Monday 19 January 2015

மாற்றம் ஒன்றே மாறாதது



பெரும்பாலும் வீட்டில் குடும்பத்துடன் நான் டீவி பார்ப்பதில்லை. இதனால் பல திரைப்படங்களையும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்க்க இயலாமல் போய்விடும். முக்கிய காரணம், வேறொன்றுமில்லை. பிள்ளைகளோடு சேர்ந்து பார்க்குமளவுக்கு டீவி நிகழ்ச்சிகளும், படங்களும் இல்லை என்பதுதான். இதன் காரணமாக நான் தனியே டீவியில் படம் பார்த்தால் ஒன்று பாதிப் படமாக இருக்கும்; அல்லது படம் முடியும் தறுவாயில் இருக்கும். இதன் காரணமாக அண்மையில் ஜெயா டீவியில் ஒளி பரப்பிய கோச்சடையான் படத்தில் வரும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற பாடலையும் அது சார்ந்த சில காட்சிகளையும் மட்டுமே காண முடிந்தது. அப்புறம் வழக்கம் போல யூடியூப்பில் (YOUTUBE) அந்த பாடலை பார்த்தேன். இந்த பாடலில் வரும் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இந்த  பொன்மொழியை அடிக்கடி பத்திரிகைகளிலும் வலைப் பதிவுகளிலும் மேடைப் பேச்சுக்களிலும் பலர் சுட்டிக் காட்டுவதை பார்த்திருக்கலாம். ஆனால் இந்த வார்த்தையை சொன்னது யார் என்று சொல்வதில்லை.

என்றும் மாறாதது

ஆதியில் தொடங்கிய மனிதனின் நடை பயணம் இன்று பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கும் அதற்கு அப்பாலும் நீண்டு போய்க் கொண்டு இருக்கிறது. காலத்திற்கு தகுந்தவாறு மாறிக் கொண்டவர்களுக்கு பிழைப்பு கிடைத்தது. உதாரணத்திற்கு நம் நாட்டில் பார்ப்போம். கைரிக்‌ஷா போய் சைக்கிள் ரிக்‌ஷா வந்தது. அப்புறம் ஆட்டோவாக மாறியது. இந்த தொழில் செய்தவர்களில் மாற இயலாதவர்கள் காணாமல் போனார்கள். பல இடங்களில் சுனாமி வந்தது வாரி சுருட்டியது. இதில் பலநாட்டின், பலருடைய வாழ்க்கை முறையே மாறிப் போனது. இன்னும் கம்ப்யூட்டர் , செல்போன் என்று எவ்வளவோ மாற்றங்கள் மனித வாழ்வில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆக மாற்றம் ஒன்றே மாறாதது.   

ஹெராகிளிடஸ் (HERACLITUS)

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இந்த பொன்மொழியைச் சொன்னவர் ஹெராகிளிடஸ் (HERACLITUS)என்ற கிரேக்க அறிஞர். (படம் மேலே) இவர் கிரேக்கத்தில் சொன்னதை ஆங்கிலத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது (Change is the only immutable) மற்றும்மாற்றம் ஒன்றே நிலையானது  (Change is the only constant) என்று இரண்டு விதமாக மொழிபெயர்த்தனர். இன்னும் சிலர் There is nothing permanent, except Change” என்றும் எழுதினர்.

ஹெராகிளிடஸ், Ephesus  என்ற நகரில் (இது ஆசியா மைனர் என்ற இடத்தில், தற்போதைய துருக்கி நாட்டில் உள்ளது) ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திரமான சிந்தனையாளர். உலகளாவிய ஒரு சக்தியின் மேல் நம்பிக்கை உள்ளவர். தனிமை விரும்பி. புலம்பல் ஞானி (Weeping Philosopher) என்று அழைக்கப்பட்டவர். தனக்கென்று பின்தொடரும் மாணவர் பட்டாளம் ஏதும் இல்லாதவர். இவரது காலம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் (கி.மு 535 கி.மு 475) ஆகும்.

இந்த பொன்மொழி பிரபலமானது எப்படி?


பராக் ஒபாமா (BARACK OBAMA) அவர்கள் 2008 - இல் அமெரிக்க குடியரசுத் தலைவராக வந்தார். (இப்போது இரண்டாம் முறை) அப்போது தனது உரை ஒன்றில் மாற்றம் தேவை என்று உரையாற்றினார். அன்றுமுதல் இந்த பொன்மொழியும் ஊடகங்களில் கூடவே சேர்ந்து பிரபலமாயிற்று.

பாடல் வரிகள் மற்றும் வீடியோ:
       

ரஜினி வசனம்:
எதிரிகளை ஒழிக்க
எத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு

குழு:
உண்மை உருவாய் நீ
உலகின் குருவாய் நீ
எம்முன் வருவாய் நீ
இன்மொழி அருள்வாய் நீ
உன் மார்போடு காயங்கள்
ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள்
நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே
மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

ரஜினி வசனம்:
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு

பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்

பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது

பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது
சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனை ஜெயிப்பாய்

நீ என்பது உடலா? உயிரா? பெயரா?
மூன்றும் இல்லை செயல்

குழு:
உடலா உயிரா பெயரா நீ ?
மூன்றும் இல்லை செயலே நீ
விதியை அமைப்பது இறைவன் கையில்
அந்த விதியை முடிப்பது உந்தன் கையில்

உன் வில்லோடு வில்லோடு
வீரம் கொடு
உன் சொல்லோடு சொல்லோடு
மாற்றம் கொடு
மாற்றம் ஒன்று தான் மாறாதது

ரஜினி வசனம்:
நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?

நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

பெற்றோர்கள் அமைவது விதி;
நண்பர்களை அமைப்பது மதி

சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்

நண்பா.. எல்லாம் கொஞ்ச காலம்

குழு:
உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்…!

மாற்றம் ஒன்றுதான் மாறாதது..

பாடல்: வைரமுத்து  - படம்: கோச்சடையான்
இசை: A.R.ரகுமான்
பாடியவர்கள்: ரஜினிகாந்த், ஹரிசரண்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது” - என்ற என்ற இந்த பாடலை, கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் (YOUTUBE) இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)



கட்டுரை எழுத துணை நின்றவை (நன்றியுடன்):
கோச்சடையான் பாடல் வரிகள்

                      (ALL PICTURES - COURTESY: "GOOGLE IMAGES")

  

36 comments:

  1. இதை ஒட்டித்தான் ,மாறுதல் வரும் என்பதில் மாறுதலே இல்லை என்று காரல் மார்க்ஸ் சொன்னதும் !
    த ம 1

    ReplyDelete
  2. மாற்றங்கள் அனைத்தையும் மிக அருமையாகவும் பொறுமையாகவும் அலசி ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். தங்களின் இன்றைய எழுத்துக்களிலேயே என்னால் ஒரு உன்னதமான மாற்றத்தை உணரமுடிகிறது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    கடைசியில் கொடுத்துள்ள பாடல் வரிகளில் பலவும் அருமையாக உள்ளன.

    வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. தங்களிடமிருந்து புதுமையான பதிவுதான்....
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  4. ஒரு சிறிய பாடல் வரிகளைக் கொண்டு அதன் விளக்கத்தை தேடி அருமையாக பகிர்ந்தமை சிறப்பு! பாடலையும் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  5. ரசித்தேன். ஒரு பொன்மொழியின் மூலம் அறிந்தேன்.

    ReplyDelete
  6. நல்ல அலசல்...ஐயா

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல்.இதை சென்னது யாரோ கம்யூனிஸ்டு தலைவர் என்று நினைச்சிருந்தேன்.

    ReplyDelete
  8. நீ ஓட்டம் பிடித்தால்
    துன்பம் உன்னைத் துரத்தும்
    எதிர்த்து நில்
    துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

    பொறுமை கொள்
    தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
    அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்

    நண்பரே!
    கவிஞர். வைரமுத்துவின் வைர வரிகளை பட்டைத் தீட்டித் தந்த உமது தின் தோளினைதட்டிக் கொடுத்து பாராட்ட வேண்டும் போல் உள்ளது! அருமை!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  9. தெரிந்த வார்த்தைகள்
    ஆனால தெரியாத செய்திகள்
    அறிந்து கொண்டேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  10. நல்ல அலசல். பயனுள்ள செய்திகளை அறிந்தேன். வாழ்வில் உணர்ந்து அறிந்து பயன்படுத்தவேண்டியவை. நன்றி.

    ReplyDelete
  11. தெரிந்த சொற்றொடர்.தெரியாத தகவல்கள். விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி! கவியரசர் வைரமுத்துவின் வைரவரிகளை, இசைப்புயல் A.R. ரகுமானின் இசையில் கேட்க இணைப்புத் தந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி >Bagawanjee KA said...

    // இதை ஒட்டித்தான் ,மாறுதல் வரும் என்பதில் மாறுதலே இல்லை என்று காரல் மார்க்ஸ் சொன்னதும் ! த ம 1 //

    கார்ல் மார்க்ஸ் சொன்ன மேற்கோளுடன், கருத்துரை தந்த சகோதரர் கே ஏ பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  13. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ளம் கொண்ட V.G.K அவர்களின் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  14. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    // தங்களிடமிருந்து புதுமையான பதிவுதான்....
    தமிழ் மணம் 2 //

    நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  15. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

    // ஒரு சிறிய பாடல் வரிகளைக் கொண்டு அதன் விளக்கத்தை தேடி அருமையாக பகிர்ந்தமை சிறப்பு! பாடலையும் பகிர்ந்தமைக்கு நன்றி! //

    ஏற்கனவே எனக்கு தெரிந்த செய்திகளுடன் கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை வரிகளை மேற்கோள் செய்தேன் அவ்வளவுதான். சகோதரர் தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  16. மறுமொழி > பழனி. கந்தசாமி said...

    // ரசித்தேன். ஒரு பொன்மொழியின் மூலம் அறிந்தேன். //

    முனைவர் அய்யா பழனி. கந்தசாமி அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  17. மறுமொழி > R.Umayal Gayathri said...

    சகோதரிக்கு நன்றி.

    ReplyDelete
  18. மறுமொழி > வேகநரி said...

    // பயனுள்ள தகவல்.இதை சென்னது யாரோ கம்யூனிஸ்டு தலைவர் என்று நினைச்சிருந்தேன். //

    வேகநரி அவர்களுக்கு நன்றி. மேலே சகோதரர் கே ஏ பகவான்ஜீ அவர்களது கருத்துரையையும், அதற்கான எனது மறுமொழியையும் பார்க்கவும்.

    ReplyDelete
  19. மறுமொழி > yathavan nambi said...

    // நீ ஓட்டம் பிடித்தால்
    துன்பம் உன்னைத் துரத்தும்
    எதிர்த்து நில்
    துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

    பொறுமை கொள்
    தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
    அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்

    நண்பரே! கவிஞர். வைரமுத்துவின் வைர வரிகளை பட்டைத் தீட்டித் தந்த உமது தின் தோளினைதட்டிக் கொடுத்து பாராட்ட வேண்டும் போல் உள்ளது! அருமை!
    நட்புடன், புதுவை வேலு //

    நண்பர் யாதவன் நம்பி அவர்களின் பாராட்டிற்கும் கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை வரிகளை ரசித்தமைக்கும் நன்றி.

    ReplyDelete
  20. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

    // தெரிந்த வார்த்தைகள் ஆனால தெரியாத செய்திகள்
    அறிந்து கொண்டேன் ஐயா நன்றி தம 3 //

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. அடுத்து உங்களது நூல் ஒன்றினைப் பற்றிய எனது அறிமுகத்தினையும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

    ReplyDelete
  21. பாடல் வரிகள் நன்று...

    அறியாத தகவலுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  22. வழக்கமாகச் சொல்லப்படும் ஒரு வரியை எடுத்துக் கொண்டு அதை விரிவாக விளக்கி ....அருமை!

    ReplyDelete
  23. மறுமொழி > Dr B Jambulingam said...

    // நல்ல அலசல். பயனுள்ள செய்திகளை அறிந்தேன். வாழ்வில் உணர்ந்து அறிந்து பயன்படுத்தவேண்டியவை. நன்றி. //

    முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  24. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // தெரிந்த சொற்றொடர்.தெரியாத தகவல்கள். விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி! கவியரசர் வைரமுத்துவின் வைரவரிகளை, இசைப்புயல் A.R. ரகுமானின் இசையில் கேட்க இணைப்புத் தந்தமைக்கும் நன்றி! //

    அய்யா V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  25. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // பாடல் வரிகள் நன்று... அறியாத தகவலுக்கு நன்றி ஐயா... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  26. மறுமொழி > சென்னை பித்தன் said...

    // வழக்கமாகச் சொல்லப்படும் ஒரு வரியை எடுத்துக் கொண்டு அதை விரிவாக விளக்கி ....அருமை! //

    மூத்த வலைப்பதிவர் அய்யா சென்னை பித்தன் அவர்களின் ஊக்கம் தரும் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  27. ஒரு தலைப்பை எடுத்துகிட்ட இவ்ளோ டெடிகேசன் கொடுத்து எப்படி சிறப்பா செய்வதுன்னு உங்க கிட்ட தான் கத்துக்கணும் அண்ணா! செம! செம!

    ReplyDelete
  28. அருமையான கட்டுரை. எப்படி விடுபட்டது என்று தெரியவில்லை....மாற்றம் ஒன்றே மாறாதது என்று அடிக்கடிச் சொல்லப்படும் வாசகத்தைச் சொன்னவர் யார் என்பதிலிருந்து ரஜனி வரை ....இந்த வாசகம் ஒபாமாவினால் இன்று பிரபலம் அடைந்திருக்கலாம் ஐயா. எங்கள் கல்லூரிக் காலத்திலேயே இதை எங்கள் பேராச்ரியர் சொல்லியிருக்கின்றார். அதைச் சொன்னவரின் பெயரையும்....னீங்கள் இங்கு குறிப்பியது எங்களது நினைவுகளையும் தூண்டிவிட்டது ஐயா. அருமையான கட்டுரை.

    ReplyDelete


  29. இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு,


    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    ReplyDelete
  30. மறுமொழி > Mythily kasthuri rengan said...

    சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களின் பாராட்டுரைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete

  31. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    அன்பு சகோதரர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களின் பாராட்டுரைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  32. மறுமொழி > yathavan nambi said...

    சகோதரர் யாதவன் நம்பி (புதுவை வேலு) அவர்களுக்கு வணக்கம்.

    // WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM //

    உங்கள் வலைத்தளம் சென்று கருத்துரையும் தந்து விட்டேன். எப்போதும் இணைய முகவரிகளை (web address) ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது , சின்ன எழுத்துக்களில் (small letters) குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும். நன்றி. மீண்டும் உங்கள் வலைப்பக்கம் வருவேன்.

    ReplyDelete
  33. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    ReplyDelete
  34. நண்பரே தங்களின் புகைப்படம் உள்ள எனது பதிவு பேசு மனமே பேசு.

    ReplyDelete