Monday, 16 February 2015

எனக்கு வந்த மோசடி குறுஞ்செய்தி (SCAM SMS)
இப்போதெல்லாம் மோசடி செய்பவர்கள் செல்போனை துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். அடிக்கடி மோசடியான எண்ணத்துடன் விளம்பரங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் (SMS)  வருகின்றன. சாதாரணமாக இதுமாதிரி வரும் “பெயரிலி (ANONYMOUS ) செய்திகளுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. ஏனெனில் லாட்டரியில் உங்களுக்கு கோடிக் கணக்கில் பரிசு விழுந்துள்ளது என்று செய்தி வந்தால் நம்பும்படியாகவா இருக்கிறது. அதுவும் வெளிநாட்டு லாட்டரியில். எனவே இதுமாதிரி வரும் குறுஞ்செய்திகளை (SMS) உடனுக்குடன் அழித்துவிடுவது வழக்கம்.
                                                                 

                                                                
சென்ற வாரம் 91 88 82 230415 என்ற எண்ணிலிருந்து, எனது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி (SMS) ஒன்று வந்தது. அதில் இருந்த செய்தி இதுதான்.

Pls contact me on this email: (c88@careceo.com) for a matter which requires your urgent attention but cannot be discussed over the phone. Sorry for my approach.

படித்தவுடனேயே இது ஒரு மோசடி குறுஞ்செய்தி (SCAM SMS) என்பது புரிந்து விட்டது. ஆனாலும் இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. சரி, யாரோ நம்மிடம் விளையாடிப் பார்க்கிறார்கள் என்று தெரிந்தது. இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக யார் என்று பார்க்க ஆர்வம் வந்தது. வழக்கம் போல நம்ம கூகிளில் (அப்புறம் GOOGLE  எதற்கு இருக்கிறது ) cc88careceo.com என்று கொடுத்து தேடிப் பார்த்தேன். அங்கே போய் பார்த்ததில் SCF எனப்படும் SCAM CALL FIGHTERS என்ற ( www.scamcallfighters.com)  இணையதளம் கண்ணில் பட்டது. அங்கே,

8882724325 என்ற எண்ணிலிருந்து உங்களை அழைத்தது யார்? உங்களை ஏமாற்றப் பார்க்கிறார்களா? இதுவும் ஒருவகை மோசடி அழைப்பா? மோசடிப் பேர்வழிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் “

என்று எச்சரிக்கை செய்தனர். இந்த செய்தி பற்றி சொல்ல வந்த, முதன்மை துப்பறிவாளர் இது மாதிரியான செய்திகளுக்கு, தெரிந்தோ தெரியாமலோ மறுமொழி (REPLY) ஒன்றை நீங்கள் அனுப்பினால், அவர்கள் பொய்யான சட்ட அறிவிப்பு (LEGAL NOTICE) ஒன்றினை உங்களுக்கு அனுப்பி, சிக்கலில் மாட்டி விட்டு பணம் பறிக்க முயலுவார்கள். என்று எச்சரிக்கை செய்கிறார்.

                                                            
உங்கள் செல்போனுக்கு மோசடியாக வரும் சில குறுஞ்செய்தி வார்த்தைகள் இவை. 

“Your mobile number has won $1.5 Million in  ... ...

“You have won $1000 … … Gift card. Enter code 5566 at ... ...

“You have been selected for interview with … … …”

“You have won a free cruise! Visit  website to claim your free cruise!”

மேலும் அந்த இணைய தளத்தில், இதுபோன்ற பல மோசடி குறுஞ்செய்திகளைப் பற்றியும், அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் நிறைய சொல்லி இருந்தார்கள். இந்த இணையதளம் சென்றால் இன்னும் அதிக விவரங்களைப் பார்க்கலாம்.

இது மாதிரியான மோசடிசெய்தி ஆசாமிகளிடமிருந்து தப்பிப்பது எப்படி? ஒரே வழி, இந்த மாதிரியான செய்திகளுக்கு மறுமொழி ஏதும் கொடுக்காமல், அவற்றை நீக்கி விடுவதுதான். எனவே நான் எனக்கு வந்த குறுஞ்செய்தியை யார் அனுப்பி இருப்பார்கள், எங்கே இருக்கிறார்கள், என்ன செய்வது என்று குழம்பாமல் மேற்கொண்டு தொடர்ந்து செல்லவில்லை. ஏனெனில் இவ்வாறு தொடர்ந்து செல்வது சிலசமயம் வேறு சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும். எனவே ஒரே முடிவாக எனக்கு வந்த மோசடி குறுஞ்செய்தியை வழக்கம் போல நீக்கி விட்டேன்.  41 comments:

 1. வணக்கம் நண்பரே...
  அங்காவது குறுஞ்செய்திதான் வருகிறது இங்கு தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுக்கின்றார்கள். தினம் தினம் மில்லியன் விழுந்து விட்டதென....

  ReplyDelete
 2. SMS மின்னஞ்சல்களை நான் சட்டை செய்வதில்லை

  ReplyDelete
 3. நல்லவேளை நீக்கி விட்டீர்கள். ... எத்தனை பேர் அதற்கெல்லாம் மீண்டும் அழைத்து வம்பில் மாட்டுவதும், பணம் கிடைக்கும் என்று காத்திருப்பார்களும் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 4. எனக்கும் இதுவரை எவ்வளவோ கோடி டாலர்கள் பரிசுகள் விழுந்துள்ளதாகச் செய்திகள் வந்து குவிந்துள்ளன. உடனுக்குடன் அவற்றை DELETE செய்து விடுவேன்.

  அதுபோல போனில் அழைத்து அறுப்பவர்களின் நம்பர்களை சேமித்து வைத்துக்கொள்வேன். அவற்றிற்கு USELESS CALL-1, USELESS CALL-2, USELESS CALL-3, USELESS CALL-4, USELESS CALL-5, USELESS CALL-6 ...... என பெயரும் கொடுத்து சேமித்துக்கொள்வேன்.

  மீண்டும் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தால்தான் எனக்கு, என் சேமிப்பினால் அது USELESS எனத் தெரிந்துவிடுமே. உடனே CUT பண்ணிவிடுவேன்.

  இந்த யோசனையை நீங்களும் கடைபிடிக்கலாம். முதலில் அந்த எண்ணை சேமிப்பதுதான் கொஞ்சம் சோம்பலான வேலையாக இருக்கும்.

  பிறகு அதனால் ஏற்படும் பயன்களோ மிக மிக அதிகம் ஆச்சே ! :)

  அன்புடன் VGK

  ReplyDelete
 5. வை கோ கி அவர்களின் யோசனை நல்லாத்தான் இருக்கு ..அதற்கு kk என்று சுருக்கமாய் பெயர் கொடுக்கலாம் :)(kk ன்னா தெரியும்தானே ?)
  த ம 3

  ReplyDelete
 6. நானும் வை. கோ அவர்களின்
  பாணியைத்தான் பின்பற்றுகிறேன்
  பயனுள்ள பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. எனக்கும் கூட மெர்சிடஸ் பென்ஸ் கார் கம்பெனியிலிருந்து ஒரு கோடி டாலர் விழுந்திருக்குன்னு மெசேஜ் வந்ததுங்க....

  ReplyDelete
 8. இந்தக் குப்பைகளை எல்லாம் பொருட்படுத்துவதே இல்லை..

  ஆயினும் -
  மற்றவர்களும் தெரிந்து கொள்வதற்கு பயனுள்ள தகவல்களுடன் இன்றைய பதிவு!.. வாழ்க நலம்!..

  ReplyDelete
 9. எச்சரிக்கையாக இருப்போம்
  சிறந்த வழிகாட்டல்
  தொடருங்கள்

  ReplyDelete
 10. எனக்கு ஒரு நப்பாசை இன்னும் இருக்கிறது. இம்மாதிரி செய்திகளில் ஏதாவது உண்மையாக இருக்காதா? நமக்கு சிலபல கோடிகள் கிடைத்தால் அம்பானி மாதிரி ஒரு வீடு கட்டிக் குடி போக மாட்டோமா? ஒரு பிஎம்டபிள்யு மார் வாங்கி ஒரு டிரைவர் போட்டு இந்தியா முழுவதும் சுற்ற மாட்டோமா? இப்படியெல்லாம் கனாக் கண்டு கொண்டிருக்கிறேன். என் எண்ணத்தில் இப்படி ஒரேயடியாக மண்ணை வாரிப்போட்டு விட்டீர்களே? இது நியாயமா?

