Thursday 19 November 2015

என்றாவது ஒரு நாள் – (நூல் விமர்சனம்)



அடியேனுக்கும் ஒருமுறை ”வலைச்சரம்” ஆசிரியர் பொறுப்பு ஒருவாரம் வந்தது. அப்போது (19.02.2013) நான் எழுதிய வரிகள் இவை.

பதிவின் பெயர் : கீதமஞ்சரி http://geethamanjari.blogspot.in  கடல் கடந்து இருந்தாலும் தமிழை மறவாதவர் இவர். நல்ல கவிஞரும் ஆவார்.. இவருடைய திருச்சி பொன்மலை சந்தை பற்றிய பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது அன்றிலிருந்து இவர் திருச்சிக்காரர் என்ற முறையில் இவருடைய பதிவுகளை வலையில் பார்க்கும் போதெல்லாம் படிப்பதுண்டு. அந்த பதிவு இதுதான். பொன்மலை என்பது என் ஊராம்.... http://geethamanjari.blogspot.in/2012/02/blog-post_27.html அந்த பதிவுக்கு நான் தந்த கருத்துரை கீழே -

// வணக்கம்! அட! நீங்க எங்க திருச்சியில் உள்ள பொன்மலை. மறக்க முடியாத ரெயில்வே ஆர்மரி கேட், சந்தை மற்றும் சாலை முழுக்க மரங்கள் உள்ள ரெயில்வே காலனி. இவைகளைப் பற்றி பசுமையான நினைவுகளோடு சுவையான பதிவு.  28/2/12 18:26  //

அன்றிலிருந்து கீதமஞ்சரி எனப்படும் கீதா மதிவாணன் அவர்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன். அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற, வலைப்பதிவர் சந்திப்பு 2015 விழா நிகழ்ச்சியில் (11.10.15 – ஞாயிறு) நான் வாங்கிய நூல்களில். ” ‘என்றாவது ஒருநாள்’ (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) - ஹென்றி லாஸன் - தமிழில் : கீதா மதிவாணன்” என்ற நூலும் ஒன்று. நேற்றுதான் (18.11.15) இந்த தமிழ் மொழிபெயர்ப்பைப் படித்து முடித்தேன்.

மூலநூலும் மொழிபெயர்ப்பும்:

கல்லூரிப் படிப்பின் போது, தமிழ் இலக்கியத்தை எடுத்ததாலோ என்னவோ, பெரும்பாலான பிறமொழி நாவல்களையும், சிறுகதைகளையும் (ஷேக்ஸ்பியர், டூமாஸ், எட்கர் ஆலன்போ, மாப்பஸான், ஆஸ்கார் ஒயில்ட், காண்டேகர் – என்று) தமிழிலேயே படிக்கும் சந்தர்ப்பமே எனக்கு அமைந்துவிட்டது. எனவே, எனக்குத் தெரிந்து, பொதுவாக தமிழில் பிறமொழி படைப்புகளைத் தமிழாக்கம் செய்யும்போது 1) முதல்நூலை வரிக்கு வரி அப்படியே தமிழாக்கம் செய்தல் 2) முதல்நூலினை உள்வாங்கிக் கொண்டு தமிழுக்கு தகுந்தவாறு எழுதுதல் 3) முதல்நூலினத் தழுவி ஒரு புது ஆக்கம் போன்றே படைத்தல் 4) முதன்நூலினைத் தமிழில் சுருக்கமாக எழுதுதல் – என்று வகைப் படுத்தலாம் என்று நினைக்கிறேன். இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் வேறு வகையாவும் வகைப்படுத்தக் கூடும்.

(படம்) நன்றி: தேனம்மை http://honeylaksh.blogspot.in/2015/01/blog-post_91.html

ஹென்றி லாஸன் (Henry Lawson) எழுதிய, ‘என்றாவது ஒருநாள்’ என்ற நூலின் கதைகளை ஆங்கிலத்தில் நான் படித்ததில்லை. சகோதரி கீதா மதிவாணன் அவர்கள் தமிழாக்கம் செய்த இந்த சிறுகதைகள் முதல்வகையைச் சார்ந்தது (வரிக்கு வரி அப்படியே தமிழாக்கம் செய்தது) என்றே நினைக்கின்றேன். திருமணத்திற்குப் பின், சென்னையில் வசித்த இவர், தற்போது ஆஸ்திரேலியாவிலேயே தங்கி விட்டபடியினால், ஆஸ்திரேலிய ஆங்கிலத்தை நன்கு புரிந்து கொண்டு மொழியாக்கம் செய்துள்ளார். நூலின் நடை இயல்பாகவே செல்கிறது. இடையிடையே புதிய சொற்களையும் காண முடிகிறது ( உதாரணம்: மேய்ப்பனை மந்தையோட்டி என்று சொல்லுகிறார்; நீளிருக்கை என்பது Bench; ரோமக் கத்தரிப்பாளன் – இன்னும் பிற)

முன்னுரைகள்:

நூலினைப் படிக்கப் புகு முன்னர் இருக்கும் முன்னுரைகள் ஹென்றி லாஸன் (Henry Lawson) அவர்களது வாழ்க்கை மற்றும்  படைப்புகள் பற்றியும், மொழி பெயர்ப்பாசிரியர் கீதா மதிவாணன் பற்றியும் குறிப்புகள் தருகின்றன. நூலின் பிற்பகுதியில் (பக்கம் 156) முலக்கதை விவரங்களையும், கதைகளின் ஆங்கில தலைப்புகளையும் தந்துள்ளார்.

/// வாசிக்க வாசிக்க சாதாரண ஆங்கிலத்துக்கும் ஆஸ்திரேலிய ஆங்கிலத்துக்குமான வேறுபாடு விளங்கியது. பலப்பல புதிய வார்த்தைகளின் பரிச்சயம் கிடைத்தது. பல வார்த்தைகள் அவற்றுக்கான பொருளை விடுத்து வேறொன்றைக் குறிப்பது புரிந்தது . சாதாரண அகராதியை விடுத்து ஆஸ்திரேலிய ஆங்கில அகராதியையும் ஆஸ்திரேலிய கொச்சை வழக்குக்கான அகராதியையும் வாசித்துதான் முழுமையான அறிவைப் பெற முடிந்தது.///         – கீதா மதிவாணன்  

என்று மொழிபெயர்ப்பாசிரியர் (இந்நூல், பக்கம்: 13) சொல்வதிலிருந்து மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை என்று தெரிந்து கொள்ளலாம்.

நூலிலுள்ள கதைகள்:

நூலிலுள்ள அனைத்துக் கதைகளுமே ஒரு நூறு ஆண்டுகளுக்கு முந்தைய (தொலை தொடர்பு, ஊடகங்கள், நவீன போக்குவரத்து போன்றவை அதிகம் இல்லாத)  ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த  காடுறை மக்களின் (காட்டுவாசிகள் அல்ல ) வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை. எனவே கதைகள் அந்த காலத்திற்கு ( ஆஸ்திரேலிய காட்டுவழி, சமவெளி, பள்ளத்தாக்கு, பூனைகள், குதிரைச் சவாரி, கோச்சு வண்டி, தங்கச்சுரங்க தொழிலாளர்கள் என்று ) நம்மை இட்டுச் செல்கின்றன. 

சம்பாதிப்பதற்காக மனைவியையும், குழந்தையையும் விட்டுப் பிரிந்த ஒருவனது மனைவி படும்பாட்டை ‘மந்தையோட்டியின் மனைவி’ ( The Drover’s Wife ) என்ற சிறுகதை வெளிப்படுத்துகிறது. இதில் அவளது மூத்த பையன், கதையின் முடிவில் சொல்லும் வாசகம் இது “ அம்மா நான் ஒருபோதும், மந்தையோட்டியாகப் போக மாட்டேன். அப்படிப் போனால் என்னை விளாசித் தள்ளு”

நமது மனம் ஏதோ ஒரு பிரம்மையில் எப்போதுமே இருப்பதை நாம் உணரலாம். ஆளரவமற்ற சமவெளி ஒன்றில் தன்னை பேய் துரத்துவதாக பிரம்மை கொண்ட ஒருவனின் ஓட்டம்தான் ‘சீனத்தவனின் ஆவி’ ( The Chinaman’s ghost ) என்ற கதை.

அவன் ஒரு தொழிலாளி. தினமும் தான் வசிக்கும் காட்டிலுள்ள கிராமத்திலிருந்து, காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து ஐந்து மைல் தொலைவிலுள்ள விவசாய நகரம் சென்று வரவேண்டும். வேலை முடிந்து வீடு திரும்பியதும், அவன்தான் வீட்டிலுள்ள நோயாளி மனைவி, பிள்ளைகள் மற்றும் கால்நடைகள் என்று யாவருக்கும் தேவையானவற்றை செய்ய வேண்டும். இவன் குடும்பத்திற்காக என்ன உழைத்தாலும், அவன் மனைவி அவனை எப்போதும் உதாசீனப்படுத்தியே பேசுவாள். அவன் படும்பாட்டை சொல்லும் கதைதான் ‘ஒற்றை சக்கர வண்டி’ ( A Child in the dark and a foreign father). கதையைப் படித்து முடிந்ததும்,

“வண்டி ஓட சக்கரங்கள்
இரண்டு மட்டும் வேண்டும்;
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்,
எந்த வண்டி ஓடும்”      - கவிஞர் கண்ணதாசன்

என்ற வரிகள் (படம்: சூரியகாந்தி ) நினைவுக்கு வந்தன.

நாம் இந்தக் காலத்தில் சினிமா ரசிகர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து ( நடிகர்கள் படங்களுக்கு பாலாபிஷேகம் செய்தல், அவர்களிடம் ஆட்டோ கிராப் வாங்க துடித்தல் என்று) தலையில் அடித்துக் கொள்கிறோம். ஹென்றி லாசன் காலத்தில் இருந்தவர்கள் அந்தக் கால நாடக நடிகர்கள், நடிகைகள். அவர்கள் மீது தங்கச்சுரங்க தொழிலாளிகள் வைத்து இருந்த பைத்தியம் பற்றி ‘அப்பாவின் பழைய நண்பர்’ ( An Old Mate of Your Father’s ) என்ற கதையில்  காணலாம்.( ஒருமுறை மேகி ஆலிவர் என்ற நாடக நடிகை கோச்சு வண்டியில் சென்று கொண்டு இருக்கிறாள். அவளை வழிமறித்த, தங்கச் சுரங்க தொழிலாளர்கள், போட்டி போட்டுக் கொண்டு அவளுக்குப் பரிசாக தங்கக் கட்டிகளைக் கொடுக்கின்றனர். அவளோ பதிலுக்கு, தனது தலையில் இருந்த நார்த் தொப்பியை, துண்டு துண்டாகக் கிழித்து ரசிகர்க கூட்டத்தை நோக்கி எறிகிறாள். அதனை எடுக்க அவர்களுக்குள் ஒரே போட்டி)

இப்படியாக இந்த நூலில் இருபத்து இரண்டு சிறு கதைகள். அனைத்தும் சுவாரஸ்யமானவை. நூல் விமர்சனத்தில், எல்லாக் கதைகள் பற்றியும் இங்கு குறிப்பிடுதல் சரியன்று. நூலினைப் படிக்கப் போகும் வாசகரின் ஆர்வத்தினைக் குறைத்து விடும்.

மொழிபெயர்ப்பு செய்த சகோதரி கீதமஞ்சரி என்ற கீதா மதிவாணன் அவர்களுக்கும், நூலினை வெளியிட்ட அகநாழிகை பதிப்பகத்தாருக்கும்  நன்றி. இன்னும் பல நூல்களையும் தமிழ்ப் படுத்துவதோடு, ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்ய வேண்டும்” – என்ற பாரதி கண்ட கனவினை மெய்ப்பிக்கும் வண்ணம், சகோதரி கீதா மதிவாணன் அவர்கள் தமிழ் இலக்கியங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திடல் வேண்டும். வாழ்த்துக்கள்.

நூலின் பெயர்: என்றாவது ஒருநாள்
நூலாசிரியர்: ஹென்றி லாஸன்
தமிழில்: கீதா மதிவாணன் 
பக்கங்கள்: 160  விலை ரூ 150/=
நூல் வெளியீடு: அகநாழிகை, #390, அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை – 600 015 
செல் போன்: 999454 1010 & 917634 1010

                             (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)
   

52 comments:

  1. தங்களின் தனிப்பாணியில் மிகவும் அருமையான விமர்சனம். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், சார்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள V.G.K அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. வலைப்பதிவில் சகோதரி கீதமஞ்சரி அவர்களைப் பாராட்டி (அதிக படங்களுடன்) எழுதியது நீங்களாகத்தான் இருக்கும் ( உங்களுடைய கதை விமர்சனப் போட்டியில் அதிகம் கலந்து கொண்டார் ) என்றும் நினைக்கிறேன்.

      Delete
  2. //இவர் திருச்சிக்காரர் என்ற முறையில் இவருடைய பதிவுகளை வலையில் பார்க்கும் போதெல்லாம் படிப்பதுண்டு. //

    நம்ம ஊர்க்காரர் என்பதில் நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம். :))))))))))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா! நீங்கள் சொல்வது சரிதான். அவரால் திருச்சிக்கு பெருமைதான்.

      Delete
    2. ஆஹா.. கேட்கும்போதே மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. மிக்க நன்றி.

      Delete
  3. நல்ல விமர்சனம் ஐயா... தங்களின் விருப்பத்தையும் நிறைவு செய்யட்டும்...சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மூத்த பதிவரான தங்களிடமிருந்து ‘என்றாவது ஒருநாள்’ நூலுக்கான விமர்சனம் கிடைத்திருப்பதை என்னுடைய பேறாகவே கருதுகிறேன். மிகுந்த மகிழ்வும் நன்றியும் ஐயா. இந்த நூலில் நான் மேற்கொண்டிருப்பது தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல நேரடி மொழிபெயர்ப்புதான். அப்போதுதான் நுணுக்கமான விஷயங்களிலும் நான் வியந்து ரசித்த மூல ஆசிரியருடைய எழுத்து பற்றி தமிழ் வாசகர்களுக்கு அறியத்தரமுடியும் என்று நம்பினேன்.

    கதைகள் குறித்த சிறு அறிமுகமும் வாசகரை வாசிக்கத் தூண்டும்வண்ணம் தாங்கள் இங்கு அவற்றைக் குறிப்பிட்டிருப்பதற்கு மிகவும் நன்றி. ஒற்றை சக்கரவண்டி கதையின் தலைப்போடு கவியரசரின் வரிகளையும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. கதைகளையும் கதைகளின் பின்னணியையும் மிக அழகாக உள்வாங்கி எழுதப்பட்ட விமர்சனத்துக்கு மனமார்ந்த நன்றி.

    ஆங்கிலத்தில் எனக்குப் போதுமான புலமை இல்லாதபோதும், நான் ரசித்தவற்றைத் தமிழில் தரவேண்டும் என்னும் முனைப்பே மொழிபெயர்ப்பில் ஈடுபடத் தூண்டியது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றும் அளவுக்கு ஆங்கிலப்புலமை இல்லையென்பதை இங்கு நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். பின்னாளில் என்றேனும் நான் அந்த முயற்சியில் ஈடுபட முடியுமானால் அந்தப் பெருமை தங்களுக்கே உரித்தாகும். நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. இந்த நூலாசிரியர் சகோதரி கீதா மதிவாணன் அவர்களின் வருகைக்கும் அன்பான நீண்ட கருத்துரைக்கும் நன்றி. உங்களுடைய நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டும் என்ற நோக்கிலேயே, இந்நூலிற்கான பலருடைய விமர்சனப் பதிவுகளைப் படிக்கவே இல்லை; படித்த ஒன்றிரண்டும் மேலெழுந்த வாரியானவை. இனி (உங்கள் பதிவினில் சுட்டிக் காட்டப்பட்ட) அந்த விமர்சனப் பதிவுகளுக்கு கருத்துரை எழுதலாம் என்று இருக்கிறேன்.

      // ஆங்கிலத்தில் எனக்குப் போதுமான புலமை இல்லாதபோதும், நான் ரசித்தவற்றைத் தமிழில் தரவேண்டும் என்னும் முனைப்பே மொழிபெயர்ப்பில் ஈடுபடத் தூண்டியது.//

      வெள்ளந்தியான வெளிப்படையான உங்கள் கருத்திற்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!

      Delete
  5. நூலினை படிக்கத்தூண்டும் வகையில் இருக்கிறது விமர்சனம்! இந்த ஆண்டு புத்தகச்சந்தையில் வாங்கவேண்டிய நூல்களில் இதைக் குறித்துக் கொள்கிறேன்! வலைச்சரம் பற்றி குறிப்பிடுகையில்தான் தோன்றுகிறது..! வலைச்சரம் இருமாதங்களாக தொடுக்கப் படவில்லையே! யாரும் அக்கறைப்பட்டதாகவும் தெரியவில்லை! அடிக்கடி காணாமல் போவது நல்லது இல்லையே!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. அவசியம் இந்த நூலினை வாங்கிப் படியுங்கள். வலைச்சரம் பற்றிய உங்கள் ஆதங்கத்தினை, நீங்களே ஒரு பதிவாக எழுதலாமே! (ஏற்கனவே நான் ஒருமுறை எழுதி இருக்கிறேன்)

      Delete
    2. நூல் குறித்த தங்கள் கருத்துக்கு நன்றி சுரேஷ்.

      Delete
  6. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
  7. அருமையான விமர்சனம் நண்பரே!
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. பத்திரிகையாளர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி. உங்கள் நூலினைப் படித்துக் கொண்டு இருக்கிறேன்.

      Delete
  8. நல்லதொரு விரிவான விமர்சனம் நன்று நண்பரே நூல் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. அவசியம் வாங்கிப் படியுங்கள் நண்பரே!

      Delete
    2. ஆர்வத்துக்கு நன்றி கில்லர்ஜி.

      Delete
  9. அருமையான விமர்சனம் ஐயா
    சகோதரி கீதா மதிவாணன் போற்றுதலுக்கு உரியவர்
    சகோதரியின் எழுத்துக்கள் தொட வாழ்த்துவோம்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

      Delete
  10. அற்புதமாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
    இன்னும் இரண்டு கதைகளே பாக்கி
    நானும் விமர்சன நோக்கில் படிப்பதால்
    கொஞ்சம் காலதாமதம்

    உங்கள் அற்புதமான விமர்சனம்
    நானும் எழுத வேண்டுமா என்கிற எண்ணத்தை
    எற்படுத்திப் போகிறது

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே! நான் எனது நடையில் நூல் விமர்சனம் செய்தேன். நீங்கள் உங்கள் பாணியில், இந்த நூலினைப் பற்றி எழுதப் போகும் விமர்சனக் கருத்தினை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

      Delete
    2. தங்களுடைய கருத்தையும் எதிர்பார்க்கிறேன். திருத்தங்கள் இருப்பினும் வரவேற்கிறேன். நன்றி ரமணி சார்.

      Delete
  11. வணக்கம்
    நூல் பற்றி நன்றாக சொல்லியுள்ளீர்கள்... படிக்க வேண்டும் என்ற ஆசைதான் வருகிறது... த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி. உங்களது கவிதை நூலைப் படித்து முடித்து விட்டேன். விரைவில் வரும் எனது நூல் விமர்சனம்.

      Delete
    2. மிக்க நன்றி ரூபன்.

      Delete
  12. நல்ல எழுத்தாளர். நல்ல நூல். அவரது பதிவுகளை அண்மைக்காலமாகப் படித்துவருகிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

      Delete
    2. மிகவும் நன்றி ஐயா.

      Delete
  13. ஆஹா! சென்ற மாதம் வாங்கிப் படித்து விமர்சனமும் எழுதிவிட்டீர்கள் ஐயா!! உங்கள் விமர்சனத்தை நான் இப்பொழுது வாசிக்கவில்லை, ஏனென்றால் நானும் எழுத இருப்பதால். முடித்துவிட்டு இப்பதிவைப் படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி தேன்மதுரத்தமிழ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நானும் உங்களைப் போலவே இந்நூலிற்கான பலருடைய விமர்சனப் பதிவுகளைப் படிக்கவே இல்லை; படித்த ஒன்றிரண்டும் மேலெழுந்த வாரியானவை. காரணம் நான் எழுதும் விமர்சனத்தில் என்னையும் அறியாமல், அவர்களுடைய பார்வை எனக்கு வந்துவிடக் கூடாது என்பதால்தான். இனிமேல்தான் அந்த விமர்சனங்களைப் படித்து எழுத வேண்டும். உங்களுடைய நூல் விமர்சனக் கட்டுரையை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

      Delete
    2. உங்கள் கருத்துரையை எதிர்பார்த்திருக்கிறேன். நன்றி கிரேஸ்.

      Delete
  14. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சகோதரி திருமதி கீதா மதிவாணன் அவர்களின் ‘என்றாவது ஒருநாள்’ (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) தொகுப்பை திறனாய்வு செய்து 5 பதிவுகளாக வெளியிட்டுருந்தார்கள். அந்த பதிவுகளின் ஐந்தாவது பகுதிக்கு நான் தந்த பின்னூட்டத்தை திரும்பவும் இங்கே தருவது பொருத்தமாயிருக்குமென எண்ணுகிறேன்.

    கதை எழுதுவதே கடினம். அதுவும் இன்னொரு மொழியில் எழுதியதை அதனுடைய மூலக்கரு சிதையாமல் அருமையாய் மொழியாக்கம் செய்ததன் மூலம் ஒரு நல்ல அயல் நாட்டு எழுத்தாளரை தனது சுவாரசியமான எழுத்தின் வடிவில் அறிமுகப்படுத்தியதற்கு முதலில் திருமதி கீதா மதிவாணன்.அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!”

    நூலை எழுதுவதை விட அதை படித்து திறனாய்வு செய்வது என்பது கடினம் என்பது என் கருத்து. சரியாக படிக்காமல் ‘நுனிப்புல் மேய்வது’போல் மேலோட்டாமாக படித்து திறனாய்வு செய்வது அந்த நூலை எழுதிய ஆசியரை அவமானப்படுத்தும் செயல் ஆகும். ஆனால் தாங்கள் இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அனைத்தையும் படித்து நல்ல முறையில் கருத்தை தந்து என்னைப் போன்றோருக்கு அந்த நூலை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளீர்கள். அதற்கு நன்றி! நூல் மதிப்புரையை திறம்பட செய்ததற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இனிமேல்தான் நீங்கள் குறிப்பிட்ட , உங்களுடைய “ படித்தால் மட்டும் போதுமா “ என்ற தொடரை, நேரம் கிடைக்கும் போது படிக்க வேண்டும்.

      Delete
    2. தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.

      Delete
  15. எழுத்தாளர் நாகேந்திர பாரதி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  16. அருமையானதோர் வாசிப்பனுபவம் பற்றி இங்கே சொல்லி இருப்பது சிறப்பு. சகோ கீதமஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

      Delete
  18. நல்ல விமர்சனம் ஐயா...வாசிக்கத் தூண்டும் விமர்சனம். சகோதரி அருமையாக எழுதக் கூடியவரும். தங்கள் இருவருக்குமே வாழ்த்துகள். வாங்கிவிட வேண்டிய லிஸ்டில் சேர்த்துக் கொண்டாயிற்று..

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களுக்கு நன்றி. புத்தகத்தைப் பற்றிய தங்களுடைய விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன். தாமதமான எனது மறுமொழிக்கு மன்னிக்கவும்.

      Delete
  19. மொழிபெயர்ப்புக்கலை குறித்த குறிப்புடன் கீதாவின் என்றாவது ஒரு நாள் நூலின் விமர்சனத்தை அருமையாக எழுதியுள்ளீர்கள். ஒற்றை சக்கர வண்டி என்ற கதைக்கு நானும் என் விமர்சனத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கவியரசரின் இதே பாடலைச் சொல்லியிருந்தேன். கீதாவுக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களுக்கு நன்றி.தாமதமான எனது மறுமொழிக்கு மன்னிக்கவும். எனது இந்த நூல் விமர்சனத்திற்குப் பிறகுதான் மற்றவர்களின் விமர்சனங்களைப் படித்தேன். ஒரே கதைக்கு, நீங்களும் நானும் கவியரசரின் ஒரே பாடலை மேற்கோள் காட்டி இருப்பது மகிழ்வான விஷயம்; சிலசமயம் இவ்வாறு இரு எழுத்தாளர்களுக்கு ஒரே கருத்து ஒரே நேரத்தில் தோன்றி விடும்.

      Delete