Thursday, 1 January 2015

புத்தாண்டு பிறந்தது! (2015)புத்தாண்டு பிறந்தது!  (2015)


புத்தாண்டு பிறந்தது! ஆங்கிலப்
புத்தாண்டு பிறந்தது!


புத்தாண்டை வரவேற்கும்
காலை வழிபாடு
சர்ச்சுகளில் மட்டுமா எங்கள்
ஊர் ஆலயங்கள் 
அனைத்திலும் தான்.


இந்த புத்தாண்டு தினத்தில்!
வைகுண்ட நாதருக்கும்
வந்து விட்டது ஆசை
இன்றே வைகுண்ட ஏகாதசி!


வண்ண வண்ண கேக்குகள் வகை
வகையாய் ஐஸ்கிரீம்கள் என்றே
வழிந்தோடும் பேககரிகள்.

மட்டன் பிரியாணி
சிக்கன் பிரியாணி
முட்டை பிரியாணி - என்றே
கமகமக்கும் விடுதிகள்


சைக்கிள் பூக்கூடைகளில்
புதிதாய் வந்த செய்தியென
மல்லிகை, முல்லை, செவ்வந்தி,
என்றே அடுக்கி வைக்கப்பட்ட
மலர்ப் பந்துகள் - கிறங்க வைக்கும்.
ஒற்றை ரோஜாவை தேடிய
இளைஞனுக்கும் ஏமாற்றமில்லை! 

வலைப் பதிவர்களின்
வாழ்த்துக்களுக்கும்
பஞ்சமில்லை!
நெஞ்சார வாழ்த்துங்கள்
வாயார சொல்லுங்கள்
அனைவருக்கும் ஆங்கில
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
 


                                            ( ALL PICTURES THANKS TO GOOGLE)26 comments:

 1. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா !

  ReplyDelete
 2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அற்புதமான கவிதையுடன்
  வருடத்தின் முதல் பதிவு கொடுத்தது
  மகிழ்வளித்தது

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  அன்புடன் DD...

  ReplyDelete
 5. இதற்கு முந்தைய பதிவினில் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த,

  அன்புள்ள V.G.K (வை.கோபால கிருஷ்ணன்),
  ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார்,
  சகோதரி அம்பாள் அடியாள்,
  சகோதரர் திண்டுக்கல் தனபாலன்,
  சகோதரி ரஞ்சனி நாராயணன்,
  நண்பர் யாதவன் நம்பி,
  நண்பர் தில்லைக்கது V துளசிதரன் மற்றும் சகோதரி கீதா,
  சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன்,
  நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி,
  சகோதரர் வெங்கட் நாகராஜ்,
  ஆசிரியர் S.மது (மகிழ்தரு)

  ஆகிய அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 6. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 7. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 8. புத்தாண்டு மகிழ்ச்சியுடன் தொடங்கட்டும். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அன்புள்ள ஐயா, வணக்கம். தங்களை சந்தித்து ஓராண்டு ஆகிவிட்டது. 2014ல் சந்தித்தோம். 2015 டயரியில் தினமும் உங்களை நான் நன்றியுடன் நினைவு படுத்திக்கொள்வேன். :)

  அனைவருக்கும் – ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  அன்புடன் VGK

  ReplyDelete
 10. இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள் இளங்கோ சார். சிலகால இடைவெளிக்குப்பின் மீண்டும் பதிவுலகில் ஒரு புத்தாண்டுப் பிரமாணத்துடன் பதிவு எழுதி இருக்கிறேன். உங்கள் புத்தாண்டு கவிதையில் காணும் மங்களம் எங்கும் தங்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 11. இறைவனை வணங்கி, கேக் சாப்பிட்டு, புஷ்பம் எடுத்துக்கொண்டேன் நண்பரே...
  இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. வணக்கம்!

  பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

  புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
  சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
  தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
  நானுாறும் வண்ணம் நடந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 13. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. புத்தாண்டு பரிசாக
  புதுக் கவிதை
  படைத்தீர்கள்!
  வைகுந்த நாதனின்
  ஆசையை அழகுற
  சொன்னீர்கள்!
  அகிலமும் கொண்டாடடும்
  ஆங்கிலப் புத்தாண்டுகவிதை
  இன்பத் தேன்!
  ரசித்தேன்!
  நன்றி!
  புதுவை வேலு

  ReplyDelete
 16. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா....

  ReplyDelete
 17. வணக்கம்
  ஐயா.
  கவிதையை இரசித்தேன்... பகிர்வுக்கு நன்றி
  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 18. நானும் வாழ்த்துகிறேன்;புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 19. இந்த பதிவினில், கருத்துரையும் புத்தாண்டு (2015) வாழ்த்துக்களும் தந்த,

  சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
  கவிஞர் எஸ்.ரமணி
  சகோதரர் திண்டுக்கல் தனபாலன்.
  சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ.
  சகோதரர் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்,
  சகோதரர் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று,
  அய்யா V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்),அய்யா G.M B,
  நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி,
  அய்யா கவிஞர் கி. பாரதிதாசன்
  அய்யா V.N.S (வே.நடனசபாபதி),
  எழுத்தாளர் கே. பி. ஜனா,
  சகோதரர் யாதவன் நம்பி (புதுவை வேலு),
  சகோதரர் ஸ்கூல் பையன்,
  கவிஞர் ரூபன்,
  அய்யா சென்னை பித்தன்,

  ஆகிய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். (வெளியே டவுனுக்கு சென்று விட்ட படியினால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே மறுமொழி கூற இயலாமல் போய்விட்டது. மன்னிக்கவும்)


  ReplyDelete
 20. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. வித்தியாசமான பாணியில் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கண்டேன். வலைப்பூ பதிவுகள் மூலமாக நட்பினைத் தொடர்வோம்.

  ReplyDelete
 22. வலைப் பதிவர்களின்
  வாழ்த்துக்களுக்கும்
  பஞ்சமில்லை!----- பஞ்சமில்லா நிலை தொடரட்டும்

  ReplyDelete
 23. தங்களுக்கும் தங்கல் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய, மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!!

  அன்புடனும், நட்புடனும்

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 24. கவிதையாய் ஒரு வாழ்த்து! நன்று....

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. இந்த பதிவினில், மேலும் கருத்துரையும் புத்தாண்டு (2015) வாழ்த்துக்களும் தந்த,

  சகோதரி மனோ சாமிநாதன்,
  முனைவர் D. ஜம்புலிங்கம்,
  தோழர் வலிப்போக்கன்,
  சகோதரர் தில்லைக்கது V. துளசிதரன் மற்றும் கீதா,
  சகோதரர் வெங்கட் நாகராஜ்,

  ஆகிய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.


  ReplyDelete