தமிழ் வலையுலகில்
அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் பற்றி அறியாதவர்கள் இருக்க இயலாது. அவரது “சாமியின் மன அலைகள்” ( இப்போது மன அலைகள்) என்ற பதிவு அவ்வளவு பிரசித்தம். தமிழ்மணத்தில்
இன்றைய இடுகைகள் என்ற இடத்தில் மட்டுமல்லாது, மறுமொழிகள், இன்று/இந்த வாரம் சூடான
இடுகைகள் என்ற பகுதிகளிலும் இவரது பெயர் மின்னிக் கொண்டே இருக்கும். சுவாரஸ்யமான
இவரது பதிவுகளில் வரும் பின்னூட்டங்களை படிப்பதற்கென்றே அங்கெல்லாம் சென்று
மீண்டும் மீண்டும் அவரது பதிவினையும் மற்றும் கிண்டலான மற்றவர்களது கருத்துரைகள்
மற்றும் இவரது நகைச்சுவையான பதிலடிகளையும் ரசித்துப்
படிப்பது வழக்கம். நானும் அவ்வப்போது கருத்துரைகள் எழுதுவது உண்டு. சற்று உற்று
இவரது பதிவுகளை பார்த்தோமானால் நிறையபேர் இதே போன்று ரசிப்பதைக் காணலாம். ஆகக்
கூடி தமிழ் வலையுலகை எப்போதும் கலகலப்பாக வைத்துக் கொண்டிருக்கும்
வலைப்பதிவர்களில் இவரும் ஒருவர்.
சில நாட்களாகவே கண்ணுக்கு தெரியாத சில பின்னூட்ட ஆசாமிகள் மீது
அவருக்கு கோபம் போலிருக்கிறது. லாலா
மிட்டாய் கடைக்காரன் திடீரென்று ஷட்டரை இழுத்து கடையை பூட்டியது போல http://swamysmusings.blogspot.com/2015/01/blog-post_27.html ”நான் விடுதலை ஆகிறேன்” என்று
தனது கருத்துரைப் பெட்டியை (COMMENTS BOX) மூடிவிட்டு,
” இன்றுடன்
என் பதிவில் இருக்கும் பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டேன். இதுகாறும்
என் பதிவுகளில் பாராட்டியும் எதிர்கருத்துகளைக் கூறியும் என்னை உற்சாகப் படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” –
என்று அறிவிப்பும் செய்து
விட்டார். சில
கடைகளில் “இன்று ரொக்கம் நாளை கடன்” என்று அட்டை
தொங்குவது போல, அவரது வலைத்தளத்தில் ”இந்தத் தளத்தில் பின்னூட்டப் பெட்டி இல்லை” என்ற அறிவிப்பை வெளியிட்டார். இப்போது அதனை எடுத்து விட்டார்.. இவருக்கு என்ன ஆதங்கம்
என்பது பற்றி ”பதிவுலகம்பற்றி என் சிந்தனைகள்” http://swamysmusings.blogspot.com/2015/01/blog-post_16.html என்ற இவரது பதிவினில் தெரிந்து கொள்ள முடிகிறது.
இப்போதும் அவ்வப்போது
பின்னூட்டம் இல்லாத இவரது பதிவுகளை தமிழ்மணத்தில் காண முடிகிறது. இருந்தாலும்
முன்பு போல் அடிக்கடி மீண்டும் மீண்டும் படிக்கும் அளவுக்கு தமிழ்மணத்தில் காண
இயலவில்லை. தமிழக அரசு விருது பெற்ற சில திரைப்படங்கள் வந்த வேகத்தில் தியேட்டரை
விட்டு ஓடுவது போல தமிழ்மணத்தில், அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்களது ”மன அலைகள்” வந்த
வேகத்தில் ஒரே நாளில் மறைந்து விடுகின்றன. இது என்னைப் போன்ற அவரது வாசகர்களுக்கு ஒரு பெருங்
குறையே.
அய்யா முனைவர்
பழனி.கந்தசாமி அவர்கள் தனது வலைத்தளம் தொடங்கிய புதிதில், அதற்கான காரணத்தை ”நதிமூலம்” என்ற தலைப்பினில் (ஐந்து பதிவுகளில் 2009-
பிப்ரவரி) நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். ஐந்தாவது பதிவினில்
// எல்லோருக்கும்
சந்தோஷம் கொடுக்கலாம் என்று இந்த வலைத்தளத்தை ஆரம்பித்திருக்கிறேன்.
இது சந்தோஷத்தை கொடுக்குமா அல்லது கஷ்டத்தை கொடுக்குமா
என்பது போகப்போகத்தான் தெரியும். இதுதான் இந்த வலைத்தளத்தின்
நதிமூலம்.// ( http://swamysmusings.blogspot.in/2009/02/5.html
)
என்று சொல்லுகிறார்.
எனக்குத் தெரிந்து,
ஆரம்பம் முதல் அவரது பதிவுகளைப் படித்த வரையில், அவரது பதிவுகள் மகிழ்ச்சியையே கொடுத்துள்ளன. கஷ்டத்தைக்
கொடுக்கவில்லை. எனவே அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் முன்பு போல தனது
வலைத்தளத்தில் கருத்துரைப் பெட்டியை (COMMENTS BOX) வைக்கும்படி (இது அவரது தனிப்பட்ட விருப்பு என்ற போதிலும்) கேட்டுக் கொள்கிறேன்.)
அன்பு நண்பருக்கு,
ReplyDeleteநான் பின்னூட்டப் பெட்டியை மூடினதிற்கு முக்கிய காரணம், என்னால் முன்பு போல் உங்களைப்போல் நல்ல நண்பர்களின் பதிவுகளுக்குச் சென்று பின்னூட்டம் போட இயலாமையினால்தான். அப்படி மற்றவர்களுக்குப் பின்னூட்டம் போடாமல் நான் மட்டும் பின்னூட்டப் பெட்டி வைத்திருக்கும்போது நண்பர்களின் பின்னூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் ஒரு வித குற்ற உணர்வினால் சஞ்சலப்பட்டது. கண்டனங்களைப் பார்த்து நான் எப்போதும் வருத்தப்பட்டதில்லை.
வயதான என் இயலாமையைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என்றால் பின்னூட்டப் பெட்டியைத் திறந்து விடுகிறேன்.
அன்புள்ள,
பழனி. கந்தசாமி.
//எனவே முனைவர் பழனி.கந்தசாமி ஐயா அவர்கள் முன்பு போல தனது வலைத்தளத்தில் கருத்துரைப் பெட்டியை (COMMENTS BOX) வைக்கும்படி (இது அவரது தனிப்பட்ட விருப்பு என்ற போதிலும்) கேட்டுக் கொள்கிறேன்.)//
ReplyDeleteதங்களுடன் நானும் இதை அப்படியே வழிமொழிகிறேன்.
பழனி. கந்தசாமி said...
ReplyDelete//மற்றவர்களுக்குப் பின்னூட்டம் போடாமல் நான் மட்டும் பின்னூட்டப் பெட்டி வைத்திருக்கும்போது நண்பர்களின் பின்னூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் ஒரு வித குற்ற உணர்வினால் சஞ்சலப்பட்டது. //
அன்புள்ள ஐயா, இதில் தங்களுக்கு ஏதும் சஞ்சலமே வேண்டாம் ஐயா.
நானும் என் பதிவுக்கு வருகைதரும்/கருத்தளிக்கும் மற்ற அனைவரின் பதிவுகளுக்கும் செல்ல மனதால் விரும்பினாலும், அவ்வாறு செல்வது இல்லை.
அவ்வாறு செல்லாததனால் அவர்களில் பலரும் தங்கள் வருகையை அவர்களாகவே தவிர்த்தும் வருகிறார்கள்.
அதைப்பற்றியும் அடியேன் கவலைப்படுவது இல்லை.
ஏனெனில் நம் வாசிப்பு வட்டத்தை நம்மால் ஓரளவுக்கு மேல் விஸ்தரித்துக்கொள்ள நம்மால் [குறிப்பாக என்னால்] நிச்சயமாக இயலாது.
பிறர் பதிவுக்குப்போய் அதை முழுவதும் படிக்காமல் என்னால் ஏனோ தானோ என கருத்தளிக்கவும் என்னால் முடியவே முடியாது.
குறைவான பதிவுகளுக்கே சென்றாலும் அதை முழுவதுமாக ரசித்து ருசித்துப் படித்துவிட்டு, மனதுக்குப்பிடித்திருந்தால் மட்டுமே சற்றே வித்யாசமாகக் கருத்தளிக்க விரும்புபவன் நான்.
இதை நன்கு உணர்ந்தவர்கள் மட்டும் நம் பக்கம் வருகை தந்து கருத்தளித்தால் போதுமானது என நினைப்பவனும் நான்.
அதனால் எதைப்பற்றியும் கவலையே படாமல் தங்கள் பின்னூட்டப்பெட்டியினை திறந்து விடுங்கள் ஐயா.
அன்புடன் VGK
Please Open Comments Boz Aayya.
ReplyDeletePlease Open Comments Boz Aayya.
ReplyDeleteதமிழ் மணத்தில் எல்லா பதிவுகளுக்குமே ஆயுசு ஒரு நாள்தானே24 மணிநேரம் வரை இடுகைக்கள் இருக்கும். அதன் பின் வருகிற இடுகைகளுக்கு இடம் போய் விடும். தமிழ் மணத்தில் நான் இணைக்காமலேயே என் பதிவுகள் அண்மைக் காலத்தில் இணைக்கப் பட்டுவிடுகின்றன. காரண்ம் தெரிந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. டாக்டர் கந்தசாமி ஐயா இப்போதும் சில பதிவுகளுக்குப் போய் பின்னூட்டம் இடுகிறார். எழுதுவதின் தாக்கம் தெரியாமல் எழுதுவது கடினம் பின்னூட்டங்கள் உதவலாம்
ReplyDeleteநாட்டு நடப்புகளை அறிந்தேன்.
ReplyDelete(இணையப்பக்க)
மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்
தங்களது வேண்டுகோளையே எனது வேண்டுகோளாகவும் முன் வைக்கின்றேன்
ReplyDeleteதம +1
பெரியவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு,
ReplyDelete///வயதான என் இயலாமையைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என்றால் பின்னூட்டப் பெட்டியைத் திறந்து விடுகிறேன்.///
திறந்து விடுங்கள் ஐயா
பழனி கந்தசாமி ஸார் பதிவுகளை எப்படியும் படித்து விடுகிறேன். முதல் பதிவர் மாநாடு (ஈரோட்டிலா?) நடந்த சமயம் தொடங்கி அவர் தளம் செல்கிறேன்.
ReplyDeleteபின்னூட்டம் என்பதெல்லாம் மாயை என்ற பக்குவம் அவருக்கு இருக்கிறது. எனக்கு எப்போது வருமோ...! :))))))))))))
நான் நினைத்திருந்ததைத் தாங்கள் எழுதிவிட்டீர்கள். தங்களின் கருத்தே நம் நண்பர்கள் அனைவருடைய கருத்தாகவும் உள்ளது அறிந்து மகிழ்கின்றேன். ஐயா திரு பழனி கந்தசாமி அவர்கள் தன் பின்னூட்டப் பெட்டியைத் திறக்க என் வேண்டுகோளையும் முன் வைக்கிறேன்.
ReplyDeleteதம+1
ReplyDeleteஉங்கள் பதிவைப் பார்த்ததும்தான் அவர் பின்னூட்டப் பெட்டியை மூடியதே தெரிந்தது. என்னாலும் கூட ஓய்வின்மையால் பலரது பதிவுகளுக்குப் போய் படிப்பதும் பின்னூட்டமிடுவதும் இயலாமற் போய்விடுகிறது. அதற்காக பின்னூட்டப் பெட்டியை ஏன் மூட வேண்டும்?
ReplyDeleteநம்மால் பின்னூட்டம் இட இயலாமல் போனாலும் பின்னூட்டப் பெட்டியை திறந்து வைப்பது நல்லது.பெரும்பாலும் ஒரு பதிவுக்கு சராசரியாக 20 பின்னூட்டங்கள் கிடைக்கலாம் . நம் தொடரும் எல்லோருக்கும் சென்று பின்னூட்டம் இடுவது என்பது இயலாத காரியம். ஆனால் பதிவை கருத்திடுபவர்கள் தவிர ஏராளமான பேர்கள் வாசிக்கிறார்கள் ஸ்ரீராம் சொல்வது போல .கருத்துரைகள் தேவை இல்லை என்ற மனநிலை வர காலம் அதிகம் பிடிக்கும் .நமது பதிவுக்கு வருகை தந்தவர்களின் தளத்திற்கு முதலில் செல்வது பெரும்பாலோர் கடை பிடிக்கும் வழக்கமே.அது ஒரு நினைவு படுத்தலாக அமைகிறது எனப்து உண்மைதான். நமது வலைப் பக்கத்திற்கு அடிக்கடி வருகை தந்தவர்களின் வலைப் பக்கங்களுக்கு நாம் போக முடியாமல் இருப்பது ஒரு வித குற்ற உணர்வை தரும் என்பது உண்மைதான். பின்னூட்டம் இடாதவர்களின் வலைபக்கத்திற்கு செல்லக்கூடாது என்பதல்ல அதன் பொருள். கருத்திட்ட அத்தனை பேரின் வலை தளங்களுக்கு சென்று கருத்திடுவதே முடியாத காரியம் . நான் தமிழ் மணத்தில் என்னை கவர்ந்த தலைப்புகளாக இருந்தால் அந்த பக்கத்திற்கு சென்று படித்து விட்டு கருத்திடுவேன்.பெரும்பாலும் ஒரு வலைபக்கத்திற்கு சென்றால் படித்துவிட்டால் கருத்திடாமலோ வாக்களிக்காமலோ திரும்பியதில்லை. சில நேரங்களில் நெடு நாட்களாக நாம் போகாத வலைப் பக்கத்திற்கு செல்லவேண்டும் என்று நினைத்து போவதும் உண்டு.
ReplyDeleteவருவோர் வரட்டும் நாம் போகா விட்டாலும் கவலைப்பாடாமல் பின்னூட்டப் பெட்டியை திறந்து வைப்பதில் தவறு ஏதுமில்லை
நான் பதிவுகளுக்குச் சென்று படித்தால் 1) சிறு பின்னூட்டமாவது இடாமல் வருவதில்லை. 2) தமிழ்மணம் வாக்குப் பட்டை இருந்தால் வாக்களிக்காமல் வருவதில்லை!
ReplyDelete:)))
பின்னூட்ட பெட்டியை திறந்து விடுங்கள் ஸார்!
ReplyDeleteபின்னூட்டப் பெட்டியை வெகு சுலபமாக மூடிவிட்டேன். ஆனால் அதைத் திறக்கப் பார்க்கிறேன். முடியவில்லை. ஒரு பதிவு போடுகிறேன். யாரையாவது உதவிக்குக் கூப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
ReplyDeleteDD......
ReplyDeleteDD....
DD please...
You are wanted!
பழனி. கந்தசாமி said...
ReplyDelete//பின்னூட்டப் பெட்டியை வெகு சுலபமாக மூடிவிட்டேன். ஆனால் அதைத் திறக்கப் பார்க்கிறேன். முடியவில்லை.//
மூடுவது சுலபம் ..... திறப்பது கடினம். [நட்பையும் அன்பையும் போலவேதான் அதுவும்]
அதனால்தான் நான் இன்னும் என் பின்னூட்டப்பெட்டியை மூடாமல் திறந்தே வைத்துள்ளேன். :)
[ எனக்கு மூடவும் தெரியாது .... திறக்கவும் தெரியாது .... என்பது வேறு விஷயம் :) ]
காணாமல் போயிருந்த பின்னூட்டப் பெட்டி வந்து சேர்ந்து விட்டது.
ReplyDeleteமறுமொழி > பழனி. கந்தசாமி said...
ReplyDelete// அன்பு நண்பருக்கு, நான் பின்னூட்டப் பெட்டியை மூடினதிற்கு முக்கிய காரணம், என்னால் முன்பு போல் உங்களைப்போல் நல்ல நண்பர்களின் பதிவுகளுக்குச் சென்று பின்னூட்டம் போட இயலாமையினால்தான். அப்படி மற்றவர்களுக்குப் பின்னூட்டம் போடாமல் நான் மட்டும் பின்னூட்டப் பெட்டி வைத்திருக்கும் போது நண்பர்களின் பின்னூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் ஒரு வித குற்ற உணர்வினால் சஞ்சலப்பட்டது. கண்டனங்களைப் பார்த்து நான் எப்போதும் வருத்தப்பட்டதில்லை. //
அய்யா அவர்களின் அன்பான , நீண்டதோர் விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் உங்கள் கருத்துரைப் பெட்டியில் வரும் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் மறுமொழிகள் தர வேண்டியதில்லை. அதே போல, உங்களுக்கு பின்னூட்டம் எழுதியுள்ளார்களே என்பதற்காக கஷ்டப்பட்டு அவர்களுடைய பதிவுகளில் போய் கருத்துரை தர வேண்டியதில்லை. உங்களுடைய சூழ்நிலையில் இதை ஒரு குற்ற உணர்வாக எண்ண வேண்டாம். நாங்களும் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.
// வயதான என் இயலாமையைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என்றால் பின்னூட்டப் பெட்டியைத் திறந்து விடுகிறேன். //
வெறுமனே ஒரு பதிவினை வலைப்பதிவில், எழுதி வைத்து விட்டு, அதற்கு எதிர்வினை (கருத்துரை) என்னவென்று தெரியாமல், மேலும் மேலும் எழுதிக் கொண்டிருந்தால், அதில் சுவாரஸ்யம் இருக்காது. மேலும் எழுதுவதிலும் ஒரு பிடிப்பு இருக்காது. எனவே, நீங்கள் தாராளமாக உங்கள் கருத்துரைப் பெட்டியை திறந்து வைக்கலாம். எல்லாவற்றிற்கும் மறுமொழிகளை என்னைப் போன்றவர்கள் எதிர் பார்க்க மாட்டோம். நன்றி அய்யா! வாழ்த்துக்கள்!
(நான் வீட்டைவிட்டு வெளியே கடைவீதிக்கு செல்வதற்கு முன் அடித்து வைத்திருந்த மறுமொழி இது. இப்போது அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்களின் பதிவினில் கருத்துரைப் பெட்டி வந்து விட்டதாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.)
தமிழ் மணம் 5
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா.
நல்ல ஆலோசனையான கருத்து தங்களின் கருத்தை வரவேற்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் பதிவு ஒரு நல்ல முடிவை
ReplyDeleteஏற்படுத்திக் கொடுத்திருப்பது மகிழ்வளிக்கிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 9
ReplyDeleteநல்லதொரு வேலை செய்தீர்கள்...
ReplyDeleteஆனால் அவர் .com என்று மாற்ற வேண்டும்...
இப்படி ஒருவருக்கு ஒருவர் ஆதரவாய் பேசிக்கொள்ளும் பின்னூட்ட வாசிப்பு,பதிவின் கருத்துக்கு வழு சேர்க்கிறது! உங்கள் அன்புகண்டு பெருமிதமாய் இருக்கிறது அண்ணா! அய்யா பின்னூட்டப் பெட்டியை திறந்து விட்டார் போல:)) வாழ்த்துகள்!
ReplyDeleteபின்னூட்டப் பெட்டியை வெகு சுலபமாக மூடிவிட்டேன். ஆனால் அதைத் திறக்கப் பார்க்கிறேன். முடியவில்லை. ஒரு பதிவு போடுகிறேன். யாரையாவது உதவிக்குக் கூப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.//
ReplyDeleteநம் வலையுலக சித்தர் எப்போதும் உதவ முன் வந்து உதவும் திண்டுக்கல் தனபாலன் அவர்களை அழைத்தால் நொடியில் செய்து கொடுத்து விடுவார்.
உங்கள் ஆதரவான பதிவுக்கு வாழ்த்துக்கள். நானும் எல்லோர் பதிவுகளையும் பார்த்து கருத்திட முடிவது இல்லைதான். என்ன செய்வது முடிந்தவரை படித்து கருத்திடுகிறேன்.
முதலில் உங்களின் நல்ல மனதுக்கும் நல்லெண்ணத்துக்கும் பாராட்டுக்கள்! உலகத்தில் தொண்ணூறு சதவிகிதம் யார் எபப்டி போனால் என்ன என்பதாகத்தான் இருக்கிறது. உங்கள் முயற்சியால் எத்தனை பேர் இங்கே சகோதரர் பழனி கந்தசாமி அவர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்திருக்கிறார்கள்!
ReplyDeleteஇங்கு எல்லோரும் சொல்வது போல தினசரி வேலைகளினாலும் ஓய்வின்மையாலும் உடல் நலமின்மையாலும் நமக்கு வந்து பின்னூட்டம் அளிப்பவர்களுக்குக்கூட நம்மால் சரியான முறையில் பின்னூட்டம் அளிக்க முடிவதில்லை! சகோதரர் சொல்வது போல மனதில் குற்ற உணர்வு இருப்பது நியாயமானதே! ஆனாலும் நம் பதிவுகள் பலருக்கும் உபயோகமாக இருக்கிறதென்றால் இந்த குற்ற உணர்வை சிறிது பின் தள்ளி விட்டு நாம் உற்சாகமாக இயங்குதல் அவசியமாகிறது! இது நமக்கு நாமே ஆக்ஸிஜன் கொடுத்துக்கொள்கிற மாதிரி தான்!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1, 2, )
ReplyDeleteபல்வேறு பணிகளுக்கு இடையிலும் எனது வலைத்தளம் வந்து , அன்பான நீண்ட கருத்துரைகள் தந்த அன்புள்ள V.G.K அவர்களுக்கு நன்றி.
// நானும் என் பதிவுக்கு வருகைதரும்/கருத்தளிக்கும் மற்ற அனைவரின் பதிவுகளுக்கும் செல்ல மனதால் விரும்பினாலும், அவ்வாறு செல்வது இல்லை. அவ்வாறு செல்லாததனால் அவர்களில் பலரும் தங்கள் வருகையை அவர்களாகவே தவிர்த்தும் வருகிறார்கள். அதைப்பற்றியும் அடியேன் கவலைப்படுவது இல்லை. ஏனெனில் நம் வாசிப்பு வட்டத்தை நம்மால் ஓரளவுக்கு மேல் விஸ்தரித்துக்கொள்ள நம்மால் [குறிப்பாக என்னால்] நிச்சயமாக இயலாது.
பிறர் பதிவுக்குப்போய் அதை முழுவதும் படிக்காமல் என்னால் ஏனோ தானோ என கருத்தளிக்கவும் என்னால் முடியவே முடியாது.
குறைவான பதிவுகளுக்கே சென்றாலும் அதை முழுவதுமாக ரசித்து ருசித்துப் படித்துவிட்டு, மனதுக்குப்பிடித்திருந்தால் மட்டுமே சற்றே வித்யாசமாகக் கருத்தளிக்க விரும்புபவன் நான். இதை நன்கு உணர்ந்தவர்கள் மட்டும் நம் பக்கம் வருகை தந்து கருத்தளித்தால் போதுமானது என நினைப்பவனும் நான்.//
உங்களுடைய இந்த நடைமுறையைத்தான் அய்யா நானும் கடைபிடித்து வருகிறேன்.
மறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDeleteகருத்துரை தந்த நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. ( உங்களுடைய ஒரே கருத்துரை இரண்டுமுறை வந்துவிட்டதால், இரண்டில் ஒன்றை நீக்கி விடுகிறேன்)
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
// தமிழ் மணத்தில் நான் இணைக்காமலேயே என் பதிவுகள் அண்மைக் காலத்தில் இணைக்கப் பட்டுவிடுகின்றன. காரண்ம் தெரிந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.//
இதுபற்றி உங்களுடைய பதிவு ஒன்றில் நானும் கருத்து தெரிவித்துள்ளதாக நினைவு. ஆரம்பத்தில் தமிழ்மணத்தில் நான் சேர்ந்த புதிதில், எனது பதிவுகளும், தாமாகவே திரட்டிகளில் இணைந்தன. இதுபற்ரி விவரமாக திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ், டி.என். முரளிதரன் போன்றவர்களால்தான் சரியாகச் சொல்ல இயலும்.
// எழுதுவதின் தாக்கம் தெரியாமல் எழுதுவது கடினம் பின்னூட்டங்கள் உதவலாம் //
பின்னூட்டங்கள் பற்றிய உங்கள் அனுபவமொழிக்கு நன்றி.
மறுமொழி > kovaikkavi said...
ReplyDeleteசகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )
ReplyDeleteசகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்துரைகளுக்கு நன்றி.
மறுமொழி > ஸ்ரீராம். said... ( 1 )
ReplyDeleteஅன்புள்ள சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைகளுக்கு நன்றி.
மறுமொழி > சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said... (1, 2)
ReplyDelete// நான் நினைத்திருந்ததைத் தாங்கள் எழுதிவிட்டீர்கள். தங்களின் கருத்தே நம் நண்பர்கள் அனைவருடைய கருத்தாகவும் உள்ளது அறிந்து மகிழ்கின்றேன். //
ஆமாம் அய்யா. கருத்துரைப்பெட்டி இல்லாத பெரியவர் பழனி.கந்தசாமி அவர்களது பதிவுகளைப் படிக்க சற்று நெருடலாகவே இருந்தது. அதனால்தான் மனதில் பட்ட, எனது எண்ணங்களை எழுதி வைத்தேன். முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > கவிப்ரியன் கலிங்கநகர் said...
ReplyDeleteசகோதரர் கவிப்ரியன் கலிங்கநகர் அவர்களின் அன்பான வருகைக்கு நன்றி.
மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
ReplyDeleteகல்வி அதிகாரி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களின் நீண்ட தெளிவான கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > ஸ்ரீராம். said... ( 2 )
ReplyDelete// நான் பதிவுகளுக்குச் சென்று படித்தால் 1) சிறு பின்னூட்டமாவது இடாமல் வருவதில்லை. 2) தமிழ்மணம் வாக்குப் பட்டை இருந்தால் வாக்களிக்காமல் வருவதில்லை! //
அன்புள்ள சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் நடைமுறையை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நன்றி அய்யா
மறுமொழி > ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
ReplyDeleteஅய்யா அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > பழனி. கந்தசாமி said...
ReplyDelete// பின்னூட்டப் பெட்டியை வெகு சுலபமாக மூடிவிட்டேன். ஆனால் அதைத் திறக்கப் பார்க்கிறேன். முடியவில்லை. ஒரு பதிவு போடுகிறேன். யாரையாவது உதவிக்குக் கூப்பிட்டுத்தான் ஆகவேண்டும். //
நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் Settings – இல். Posts and Comments பகுதியில் சிறு திருத்தம் செய்தாலே போதுமானது. இவ்வளவு சிரமம் எதற்கு என்று தெரியவில்லை.
மறுமொழி > ஸ்ரீராம். said... (3)
ReplyDelete// DD...... DD.... DD please... You are wanted! //
நானும் உங்களோடு அழைக்கின்றேன். ( இப்போது எல்லாம் சரியாகி விட்டது என்று எண்ணுகிறேன் )
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 3 )
ReplyDeleteஅன்பினாலே உண்டாகும் இன்பவலை இந்த இணைய வலை. அன்புள்ள V.G.K அவர்களின் மூன்றாம் வருகைக்கு நன்றி.
மறுமொழி > பழனி. கந்தசாமி said...
ReplyDelete// காணாமல் போயிருந்த பின்னூட்டப் பெட்டி வந்து சேர்ந்து விட்டது. //
எல்லாம் நன்மைக்கே அய்யா.
ReplyDeleteமறுமொழி > KILLERGEE Devakottai said...
// தமிழ் மணம் 5 //
தமிழ்மணம் வாக்களிக்க, மறக்காமல் மீண்டும் வந்த நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > ரூபன் said...
ReplyDeleteகவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்.
மறுமொழி > Ramani S said... ( 1 , 2 )
ReplyDelete// உங்கள் பதிவு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது மகிழ்வளிக்கிறது பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள் //
கவிஞர் எஸ். ரமணி அய்யா அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// நல்லதொரு வேலை செய்தீர்கள்... ஆனால் அவர் .com என்று மாற்ற வேண்டும்... //
சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. அய்யா பழனி கந்தசாமி அவர்கள் Settings இல் ஒரு சிறு திருத்தம் செய்வதற்குப் பதிலாக. தமிழ்மணம் இணைக்கும் HTML Version இல் ஏதோ மாற்றம் செய்து விட்டார் என்று நினைக்கிறேன். நீங்கள்தான் அவருக்கு உதவ வேண்டும்.
மறுமொழி > Mythily kasthuri rengan said...
ReplyDeleteமணவை சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கள் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > கோமதி அரசு said...
ReplyDeleteசகோதரி கோமதி அரசு அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
// உங்கள் ஆதரவான பதிவுக்கு வாழ்த்துக்கள். நானும் எல்லோர் பதிவுகளையும் பார்த்து கருத்திட முடிவது இல்லைதான். என்ன செய்வது முடிந்தவரை படித்து கருத்திடுகிறேன். //
எல்லோருக்கும் கிட்டதட்ட இதே நிலைமைதான் சகோதரி அவர்களே. உங்களுக்கு சிரமம் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்.
மறுமொழி > மனோ சாமிநாதன் said...
ReplyDelete// சகோதரர் சொல்வது போல மனதில் குற்ற உணர்வு இருப்பது நியாயமானதே! ஆனாலும் நம் பதிவுகள் பலருக்கும் உபயோகமாக இருக்கிறதென்றால் இந்த குற்ற உணர்வை சிறிது பின் தள்ளி விட்டு நாம் உற்சாகமாக இயங்குதல் அவசியமாகிறது! இது நமக்கு நாமே ஆக்ஸிஜன் கொடுத்துக்கொள்கிற மாதிரி தான்! //
சகோதரி மனோ சாமிநாதன் அவர்களின் புதியதொரு உத்வேகமான கருத்துரைக்கு நன்றி.
நாங்கள் சமீபத்தில்தான் ஐயா அவர்களின் தளத்திற்குச் சென்றோம். அருமையான தளம். ஆனால் கருத்துப் பெட்டியைக் காணவில்லை. படித்துவிட்டு வந்து விட்டோம். காரணம் தெரியவில்லை. தங்கள் பதிவிலிருந்து காரணம் தெரிந்து கொண்டோம், அவரது பின்னூட்டத்திலிருந்தும். தற்போது திறந்துவிட்டார் ஐயா அவர்கள். தங்களது பதிவு அதற்கு வழி கோலியுள்ளது. மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும், திறந்த ஐயாவிற்கும்..
ReplyDelete
ReplyDeleteநான் ஊரில் இல்லாததால் தங்களின் இந்த பதிவை படித்து உடனே பின்னூட்டம் இட இயலவில்லை. எல்லோருடைய வேண்டுகோளையும் ஏற்று முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் பின்னூட்டப் பெட்டியை திறந்தது அறிந்து மகிழ்ச்சி. அதற்கு மூல கார்ணமான தங்களுக்கு நன்றி!
நல்ல வேலை செய்தீர்கள்....
ReplyDeleteஇப்போது அவரின் வலைப்பூவில் கருத்திட முடிகிறது....
நன்றி ஐயா.
உங்கள் பதிவு பார்த்து, அவரது தளத்திற்குச் சென்றால் காணாமல் போன பெட்டியுடன் அய்யா சிரித்துக் கொண்டிருந்தார்.. இருந்தாலும் பெட்டியில் சில வார்த்தைகளைப் போடடுவிட்டுத்தான் வந்தேன். நல்ல பணி செய்தீர்கள்.. நல்லது அய்யா.
ReplyDeleteமறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...
ReplyDeleteசகோதரர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களது கருத்துரைக்கும்
பாராட்டிற்கும் நன்றி.
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteஅய்யா V.N.S அவர்களது கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களது கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > Muthu Nilavan said...
ReplyDeleteஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்களது கருத்துரைக்கும்
பாராட்டிற்கும் நன்றி.