Saturday 23 June 2018

திருச்சி அன்னை ஆசிரமத்தில் … …



திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் பேராசிரியர் நல்லுசாமி மற்றும் இவரது மனைவி பேராசிரியர் ஜானகி நல்லுசாமி குடும்பத்தினர். இவர்கள் இருவருமே சமூக நல்லெண்ணம் மிக்கவர்கள். அரசு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிபுரிந்த காலத்தில் நிறைய பேருக்கு குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு உதவி செய்தவர்கள். புதுக்கோட்டையில் இருந்ததால், அந்த மாவட்ட ஆசிரியர்கள் பலருக்கும் அறிமுகம் ஆனவர்கள். மேலும் பேராசிரியர் ஜானகி நல்லுசாமி அவர்கள் ராணி அண்ணா மகளிர் கலைக் கல்லூரி, திருநெல்வேலியில் முன்னாள் முதல்வராக பணிபுரிந்தவர். பேராசிரியர்களான தம்பதியர் இருவரும் பணி ஓய்வு பெற்ற பின்னரும் இப்போதும் பல சமுக நலக் காரியங்களை தொடர்ந்து செய்து வருபவர்கள்.

இவர்களின் ரே அன்பு மகள் N.லாவண்யா (04.02.1978 – 16.06.2011 – Senior Manager, Canara Bank, Mumbai – Ex.Asst Manager, MTNL, Mumbai) அவர்களது 7 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு ( சென்றவாரம் - 16.06.2018 – சனிக்கிழமை), திருச்சி ஏர்போர்ட் அருகே அமைந்துள்ள, அன்னை ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இவர்கள் குடும்பம் சார்பாக  மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்து இருந்தார்கள். நானும் அங்கு சென்று இருந்தேன். இந்த அன்னை  ஆசிரமத்தில் பேராசிரியர் ஜானகி அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினர் (Excutive Committee Member) ஆகவும் இருந்து வருகிறார். 

அன்னை ஆசிரமம்

 படம் மேலே அன்னை ஆசிரமம் முகப்பு தோற்றம்


படங்கள் மேலே அன்னை வீரம்மாள் நினைவு மணிமண்டபம்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் ஏழை விசாயக் குடும்பத்தில் பிறந்த அன்னை வீரம்மாள் (1924 – 2006) அவர்கள், திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையத்தில் சுமார் 40 ஆண்டுகள் பணிபுரிந்தவர்; திருமணமாகி 4 ஆண்டுகள் மட்டுமே இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு 2 குழந்தைகளுக்குத் தாயான இவர், 57 ஆண்டுகள் இல்லறத் துறவியாக தனது வாழ்நாளின் இறுதிவரை, எளிய வெள்ளை உடை உடுத்தி, எளிய உணவு உண்டு, எளிய வாழ்க்கை வாழ்ந்து பிறர்நலத்துக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.  1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்கள் நலச் சங்கத்தை நிறுவினார்கள். இன்று இச்சங்கத்தின் அங்கமாக 1. திக்கற்ற குழந்தைகள் இல்லம் 2.ராஜீவ்காந்தி தேசீய குழந்தைகள் காப்பகம் (Creche) 3. டாக்டர் கமலம்மா பாலகிருஷ்ணன் முதியோர் இல்லம் 4.அன்னை மேல்நிலைப்பள்ளி 5.எம்.எம்..தொடக்கப் பள்ளி 6.ஓய்வூதியர் இல்லம் 7.பணிபுரியும் மகளிர் விடுதி 8.கணினி பயிற்சி மையம்  9.தையற் பயிற்சி மையம் 10. Palliative Care Centre ஆகியவை ஜாதி சமயத்திற்கு அப்பாற்பட்டு, பொதுநல நோக்கத்துடன், சிறப்பாக இயங்கி வருகின்றன. அன்னை வீரம்மாள் மறைந்தவுடன் அவரது விருப்பத்திற்கிணங்க அவரின் உடல் திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

முதியோர் இல்லத்தில்

படம் மேலே ஆசிரமத்தின் எதிரே உள்ள முதியோர் இல்லம் வழிகாட்டும் அறிவிப்பு பலகை

படம்  மேலே முதியோர் இல்லத்தின் நுழைவாயிலின் உள்ளே உள்ள முற்றம்

அன்னை ஆசிரமத்தின் எதிரே தனி கட்டிடத்தில் இருக்கும் முதியோர் இல்லம் சென்று, அங்கிருந்த ஹாலில் தங்கி இருந்தோம். முன்னதாக ஆசிரமம் வழக்கப்படி ஹாலில் இறை வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் முதியோர்களுக்கு என இருக்கும் சாப்பாட்டு மண்டபத்தில் (Dining Hall) அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 
 
படம் மேலே முதியோர் இல்லத்திற்கான பொது ஹால்

படம் மேலே ஹாலில் உள்ள இறைவழிபாடு இடம்

படம் மேலே ஹாலில் பேராசிரியர் நல்லுசாமி குடும்பத்தினர்

படம் மேலே ஹாலில் முதியோர் இல்லத்து முதியவர்கள்




படங்கள் மேலே ஹாலில் இறை வழிபாடு 

குழந்தைகள் இல்லத்தில்

அடுத்து ஆசிரம வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு மான்ய உதவி பெறும் அன்னை ஆசிரமம் குழந்தகள் இல்லம். சென்றோம். அங்கும் இறை வழிபாடு மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

படம் மேலே குழந்தைகள் இல்லம்



படங்கள் மேலே திஉணவுக்கு முன் டைபெற்ற இறை ழிபாடு

பின்னர் இறுதியாக வந்திருந்த விருந்தினர்களான எங்களுக்கும் அன்னை ஆசிரம சாப்பாட்டு மண்டபத்தில் (Dining Hall) மதிய உணவு வழங்கப்பட்டது. எல்லோரிடமும் விடை பெற்று விட்டு வந்தோம்.

 

44 comments:

  1. நல்லதொரு செயல் இளவயதில் அவர்களது மகள் மறைவு வருத்தமானதே...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  2. சிறந்த தொண்டு அமைப்பை அடையாளம் காட்டியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  3. இளவயதில் மகள் மறைந்த பின்னரும் அவர்கள் இடைவிடா சமூகத் தொண்டு பாராட்டுக்குரியது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மேடம். அவர்கள் இந்த துயரிலிருந்து மீண்டு வந்ததே பெரிய விஷயம் மேடம்.

      Delete
  4. மகள் நினைவில் அவர்கள் செய்யும் இது மாதிரி சேவைகள் போற்றத் தகுந்தவை.

    நீங்கள் நலமா இளங்கோ ஸார்?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் 'எங்கள் ப்லாக்' ஶ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கும் நலன் விசாரிப்பிற்கும் நன்றி.

      Delete
  5. நீங்கள் இடுகை வெளியிட்டு ரொம்ப நாளாகிவிட்டதே... ரொம்ப பிஸியா? நலமா சார்? அடிக்கடி எழுதுங்கள்.

    பேராசிரியர்களின் குழந்தை சிறு வயதிலேயே மரணித்தது திடுக் என இருந்தது. அவர்களின் பொதுநலச் சேவை பாராட்டத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெ.த அவர்களுக்கு நன்றி. இப்போதுதான் உடல் நலன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டுள்ளது.

      Delete
  6. 23 வயது மகளை பறிகொடுத்தவர்களின் மன நிலையினை நினைத்துப் பார்க்கின்றேன்
    மனம் கனக்கிறது ஐயா
    தாங்கள் நலம்தானே?
    உடல் நிலையினைக் கவனித்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. கரந்தை ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  7. திருச்சி வனொலி நிலையத்தில் அன்னை வீரம்மாள் குரலை கேட்டு இருக்கிறேன். அவர் சமூக தொண்டு, உடல்தானம் பற்றி எல்லாம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.


    பேராசிரியர் அவர்களின் மகள் நல்ல பணியில் இருந்து இளம் வயதில் இறந்து விட்டது அறிந்து மனம் கனத்து போனது.

    பேராசிரியர் அவர்கள் குடும்பத்தினர் சமூக சேவை செய்து வருவது மகிழ்ச்சி. அது அவர்களுக்கு மனாமைதியைத் தரும்.

    அன்னை ஆசிரமம், முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் எல்லாம் அறிந்து கொண்டேன், திருச்சி வந்தால் பார்க்கவேண்டும் அன்னை வீரம்மாள் மணி மண்டபத்தை.


    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நானும் திருச்சி வனொலி நிலையத்தில் அன்னை வீரம்மாள் குரலை கேட்டு இருக்கிறேன். அன்னை ஆசிரமம் பற்றியும், அன்னை வீரம்மாள் பற்றியும் இன்னும் விரிவாக எழுத வேண்டும்.

      Delete
  8. உங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நலமா?
    இங்கு பகிர்ந்து கொண்ட படங்கள் மூலம் நீங்கள் நலமாய் இருப்பது தெரிகிறது. கொஞ்சம் மெலிந்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மெலிந்தால் பரவாயில்லை நலமாய் இருக்க வேண்டும். வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் நலன் விசாரிப்பிற்கு நன்றி. இப்போது உடல் நலம் படிப்படியாய் தேறி வருகிறது.

      Delete
  9. நல்ல விஷயம். தானத்தில் சிறந்தது அன்ன தானமாயிற்றே...

    நல்ல மனம் வாழ்க.... நாடு போற்ற வாழ்க...

    சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  10. திருச்சி வானொலியில் அன்னை வீரம்மாள் அவர்களின் குரலை கேட்டிருக்கிறேன்..

    அவர்களது நற்செயலை இன்று தான் அறிகின்றேன்..

    கருணை உள்ள மனிதர் எல்லாம்
    கடவுளுக்கும் மேலே!..

    - என்று, ஆயிரம் ரூபாய் என்ற திரைப்படத்தின் பாடலில் வரும்...

    கருணையுடன் இந்த மாபெரும் தொண்டினைச் செய்யும் நல்ல உள்ளங்களுக்கு அன்பின் வணக்கங்கள்..

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரரின் கருத்துகளுக்கு நன்றி. அகில இந்திய வானொலியில் அன்னை வீரம்மாளின் குரலை வானொலியில் கேட்டவர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி. அன்றைய 'வானொலி நாடகங்களில்' இவரது நாடக பாத்திரம் மிகவும் பிரபலமானது.

      Delete
  11. அன்பின் அண்ணா..
    இன்று விடியற்காலையில் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டேன்...

    வெகுநாட்களுக்குப் பிறகு இன்றொரு பதிவு... மகிழ்ச்சி..

    எல்லாரும் நலம் வாழ வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் அவர்களின் நலன் விசாரிப்புக்கு நன்றி. நான் நலமே. நீங்கள் நலமா? உங்களைப் போன்ற வலையுலக நண்பர்களின் வலைப்பதிவுகளை படித்து விடுகிறேன். ஆனால் முன்பு போல என்னால் உடனுக்குடன் கருத்துரையையோ அல்லது மறுமொழியையோ எழுத முடிவதில்லை. உடல் மற்றும் மனம் சோர்வுதான் காரணம்.

      Delete
  12. Replies
    1. கருத்துரைக்கு நன்றி நண்பரே.

      Delete
  13. சில வாரங்களாக உங்களை நினைத்துக் கொண்டு இருந்தேன். வலைதளங்களில் எங்கும் உங்களைப் பார்க்க முடியவில்லையே என்று. நலமாக இருக்கீங்களா?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மேலே சகோதரர் தஞ்சை துரை செல்வராஜூ அவர்களுக்கு சொன்ன மறுமொழியையே இங்கும் தருகிறேன்.

      //சகோதரர் அவர்களின் நலன் விசாரிப்புக்கு நன்றி. நான் நலமே. நீங்கள் நலமா? உங்களைப் போன்ற வலையுலக நண்பர்களின் வலைப்பதிவுகளை படித்து விடுகிறேன். ஆனால் முன்பு போல என்னால் உடனுக்குடன் கருத்துரையையோ அல்லது மறுமொழியையோ எழுத முடிவதில்லை. உடல் மற்றும் மனம் சோர்வுதான் காரணம். //

      மூன்று மாதத்திற்கு முன்பு இருந்த நிலைமைக்கு இப்போது நல்ல உடல்நிலைதான்.

      Delete
  14. விமான நிலையம் அருகே மற்றொரு ஆசிரமம் உள்ளது. அங்கே ஒரு முறை வந்துள்ளேன். நல்ல மனம் வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் இரண்டாம் கருத்துரைக்கு நன்றி. இங்கு திருச்சியில் ஏர்போர்ட் அருகே நிறையவே தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆசிரமங்கள். அருகில் மதுரை ரோட்டில் உள்ள பிரேமானந்தா ஆசிரமம் மிகவும் பிரபலம்,

      Delete
  15. திருச்சி ஏர்போர்ட் அருகே அமைந்துள்ள அன்னை ஆசிரமம், குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம் போன்றவை பற்றிய செய்திகள் வெகு அழகான படங்களுடன், விரிவாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    படங்களில் பார்த்தாலே படு சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பசுமையாகவும் நன்கு பராமரிக்கப்பட்டு, அங்கு தங்கியுள்ளோரின் பசிப்பிணியைப் போக்கியும் வருகின்றன என நினைக்கத் தோன்றுகிறது.

    இதில் சம்பந்தப்பட்டுள்ள சமூக ஆர்வலர்கள், ஊழியர்கள், நன்கொடையாளர்கள் + அரசாங்கம் ஆகிய அனைவருக்கும் நம் இதயம் கனிந்த நன்றிகளையும், பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.

    நீண்ட நாட்களுக்குப் பின் தங்களிடமிருந்து ஓர் புதிய பதிவு, மனதுக்கு ஹிதமாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை நல்கிய மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களுக்கு நன்றி.

      Delete
  16. நாம் வசிக்கும் இதே உலகில்தான் இததகைய நல்லவர்களும் வசிக்கிறார்கள், நம்மை விட எவ்வளவோ நல்ல நல்ல சாதனைகளைச் செய்து வருகிறார்கள் என்று எண்ணும்போது குற்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

    இவர்கள் மனிதர்கள் அல்லர், மாமனிதர்கள்!

    - இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்தமைக்கு நன்றி அய்யா.

      Delete
  17. இவர்களைப் போன்ற நல்லுங்களைப் பற்றிப் படிக்கும்போது மனம் நிறைவடைகிறது. உங்களிடமிருந்து இவ்வாறான அமைப்பினைப் பற்றிய விவரங்களைக் கண்டதறிந்து மகிழ்ச்சி. உங்கள் உடல் நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கும் நலன் விசாரிப்புக்கும் நன்றி.

      Delete
  18. மனதிற்கு நிறைவு தரும் நிகழ்ச்சி. நினைவு நாள், பிறந்த நாள், மண நாள் போன்ற நாட்களை இது போல கொண்டாடினால் மனதிற்கு நிறைவாயிருக்கும். இந்த நிகழ்வை நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!

    ReplyDelete
  19. வீரம்மாள் அவர்கள் நிறுவிய அன்னை ஆசிரமம் குறித்து பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். இப்போதுஉங்கள் மூலம் இன்னும் தெளிவாக அறிந்து கொண்டோம். நன்றி.

    ReplyDelete
  20. போற்றுதலுக்கு உரிய பணி . செழித்து வளரட்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவு வந்தது ஆறுதலாய் இரு க்கிறது. உடல் முற்றும் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - பாபு

    ReplyDelete
    Replies
    1. அன்பரின் கருத்துரைக்கும் மற்றும் எனது நலம் வேண்டிய தங்களின் இறைப் பிரார்த்தனைக்கும் நன்றி.

      Delete
  21. நிஜமாகவே போற்ற வேண்டிய பணி. ஆரம்பிப்பது முக்கியமில்லை அதைத் தொடர்ந்து நடத்துவதில் தான் சிறப்பு உள்ளது

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி மேடம்.

      Delete
  22. நலமா தமிழ் இளங்கோ சார்... பதிவுகளைக் காணவில்லையே.

    ReplyDelete
    Replies
    1. நலமே! நண்பரின் நலன் விசாரிப்பிற்கு நன்றி. முடிந்தவரை நண்பர்களின் பதிவுகளையும் மற்றும் முக்கியமான வலைப்பதிவுகளையும் படித்து விடுவேன். ஃபேஸ்புக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வருகிறேன். எனக்கும் பதிவுகளை மீண்டும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. விரைவில் வருகிறேன்.

      Delete