Saturday 13 February 2016

திரு V.G.K.அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்



                                    (படம் மேலே) நானும் திரு V.G.K. அவர்களும்)

அண்மையில் எனது வலைத்தளத்தில் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது பயணங்கள் முடிவதில்லை’ - By VGK  என்ற பதிவு வெளியானது குறித்து  http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk.html பலருக்கும் மனதில் பல கேள்விகள் உதித்து இருக்கும் போல. ஏனெனில்,

 
அப்பப்பா ..... எவ்வளவு ஜோரா எழுதியிருக்கீங்க. தினமும் உங்க வலைப்பதிவுப் பக்கம் நான் வந்து, ஏதேனும் புதிய பதிவு இருக்கான்னு ஆசையாப் பார்த்து பார்த்து ஏமாந்து போவது என் வழக்கம். இதை ஏன் இங்கே இவரின் வலைத்தளத்தில் வெளியிடச் சொன்னீங்களோ ... எனக்குப் புரியலை. //

// ஸ்ரத்தா, ஸபுரி...Saturday, January 30, 2016 11:29:00 am 

கோபால் சார் பதிவு என்றாலே கலர் ஃபுல்லா ரசனையுடன் படிக்க நிறைய விஷயங்கள் இருக்கும். இங்கயும் சூப்பரான படங்கல் சுவாரசியமான பயண அனுபவங்கள் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது. நார்த் ஸௌத் எல்லா இடங்கலும் சுத்தி பார்த்து நன்கு எஞ்சாய் பண்ணியிருக்கீங்க. இந்தப்பதிவை ஏன் உங்க பக்கம் ப்போடலே. தமிழ் இளங்கோ சார் அவர்கலுக்கு தான் நன்றி சொல்லனும். விடாப்பிடியாக உங்களை தொடர் பதிவு எழுத வச்சுட்டாங்களே. எங்க படிச்சா என்ன கோபால் சாரின் பதிவுகள் படிக்க எல்லாருமே ஓடி வந்து விடுவோமே. //

என்று கருத்துரை எழுதி இருந்தனர். எனவே இது சம்பந்தமாக சில விளக்கங்கள் இங்கே வெளியிடுவது அவசியமாகிறது.

எனது மின்னஞ்சல்:

இந்த பதிவு விஷயமாக முதன்முதல் அவருக்கு அனுப்பிய மின்னஞ்சல் இதுதான்.

// அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இப்போது வலைப்பக்கம் நிறையபேர் எழுதுவதில்லை. அதிலும் குறிப்பாக மின்னல் வரிகள் கணேஷ் போன்றோர் வலைப்பக்கம் வருவதே இல்லை. ஃபேஸ்புக் பக்கம் போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன். எனவே நண்பர்களையும், மூத்த வலைப்பதிவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதால், அந்த பத்து கேள்விகளூக்கான பதில்களோடு அவசியம் ஒரு பத்துபேரை தொடர் பதிவை எழுத அழைத்து, பயணங்கள் முடிவதில்லை என்ற தொடர் பதிவை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்தி.தமிழ் இளங்கோ 26.01.16 //

திரு V.G.K. அவர்களது கட்டுரை:

அவரும் “பல்வேறு காரணங்களால் என் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் கொடுக்க எனக்குத் தற்சமயம் விருப்பம் இல்லை” என்று மேலே சொன்ன கட்டுரையையும், அவரது படங்களையும்  எனது வலைத்தளத்தில் வெளியிடச் சொல்லி மின்னஞ்சல் வழியே அனுப்பி வைத்தார். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. எனவே மீண்டும் இதற்கு. நான் ஒரு மின்னஞ்சல்  அனுப்பி வைத்தேன். அது இது (கீழே)

// அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். மின்னஞ்சலையும் இணைப்பையும் இப்போதுதான் பார்த்தேன். இந்த கட்டுரையை உங்கள் வலைத்தளத்தில் வெளியிடுவதுதான் முறை. உங்களுக்கென்று ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது. நான் வெளியிடுவது சரியன்று. நன்றி!
அன்புடன்தி.தமிழ் இளங்கோ
நாள்: 28.01.2016 //
   
எனினும் அவரது அன்பு வேண்டுகோளை என்னால் தட்டிச் செல்ல விரும்பவில்லை: எனவே அவரது பதிவினை இந்த எனது வலைத்தளத்தில் வெளியிட்டேன். மேலும், அவருடைய பதிவு என்பதால், நான் மறுமொழிகள் தர விருப்பப்படவில்லை. அவசியமான, முக்கியமான ஓரிரு பின்னூட்டங்களுக்கு மட்டும் நான் எனது மறுமொழிகளை எழுதி இருக்கிறேன். தொடர்ந்து அவரும் இன்னும் மறுமொழிகள்  எழுதிக் கொண்டு இருக்கிறார்.

வாசகர்கள் விருப்பம்:

இந்த பதிவினுக்கு இதுவரை மொத்தம் 127 கருத்துரைகளும் (மறுமொழிகளையும் சேர்த்து) 561 பார்வையாளர்களும் வந்துள்ளதாக DASHBOARD இல் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

நான் முன்பே குறிப்பிட்டது போல ஒவ்வொருவருக்கும் ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது. எல்லா விவரங்களையும் வைத்துப் பார்க்கும் போது திரு V.G.K. அவர்களின் வாசகர்கள், அவரது தளத்திலேயே தொடர்ந்து எழுதவும், அவர்களது கருத்துரைகளை அவரது தளத்தில் எழுதவுமே விரும்புகிறார்கள் என்று தெரிய வருகிறது. மேலும் அவரது மறுமொழிகளிலிருந்து அவருக்குள் இருக்கும் எழுதும் ஆர்வத்தையும் உணர முடிகிறது. 

எனவே அவர் தொடர்ச்சியாக எழுதா விட்டாலும், அவ்வப்போது அவர் தனது வலைத்தளத்தில் வாசகர்கள் விருப்பத்திற்கு இணங்க எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் இங்கே எனது வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட , மேலே சொன்ன அவரது கட்டுரையையும், படங்களையும் , வாசகர்களின் அனைத்து பின்னூட்டங்களையும் மற்றும் மறுமொழிகளையும் அவரது வலைத்தளத்தில் அப்படியே மீண்டும் வெளியிட்டு தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். (ஏனெனில் வலையுலக நண்பர்கள் அடிக்கடி சொல்லும் வாசகம் இது “வரலாறு முக்கியம் நண்பரே”)

இதுபற்றி நண்பர்கள் யாவரும் தங்களது கருத்துக்களைச் சொல்லலாம்.


 

44 comments:

  1. எனது மனத்தாசையை அப்படியே
    வெளியிட்டது போல் உள்ளது
    அவர்தான் முடிவெடுக்கவேண்டும்
    நல்ல முடிவை எதிர்பார்த்து....ஆவலுடன்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் எஸ்.ரமணி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நானும் உங்களைப் போலவே அவருடைய பதிலை ஆர்வமாக எதிர் பார்க்கிறேன்.

      Delete
  2. அவ்வண்ணமே நானும் கோருகிறேன்!

    தம +1

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.

      Delete
  3. திரு வை கோ அவர்களுக்கு வலைச்சரத்தால் பட்ட வடு இன்னும் ஆறவில்லை போலிருக்கிறது. மேலும் 1000 பதிவுகள் எழுதி விட்டதால் ஒரு வெறுப்பு தோன்றி விட்டது என்று எனக்கு தோன்றுகிறது. மூத்த பதிவர்கள் GV GMB கந்தசாமி ஐயா, ரிஷபன் போன்றவர்கள் தான் அவரைத் திரும்ப எழுத வைக்க முடியும்.அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

    மேலும் ஒரு சின்ன குறை. Thiru. V G K uses too many Bells and whistles in his blogs. This consume a lot of download data usage. Those who use data based plans in internet hesitate to open his page. May he note.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. "ஐயா" வால் முடியாதது என்று ஏதுமில்லை, இந்த ஒன்றைத்தவிர.

      Delete
    2. நண்பர் ஜே.கே. அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.

      Delete
    3. முனைவர் பழனி.கந்தசாமி அய்யா அவர்களின் கருத்தரைக்கு நன்றி.

      Delete
    4. ஆமாம் "ஐயா"(வோட)"வால்" எங்களைப் போன்ற சிறியவர்களைத் தான் முடியும். வை கோ போன்ற பெரிய கன பாடி களை முடியாது.
      --
      Jayakumar

      Delete
  4. ஐயா அவர்கள் அந்தப் பதிவை அவர்களது வலையில் வெளியிடவும் பதிவுகளைத் தொடரவும் வெண்டும் என்று அன்பாய் வேண்டிக் கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மயிலாடுதுறை சகோதரர் அ.முகம்மது நிஜாமுத்தீன் அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கு நன்றி.

      Delete
  5. அய்யா VGK அவர்கள் ,இதற்கு விளக்கம் சொல்வதே சரியாக இருக்கும் ,அவர் வருவாரா ,பதில் தருவாரா :)

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் கே.ஏ.பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.

      Delete
  6. எங்கள் எண்ணத்தை வெளியிட்டமைக்கு நன்றி. அவரது தளத்தில் அவர் தொடரும் நாளை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் எதிர்பார்ப்பினுக்கு நன்றி.

      Delete
  7. முடிந்த போது அவர் எழுத வேண்டும். அவர் பதிவுகளைப் படிக்க நானும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரரின் ஆசை நிறைவேற வேண்டும்.

      Delete
  8. எனது கருத்தும் அதுவே..

    மீண்டும் கோபு அண்ணா அவர்களது தளம் மலர வேண்டும் என்பதே ஆவல்..

    ReplyDelete
    Replies
    1. தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி,

      Delete
  9. யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாதல்லவா?

    ReplyDelete
    Replies
    1. அய்யா G.M.B. அவர்கள் சொல்வது சரிதான் என்பதனை, கீழே உள்ள திரு V.G.K. அவர்களின் விளக்கமே சொல்லி விட்டது. எனினும் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

      Delete
  10. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ சார்,

    வணக்கம்.

    என் மீது தாங்கள் வைத்துள்ள, தங்கள் அன்புக்கு என் நன்றிகள்.

    நான் முதன்முதலில் வலைத்தளத்தினில் எழுத ஆரம்பித்த 2011-ஆம் ஆண்டிலும் அதன்பிறகும், என்னைத் தொடர் பதிவுகள் எழுத சிலர் அன்புக்கட்டளை இட்டிருந்தார்கள். அவர்களுக்காக 2011 to 2013 நான் பத்து தலைப்புகளில் தொடர் பதிவுகள் எழுதி என் வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தேன்.

    -=-=-=-
    1)

    உணவே வா! உயிரே போ!! [சமையல் பற்றிய நகைச்சுவை]

    முத்துச்சிதறல் திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களுக்காக!

    http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html

    151 COMMENTS

    -=-=-=-

    2)

    ”பெயர் காரணம் [நகைச்சுவை]”

    ’கற்றலும் கேட்டலும்’ திருமதி. ராஜி அவர்களுக்காக!

    http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_09.html

    101 COMMENTS

    -=-=-=-

    3)

    ”மூன்று முடிச்சு”

    ’மணிராஜ்’ திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்காக!

    http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_18.html

    39 COMMENTS

    -=-=-=-

    4)

    ”முன்னுரை என்னும் முகத்திரை”

    ’முத்துச்சிதறல்’ திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களுக்காக!

    http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_21.html

    44 COMMENTS

    -=-=-=-

    5)

    ”ஊரைச்சொல்லவா.. பேரைச்சொல்லவா! ” [திருச்சி பற்றிய அலசல்]

    ’காகிதப்பூக்கள்’ திருமதி. ஏஞ்சலின் அவர்களுக்காக!

    http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_24.html

    98 COMMENTS

    -=-=-=-

    6)

    ”மழலைகள் உலகம் மகத்தானது”

    அமைதிச்சாரல் + மணிராஜ் + முத்துச்சிதறல்
    ஆகிய முப்பெரும் தேவியர்களுக்காக

    http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html

    96 COMMENTS

    -=-=-=-

    7)

    நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி!
    [இந்த 2011 வருடத்தில் நான்]

    ’மணிராஜ்’ திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்காக!
    http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

    140 COMMENTS

    -=-=-=-

    8)

    அவர்கள் உண்மைகள் +
    திருமதி. ஷக்தி ப்ரபா
    ஆகிய இருவருக்காகவும்

    ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’
    http://gopu1949.blogspot.in/2012/03/1.html

    84+58+63+54+45+54+61+51 = 470 COMMENTS

    -=-=-=-

    9)

    நம் மூன்றாம் சுழி வலைப்பதிவர்
    திரு. அப்பாதுரை அவர்களுக்காக

    ‘என் வீட்டு ஜன்னல் கம்பி
    ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்’
    http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

    174 + 147 + 167 = 488 COMMENTS

    -=-=-=-

    10)

    நம் காகிதப்பூக்கள்
    திருமதி. ஏஞ்சலின்

    மற்றும்

    திருமதி. ஆசியா உமர்
    ஆகிய இருவரின் வேண்டுகோளுக்காக

    ‘பொக்கிஷம்’ தொடர்
    http://gopu1949.blogspot.in/2013/03/1.html

    137 + 141 + 124 + 140 + 116 + 133 +
    124 + 121 + 146 + 110 + 116 + 126 =

    1534 COMMENTS

    -=-=-=-=-=-=-

    அதன்பிறகு 2014 மற்றும் 2015 இல் என்னைத் தொடர் பதிவு எழுத சில பதிவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்கள்.

    என்னால் எந்தத்தலைப்பிலும், என் பாணியில் மிகச்சுலபமாகவும், மிகச்சுவையாகவும், நகைச்சுவையாகவும் கட்டுரைகள் எழுத முடியும்தான்.

    இருப்பினும் நான் 2014-இல் நடத்திய ’சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ + என் வெளிநாட்டுப்பயணம், 2015-இல் நான் நடத்திய 100% பின்னூட்டமிடும் போட்டி போன்றவற்றில் நான் பிஸியாக ஈடுபட்டு வந்ததாலும், எனக்கு அதற்கே நேரமின்மையாலும், அவர்கள் அழைத்திருந்த தொடர்பதிவுகள் எதையும் நான் ஏற்றுக்கொண்டு எழுதி பதிவிட முடியவில்லை என்பதையும் இங்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தங்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு மட்டுமே, தாங்கள் சமீபத்தில் 2016-இல் முதன்முதலாக எனக்கும் அழைப்பு விட்டிருந்த, (பயணங்கள் முடிவதில்லை) இந்தத் தொடர்பதிவினை நான் உடனடியாக எழுதி தங்களுக்கு அனுப்பி, தாங்களும் விரும்பினால் தங்கள் தளத்திலேயே வெளியிட்டுக்கொள்ளுமாறு, அனுப்பி வைத்திருந்தேன்.

    தாங்களும் அதனை தங்கள் தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளீர்கள். http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk.html அதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    தற்சமயம் என் இல்லத்திலும், உள்ளத்திலும், உடல்நிலையிலும் பல்வேறு நெருக்கடிகளை நான் சந்திக்க வேண்டியுள்ளது. அதனால் என் வலைத்தளத்திலிருந்து சற்றே ஒதுங்கி ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளேன். என் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் எனக்கு சாதகமாக மாறும்போது, ஒருவேளை நான் மீண்டும் என் வலைத்தளத்தினில் எழுத நேரிடலாம். இப்போதைக்கு அதுபற்றி ஏதும் என்னால் தெளிவாகக் கூற இயலாமல் உள்ளது.

    என் மீதுள்ள பிரியத்தினால் அன்புடன் இந்தப்பதிவினை வெளியிட்டுள்ள தங்களுக்கும், அதில் பின்னூட்டங்கள் கொடுத்துள்ள வாசக நண்பர்கள் + என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள திரு V.G.K. அவர்களின் நீண்ட அன்பான விளக்கத்திற்கு நன்றி.

      Delete
  11. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  12. பகிர்வு நன்று நண்பரே
    தமிழ் மணம் 8

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

      Delete
  13. எல்லாருடைய பின்னூட்டங்களுமே கோபால் சார் மீண்டும் எழுதுவதைத் தொடரவேண்டும் என்கிற ஆசையைத் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். நானும் பின்னூட்டத்தில் அல் ரெடி சொல்லி இருக்கேன். எழுத்துத்திறமை என்பது எல்லோருக்கும் கைவந்துவிடாது அது ஒருவரம். வரம் கிடலக்கப்பெற்ற கோபால் சார் பாக்கியசாலி. அந்த எழுத்து திறமையை மூடி வைக்கலாமா. ஆடற காலும் பாடற வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க இல்லியா அதுபோல எழுதுற கையும் சும்மா இருக்காது இருக்கவும் கூடாது. 1000---வது பதிவுக்கு இன்னும் சில பதிவுகளே பாக்கி இருக்கு. அதையும் கம்ப்ளீட் பண்ணிடலாமே.
    .........

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகின்றேன். அன்பருக்கு, தங்கள் profile
      இல் ஆண்/பெண் விவரங்களை மட்டுமாவது தெரியப்படுத்தவும்.

      Delete
  14. எனக்கும் வைகோ சார் மீண்டும் பதிவு எழுத வேண்டும் என்ற அதீத ஆவல் இருக்கிறது. எனது வேண்டுகோளும் அதுதான்.

    ReplyDelete
    Replies
    1. பத்திரிக்கைத் துறை நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  15. //என் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் எனக்கு சாதகமாக மாறும்போது, ஒருவேளை நான் மீண்டும் என் வலைத்தளத்தினில் எழுத நேரிடலாம். இப்போதைக்கு அதுபற்றி ஏதும் என்னால் தெளிவாகக் கூற இயலாமல் உள்ளது.//

    புரிகிறது, கோபு சார்! உங்களால் 'எழுதினேன்; பப்ளிஷ் செய்தேன்' என்று பதிவுகளைப் போடமுடியாது என்பது தெரியும். அதற்கு படங்களை தேர்வு செய்து சேர்க்க வேண்டும், அழகுபடுத்த வேண்டும் என்று உங்களுக்கென்றே பிடித்தமான எத்தனையோ பக்க வேலைகள். இரவு நேரங்களில் விழித்து பதிவுகள் போடுவது உங்கள் உடல் நலனுக்கும் நல்லதில்லை தான். செளகரியப்பட்ட பொழுது வழக்கமாக நீங்கள் பார்க்கும் பதிவுகளைப் பாருங்கள். விரும்பும் நேரத்து பின்னூட்டமிடுங்கள். நீங்களே சொல்லியிருக்கிற மாதிரி எப்பொழுது முடியுமோ அப்பொழுது பதிவுகள் போட ஆரம்பியுங்கள். இந்த தற்காலிக ஓய்வு உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கட்டும். அதிக சிரமப்படுத்திக் கொள்ளாமல் மனம் விரும்பி விரைவில் நீங்கள் பதிவுகள் இட வாழ்த்துக்கள், கோபு சார்!

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய ஜீவி அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.

      Delete
  16. அவர் கருத்தை அவர் பாணியில் அவர் எழுதுவதே நன்று! அவர் மீண்டும் வர, தொடர வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்த புலவர் அய்யாவிற்கு நன்றி.

      Delete
  17. எங்கள் விருப்பமும் அதுவே தான் ஐயா

    ReplyDelete
  18. குருஜி இங்கன நானு ஏதாவது மிஸ்டேக்கு சொல்லிகினா மாப்பு கொடுத்து போடோணும்........
    இன்னா குருஜி நீங்க இம்பூட்டு தெறமய உள்ளார பூட்டிகிட்டு வச்சுகிட்டா எப்பூடி????? எளுத்து திறமை மட்டுமல்லா குருஜி நட்பூக்களை அரவணைத்து போவுதும் ஒங்கட ஸ்பெசலு. பின்ன பாருங்க நேத்து மொளச்ச ( நானுதா) காளானையே எம்பூட்டு பெருமபடுத்தினீக. நேயர் கடிதாசிய ஒங்கட பக்கத்தால போட்டுபிட்டு எத்தினி பேத்துக்கு என்னிய அடையாளபடுத்தினீக. அதுமட்டுமில்லா பின்னூட்ட போட்டில கெலிச்சதுக்கு பாராட்டு விளாவே நடத்தி போட்டீகல்லா. இது போலலா யாராச்சிம் பதிவுலகத்துல பண்ணுறாகளா இல்லதான??? பொறவால ஏதுக்காச்சி எளுத மாட்டேனுபிட்டு அடம் புடிக்கிறீக. 800+--- பதிவு போட்டு முக்கா கெணறு தாண்டி போட்டீகல்லா??? 1000--- பதிவு போட்டு முளு கெணறயும் தாண்டி போடோணும் குருஜி.

    ReplyDelete
    Replies
    1. mru Tuesday, February 16, 2016 1:13:00 pm

      வாங்கோ முருகு, வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா? வீட்டில் எல்லோரும் நலமா?

      //குருஜி இங்கன நானு ஏதாவது மிஸ்டேக்கு சொல்லிகினா மாப்பு கொடுத்து போடோணும்........//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! என் குழந்தையின் மழலையில் என்னால் எப்படி மிஸ்டேக் கண்டு பிடிக்க முடியும்? அதனால் மாப்பு ஏதும் கொடுத்துபோட முடியாதூஊஊஊஊ. :)

      //இன்னா குருஜி நீங்க இம்பூட்டு தெறமய உள்ளார பூட்டிகிட்டு வச்சுகிட்டா எப்பூடி????? //

      பூட்டியபின் சாவியை எங்கும் நான் தொலைத்திருப்பேனோ .... என்னவோ?

      //எளுத்து திறமை மட்டுமல்லா குருஜி நட்பூக்களை அரவணைத்து போவுதும் ஒங்கட ஸ்பெசலு.//

      அப்படியா சொல்றீங்கோ? நான் அன்புடன் அரவணைத்துப் போன ‘நம்மாளு’கள் பலரையும் இன்று என் பக்கமே காணுமே, முருகு. மனம் வருந்துவதைத் தவிர, வேறு என்ன என்னால் செய்யமுடியும்? சொல்லுங்கோ, முருகு.

      //பின்ன பாருங்க நேத்து மொளச்ச ( நானுதா) காளானையே எம்பூட்டு பெருமபடுத்தினீக. நேயர் கடிதாசிய ஒங்கட பக்கத்தால போட்டுபிட்டு எத்தினி பேத்துக்கு என்னிய அடையாளபடுத்தினீக.//

      தாங்கள் தங்களின் அந்தக்கொச்சை தமிழில் எழுதியிருந்த நேயர் கடிதாசியை எனக்கு அனுப்பிவைத்து, நான் அதனை என் வலத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டதால் (உங்களால் மட்டுமே) எனக்குப் பெருமை கிடைத்ததாக அல்லவா நான் நினைத்து எனக்குள் மகிழ்ந்துகொண்டுள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html அந்தத்தங்களின் ’நேயர் கடிதாசி’ ஒரு பதிவுக்கு மட்டும் இதுவரை 133 பின்னூட்டங்கள் அல்லவா கிடைத்துள்ளது. :)

      //அதுமட்டுமில்லா பின்னூட்ட போட்டில கெலிச்சதுக்கு பாராட்டு விளாவே நடத்தி போட்டீகல்லா.//

      போட்டியில் ஜெயித்து சாதனை படைத்தவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தித்தானே ஆக வேண்டும். அது போட்டியை அறிவித்த என் முக்கியமான கடமைகளில் ஒன்றல்லவா !!

      //இது போலலா யாராச்சிம் பதிவுலகத்துல பண்ணுறாகளா இல்லதான??? //

      யாரும் எதுவும், எப்படி வேண்டுமானாலும் பண்ணலாம்தான். ஏற்கனவே பண்ணியும் இருப்பார்கள்தான். இனியும் பண்ணினாலும் பண்ணுவார்கள்தான்.

      ஆனால் என் ஒருவனைப்போல தனித்தன்மையுடனும், தனித்திறமைகளுடனும், மிகச்சிறந்த அடிப்படை நோக்கங்களுடனும், மிகவும் நேர்மையாகவும், மிகவும் நியாயமாகவும், யாரும் எந்தக்குறையும் கண்டுபிடித்துச் சொல்லமுடியாத வண்ணமும், அறிவித்த தேதிகளில் எக்காரணங்கொண்டும் வாய்தா வாங்காமலும், போட்டிகளை மற்றொருவர் நடத்த முடியாது என்பதே இதில் உள்ள மாபெரும் குறிப்பிடத்தக்க உண்மையாகும்.

      //பொறவால ஏதுக்காச்சி எளுத மாட்டேனுபிட்டு அடம் புடிக்கிறீக.//

      நான் அடம் பிடிக்கவில்லை. முருகுவைப்போன்ற சாதனையாளர்கள் சிலர் பற்றிய பதிவு என் வலைத்தளத்தில் மேலாக இப்போது கடந்த பல நாட்களாக (இன்றுவரை கடந்த 47 நாட்களாக) காட்சியளித்து வருகிறது. http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html அதற்கே இன்னும் என் பழைய நட்புக்களில் பலர் பின்னூட்டம் இட வரவில்லை. அதனால் அதன் பின்னூட்ட எண்ணிக்கை தற்சமயம் மிகக்குறைவாக 238 என மட்டுமே காட்டி வருகிறது. அதிலும் பின்னூட்ட எண்கள்: 201 to 238 பிறரால் படிக்க முடியாதவாறு உள்ளது.

      இதெல்லாம் இவ்வாறு இருக்கும்போது அந்தப்பதிவினை நீங்குமாறு செய்து, அதன் மேல் வேறொரு புதிய பதிவினை பதிக்க ஏனோ எனக்கு மனம் வரவில்லை.

      //800+--- பதிவு போட்டு முக்கா கெணறு தாண்டி போட்டீகல்லா??? 1000--- பதிவு போட்டு முளு கெணறயும் தாண்டி போடோணும் குருஜி. //

      இப்போது குழந்தை முருகுவுக்கு நல்லபடியாக நிக்காஹ் நடக்கணும் என்ற பிரார்த்தனைகளில் நான் மூழ்கியுள்ளேன். நிக்காஹ் நல்லபடியாக நடைபெற்ற சந்தோஷமான செய்தியினைக் கேள்விப்பட்டதும், இந்தக்கிணறு தாண்டும் வேலைகளில் இறங்கலாம் என்று நினைத்துள்ளேன். ஓக்கேயா .... முருகு?

      பிரியமுள்ள குருஜி கோபு

      Delete
    2. கருத்துரை தந்த சகோதரி முருகு அவர்களுக்கும், மறுமொழி தந்திட்ட அய்யா திரு V.G.K. அவர்களுக்கும் நன்றி.

      Delete
  19. Replies
    1. புதுக்கோட்டை கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

      Delete
    2. புதுக்கோட்டை கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

      Delete

  20. தங்களின் கருத்தை வழிமொழிகின்றேன். திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் அவரது வலைப்பக்கத்தில் அவசியம் எழுதவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும்.விரைவில் நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உண்டு.

    ReplyDelete
  21. ஐயா தாங்கள் சொல்லி உள்ளது போல் வைகோ சார் எழுத வேண்டும். ஆனால், எழுதுவதற்கு நல்ல சூழல், மனம் வேண்டும் இல்லையா ஐயா. மனம் சந்தோஷமாக இருந்தால் எழுத வந்துவிடும். எனவே அவருக்குக் கூடிய சீக்கிரம் அந்தச் சூழல் அமைந்து அவர் எழுதிட வாழ்த்துவோம் ஐயா. அது வெகுசீக்கிரம் அமைந்துவிடும். ஐயமில்லை.

    ReplyDelete