Saturday, 22 August 2015

வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா- சில யோசனைகள்.
இந்த ஆண்டிற்கான வலைப்பதிவர்கள் சந்திப்பு புதுக்கோட்டையில் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க இருக்கிறது. இதனை முன்னின்று நடத்தும் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்க வலைப்பதிவர்களுக்கும், எல்லோரையும் ஒருங்கிணைத்து நடத்திச் செல்லும் அய்யா கவிஞர் ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களுக்கும்  நன்றியும் வாழ்த்துக்களும்.

 புதுக்கோட்டை வலைப்பதிவர்கள்:


(படம் – மேலே) புதுக்கோட்டையில் 2014 இல் நடைபெற்ற இணையத்தமிழ் பயிற்சிபட்டறை அமைப்புக் குழுவினர். http://tthamizhelango.blogspot.com/2014/05/blog-post_19.html )

புதுக்கோட்டை வலைப்பதிவு நண்பர்களின் ஆர்வத்தினையும், உழைப்பையும் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள், ஆசிரியைகள் என்பது பெருமைப்படத்தக்க செய்தியாகும். புதுக்கோட்டையில் அடிக்கடி வலைப்பதிவர்கள் சந்திப்பினையும், இணையத்தமிழ் பயிற்சி வகுப்புகளையும், வலைப்பதிவர்  நூல் வெளியீட்டு விழாக்களையும் அடிக்கடி நடத்தி மற்றவர்களுக்கு முன்னோடிகளாக இருப்பவர்கள். மதுரையில் சென்ற ஆண்டு நடந்த வலைப்பதிவர் மாநாட்டிற்கு ஒரு குழுவாக வந்து வலைப்பதிவர் ஒற்றுமையைக் காட்டியவர்கள். எனவே இவர்களது திட்டமிடல் மற்றும் விழாக்கால பணிகள் சிறப்பாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

(படம் – மேலே) புதுக்கோட்டையில்  அண்மையில் ( 8/7/2015 புதன்கிழமை) நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பு கடிகாரச் சுற்றில்.. நண்பர்கள் மகா.சுந்தர், வைகறை, மது(கஸ்தூரி), கவிஞர் ஆசிரியர் முத்துநிலவன்,  கரந்தைஜெயக்குமார்(நடுவில்), முனைவர் ஜம்புலிங்கம், கில்லர்ஜி, தமிழ்இளங்கோ, செல்வா, ஜலீல், மு.கீதா, ஏஇஓஜெயா, மாலதி, ஆர்.நீலா, மற்றும் மீனாட்சி (படம் உதவி – நன்றியுடன்: http://valarumkavithai.blogspot.com/2015/07/blog-post_9.html

சிலயோசனைகள்:

ஒரு வலைப்பதிவாளன் என்ற முறையிலும், வங்கிப் பணியில் இருந்தபோது ஒருங்கிணைப்பாளராக (COORDINATOR) சில நிகழ்ச்சிகளுக்கு இருந்தவன் என்ற முறையிலும் சில யோசனைகளை இங்கு முன் வைக்கிறேன்.

வலைத்தளம்: புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கத்திற்கென்று ஒரு வலைத்தளத்தை (BLOGSPOT) ஒன்றைத் தொடங்கி, அதில் விழா பற்றிய தகவல்களை ( நன்கொடை விவரம், வரப்போகும் வலைப்பதிவர்கள், செய்துள்ள ஏற்பாடுகள் போன்றவற்றை) தரலாம். இந்த தகவல்களை மற்ற நண்பர்கள் தங்கள் பதிவுகளில் சொல்லலாம்.

வலைப்பதிவர் அறிமுகம்: மேடையில் ஏறினால் பல நண்பர்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டு பின்னால் பேச வரும் நண்பர்களுக்கு நேரம் இல்லாமல் செய்து விடுகின்றனர். இந்த சந்திப்பில் வலைப்பதிவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய  கையேடு ஒன்றை வெளியிடப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அந்த  கையேட்டில் உள்ளபடி வலைப் பதிவரை அறிமுகப்படுத்தும் பொறுப்பை, இரண்டு அல்லது மூன்று வலைப்பதிவர்கள் தொடர்ந்து செய்யலாம்.

மதிய உணவு: பெரும்பாலும் புதுக்கோட்டையில் எந்த நிகழ்ச்சி என்றாலும் அசைவ உணவு பரிமாறுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். பல திருமண விழாக்களில். பலர் சாப்பிடாமலேயே சென்று விடுவதை பார்த்து இருக்கிறேன். இதனை தவிர்த்து அறுசுவை உணவாக சைவ சாப்பாட்டையே வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நூல் வெளியீடு: வலைப்பதிவர்கள் எழுதிய நூல்களை வெளியிடும்போது ஒரே சமயத்தில் எல்லா நூல்களையும், ஒரு நூலாசிரியருக்கு ஒருவர் என்ற முறையில் வெளியிட ஏற்பாடு செய்யவும்; அந்தந்த நூலாசிரியர் நூல் அறிமுகத்தின்போது அவரது குடும்ப நண்பர்களையும் மேடையில் தோன்றச் செய்யலாம்.

கலந்துரையாடல்: பெரும்பாலும் இதுமாதிரியான சந்திப்புகளில் கலந்துரையாடலுக்கு நேரம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே மாலையில் தேநீர் வேளையில் வலைப்பதிவர்கள் கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்கலாம்.

அன்பார்ந்த வலைப் பதிவர்களே!

அனைவரும் புதுக்கோட்டையில்  வரும் 11.10.2015 ஞாயிற்றுக் கிழமை  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்பு திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.! 
48 comments:

 1. தனியொரு வலைத் தளம் அருமையான யோசனை ஐயா
  அவ் வலைப் பூவில், பதிவர் சந்திப்பு அன்று எடுக்கப் பெற்ற அத்தனைப் படங்களையும் இடம் பெறச்செய்தால், பதிவர்கள் அனைவரும் தங்களுக்கு உரிய படத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள வசதியாக இருக்கும் நன்றி ஐயா
  தம 1

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மாநாட்டிற்காக என்று இல்லாமல் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கத்திற்கென்று ஒரு வலைத்தளம் தேவைதான்.

   Delete
 2. வணக்கம் அய்யா,
  தங்கள் ஒருக்கிணைப்புக் குறித்த தகவல்கள், மற்றும் விழா சிறப்பாக நடைப்பெற என்ன செய்ய வேண்டும் என்ற முன்னோட்டமான கருத்துக்கள் அனைத்தும் அருமை.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 3. 1. இப்பொழுது தனியாக bloggersmeet2015@gmail.com என்கிற மெயில் கணக்கு மட்டும் ஆரம்பித்திருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்களைக் குறிப்பிட ஒரு தனி வலைத்தளம் ஆரம்பிக்கலாம். நேரம் வந்து விட்டது.

  2. அந்த பதிவர் மகாநாட்டுத் தளத்தில் அவ்வப்போது நடக்கும் செய்திகளைக் கொடுத்தால் எல்லோரும் விபரங்களை அறிந்து கொள்ள உதவும்.

  3. வெளியூரிலிருந்து வரும் பதிவர்களுக்கு புதுக்கோட்டையில் தங்குவதற்கு ரூம்கள் (அவரவர்கள் செலவில்) புக் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  4. வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு சரியான வழி விபரங்கள் சொல்லவேண்டும்.

  5. புதுக்கோட்டை பற்றிய சிறப்பு செய்திகள், பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியல் கொடுக்கலாம்..

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அய்யாவின் வருகைக்கும் சிறந்த யோசனைகளுக்கும் நன்றி. இந்த பதிவைப் பார்க்கும் புதுக்கோட்டை நண்பர்கள் நிச்சயம் உங்கள் யோசனைகளை செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

   Delete
 4. நல்ல யோசனைகள்,ஆவ'ணச் ' செய்வார்களாக:)

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 5. Replies
  1. அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 6. சிறந்த யோசனைகள் விழா சிறக்க வாழ்த்துகள்
  தமிழ் மணம் 3

  ReplyDelete
  Replies
  1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வாழ்த்துரைக்கு நன்றி.

   Delete
 7. வணக்கம்
  ஐயா
  தாங்கள் சொல்லிய யோசனை நன்றாக உள்ளது கடைப்பிடிப்பது சாலச் சிறந்தது... த.ம 4

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் ரூபன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

   Delete
 8. அன்புள்ள அய்யா,

  ‘வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா- சில யோசனைகள்’- சொன்னது பரிசீலிக்கப்பட வேண்டியவை.

  நன்றி.
  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. தமிழ்ப் புலவர் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

   Delete
 9. உங்களை போன்றோரின் அயராத ஒத்துழைப்பாலும், அறிவுரைகளும் விழா மேலும் சிறப்புறும். இது புதுகை நடக்கும் விழா என்றாலும், உங்களை போன்றோர் நடத்திகொடுக்கும் விழா என்பதற்கு மாற்றுக் கருத்தே இல்லை. மிக்க நன்றி அண்ணா!

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுக்கு மணப்பாறை பிறந்த வீடு என்றாலும் புதுக்கோட்டை புகுந்தவீடு என்று நினைக்கிறேன். எனவே நடக்கவிருக்கும் பதிவர்கள் சந்திப்பு திருவிழாவில் உங்கள் பங்களிப்பும் அதிகம் இருக்கும். வாழ்த்துக்கள்.

   Delete
 10. விழா சிறக்க எனது வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

   Delete
 11. முத்துநிலவன் அவர்கள் கருத்தரங்குகள் பணிமனைகள்,விழாக்கள் நடத்துவதில் அனுபவம் மிக்கவர். சிறந்த உதாரணமாக விழாவை நடத்துவார் என்பதில் ஐயமில்லை. இன்னும் நிறையப் பேர் விழா பற்றி எழுதவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் டி.என்.முரளிதரன் (-மூங்கில் காற்று) அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நிச்சயம் நமது முத்துவேலன் அய்யா அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை நண்பர்கள் சிறப்பாக செய்வார்கள்.

   Delete
 12. அருமையான யோசனைகள். அதிலும் தனி வலைத்தளம் ஆரம்பிப்பது பயனுள்ள யோசனை.
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. பத்திரிக்கை துறை நண்பர் எஸ்.பி.செந்தில்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

   Delete
 13. அருமையான ஜோசனைகள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் தனிமரம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

   Delete
 14. சிந்திக்கவேண்டிய யோசனைகள். இவ்வாறான யோசனைகள் விழா சிறப்புற அமையும் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 15. கலந்துரையாடல் என்பது மிக்க சிறப்புடைத்து.

  ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து ஒன்று அல்லது இரு நபர்கள் தேர்ந்தெடுத்து , அவர்களை ஐந்து அல்லது ஏழு குழுக்களாக அமைத்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பொருள் தந்து,

  அந்தக் குழுவிலிருந்தே ஒருவரை அவர்களே தேர்ந்தெடுத்து,

  அவருக்கு ஒரு ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் மேடையில் தமக்குத்
  தரப்பட்ட, பொருள் பற்றி பேச

  அனுமதிக்கலாம்.

  நான் சென்னையில் நடந்த பதிவர் குழுவில் (டிஸ்கவரி பேலசில் திரு முத்து நிலவன், திரு இராமனுசம் , திரு செல்லப்பா அவர்களுடன் ) பங்கு எடுத்துக் கொண்டாலும், இந்த அரிய யோசனை அப்பொழுது எனக்குத் தோன்றவில்லை.  இளங்கோ அவர்களுக்கு எனது நன்றி.

  இம்மாதிரியான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் (குறிப்பாக முன்னமே அறிந்திராதார் ஒன்று கூடி பேசுகையில்) பிற்காலங்களில் மிகவும் பயன் பெறக்கூடியயதாகவும், நினைவில் வைத்துக்கொள்ளும்படி இருந்ததாகவும்

  நான் உதவி முதல்வராக இருந்த பயிற்ச்சிக் கல்லூரியில் நிகழ்வுகள் முடிந்தபின் வரும் தகவல்கள் ( feed back ) சொல்லுகின்றன.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies

  1. எங்கள் வங்கியில் நான் முதன்முதல் வேலைக்கு சேர்ந்தவுடன், புதிதாக சேர்ந்தவர்களுக்கு என்று பயிற்சி வகுப்பு கொடுத்தார்கள். எல்லோரும் பல்வேறு ஊர்க்காரர்கள் என்பதாலும், ஒருவருக்கொருவர் அறிமுகம் வேண்டும் என்பதாலும் மாலை தேநீர் வேளையில் கலந்துரையாடல் என்ற ஒன்றை வைத்து இருந்தார்கள். (இப்போது அந்த நடைமுறை உண்டா என்று தெரியவில்லை) அந்த அனுபவத்தில் இங்கு எனது யோசனையைச் சொன்னேன்.

   Delete
  2. சுப்பு தாத்தா அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 16. நல்ல யோசனைகளைக் கூறியுள்ளீர்கள். நிச்சயம் புதுக்கோட்டை நண்பார்கள் உங்கள் யோசனைகளையும் முனைவர் பழனி.கந்தசாமி ஐயா அவர்களின் யோசனைகளையும் ஏற்றுக்கொண்டு ஆவன செய்வார்கள் என நம்புகிறேன்

  ReplyDelete
  Replies
  1. கருத்துரை தந்த V.N.S அய்யா அவர்களுக்கு நன்றி!

   Delete
 17. சென்னை சந்திப்பு நடைபெற்ற போது தனி வலைத்தளம் தொடங்கப்பட்டது! உங்களது ஆலோசனைகள் சிறப்பு! விழா சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 18. உங்கள் கருத்துக்களும் சகோதரர் பழனி கந்தசாமி அவர்களது கருத்துக்களும் சிறப்பாக உள்ளன!

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களுக்கு நன்றி.

   Delete
 19. நல்ல ஆலோசனைகள்! குறிப்பாகத் தனி வலைத்தளம் தொடங்குவது மிகவும் நல்லது! நீங்கள் சொல்வது போல பதிவர் அறிமுகத்துக்கு ஒவ்வொருவராக மேடையேறினால் சிலர் அளவுக்கதிகமான நேரம் எடுத்துக் கொள்வர். எனவே அவரவர் இருக்கையிலிருந்து எழுந்து நின்றபடியே அவர் பெயர், வலைப்பூவின் பெயர், ஊர் முதலியவற்றைப் பற்றிச் சொல்லி சுய அறிமுகம் செய்து கொள்ளலாம். எல்லோருக்கும் அசைவ உணவு ஒத்துவராது எனவே சைவ சாப்பாடு தான் நல்லது. நல்ல யோசனைகளுக்குப் பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. சாப்பாடு விஷயத்தில் புதுக்கோட்டை நண்பர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது.

   Delete
 20. சைவம் என்பது கொஞ்சம் சந்தேகம் ...
  பேசுகிறேன்
  மற்றபடி அனைத்து ஆலோசனைகளும் அருமை.
  இப்படி அனைவரும் மேம்பாட்டு ஆலோசனைகளைத் தந்தால் மகிழ்வே
  தங்கள் ஆலோசனைகளில் சில ஏற்கெனவே விவாதிக்கப் பட்டுவருபவைதான்

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் ஆசிரியர் எஸ்.மது அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 21. நேரத்தை கணக்கிட்டு நிகழ்ச்சிகை அமைத்தல் நன்று!

  ReplyDelete
 22. தங்கள் மதியுரைகளை வரவேற்கிறேன்.
  விழா இனிதே இடம்பெற வாழ்த்துகள்

  புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 23. அருமையான யோசனைகள் ஐயா! வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

  கலந்துரையாடல் நல்ல யோசனை...ஐயா...

  சந்திப்போம்...

  ReplyDelete
 24. அருமைசார் ...புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்

  ReplyDelete
 25. அருமைசார் ...புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்

  ReplyDelete
 26. ஐயாதங்களின் புகைபடங்களைக்காணஆவலோடுதங்களைவரவேற்கிறோம்.

  ReplyDelete
 27. ஐயாதங்களின் புகைபடங்களைக்காணஆவலோடுதங்களைவரவேற்கிறோம்.

  ReplyDelete