Wednesday 8 March 2017

அப்போது ஏன் இவர் மவுனமாக இருந்தார்?



எதிர்பாராது ஏதாவது நடந்து விட்டால், நண்பர்களில் சிலர் ‘அப்போதே சொன்னேன் கேட்டியா?” என்று அங்காலாய்த்துக் கொள்வதை நம்மில் பலபேர் கேட்டு இருக்கலாம். இப்போது நிறையபேர் பொதுவெளியில் சொல்லும் வார்த்தை ‘அப்போது ஏன் இவர் மவுனமாக இருந்தார்?” என்பதுதான். 

அதிகாரிகள் முன்னிலையில்

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆரம்ப பள்ளிகளில், அதிகாரி வருகை என்று ஒன்று உண்டு.. பெரும்பாலும் திடீர் விசிட் என்பது இருக்காது. சொல்லி வைத்தே எல்லாம் நடப்பது போல் இருக்கும். அந்த அதிகாரியும், சில சமயம் பள்ளி மாணவர்களிடம் உங்களுக்கு இங்கு ஏதேனும் குறை இருந்தால் என்னிடம் இப்போதே இங்கு சொல்லலாம் என்று சொல்லுவார். அங்கு கூடவே நிற்கும், தமது வகுப்பு ஆசிரியையும், தலைமை ஆசிரியையும் மீறி யார் என்ன சொல்லிவிட முடியும்? மவுனம் காத்து விடுவார்கள்.

அதேபோல அரசு அலுவலகங்களிலும் சில தனியார் கம்பெனிகளிலும், உயர் அதிகாரிகள் வரும்போதும், இதே போல சம்பிரதாயமாக கேட்பார்கள். அங்கே நிற்கும் அதிகாரிகளை மீறி அங்குள்ள ஊழியர்கள் என்ன சொல்லி விட முடியும்? அப்படியே சொல்லி விட்டாலும் ஒன்றும் நடக்க போவதில்லை. சொல்லி வம்பை விலைக்கு வாங்குவதை விட, எதுவும் சொல்லாமல் இருப்பதே நல்லது. எனவே மவுனம்தான் நிலவும்.

அப்போது மவுனம் காத்தவர்கள் எல்லாம், வெளியில் வந்தவுடன், மவுனத்தை கலைத்து விடுவார்கள். அப்போது சொல்ல நினைத்தை சொல்லுவார்கள். 

குருச்சேவ் மவுனம்

விளாதிமர் லெனினுக்குப் பிறகு சோவியத் ரஷ்யாவின் ஆட்சியாளராக இருந்தவர் ’இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்பட்ட ஜோசப் ஸ்டாலின். அவர் தனது ஆட்சிக் காலத்தில் நிர்வாக சீர்திருத்தம் முன்னிட்டு, கட்சியிலும் ஆட்சியிலும் சில கடுமையான நடவடிக்கைகள் எடுத்தார். இதனால் இவரை சிலர் சர்வாதிகாரி என்று சொல்வார்கள். ஸ்டாலினுக்குப் பிறகு பிரதமராக வந்தவர் குருச்சேவ். ஜோசப் ஸ்டாலின் உயிரோடு இருந்தவரை அவர் குறித்து ஏதும் சொல்லாத குருச்சேவ், அவர் இறந்த பிறகு அவரைப்பற்றி நிறையவே கடுமையாக விமர்சனம் செய்தார். இப்போது பேசும் குருச்சேவ் அப்போது ஏன் மவுனமாக இருந்தார் என்ற கேள்வியும் அப்போதே உண்டு. இதுபற்றி ஒரு தகவலும் உண்டு.


1956 பிப்ரவரி 25 ஆம் தேதி. நடைபெற்ற ஒரு ரகசிய கூட்டம் அது. கதவுகள் மூடிய அரங்கில், சோவியத் ரஷ்யாவின், கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் நிரம்பி இருக்கின்றனர். அப்போது, அங்கே அந்நாட்டின் அதிபராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்த குருச்சேவ் தனக்கே உரிய ஸ்டைலில் ஒரு நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டு இருந்தார். இதற்கு முந்தைய ஆட்சியில் இருந்த, ஸ்டாலினை ஒரு சர்வாதிகாரி என்றும், அவரது ஆட்சி மோசமானது என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் “அப்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்? என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? ” என்று கேட்டார். உடனே குருச்சேவ் அதட்டலாக, ”யார் அது? எழுந்து நின்று சொல்லவும்” என்று சொன்னார்.. ஆனால் பயம் காரணமாக யாரும் எழுந்து நிற்கவில்லை. கூட்டத்தில் அமைதி நிலவியது. உடனே குருச்சேவ், சிரித்துக் கொண்டே, ” நல்லது. நம்மால் ஏன் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை இப்போது புரிந்து கொண்டு இருப்பீர்கள் “ என்று சொன்னார். 

குருச்சேவ் தகவல் பற்றி எழுத துணை நின்றவை (நன்றியுடன்)
ஆனந்த விகடன் (10 செப்டம்பர் 2008 ) & தினமணி ( 12 ஏப்ரல் 2016 )

61 comments:

  1. //அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் “அப்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்? என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? ” என்று கேட்டார்.//

    சூப்பர் !

    //உடனே குருச்சேவ் அதட்டலாக, ”யார் அது? எழுந்து நின்று சொல்லவும்” என்று சொன்னார்.. ஆனால் பயம் காரணமாக யாரும் எழுந்து நிற்கவில்லை. கூட்டத்தில் அமைதி நிலவியது.//

    இதுதான் எங்கும் எப்போதும் நடந்து வருகிறது.

    பள்ளிக்கூடம், ஆபீஸ் போன்ற உதாரணங்களுடன் விளக்கியுள்ளது அருமை. ஒட்டு மொத்தமாக இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள் எனவும் புரிந்துகொள்ள முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  2. தயக்கம் + பயம்... குழப்பம் மக்களுக்கு...

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. ஆமாம் அந்த் 75 நாட்கள் ஜெயலலிதா அப்போலோவில் இருக்கும் போது பன்னீர் செல்வம் ஏன் மெளனமாக இருந்தார் என்று கேட்டு முடித்து இருக்கலாமோ?

    ReplyDelete
    Replies
    1. மதுரைத் தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தை விட ‘அந்த 75 நாட்கள்’ காட்சிகள் விறு விறுப்பாகத்தான் இருந்தன.

      Delete
  4. வைகைப் புயல் வடிவேல் அவர்கள் - ஏதோ ஒரு படத்தில் ஆடு திருடி விட்டு அதகளம் செய்யும் காட்சி நினைவுக்கு வந்தது..

    வீட்டுக்கு போகணும்.. உண்மை வீடு வரைக்கும் கொண்டு வந்து சேர்க்குமா?.. - என்பது சந்தேகமாகி விட்டது இந்தக் காலத்தில்..

    எதுக்கும் நாமளும் கொஞ்சம் உஷாராகவே இருப்போம்!..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.

      Delete
  5. //”யார் அது? எழுந்து நின்று சொல்லவும்” என்று சொன்னார்.. ஆனால் பயம் காரணமாக யாரும் எழுந்து நிற்கவில்லை. கூட்டத்தில் அமைதி நிலவியது. உடனே குருச்சேவ், சிரித்துக் கொண்டே, ” நல்லது. நம்மால் ஏன் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை இப்போது புரிந்து கொண்டு இருப்பீர்கள் “ என்று சொன்னார்.//

    அருமை.

    ReplyDelete
  6. அருமையா தொடர்புபடுத்தி ( நேரடியாகத் தொடர்புபடுத்தாமல்) எழுதியிருக்கீங்க. தைரியம் வரும்போதுதான், உண்மையை வெளியில் சொல்ல எண்ணுவார்கள் (மனிதனுக்கு உயிர்வாழ்வது முக்கியமில்லையா?).

    இதனால்தான், வேலை செய்யும் கம்பெனிகளிலும், ராஜினாமா செய்து கம்பெனியை விட்டுப் போகும்போதுதான், 'Exit Interview' என்று conduct செய்வார்கள். அப்போதுதான், டிபார்ட்மென்ட், கம்பெனி, தன்னுடைய மேனேஜர் போன்றவர்களைப் பற்றி உண்மையான எண்ணவோட்டங்களைச் சொல்லுவார்கள், அதன்படி திருத்திக்கொள்ளலாம் அல்லது உண்மையை அறிந்துகொள்ளலாம் என்று. அப்போ, போகற எம்பிளாயியை ஏன் அப்பவே சொல்லலை என்று கேட்கமாட்டார்கள். (மேனேஜர், இந்த எக்ஸ்க்யூஸைச் சொல்லித் தப்பித்துக்கொள்வார். இருந்தாலும், போகும் எம்பிளாயி சொல்வது உண்மையாயிருக்கும்)

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி. Exit interview என்ற,எனக்கு புதிதான தகவலுக்கு நன்றி.

      Delete
  7. ஜெ.... மறைவில் சதி இருந்தால் ??? இதில் முதல் குற்றவாளி ஓ.பி.எஸ் தான் ஏன் பதவி போனதும் ஞானோதயம் வந்து விட்டதோ ?
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு நன்றி. ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்குவதில் வல்லவர்கள் நம்நாட்டு அரசியல்வாதிகள். பார்ப்போம்.

      Delete
    2. 'ச' இருந்தது தெரியும். சதி இருந்ததா தெரியாது.'சதி'யின் பொருள் உடன்(க)(இ)ட்டை 80பதை புரிந்து கொள்வோம்

      Delete
  8. தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு சூழலை உதாரணத்துடன் விளக்கிய விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களுக்கு நன்றி.

      Delete
  9. நடக்கும் நாடகங்களை பார்த்தால் தொலைக்காட்சி தொடர்கள் தோற்றது.

    ReplyDelete
  10. குருசேவா கோர்பசேவா ? பா வ ம் நீங்க ளே கன்பியூஸ் ஆயிட்டீங்க போல.))

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கும், பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி.

      //குருசேவா கோர்பசேவா ? பா வ ம் நீங்க ளே கன்பியூஸ் ஆயிட்டீங்க போல.)) //

      பெயர்க் குழப்பம் தான். பிழையைச் சரி செய்து விட்டேன்.

      Delete
    2. காவலன் திரைப்படத்தில் வடிவேலு சொன்னது நினைவு வந்தது. தாங்கள் தவறாக கருத மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் கிறுக்கியது. பொறுத்தருள்க.

      Delete
  11. கம்யூனிசம் பற்றிய இன்னொரு கதையும் உண்டு. ஒரு ரஷ்யனும் அமெரிக்கனும் தங்கள் முறையே சிறந்தது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள் அமெரிக்கன் தன் நாட்டில் பேச்சுசுதந்திரம் உண்டு ரஷ்யாவில் இருக்கிறதா என்று கேட்டு அமெரிக்க ஜனாதிபதியை ஒரு முட்டாள் என்று கூற முடியும் என்றார் உடனே ரஷ்யர் தங்கள் நாட்டவருக்கும் அமெரிக்க ஜனாதி பதியை முட்டாள் என்று கூற முடியும் என்றாராம்.......!

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கும், அவர் சொன்ன ஒரு குட்டிக் கதைக்கும் நன்றி. ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய விலங்குப் பண்ணை - Animal Farm என்ற நாவலும் கம்யூனிசத்தை நையாண்டி செய்யும் ஒன்றாகும்.

      Delete
  12. இது காலம் காலமாக நடந்து வரும் விஷயம் . எதிர்காலத்திலும் நடக்கும் .

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். இது ஒரு தொடர்கதை. ஆட்கள் மட்டும் மாறிக் கொண்டு இருப்பார்கள்.

      Delete
  13. தாங்கள் சொல்ல வந்த செய்தி தெளிவாப் புரிகிறது ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  14. ஜனநாயகத்தின் பேரால் நடக்கும் சர்வாதிகாரத்தை விட ஜனநாயகத்திற்கான சர்வாதிகாரம் எவ்வளவோ மேல்!

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  15. நல்ல பதிவு. இப்படி ஒரு அரசியல்.....

    ReplyDelete
    Replies
    1. நண்பர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  16. இப்போதாவது கேட்கும் தைரியம் வந்து இருக்கேன்னு சந்தோசப் படணும்!இல்லையென்றால் ,உண்மை வெளி வராமலே போய் விடக் கூடும் :)

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  17. சுவையான தகவல். இதே போன்ற அனுபவம் எனக்கு மூன்று நாட்களுக்கு முன்னாள் ஏற்பட்டது. கசப்பான அனுபவம்!

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் இந்த அனுபவத்தை வைத்தே ஒரு பதிவு எழுதலாமே.

      Delete
  18. வணக்கம்
    ஐயா

    அரசியல் அலசல்.... இவை எல்லாவற்றுக்கு ஒருவன் இருக்கிறான் அவன் செயல் யாவும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  19. // ஆனால் பயம் காரணமாக யாரும் எழுந்து நிற்கவில்லை. கூட்டத்தில் அமைதி நிலவியது. உடனே குருச்சேவ், சிரித்துக் கொண்டே, ” நல்லது. நம்மால் ஏன் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை இப்போது புரிந்து கொண்டு இருப்பீர்கள் “//

    இந்த இடத்தில் குருச்சேவ், சிரித்துக் கொண்டே இதைத்தான் நானும் அப்போது செய்தேன்.’ என்று சொன்னதாக படித்திருக்கிறேன். அவர் எப்படி சொல்லியிருந்தாலும் அப்போதைய நிலைமை அதுதான். தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டதைப் போல, “இந்த இடத்தில் குருச்சேவ், சிரித்துக் கொண்டே இதைத்தான் நானும் அப்போது செய்தேன்.’ என்று சொன்னதாக படித்திருக்கிறேன். “ – என்ற தகவலை, நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு பத்திரிகையில் படித்ததாக நினைவு. ஆனால் ஆதாரம் காட்ட மேலே நான் குறிப்பிட்ட www.npr.org என்ற இணையதளத்தின் கீழ்க்கண்ட செய்தி மட்டுமே முழுமையாக கிடைத்தது.

      // I have heard that somebody had stood up while Khrushchev was listing the torture systems and the murderings that had gone on and shouted well if he was so bad, why didn't you get rid of him? And Khrushchev stopped and said, Who said that? And there was silence in the hall. So he repeated himself. Who said that? And there was still silence, and he said, Well, now you understand why we didn't do anything.//

      எனவே இதில் உள்ளவாறே எனது பதிவிலும் தகவலை எழுதியுள்ளேன் அய்யா.

      Delete
    2. தகவலுக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      Delete
  20. இதுதான் யதார்த்தம். தொன்று தொட்டு நடந்து வருவதுதான். அருமையான சுவாயான தகவலுடன் பகிர்ந்ததும், தலைப்பும் இன்றைய நிலையை நினைவூட்டுகிறது! மறைமுகமாகத் தொடர்புப் படுத்திச் சென்றவிதம் அருமை! நண்பரே/சகோ!

    ReplyDelete
  21. எல்லாக் காலத்திற்கும் பொருந்தக் கூடிய அரசியல் செய்தி. இன்றைய தமிழக அரசியலுக்குப் பொருத்தமோ பொருத்தம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  22. நானும் படித்த தாக நினைவு!

    ReplyDelete
  23. நல்ல பதிவு.
    அப்போது ஏன் இவர் மவுனமாக இருந்தார்?
    ஜெயலலிதாவின் அடங்குமுறை காரணமாக பயந்து,ஒடுங்கி மவுனமாக இருந்தார்.
    ஜெயலலிதாவின் மறைவிக்கு பின்பு அவருக்கு சுதந்திரமான ஜனநாயக கேள்விகள் தோன்றுகின்றது.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  24. அன்பரின் அன்பான தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  25. தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

    ReplyDelete
  26. ஆமாம்... அப்போது ஏன் அவர் அமைதியாக இருந்தார்?
    அன்றே இந்த எழுச்சி இருந்திருந்தால்... அப்படின்னு யோசிச்சாலும் அவரின் குடும்பம் அவர்கள் கையில் இருந்ததாய்ப் பேச்சு....
    என்ன செய்ய அவரும் குற்றவாளியே...

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு ந்ன்றி

      Delete
  27. Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM

    ReplyDelete
  28. கூட்டத்தில் குரல் எளிது
    தனியே கேட்பது சிரமம்
    இதை உணரவைத்த குருசேவ் உதாரணம் அருமை அய்யா

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி

      Delete
  29. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

    ReplyDelete
  30. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
    https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

    ReplyDelete
  31. மாதச் சம்பளம் வாங்குபவன் தன அதிகாரிகளை எதிர்த்துப் பேசிவிட முடியுமா? எல்லா நாட்டிலும் இதுவே நிலை. மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் இருந்து இறங்கிய உடனே, அவரோடு பணியாற்றிய உயர்அ அதிகரிகள்ரை சிலர், அவரைக்வி கடுமையாக விமர்சித்து புத்தகம் எழுதினார்களே! அதற்கு சில மாதங்கள் முன்பு வரை என்ன செய்து கொண்டிருந்தார்களாம்?

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர், அய்யா திரு.இராய செல்லப்பா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  32. சர்வாதிகாரம் ஏகாதிபத்தியம் எல்லாம் பொதுவுடமை ஆட்சியாளர்களிடமும் உண்டு எனச் சொல்லிய பதிவு

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.

      Delete