Monday 5 September 2016

ஆசிரியர் தினம் சில வார்த்தைகள்




இன்று ‘ஆசிரியர் தினம்’ மறைந்த முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னாள் ஆசிரியர் ஆவார். இவரது நண்பர்களும், மாணவர்களும் இவரது பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்து இருக்கிறார்கள். அப்போது இவர் தனது பிறந்தநாளை ‘ஆசிரியர் தினம்’ என்று கொண்டாடுமாறு சொல்லி இருக்கிறார். 1962 ஆண்டு முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தேதியான, செப்டம்பர் 5 ஆம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட மத்தியஅரசு ஆணை பிறப்பித்ததாக வரலாறு சொல்கிறது.

எனது நினைவுகள்:

அப்போது, அதாவது அரசு உத்தரவு போட்ட நாளில் நான் மூன்றாம் வகுப்பு பள்ளிச்சிறுவன். எனவே எனக்கு இவையெல்லாம் அப்போது தெரியாது. உயர்நிலைப் பள்ளி படிப்பிற்காக நேஷனல் ஹைஸ்கூல் (திருச்சி) சென்றபோது ஆறாம் வகுப்பின் போதுதான் எனக்கு தெரியும். அப்போதைய எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர், பூவராக ஐயங்கார் அவர்கள், காலை இறை வணக்கத்தின் போது ஆசிரியர்தினம் பற்றிய தமது பேச்சில் டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்தக் காட்டி பேசியதாக நினைவு. இவரும் அவரைப் (ராதாகிருஷ்ணன்) போலவே இவரும் பஞ்சகச்சம் வேட்டி அணிந்து, தலையில் ஆசிரியர்களுக்கு உரிய தலைப்பாகையும், கதர்கோட்டும் அணிந்து பள்ளிக்கு வருவார். கண்டிப்பான தலைமை ஆசிரியர். 

நல்லாசிரியர் விருதுகள்:

எனக்குத் தெரிந்து அன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் எல்லோருமே நல்லாசிரியர்கள்தான். இவர்களில் சிலரை மத்திய அரசு தேர்ந்தெடுத்து, இருபத்து ஐந்து ஆயிரம் ரூபாய் பணம், வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் கொடுத்து ஆண்டுதோறும் கவுரவித்து வருகிறது. மாநில அரசும் தன் பங்கிற்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. இப்போது இதிலும் அரசியல் கலந்து விட்டதாகத் தெரிகிறது. வேண்டியவர், வேண்டாதோர் என்ற கண்ணோட்டத்தில் உண்மையான பலருக்கு விருதுகள் கிடைப்பதில்லை.

ஆசிரியர் தினம் என்றால் பள்ளி ஆசிரியர்களை மட்டுமே கவுரவிப்பதாக இருக்கிறது. கல்லூரி ஆசிரியர்களும் ஆசிரியர்கள்தானே என்று யாரும் நினைப்பதாகத் தெரியவில்லை. என்னதான் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள்தான், ஆசிரியர் தினம் என்றாலும், இந்தநாளில் எனக்கு நினைவுக்கு வருவது, எனக்கு ஆனா, ஆவன்னா சொல்லிக் கொடுத்த, அந்த வயதான முதலாம் வகுப்பு ஜோஸ்பின் டீச்சர் முகம்தான்.

வலைப்பதிவில் ஆசிரியர்கள்:

இன்றையதினம் பல ஆசிரியர்கள் வலைப்பதிவர்களாக இருக்கக் காண்கிறோம். கீழே உள்ள பட்டியலில் பணியில் இருப்பவர்களும், பணி ஓய்வு பெற்றவர்களும் உண்டு. விடுபட்டவர்கள் மன்னிக்கவும்.

புலவர் சா.இராமாநுசம், சென்னை (புலவர் குரல்)
முனைவர் பழனி.கந்தசாமி, கோவை (மன அலைகள்)
ருக்மணி சேஷசாயி, சென்னை (பாட்டி சொல்லும் கதைகள்)
ரஞ்சனி நாராயணன், பெங்களூர் (ரஞ்சனி நாராயணன்)
நா.முத்துநிலவன், புதுக்கோட்டை (வளரும் கவிதை)
துளசி கோபால், நியூசிலாந்து (துளசி தளம்)
கரந்தை ஜெயக்குமார், (தஞ்சாவூர்)
முனைவர் இரா.குணசீலன், ஈரோடு ( வேர்களைத் தேடி)
கருமலைத் தமிழாளன் , கிருஷ்ணகிரி (கருமலைத் தமிழாளன்)
கவி.செங்குட்டுவன்,கிருஷ்ணகிரி (கல்விக்கோவில்)
முனைவர் எம்.பழனியப்பன், சிவகங்கை (மானிடள்)
ஆதிரா முல்லை, சென்னை (ஆதிரா பார்வைகள்)
சுவாதி, சென்னை (சுவாதியும் கவிதையும்)
பேராசிரியர் பா.மதிவாணன், திருச்சி (இனிது இனிது)
ஜோசப் விஜூ, திருச்சி (ஊமைக்கனவுகள்)
பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், திருச்சி (பதிவுகள் – பார்வைகள்)
மணவை ஜேம்ஸ், மணப்பாறை (மணவை)
துளசிதரன் வே.தில்லையகத்து, பாலக்காடு / (தில்லையகத்து க்ரோனிக்ல்ஸ்)
மாலதி, புதுக்கோட்டை (மாலதி)
சு.ராஜமாணிக்கம், புதுக்கோட்டை (அண்டனூர் சுரா)
அ.பாண்டியன், மணப்பாறை (அரும்புகள் மலரட்டும்)
மகா.சுந்தர், புதுக்கோட்டை (எண்ணப்பறவை)
சோலச்சி, புதுக்கோட்டை (சோலச்சி)
த.ரேவதி, புதுக்கோட்டை (தமிழ்)
கீதா, புதுக்கோட்டை (தென்றல் வேலுநாச்சியார்)
கிருஷ்ணவேணி, புதுக்கோட்டை (நிசாரி)
பொன்.கருப்பையா, புதுக்கோட்டை (புதுகை மணிமன்றம்)
சி.குருநாத சுந்தரம், புதுக்கோட்டை (பெருநாழி)
மைதிலி கஸ்தூரி ரெங்கன், புதுக்கோட்டை, (மகிழ்நிறை)
மது என்கிற கஸ்தூரி ரெங்கன், புதுக்கோட்டை (மலர்த்தரு)
இரா.எட்வின், பெரம்பலூர் (நோக்குமிடமெல்லாம்)
பேராசிரியர் தருமி, மதுரை (தருமி)
மதுரை சரவணன், மதுரை (மதுரை சரவணன்)
முருகன், அருப்புக்கோட்டை (ஆதி.முருகன்)
லோகநாதன்.கே, வேலூர் (டீச்சர் லோகநாதன்)
பேராசிரியர் எம்.ஏ.சுசீலா, மதுரை (எம்.ஏ.சுசீலா)
பேராசிரியர் அன்பழகன், தஞ்சாவூர் (ஹரணி பக்கங்கள்)
கரந்தை சரவணன், தஞ்சாவூர் (கரந்தை சரவணன்)

அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆசிரியர்தின வாழ்த்துகள்.

தொடர்புடைய எனது பதிவு
ஆசிரியரும் பிள்ளைகளும்அன்றும் இன்றும் http://tthamizhelango.blogspot.com/2015/05/blog-post_62.html




38 comments:

  1. அற்புதமான பதிவு...நினைவுகளில் மூழ்கியே போய்விடாமல்...சமகாலத்தையும் பதிவுசெய்த விதம் அருமை..

    ReplyDelete
  2. #முனைவர் பழனி.கந்தசாமி, கோவை (மன அலைகள்)#
    வேறு துறையில் பணியாற்றியவர் என நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. முனைவர் பழனி.கந்தசாமி அய்யா அவர்கள் கோவை விவசாய பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து இருக்கிறார்.

      Delete
  3. அன்றைய + இன்றைய பள்ளி ஆசிரியர்கள் எல்லோருமே அர்பணிப்புடன் கூடிய ஆசிரியர் பணிக்கு ஏற்றவர்கள்தான் என என்னால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.

    ஆசிரியர் பணியை உண்மையாகவே விரும்பி, அர்பணிப்பு உணர்வுடன் ஏற்பவர்களும் இன்று மிகக்குறைவாகவே உள்ளனர். ஆசிரியர் பணியில் ஒருவர் அமரவும் ஆயிரம் பாலிடிக்ஸ் புகுந்து விட்டதாகக் கேள்விப்படுகிறோம்.

    மதிப்பெண் அதிகரிக்கும் கல்வியறிவைவிட, மாணவர்களுக்கு கல்வியினால் வாழ்க்கைக்கு மிக முக்கியத்தேவையான ஒழுக்கம் முதலில் கற்பிக்கப்பட வேண்டும்.

    தங்களைப்போன்ற வலைப்பதிவர்கள் பலரும்கூட நல்லாசிரியர்கள் மட்டுமே என்பது எனது எண்ணம். நமக்குத் தெரியாத + புரியாத ஏதோ ஒன்றை தரத்துடன் பதிவுகளில் வெளியிட்டுச் சொல்லி விளக்கி, அதில் நம் ஞானத்தை ஏற்றும் ஆற்றல் உள்ளவர்களும் நமக்கு ஆசிரியர்களே + நல்லாசிரியர்களே என்பது எனது அபிப்ராயம்.

    தங்கள் பாணியில் மாறுபட்ட வித்யாசமான கோணத்தில் ஓர் அலசல். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள V.G.K அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  4. அன்புள்ள அய்யா,

    தங்களின் வாழ்த்திற்கும் பழைய நினைவுகளைப் பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி.

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி

      Delete
  5. மனம் நிறைந்த நன்றி சார்..

    ReplyDelete
  6. ஆகா
    தங்களின் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி

      Delete
  7. //நமக்குத் தெரியாத + புரியாத ஏதோ ஒன்றை தரத்துடன் பதிவுகளில் வெளியிட்டுச் சொல்லி விளக்கி, அதில் நம் ஞானத்தை ஏற்றும் ஆற்றல் உள்ளவர்களும் நமக்கு ஆசிரியர்களே + நல்லாசிரியர்களே என்பது எனது அபிப்ராயம். //

    நுண்ணிய ஒரு கருத்தை கோபு சார் மிகச் சரியாக சுட்டிக்க் காட்டியிருக்கிறார்.
    அவருக்கு நன்றி.

    நமக்கு அமைந்து போகும்'வாழ்க்கை'யும் ஒரு ஆசிரியர் தான். பட்டு அனுபவித்து கற்றுக் கொள்ளும் பள்ளியும் அதுவே தான். பள்ளி, ஆசிரியர் என்று இரு பெரும் பொறுப்புக்களைச் சுமந்து கொண்டிருக்கும் இறைவனின் கொடை அது.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. ஆம் அய்யா. இறைவன் அளித்த கொடைதான். இன்றைய எனது வளர்ச்சிக்கு, எனது காலத்தில் எனக்கு அமைந்த ஆசிரியர்கள் அனைவருமே காரணம்.

      Delete
  8. அருமையான பகிர்வு.

    அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. ஒரு பதிவு எழுத நிறையவே மெனக்கெடுகிறீர்கள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.

      Delete
  10. நன்றாக அலசியுள்ளீர்கள்
    பாராட்டுகள்

    ReplyDelete
  11. எப்படி ஐயா இத்தனை ஆசிரிய பதிவர்களைக் கண்டு பிடித்தீர்கள்.பதிவின் மூலம் வாழ்த்தியமைக்கு பாராட்டுகள்.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜே.கே அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  12. வலைப்பதிவில் ஆசியர்களைப் பற்றிக் குறித்தமைக்கு மகிழ்ச்சி..
    விவரம் தெரிந்து கொண்டேன்..

    தங்களின் பதிவினூடாக அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  13. தஞ்சை கரந்தை உமாமகேஸ்வரத்தின் கல்வி நிலையங்களுள் - மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு கரந்தை சரவணன் அவர்கள்..

    அவரும் வலைப்பதிவர் . அவரது தளம் - karanthaisaravanan.blogspot.com

    தஞ்சை கரந்தை பூக்குளத்தைச் சேர்ந்த பேராசிரியர் திரு அன்பழகன் (ஹரிணி) அவர்களும் வலைப் பதிவரே..

    அண்னாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் அவரது தளம் - thanjavur-harani.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் நினைவூட்டலுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட இருவரின் பெயரையும் சேர்த்து விட்டேன்.

      Delete
  14. கடந்த கால நினைவுகள் அத்துடன் தற்போதைய நண்பர்களை நினைவுகூர்ந்து பகிர்ந்த விதம் பாராட்டத்தக்கது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி.

      Delete
  15. வாழ்த்துக்களு நன்றிகள் தோழர்
    தம +

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் மது அவர்களுக்கு நன்றி.

      Delete
  16. வலைப்பூவிலும் இத்தனை ஆசிரியர்களா..? வியந்து போனேன். அருமையான பதிவு.
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் வியப்பாக உள்ளது. அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்! நீங்கள் குறிப்பிட்டது போல ஆசிரியர் தினமென்றால் எனக்கும் எனது 2ஆம் வகுப்பு ஆசிரியையின் முகம்தான் வருகிறது.

      Delete
    2. பத்திரிக்கையாளர் எஸ்.பி.செந்தில்குமார் மற்றும் அருள்மொழிவர்மன் இருவருக்கும் நன்றி. இந்த வலைப்பதிவர் பட்டியலில் உள்ள ஆசிரியர்களில் பெரும்பாலானோர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்களே. புதுக்கோட்டை ஆசிரியர்கள் பலரை வலைப்பதிவில் எழுத வைத்த பெருமை, ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களையே சேரும்.

      Delete
  17. Amazon Audio Sale Offer சலுகையாக - 60% வரை ஆஃபர் Head Phones & Speakers வாங்குவதற்கு தருகிறார்கள் Head Phones & Speakers வாங்க நினைப்பவர்கள் இந்த ஆஃபர் பயன்படுத்தி உங்களது பணத்தை மிச்ச படுத்துங்கள் மேலும் விவரங்களுக்கு
    amazontamil

    ReplyDelete
  18. அருமையானசிறப்புப் பதிவு
    மிக மிகச் சிரமம் எடுத்து
    பதிவுலகில் இருக்கும் ஆசிரியர்களைத்
    தொகுத்து வித்தியாசமான ப்திவாகத்
    தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் எஸ்.ரமணி அய்யா அவர்களுக்கு நன்றி.

      Delete
  19. i have read abdul kalam iyyah had referred one teacher SIVASUBRAMANIA IYER who used to take all students to rameswaram beach and explain ocean wind direction bird flying technique.... and all.
    those teachers are never found these days....

    ReplyDelete
  20. அன்பார்ந்த இளங்கோ ஐயா, நாங்கள் மிக மிகத் தாமதமாக வந்தமைக்கு முதலில் மன்னிக்கவும். பதிவுலகில் உள்ள ஆசிரியர்கள் அனைவரையும் குறிப்பிட்டாமைக்கும் மிக்க நன்றி ஐயா. அத்தனைப் பேரையும் குறிப்பிட்டு மிகச் சிறப்பான வாழ்த்துகள் பகிர்ந்தமைக்குப் பாராட்டுகள் ஐயா

    மிக்க நன்றி ஐயா தாங்கள் எங்களையும் குறிப்பிட்டமைக்கு. எங்களில் துளசிதரன் மட்டுமே ஆசிரியர். கீதா எந்தப் பணியிலும் இல்லை ஐயா என்பதை இங்குத் தாழ்மையுடன் தெரிவிருத்துக் கொள்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களின் மேலான கருத்துரைக்கு நன்றி. கீதா மேடம் அவர்கள் ஆசிரியர் பணியில் இருப்பதாகவே எண்ணி இருந்தேன். மேடத்தின் பெயரை மேலே குறிப்பிட்ட ஆசிரியர் பட்டியலிலிருந்து எடுத்து விட்டேன். தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி.

      Delete