Wednesday 26 February 2014

தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள்



அது ஒரு பேக்கரி கடை. பெயர்தான் அப்படி. மற்றபடி, அங்கு வடை,  பஜ்ஜி, முறுக்கு, பானி பூரி, மசாலா பூரி, ஜிகிர்தண்டா, பேக்கரி வகையறாக்களான கேக், பிஸ்கட், ரொட்டி அனைத்தும் மற்றும் காபி, டீ விற்பனையும் உண்டு. நான் வெளியே  கடைத்தெரு என்று சென்று வரும்போது அந்தக் கடையில் காபி குடிப்பது வழக்கம். சிலசமயம் மெதுவடையும் சட்னியும் உண்டு. கடையின் உள்ளே மேஜையில் பரிமாறுதலும் வெளியே டோக்கன் முறையில் விற்பனையும் உண்டு. இந்த கடையில் பணிபுரிபவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவருமே இந்தி பேசும் வட இந்திய இளைஞர்கள். தமிழ் தெரியாது. ஆனாலும் சமாளித்துக் கொள்கிறார்கள். இந்த கடையை நடத்துபவர் ஒரு தமிழர்.   

இன்னொரு ஸ்வீட் ஸ்டால். அங்கேயும் இதே கதைதான். அங்கு இனிப்பு காரம் தயார் செய்வதிலிருந்து விற்பனையாளர்கள் வரை வட இந்திய இளைஞர்கள்தான். நாம் போனால் சிலசமயம் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பொருட்களை அடையாளம் காட்ட வேண்டி இருக்கும். ஒருமுறை மூன்று கால் இனிப்பு என்பதனை மூன்று விரல்களால் காட்டியபோது, மூன்று கிலோவாக போடத் தொடங்கி விட்டார் அங்குள்ள இளைஞர்.

ஒருமுறை வெளியூர் சென்றுவிட்டு வீடு வர நேரமாகிவிட்டது. இரவுநேர டிபனுக்காக பஸ் ஸ்டாண்ட் அருகிலிருந்த இரவுநேர ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு சென்று இருந்தேன். அங்கு முக்கால்வாசி பேர் படித்துக் கொண்டே வேலை பார்க்கும் வட இந்திய இளைஞர்கள். மேஜையில் தண்ணீர் வைப்பது முதல், பரிமாறுவது, சுத்தம் செய்வது வரை சலிக்காது செய்கிறார்கள். ஆனாலும் அவர்கள் முகத்தில் இனம் தெரியாத சோகம்.

ஒரு நண்பர் வீட்டு நிச்சயதார்த்தம். ஒரு ஹோட்டலில் மினிஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிகள் முடிந்ததும், மதிய உணவு தொடங்கியது. சாப்பாட்டு மண்டபம் சென்றபோது ஒரு மணிப்பூர் இளம்பெண் கைகூப்பி, மழலைத் தமிழில் ஒவ்வொருவரையும்,  வணக்கம் சொல்லி வரவேற்றார். அங்கு உண்வு பரிமாறலில் இருந்து அனைத்து பணிகளையும் செய்தது மணிப்பூர் இளைஞர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மேற்பார்வையாளர் அவர்களுக்கு உதவியாக இருந்தார்..

அதேபோல் ஒரு இடத்தில் கட்டிட பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. அங்கு ரெடிமேட் கான்கிரீட் போடும் கலவை எந்திரம் கொண்டு வந்தார்கள். அதில் பணிபுரிந்த அனைவருமே இந்தி பேசும் இளைஞர்கள். அவர்களை வழி நடத்த இந்தி தெரிந்த நம்மூர்க்காரர் ஒருவர். நான்கு வழிசசாலை வேலையாட்கள், மெட்ரோ ரயில் பணி செய்பவர்கள் என்று எல்லா இடத்திலும் அவர்கள்தான். லல்லு பிரசாத் யாதவ் மத்தியில் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது நிறைய பீகாரிகள் தமிழ்நாட்டில் ரெயில்வேயில் நுழைக்கப்பட்ட்னர். 

மேலே சொன்ன பணிகளில் மட்டுமன்றி உடல் உழைப்பு தேவைப்படும் எல்லா இடத்திலும், தமிழ்நாட்டில் இந்தி பேசும் வட இந்திய இளைஞர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களும் இவர்கள் தரும் சொற்ப சம்பளத்திற்காக நாள் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களாக உழைக்கிறார்கள். ஒருபக்கம் இவர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்றாலும் இன்னொரு பக்கம் ஒருசிலர் செய்யும் திருட்டு வேலைகள் மற்றும் கிரிமினல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினையால்  அனைவரையுமே சந்தேகத்தோடு பார்க்க வைக்கின்றன. எனவே இவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் இவர்களது முழு விவரங்களையும் வைத்துக் கொள்ளுதல் நல்லது.
  
                   PHOTO (above) THANKS TO : HINDUSTAN TIMES     

 இப்படி ஏன் தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் இந்தி பேசும் வட இந்தியர்களை மட்டுமே பணியில் வைத்துக் கொள்கிறார்கள்; உள்நாட்டு தமிழர்களை வைத்துக் கொள்வதில்லை? இதுகுறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல். உள்ளூர் தமிழர்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டும், தொழிலாளர் பிரச்சினை, சில இடங்களில் ஜாதி கட்சிகளால் பிரச்சினை இவையே முக்கியமான  காரணமாக சொல்லப் படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் மேஜை சுத்தம் செய்ய, சாப்பிட்ட இலையை எடுக்க ஆட்கள் கிடைப்பது கஷ்டம். இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு ஆட்கள் எடுப்பதால் இங்குள்ள முதலாளிகளுக்கு பிரச்சினை இல்லை. இதேபோல் வடக்கில் உள்ளவர்கள் இந்தி பேசாத மாநிலத்தில் உள்ளவர்களை வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.  

ஒரு காலத்தில் இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் இப்போதோ இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அவர்கள் ஊரிலேயே அவர்களுக்கு வேலை இல்லை. இதுபோல் வடக்கு தெற்கு இரண்டிலும், மொழி தெரியாத தொழிலாளர்களை குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தி சுரண்டலைச் செய்யவே பல நிறுவனங்கள் விரும்புகின்றன 




71 comments:

  1. //ஒரு காலத்தில் இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் இப்போதோ இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அவர்கள் ஊரிலேயே அவர்களுக்கு வேலை இல்லை.//

    சரியாய் சொன்னீர்கள். உழைத்து சாப்பிட நினைப்போருக்கு மொழி ஒரு பிரச்சினை அல்ல.

    ஆங்கிலம் படித்ததால் தான் வட இந்தியர்கள் கூட இங்கே மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்கள்.

    ReplyDelete
  2. வீட்டைப் பிரிந்து இங்கே பிழைப்பதற்காக வந்து இருக்கும் வடஇந்திய ஆண் ,பெண்களை முன்பு போல் அனுதாபத்தோடு பார்க்க முடியவில்லை .காரணம் ,சமீப காலங்களில் பெருகி விட்ட விரும்பத்தகாத நிகழ்வுகள்தான் ..தவறு செய்கிறவர்கள் மீதும் ,சுயநலத்திற்காக அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் குத்தகைதாரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் தவிர குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை !
    த ம ௧1

    ReplyDelete
  3. போர்வை உட்பட பல பொருட்களையும் இந்தி பேசும் வட இந்திய இளைஞர்கள், ஒவ்வொரு தெருத் தெருவாக எவ்வித சலிப்பு இல்லாமல், சோர்வு இல்லாமல் விற்றுக் கொண்டும் வருகிறார்கள் - நீங்கள் சொல்லும் சோகத்துடன்... உழைப்பு... அயராத தளராத உழைப்பு...

    நீங்கள் சொல்லும் காரணங்கள் உண்மை... நமது ஆட்கள் மீது நம்பிக்கையே இல்லை... ஏனென்றால் வேலையே செய்யாமல் சொகுசு வாழ்க்கை உடனே வாழ வேண்டும் என்னும் எண்ணம்...

    ReplyDelete
  4. இப்போது அவர்கள் நம்மளை விட நல்லாவே தமிழ் பேசுகின்றார்கள்.....
    கார்ல் மார்க்ஸ் கண்டுபிடிக்காத தொழிலாளர்கள்........
    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பாரம்பர்யமான விவசாயத்தையே - கை கழுவி விட்டவர்கள் நமது ஆட்கள். நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல.

    ஆனாலும் பள்ளி நாட்களில் கோடை விடுமுறையில் - நிலக்கடலை, பயறு, உளுந்து, காராமணி - போன்ற தான்யங்களின் அறுவடைக்குச் செல்வதுண்டு. அந்த தான்யங்களே கூலியாகக் கிடைக்கும். அது குடும்பத்தின் வருடாந்திர தேவைக்கு ஆகும்.

    ஆனால், இப்போது விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே - வேலைக்கு ஆள் வராத பிரச்னையால் சாகுபடி நிலங்களைத் துறக்கின்றனர்.

    நமது ஊர்களில் வேலை செய்யாமல் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கான வசதி வாய்ப்புகளை அரசே ஏற்படுத்தித் தருகின்றது.

    நல்லதொரு பதிவு!..

    ReplyDelete
  6. நகர்ப்புறங்களில் வட மாநில தொழிலாளர்களை அதிகளவு பார்ப்பதில் எனக்கு ஆச்சரியமல்ல. பத்தாண்டு காலமாக திருப்பூர் நேபாளம் முதல் ஆந்திரா வரைக்கும் உள்ள அத்தனை தொழிலாளர்களுடன் பழகுவதால். ஆனால் காரைக்குடி அருகே உள்ள எங்க கிராமத்தில் உள்ள அரிசி ஆலைகளில் முழுக்க வட மாநில தொழிலாளர்களை பார்க்கும் போது அதிக ஆச்சரியமாக உள்ளது.

    திருப்பூர் உணவகம் முழுக்க வட மாநில தொழிலாளர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள்.

    ReplyDelete
  7. கசப்பான உண்மைகள். பகிர்ந்தவிதம் அருமை. பாராட்டுக்கள் ஐயா.

    தங்களின் மின்னஞ்சல் முகவரியை மாற்றி விட்டீர்கள். நான் சமீபத்தில் அனுப்பிய ஒருசில மெயில்கள் எனக்கே திரும்பி வந்துவிட்டன AS UNDELIVERED. தயவுசெய்து இதற்கு இங்கேயே ஓர் பதில் அளியுங்கள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  8. இதுவரை எனக்குப் புரியாத புதிர்.

    இங்கு பலர் வெளியிலிருந்து வந்து பணிபுரிகிறார்கள். ஆனால் இங்கோ எங்கும் விலையில்லாப் பொருட்கள் (இலவசம்) வழங்குகிறார்கள். கேள்வி கேட்க ஆளில்லையா.

    கோபாலன்

    ReplyDelete
  9. தி.தமிழ் இளங்கோ சார்,

    //இதுபோல் வடக்கு தெற்கு இரண்டிலும், மொழி தெரியாத தொழிலாளர்களை குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தி சுரண்டலைச் செய்யவே பல நிறுவனங்கள் விரும்புகின்றன //

    ஒரே காரணம் இது தான்.

    # குற்றங்கள் அதிகரிக்கவும் இவை காரணமாகின்றன.

    ஒரு குற்றச்செயல் செய்துவிட்டு எளிதில் வேறு மாநிலம் சென்றுவிட்டால் கண்டுப்பிடிக்க இயலாது. வழக்கமாக முதல் குற்றத்தின் போதே பெரும்பாலும் சிக்குவதில்லை,தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டால் தான் சிக்குவார்கள்,ஒரு குற்றத்தினை ஒரு இடத்தில் செய்துவிட்டு இடம் பெயர்ந்து விட்டால் எளிதில் துப்பு கிடைக்காது,காவல் துறையில் கண்டுப்பிடிக்கபடாமல் தேங்கியுள்ள வழக்குகள் இவ்வகையே.

    ReplyDelete
  10. நம்மவர் உடல் உழைப்புக்குத் தயாராயில்லை. எல்லோருக்கும் வைட் காலர் வேளைதான் தேவை. இந்நிலை கடந்த நான்கைந்து வருடங்களில் கூடிவிட்டது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. வணக்கம்
    ஐயா.

    தங்களின் பதிவை படித்த போது என்னுள் உதித்த கருத்து இதோ....ஏன் அவர்கள் இப்படி தமிழ் நாட்டுக்கு வருகிறார்கள் என்றால் தங்களின் வாழ்வாதார நிலையை உயர்த்துவதற்காக.... பெருமை என்ற சொல்லுக்கு இடம் கொடுக்காமல் நமக்கு முக்கியம் பணம் என்ற வினாவுன் வேலை செய்பவர்கள்......
    ஆனால் நமது சொந்தங்கள் பெருமை தரக்குறைவு தாழ்வு மனப்பாண்மை சட்டையில் கையில் அழுக்கு படாமல் சாப்பிட்ட வாழை இலையை எடுக்கமுடியாது பிறர் குடித்த தேனீர் கப் கழுவ முடியாது என்றால் முதலாளிகள் வேறு நடவடிக்கையில் இறங்குவது தவிக்க முடியாது......
    நமது சொந்தங்களுக்கு உழைக்கும் வழி தெரியாது என்றுதான் சொல்லமுடியும்.... அதனால்தான் அவர்கள் வருகிறார்கள்....எல்லோரையும் சிந்திக்க வைக்கும் பதிவு ஐயா பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. என் வீட்டுப்பக்கம் சுடிதார், புடவை விற்றுக்கொண்டு வட இந்திய ஆட்கள் வருவாங்க. அவங்களைப் பார்க்கும்போது பாவமா இருக்கும். அதனால, என் பெண்களுக்கு தலா ஒரு சுடிதார்ன்னு 2 சுடிதார் வாங்கினேன். தைக்கக் கொடுத்தால் ஃபேண்டுக்கு துணி பத்தலைன்னு சொல்லிட்டாங்க. அதுக்காக, அவங்களைக் குறைச் சொல்ல முடியலை ஏன்னா கடையில வாங்கினாலும் சில நேரத்தில் இதுப்போல நேர்வதுண்டு. ஆனா, அவர்கள் மேல் பரிதாபப்பட்டு எத்தனை சுடிதார் வாங்க முடியும்!?

    ReplyDelete
  13. இன்று உமா மகேஸ்வரி கொலைகூட புரியாத புதிரே!