  ReplyDelete
 11. பிஎம்டபிள்யு மார் = பிஎம்டபிள்யு கார் என்று திருத்திப் படிக்கவும். பிஎம்டபிள்யு காரில் போகும் கற்பனையில் இந்த எழுத்துப் பிழை வந்து விட்டது.

  ReplyDelete
 12. எனக்கும் இதுபோன்ற குறுஞ்செய்திகள் வருவதுண்டு. உடனே அவைகளை நீக்கிவிடுவேன். ஏமாற்று செய்திகள் பற்றி அறியஉதவும் தளம் பற்றிய தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 13. START 0 என்று 1909 என்கிற எண்ணிற்கு sms செய்தால் இது போன்ற எந்த ஒரு கால் மற்றும் எஸ்எம்எஸ் வராது. அப்படியே வந்தாலும் கஸ்டமர் கேர் க்கு போன் செய்து புகார் அளித்தால் இனிமேல் இவ்வாறு வராமல் தடுக்கப்படும் . அனைவரும் FULL DND ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 14. நான் குறும் செய்திகளைப் படிப்பதே இல்லை!

  ReplyDelete
 15. இது மாதிரியான மோசடிசெய்தி ஆசாமிகளிடமிருந்து தப்பிப்பது எப்படி? ஒரே வழி, இந்த மாதிரியான செய்திகளுக்கு மறுமொழி ஏதும் கொடுக்காமல், அவற்றை நீக்கி விடுவதுதான். எனவே நான் எனக்கு வந்த குறுஞ்செய்தியை யார் அனுப்பி இருப்பார்கள், எங்கே இருக்கிறார்கள், என்ன செய்வது என்று குழம்பாமல் மேற்கொண்டு தொடர்ந்து செல்லவில்லை. ஏனெனில் இவ்வாறு தொடர்ந்து செல்வது சிலசமயம் வேறு சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும். எனவே ஒரே முடிவாக எனக்கு வந்த மோசடி குறுஞ்செய்தியை வழக்கம் போல நீக்கி விட்டேன். //

  இது போன்ற செய்திகள் மொபைலில் மட்டுமல்ல நம் மின் அஞ்சலுக்கும் வருவதுண்டு. நாங்கள் அதை அப்படியே நீக்கி விடுவோம், நீங்கள் சொல்லி இருப்பது போல். ஒரு சிலர் அதைத் தொடர்ந்து பல சிக்கலில் மாட்டி உள்ளார்கள். நள்ள விழிப்புணர்வு பதிவு ஐயா! தாங்கள் கேட்டுள்ள அஷ்ரப் தாமரசேரியின் விலாசம் வந்த செய்தியில் இல்லை. நாங்களும் தேடிக் கொண்டிருக்கின்றோம். கிடைத்ததும் தருகின்றோம். நம் நண்பர் கில்லர் ஜி அவர்கள் அவரை நேரில் சந்திப்பதாகச் சொல்லியிருக்கின்றார்.

  நன்றி ஐயா!  ReplyDelete
 16. மறுமொழி > KILLERGEE Devakottai said... ( 1, 2 )

  சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. இங்கும், தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுக்கும் மார்க்கெட்டிங் தொந்தரவுகள் உண்டு. எல்லாவற்றையும் மீறித்தான் செல்போன் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.

  ReplyDelete
 17. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

  // SMS மின்னஞ்சல்களை நான் சட்டை செய்வதில்லை //

  நானும் இது மாதிரியான மின்னஞ்சல்களை மட்டும் சட்டை செய்வதில்லை சகோதரர் மூங்கிற் காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 18. மறுமொழி > ADHI VENKAT said...

  சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 19. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  நீண்டதொரு கருத்துரை தந்த அன்புள்ள V.G.K அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 20. மறுமொழி > Bagawanjee KA said...

  சகோதரர் கே ஏ பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 21. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )

  கவிஞர் எஸ். ரமணி அய்யாவுக்கு நன்றி.

  ReplyDelete
 22. மறுமொழி > ezhil said...

  சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 23. மறுமொழி > துரை செல்வராஜூ said...

  // இந்தக் குப்பைகளை எல்லாம் பொருட்படுத்துவதே இல்லை..
  ஆயினும் - மற்றவர்களும் தெரிந்து கொள்வதற்கு பயனுள்ள தகவல்களுடன் இன்றைய பதிவு!.. வாழ்க நலம்!.. //

  சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நானும் இது மாதிரியான செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. கடுமையான உடம்புவலி காரணமாக கடந்த சில நாட்களாக என்னால் நாற்காலியில் தொடர்ந்து உட்கார்ந்து எதனையும் படிக்கவோ எழுதவோ இயலவில்லை. எனவே வலைப்பக்கம் தொடர்ந்து எழுத முடியாமல் போய் விட்டது. வாசிப்பில் இடைவெளி விழுந்து விட்டது. இப்போது என்ன எழுதலாம் என்று யோசித்த வேளையில் வந்த குறுஞ்செய்தி இது என்பதால், எல்லோருக்கும் தெரிந்த தகவலைப் பற்றியே எழுதும்படி ஆகி விட்டது.

  ReplyDelete
 24. மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...

  சகோதரர் யாழ் பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete

 25. மறுமொழி > பழனி. கந்தசாமி said... ( 1 , 2 )

  அய்யா முனைவர் பழனி. கந்தசாமி அவர்க்அளின் நகைச்சுவையான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 26. எனக்கு சில நாட்களுக்கு முன் ஒரு அஞ்சல் வந்தது. என் பதிவுகளில் விளம்பரம் செய்யச் சொல்லி. நான் மறுபடி ஏதும் போடவில்லை. இப்போது இன்னொரு தலை வலி. யார் யாரோ என்னிடம் என்னிடம் தொடர்பு கொள்ள விரும்புவதுபோல் ஏராளமான அஞ்சல்கள்.. அறிமுகம் ஆன சிலரிடம் விசாரித்தால் அப்படி ஏதும் எழுதவில்லை என்கிறார்கள்.

  ReplyDelete
 27. இதுபோன்ற செய்திகள் அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் வந்து கொண்டேதான் இருக்கின்றன ஐயா
  ஆசைப் பட்டோமானால், முழுங்கி ஏப்பம் விட்டு விடுவார்கள்
  தம +1

  ReplyDelete

 28. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 29. மறுமொழி > Harish C said...

  சகோதரர் C ஹரிஷ் அவர்களின் தகவலுக்கு நன்றி.

  // START 0 என்று 1909 என்கிற எண்ணிற்கு sms செய்தால் இது போன்ற எந்த ஒரு கால் மற்றும் எஸ்எம்எஸ் வராது. அப்படியே வந்தாலும் கஸ்டமர் கேர் க்கு போன் செய்து புகார் அளித்தால் இனிமேல் இவ்வாறு வராமல் தடுக்கப்படும் . அனைவரும் FULL DND ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள் //

  நீங்கள் சொல்லும் செயல்முறை எல்லா மொபைல் போன் நிறுவனங்களுக்கும் பொருந்துமா?

  ReplyDelete
 30. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

  புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 31. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

  சகோதரர் தில்லைக்கது V துளசிதரன் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 32. மறுமொழி > G.M Balasubramaniam said...

  அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 33. மறுமொழி >கரந்தை ஜெயக்குமார் said...

  சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 34. பழனி ஐயாவின் கருத்துரையை ரொம்பவே ரசித்தேன்...

  ReplyDelete
 35. செய்தியைப் படிப்போம். பதில் கூறவேண்டாமே? ஓரளவு தப்பித்துவிட்டோம் என்ற மன நிறைவு இருக்குமல்லவா? பகிர்ந்தமைக்கு நன்றி. கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க எங்களுக்கு உதவும் பதிவு.

  ReplyDelete
 36. படித்தவுடன் கிழித்துவிடவும்.....
  கிழித்துவிடவும்= அழித்துவிடவும்.

  ReplyDelete
 37. ஐயா, இத்தகைய குறுஞ்செய்திகள், சபலம் கொண்டவர்களை குறி வைத்தே ஏவப்படுகின்றன. பெரும்பாலானோர் தப்பி விடுகின்றனர். சபலம் இருப்பவர்கள் மாட்டிக் கொள்கின்றனர். வெளியில் தெரிந்தால் அவமானம் என்ற பயமே, பல மோசடிகள் வெளியே தெரியாமல் இருப்பதற்கு காரணம். இதையெல்லாம் மீறித்தான், சைபர் கிரைம் போலீசில் வழக்குகள் பதிவாகின்றன.

  ReplyDelete
 38. சிலர் நம்பி ஏமாறுகின்றனர்... எச்சரிக்கை அளிக்கும் நல்லபதிவு இது.

  ReplyDelete