.



நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் வேறு ஒரு கிளையில் இருந்த வங்கி குமாஸ்தா ஒருவரைப் பற்றி சொன்னார்கள். அவர் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து ஒரு பவுன் நகை வாங்கி வைத்துக் கொள்வாராம். எங்களால்தான் முடியவில்லை நீங்களாவது அவரைப் போல மாதம் ஒரு பவுன் சேமியுங்கள் என்று ஆலோசனை சொன்னார்கள். என்னாலும் அவ்வாறு செய்ய  முடியவில்லை. நான் திருச்சியிலிருந்து வெளியூருக்கு வேலைக்கு சென்று வரும் செலவுகளையும்  மற்ற செலவுகளையும்  யோசித்ததில்  மாதா மாதம் பவுனுக்கு செலவிட முடியாமல் போய்விட்டது. அந்த மனுஷன் எப்படி சேர்த்தார் என்று தெரியவில்லை. எனவே புதிதாக வேலைக்கு செல்பவர்கள் இந்த யோசனையை முடிந்தால் மேற்கொண்டு பாருங்கள். நகைக் கடைக்காரர்களின் தங்க நகை சீட்டில் சேருவதில் பயன் இல்லை. ஏனெனில் சீட்டின் முடிவில் அன்றைய தங்கத்தின் விலைக்குத் தக்கவாறே அவர்கள் நகைகளைத் தருவார்கள். இதில் லாபமில்லை.

இன்னும் சில பெண்மணிகள். அது கிராமமாக இருந்தாலும் நகர்ப் புறமாக இருந்தாலும் சரி. அவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை “ பவுன் நூறு ரூபாய்க்கு விற்ற காலத்திலேயே வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னேன். மனுஷன் கேட்டால்தானே “ என்பதுதான். அந்த மனுஷனைக் கேட்டால் “எங்கே சார் வீட்டுச் செலவு , பிள்ளைகள் படிப்புச் செலவு என்று இருக்கும்போது கிடைக்கிற சம்பளத்தில் என்னத்தை வாங்குவது “ என்று அலுத்துக் கொள்வார். உண்மையில் சம்பளம் ஏறும் போதே, அதற்குத் தகுந்தாற் போல தங்கத்தோடு போட்டி போட்டுக் கொண்டு மற்ற விலைகளும் ஏறி விடுகின்றன. வரவு எட்டணா! செலவு பத்தணா! கடைசியில் துந்தணா!  இதுதான் நிலைமை!


தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் தனது கால நிலைமையை இவ்வாறு சொல்கிறார்.

“ மாதம் 100 ரூபா வருமானம் உள்ளவர்கள் வீட்டு வாடகை ரூபா 10, அரிசி ரூபா 15, பலசரக்கு ரூபா 15, காய்கறி ரூபா 8, பால் ரூபா 8 , பலகாரம் ரூபா 8 , எண்ணெய் ரூபா 5, விறகு ரூபா 5, வரட்டி ரூபா 2, விளக்கு ரூபா 2, துணி துவைக்க ரூ.3 , சவரம் ரூபா 2 , துணிக்காக ரூபா 5 , இதர செலவுக்காக ரூபா 7 , மீதம் ரூபா 5 எனத் திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டும் “
               - கி.ஆ.பெ. விசுவநாதம். ( ஆறு செல்வங்கள் , பக்கம்.27 ) 

இதில் அவரது காலத்திற்கும் நம்முடைய காலத்திற்கும் உள்ள வசதி வாய்ப்புகளைப் பற்றியும் வேற்றுமையையும்  இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.




ஒவ்வொரு நாடும் தனது ரிசர்வ் வங்கியில் வைத்துள்ள தங்கத்தின் இருப்புக்கு தக்கவாறு கரன்சிகளை வெளியிடுகின்றன. அந்த தங்கத்தின் விலையானது  நமது இந்தியாவில் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் விலை என்ன என்று வழக்கம் போல கூகிளில் (GOOGLE) தேடியபோது ஒரு அட்டவணை கிடைத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அட்டவணையை நிறைய தளங்கள் வைத்துள்ளன. எங்கிருந்து யார் முதலில் வெளியிட்டார்கள்  என்றும் தெரியவில்லை. எனவே நான் கூகிளுக்கு மட்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


 ( ALL PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )









30 comments:

  1. அவரவர் சக்திக்கேற்ப மாதம் ஒரு கிரமாவது வாங்குதல் நலம்....

    ReplyDelete
  2. அரிய தகவல்கள் பகிர்தமைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  3. தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் தகவல்கள் வியப்பை தருகின்றன...

    நல்லதொரு அட்டவணைக்கு நன்றி...

    ReplyDelete
  4. சிறப்பான தகவல். பட்டியலைப் பார்த்தால், கடந்த 10 வருடங்களில் தான் அதிகமாய் விலை உயர்ந்து இருக்கிறது - 2002 - ல் ரூபாய் 4990 இருந்தது இப்போது ரூபாய் 30000/- - ஏறக்குறைய 6 மடங்கு அதிகமாகி இருக்கிறது!

    மாதாமாதம் வாங்க - குறைந்த பட்சம் ஒரு கிராம் ஆவது வாங்க முயற்சி செய்ய வேண்டும்! பார்க்கலாம்.

    ReplyDelete
  5. தங்கம் வாங்குவது உண்மையில் லாபகரமானதா? எனக்கு ஐயமாகவே இருக்கிறது.

    ReplyDelete
  6. மறுமொழி > ஸ்கூல் பையன் said...

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!



    ReplyDelete
  7. மறுமொழி > Sasi Kala said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  8. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said..
    சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  9. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  10. தங்கமான பதிவு. தங்கமான தகவல்கள்.

    சேமிப்பு மிகவும் அவசியமே. அதுவும் தங்க்த்தில் சேமிப்பது மிகச்சிறந்த முதலீடு தான். ஆண்டுக்கு ஆண்டு நிச்சயம் ஏறுமுகமாகவே உள்ளது தான்.

    தாங்கள் சொன்னதுபோல மாதாமாதம் ஒரு பவுன் வாங்குவது என்பது எல்லோருக்கும் ஒத்துவராது.

    ஏதோ மாதம் ஒரு கிராம் வீதமாவது வாங்க முயற்சித்தால், அதுவே கூட நல்ல பலனைத் தரக்கூடும்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  11. //எனவே புதிதாக வேலைக்கு செல்பவர்கள் இந்த யோசனையை முடிந்தால் மேற்கொண்டு பாருங்கள்.//

    நல்ல ஆலோசனை தான்.

    //நகைக் கடைக்காரர்களின் தங்க நகை சீட்டில் சேருவதில் பயன் இல்லை. ஏனெனில் சீட்டின் முடிவில் அன்றைய தங்கத்தின் விலைக்குத் தக்கவாறே அவர்கள் நகைகளைத் தருவார்கள். இதில் லாபமில்லை.//

    இந்தக்கணக்கெல்லாம் நிறைய பேர்களுக்குப் புரிவது இல்லை. குலுக்கலில் தனக்கே விழப்போகிறது,

    அதன் பிறகு நாம் பணம் தொடர்ந்து கட்டவேண்டாம் என நினைத்து பலரும் ஏமாறுகிறார்கள்.

    விளம்பரங்களால் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.

    ReplyDelete
  12. //இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அட்டவணையை நிறைய தளங்கள் வைத்துள்ளன. எங்கிருந்து யார் முதலில் வெளியிட்டார்கள் என்றும் தெரியவில்லை. //

    ஆம். நானும் பல தளங்களில் இதைப்பார்த்துள்ளேன்.

    1970 இல் ஒரு கிராம் ரூ. 18.50 கூலி சேதாரம் சேர்த்து ரூ. 20 க்கு மேல் கிடையாது. நானே வாங்கியுள்ளேன். அதையே தான் அட்டவணையும் சொல்கிறது.

    இன்று ஒரு கிராம் ரூ. 2750 விற்கிறது என நினைக்கிறேன்.

    42 ஆண்டுகளில் 150 மடங்கு ஏறியுள்ளது.

    இன்னும் ஏறக்கூடும். அது தான் தங்கம்.

    ஏறினால் தான் அதற்குப்பெயர் தங்கம்.

    தங்கமான பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள், ஐயா.

    VGK

    ReplyDelete
  13. மறுமொழி > T.N.MURALIDHARAN said...

    //தங்கம் வாங்குவது உண்மையில் லாபகரமானதா? எனக்கு ஐயமாகவே இருக்கிறது. //.

    ஒரு கடைக்காரரிடம் வாங்கிய நகையை நாம் இன்னொரு நகைக் கடையில் விற்கப் போனால் வாங்க மாட்டார்கள். நாம் விற்கும்போது நகையின் மதிப்பை ரொம்பவும் குறைத்து மதிப்பிடுவார்கள். கூட்டி கழித்துப் பார்த்தால் தங்கம் வாங்குவதால் லாபம் அதிகமில்லை. தங்கள் வருகைக்கு நன்றி1

    ReplyDelete
  14. தங்கம் வாங்குவது
    நம்மை விட தங்கவியாபாரிகளுக்குத்தான்
    நல்ல லாபமென நினைக்கிறேன்
    வாங்குகையிலும் விற்கையிலும் அவர்கள்
    அடிக்கிற கொள்ளை மிக அதிகமாக உள்ளது
    ஆயினும் இடத்திற்கு அடுத்த படியாக
    மதிப்பு அதிகம் கூடுவது தங்கத்திற்காகத்தான் உள்ளது
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1, 2, 3 )
    // தங்கமான பதிவு. தங்கமான தகவல்கள்.//
    // விளம்பரங்களால் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். //
    // ஏறினால் தான் அதற்குப்பெயர் தங்கம். தங்கமான பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள், ஐயா.//
    அன்புள்ள திரு VGK அவர்களின் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > Ramani said
    கவிஞர் ரமணி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete

  17. ஒப்பிட்டு பார்த்ததில் தலை சுற்றுது!

    ReplyDelete
  18. தங்கம் விலை தங்காமல் உயர்வது வேதனைதான்!

    ReplyDelete
  19. 1925ல் ருபாய் 18ன் மதிப்பு இன்றைய 30,000 ரூபாய்க்கு அதிகமிருக்கலாம் என்றும், அன்றைய 18ரூபாயில், இன்றைய 30,000ரூபாய் செய்யும் வேலைகளை விட அதிகம் செய்துவிடலாம் எனவும் எனது தாத்தா சொல்கிறார். புள்ளிவிவரங்களை கொண்டு பார்த்தால் சரியான மதிப்பை அறிந்து கொள்ள முடியும்.

    ஆகவே இந்த அட்டவணை ரூபாயின் மீதான மதிப்பு குறைந்திருப்பதை காட்டுவதாகவே நான் பார்க்கிறேன்.

    "ரூபாய் வேண்டுமானால் தனது மதிப்பை இழந்து நிற்கலாம். ஆனால் நான் தங்கம், எனது மதிப்பை நான் இழக்கமாட்டேன்" என்று தங்கம் தனது அப்போதைக்கப்போதைய ரூபாயின் மதிப்பிற்கு ஈடாக தனது மதிப்பை சமன்படுத்திக்கொண்டதுதான் இப்போது விலை ஏற்றமாக தெரிகிறது. கொஞ்சம் சிந்தித்தால் விளங்கும்.

    இதற்க்கு கடந்த 86வருடங்களில் ஏற்பட்ட பணவீக்கங்கள் மிக முக்கிய காரணமாகும்!

    நல்ல பகிர்வு அய்யா! தங்கம் வாங்கவே பலவாறு யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. எப்படியும் கடைக்காரர்களால் ஏமாற்றப்படுகிறோம்! வாங்கும்முன் சிந்திக்கவேண்டியது நம் உழைப்பிற்கு கொடுக்கும் மதிப்பு. நன்றி அய்யா!

    ReplyDelete
  20. திரு கி.ஆ.பெ. அவர்கள் கொடுத்த பட்ஜெட் நன்றாக இருக்கிறது.
    இந்தக் காலத்தில் எல்லா பொருட்களையுமே அதிகம் வாங்குகிறோம்.
    நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் நாலு கத்தரிக்கோல்கள். சமயத்தில் நான்கும் காணாமல் போய் ஐந்தாவது ஒன்றும் வாங்குகிறோம்.

    பணத்தின் அருமை, பொருள்களின் அருமை இரண்டுமே தெரிவதில்லை.

    இதனாலேயே துண்டு விழும் பட்ஜெட் என்று தோன்றுகிறது.

    இதில் தங்கம் எங்கு வாங்குவது?

    ReplyDelete
  21. நல்ல பதிவு. நமது பெண்களுக்கு என்று தங்கத்தின் மீதுள்ள மோகம் குறையுமோ (வாய்ப்பில்லை என்பது நிஜம்) அதுவரை அவசியம் பெண் குழந்தை உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

    2006 ல் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் ஒன்றுக்கு ரூபாய் 900/- தான். ஆனால் இன்றோ ரூபாய் 2800/-க்கு மேல். இது இன்னும் ஏறிக்கொண்டே போகும் என சொல்கிறார்கள்.

    தங்கத்தில் முதலீடு செய்தால் யாருடைய சிபாரிசுமில்லாமல் அவசரத்திற்கு வங்கியில் கடன் பெற வாய்ப்புண்டு.

    ReplyDelete
  22. மறுமொழி > புலவர் சா இராமாநுசம் said...

    // ஒப்பிட்டு பார்த்ததில் தலை சுற்றுது! //

    புலவர் அய்யா! உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தான். கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  23. மறுமொழி > Seshadri e.s. said...

    // தங்கம் விலை தங்காமல் உயர்வது வேதனைதான்! //

    ஏறிய தங்கத்தின் விலை இனிமேல் குறையப் போவதில்லை. வியாபாரிகள் விலையை குறைக்க விடமாட்டார்கள். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  24. மறுமொழி > வே.சுப்ரமணியன். said...

    // 1925ல் ருபாய் 18ன் மதிப்பு இன்றைய 30,000 ரூபாய்க்கு அதிகமிருக்கலாம் என்றும், அன்றைய 18ரூபாயில், இன்றைய 30,000ரூபாய் செய்யும் வேலைகளை விட அதிகம் செய்துவிடலாம் எனவும் எனது தாத்தா சொல்கிறார். புள்ளிவிவரங்களை கொண்டு பார்த்தால் சரியான மதிப்பை அறிந்து கொள்ள முடியும். //

    உங்கள் தாத்தாவிடம் இது போல் பழைய கால அனுபவங்கள் இருக்கும்.அந்த அனுபவங்களையும், நீங்கள் உங்கள் பதிவுகளில் வெளியிடலாம். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > Ranjani Narayanan said...

    // இந்தக் காலத்தில் எல்லா பொருட்களையுமே அதிகம் வாங்குகிறோம். நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் நாலு கத்தரிக்கோல்கள். சமயத்தில் நான்கும் காணாமல் போய் ஐந்தாவது ஒன்றும் வாங்குகிறோம். பணத்தின் அருமை, பொருள்களின் அருமை இரண்டுமே தெரிவதில்லை.//

    நீங்கள் சொல்வது உண்மைதான். இப்போது எல்லோருடைய வீட்டிலும் நடப்பதுதான். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பகிர்ந்து கொள்ளுதல் போன்ற விஷயங்கள் இந்த காலத்து பிள்ளைகளிடம் குறைந்து வருகின்றன. சகோதரி அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!


    ReplyDelete
  26. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // தங்கத்தில் முதலீடு செய்தால் யாருடைய சிபாரிசுமில்லாமல் அவசரத்திற்கு வங்கியில் கடன் பெற வாய்ப்புண்டு. //

    தங்கத்தின் முக்கியமான பயன்பாடு என்பதே இதுதான். வங்கி அதிகாரியாக இருந்த தாங்கள் சொன்ன வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  27. நானும் இதை பற்றி என் பாட்டி கூறுவதை கேட்டிருக்கிறேன் சார்! தாத்தா ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் வேளையில் இருந்ததால் என் பாட்டி அடிக்கடி சொல்வார்களாம் மாதா மாதம் பணம் சேர்த்து வருடம் ஐந்து பவுன் வீதம் எடுத்துவிட வேண்டும் என்று! அப்பொழுது பவுன் விலை வெறும் ரூ.300 தான். இன்றும் இந்த காரணத்திற்க்காக என் தாத்தா பாட்டியிடம் திட்டு வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்! அதே போல் அன்று பணம் சேமிப்பதில் இருந்த ஈடுபாடு அதை தங்கத்தில் முதலீடு செய்வதில் இல்லை என்று என் தாத்தா கூறுவார்!

    நல்ல பகிர்வு சார்!நன்றி!!

    ReplyDelete
  28. மறுமொழி> யுவராணி தமிழரசன் said...

    எல்லோருக்குமே மாதா மாதம் பவுன் சேர்க்க ஆசைதான். பாட்டி சொல்லை தட்டாதீர்கள். சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  29. தங்கம் பற்றி தங்கமான தகவல்கள்....

    ReplyDelete
  30. மறுமொழி> இராஜராஜேஸ்வரி said...

    // தங்கம் பற்றி தங்கமான தகவல்கள்.... //

    சகோதரியின் வருகைக்கும் தங்கமான கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete