எனது நெருங்கிய உறவினர்கள் பலரும் இருப்பது தஞ்சை மாவட்டத்தில். பெரும்பாலும்
விவசாயிகள். அவர்கள் உடம்புக்கு ஏதாவது என்றால் அருகிலுள்ள மருத்துவமனையில்
பார்ப்பார்கள். உடல்நிலை ரொம்பவும் மோசம் என்றால் உடனே நோயாளியை எடுத்துச்
செல்லும் இடம் ” தஞ்சை
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை” ( THANJAVUR MEDICAL
COLLEGE HOSPITAL )தான். இவர்களுக்கு மட்டுமல்ல தஞ்சை மாவட்டம் அதைச் சுற்றியுள்ள மற்ற
மாவட்டக்காரர்களுக்கும் மிகவும் நம்பிக்கையான மருத்துவமனை இதுவே ஆகும். விபத்து
அல்லது விஷம் குடித்தல், வெட்டு குத்து போன்ற நிலைகளில் வேறு எங்கும் செல்ல
மாட்டார்கள் நேரே இங்குதான். ஒரு அரசு மருத்துவமனை மக்கள் மத்தியில் நம்பிக்கைக்கு
பாத்திரமாக இருப்பது நல்ல விஷயம்தான். எல்லோரும் இந்த மருத்துவமனையை “மெடிக்கல்” (MEDICAL) என்றுதான்
அழைக்கிறார்கள்.
இவ்வளவு மருத்துவ வசதியை இலவசமாக செய்து தரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை வருகின்ற
மக்கள் சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை என்பது வருத்தமான விஷயம். இதனைக் கண்கூடாகக்
காணலாம். அங்கு வரும் மக்களிடம் சுத்தம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.
மருத்துவமனை வரலாறு:
புகைப் படங்கள்:
இரண்டு வாரங்களுக்கு முன், எனது உறவினர் பையன் ஒருவன் பள்ளி இடைவேளையின்போது
பெஞ்சுகளின் மீது ஏறி விளையாடியபோது கீழே விழுந்து விட்டான். அவனுக்கு அடி
வயிற்றில் நல்ல அடி. 108 ஆம்புலன்சு மூலம் இங்கே கொண்டு வந்தார்கள். அவனை இரண்டு
முறை சென்று பார்த்தேன். மறுபடியும் சென்ற வாரம் அங்கு சென்றபோது மெடிக்கலில் சில
கட்டிடங்களை படம் எடுத்தேன்.
படம்: (மேலே) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆரம்பகால கட்டிடம்
படம்: (மேலே) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடம்
படம்: (மேலே) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடம் ( புற நோயாளிகள் பிரிவு )
படம்: (மேலே) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆரம்பகால கட்டிடம்
படம்: (மேலே) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடம்
படம்: (மேலே) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடம் ( புற நோயாளிகள் பிரிவு )