    ReplyDelete
  14. இப்போதெல்லாம் அவர்களை
    கொஞ்சம் சந்தேகக் கண் கொண்டுதான்
    பார்க்கவேண்டியுள்ளது
    தற்காலச் சூழலை சுடச் சுட பகிர்ந்த விதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. கசப்பான உண்மை ஐயா.
    சென்னையில் புதிதாக தலைமைச் செயலகம் கட்டும் பணி நிறைவுற்றபிறகு, அதற்கு அடுத்த நாள் அன்றைய முதல்வர், தொழிலாளர்களுக்கு, உணவுப் பொட்டல்ங்களை வழங்கிய காட்சியை தொலைக் காட்சியில் பார்த்தேன். அனைவருமே வட இந்தியர்கள் என நினைவு.

    ReplyDelete
  16. மறுமொழி > வே.நடனசபாபதி said...
    //ஒரு காலத்தில் இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் இப்போதோ இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அவர்கள் ஊரிலேயே அவர்களுக்கு வேலை இல்லை.//
    சரியாய் சொன்னீர்கள். உழைத்து சாப்பிட நினைப்போருக்கு மொழி ஒரு பிரச்சினை அல்ல. //

    அய்யா வே நடனசபாபதி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! இந்தி படிப்பதில் தவறில்லை! ஆனால் இந்தியையே அப்போது அரசியலாக்கி விட்டனர்.

    // ஆங்கிலம் படித்ததால் தான் வட இந்தியர்கள் கூட இங்கே மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்கள். //

    இப்போது மென்பொருள் என்றாலே ஆங்கிலம்தான். இணைப்பு மொழியாகவும் உறவு மொழியாகவும் மாறி விட்டது.

    ReplyDelete
  17. மறுமொழி > Bagawanjee KA said...

    // வீட்டைப் பிரிந்து இங்கே பிழைப்பதற்காக வந்து இருக்கும் வடஇந்திய ஆண் ,பெண்களை முன்பு போல் அனுதாபத்தோடு பார்க்க முடியவில்லை //

    ஆமாம் ஜீ! நீங்கள் சொல்வதில் மாற்றுக் கருத்து இல்லை. இருந்த போதிலும் யாரோ ஒரு சிலர் செய்யும் சட்ட விரோத செயல்களுக்கு அந்த இனமே அப்படித்தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

    //.காரணம் ,சமீப காலங்களில் பெருகி விட்ட விரும்பத்தகாத நிகழ்வுகள்தான் ..தவறு செய்கிறவர்கள் மீதும் ,சுயநலத்திற்காக அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் குத்தகைதாரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் தவிர குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை ! த ம ௧1 //

    ஆமாம் அய்யா! வட இந்தியர்களை வேலைக்கமர்த்தும் இடைத்தரகர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

    கருத்துரை தந்த K A பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said..

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!.

    // போர்வை உட்பட பல பொருட்களையும் இந்தி பேசும் வட இந்திய இளைஞர்கள், ஒவ்வொரு தெருத் தெருவாக எவ்வித சலிப்பு இல்லாமல், சோர்வு இல்லாமல் விற்றுக் கொண்டும் வருகிறார்கள் - நீங்கள் சொல்லும் சோகத்துடன்... உழைப்பு... அயராத தளராத உழைப்பு...//

    கடுமையாக உழைக்கிறார்கள்! ஆனால் அவர்களுக்கு சரியான ஊதியம் வழங்குகிறார்களா என்று தெரியவில்லை!

    // நீங்கள் சொல்லும் காரணங்கள் உண்மை... நமது ஆட்கள் மீது நம்பிக்கையே இல்லை... ஏனென்றால் வேலையே செய்யாமல் சொகுசு வாழ்க்கை உடனே வாழ வேண்டும் என்னும் எண்ணம்... //

    தமிழ்நாட்டில் தமிழனுக்கு தமிழனோடு சண்டை போடவே நேரம் போதவில்லை!

    ReplyDelete
  19. மறுமொழி > PARITHI MUTHURASAN said...

    // இப்போது அவர்கள் நம்மளை விட நல்லாவே தமிழ் பேசுகின்றார்கள்..... கார்ல் மார்க்ஸ் கண்டுபிடிக்காத தொழிலாளர்கள்........நல்ல பதிவு வாழ்த்துக்கள் //

    ” கார்ல் மார்க்ஸ் கண்டுபிடிக்காத தொழிலாளர்கள்.....” – நல்ல சொல்லாடல். கருத்துரை தந்த பரிதி முத்துராசன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    //பாரம்பர்யமான விவசாயத்தையே - கை கழுவி விட்டவர்கள் நமது ஆட்கள். நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஆனாலும் பள்ளி நாட்களில் கோடை விடுமுறையில் - நிலக்கடலை, பயறு, உளுந்து, காராமணி - போன்ற தான்யங்களின் அறுவடைக்குச் செல்வதுண்டு. அந்த தான்யங்களே கூலியாகக் கிடைக்கும். அது குடும்பத்தின் வருடாந்திர தேவைக்கு ஆகும். //

    காலம் முன்னைக்கு இப்போது மாறி விட்டது.

    // ஆனால், இப்போது விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே - வேலைக்கு ஆள் வராத பிரச்னையால் சாகுபடி நிலங்களைத் துறக்கின்றனர். //

    ஆள் பிரச்சினையை சொல்ல முடியாது. இப்போது இந்தியாவில் விவசாயம் என்பது லாபகரமான தொழில் இல்லை என்பதுதான் காரணம்.

    // நமது ஊர்களில் வேலை செய்யாமல் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கான வசதி வாய்ப்புகளை அரசே ஏற்படுத்தித் தருகின்றது. நல்லதொரு பதிவு!.. //

    ஒரு பக்கம் (இருப்பவனிடம்) வாங்கி இன்னொரு பக்கம் (இல்லாதவனுக்கு) கொடுக்கிறது! அவ்வளவுதான். இனி நிறுத்த முடியாது. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    சகோதரர் ஜோதிஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    //நகர்ப்புறங்களில் வட மாநில தொழிலாளர்களை அதிகளவு பார்ப்பதில் எனக்கு ஆச்சரியமல்ல. பத்தாண்டு காலமாக திருப்பூர் நேபாளம் முதல் ஆந்திரா வரைக்கும் உள்ள அத்தனை தொழிலாளர்களுடன் பழகுவதால். ஆனால் காரைக்குடி அருகே உள்ள எங்க கிராமத்தில் உள்ள அரிசி ஆலைகளில் முழுக்க வட மாநில தொழிலாளர்களை பார்க்கும் போது அதிக ஆச்சரியமாக உள்ளது.//

    இன்னும் கொஞ்சநாளில் தமிழ்நாட்டில் தமிழனே இருக்க மாட்டான்!

    //திருப்பூர் உணவகம் முழுக்க வட மாநில தொழிலாளர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள். //

    உண்ண உணவும் இருக்க இடமும் கிடைப்பதால், இப்போது தமிழ்நாட்டில் உணவு விடுதிகளில் அவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  22. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // கசப்பான உண்மைகள். பகிர்ந்தவிதம் அருமை. பாராட்டுக்கள் //

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // ஐயா. தங்களின் மின்னஞ்சல் முகவரியை மாற்றி விட்டீர்கள். நான் சமீபத்தில் அனுப்பிய ஒருசில மெயில்கள் எனக்கே திரும்பி வந்துவிட்டன AS UNDELIVERED. தயவுசெய்து இதற்கு இங்கேயே ஓர் பதில் அளியுங்கள்.//

    நான் எனது மின்னஞ்சல் முகவரியை மாற்றவில்லை. அப்படியேதான் உள்ளது. ஆனாலும் சமீப காலமாக எனது DASH BOARD – இல் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றன. காரணம் தெரியவில்லை.

    ReplyDelete
  23. மறுமொழி > K Gopaalan said...

    சகோதரர் K கோபாலனின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // இதுவரை எனக்குப் புரியாத புதிர். இங்கு பலர் வெளியிலிருந்து வந்து பணிபுரிகிறார்கள். ஆனால் இங்கோ எங்கும் விலையில்லாப் பொருட்கள் (இலவசம்) வழங்குகிறார்கள். கேள்வி கேட்க ஆளில்லையா.//

    இதுதான் இந்தியா! இதுதான் தமிழ்நாடு!

    ReplyDelete
  24. அரசியல்தலைவர்கள் போட்டிபோட்டு இலவசங்களை அள்ளி வழங்குவதால் உழைத்து வேலைசெய்ய பஞ்சிப்படுகிறார்கள். வித்தியாசமான பதிவு.

    ReplyDelete
  25. வடக்கு நம்மை தேடி வந்திருக்கிறது என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாய் இருந்தாலும் தமிழர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புடன் இருக்கிறார்களா? அல்லது வெட்டியாய் பொழுதைக் கழிக்கிறார்களா?.... ஏனெனில் சமூகக் குற்றங்கள் அதிகமாக வாய்ப்புகள் அதிகமாகலாம்...

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. எனக்கு இவர்களைப் பார்க்கும் போது ஒரு வித பரிதாபமே மிஞ்சி நிற்கும். நானும் இங்கே நிறைய இடங்களில் இவர்களைப் பார்க்கிறேன். மனம் வருத்தப்பட்டாலும் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?

    ReplyDelete
  28. ////இதுபோல் வடக்கு தெற்கு இரண்டிலும், மொழி தெரியாத தொழிலாளர்களை குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தி சுரண்டலைச் செய்யவே பல நிறுவனங்கள் விரும்புகின்றன //

    ஒரே காரணம் இது தான்.//

    நீங்க சொல்லுரது சரி. வட இந்தியாவில் இருப்பவர்கள் நம்ம ஊருக்கு வருகிறார்கள், நாம அங்க போறோம். எதாவது ஒரு விசேஷம் வந்தா ரயில்யும் பஸ்லயும் இடம் கிடைக்காம கண்ட இடத்தில உட்காந்துகொண்டு போனது தான் மிச்சம்.

    இரா. விவரணன் நீலவண்ணன்,

    //இவர்களின் சம்பளம் 3000 - 5000 மட்டுமே, தங்க இடம், உணவும் கொடுக்கப்படும். இதுவே அவர்களுக்கு பெருந்தொகை. நம் மாநிலத்தில் குறைந்தது 12,000 ஆவது கொடுத்தால் தான் வேலைக்கு ஆள் கிடைக்கும். //

    நீங்க தமிழ் நாட்டில் தான் இருக்கிறீர்களா? சராசரி தமிழர்களோடு பழகுகிறீர்களா?

    //அது போக வட இந்திய தொழிலாளர்களுக்கு முறைப்படி தமிழ் கற்றுக்கொடுக்க, அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க, ஒரு அமைப்பை நிறுவ வேண்டும்.//

    காமெடி பண்ணாதிங்க. இங்க அவனவன் இந்தி கத்துக முடியலயேனு வேதனையில் இருக்கிறான். நீங்க வரவனுகெல்லாம் தமிழ் கத்துக் கொடுக்கச் சொல்லுரிங்க. வெளங்கிடும்.

    ReplyDelete
  29. இந்த வட இந்திய, நேபாளி, வங்காளி இளைஞர்கள் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் திருமணம் முடிந்ததும், தமது மனைவி, குழந்தைகளையும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவார்கள். இப்பொழுதே இவர்களில் பலர் தமிழ் பேசுவார்கள். அதனால், அவர்கள் எல்லோரும் தமிழர்கள் தான் என்று பல வலைப்பதிவர்கள் பதிவிடுவார்கள். எத்தனையோ தமிழர்கள் வேலையில்லாமலிருக்க, ஹோட்டல்கள், உணவகங்கள், Woodland, Bata போன்ற கடைகளில் கூட சென்னையில் இவர்கள் வேலை செய்கிறார்கள்.

    தமிழ்நாட்டிலுள்ள ஏழைகளுக்கே ஒழுங்கான, வீடு, சுகாதார, கல்வி வசதிகள் கிடையாது. இனிமேல் இவர்களுடனும் இருக்கிற வசதிகளைப் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் மற்ற மாநில மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படும். இவர்கள் தமிழ்நாட்டில் வேரூன்றிய பின்னர், இன்னும் 20 -30 வருடங்களில், இவர்களும் தமது பிரதிநிதிகளை சட்டசபைக்கு அனுப்புவார்கள், அவர்களும் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வர ஆசைப்படுவது மட்டுமல்ல, அப்படி வரக்கூடிய சாத்தியக்கூறும் உண்டு. ஏனென்றால் வெள்ளைத் தோலைக் கொண்ட இவர்களின் குழநதைகள் நடிகர், நடிகைகளாகினால் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக வாக்களிப்பார்கள்.

    தமிழ்நாடு அரசு தமிழர்கள் மத்தியில் குடும்பக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்திக் கொண்டு, இப்படி தமிழரல்லாதவர்களை எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி, தமிழ்நாட்டில் குடியேற அனுமதித்தால், இன்னும் சில வருடங்களில் தமிழ்நாட்டின் நகரங்களில் தமிழர்கள் சிறுபான்மையினராவர்கள். தமிழ்நாட்டு வேலைவாய்ப்ப்புகளில், தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அல்லது அந்த வேலைக்கு தமிழ்நாட்டில் ஆளில்லை என்றால் மட்டுமே, தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருபவர்களை வேலைக்கு அமர்த்தலாம், என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வரவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் கூடிய சம்பளம் கேட்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் வேலையில்லாமல் இருக்க, மற்றவர்களை குறைந்த சம்பளத்தில் வேலைக்கமர்த்துவதை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  30. வியாசன்,

    இப்படி உங்களைப் போன்றவர்கள் பிரிவினைவாதம் பேசிப் பேசித்தான் இலங்கையில் ரத்த ஆறு ஓடியது. இன்னமும் மக்கள் அவலநிலையில் உள்ளனர்.

    ReplyDelete
  31. //இப்படி உங்களைப் போன்றவர்கள் பிரிவினைவாதம் பேசிப் பேசித்தான் இலங்கையில் ரத்த ஆறு ஓடியது. இன்னமும் மக்கள் அவலநிலையில் உள்ளனர்.//

    குட்டிப்பிசாசு, என்னய்யா இது ,நான் சொல்லலாம்னு பார்த்தால் முந்திக்கிட்டீரே அவ்வ்!

    இப்படியே ,அமெரிக்கா, கனடா, ஜெர்மனி,ஃபிரான்ஸ்,யு.கே எல்லாம் அகதியாக வந்தவங்களுக்கு குடியுரிமை,வேலை என தரக்கூடாது, அப்படி தந்து,அவர்களுக்கு குழந்தை பிறந்து அவர்கள் அந்நாட்டின் சனாதிபதி ஆக போட்டியிடலாம், மேலும் அந்நாட்டு மக்களின் வேலை வாய்ப்பில் போட்டி உருவாகுது எனவே அந்நாடுகள் அகதிகளாக வருபவர்களை முகாமில் மட்டுமே வைக்க வேண்டும் என வியசர்வாள் கோரிக்கை விடுவாரா?

    இந்தியாவுக்குள் யார் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யலாம், ஆனால் குறைவான சம்பளத்தில் உழைப்பினை சுரண்ட என மட்டுமே மற்ற மாநிலத்தவர்களை வேலைக்கு வைக்கும் போக்கினையே கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  32. அமெரிக்கா, கனடா, ஜெர்மனி,ஃபிரான்ஸ்,யு.கே போன்ற நாடுகளில் எல்லாம், தமிழ்நாட்டைப் போன்ற நிலையில் அந்தந்த நாட்டு மக்கள், சுகாதார வசதியின்றி, சேரிகள் நிறைந்து போய், வேலைவாய்ப்பின்றி, முதல்தர மருத்துவ வசதிகள் இல்லாமலும், அந்தந்த நாட்டு மக்களில் பெரும்பாலானோர் அடுத்த வேளைக்கு உணவுக்கு வழி தெரியாத நிலையிலிருந்தால், வேலைவாய்ப்பின்றி இருந்தால், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி,ஃபிரான்ஸ்,யு.கே போன்ற எந்த நாடுமே அகதிகளாக வந்தவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பும், குடியுரிமையும் கொடுத்திருக்க மாட்டார்கள். தனக்கு மிஞ்சித் தான் தானமும் தர்மமும் என்பது மேலை நாட்டவர்களுக்குத் தெரியும். அதை விட அவர்களது நாட்டு மக்களின் நிலை, தமிழ்நாடு மக்களின் நிலை போல இருந்திருந்தால்,, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஒப்பந்த்ததில் அவர்கள் கைச்சாத்திட்டிருக்கவும் மாட்டார்கள். அந்த அகதி ஒப்பந்தக் கையெழுத்து தான், அவர்களை அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்குமாறு வற்புறுத்துகிறது. வசதியற்ற நாடாகிய இந்தியா, அந்த அகதிகளுக்காக ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. அதனால், தான் தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு, அவர்கள் விரும்பினாலும் கூட, இந்தியக் குடியுரிமை பெறும் உரிமை கிடையாது. அதனால், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி,ஃபிரான்ஸ்,யு.கே போன்ற நாடுகளுக்குச் செல்லும் அகதிகள் குடியுரிமை, தொழில் செய்யும் உரிமை என்பவற்றைப் பெறுவதை, தமிழ்நாட்டுடன் ஒப்பிடுவது வெறும் அபத்தம்.

    இந்திய அரசியலமைப்பின் படி, இந்தியர்கள் அனைவருக்கும், இந்தியா முழுவதும் நடமாடும், குடியேறும் உரிமை உண்டென்பது எனக்கும் தெரியும். ஆனால், பல மொழிகளைக் பல தேசிய இனங்களை ஒன்றிணைத்து, அவர்களின் விருப்பு, வெறுப்புக்களை கேட்டறியாமல், செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தியா போன்ற நாடுகளில், இன்னொரு மொழி அல்லது இனகுழுவினர் குறிப்பிட்ட இன்னொரு மொழி வழி மாநிலத்தில் கூட்டம், கூட்டமாகக் குடியேறுவது எதிர்காலத்தில் இன, மொழிப் பிரச்சனைகளையும், கலவரங்களையும் உண்டாக்கும் என்பதை யாவருமறிவர். அதைத் தான் நான் குறிப்பிட்டேன்.

    அதை விட, கனடாவிலும், அமெரிக்காவிலும் மட்டுமல்ல, இந்தியாவைப் போன்ற மாநிலங்களின் கூட்டடமைப்பைப் கொண்ட ஜேர்மனி போன்ற நாடுகளிலும் கூட தொழிலாளர் இடம்பெயர்வு, வர்த்தக பண்டமாற்று, போக்குவரத்து, தொழிற்சாலைகள் அமைத்தல், இடம்பெயர்தல், மாநிலம் விட்டு மாநிலம் முதலீடு செய்தல் போன்ற பல விடயங்களில் கட்டுப்பாடுகளும், சட்டங்களும், மாநில அரசு சம்பந்தமான விடயங்களில் மாநிலங்களுக்கிடையே ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தைகளும் நடை பெறுவதுண்டு. குறிப்பாக கனடாவின் ஒரு மாகாணத்திலிருந்து, அல்லது அமெரிக்காவின் ஒரு மாநிலத்திலிருந்து மக்கள் பெருமளவில் இன்னொரு மாகாணத்தையோ அல்லது மாநிலத்தையோ நோக்கி கூட்டம் கூட்டமாக மக்கள் இடம்பெயர்வார்களேயானால், அந்த மாநிலங்கள் அதற்கான காரணத்தை அறிந்து கொண்டு, அந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும். அல்லது, இன்னொரு மாநில மக்களின் இடம்பெயர்வை ஏற்றுக் கொள்ளும் அடுத்த மாநிலம், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அல்லது அந்தச் செலவுகளை ஈடு செய்ய, மத்திய அரசிடம் மானியம் (Transfer Payment) கேட்டுப் பெற்றுக் கொள்ளும். இந்த வட இந்திய, நேபாளி, வங்காளி மக்களின் சேவைகளுக்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் செல்வழிக்கப்படுவதை ஈடுசெய்ய, இந்திய மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு உதவுவதாக நான் கேள்விப்படவில்லை.

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்புகளில் எல்லோருக்கும் சமாமான உரிமை கொடுக்கப்படுவதில்லை. ஒருவர் அகதியாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றால், அவரிடம் வேலை செய்யும் உரிமைப்பத்திரம் இருந்தாலும் கூட, அந்த மாநிலத்தை வதிவிடமாகக் கொண்ட அந்த நாட்டுக் குடிமகனுக்கு, முதலுரிமை, அதற்கடுத்து அந்த நாட்டுக் குடிமகனை மணந்தவருக்கு, அதற்கடுத்து ஐரோப்பிய நாடுகளைச சேர்ந்தவருக்கு (Schengen countries) இப்படி பலருக்கு முன்னுரிமை கொடுத்த பின்பு, அப்படி எவருமே அந்த வேலையை ஏற்றுக் கொள்ளாமல் விட்டால் தான், புதிதாக அந்த நாட்டுக்குச் சென்றவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படும். கனடாவில் சில அரசாங்க தொழில் வாய்ப்புகளுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்கிறவர்கள் மட்டும் தான் விண்ணபிக்கலாம். அதனால், தமிழ் நாட்டில் வதிவிடத்தை குறிப்பிட்ட வருடங்களுக்கு மேல் கொண்டவர்களுக்குத் தொழில் வாய்ப்பில் முன்னுரிமை கொடுத்த பின்னர் தான் மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதை அல்லது தமிழ்நாட்டு மக்கள் கூடிய சம்பளம் கேட்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் வேலையில்லாமல் இருக்க, மற்றவர்களை குறைந்த சம்பளத்தில் வேலைக்கமர்த்துவதை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்தலாம், அதில் தவறேதுமில்லை.

    ReplyDelete
  35. மலையாளிகள் ஈழத் தமிழர்களின் விடயங்களில் மூக்கை நுழைத்து இனவழிப்புக்கே காரணமாக இருந்திருக்கின்றனர். அதனால் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு விடயங்களில் கருத்தைத் தெரிவிப்பதை மலையாளிகள் மட்டுமல்ல, எவனும் தடுக்க முடியாது.

    ReplyDelete
  36. வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து ஏற்கனவே சில கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம், மொத்தமாக ஒரு கட்டுரையாகவே "விவரணத்தில்" வெளியிட முயல்கின்றேன். நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  37. //ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்புகளில் எல்லோருக்கும் சமாமான உரிமை கொடுக்கப்படுவதில்லை. ஒருவர் அகதியாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றால், அவரிடம் வேலை செய்யும் உரிமைப்பத்திரம் இருந்தாலும் கூட, அந்த மாநிலத்தை வதிவிடமாகக் கொண்ட அந்த நாட்டுக் குடிமகனுக்கு, முதலுரிமை, அதற்கடுத்து அந்த நாட்டுக் குடிமகனை மணந்தவருக்கு, அதற்கடுத்து ஐரோப்பிய நாடுகளைச சேர்ந்தவருக்கு (Schengen countries) இப்படி பலருக்கு முன்னுரிமை கொடுத்த பின்பு, //

    நான் ஒரு நாட்டிலுள்ள மாநிலத்தைப் பற்றி பேசுகிறேன். நீர் ஐரோப்பிய நாடுகளைப் பற்றி பேசுகிறீர்.
    // கனடாவில் சில அரசாங்க தொழில் வாய்ப்புகளுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்கிறவர்கள் மட்டும் தான் விண்ணபிக்கலாம்.//
    இந்தியாவில் மாநில அரசுப்பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

    ReplyDelete
  38. //இந்த வட இந்திய, நேபாளி, வங்காளி மக்களின் சேவைகளுக்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் செல்வழிக்கப்படுவதை ஈடுசெய்ய, இந்திய மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு உதவுவதாக நான் கேள்விப்படவில்லை. //
    நானும் வட மாநிலங்களில் படித்தவன், பணிபுரிந்தவன். அவனுங்களும் இந்தியாகரனுங்க தான் வரட்டும் போகட்டும். நீர் ஏன் அலுத்துக் கொள்கிறீர்.

    //மலையாளிகள் ஈழத் தமிழர்களின் விடயங்களில் மூக்கை நுழைத்து இனவழிப்புக்கே காரணமாக இருந்திருக்கின்றனர். அதனால் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு விடயங்களில் கருத்தைத் தெரிவிப்பதை மலையாளிகள் மட்டுமல்ல, எவனும் தடுக்க முடியாது. //

    தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும், மக்களுக்கும் கருத்து தெரிவியுங்கள். யார் கேட்டது? பிரபாகரன் பூர்வீகம் கூட மலையாள நாடாம். ஒருவேளை அதனால் அவர் மூக்கை நுழைத்திருப்பார்கள்.

    ReplyDelete
  39. //தமிழ்நாட்டு மக்கள் கூடிய சம்பளம் கேட்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் வேலையில்லாமல் இருக்க, மற்றவர்களை குறைந்த சம்பளத்தில் வேலைக்கமர்த்துவதை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்தலாம், அதில் தவறேதுமில்லை. //

    இது வேண்டுமானல் நியாயம்.

    ReplyDelete
  40. ஐயா குட்டிப்பிசாசு,

    நான் பதிலளித்தது பஞ்சாயத்து தலைவர் வவ்வால் அவர்களின் கருத்துக்கு தான். :-)

    //பிரபாகரன் பூர்வீகம் கூட மலையாள நாடாம். ஒருவேளை அதனால் அவர் மூக்கை நுழைத்திருப்பார்கள்.//
    பிரபாகரன் மலையாளி என்று யாரோ ஒரு பட்டிக்காட்டு மலையாளிப் பெண் உளறியதை உண்மையென்று இன்னும் நம்புகின்ற ஒருவர் தான், ஈழத்தமிழர்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கிறார் என்பதை நினைக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை. :-)

    மேலதிக விவரங்களுக்கு:

    http://viyaasan.blogspot.ca/2013/05/blog-post_4744.html

    ReplyDelete
  41. //தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும், மக்களுக்கும் கருத்து தெரிவியுங்கள். யார் கேட்டது//

    தமிழ்மணத்திலுள்ள மலையாளி ஒருவர் நாங்கள் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு விடயங்களில் தலையிடக் கூடாதெனக் கருத்து தெரிவித்து விட்டு, பின்னர் அகற்றி விட்டார். அவருக்கு எழுதியது தான் அந்தப் பதில். :-)

    ReplyDelete
  42. பக்ரு பாபாThursday, February 27, 2014 5:46:00 am

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  43. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  44. பக்ரு பாபாThursday, February 27, 2014 5:59:00 am

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  45. மறுமொழி > வவ்வால் said...

    // ஒரு குற்றச்செயல் செய்துவிட்டு எளிதில் வேறு மாநிலம் சென்றுவிட்டால் கண்டுப்பிடிக்க இயலாது. வழக்கமாக முதல் குற்றத்தின் போதே பெரும்பாலும் சிக்குவதில்லை,தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டால் தான் சிக்குவார்கள்,ஒரு குற்றத்தினை ஒரு இடத்தில் செய்துவிட்டு இடம் பெயர்ந்து விட்டால் எளிதில் துப்பு கிடைக்காது,காவல் துறையில் கண்டுப்பிடிக்கபடாமல் தேங்கியுள்ள வழக்குகள் இவ்வகையே. //

    குற்றங்களை கண்டு பிடிக்காமல் போவதற்கு நீங்கள் சொல்வதும் ஒரு காரணம். கருத்துரை தந்த வவ்வால் அவர்களுக்கு நன்றி!


    ReplyDelete
  46. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // நம்மவர் உடல் உழைப்புக்குத் தயாராயில்லை. எல்லோருக்கும் வைட் காலர் வேளைதான் தேவை. இந்நிலை கடந்த நான்கைந்து வருடங்களில் கூடிவிட்டது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள். //

    அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி! பொதுவாகவே உள்ளூர் ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்ள எல்லோரும் யோசிக்கிறார்கள்.

    ReplyDelete
  47. மறுமொழி > 2008rupan said...

    வணக்கம்! கவிஞர் ரூபன் அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி!

    //ஆனால் நமது சொந்தங்கள் பெருமை தரக்குறைவு தாழ்வு மனப்பாண்மை சட்டையில் கையில் அழுக்கு படாமல் சாப்பிட்ட வாழை இலையை எடுக்கமுடியாது பிறர் குடித்த தேனீர் கப் கழுவ முடியாது என்றால் முதலாளிகள் வேறு நடவடிக்கையில் இறங்குவது தவிக்க முடியாது......//

    ஆம்! உண்மைதான் கவிஞரே! சில வேலைகளை உள்ளூர்க்காரன் தன்மானம் காரணமாக செய்ய மாட்டான். இன்றும் சில புறநகர் ஓட்டல்களிலும், கிராமத்து உணவுக் கடைகளிலும் “ சாப்பிட்ட பின் இலையை எடுக்கவும் ” என்று எழுதி வைத்திருப்பதைக் காணலாம்.

    ReplyDelete
  48. மறுமொழி > ராஜி said...

    சகோதரி ராஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    //என் வீட்டுப்பக்கம் சுடிதார், புடவை விற்றுக்கொண்டு வட இந்திய ஆட்கள் வருவாங்க. அவங்களைப் பார்க்கும்போது பாவமா இருக்கும். அதனால, என் பெண்களுக்கு தலா ஒரு சுடிதார்ன்னு 2 சுடிதார் வாங்கினேன். தைக்கக் கொடுத்தால் ஃபேண்டுக்கு துணி பத்தலைன்னு சொல்லிட்டாங்க. அதுக்காக, அவங்களைக் குறைச் சொல்ல முடியலை ஏன்னா கடையில வாங்கினாலும் சில நேரத்தில் இதுப்போல நேர்வதுண்டு. ஆனா, அவர்கள் மேல் பரிதாபப்பட்டு எத்தனை சுடிதார் வாங்க முடியும்!?//

    வியாபாரத்தில் அவர்களிடம் நாணயம் இல்லாதபோது நாம் ஏன் இரக்கப்ப்பட வேண்டும். இரக்கப்பட்டு ஏமாந்து விடாதீர்கள்!

    ReplyDelete
  49. புலவர் இராமாநுசம் said...

    // இன்று உமா மகேஸ்வரி கொலைகூட புரியாத புதிரே //

    ஆமாம் அய்யா! கண்டு பிடிக்கப்படாமல் போன உமாமகேஸ்வரிகள் எத்தனை பேரோ? போலீஸ்காரர்கள் ஒழுங்காக ரோந்து வந்து இருந்தாலே அந்த பகுதியில் நடந்த குற்றங்களை தடுத்து இருக்க முடியும். ரோந்தும் போவதில்லை, கொடுத்த புகாரையும் வாங்குவதில்லை, புகார் கொடுக்கப் போன தகப்பனையும் அசிங்கமாக பேசுதல் – அப்புறம் அங்கே காவல்நிலையம் எதற்கு என்று தெரியவில்லை.

    புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  50. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )

    // இப்போதெல்லாம் அவர்களை கொஞ்சம் சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்க வேண்டியுள்ளது தற்காலச் சூழலை சுடச் சுட பகிர்ந்த விதம் அருமை பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள் / tha.ma 7 //

    கவிஞர் ரமணி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  51. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

    // கசப்பான உண்மை ஐயா. சென்னையில் புதிதாக தலைமைச் செயலகம் கட்டும் பணி நிறைவுற்றபிறகு, அதற்கு அடுத்த நாள் அன்றைய முதல்வர், தொழிலாளர்களுக்கு, உணவுப் பொட்டல்ங்களை வழங்கிய காட்சியை தொலைக் காட்சியில் பார்த்தேன். அனைவருமே வட இந்தியர்கள் என நினைவு. // த.ம.8 //

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  52. மறுமொழி > வர்மா said..

    சகோதரர் வர்மா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!.

    ReplyDelete
  53. மறுமொழி > வர்மா said..

    சகோதரர் வர்மா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!.

    ReplyDelete
  54. மறுமொழி > ezhil said...

    சகோதரி எழில் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  55. மறுமொழி > இரா. விவரணன் நீலவண்ணன் said...

    // அது போக வட இந்திய தொழிலாளர்களுக்கு முறைப்படி தமிழ் கற்றுக்கொடுக்க, அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க, ஒரு அமைப்பை நிறுவ வேண்டும். இது நிச்சயம் உதவும். //

    தமிழ்நாட்டிற்கு இருக்கின்ற பிரச்சினைகள் போதாதென்று இது வேறா?
    சகோதரர் இரா விவரணன் நீல வண்ணன் அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  56. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  57. மறுமொழி >நம்பள்கி said...
    // +1 //

    நம்பள்கி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  58. மறுமொழி>

    இங்கு கருத்துரை கூறிய ஒருவருக்கொருவர் கருத்துரை சொல்லிக் கொண்ட நண்பர்கள் -

    குட்டிபிசாசு said...
    viyasan said...
    வவ்வால் said...
    இரா. விவரணன் நீலவண்ணன் said...
    பக்ரு பாபா said...

    ஆகிய அனைவருக்கும் நன்றி! நான் எனது வலைப் பதிவினில் தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திற்கும் , அதே போல வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்லும் தமிழர்களை குறைந்த சம்பளத்திற்கும் அமர்த்தப்பட்டு சுரண்டப்படுவதை ( EXPLOIT ) மட்டும் கோடிட்டு எழுதி இருந்தேன்.
    இங்கிருந்து வட இந்தியாவில் பணிபுரியும் தமிழர்களும் இருக்கின்றனர். சட்டென்று எதனையும் வாரி இறைத்து பேசிவிட முடியாது. நான் வடக்கு, தெற்கு என்று எதனையும் பிரித்துப் பேச விரும்பவில்லை.

    ஆனாலும் சிலர் வலைப்பதிவில் எந்த பதிவிற்கு கருத்தை எழுதினாலும் சுற்றி வளைத்து இலங்கைத் தமிழர் பிரச்சினையையே முன்னிறுத்துகிறார்கள் அல்லது அடித்துக் கொள்கிறார்கள்.

    வரம்புக்கு மீறிய நடையில் இருப்பதால் பக்ரு பாபா அவர்களின் கருத்துரை இரண்டினையும் நீக்கி விட்டேன்!


    ReplyDelete
  59. தமிழகம் மட்டுமன்றி இருக்கும் எல்லா தென் இந்திய மாநிலங்களிலும் வட இந்தியர்கள் பலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்......

    ReplyDelete
  60. இங்கு கருத்துரைகள் இடும் பலரும் ஏதோ தமிழர்கள் வேலை செய்ய மறுப்பவர்கள் போலும், தகராறு செய்பவர்கள் போலும், சோம்பேறிகள் போலும் ஆகவேதான் வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள் என்பதுபோலும் சொல்வதை பார்க்கிறேன். ஆனால் அதுவல்ல உண்மை. நல்ல தரமான வேலை வேண்டுமென்றால் அதற்கு தமிழர்கள்தான் தேவை என்று நினைத்துத்தான் வட மாநிலங்களில் குறிப்பாக மும்பை, கொல்கொத்தா போன்ற நகரங்களில் தமிழர்களை கட்டிட பணிகளிலும், சாலை பணிகளிலும் அமர்த்துகின்றனர். அவர்கள் கேட்கும் கூலியையும் அங்குள்ளவர்கள் கொடுக்க தயாராக உள்ளதால் இங்குள்ள பலரும் அங்கு சென்று விடுகின்றனர். வட இந்தியர்களுடைய வேலை தரமற்ற வேலை ஆகவே கூலியும் குறைவு. என்னுடைய வீட்டுப் பணிக்கு முதலில் வட இந்திய வேலையாட்களைத்தான் என்னுடைய கட்டட ஒப்பந்தக்காரர் அனுப்பினார். ஆனால் அவர்களுடைய வேலையின் தரத்தைப் பார்த்துவிட்டு இவர்கள் வேண்டாம் தமிழாட்கள்தான் வேண்டும் என்று நிர்பந்தித்தேன். தமிழர்கள் தினமும் எட்டு மணி நேரம்தான் வேலை செய்வார்கள், கூலியும் அதிகம். ஆனால் வேலை சுத்தமாக இருக்கும். இதுதான் வித்தியாசம். குறைந்த கூலிக்கு மாரடிப்பதாலும், முதலாளியை எதிர்த்து பேச திராணி இல்லாததால் மட்டுமே இவர்களை பணியமர்த்துகின்றனர் நம்முடைய முதலாளிகள்.

    ReplyDelete
  61. எதிர்காலத்தைப்பற்றி அவர்கள் என்ன நினைத்து தமிழ் நாட்டுக்கு வருகிறார்களோ? அவர்கள் வசிக்கும் நிலையைவிட, நன்றாக இருப்பதனால்தான் இங்கு வருகிறார்கள். அப்படியென்றால் அவர்களின் நிலையை நினைத்து பாவப்படதான் முடியும். ஆனால் அவர்கள் வந்தது, டாஸ்மாக், மொபைல் போன் எல்லாம் குற்றங்களை அதிகமாக்கிவிட்டது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  62. வியாசர்வாள்,

    உம்மோட ஊரைச்சுத்தும் விவாதங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல ஆரம்பிச்சால் , பெருசா போகும் ஆனால் அப்புறம் தமிழிளங்கோ சார், உம்மோடு சேர்த்து என்னையும் அடிச்சு தொறத்திடுவார் அவ்வ்!

    #//தமிழ்நாட்டுடன் ஒப்பிடுவது வெறும் அபத்தம். //

    உலக நாடுகளை மற்றும் அவற்றில் அகதிகளுக்கு கிடைக்கும் வசதிகளை ஒப்பிடக்கூடாது அபத்தம் என நான் முன்னரே ஒரு முறை உம்மிடம் சொன்னது நினைவில் இருக்கா?

    #//செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தியா போன்ற நாடுகளில்//

    அமெரிக்கா மட்டும் இயற்கையாக உருவாச்சா? 50 மாகாணங்களை சன்டைப்போட்டு தான் ஒட்டி வச்சிருக்காங்க.

    யு.கேயும் அப்படித்தான்.

    அது என்ன இந்தியா மட்டும் செயற்கையாக உருவாச்சுனு சொல்லிக்கிட்டு.

    #//ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்புகளில் எல்லோருக்கும் சமாமான உரிமை கொடுக்கப்படுவதில்லை.//

    இது நினைவில் இருந்தால் சரி தான்!

    //மற்றவர்களை குறைந்த சம்பளத்தில் வேலைக்கமர்த்துவதை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்தலாம், அதில் தவறேதுமில்லை.//

    இந்தியாவிலும் குறைந்த பட்ச ஊதிய சட்டமெல்லாம் இருக்கு,ஆனால் வேலையை செய்ய ஒத்துக்கொள்கிறவர் ,அதற்கு கீழானா ஊதியம் என்றாலும் ஏற்று செய்தால் ,அரசு ஒன்றும் செய்ய இயலாது.

    அரசு துறைகளிலேயே இது நடக்கிறது. கன்சாலிடேட் சாலரினு சொல்லிட்டு ரொம்ப கொஞ்ச ஊதியத்துல அரசு வேலையில் நெறைய பேரு இருக்காங்க.

    சர்வ சிக்‌ஷா அபியான் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், ரேஷன் கடை, போக்குவரத்து துறை,நெடுஞ்சாலை துறைனு எல்லாவற்றிலும் அரசே அடிமாட்டு சம்பளத்துல வேலைக்கு வைக்குது அவ்வ்!

    உமக்கு நாட்டு நெலவரம் எதுவும் தெரியாது ,ஆனால் எந்த ஊரு கோயிலில் ரெக்கார்ட் டான்ஸ் நடக்குதுனு கேட்டா நல்லா சொல்லுவீர் அவ்வ்!

    ReplyDelete
  63. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  64. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    // இங்கு கருத்துரைகள் இடும் பலரும் ஏதோ தமிழர்கள் வேலை செய்ய மறுப்பவர்கள் போலும், தகராறு செய்பவர்கள் போலும், சோம்பேறிகள் போலும் ஆகவேதான் வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள் என்பதுபோலும் சொல்வதை பார்க்கிறேன். ஆனால் அதுவல்ல உண்மை. நல்ல தரமான வேலை வேண்டுமென்றால் அதற்கு தமிழர்கள்தான் தேவை என்று நினைத்துத்தான் வட மாநிலங்களில் குறிப்பாக மும்பை, கொல்கொத்தா போன்ற நகரங்களில் தமிழர்களை கட்டிட பணிகளிலும், சாலை பணிகளிலும் அமர்த்துகின்றனர். அவர்கள் கேட்கும் கூலியையும் அங்குள்ளவர்கள் கொடுக்க தயாராக உள்ளதால் இங்குள்ள பலரும் அங்கு சென்று விடுகின்றனர்.
    வட இந்தியர்களுடைய வேலை தரமற்ற வேலை ஆகவே கூலியும் குறைவு. //

    தமிழர்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தையும் தனது அனுபவத்தையும் சொன்ன திரு டிபிஆர் ஜோசப் அய்யா அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  65. மறுமொழி > Packirisamy N said...
    சகோதரர் பக்கிரிசாமி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    //எதிர்காலத்தைப்பற்றி அவர்கள் என்ன நினைத்து தமிழ் நாட்டுக்கு வருகிறார்களோ? அவர்கள் வசிக்கும் நிலையை விட, நன்றாக இருப்பதனால்தான் இங்கு வருகிறார்கள்.
    அப்படியென்றால் அவர்களின் நிலையை நினைத்து பாவப்படதான் முடியும். ஆனால் அவர்கள் வந்தது, டாஸ்மாக், மொபைல் போன் எல்லாம் குற்றங்களை அதிகமாக்கிவிட்டது என்று நினைக்கிறேன். //

    ஆம் அய்யா! உழைத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வருபவர்களில் பலர் குடியால் திசைமாறிப் போய் விடுகின்றனர்.

    ReplyDelete
  66. மும்மையில் போயி தமிழர்கள் (தாராவி ஏரியாவில்) பொழைக்கிறாங்க! அவங்கல்லாம் நம்ம ஊர்ல இந்தச் சம்பளத்திற்கு வேலை பார்க்க மாட்டாங்களா? இவ்ளோ ஆள் பற்றக்குறை இருக்கும்போது நம்மாளுக ஏன் மும்பையில் போயி வாழ்றாங்கனு தெரியலை

    ReplyDelete
  67. ஒருவேளை இதுபோல் வர்ர வட இந்தியர்கள் தாழ்த்தப் பட்டவர்களோ? பிஹார் போன்ற மாநிலங்களில் உயர்சாதி வடக்கத்தானுக தாழ்த்தப்பட்டவர்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை. இப்படி மாநிலம் விட்டு மாநிலம் வந்தால் ஒரு வாழியா சாதி முத்திரை ஒழியுமே னு வந்துடுறாங்களோ என்னவோ!

    ReplyDelete
  68. மறுமொழி > வருண் said... ( 1 , 2 )

    பம்பாய் தாராவியில் இருப்பவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் அழைத்துச் செல்லப்பட்டு நிரந்தரமாகத் தங்கி விட்ட தமிழர்கள். இப்போது தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருபவர்களும் அவர்களைப் போல ஆகவும் வாய்ப்புகள் அதிகம்.

    சகோதரர் வருண் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!


    ReplyDelete
  69. எங்கள் ஊரிலும் உணவகத்தில், அரசு மற்றும் பல நிறுவனங்களில் கூலி வேலை, கடைகள், கட்டட வேலை என்று வெளி மாநில ஆட்கள் வந்து விட்டனர்

    ReplyDelete
  70. மறுமொழி > கோமதி அரசு said...

    // எங்கள் ஊரிலும் உணவகத்தில், அரசு மற்றும் பல நிறுவனங்களில் கூலி வேலை, கடைகள், கட்டட வேலை என்று வெளி மாநில ஆட்கள் வந்து விட்டனர் //

    இங்கிருப்பவர்கள் அங்கே போகிறார்கள். அங்கே இருப்பவர்கள் இங்கே வருகிறார்கள். கருத்துரை தந்த சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete