A ROOM
WITHOUT BOOKS IS LIKE A BODY WITHOUT A SOUL - CICERO
சின்ன வயதிலிருந்தே எனக்கு புத்தகம் வாசிப்பதிலும் , விலைக்கு வாங்குவதிலும்
ஆர்வம் அதிகம். வீட்டில் நிறைய புத்தகங்கள். அவ்வாறு சேர்த்தவைகளில் பல
புத்தகங்கள் இரவல் கொடுத்ததில் வாராமலே போய்விட்டன. 1977- இல் திருச்சியில் உள்ளே
வந்த புயல் – வெள்ளத்தில் நிறைய புத்தகங்கள்
சேறு படிந்து வீணாகி விட்டன. அதற்கு அப்புறமும் புத்தகம் வாங்கும் பழக்கம்
நிற்கவில்லை. வாடகை வீட்டில் குடியிருந்த போது , ஒவ்வொரு முறையும் வீடு மாறும்போது
மற்றவர்கள் கேட்கும் கேள்வி இத்தனை புத்தகங்களையும் படித்து இருக்கிறீர்களா
என்பதுதான். என்னிடம் இருக்கும் புத்தகங்கள் அனைத்துமே (அகராதிகள் தவிர) என்னால்
படிக்கப்பட்டவைதான். ஒரு சில புத்தகங்களில் உள்ள முக்கியமான வரிகள் எங்கு உள்ளன
என்று கூட நினைவில் உண்டு. இவ்வளவு புத்தகங்களையும் எனக்குப் பின் , எனது வீட்டில்
என்ன பண்ணுவார்கள் என்று தெரியவில்லை. எனவே படிப்படியாக இந்த புத்தகம் வாங்கும் பழக்கத்தை குறைத்து
வருகிறேன்.
நான் எடுத்த படங்கள்:
எனவே இப்பொழுது திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெறும் புத்தகக்
கண்காட்சிக்கு போவதா வேண்டாமா? என்று
குழப்பமாக இருந்தது. எனவே முதல்நாள் நிகழ்ச்சிக்கு செல்ல இயலவில்லை. அப்புறம் மனசு
கேட்காமல் வழக்கம் போல நேற்று (12.02.2014) சென்றேன். போட்டோ எடுக்க வேண்டும்
என்பதற்காக மாலை 3.45 மணிக்கே புத்தகக் கண்காட்சி சென்றேன். நல்ல வேளை கூட்டம்
இனிமேல்தான் வரும். ஒரு சில பள்ளி மாணவிகளும், கல்லூரி மாணவிகளும் மட்டுமே காணப்பட்டனர். அங்கே புத்தகக் கண்காட்சியில் கேனான் டிஜிட்டல் கேமரா (CANON POWERSHOT A800) வினால் எடுக்கப்பட்ட
புகைப்படங்கள் இவை.
(படம் மேலே) டிக்கெட் கொடுக்குமிடம்.
(படம் மேலே) இதுவும் அது.
(படம் மேலே) ஸ்டால்
(படம் மேலே) ஸ்டால்
(படம் மேலே) ஸ்டால்
(படம் மேலே) ஸ்டால்
(படம் மேலே) புத்தகக கண்காட்சியின் இன்னொரு தோற்றம்
நான் வாங்கிய நூல்கள்:
இவ்வளவு தூரம்
வந்த பிறகு ஒருசில புத்தகங்களாவது வாங்காமல் போனால் எப்படி.? எனது பிள்ளைகள்
சிறுவர்களாக இருந்தபோது அவர்களுக்காக வாங்கிய லயன் காமிக்ஸ் கதைகள், இப்போது அழகிய வண்ணப் படங்களுடன்
தொகுப்புகளாக வந்துள்ளன. அவற்றுள் ஒன்று வாங்கினேன். நூலின் பெயர் ”லயன் ALL NEW ஸ்பெஷல்”. நான் சிறுவயதில் படித்த வேதாளன், மந்திரவாதி
மண்ட்ரக் கதைகளைப் பற்றிக் கேட்டேன். அவற்றையும் வெளியிட வாய்ப்பு இருப்பதாகச்
சொன்னார்கள்.
அடுத்தது “ மேயோ கிளினிக் “ என்ற உடல்நலக் கையேடு.
இன்னொன்று “கலிவரின் பயணங்கள்” (தமிழில் யூமா வாசுகி) NCBH வெளியீடு.
கடைசியாக இரா. முருகன் எழுதிய ”அரசூர் வம்சம்” (கிழக்கு பதிப்பகம்)
சில தகவல்கள்:
முன்பெல்லாம்
புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு பதிப்பகமும் தங்களது நூல் விலைப்பட்டியல் ( CATALGUE ) தருவார்கள். இப்போது அந்த விவரங்களை இணையதளத்தில்
வெளியிடுவதாலும், விலைப்பட்டியலை நிறையபேர் வாங்கி வாசலிலேயே போட்டு விட்டு
போவதாலும் இப்போது தருவதில்லை. கிழக்கு பதிப்பகம், மற்றும் அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட
விலைப்பட்டியல் கிடைத்தது.
உணவுத் திருவிழா:
அங்கு புத்தகக் கண்காட்சியோடு உணவுத் திருவிழாவும் சேர்த்தே நடைபெறுகிறது. நான் சென்ற நேரம் அப்போதுதான் உணவுக் கடைகளை தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. ஒரு கடையில் மசாலாபூரி தயார் நிலையில் இருந்தது. நல்ல காரம். எனக்குப் பிடித்தமான காரம். மாலை ஆறு மணிக்குள் அங்குள்ள எல்லா கடைகளையும் தொடங்கி விடுவார்கள். மேடை நிகழ்ச்சிகளும் தொடங்கி விடும். எனக்கு வேறு முக்கிய வேலைகள் இருந்ததால், அவற்றில் கலந்து கொள்ளவில்லை.
வரும் 14 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி முடிய தஞ்சையில் கிங்ஸ் ரோட்டரி கிளப் சார்பாக
புத்தகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. முடிந்தால் அங்கு சென்று வர வேண்டும்.
உங்கள் புத்தக ஆர்வம் வியக்க வைக்கிறது.... வாழ்த்துக்கள் ஐயா... படங்கள் அனைத்தும் அருமை...
ReplyDeleteசென்னை, திருப்பூர், நம்பியூர் என பல இடங்களில், மில்களில் வேலை பார்க்கும் போது, அங்குள்ள நூலகத்திற்கு, நாவல்கள் உட்பட படித்து விட்ட நூல்களை / கொடுத்து விடுவது என் வழக்கம்... முக்கியமான, வீட்டில் உள்ளவர்கள் படிக்க வேண்டிய, என்றும் தேவையானதை மட்டும் வைத்துள்ளேன்...
கிங்ஸ் ரோட்டரி கிளப் - தஞ்சை புத்தகக் கண்காட்சி பகிர்வையும் எதிர்ப்பார்கின்றேன்... நன்றி ஐயா...
புத்தகக் கண்காட்சி படங்களின் பகிர்வுகள்..கண்காட்சிக்குள் சென்று பார்த்த உணர்வைத்தருகின்றன..ஆர்வமான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
ReplyDeleteமிகவும் பயனுள்ள அழகான பதிவு. படங்கள் எல்லாமே அருமையாக உள்ளன. கண்காட்சிக்குள் நேரில் சென்று பார்த்து வந்த உணர்வைத்தருகின்றன. பாராட்டுக்கள், ஐயா. வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteதிரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொன்னதையே வழி மொழின்றேன். பதிவைப்படித்து முடித்த பின், நாங்களே உள்ளே சென்று புத்தகக் கண்காட்சியைப் பார்த்தது போல் இருந்தது. புகைப்படங்கள் வழக்கம்போல் உங்கள் கைவண்ணத்தால் மிளிர்கின்றன. வாழ்த்துக்கள்! கலிவரின் பயணங்களை, திரும்பவும் படிக்க ஆசை. S.S.L.C படிக்கும்போது ஆங்கிலத்தில் துணைப்பாடமாகப் படித்ததை மறக்க முடியுமா என்ன?
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா.
பதிவைபார்த்தபோது.. நான் அங்கு சென்று வந்த ஒரு நினைவுதான் என்மனதில் தோன்றுகிறது...நீங்கள் இருக்கும் காலத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகம் இருப்பின் தங்களின் ஊரில் உள்ள வாசிக சாலைக்கு அன்பளிப்பு செய்தால் நன்று ஏன் என்றால் அங்கு பாதுகாப்பாக இருக்கும்... படங்கள் அனைத்தும் அழகு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// உங்கள் புத்தக ஆர்வம் வியக்க வைக்கிறது.... வாழ்த்துக்கள் ஐயா... படங்கள் அனைத்தும் அருமை...//
சகோதரர் திண்டுக்கல் தனபாலனின் கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
// சென்னை, திருப்பூர், நம்பியூர் என பல இடங்களில், மில்களில் வேலை பார்க்கும் போது, அங்குள்ள நூலகத்திற்கு, நாவல்கள் உட்பட படித்து விட்ட நூல்களை / கொடுத்து விடுவது என் வழக்கம்... முக்கியமான, வீட்டில் உள்ளவர்கள் படிக்க வேண்டிய, என்றும் தேவையானதை மட்டும் வைத்துள்ளேன்...//
உங்கள் நல்ல செய்கைக்கு தலை வணங்குகிறேன்! இதனை ஒரு நல்ல யோசனையாக ஏற்றுக் கொள்கிறேன்!
// கிங்ஸ் ரோட்டரி கிளப் - தஞ்சை புத்தகக் கண்காட்சி பகிர்வையும் எதிர்ப்பார்கின்றேன்... நன்றி ஐயா... //
நிச்சயம் தஞ்சை புத்தகக் கண்காட்சியைப் பற்றி சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தனது வலைப் பதிவினில் எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு ஊரிலும் உள்ள பதிவர்கள் இப்படி தங்கள் ஊர் புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுத வேண்டும்
மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete// புத்தகக் கண்காட்சி படங்களின் பகிர்வுகள்..கண்காட்சிக்குள் சென்று பார்த்த உணர்வைத்தருகின்றன..ஆர்வமான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..! //
ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரியின் கருத்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅய்யா நலமா? தங்களின் ஊக்கம் தரும் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி . வே.நடனசபாபதி said...
ReplyDelete// திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொன்னதையே வழி மொழின்றேன். பதிவைப்படித்து முடித்த பின், நாங்களே உள்ளே சென்று புத்தகக் கண்காட்சியைப் பார்த்தது போல் இருந்தது. புகைப்படங்கள் வழக்கம்போல் உங்கள் கைவண்ணத்தால் மிளிர்கின்றன. வாழ்த்துக்கள்!//
அய்யா வே நடனசபாபதி அவர்களது கருத்துரைக்கு நன்றி! விட்டுப் போன இன்னொரு படத்தினையும் (சிவப்பு சட்டைக்காரர்) இப்போது இணைத்துள்ளேன்.
// கலிவரின் பயணங்களை, திரும்பவும் படிக்க ஆசை. S.S.L.C படிக்கும்போது ஆங்கிலத்தில் துணைப்பாடமாகப் படித்ததை மறக்க முடியுமா என்ன? //
அப்போது நீங்கள், நான் படித்தது NON DETAILED – சிறுகதை வடிவம். இந்த நூல் முழுநூலின் மொழிபெயர்ப்பு. (301 பக்கங்கள்)
புத்தகக் கண்காட்சி விபரங்கள் அருமை! தஞ்சை புத்தகக் கண்காட்சிக்கு வரும்போது அவசியம் எங்கள் இல்லத்திற்கு வாருங்கள். 17ந்தேதி முதல் 20ந்தேதி வரை தஞ்சையில் இருப்பேன்.
ReplyDeleteபுத்தகக் கண்காட்சி படங்கள் , நீங்கள் வாங்கி புத்தகங்கள் எல்லாம் அருமை.
ReplyDeleteபுத்தகக் கண்காட்சி போய் விட்டு வாங்காமல் வர முடியுமா? நான் புத்தகக்கண்காட்சி சென்றால் புத்தகங்கள் வாங்குவேன் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பரிசு அளிக்க.
அவர் அவர்களுக்கு பிடித்த மாதிரி புத்தகங்களை பரிசளித்து விடுவேன்.
உங்கள் மண் உறுதியிலிருந்து தளர்ந்து புத்தகம் வாங்கி விட்டீர்களே! அது தான் இந்த புத்தகங்கள் செய்யும் மேஜிக். நம்மால் வாங்காமல் நகர முடியாது போலிருக்கிறது.
ReplyDeleteஉங்கள் புத்தகத் திருவிழா பற்றிய செய்தி அருமை சார்.
மறுமொழி > Rupan com said...
ReplyDelete// வணக்கம் ஐயா. //
கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்!
// பதிவை பார்த்தபோது.. நான் அங்கு சென்று வந்த ஒரு நினைவுதான் என்மனதில் தோன்றுகிறது...//
கவிஞரின் பாராட்டிற்கு நன்றி!
//நீங்கள் இருக்கும் காலத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகம் இருப்பின் தங்களின் ஊரில் உள்ள வாசிக சாலைக்கு அன்பளிப்பு செய்தால் நன்று . ஏன் என்றால் அங்கு பாதுகாப்பாக இருக்கும்... படங்கள் அனைத்தும் அழகு பகிர்வுக்கு வாழ்த்துக்கள் //
உங்கள் ஆலோசனைக்கு நன்றி! நினைவில் கொள்கின்றேன்!
மறுமொழி > மனோ சாமிநாதன் said...
ReplyDeleteசகோதரி மனோ சாமிநாதன் அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > கோமதி அரசு said...
ReplyDelete// புத்தகக் கண்காட்சி படங்கள் , நீங்கள் வாங்கி புத்தகங்கள் எல்லாம் அருமை.//
சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு நன்றி!
// புத்தகக் கண்காட்சி போய் விட்டு வாங்காமல் வர முடியுமா? நான் புத்தகக்கண்காட்சி சென்றால் புத்தகங்கள் வாங்குவேன் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பரிசு அளிக்க. அவர் அவர்களுக்கு பிடித்த மாதிரி புத்தகங்களை பரிசளித்து விடுவேன். //
புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை உண்டு பண்ணும் நல்ல பழக்கம்.
மறுமொழி > rajalakshmi paramasivam said...
ReplyDelete// உங்கள் மன உறுதியிலிருந்து தளர்ந்து புத்தகம் வாங்கி விட்டீர்களே! அது தான் இந்த புத்தகங்கள் செய்யும் மேஜிக். நம்மால் வாங்காமல் நகர முடியாது போலிருக்கிறது. //
ஆமாம் சகோதரி! இந்த புத்தகங்கள் செய்யும் மாஜிக் நம்மை எப்படியும் வாங்க வைத்து விடும்.
// உங்கள் புத்தகத் திருவிழா பற்றிய செய்தி அருமை சார். //
சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கு நன்றி!
எனக்கும் இந்த புத்தகம் வாங்கும் பழக்கம் உண்டு. இதனாலேயே எனக்கும் வீட்டம்மாவுக்கும் அடிக்கடி தகராறு வரும். நானும் அடிக்கடி வீடு மாற்ற வேண்டிய அலுவலில் இருந்ததால் ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும் உங்க புஸ்தகங்கள நீங்களே அடுக்கீங்க, என்னால் முடியாதுன்னு சொல்லிருவாங்க. இனி அந்த தொல்லை இல்லை. ஆனா நான் பெரும்பாலும் கதைப் புத்தகங்களையே விரும்பிப் படிப்பதால் கண்காட்சியிலெல்லாம் வாங்குவதில்லை. நமக்கு சென்னை மூர்மார்க்கெட்தான் இப்பவும் ராசி. பைரட்டட் ஆங்கில நாவல்கள் அங்குதானே எளிதில் கிடைக்கிறது :))
ReplyDeleteமறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
ReplyDeleteஅய்யா டிபிஆர்.ஜோசப் அவர்களுன் கருத்துரைக்கு நன்றி!
புத்தக ஆர்வலர்களின் கைகளைக் கட்டுதல் சாதியமே இல்லை. என்னதான் உறுதிமொழி எடுத்தாலும் புர்த்தகங்களைப் பார்த்தமாத்திரத்தில் தளர்ந்துவிடுவது உண்மை. புத்தகக் கண்காட்சி பற்றிய படங்கள் நேரில் கண்ட நிறைவைத் தருகின்றன. பிறந்த மண்ணைத் தரிசிக்கும் பேறு தங்களால் இன்றெனக்குக் கிடைத்தது. மிக்க நன்றி ஐயா.,
ReplyDeleteநீங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.
ReplyDeleteஎல்லாம் பார்த்து அனுபவித்து வாங்கமுடியும்.
நாமிங்கு டென்மார்க்கில் என்ன செய்ய முடியும்!
உங்களைப்பார்த்து ஆசையைத் தீர்க்க முடியும்.
அருமையான பதிவு. படங்களும் சிறப்பு இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மறுமொழி > கீத மஞ்சரி said...
ReplyDeleteசகோதரி கீத மஞ்சரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
ReplyDeleteமறுமொழி > kovaikkavi said...
சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
தங்களின் விருப்பப் படியே எழுதிவிட்டேன் ஐயா
ReplyDeleteத.ம.3
ReplyDeleteதங்களின் படிக்கும் ஆர்வம் புரிகிறது.வண்ணவண்ண படங்கள் எடுப்பதிலும் நல்ல தேர்ச்சியில் உள்ளீர்கள் அதனைப் படங்களும் அற்புதமாய் இருக்கிறது
ReplyDeleteஅய்யா வணக்கம். தங்களின் புத்தக ஆர்வம் மகிழ்வளிக்கிறது. உங்களைத் தொடரும் 101ஆவது நண்பனாக நான் பதிவுசெய்திருக்கிறேன். நன்றி
ReplyDeleteமறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDelete// தங்களின் விருப்பப் படியே எழுதிவிட்டேன் ஐயா //
சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
ReplyDelete//தங்களின் படிக்கும் ஆர்வம் புரிகிறது.வண்ணவண்ண படங்கள் எடுப்பதிலும் நல்ல தேர்ச்சியில் உள்ளீர்கள் அதனைப் படங்களும் அற்புதமாய் இருக்கிறது //
சகோதரர் கவியாழி கண்ணதாசன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > நா.முத்துநிலவன் said...
ReplyDelete// அய்யா வணக்கம். தங்களின் புத்தக ஆர்வம் மகிழ்வளிக்கிறது. உங்களைத் தொடரும் 101ஆவது நண்பனாக நான் பதிவுசெய்திருக்கிறேன். நன்றி //
அய்யா கவிஞர் ஆசிரியர் நா முத்துநிலவன் அவர்களுக்கு நன்றி!
அடடா..... புத்தகக் கண்காட்சி நடந்தது தெரியாது போயிற்று. 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை திருச்சியில் தான் இருந்தேன்......
ReplyDeleteபுத்தகம் வாங்காது இருக்கமுடிவதில்லை என்னாலும்.....
படங்கள் நன்று!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : இவர்கள் எல்லாம் இருக்கும் வரை தமிழ் அழியாது!!
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநீங்கள் திருச்சியில் இருந்தும் புத்தகக் கண்காட்சிக்கு வராததால் எனக்கும் உங்களை சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஇந்தவாரம் வலைச்சரம் ஆசிரியை சகோதரி ராஜியின் அறிமுகப் பதிவர்களில், என்னுடைய பெயரும் இருக்கும் தகவலை எனது வலைத்தளத்தில் தெரிவித்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!
வணக்கம் ஐயா
ReplyDeleteநான் திருச்சி மாவட்டம் மணப்பாறை தான். இந்த புத்தக கண்காட்சி எனக்கு தெரியாமல் போய்விட்டது. தங்களின் புத்தக ஆர்வம் நாங்களெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயம். படங்களுடன் கூடிய அழகான பதிவுக்கு நன்றிகள் ஐயா..
மறுமொழி > அ. பாண்டியன் said...
ReplyDelete// வணக்கம் ஐயா நான் திருச்சி மாவட்டம் மணப்பாறை தான். //
தம்பி பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்! நான் எனது படிப்பை முடித்து முதன் முதல் வேலை பார்த்த ஊர் மணப்பாறைதான். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!