Sunday, 1 March 2015

திருவானைக்கோவில் சென்றேன்



மார்ச் ஒண்ணாம் தேதி (01.03.2015) அதாவது இன்று, எனது பிறந்தநாள். 60 முடிந்து 61 தொடக்கம். இனிமேல் நானும் ஒரு சீனியர் சிட்டிசன்(Senior Citizen). எந்த கோவிலுக்கு போவது என்று நான் யோசித்துக் கொண்டு இருந்த வேளையில், என்னோடு பணிபுரிந்த நண்பர் ஜெகதீசன் அன்றையதினம் நடக்க இருக்கும் தனது அறுபதாம் ஆண்டு நிறைவு திருமண (ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி சுப முஹூர்த்தம்”) விழாவிற்கு சென்றவாரமே அழைப்பிதழ் அனுப்பி வைத்ததோடு செல்போனிலும் அழைப்பு விடுத்து இருந்தார். அவருக்கும் 61 தொடக்கம். ரொம்பவும் நல்லதாகப் போயிற்று. திருவானைக் கோவில் என்று முடிவாயிற்று.

திருக்கோவில் நுழைவு:

இன்று காலை எனது பெற்றோர் இருக்கும் இடத்திற்கு சென்று, அவர்களது வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டு, பஸ்சில் திருவானைக்கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றேன். பஸ்ஸை விட்டு இறங்கியதும், கடைத்தெருவில் ஒரு ஹோட்டலில் காலை டிபன் முடித்துக் கொண்டு கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

(படம் மேலே) திருவானைக்கோவில் கடைத்தெரு.


(படம் மேலே) கோயில் கோபுரம்.

கோயிலின் கோபுரம் வழியே உள்ளே நுழைவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. அவ்வளவு நெரிசல். உள் வீதிகளில் குடியிருப்பவர்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆகியோரது இருசக்கர, நாலு சக்கர வாகனங்கள். உள்ளே நுழைந்ததும் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் நுழைவு வாயில்.

(படம் மேலே) திருக்கோவில் நுழைவு வாயில். 


(படம் மேலே) முன்புற கோபுரத்தின் பின்பக்க தோற்றம்.

கேமரா அனுமதிச்சீட்டு

கோயில் கோபுரத்தைக் கடந்ததும் யானை கட்டும் இடத்திற்குச் சென்றேன். யானையை படம் எடுக்க முயன்றபோது பாகன், கேமராவிற்கு, அருகிலுள்ள கோயில் அலுவலகத்தில் அனுமதிச்சீட்டு வாங்கி வரச் சொன்னார். அங்கே போனபோது, இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் கோயிலுக்குள் மூலவர் சன்னதி அருகே இருக்கும் கவுண்டரில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்த ஒருவர் சொன்னார். சிரமத்தை பாராது அங்கே சென்றேன். கேமராவிற்கு அனுமதிசீட்டு கேட்டபோது உடனே கொடுக்கவில்லை. நிறைய கேள்விகள். யாரோ ஒரு கல்யாண போட்டோகிராபர், திருமண மண்டபத்தில் (சினிமாவில் படம் எடுப்பது போன்று) மணமக்களை ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து இருக்கும்படி படம் எடுத்து விட்டாராம். யாரோ ஒரு பக்தர் இதனை மேலே புகார் செய்ய (நல்ல விஷயம்தான்). எனவே  இப்போதெல்லாம் ரொம்பவும் கெடுபிடி என்றார்கள். ஒருவழியாக கேமராவிற்கு அனுமதிச்சீட்டை (ரூ 30/=) வாங்கிக் கொண்டு மீண்டும் யானை இருக்கும் இடத்திற்கே வந்தேன். யானையை படம் எடுக்கும்போது மட்டும் கேமராவில் பிளாஸ்சை ஆப் செய்து கொள்வேன். மேலும் எட்டி நின்றே படம் எடுப்பேன். எனது பயத்தைத் தெரிந்து கொண்ட அவர் பயப்படாமல் கிட்டே வந்து படம் எடுக்கச் சொன்னார். 

(படம் மேலே) கேமரா அனுமதிச்சீட்டு


(படம் மேலே) யானை அகிலாவும் அதன் பாகனும்.

அதன்பிறகு கோயில் உள்ளே சென்று மண்டபத்தை அடைந்தேன். அங்கே ஒரு ஓரத்தில் பார்வையாக வைக்கப்பட்டு இருந்த யானை பராமரிப்பு உண்டியலில், என்னால் இயன்ற தொகையை போட்டேன்.

(படம் மேலே) உள்புற கோயில் கோபுரம்

(படம் மேலே) உள் மண்டபம்.

திருமண நிகழ்ச்சி

பின்னர் தனிவழி கட்டண சீட்டை (ரூ10/=) பெற்றுக் கொண்டு ஜம்புகேஸ்வரரை இறைவணக்கம் செய்தேன். சைவசமயத்தின் முக்கியமான சிறப்பு நாட்களெல்லாம் (தைப்பூசம், சிவராத்திரி போன்றவை) அண்மையில்தான் வந்து போயின. எனவே கூட்டம் அவ்வளவாக இல்லை. பின்னர் மூலவர் ஜம்புகேஸ்வரர் சன்னதியை விட்டு வெளியே வந்து கோயில் பிரகாரங்களை சுற்றி விட்டு, நண்பரின் அறுபதாம் ஆண்டு நிறைவு கல்யாணம் நடந்த நவராத்திரி மண்டபம் வந்தேன். மண்டபத்தின் அருகில்தான் அம்மனின் (அகிலாண்டேஸ்வரி) சன்னதி. அங்கு வெளியூர் கும்பல். எனவே அவர்கள் நின்று கொண்டு இருந்த வரிசைக்கு வெளியே இருந்தபடியே அம்மனை வணங்கிவிட்டு மண்டபம் வந்தேன். அங்கு நண்பரின் அறுபதாம் ஆண்டு நிறைவு திருமண நிகழ்ச்சியில் (படம் ஏதும் எடுக்கவில்லை) கலந்து கொண்டுவிட்டு, அவர் ஏற்பாடு செய்து இருந்த ஹோட்டலில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினேன்.         

மேலும் சில படங்கள்:


(படம் மேலே) உள் பிரகாரம்


(படம் மேலே) உள் பிரகாரத்துள் ஒரு மண்டபம்



(படம் மேலே) அம்மன் சன்னதி அருகே, யானை அகிலாவை மதியம் அழைத்து வந்து இருந்தார்கள். அப்போது அங்கு வந்த பக்தர்கள் பலர் அதனிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். 

நானும் பயத்துடனேயே பெற்றுக் கொண்டேன். அப்போது எனது கேமராவை அங்கு யாரிடமாவது கொடுத்து எடுக்கச் சொல்லலாம் என்ற ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. காரணம் அங்கே மண்டபத்தில் நான் கண்ட ப்ளக்ஸ் பேனர் எச்சரிக்கை வாசகம்தான்.


(படம் மேலே) எச்சரிக்கை வாசகம் அமைந்த ப்ளக்ஸ் பேனர்


(படம் மேலே) கோயில் நந்தவனம்


(படம் மேலே) உள் பிரகாரத்திலிருந்து


(படம் மேலே) 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற கோயில் குடமுழுக்க பற்றிய கல்வெட்டு.

 

59 comments:

  1. புகைப்படங்கள் அனைத்தும் அருமை இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே...
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. அறுபதைக் கடந்த அன்புச் சகோதரர் தங்களின் நல்லாசிகளை நாடுகின்றேன்..

    அன்னை அகிலாண்டேஸ்வரி - ஐயனுடன் அருகிருந்து
    அனைத்து நலன்களையும் வழங்கி அருள் புரிய வேண்டுகின்றேன்!..

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். சீனியர் சிடிசன் ஆனதற்கும் [அதற்கான சில சலுகைகள் கிடைக்குமே] வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  4. கோயிலில் எடுக்கப்பட்டுள்ள அனைத்துப்படங்களும் அழகோ அழகு. மிகச்சிறப்பாக ஒவ்வொன்றையும் பற்றி விவரித்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  5. திருஆனைக்கா தேனமுதாய் தித்திக்கும்..
    திருவுடையாள் பதம் துதிக்கத்
    திருவருளும் சித்திக்கும்..
    திருஓங்கித் திகழ்க எத்திக்கும்!..

    ReplyDelete
  6. அவ்வளவு பெரிய முரட்டு உருவமுள்ள யானையை முழுவதுமாகக் கை அகலக் கேமராவுக்குள் எப்படித்தான் நுழைத்துக்கொண்டுவந்து, பதிவினில் பிரஸவித்தீர்களோ .... சூப்பர் சார்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
    அகிலாண்டேஸ்வரி தரிசனம் பெற்று, எங்களுக்கும் அன்னையின் கோவிலை அருமையாக சுற்றி காண்பித்தமைக்கு நன்றி. வருடங்கள் பலவாகி விட்டது திருவானைக்கால் வந்து.
    அழகான படங்கள்.

    ReplyDelete
  8. அகிலாவின் அழகில் சொக்கிப் போனேன் ,அறுபதைக் கடந்த உங்களுக்கு ,அறுப்பதைத் தொழிலாய் கொண்டிருக்கும் 'ஜோக்காளி'யின் வாழ்த்துக்கள் !
    த ம 2

    ReplyDelete
  9. சூப்பர் சார்...நான் அங்கு தானே இருக்கிறேன்..சொல்லியிருந்தால் நான் உங்களை கூட்டிக் கொண்டு ஆரண்ய நிவாஸ் வந்திருப்பேன்...பரவாயில்லை!
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....
    தங்களுக்கும்....
    தங்கள் நண்பருக்கும்!

    ReplyDelete
  10. வாழ்த்துகள்
    வாழ்த்துங்கள்
    தம +1

    ReplyDelete
  11. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.

    அந்த ஜம்புகேஷ்வரரும், அகிலாண்டேஸ்வரி தாயாரும் உங்களுக்கு எல்லா ஆசிகளும் வழங்கட்டும்.

    புகைப்படங்கள் அனைத்தும் அழகு. நான் நிறைய வருடங்கள் முன்பு சென்று இருக்கிறேன். உங்கள் புகைப்படங்களைப் பார்க்கும் போது அந்த நினைவுகள் தான் வந்தது. நன்றி

    தம 3

    ReplyDelete
  12. பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா! பதிவும் படங்களும் உள்ளத்தை கொள்ளைகொண்டுவிட்டன!!! அருமை அண்ணா!

    ReplyDelete
  13. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    அன்பு நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  14. மறுமொழி > துரை செல்வராஜூ said... (1)

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி. எனக்காக அன்னை அகிலாண்டேஸ்வரி – ஐயனிடம் ஆசிகள் கேட்ட உங்களுக்கும் அவர்கள் அருள் உண்டு.

    ReplyDelete
  15. மறுமொழி > துரை செல்வராஜூ said... (1)

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி. எனக்காக அன்னை அகிலாண்டேஸ்வரி – ஐயனிடம் ஆசிகள் கேட்ட உங்களுக்கும் அவர்கள் அருள் உண்டு.

    ReplyDelete
  16. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1, 2)

    // இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். சீனியர் சிடிசன் ஆனதற்கும் [அதற்கான சில சலுகைகள் கிடைக்குமே] வாழ்த்துகள். //

    அன்புள்ள V.G.K அவர்களின் ஆசீர்வாதமே கோடி பெறும். தங்களின் வாழ்த்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  17. மறுமொழி > துரை செல்வராஜூ said... (2)

    திருஆனைக்கா தேனமுதாய் தித்திக்கும்..
    திருவுடையாள் பதம் துதிக்கத்
    திருவருளும் சித்திக்கும்..
    திருஓங்கித் திகழ்க எத்திக்கும்!..

    நல்ல தமிழ்ப் பாமாலை ஒன்றை திருஆனைக்கா அம்பாளுக்கு சூட்டிய சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் நாவில் என்றும் கலைமகள் வீற்றிருக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete

  18. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (3)

    // அவ்வளவு பெரிய முரட்டு உருவமுள்ள யானையை முழுவதுமாகக் கை அகலக் கேமராவுக்குள் எப்படித்தான் நுழைத்துக்கொண்டுவந்து, பதிவினில் பிரஸவித்தீர்களோ .... சூப்பர் சார். //

    அன்பு VGK அவர்களே, பெரிய பெரிய எழுத்தாளர்களையும், வலைப் பதிவர்களையும், உங்கள் அன்பினால் உங்கள் கையடக்க இதயத்துள் வைத்து இருப்பதைவிட நான் ஒன்றும் செய்து விடவில்லை.

    ReplyDelete

  19. மறுமொழி > கோமதி அரசு said...

    சகோதரி அவர்களின் வாழ்த்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  20. மறுமொழி > Bagawanjee KA said...

    // அகிலாவின் அழகில் சொக்கிப் போனேன் ,அறுபதைக் கடந்த உங்களுக்கு ,அறுப்பதைத் தொழிலாய் கொண்டிருக்கும் 'ஜோக்காளி'யின் வாழ்த்துக்கள் ! த ம 2 //

    உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன். என்னால் விமர்சனங்களை மட்டும் தொடர்ந்து தர இயலாமல் போய் விடுகிறது. மற்றபடி உங்கள் பதிவுகள் யாவும், சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை

    ReplyDelete
  21. மறுமொழி > ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    ஆரண்ய நிவாஸ் அவர்களின் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? தங்களது அன்பான வாழ்த்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  22. மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  23. வணக்கம்
    ஐயா.

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ஐயா. ஆலய தரிசனம்... நானும் தரிசித்தது போல ஒரு உணர்வு பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  24. வணக்கம்
    த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  25. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா...

    அழகான படங்கள் மூலம் கோயிலுக்கு மறுபடியும் சென்று வந்தேன்...

    ReplyDelete

  26. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! மூத்த குடிமக்களின் குழுமத்தில் அங்கத்தினராக சேரும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன். படங்கள் வழக்கம்போல் மிளிர்கின்றன! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. அனைத்தும் அருமை அய்யா.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. மூத்தகுடிமகன் என்ற நிலையில் தங்களுக்கு வரவேற்பு. கோவில் உலாவின்போது அண்மையில் நாங்கள் சென்ற கோயில்களில் ஒன்று திருவானைக்கா. புகைப்படங்கள் அருமை. முன்பு கருவறையில் தானாக தண்ணீர் ஊறும் என்று சொல்லக்கேட்டுள்ளேன், பார்த்துள்ளேன். அண்மைக்காலமாக செயற்கையாக தண்ணீரை உள்ளேவிடுவதாகக் கேள்விப்பட்டேன். அந்த அளவு எங்கு பார்த்தாலும் வீடுகளைக்கட்டி ஆக்கிரமிப்பு செய்து தலத்தின் முக்கியத்துவத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டார்கள்.

    ReplyDelete
  29. முதலில் அறுபது ஆண்டுகளுக்கு வாழ்த்துக்கள். திருவானைக்கா ஒவ்வொருவருடமும் செல்லும் இடம். கடந்த ஆண்டு தவறிவிட்டது. அப்புத்தலம் என்று பெயர் பெற்ற கோவிலில் லிங்க சுற்றி நீர் எப்போதும் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் பார்கமுடிவதில்லை சுற்று மதில் சுவர் பெயர் பெற்றது. .புகைப்பட வித்தகர் ஆகி விட்டீர்கள்.

    ReplyDelete
  30. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அழகிய படங்களுடன் கோயிலை சுற்றிக் காட்டியமைக்கு நன்றி!

    ReplyDelete
  31. முதலில் அறுபது ஆண்டுகளுக்கு வாழ்த்துகள்.!படங்கள் அனைத்தும் பேசுகின்றன!

    ReplyDelete
  32. மறுமொழி > அன்பே சிவம் said...

    சகோதரர் அன்பே சிவம் அவர்களின் அன்பான வாழ்த்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  33. மறுமொழி > R.Umayal Gayathri said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி. உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்.

    ReplyDelete
  34. மறுமொழி > Mythily kasthuri rengan said...

    சகோதரி அவர்களின் வாழ்த்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  35. மறுமொழி > Packirisamy N said...

    சகோதரர் அவர்களுக்கு நன்றி. உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் போது, இடையில் படிக்க இயலாமல் போனதால் உங்கள் வலைப் பக்கம் வர முடியாமல் போயிற்று. மன்னிக்கவும். மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  36. மறுமொழி > ரூபன் said... ( 1, 2)

    எனக்கு எப்போதும் பாராட்டும் ஊக்கமும் தரும் கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  37. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  38. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா V.N.S அவர்களின் அன்பான ஆசிகளுக்கும் பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  39. மறுமொழி > King Raj said...

    நன்றி சகோதரரே!

    ReplyDelete

  40. மறுமொழி > Dr B Jambulingam said...

    // மூத்தகுடிமகன் என்ற நிலையில் தங்களுக்கு வரவேற்பு. கோவில் உலாவின்போது அண்மையில் நாங்கள் சென்ற கோயில்களில் ஒன்று திருவானைக்கா. புகைப்படங்கள் அருமை. முன்பு கருவறையில் தானாக தண்ணீர் ஊறும் என்று சொல்லக்கேட்டுள்ளேன், பார்த்துள்ளேன். அண்மைக்காலமாக செயற்கையாக தண்ணீரை உள்ளேவிடுவதாகக் கேள்விப்பட்டேன். அந்த அளவு எங்கு பார்த்தாலும் வீடுகளைக்கட்டி ஆக்கிரமிப்பு செய்து தலத்தின் முக்கியத்துவத்தையே கேள்விக்குறியாக்கி விட்டார்கள்.//

    முனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி. முன்பெல்லாம் காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கோயில் கர்ப்பகிரகத்திலும் அதன் வெளிப் பிரகாரத்திலும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கும். அதிகம் ஊறும் நாட்களில் பக்தர்களை அனுமதிக்க மாட்டார்கள். இப்போது எப்படி என்று தெரியவில்லை. ஆனாலும் பழைய மாதிரி உட்பிரகாரப் பாதைகளில் ஈரம் இல்லை.

    ReplyDelete
  41. பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ஐயா
    படங்கள் ஒவ்வொன்றும் அருமை
    நன்றி ஐயா
    தம 11

    ReplyDelete
  42. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  43. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...
    சகோதரர் ‘தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  44. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    புலவர் அய்யாவுக்கு நன்றி.

    ReplyDelete
  45. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  46. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ் இளங்கோ சார். உங்கள் தயவால் திருவானைக்காவல் கோவிலை ஒரு சுற்று சுற்றி வந்து விட்டேன்.
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  47. கோவிலில் சன நெருக்கமானால் அமைதியாக வணங்கவே முடியாது தான்.
    அது தவிர எல்லாவற்றிற்கும் பணம் பிடுங்குகிறார்கள்....என்பது தெரிகிறது.
    நல்ல படங்கள் -பதிவும். நன்றி
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  48. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ் இளங்கோ சார்.
    I am 7 years elder than you.
    Vetha.Langathilakam

    ReplyDelete
  49. மூத்த இளைஞர் ஆகி விட்டீர்கள். மனமாரந்த வாழ்த்துக்கள். நீங்கள் மிக மூத்த இளைஞர் ஆகவும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  50. அருமையான தொகுப்பு,அழகிய புகைப்படங்கள் வணங்குகிறேன். நன்றி.

    ReplyDelete
  51. அறுபதிற்குள் நுழைந்திருக்கும் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இனி தான் மனதில் அதிக தெம்பும் இளமையும் தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்!

    புகைப்படங்கள் அனைத்தும் அழகு!

    ReplyDelete
  52. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  53. மறுமொழி > kovaikkavi said...

    சகோதரி, கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும். நன்றி.

    // கோவிலில் சன நெருக்கமானால் அமைதியாக வணங்கவே முடியாது தான். அது தவிர எல்லாவற்றிற்கும் பணம் பிடுங்குகிறார்கள்....என்பது தெரிகிறது. நல்ல படங்கள் -பதிவும். நன்றி வேதா. இலங்காதிலகம். //

    உண்மைதான் சகோதரி. நான் எப்போதும் அமைதியான நாட்களில் (விழா, விசேஷம் இல்லாத நாட்களில் மட்டுமே) கோயிலுக்குள் செல்வேன். அப்போதுதான் இறைவனை மனதார துதிக்க இயலும்.

    ReplyDelete
  54. மறுமொழி > kovaikkavi said...

    // பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ் இளங்கோ சார்.
    I am 7 years elder than you. Vetha.Langathilakam //

    என்னைவிட நீங்கள் 7 வயது மூத்தவர் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான். ஏனெனில் உங்களுடைய மூத்தோர் ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு என்று அகம் மகிழலாம்.

    ReplyDelete
  55. மறுமொழி > பழனி. கந்தசாமி said...

    அய்யா முனைவர் பழனி. கந்தசாமி அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  56. மறுமொழி > mageswari balachandran said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி. விரைவில் உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்.

    ReplyDelete
  57. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி.

    // அறுபதிற்குள் நுழைந்திருக்கும் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இனி தான் மனதில் அதிக தெம்பும் இளமையும் தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்! புகைப்படங்கள் அனைத்தும் அழகு! //

    இனி தான் மனதில் அதிக தெம்பும் இளமையும் தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்! – என்ற உங்கள் அறிவுரையை என்றும் மறவேன்.

    ReplyDelete
  58. அன்புள்ள அய்யா,

    தாங்கள் திருவானைக்கோவில் சென்றதும்... புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்ததும் கண்டு மகிழ்ந்தேன். திருவானைக்காவின் கோவிலுக்குள் சென்ற செய்திகளை அழகாக தொகுத்துத்தந்து... அருமையான புகைப்படத்துடன் காண்பித்தது பாராட்டுக்குரியது.

    தங்களுக்கு 60 முடிந்து 61 தொடக்கம். இனிமேல் நானும் ஒரு சீனியர் சிட்டிசன்(Senior Citizen) ஆகியதற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருவானைக்கா என்றவுடன் நான் அங்குதான் திருமிகு.அரங்கசாமி அய்யாவிடம் தமிழ் கற்றேன். வாரம் இரண்டு நாள் அங்கு வந்து செல்வேன். சில நாட்கள் கோவிலுக்கு சென்று வந்தேன்.
    ‘ஊனமா(க்)கி போனவன்’ சிறுகதை கோவிலைச் சுற்றி வருகின்ற பொழுது நடந்த நிகழ்வை வைத்து எழுதியது.
    நன்றி.
    த.ம. 12.


    ReplyDelete
  59. தங்கள் பிறந்தநாளுக்குத் தாமதமான வாழ்த்துக்கள்! பதிவும் அருமையான கோயிலைப் பற்றியது. படங்கள் மிக மிக அழகாக உள்ளன. அதுவும் கோயிலின் பிரகாரம் அருமையாக உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete