Monday 1 September 2014

முதல் கமெண்ட் காக்காய்க்கு


எனது சின்ன வயதில் திருச்சி டவுனில் குடியிருந்தோம். நாங்கள் குடியிருந்த பகுதியில் கடைத் தெருவில்,  பிளாட்பாரத்தில் ஒரு பாட்டி பலகாரக்கடை ஒன்றை வைத்து இருந்தார். அவர் கடையில் இனிப்பு சுழியம், உளுந்த வடை, பருப்பு வடை, முறுக்கு, மற்றும் வாழைக்காய் பஜ்ஜி கிடைக்கும். பிளாஸ்டிக் புழங்காத நேரம். நான்காக கிழிக்கப்பட்ட தமிழ் செய்தித் தாளில் பலகாரங்களை கட்டிக் கொடுப்பார். அந்த பாட்டி காலை எட்டு மணிக்கு வந்து பிளாட்பாரத்தில் கடையைப் போட்டு கொதிக்கும் வாணலியில் பலகாரங்களை சுடத் தொடங்குவார். எப்போதும் முதலில் சுடுவது இனிப்பு சுழியம்தான். வாண்லியில் இருந்து எடுத்தவுடன், சிறிது ஆறியவுடன் முதலில் சுட்ட அவற்றிலிருந்து ஒரு பலகாரத்தை எடுத்து, பிய்த்து, கடைக்கு மேல் இருக்கும் கூரையில் போடுவார். வேறு யாருக்கு காக்கையாருக்குத்தான். அதற்கு அப்புறம்தான் காசுக்கு வியாபாரம்.

( நம்ப V.G.K சார் (வை.கோபாலகிருஷ்ணன்) பஜ்ஜீன்னா பஜ்ஜி தான் http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html  என்று ஒரு பதிவு போட்டிருக்கார். அவரைப் போல என்னால் நகைச்சுவையாக இங்கு பலகாரக் கடையை போட முடியவில்லை என்பது எனக்குள்ள ஏக்கம்தான்)


முன்பெல்லாம் ப்ளாக்கரின் (BLOGGER) கருத்துரைப் பெட்டியில் (COMMENTS BOX ) நமது பின்னூட்டத்தை போட்டவுனேயே சரியாகப் போய்ச் சேர்ந்து விடும். வலைப்பதிவாளர் COMMENTS MODERATION  வைத்து இருந்தால் Your comment will be visible after approval என்று காட்டும். வைக்காமல் இருந்தால். Your comment was published என்று காட்டும்.. ஆனால் இப்போதெல்லாம் ப்ளாக்கரில் (BLOGGER)  நிறைய மாற்றங்கள்  செய்வதாலோ என்னவோ, நாம் முதலில் போடும் கமெண்ட்டில் எந்தவிதமான அடையாளமும் தெரிவதில்லை. கருத்துரை சரியாகப் போய்ச் சேர்ந்ததா இல்லையா என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரில் ப்ளாக்கரில் திறந்து எழுதும் முதல் கருத்துரை எங்கே போய்ச் சேருகிறது என்றே தெரியவில்லை. காக்காய்க்கு பாட்டி போட்ட முதல் பலகாரம் போன்று முதல் கமெண்ட் காக்காய்க்கு என்றுதான் நினைத்துக் கொள்வேன்.

இதனாலேயே சிலசமயம் நான் ஒரே பதிவிற்கு இரண்டு அல்லது மூன்று முறை பின்னூட்டம் எழுதிய அனுபவம் உண்டு. COMMENTS MODERATION  வைத்து இருக்கும் சில பதிவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டு பதிவாகும் ஒரே கருத்துரையை சிலசமயம் நீக்குவதில்லை. அது மாதிரி சமயங்களில், அவர்கள் அந்த கருத்துரையை வெளியிடும் வரை காத்திருந்து, நானே அந்த பதிவிற்கு சென்று நீக்க வேண்டியதாகிவிடும். சிறிய கருத்துரை என்றால் பரவாயில்லை. சிறிது நீண்ட கருத்துரை என்றால் அதனையே மீண்டும் தட்டச்சு செய்யும்போது ஒரே எரிச்சலாகி விடும். நல்ல வேளையாக நான் எப்போதும் எழுதும் எந்த  பதிவினையும், கருத்துரைகளையும் MICROSOFT WORD – இல் டைப் செய்து கொண்டு COPY AND PASTE முறையில் வெளியிடுவதுதான் வழக்கம். இதனால் சலிப்பு ஏற்படுவதில்லை.


எனவே ப்ளாக்கரில் ஒரு பதிவிற்கு பின்னூட்டம் எனப்படும் கருத்துரை எழுதும் நண்பர்கள், முதல் பின்னூட்டம்  சரியாகப் போய்ச் சேர்ந்ததா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.


(PICTURES THANKS TO GOOGLE)
 

  

31 comments:

  1. MICROSOFT WORD – இல் டைப் செய்து கொண்டு COPY AND PASTE முறையில் வெளியிடுவதுதான் வழக்கம். இதனால் சலிப்பு ஏற்படுவதில்லை.
    இது நல்ல பழக்கமே ஐயா நானும் தொடக்கம் முதல் இப்படித்தான் செய்கிறேன், எனது மௌன மொழி கவிதை படிக்கவும் நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    பல நாட்கள் சிந்தித்து இருந்த கருத்தை மிகத் தெளிவாக எழுதியுள்ளீர்கள் எனது வலைப்பூவுக்கும் இப்படி இருமுறை கருத்துப் போட்டதை பார்க்க முடிந்தது.. பகிர்வுக்கு நன்றி ஐயா.
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சில சமயங்களில் பிளாக்கர் காக்கா கருத்துகளைத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறது தான்!

    MS Word-ல் தட்டச்சு செய்து கொள்ளும் உங்கள் வழி நல்ல வழி!

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா. தாங்கள் சொல்வது முற்றிலும் சரியே.

    பலரின் பின்னூட்டங்கள் எனக்குக் கிடைப்பதில்லை.

    இதை என் கவனத்திற்கு அவ்வப்போது திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் மற்றும் திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் ஆகிய இருவரும் கொண்டு வந்துள்ளனர். எனக்கும் என்ன செய்வது என்றே புரியாமல் மனதுக்கு வருத்தமாகவே உள்ளது.

    நான் பிறருக்கு அனுப்பும் பின்னூட்டங்களை தங்களைப்போலவே வேறு ஒரு இடத்தில் தட்டச்சு செய்து சேமித்துக்கொண்ட பிறகே அனுப்பி வருகிறேன்.

    மிகவும் பயனுள்ள ஆலோசனைகள். இதை எல்லோருமே பின்பற்றினால் நல்லது.

    அன்புடன் VGK

    ReplyDelete
  5. என்னுடைய நகைச்சுவைப்பதிவான ‘பஜ்ஜி’யின் இணைப்பினைக்கொடுத்து பாராட்டிச் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி, ஐயா.

    அன்புடன் VGK

    ReplyDelete
  6. சமீப நாட்களாக எனக்கு மட்டுமல்ல ,என் தளத்தில் கமெண்ட் போடுபவர்களுக்கும் இம்மாதிரி பிரச்சினைதான் !அனைவரும் கடைப் பிடிக்க வேண்டிய நல்ல ஆலோசனை நீங்கள் கூறியிருப்பது !
    த ம 3

    ReplyDelete
  7. சிறந்த யோசனை ஐயா
    இனி இம்முறையினையேப் பின்பற்றுவேன்
    நன்றி

    ReplyDelete
  8. ஆமாம் ஐயா. பின்னூட்டங்கள் பல நேரங்களில் திரும்ப எடுத்துப் பார்க்கும் போது காணாமல் தான் இருக்கிறது... அதை திரும்பவும் போடாமல் தான் விடுகிறேன்... படித்தவுடன் போட நினைப்பதும்.... பிறகு போடுவதும் எண்ணத்தில் மாறுபாடானது போல் தோன்றுவதால் அப்படியே விட்டுவிடுகிறேன். இனி word -ல் போட்டுப் பழக வேண்டும்... நன்றி ஐயா.

    ReplyDelete
  9. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > ரூபன் said...

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்! தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1 )

    அன்புள்ள V.G.K அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  13. நல்ல யோசனை.

    பாட்டி முதலில் பலகாரத்தை காக்காவிற்கு போடுவது நல்ல பழக்கம்.

    ReplyDelete
  14. அய்யா எனது பின்னூட்டம் சரியாக வருகிறதா ?

    ReplyDelete
  15. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // என்னுடைய நகைச்சுவைப்பதிவான ‘பஜ்ஜி’யின் இணைப்பினைக்கொடுத்து பாராட்டிச் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி, ஐயா.//

    அன்புள்ள V.G.K அவர்களுக்கு நன்றி! பலகாரக் கடையைப் பற்றி எழுதி வரும்போது நீங்கள் போட்ட பஜ்ஜிக் கடை நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  16. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > Bagawanjee KA said...

    க்ருத்துரை சொன்ன சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )

    கரந்தை ஆசிரியருக்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > ezhil said...

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // ஆமாம் ஐயா. பின்னூட்டங்கள் பல நேரங்களில் திரும்ப எடுத்துப் பார்க்கும் போது காணாமல் தான் இருக்கிறது... அதை திரும்பவும் போடாமல் தான் விடுகிறேன்... படித்தவுடன் போட நினைப்பதும்.... பிறகு போடுவதும் எண்ணத்தில் மாறுபாடானது போல் தோன்றுவதால் அப்படியே விட்டுவிடுகிறேன். இனி word -ல் போட்டுப் பழக வேண்டும்... நன்றி ஐயா. //

    ஆரம்பத்தில் நானும் எல்லோரையும் போல நேரடியாகவே கருத்துரைப் பெட்டியில் கருத்துக்களை டைப் செய்து வந்தேன். அப்போது எங்கள் வீட்டில் இண்டர்நெட் டயலிங் முறைதான். பிராட் பேண்ட் எல்லாம் இல்லை. ஒருமுறை அவ்வாறு கருத்துரை ஒன்றை டைப் செய்யும்போது இண்டர்நெட் தொடர்பு திடீரென அறுந்தது. அது கொஞ்சம் நீண்ட கருத்துரை. மறுபடியும் அப்படியே என்னால் யோசித்து எழுத இயலவில்லை. திரும்பவும் எழுதியதே மீண்டும் எழுத எரிச்சல். எனவே அன்றிலிருந்து கருத்துரைகளையும், பதிவுகளையும் முதலில் WORD இல் சேமித்துக் கொண்டு பின்னர் அதனை COPY / PASTE முறையில் பதிவுகளில் வெளியிடும் பழக்கம் எனக்கு வந்தது.


    ReplyDelete
  20. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  21. மறுமொழி > கோமதி அரசு said...

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி > Mathu S said...

    // அய்யா எனது பின்னூட்டம் சரியாக வருகிறதா ? //

    சரியாக வந்து சேர்ந்தது. சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  23. மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...

    கவிஞருக்கு நன்றி!


    ReplyDelete
  24. பதிவுகளை ms word-ல் எழுதி பின் காப்பி பேஸ்ட் செய்கிறேன். பின்னூட்டங்களை நேரடியாகவே தட்டச்சு செய்கிறேன். எப்போதாவது அது காணாமல்போகலாம். நான் அது கமெண்ட் மாடெராஷ்னில் போகிறதென்று நினைத்துக் கொள்வேன்

    ReplyDelete
  25. // MICROSOFT WORD – இல் டைப் செய்து கொண்டு COPY AND PASTE முறையில் வெளியிடுவதுதான் வழக்கம். இதனால் சலிப்பு ஏற்படுவதில்லை.//

    நானும் இதைத்தான் செய்து வருகிறேன். பலருடைய எண்ணங்களை பிரதிபலித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  26. ஆமாம் ஐயா இதை நாங்கள் காக்கா உஷ் என்று சொல்லுவதுண்டு! பல சமயங்களில் நாம் தட்டச்சுவது வீணாக நேரம் செலவாகிவிடுகின்றது. அத்னால் இப்போதெல்லாம் கருத்துரைப் பெட்டியில் கருத்து அடித்துவிட்டு ரைட் க்ளிக் செய்து அதைக் காப்பி செய்து விட்டு வெளியிடுவதை அழுத்துகிறோம்...போகவில்லை என்று தெரிந்தால் திரும்பவும் காப்பி செய்ததை பேஸ்ட் செய்து வெளியிடல்...இப்படித்தான் போகின்றது......

    ReplyDelete
  27. ஆமாம் ஐயா இதை நாங்கள் காக்கா உஷ் என்று சொல்லுவதுண்டு! பல சமயங்களில் நாம் தட்டச்சுவது வீணாக நேரம் செலவாகிவிடுகின்றது. அத்னால் இப்போதெல்லாம் கருத்துரைப் பெட்டியில் கருத்து அடித்துவிட்டு ரைட் க்ளிக் செய்து அதைக் காப்பி செய்து விட்டு வெளியிடுவதை அழுத்துகிறோம்...போகவில்லை என்று தெரிந்தால் திரும்பவும் காப்பி செய்ததை பேஸ்ட் செய்து வெளியிடல்...இப்படித்தான் போகின்றது......

    ReplyDelete
  28. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா வே.நடனசபாபதி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  30. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    சகோதரர் V துளசிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! இந்த கருத்துரை கூட இருமுறை பதிவாகி உள்ளதைக் கவனிக்கலாம்.

    ReplyDelete