Wednesday 17 August 2016

சமயபுரம் – நண்பர்களின் அன்னதானம் (2016)



நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை (15.08.16), இந்திய சுதந்திர தினத்தன்று பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்கும் திருத்தலத்தில், கடைவீதியில்  29 ஆவது வருடமாக ஒரு அன்னதானம். ஆண்டுதோறும் நண்பர்கள் செய்து வருவது. நான் கடந்த ஒன்பது வருடங்களாக அவர்களோடு இணைந்துள்ளேன். திரும்பத் திரும்ப இதே விஷயத்தைப் பற்றி வருடம் தோறும் எழுத வேண்டுமா? என்று எனக்குள் ஒருவன் கேட்டான். அன்று புதுக்கோட்டையில் “வரலாறு முக்கியம் நண்பரே!” என்று என்னிடம் சொன்ன கவிஞர் வைகறையின் குரல் மனதுக்குள் ஒலித்ததால் இந்த கட்டுரை.

அன்னதானமும் அரசின் கட்டுப்பாடுகளும்:

முன்பெல்லாம் ஸ்ரீரங்கம். சமயபுரம் போன்ற இடங்களில்; தனிப்பட்ட முறையில் அன்னதானம் என்பது மதிய உணவாகவே இருந்தது. சிலர் ஒரு பெரிய பந்தல் போட்டு அல்லது கல்யாண சத்திரங்களை வாடகைக்கு எடுத்து சாப்பாடு போட்டனர். தயிர்சாதம், சாம்பார் சாதம் என்று கொடுத்தனர். தமிழ்நாடு அரசு, திருக்கோயில்களில் அன்னதானம் என்ற திட்டத்தைத் தொடங்கிய பிறகு, நிறையபேர் மதிய உணவை அன்னதானமாக வழங்குவதற்கு பதிலாக, திருக்கோயில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்குவதோடு நின்று விட்டனர். எங்களது நண்பர்கள், ஆரம்பத்தில் புளிசாதத்தோடு , இனிப்பு பன், தண்ணீர் பாக்கெட், சூடான பாதாம்பால் கொடுத்து வந்தனர். மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் கடுமையாக்கப் பட்டதால். தமிழக அரசு அன்னதானம் செய்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ள, கோகுல சமாஜம் அறக்கட்டளை மூலம், சமயபுரம் கடைவீதியில் பக்தர்களுக்கு காலை உணவை (இட்லி, பொங்கல், காபி) அன்னதானமாக நண்பர்கள் வழங்கினார்கள்.. அப்போது என்னால் எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் மட்டும் இங்கே. 
 
சமயபுரம் கடைவீதியில்:

(படம் மேலே) அன்னதானம் நடந்த கருப்பண்ண சாமி கோயில் வாசல்






 



(படம் மேலே) பால்குடம் கொண்டு வந்த பக்தர்கள் தேர்.

சமயபுரம் கோயில் முன்பு:

எப்போதுமே, வருடம் முழுவதும், சமயபுரம் கோயில் பக்தர்களால் நிரம்பி வழியும். கோயிலுக்குள் நுழைய முடியாது. அம்மன் தரிசன வரிசையும் நீண்டு காணப்படும் எனவே பல பக்தர்கள் கோயில் வாசலிலேயே (கிழக்கு) தேங்காய் உடைப்பு, சூடம் கொளுத்துதல், அகல் விளக்கு ஏற்றுதல் என்று வழிபட்டு சென்று விடுவார்கள். நானும் அவ்வாறே அன்று சூடம் ஏற்றி வழிபட்டு வந்தேன். அங்கு கோயில் வாசலில் எடுக்கப்பட்ட சில படங்கள் (கீழே) 





ஒரு முக்கிய அறிவிப்பு:

சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, 11.07.2016 முதல் மூலவரான அம்மன் தரிசனம் கிடையாது. அதற்குப் பதில் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மனின் வண்ணப்படம் மட்டுமே தரிசனமாக வைக்கப்பட்டுள்ளது. எனவே சமயபுரம் அம்மனை நேரடி தரிசனம் செய்ய விரும்புபவர்கள் குடமுழுக்கு நடந்த பின்னர் (தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை) செல்வது நல்லது. (படம் கீழே)


                                                                                                                                                                     
இதன் தொடர்ச்சியான முந்தைய பதிவுகள்:

சமயபுரம் கோயில்: நண்பர்கள் அன்னதானம் http://tthamizhelango.blogspot.com/2012/08/blog-post_13.html
சமயபுரத்தில் நண்பர்களின் அன்னதானம் (2013) http://tthamizhelango.blogspot.com/2013/08/2013.html   
அன்னதானம் செய்ய அரசு கட்டுப்பாடு http://tthamizhelango.blogspot.com/2014/02/blog-post_8.html 
சமயபுரம் - நண்பர்களின் அன்னதானம் (2014) http://tthamizhelango.blogspot.com/2014/08/2014.html 
சமயபுரம் – நண்பர்கள் செய்த அன்னதானம் (2015) http://tthamizhelango.blogspot.com/2015/08/2015.html 

32 comments:

  1. பசிப்பிணி அகற்றும் தங்கள் குழுவினரின் தொண்டு தொடரட்டும்! படங்கள் மற்றும் தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  2. சென்ற வாரம் ஒருநாள், அழகர் கோவிலுக்கு சென்ற போது நண்பர் ஒருவர் ,கோவிலில்அன்னதானம் சாப்பிட அழைத்தார் .சரி ஒரு முறை சாப்பிட்டுப் பார்ப்போமே என்று சென்றேன் .ஆயிரக்கணக்கான மக்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள் .வாசலில் உள்ள போர்டில் இன்று அன்னதான நன்கொடை செல்வி .........என்று ஒரு பெயர் இருந்தது ,சிறிது நேரத்தில் ,அன்னதானம் முடிந்து விட்டது எல்லாரும் போங்கன்னு என்று சொன்னார்கள் .அப்போது மணி பன்னிரண்டு !இவ்வளவு பெரிய கோவிலில் பன்னிரண்டு மணிக்கே அன்னதானம் இல்லையென்றால் ,நம்பி வந்த பக்தர்கள் என்ன செய்வார்கள் ?பலரும் புலம்புவதைக் கேட்க முடிந்தது .இதுதான் சிறப்பாக நடக்கும் தமிழக அரசின் அன்னதான திட்டமா :(

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பகவான்ஜீ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நீங்கள் அழகர் கோயில் பற்றி இப்படி சொல்லுகிறீர்கள். எனது ஸ்ரீரங்கத்து நண்பர்கள், ஸ்ரீரங்கம் கோயிலில் அரசு அன்னதானம் சிறப்பாக நடைபெறுவதாகவும், வலைப்பூவில் இதுபற்றி எழுதுவதற்காகவாவது அங்கு வந்து ஒருமுறை சாப்பிட்டு விட்டு வரச் சொல்லுகிறார்கள்.

      Delete
    2. அழகர் கோவிலுக்கும் ஒரு முறை சர்பிரைஸ் visit அடித்துப் பாருங்க :)

      Delete
    3. நண்பர் பகவான்ஜீ அவர்களின் ஆலோசனைக்கு நன்றி.பார்ப்போம்.

      Delete
  3. இந்த ஆண்டு இன்னும் சமயபுரம் போகவில்லை பால்குடத்தேருக்கு முந்தைய படத்தில் இருப்பவருள் ஒருவர் அச்சு அசலாக என் நண்பர் போலவே இருக்கிறார் ஆனால் அது அவரல்ல

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. சமயபுரம் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு மூலவராகிய அம்மன் தரிசனம் இப்போது இல்லை; எனவே இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்பு வாருங்கள். மேலே உள்ள ஒரு போட்டோவில் நீங்கள் குறிப்பிடுவர் யார் என்று குறிப்பிட்டால் விவரம் கேட்டு சொல்கிறேன்.

      Delete
    2. HNS Mani என்று பெயர் அவர் இப்போது மைசூரில் இருக்கிறார் இப்போது மைசூரில் இருக்கிறார் பழைய பிஎச் இ எல் நண்பர் என்ன உருவ ஒற்றுமை ...?

      Delete
    3. அன்புள்ள G.M.B அவர்களுக்கு, போட்டோவில் உள்ள ஐந்து பேரில் (ஆண்கள்) யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. அநேகமாக கறுப்புக் கண்ணாடி அணிந்து , நெற்றியில் ஒற்றை நாமம் போட்ட, இரும்புகேட் அருகே நிற்பவர் என்று நினைக்கிறேன் (அவர் பெயர்: மணிவண்ணன்: REC திருச்சியில் படித்தவர்).

      Delete
  4. வழக்கம்போல இந்த ஆண்டும் படங்களும் பதிவும் பக்திமயமாக உள்ளன. நேரில் சென்று பார்த்தது போல மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களுக்கு நன்றி.

      Delete
  5. இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக படங்களோடு பதிவு. உங்கள் நண்பர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  6. போற்றுதலுக்கு உரிய செயல் ஐயா
    தங்களின் பணி ஆண்டாண்டுகாலமும் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

      Delete
  7. பாராட்ட வேண்டிய செயல் ஐயா! எத்தனை தரம் சமயபுரம் போனாலும் பரவசம் குறையாத கோயில்!

    ReplyDelete
    Replies
    1. அன்பர் ’தனிமரம்’ சிவநேசன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  8. தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக
    அன்னதானம்
    செய்து வருவது
    சந்தோஷமளிக்கிறது
    படங்களுடன் மிகச் சிறப்பாக பகிர்வதும்
    மிக்க சந்தோஷமளிக்கீறது
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் எஸ்.ரமணி அய்யா அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

      Delete
  9. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்!.. - என்பது முதுமொழி..

    எந்நாளும் குறையாத புண்ணியம்..
    எல்லோரும் அறியும்படிக்கு பதிவில் படங்களுடன் வழங்கியமைக்கு மகிழ்ச்சி..

    என்றென்றும் வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.

      Delete
  10. சிறப்பான செயல்....வாழ்த்துகள் ஐயா..
    தள்ளு முள்ளு இல்லாமல்....அழகான வரிசையை ஏற்படுத்தியது மிகவும் நன்று....

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. தொடர்ந்து இவ்வாறான பணியை மேற்கொண்டுவரும் குழுவினருக்குப் பாராட்டுகள். நிகழ்வினை அமைத்திருந்த விதம் அருமை. கடந்த முறை இவ்வாறான நிகழ்வினை படித்திருந்தபோதும், இம்முறை படிக்கும்போது அலுப்பு தெரியவில்லை. இவ்வாறான காரியங்கள் நிகழ நிகழ பகிர்வது நலமே. பலருக்கு இது பாடமாக அமையும். நன்றி.

    ReplyDelete
  12. தொடரட்டும் தொண்டு! படங்கள் அருமை!

    ReplyDelete
  13. அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. சமயபுரம் மாரியம்மன் கோயில் புகைப்படத்தில் உங்களை காண முடியவில்லை

    ReplyDelete
  15. சென்ற முறையும் வாசித்த ந்னைவு. தொடர்ந்துவரும் அருமையான தொண்டு...வாழ்த்துகள் !!

    ReplyDelete
  16. நானும் ஜூலையில் இந்தியா வந்தபோது தரிசனம் செய்ய இயலாமல் தவித்தேன்.
    தங்கள் அன்னதானப் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete