Saturday 20 June 2015

வலைச்சரம் – சில சர்ச்சைகள்


தமிழ் வலையுலகில் தனக்கென ஒரு பெரிய வாசகர் வட்டமும் ஆதரவும் பெற்ற (26.02.2007 இல் தொடக்கம்) வலைச்சரம், 22.மார்ச்.2015 இற்குப் பிறகு புதிதாக ஆசிரியர் பொறுப்பேற்க யாரும் வராதபடியினால் அப்படியே நின்றது. வலைச்சரம் மீதுள்ள ஆதங்கத்தினால் வலைச்சரம் ஒரு வேண்டுகோள்
http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_97.html என்ற ஒரு பதிவு ஒன்றினை எழுதி இருந்தேன்.

அதில் பல நண்பர்களும் தங்களது கருத்தினை வெளியிட்டு இருந்தார்கள். அவற்றுள் மூத்த வலைப்பதிவர் திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்)  அவர்களின் கருத்துக்களைக் கண்ட சகோதரி ஆதி.வெங்கட் (கோவை டூ தில்லி) அவர்கள், “வை.கோ சார் - எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்த தாங்களே உடனடியாக வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று தங்களின் உற்சாகமான எழுத்துக்களால் எல்லோரையும் மீண்டும் வலைச்சர பக்கம் இழுக்கலாம். இதை உடனடியாக பரிசீலனை செய்யலாமே சார்.. என் அன்பான வேண்டுகோள் இது...:18 April 2015 at 09:01.... என்று ஒரு அன்பான வேண்டுகோள் விடுத்தார். நானும் இதனை வழி மொழிந்தேன்; சகோதரி தேனம்மை லஷ்மணன் அவர்களும் வழிமொழிந்து கருத்துரை தந்தார்.

திரு V.G.K அவர்களும், வலைச்சர நிர்வாகிகளின் சம்மதத்தோடே எழுதத் தொடங்கினார். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது.

வலைச்சர விதிகள்:

வலைச்சரத்தில் எழுதும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்று சிலவற்றை வலைச்சர நிர்வாகிகள் நிர்ணயித்துள்ளனர். அய்யா திரு V.G.K அவர்களின் முதல் மூன்றுநாள் பதிவுகளைத் தொடர்ந்து படித்ததில், அவர் தனது வலைத்தளத்தில் எழுதுவது போலவே எழுதுவது தெரிய வந்தது. இருந்த போதிலும், ஒரு மூத்த பதிவர் என்ற முறையில் அவருக்காக விதிவிலக்கு கொடுத்து இருக்கலாம் என்றே எண்ண வேண்டி இருந்தது. அதன்பின்னர் திரு V.G.K அவர்களின் வலைத்தளத்தில் (நினைவில் நிற்போர் - 14ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/14.html ) தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் கருத்துரை, மறுமொழி என்று சூடாக விவாதம் நடந்து இருக்கிறது. இது நிறையபேருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் திரு V.G.K அவர்கள் தனது பதிவுகளை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைப்பதில்லை. இதற்கிடையே முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் தனது பாணியில் வலைச்சரம் பற்றிய ஒரு கண்டனம் என்ற தலைப்பினில் ஒரு பதிவை எழுதி இருந்தார். http://swamysmusings.blogspot.com/2015/06/blog-post_20.html  அதில் ( 15. ஜூன். 2015) நான் எழுதிய கருத்துரை இது.

// இந்த பதிவைப் பார்த்த பிறகுதான் ஒரு மிகப் பெரிய விவாதமே அய்யா திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களது வலைத்தளத்தில் நடைபெற்று இருப்பதைப் பார்த்தேன். திரு V.G.K அவர்கள் ஆர்வமாக வலைச்சரம் ஆசிரியர் பணி செய்ய தானாகவே முன்வந்தார். வலைச்சரத்தில் உள்ள சில விதிமுறைகள் அவருக்கு ஒத்துவரவில்லை என்றதும் விலகிவிட்டார்.

ஆனால் திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எங்கே வலைச்சரத்தை மற்றவர்கள் தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற ஆதங்கத்தில், வலைச்சர நிர்வாகிகளில் ஒருவர் என்ற முறையில் நிறையவே எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல பல பின்னூட்டங்களை திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எழுதி இருக்க வேண்டியதில்லை.

நினைவுக்கு வந்த ஒரு காட்சி திருவிளையாடல் படத்தில் (தருமி நகைச்சுவை) பாண்டியன் அரசவையில் புலவர் நக்கீரனும் இறையனாரும் சூடாக விவாதம் செய்யும் போது , மன்னன் செண்பகப் பாண்டியன் சொல்வதாக ஒரு வசனம்

புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள். புலமைக்கு சர்ச்சை தேவைதான். அது சண்டையாக மாறிவிடக் கூடாது.

எது எப்படி இருந்த போதிலும் , இனியும் வேண்டாம் விவாதம், நண்பர்களே.. //

இந்த கருத்தினை மேற்கோள் காட்டி, திரு V.G.K அவர்களது மேற்படி பதிவினில் பின்னூட்டமாக நான் எழுதியபோது அவர் தந்த மறுமொழி இது.


@தி.தமிழ் இளங்கோ
தங்களின் வருகைக்கும் புதியதொரு தகவலுக்கும் நன்றி.

//இனியும் வேண்டாம் விவாதம், நண்பர்களே.. //

OK Sir. Thanks for your kind advise. Accepted. – vgk ///


தமிழ்வாசியின் மின்னஞ்சல்:

இதற்கிடையே தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் மின்னஞ்சல் ஒன்று (15.06.2015) எனக்கு வந்திருந்தது. (இதன் முழு விவரம் இங்கு வேண்டியதில்லை) அதற்கு நான் அன்றே அனுப்பிய பதில் மின்னஞ்சல் இது.

// அன்புள்ள சகோதரர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு வணக்கம். நலம். தங்கள் நலனறிய நாட்டம்.

தங்களது  மின்னஞ்சலை மதியம்தான் பார்த்தேன். வலைப்பதிவு நண்பர்களிடையே இப்படி தேவையற்ற சர்ச்சை ஏற்பட்டுவிட்டதே என்ற வருத்தம்தான் மேலிட்டது.

// எனக்காக இல்லாவிட்டாலும் நீங்கள் பற்று வைத்துள்ள வலைச்சரத்திற்காக ஆதரவு தெரிவித்தோ, எங்களுக்காகவோ ஒரு வரி கூட நீங்கள் எழுதவில்லையே? ஏன் ஐயா? //

என்று கேட்டு இருந்தீர்கள்.

திரு V.G.K அவர்களது வலைத்தளத்தில் (14 ஆம் நாள்) அவரது வரிகளை வைத்தே எனது பின்னூட்டம் எழுதி இருக்கிறேன். இதில் வலைச்சர விதிகள் அவருக்கு ஒத்துவரவில்லை என்பதையும், தன் போக்கிலேயே அவர் எழுத ஆசைப்பட்டார் என்பதையும் அவரே சொல்லி இருப்பதையும் காணலாம்.

இதே பதிவினில் G.M.B  அய்யா, சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் ஆகியோர் எழுதிய பின்னூட்டங்களையும் காண்க. மேலும் வலைச்சரம் 11.06.2015 பதிவினில் சூரி என்கிற சுப்புத் தாத்தா எழுதிய பின்னூட்டத்தையும் பார்க்க. 

மேலும் இது குறித்து நானே ஒரு பதிவை எழுதலாம் என்று எண்ணி இருந்த நேரத்தில், முனைவர் பழனி. கந்தசாமி அவர்கள் இதுகுறித்து பதிவு ஒன்றை எழுதியிருந்தார். வீண் சர்ச்சையை மேலும் வளர்க்க வேண்டாம் என்பதால் நான் அவருடைய பதிவினில் எனது கருத்தை மட்டும் எழுதியுள்ளேன்.

மூத்த வலைப்பதிவர் திரு V.G.K மற்றும் வலைச்சரம் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டில் என்ன செய்வது என்ற திகைப்பின் காரணமாக பல பதிவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர் என்பதே உண்மை.

தமிழ்மணம் ஒரு நதியைப் போல; வலைச்சரம் அதன் கிளைநதியைப் போல. நதிப் பிரவாகம் என்பது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மனம் தளர வேண்டாம்.

அன்புடன் தி.தமிழ் இளங்கோ, 15.06.2015 //

இதற்கு அவர் (தமிழ்வாசி பிரகாஷ்) அன்றே அனுப்பிய பதில் மின்னஞ்சல் இது.

// வணக்கம் ஐயா...
   நலமே...
   தங்களது பதில் மிகவும் திருப்தியளிக்கிறது. நன்றி //

சர்ச்சைகள் தேவையில்லை:


முனைவர் பழனி.கந்தசாமி அவர்களின் நேற்றைய (19.06.15) பதிவை (http://swamysmusings.blogspot.com/2015/06/blog-post_5.html பதிவுலகில் அநியாயங்கள் நடக்கின்றனவா? ) பார்க்கும்போது இன்னும் தேவையற்ற சர்ச்சைகள் தொடர்வதாகவே தெரிகிறது. யார் தொடர்கிறார் என்ற விவாதத்திற்குள் நான் நுழைய விரும்பவில்லை. ஏற்கனவே எனது கருத்தினை சொல்லி விட்டேன். நாளை ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது அவரவர் முகத்தை எங்கு வைத்துக் கொள்வோம் என்பதனை யோசிக்க வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் புதுக்கோட்டையில் வலைப்பதிவர்கள் மாநாடு தொடங்க இருக்கிறது. சகோதரி தேனம்மை லஷ்மணன் அவர்கள் தனது வலைத்தளத்தில் ( http://honeylaksh.blogspot.in ) சொல்வதைப் போல

                            வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
                          என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! 
                                        - தேனம்மை லஷ்மணன்



24 comments:


  1. முனைவர் பழனி.கந்தசாமி அவர்களது இன்றைய பதிவுக்கு நான் பின்னூட்டம் இட்ட கருத்தை திரும்பவும் இங்கே தருகிறேன். ‘இரு கை தட்டினால் தான் ஓசை வரும். எனவே இதை இத்தோடு விட்டுவிடுவோம். ‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்பதை அறிவோம்.

    ReplyDelete
  2. நேரில் (வரும் வலைப்பதிவர்கள் மாநாடு) சந்தித்து உரையாடினால் அனைத்தும் சரியாகி விடும்... நாம் அல்ல... ஏற்பாடு செய்வது உங்கள் பொறுப்பு... தமிழ்வாசியை கூட்டி வருவது என் பொறுப்பு...

    ReplyDelete
  3. "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காண்பி" என்று ஒரு மதக்கொள்கை உள்ளது. எனக்கு அது உடன்பாடில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் நீயும் ஒரு கன்னத்தில் அறை என்பது என் கொள்கை. இது நாகரிகம் அல்ல என்று பலர் நினைக்கலாம். நாகரிகம் என்ற போர்வையில் நான் கோழையாக இருக்க விரும்பவில்லை.

    நிற்க, தமிழ் இளங்கோ தெளிவாக தன் கருத்துகளைக் கூறியுள்ளார். வைகோ அவர்களின் பதிவில் பின்னூட்டங்கள் போட்டு முடித்த பின் மூன்று நாட்கள் கழித்து மறுபடியும் அவரைக் காயப்படுத்தும் விதமாக ஒரு பதிவு வெளியான பின்தான் தான் என்னுடைய பதிவைப் போட்டேன்.

    யார் சர்ச்சையை வளர்க்கிறார்கள் என்பதை பதிவர்கள்தான் சொல்லவேண்டும். கண்டிப்பாக நான் இல்லை. அநியாயத்தைத் தட்டிக் கேட்பேன். அது என் இயல்பு. ஒருவரை அடித்துக் கீழே தள்ளிய பிறகும் ஆத்திரம் தாளாமல் அவரை மீண்டும் மீண்டும் உதைப்பதைக் கண்டு என்னால் சும்மா இருக்க முடியாது. கண்டிப்பாக என் கண்டனத்தைப் பதிவு செய்வேன்.

    ReplyDelete
  4. //மூத்த வலைப்பதிவர் திரு V.G.K மற்றும் வலைச்சரம் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டில் என்ன செய்வது என்ற திகைப்பின் காரணமாக பல பதிவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர் என்பதே உண்மை.//

    True.

    வலைப்பதிவர் ஒற்றுமையைக் குலைக்கும் செயல்களில் எனக்கும் உடன்பாடில்லை. உங்கள் கருத்துதான் எனக்கும்.

    வைகோ ஸார் விதிகளை மீறினார் என்பது தவறுதான். ஆனால் அது ஒரு பெரிய தவறாகத் தோன்றாத அளவு இப்போது நடக்கும் விஷயங்கள் இருக்கின்றன. நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் பதில் சொல்லுமளவு திரு சீனா ஐயா பொதுவெளியில் ஏதாவது இதுபற்றி பதில் சொல்லி இருக்கிறாரா என்று அறிய ஆவல்.

    கந்தசாமி ஸாரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    எது எப்படி ஆயினும் இந்தச் சண்டை இதோடு முடிவுக்கு வர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன், நண்பர்களை வேண்டிக் கொள்கிறேன்.


    ReplyDelete
  5. அதெல்லாம் ஒன்னும் இல்லீங்கோ.ஐயா கந்தசாமிக்கு மீசை கொஞ்சம் பெரிசு. வை கோ அப்படி இல்லை. அதுவும் இல்லாமல் ஐயா அவர்கள் வீர பரம்பரையில் வந்தவர் அல்லவா. அதுதான். ஆனால் தமிழ் வாசி மதுரைக்காரர் அல்லவா? வடிவேலு டைப்பில் ஆரம்பித்து விட்டார்.

    "போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். என் கடன் பதிவு இட்டு மகிழ்விப்பதே" என்று சொன்ன ஐயா கந்தசாமி இனியும் இந்த பிரச்சினையை வளர்க்காமல் விட்டு விடுவதே நல்லது.

    பிரச்சினையை வளர்ப்பவர்களுக்கு பதில்,சொல்ல சொல்லத்தான் பிரச்சினை பெரிதாகும்.
    நான் பதிவர் அல்ல என்பதனால் தான் இதை கேட்டுக்கொள்கிறேன்.
    --
    Jayakumar

    ReplyDelete
  6. வணக்கம் அய்யா, அருமையாக சொல்லியுள்ளீர்கள், வலைச்சரம் தன் வலிமை இழந்து நின்ற போது தான் வலிமையாக்குவேன் என்றார், வலைச்சரம் தொடர்ந்து இயங்க சில விதிகள் தளர்வானால்,,,,,,,,,,,,,
    அய்யோ, நானா? சாரி பழக்க தோசம்,,,,,,,,,,,,
    இங்கேயுமா? போங்கப்பா,,,,,,,,,,,,
    இது தேவையில்லை
    எதுவிம் அதிகப்படியாக பேசியிருந்தால் அதற்காக வருந்துகிறேன், நன்றி

    ReplyDelete
  7. இனியும் வேண்டாமே இது போன்ற பதிவுகள் இதுவே பிரட்சினையை வளர்க்கும்...
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  8. //"போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். என் கடன் பதிவு இட்டு மகிழ்விப்பதே" என்று சொன்ன ஐயா கந்தசாமி இனியும் இந்த பிரச்சினையை வளர்க்காமல் விட்டு விடுவதே நல்லது.//

    விட்டேன், விட்டேன், விட்டேன்.

    ReplyDelete
  9. / வைகோ அவர்களின் பதிவில் பின்னூட்டங்கள் போட்டு முடித்த பின் மூன்று நாட்கள் கழித்து மறுபடியும் அவரைக் காயப்படுத்தும் விதமாக ஒரு பதிவு வெளியான பின்தான் தான் என்னுடைய பதிவைப் போட்டேன்./சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்

    ReplyDelete
  10. கருத்து முரண்பாடுகள்
    பொருள் முரண்பாடுகள்
    வந்தால் தானே
    எழுதுவதோடு நின்றுவிடாமல்
    எழுதியதை
    ஆய்வு செய்யவும் முடிகிறதே!
    முரண்பாடுகள்
    இணக்கப்பாடுகளுக்கு இட்டுச் செல்ல
    இடமளிக்க வேண்டுமே தவிர
    முரண்பட்டுப் பிரிவை ஏற்படுத்த அல்ல!
    நமது முரண்பாடுகளைக் களைந்து
    நாமே இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்
    வலைப் பதிவர் ஒற்றுமை ஓங்க வேண்டும்
    அலை அலையாகப் பதிவுகள் தொடர வேண்டும்
    பதிவர்களால் உலகெங்கும் தமிழ் வாழ வேண்டும்

    ReplyDelete
  11. திரு வை.கோ அவர்கள் மூத்த பதிவர் என்பது ஒரு புறம். ஆனால், பல புதிய பதிவர்களுக்கு அவர் முன் வந்து அருமையான, அழகான, அறிவுரைகளும் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதம் எழுதும் விதமும் என்னை மிகவும் கவர்ந்தவை. நான் பதிவர் அல்ல. ஆனால் வலைச்சரம் விரும்பி படிப்பவன். ஆகவே, இந்த விவாதம் தேவையா என அனைவரும் எண்ணி அமைதி காப்போம்.

    ReplyDelete
  12. பாம்பு புடிக்க போன இடத்துல குஷ்பு குளிக்கிறத பாத்துட்டேன்னு ஹீரோ சொல்லிட்டு திரிஞ்சதுதான் என் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  13. நீர் மேல் எழுத்துக்களைப் போல பிரச்னைகள் தீரட்டும்!..
    இனி நடப்பவை - நல்லவையாக இருக்கட்டும்..

    வாழ்க வலைப் பதிவர்கள்!..
    வளர்க வலைச்சரம்!..

    ReplyDelete
  14. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள் பிளீஸ் எல்லாருமே...
    தம +

    ReplyDelete
  15. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
    jk+1

    ReplyDelete
  16. இறுக்கத்தைக் குறைப்போம். இணைப்பை உறுதிப்படுத்துவோம்.

    ReplyDelete
  17. இந்த பதிவினையே வெளியிடுவதா வேண்டாமா என்ற பல்வேறு யோசனைகளுக்குப் பின் வெளியிட்டேன். மேலே கருத்துரைகள் தந்த அனைவருக்கும் நன்றி.

    கருத்துரை தந்த பலரும்,

    ////
    இத்தோடு விட்டுவிடுவோம் ( அய்யா வே.நடனசபாபதி)

    எது எப்படி ஆயினும் இந்தச் சண்டை இதோடு முடிவுக்கு வர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன், நண்பர்களை வேண்டிக் கொள்கிறேன் (சகோதரர் ஸ்ரீராம்)

    பிரச்சினையை வளர்ப்பவர்களுக்கு பதில்,சொல்ல சொல்லத்தான் பிரச்சினை பெரிதாகும் (சகோதரர் ஜெயக்குமார் (ஜேகே 22384)

    இனியும் வேண்டாமே இது போன்ற பதிவுகள் (நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி)

    நமது முரண்பாடுகளைக் களைந்து , நாமே இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்; வலைப் பதிவர் ஒற்றுமை ஓங்க வேண்டும் ( கவிஞர் யாழ்பாவாணன்)

    இந்த விவாதம் தேவையா என அனைவரும் எண்ணி அமைதி காப்போம் ( சகோதரர் பரமசிவம்)

    இனி நடப்பவை - நல்லவையாக இருக்கட்டும்.. ( தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ)

    கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள் பிளீஸ் எல்லாருமே... (ஆசிரியர் எஸ்.மது)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.! ( ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் )

    இறுக்கத்தைக் குறைப்போம். (முனைவர் ஜம்புலிங்கம்)

    ////

    என்று ஒத்த கருத்தையே தந்து இருப்பதால் நான் மேற்கொண்டு மறுமொழிகள் தந்து விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை; எனவே இந்த பதிவினில் யாருக்கும் தனித்தனியே மறுமொழிகள் எழுதவில்லை என்று கூறிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  18. வலைச்சர சர்ச்சையால் ஓர் நன்மையும் ஏற்பட்டிருக்கிறது! புதியவர்கள் பலர் வலைச்சரத்தை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்வாசி அவர்கள் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றி சொன்ன கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதாகவே இருந்தது. எல்லாவற்றையும் மறப்போம்! ஒற்றுமையுடன் செயல்படுவோம்! நன்றி!

    ReplyDelete
  19. எப்போதுமே ஒரு விடயம் தொடர்ந்து நடக்கும் அதாவது காய்த்த மரத்தில் அல்லது காய்க்கும் மரத்தில் கல்லடி படும் என்பார்கள் அதுமட்டும் அன்று ஒருவிடயம் கருதி சிலர் ஒற்றுமையாக இருந்தால் சிலருக்கு பிடிப்பதில்லை ஒற்றுமையை சீர் குலை க்கப் பார்ப்பார்கள் இது எங்கும் நடக்கும் விடயம் எனவே பகைவர்களின் வஞ்சக வலையில் வீழாமல் ஒற்று,மையை நிலைபெறச் செய்வோம்

    ReplyDelete
  20. வணக்கம் ஐயா !

    ஒற்றுமை ஒன்றே உயர்வாக்கும்! உள்ளுணர்வில்
    பற்றுதல் கொண்டால் பழுதறுக்கும் - குற்றமே
    அற்றார் குவலயத்தில் எங்குமிலை ! அஃதுண்டேல்
    முற்றும் துறந்த முனி !

    மறப்போம் மன்னிப்போம் என்று வழமைக்குத் திரும்புதல் நன்மைதரும்

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்


    ReplyDelete
  21. மறப்போம் மன்னிப்போம் ஐயா!

    ReplyDelete
  22. எல்லோருமே இதை விட்டுவிட்டால் காலம் ஆற்றிவிடும் என்பது போல்....இதுவும் கடந்து போகும்....அமைதி பிறக்கும்......

    சகோதரி தேனம்மையின் வலை வாசகம் தான் இங்கு.....வேண்டும்...

    ReplyDelete
  23. நிறைய அறிந்தேன்
    மிக்க நன்றி பதிவுக்கு

    ReplyDelete