Thursday, 11 February 2016

ஆண்ட்ராய்ட் போனில் தமிழ் தட்டச்சு                   ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ - திருமூலர்

எங்கள் வீட்டில் இருப்பது ‘டெஸ்க் டாப்’ கம்ப்யூட்டர். எனவே அதில் தமிழில் தட்டச்சு செய்ய NHM Writer 1.5.1.1 Beta என்ற தமிழ் எழுதியைப் பயன்படுத்தி வருகிறேன். இதிலுள்ள English - Tamil Phonetic முறை எனக்கு எளிதாகவும் இருக்கிறது. ஸ்மார்ட் போன் (ஆண்ட்ராய்ட்) வாங்கிய பிறகு, அதில் தமிழில் தட்டச்சு செய்ய, எந்த தமிழ் எழுதி நல்லது என்று தெரியாமல் இருந்தேன். 

தமிழ் எழுதிகள்:

இது விஷயமாக கூகிளில் தேடியதில், பல்வேறு தமிழ் எழுதிகளைக் காண முடிந்தது. 

Ezhuthani – Tamil Keyboard
Tamil Unicode Keyboard free
Tamil Keyboard
Google Handwriting Input
PaniniKeypad Tamil IME
Sellinam
Tamil Writer
Tamil Pride Tamil Editor
Tanglish – Tamil Editor
Tamil Unicode Font – Donated
Tamil Keyboard Unicode
Type Tamil Offline
Tamil Wrier
Google Indic Keyboard
Types In Tamil
Indic Keyboard

இவற்றைப் பற்றி, நமது வலைப்பதிவு நண்பர்களிடம் விசாரித்ததில், ஒவ்வொருவரும் அவரவர் பயன்படுத்தும் தமிழ் எழுதிகளைத்  தெரிவித்தனர்.

செல்லினம் (Sellinam 4.0.7)


ஒருமுறை புதுக்கோட்டையில் ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோது ‘செல்லினம்’ (Sellinam)  பற்றி சொன்னார். நான் உடனே கூகிள் தேடலில் போய் Sellinam 2.0.1 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டேன். அது அவ்வளவாக திருப்தி இல்லாத படியினால், மீண்டும் வேறொரு தமிழ் எழுதிக்குப் போனேன். அதுவும் சரிப்பட்டு வராததால், அண்மையில், திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். அவர் செல்போனில், செட்டிங்ஸ் சென்று ஆப்ஸில் செல்லினத்தை (புதியது) தரவிறக்கம் செய்து கொள்ளச் சொன்னார். அவ்வாறே செய்தேன். 


இப்போது எனது ஆண்ட்ராய்டு செல்போனில் இருப்பது Sellinam 4.0.7 என்ற மென்பொருள் ஆகும். இது நன்றாகவே செயல்படுகிறது. இதில் தமிழ் 99 மற்றும் முரசு அஞ்சல் என்று இரு விசைப்பலகைகள் (KEY BOARD) உள்ளன. 

தமிழ் 99 - இதில் தமிழிலேயே தட்டச்சு செய்யலாம்
முரசு அஞ்சல் - இதில் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் தட்டச்சு செய்யலாம் ( உதாரணம் ammaa > அம்மா)


நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு , Phonetic முறையில் தட்டச்சு செய்யும் முரசு அஞ்சல் முறையை பயன்படுத்துகிறேன். இதில் வேண்டும்போது தமிழுக்கும் ஆங்கிலத்திற்குமாக விசைப்பலகையை (KEY BOARD) மாற்றிக் கொள்ளலாம். நான் இப்போது பெரும்பாலும் நேரம் இருக்கும்போது வலைப்பதிவுகளுக்கான தமிழ் கருத்துரைகளையும் மற்ற குறுஞ்செய்திகளையும் (SMS) எனது செல்போன் மூலமாகவே டைப் செய்து அனுப்புகிறேன். மேலும் இந்த செல்லினத்தை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


// செல்லினம் என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும். இம்மென்பொருளை மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான முரசு நிறுவனம் உருவாக்கியது. இதை தைப்பொங்கற் திருநாளான ஜனவரி 15, 2005 முதல் சிங்கப்பூரில் வணிகப் பயன்பாட்டுக்காக வெளியிட்டது. நோக்கியா, சாம்சங் போன்ற கருவிகளில் இயங்கி வந்த செல்லினம், பின்னர் ஐபோன், ஐபேடு, ஆண்டிராய்டில் இயங்கும் கருவிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரையிலும், ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் இதை பதிவிறக்கி உள்ளனர். //  ( நன்றி https://ta.wikipedia.org/s/1b3v )

செல்லினம் பற்றிய மேலும் அதிக விவரங்களுக்கு: http://sellinam.com/archives/406
             
                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

34 comments:

 1. வழக்கம் போலவே - பயனுள்ள தகவல்
  பதிவின் வழியாக வழங்கப்பட்டுள்ளது..

  ஏற்றமிகு தமிழுக்கு
  ஆற்றிவரும் அருந்தொண்டு..

  எண்ணங்கள் வாழ்க..
  என்றென்றும் வாழ்க..

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களது வாழ்த்தினுக்கு நன்றி!

   Delete
 2. நானும் "செல்லினமே" உபயோகிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அய்யாவுக்கு நன்றி.

   Delete
 3. நல்ல பதிவு...நானும் "செல்லினமே"

  ReplyDelete
 4. கணினி முன் உட்காரும் நேரமும் குறையும் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. தக்க சமயத்தில் தகுந்த ஆலோசனை சொன்ன வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல் கம்ப்யூட்டர் முன் உட்காரும் நேரம் குறைந்து விட்டதுதான்; எனினும் தமிழ்மணத்தில் ஓட்டு போட இயலவில்லை. இதற்காக மறுபடியும் கம்ப்யூட்டர் பக்கம் செல்ல வேண்டியது இருக்கிறது.

   Delete
  2. உண்மை தான்... ஆனால் சில தளங்களில் ஓட்டு போட முடிகிறது... நீங்கள் வாசிக்கும் தளத்தின் முடிவில் View Web Version என்பதை சொடுக்கவும்... கணினி போல் பதிவு வந்து விடும் ஓட்டுப்பட்டையோடு... ஓட்டு அளிக்கலாம்...

   Delete
  3. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வழிகாட்டலுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டது போலவே, ஆண்ட்ராய்டு போனில் View Web Version சென்று, வலைப்பதிவுகளில் தமிழ்மணம் வாக்கு அளித்து வருகிறேன். நன்றி.

   Delete
 5. பலருக்கும் பயனுள்ள விடயங்கள் நண்பரே நன்றி
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 6. நல்லவேளை என்னிடம் ஆண்ட்ராய்ட் கைபேசி இல்லை. கணினிதான் எனக்கு சரிபட்டுவரும்

  ReplyDelete
  Replies
  1. அய்யா G.M.B. அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களிடம் ஆண்ட்ராய்ட் செல்போன் இல்லாதவரை நல்லது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவசரத்திற்கு எடுத்து உடனடியாகப் பேச இவை நமக்கு சரிப்பட்டு வராது. பழைய மாடல்கள்தான் சவுகரியம்.

   Delete
 7. பயனுள்ள் தகவல் பகிர்வுக்காக நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களுக்கு நன்றி.

   Delete
 8. நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிகள் ஐயா,,

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 9. வழக்கம்போல மிகவும் பயனுள்ள செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. திரு V.G.K. அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

   Delete
 10. மெல்லினம் போல் செல்லினமும் பொருத்தமான பெயரே !அனுபவித்துப் பார்க்கிறேன் :)

  ReplyDelete
 11. மெல்லினம் போல் செல்லினமும் பொருத்தமான பெயரே !அனுபவித்துப் பார்க்கிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. நண்பரே தமிழில் மெல்லினம் போலவே இடையினமும் உண்டு. இன்னும் வல்லினமும் உண்டு. நகைச்சுவையான உங்கள் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 12. நல்ல பதிவு ஐயா..இதை தாங்கள் அனுமதித்தால் என் கல்லூரியில் கணித்தமிழ்ப் பேரவையில் பயிற்சி பெறும் என் தோழிகளுக்கு உதவும்..அவர்களுக்கும் இது தான் பிரச்சனையாக உள்ளது ஐயா.நான் கற்றுக் கொண்டேன் அவர்களும் கற்றுக் கொண்டால் நல்லா இருக்கும் ஐயா.இதை நான் எங்கள் கல்லூரி வலைப்பதிவில் பகிரவா ஐயா..??

  ReplyDelete
  Replies
  1. நன்றி! அப்படியே செய்யுங்கள் சகோதரி.

   Delete
 13. நானும் செல்லினம்தான் உபயோகிக்கிறேன். எளிதாக இருக்கிறது. எனது முகநூல்பதிவுகளைக் கூட இதிலிருந்து அனுப்புகிறேன். சில சமயங்களில் நண்பர்களின் பதிவுக்கான பின்னூட்டமும் இதிலிருந்து தருகிறேன்.

  தம +1

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் ’எங்கள் ப்ளாக்’ அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

   Delete
 14. நானும் அதைத்தான் பயன்படுத்தி வருகிறேன்
  அதுதான் பயன்படுத்தச் சிறந்தது எனவும்
  எளிதானது எனவும் அதன் வரலாறும் தங்கள் மூலம் அறிய
  மகிழ்ச்சி.பயனுள்ள பகிர்வு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் எஸ்.ரமணி அய்யா அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி.

   Delete
 15. Replies
  1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 16. பயனுள்ள பதிவு ஐயா
  நன்றி
  தம+1

  ReplyDelete
 17. அன்பு ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete