Friday, 11 October 2013

பழைய நினைப்புதான் …


ஹலோ! ... நான்தான் டெப்டி கலெக்டர் பேசறேன். யார் பேசறது  - என்பார் அவர். அதே மாதிரி யாரிடமிருந்தாவது  போன் வந்தால் கூட “ ஆமாம் நான்தான் டெப்டி கலெக்டர் பேசறேன் சொல்லுங்க “ என்பார். அவர் ஒன்னும் இப்போது டெப்டி கலெக்டர் கிடையாது. அவர் அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்று ஏழு அல்லது எட்டு வருடங்கள் ஆனாலும் அவர் அடிக்கடி தன்னை ஒரு டெப்டி கலெக்டராகவே பேச்சில் காட்டிக் கொள்வார். பேச்சில் மட்டுமல்ல உடை உடுத்துவதிலும்தான். வெளியில் எங்காவது சென்றால் வெளுப்பு கலரில் சபாரி உடை. மேல் பாக்கெட்டில் நீலம், சிவப்பு, பச்சை இங்க் பேனாக்கள். முகம் வழுவழுவென்று தோன்ற தினமும் ஷேவிங். பெர்பியூம்டு செண்ட். கையில் கறுப்பு லெதர் ஹேண்ட் பேக். ஒரு பழைய அம்பாசிடர் காரை இன்னும் விடாப்பிடியாக வைத்து இருக்கிறார்.

இதில் ஒன்றும் தப்பில்லை. இந்த வயதிலும் இவர் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் என்றால் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். இந்த சுறுசுறுப்பிற்கு காரணம் அவர் இன்னும் தன்னை அந்த பழைய “ரேங்க்கிலேயே வைத்துக் கொள்வதுதான். இவரைப் போன்று நிறையபேர்.

எனக்குத் தெரிந்த கிராமத்தில் ஒருவர் இருந்தார். அவர் ஒரு ஆசிரியராக இருந்து கடைசியோ கடைசியாக தலைமை ஆசிரியராக இருந்து நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வு பெற்றவர்.. அவர் எப்போதும் இருப்பது ஊருக்கு மூலையில் அவர் வாங்கிப் போட்ட வயலில் இருக்கும் பம்ப் செட்டில்தான். பென்சன் வாங்க அல்லது வேறு ஏதாவது ஜோலி என்றால் தன்னிடம் இருக்கும் டீவீஎஸ் மொபட்டை எடுத்துக் கொண்டு அருகிலிருக்கும் டவுனுக்குப் போய் வருவார். பெரும்பாலும் பம்ப் செட்டிற்கான ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கத்தான் இருக்கும். காரணம் அடிப்படையில் அவர் ஒரு விவசாயி. அந்த நினைப்புதான் அவரிடம் இருந்தது.


                                                            ( Picture: kaiser Wilhelm )

சிலர் மீசையை ந்ன்கு பெரிதாக புசுபுசுவென்று வைத்து இருப்பார்கள். அதிலும் ராணுவம், காவல்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த புசுபுசு மீசை மீது ரொம்பவும் ஆசை. எப்போது பார்த்தாலும் மீசையை தடவிக் கொண்டோ அல்லது முறுக்கிக் கொண்டோ இருப்பார்கள். ரிடையர்டு ஆனாலும் பழைய பந்தா போகாது. மீசைக்கு சாயம் ஏற்றிக் கொண்டு மிரட்டலாக தோற்றமளிப்பார்கள். எத்தனை நாளைக்குதான் அது அப்படியே இருக்கும். வயது ஆக ஆக மீசையில் இருக்கும் மயிர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்து கிழடு தட்டி விடும். வேறு வழி இல்லை. அப்புறம் மீசைக்கு டாட்டாதான்.

எனது பணிக்காலத்தில் நடந்த ஒரு சம்பவம். நான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு நகரக் கிளைக்கு மாற்றலாகிச் சென்றேன். அதே போல் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரும் அந்த கிளைக்கு மாற்றலாகி வந்து இருந்தார். அவர் பணம் வாங்கும் கொடுக்கும் கவுண்டரில் டெல்லர் (TELLER) ஆக இருந்தார். நான் அவருடைய கவுண்டருக்கு அருகில் பாஸிங் பிரிவில் ஆக்டிங் ஆபிசர். ஒருநாள் மேலே சொன்ன டெப்டி கலெக்டரைப் போன்ற வாடிக்கையாளர் ஒருவர் வந்தார். நாங்கள் இருவருமே அவரை அப்போதுதான் பார்க்கிறோம். பணம் எடுப்பதற்காக சலானை பூர்த்தி செய்து டெல்லர் கவுண்டரில் கொடுத்தார். சலான் பச்சை இங்கில் பூர்த்தி செய்யப்பட்டு இருந்தது. உடனே நண்பர் அவரிடம்

“ சார் பச்சை இங்கில் எல்லாம் சலானை பூர்த்தி செய்யக் கூடாது. கறுப்பு அல்லது நீலம் கலரில்தான் இருக்க வேண்டும் என்றார்.

அவரோ “ நான் இத்தனை நாளா இந்த பச்சை இங்கில்தான் சலானை பூர்த்தி செய்வது வழக்கம். இப்போது  புதுசாக சொல்கிறீர்கள் ‘ என்று சொன்னார்.

நண்பரோ சார்! பச்சை இங்கில் கெஜட்டேட் ஆபிசர்கள்தான் கையெழுத்து போட வேண்டும். நீங்கள் போடக் கூடாது “ என்றார். அந்த வாடிக்கையாளர் ஒரு கெஜட்டேட் ஆபிசராக இருந்து ஓய்வு பெற்றவர். எனவே டெல்லர் கவுண்டரில் ஒரே வாக்குவாதம். சத்தம். நான் பாஸிங் ஆபிசர் என்பதால் அவரிடம் பொறுமையாக சாதாரணமாக பச்சை இங்க்கில் கெஜட்டேட் ஆபிசர் மட்டும் கையெழுத்து போடுவார்கள் என்று சொன்னேன். அவரோ கேட்பதாக இல்லை. எனவே இந்த விவகாரம் கிளை மேலாளரிடம் சென்றது. கிளை மேலாளர் சலானில் “PAY என்று ஒப்புதல் தந்து அன்றைய பிரச்சினையைத் தீர்த்தார். அத்தோடு நில்லாமல் மண்டல அலுவலகத்திற்கு போன் செய்து வாடிக்கையாளர் பிரச்சினையைச் சொன்னார். அவர்கள் ரொம்பவும் கூலாக வாடிக்கையாளர் எந்த கலர் இங்கில்  கையெழுத்திட்டாலும் ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள். எனது டெல்லர் நண்பர் பார்த்தார். ஒரு பச்சை இங்க் பேனா வாங்கினார். அங்கு வரும் பெரும்பாலான துப்புரவு தொழிலாளர்கள் சலானை பூர்த்தி செய்ய அவரிடம் பேனா கேட்பது வழக்கம். அவர்களிடம் அவர் அந்த பச்சை இங்க் பேனாவைத்தான் கொடுப்பார். அவர் இருக்கும் வரை துப்புரவு தொழிலாளர்கள் பச்சை இங்கில்தான் கையெழுத்து போட்டனர்.

எல்லாவற்றையும் நினைக்கும் போது “ பதினாறு வயதினிலே “ திரைப்படத்தில் வரும் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாட்டில் வரும் “பழைய நினைப்புதான் பேராண்டி பழைய நினைப்புதான்“ என்ற வாசகம் ஞாபகம் வந்தது.

( குறிப்பு: பதிவு பெற்ற அதிகாரிகள் (GAZETTED OFFICERS)  பச்சை மையினாலோ அல்லது இன்ன கலர் மையினாலோதான் கையெழுத்து இட வேண்டும் என்று அரசு உத்தரவு கிடையாது. எழுத்தர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு வித்தியாசம் தெரிவதற்காக பச்சை மையினால் அதிகாரிகள் கையெழுத்தை இட்டார்கள் )

( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )


47 comments:

 1. பழைய நினைப்பு தான்... மாற முடியாத / மாற்ற முடியாத நினைப்புகள்...!

  ReplyDelete
 2. ஒய்வு பெற்ற பின்பே இந்த அதிகாரம் என்றால் பணியில் இருக்கும்போது எப்படி எல்லாம் நடந்திருப்பார்களோ.? இவரைப் போன்றவர்கள் ஒய்வு பெற்ற பின் அலுவலகம் வரும்போது அலுவலக உதிவியாளர் கூட மதிப்பதில்லை. வேண்டுமென்றே அலைக்கழிப்பதும் உண்டு. பச்சை மை பயன்படுத்துவது பற்றி ஒரு அரசாணை கூட உண்டு. உங்கள் நண்பர் செய்த செயல் நல்ல பதிலடி.

  ReplyDelete
 3. அவர் இருக்கும் வரை துப்புரவு தொழிலாளர்கள் பச்சை இங்கில்தான் கையெழுத்து போட்டனர்.//இது பொருந்தாத விஷயமாச்சே

  ReplyDelete
 4. இப்படி இருக்கும் பலரை தினம் தினம் சந்திக்கிறேன்/தொலைபேசியில் அவர்களுடன் பேசுகிறேன். நேற்று கூட ஒரு 84 வயது பெரியவர் - தொலைபேசியில் இப்படித்தான் பேசினார். வயது காரணமாக பொறுமையாக இருக்க வேண்டியிருந்தது.


  பச்சை நிறம் பற்றி சில அரசாங்க ஆணைகள் இருக்கின்றன. பார்த்து சொல்கிறேன்.

  ReplyDelete
 5. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
  // பழைய நினைப்பு தான்... மாற முடியாத / மாற்ற முடியாத நினைப்புகள்...! //

  சகோதரர் திண்டுக்கல் தனபாலன் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 6. மறுமொழி > T.N.MURALIDHARAN said...
  // ஒய்வு பெற்ற பின்பே இந்த அதிகாரம் என்றால் பணியில் இருக்கும்போது எப்படி எல்லாம் நடந்திருப்பார்களோ.? இவரைப் போன்றவர்கள் ஒய்வு பெற்ற பின் அலுவலகம் வரும்போது அலுவலக உதிவியாளர் கூட மதிப்பதில்லை. வேண்டுமென்றே அலைக்கழிப்பதும் உண்டு.//

  சகோதரர் மூங்கில் காற்று முரளிதரன் அவர்களின் வருகைக்கு நன்றி! அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வரை பழைய நினைப்பில் தவறில்லை.

  // பச்சை மை பயன்படுத்துவது பற்றி ஒரு அரசாணை கூட உண்டு. உங்கள் நண்பர் செய்த செயல் நல்ல பதிலடி. //


  பச்சை மை பயன்படுத்துவது பற்றி அரசாணை இருப்பதாகக் கேள்விப் பட்டு இருக்கிறேன். அந்த சமயத்தில் கூட சிலரிடம் கேட்டுப் பார்த்தேன். யாராலும் சரியாகச் சொல்ல முடியவில்லை.

  ReplyDelete
 7. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
  // அவர் இருக்கும் வரை துப்புரவு தொழிலாளர்கள் பச்சை இங்கில்தான் கையெழுத்து போட்டனர்.//இது பொருந்தாத விஷயமாச்சே //

  கவிஞர் கவியாழி கண்ணாதாசன் கருத்துரைக்கு நன்றி! பொது மக்கள் இன்ன கலர் மையினால்தான் கையெழுத்து இட வேண்டும் என்றோ அல்லது பச்சை மையினால் கையெழுத்து இடுவது தவறு என்றோ எங்கும் அரசாணை இல்லை.

  ReplyDelete
 8. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
  // இப்படி இருக்கும் பலரை தினம் தினம் சந்திக்கிறேன்/ தொலைபேசியில் அவர்களுடன் பேசுகிறேன். நேற்று கூட ஒரு 84 வயது பெரியவர் - தொலைபேசியில் இப்படித்தான் பேசினார். வயது காரணமாக பொறுமையாக இருக்க வேண்டியிருந்தது. //

  சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நான் பணியில் இருந்தபோது இது போல் பலரை அடிக்கடி சந்தித்து இருக்கிறேன். மூத்தவர்கள் என்ற முறையில் அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுப்பேன். ஒரு சிலர்தான் விதிமுறைகளை மீறி எதையாவது செய்யச் சொல்லுவார்கள். நான் மறுத்து விடுவேன்.

  //பச்சை நிறம் பற்றி சில அரசாங்க ஆணைகள் இருக்கின்றன. பார்த்து சொல்கிறேன். //

  பிரச்சினை வந்த சமயம் நானும் இதுபோல் ஆணை இருக்கிறதா என்று கேட்டுப் பார்த்தேன். யாராலும் சொல்ல இயலவில்லை. நீங்கள் அந்த அரசாங்க ஆணைகள் பற்றி சொன்னால் உபயோகமாக இருக்கும்.

  ReplyDelete
 9. அவர்கள் ரொம்பவும் கூலாக வாடிக்கையாளர் எந்த கலர் இங்கில் கையெழுத்திட்டாலும் ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள்.

  பிரச்சினையை மிக சுலபமாக கையாண்ட விதம வியப்பளிக்கிறது ..!

  ReplyDelete
 10. பதவி தவிர மதிக்கத் தக்க விஷயம்
  ஏதுமில்லையெனில் அதை வைத்துக் கொண்டுதானே
  ஓட்ட வேண்டியிருக்கிறது
  இவர்கள் பணியில் இருந்த காலத்தில் நிச்சயம்
  இவர்களால் பதவி பெருமையடைந்திருக்காது
  இவர்கள்தான் அடைந்திருப்பார்கள்
  சுவாரஸ்யமான பகிர்வு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. எனக்கும் வங்கியில் இருந்தபோது இதுபோன்ற பல அனுபவங்கள் உண்டு.சுவாரஸ்யமான
  பதிவு..

  ReplyDelete
 12. ஓய்வு பெற்றதை ஏற்றுக் கொள்ளும் மனப்பகுகுவம் வரவேண்டும்...எங்கள் பழைய தலைமை ஆசிரியர் கூட அபபடித்தான்..

  ReplyDelete
 13. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
  // அவர்கள் ரொம்பவும் கூலாக வாடிக்கையாளர் எந்த கலர் இங்கில் கையெழுத்திட்டாலும் ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள்.
  பிரச்சினையை மிக சுலபமாக கையாண்ட விதம வியப்பளிக்கிறது ..! //

  நாம் சீரியசாக நினைக்கும் விஷயத்தில் மேலிடத்தில் எப்போதுமே அலட்டிக் கொள்ள மாட்டார்கள். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 14. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
  // பதவி தவிர மதிக்கத் தக்க விஷயம் ஏதுமில்லையெனில் அதை வைத்துக் கொண்டுதானே ஓட்ட வேண்டியிருக்கிறது
  இவர்கள் பணியில் இருந்த காலத்தில் நிச்சயம் இவர்களால் பதவி பெருமையடைந்திருக்காது இவர்கள்தான் அடைந்திருப்பார்கள் சுவாரஸ்யமான பகிர்வு தொடர வாழ்த்துக்கள் //

  அன்பு கவிஞர் ரமணி S அவர்களுக்கு நன்றி. எல்லோரையும் அப்படி சொல்ல இயலாது. ஒன்றிரண்டு பேர் அப்படித்தான். எப்போதும் தொடரும் தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி!

  ReplyDelete
 15. மறுமொழி > அபயாஅருணா said...
  // எனக்கும் வங்கியில் இருந்தபோது இதுபோன்ற பல அனுபவங்கள் உண்டு.சுவாரஸ்யமான
  பதிவு.. //
  அபயா அருணா அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நீங்களும் வங்கித் துறையில் இருந்தவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி! உங்கள் PROFILE – இல் கொஞ்சம் விவரம் (GENDER) தந்தால் நல்லது. ஏனெனில் உங்கள் பெயரில் எனக்கு குழப்பம் வருகிறது.

  ReplyDelete
 16. மறுமொழி > கலியபெருமாள் புதுச்சேரி said...
  // ஓய்வு பெற்றதை ஏற்றுக் கொள்ளும் மனப்பகுகுவம் வரவேண்டும்...எங்கள் பழைய தலைமை ஆசிரியர் கூட அபபடித்தான்.. //

  சகோதரர் கலியபெருமாள் புதுச்சேரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 17. என் உறவினர் ஒருவர் இப்படித்தான். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் இவர் கீழ் இருந்தவர்கள் யாராவது வீட்டிற்கு வந்தால் அவர்களை நிற்க வைத்துத்தான் பேசுவார். உட்காரச் சொல்ல மாட்டார். 'கடுகு சிறுத்தாலும் காரம் போகாது' என்பார்களே அதுபோல பதவியில் இல்லாவிட்டாலும் பதவியில் இருக்கும்போது காட்டிய பந்தாவை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் மேலதிகாரிகள் இவர்களை இப்படித்தான் நடத்துவார்கள் என்பதை இவர்கள் உணர்ந்திருப்பார்களா?

  ReplyDelete
 18. நகைச்சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டது நல்லா இருக்கு. எனக்கு ஏற்பட்ட இதுபோன்ற பல அனுபவங்களை நினைவு படுத்தி மகிழ்ந்து கொண்டேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

  ReplyDelete
 19. அதிகாரியாக பணியாற்றிவிட்டு ஓய்வுபெறும் பலருக்கும், அது எந்த துறையாக இருந்தாலும், அந்த தோரணை (பந்தா என்று குறிப்பிடுவது சரி என்று தோன்றவில்லை) மறைவதற்கு சிறிது காலம் பிடிக்கத்தான் செய்யும். குறிப்பாக அரசு துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு. வங்கிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களிடமும் இதைக் கண்டிருக்கிறேன். குறிப்பாக ஸ்டேட் வங்கியில் கிளை மேலாளராகவோ அல்லது அதற்கு மேலுள்ள அதிகாரிகளாக இருந்தவர்கள் இன்னும் தங்களை வங்கி அதிகாரிகளாகவே பாவிப்பார்கள். வீட்டு வாசலில் ரிட்டையர்ட் அதிகாரி, ஸ்டேட் வங்கி என்று பெயர் பலகையும் இருக்கும். அதில் தவறேதும் இல்லையென்றாலும் அதே அதிகார தோரணையுடன் நடந்துக்கொள்வது சற்று அதிகம்தான்.....

  ReplyDelete
 20. ஐயா வித்தியாசமான பதிவாக இருந்தது. இத்தகவலால்.
  சுவை. ரசித்தேன்.
  இனிய பாராட்டு.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 21. //அவர்கள் ரொம்பவும் கூலாக வாடிக்கையாளர் எந்த கலர் இங்கில் கையெழுத்திட்டாலும் ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள். எனது டெல்லர் நண்பர் பார்த்தார். ஒரு பச்சை இங்க் பேனா வாங்கினார். அங்கு வரும் பெரும்பாலான துப்புரவு தொழிலாளர்கள் சலானை பூர்த்தி செய்ய அவரிடம் பேனா கேட்பது வழக்கம். அவர்களிடம் அவர் அந்த பச்சை இங்க் பேனாவைத்தான் கொடுப்பார். அவர் இருக்கும் வரை துப்புரவு தொழிலாளர்கள் பச்சை இங்கில்தான் கையெழுத்து போட்டனர்.//

  துப்புரவுத் தொழிலாளர்கள் அனைவரையும் ’கெஜடட் ஆபீஸர்’ ஆக்கிய தங்களின் டெல்லர் நண்பரின் செயல் என்னைச் சிரிக்க வைத்தது.

  இது அந்த பணி ஓய்வு பெற்ற கெஜடட் ஆபீஸருக்கும் தெரிய வந்தால் இன்னும் நல்லாயிருக்கும். ;)))))

  ReplyDelete
 22. இப்படித் தான் சிலர் பழைய கதையை பேசிக் கொண்டு அதே போல் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.....

  ReplyDelete
 23. மறுமொழி > Ranjani Narayanan said...
  // 'கடுகு சிறுத்தாலும் காரம் போகாது' என்பார்களே அதுபோல பதவியில் இல்லாவிட்டாலும் பதவியில் இருக்கும்போது காட்டிய பந்தாவை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் மேலதிகாரிகள் இவர்களை இப்படித்தான் நடத்துவார்கள் என்பதை இவர்கள் உணர்ந்திருப்பார்களா? //

  நல்ல கேள்வி. யாரும் அதனை நினைப்பதில்லை. சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 24. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )
  // நகைச்சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டது நல்லா இருக்கு. எனக்கு ஏற்பட்ட இதுபோன்ற பல அனுபவங்களை நினைவு படுத்தி மகிழ்ந்து கொண்டேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.//

  அன்பின் VGK அவர்களின் பாராட்டிற்கு நன்றி! உங்களுக்கு ஏற்பட்ட இதுபோன்ற அனுபவங்களைப் பற்றியும் எழுதவும் (நீங்கள் எழுதிய வழுவட்டை ஞாபகம் வந்தது)

  ReplyDelete
 25. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
  // அதிகாரியாக பணியாற்றிவிட்டு ஓய்வுபெறும் பலருக்கும், அது எந்த துறையாக இருந்தாலும், அந்த தோரணை (பந்தா என்று குறிப்பிடுவது சரி என்று தோன்றவில்லை) மறைவதற்கு சிறிது காலம் பிடிக்கத்தான் செய்யும்.//

  பொதுவாக அவர்கள் தங்களை அவ்வாறு அழைத்துக் கொள்வது ஒரு அடையாளத்திற்காக மட்டுமே. நான் பந்தா என்று குறிப்பிட்டது இந்த மிரட்டும் மீசைக்காரர்களைதான் ( ரிடையர்டு ஆனாலும் பழைய பந்தா போகாது. மீசைக்கு சாயம் ஏற்றிக் கொண்டு மிரட்டலாக தோற்றமளிப்பார்கள் )


  //குறிப்பாக அரசு துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு. வங்கிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களிடமும் இதைக் கண்டிருக்கிறேன். குறிப்பாக ஸ்டேட் வங்கியில் கிளை மேலாளராகவோ அல்லது அதற்கு மேலுள்ள அதிகாரிகளாக இருந்தவர்கள் இன்னும் தங்களை வங்கி அதிகாரிகளாகவே பாவிப்பார்கள். வீட்டு வாசலில் ரிட்டையர்ட் அதிகாரி, ஸ்டேட் வங்கி என்று பெயர் பலகையும் இருக்கும்.//

  பெரும்பாலும் எல்லோரும் ஒரு அடையாளத்திற்காக தங்களது பெயரோடு வகித்த பதவியையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறார்கள்.

  // அதில் தவறேதும் இல்லையென்றாலும் அதே அதிகார தோரணையுடன் நடந்துக்கொள்வது சற்று அதிகம்தான்..... //

  இப்போதெல்லாம் யாரும் அவ்வாறு அதிகார தோரணையுடன் நடந்து கொள்ள விரும்புவதில்லை. காரணம் பிள்ளைகளே கிண்டலடிப்பார்கள்.

  நான் பணிபுரிந்த சமயம் நிகழ்ந்த ஒரு நிகழ்வை நகைச்சுவையாகவே பதிந்தேன். மற்றபடி ஒன்றும் இல்லை. நீங்கள் அந்த பச்சை மை கையெழுத்தைப் பற்றி ஏதாவது சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 26. மறுமொழி > kovaikkavi said...
  // ஐயா வித்தியாசமான பதிவாக இருந்தது. இத்தகவலால்.
  சுவை. ரசித்தேன். இனிய பாராட்டு.//

  சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நீங்களும் கவிதைகள் மட்டுமன்றி உங்கள் அனுபவங்களையும் எழுதவும்.

  ReplyDelete
 27. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )
  // துப்புரவுத் தொழிலாளர்கள் அனைவரையும் ’கெஜடட் ஆபீஸர்’ ஆக்கிய தங்களின் டெல்லர் நண்பரின் செயல் என்னைச் சிரிக்க வைத்தது. //

  அப்போது எங்களுக்கும் சிரிப்பாகத்தான் இருந்தது.

  // இது அந்த பணி ஓய்வு பெற்ற கெஜடட் ஆபீஸருக்கும் தெரிய வந்தால் இன்னும் நல்லாயிருக்கும். ;))))) //

  அவர் ஒரு ரிட்டையர்டு முனிசிபல் கமிஷனர். பின்னர் தெரிந்து கொண்டு இருப்பார்.

  ReplyDelete

 28. மறுமொழி > கோவை2தில்லி said...
  // இப்படித் தான் சிலர் பழைய கதையை பேசிக் கொண்டு அதே போல் நடந்து கொண்டு இருக்கிறார்கள்..... //
  சகோதரியின் அன்பான கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 29. ரசித்தேன்.

  நான் இப்படி முட்டாள்தனமாக நடக்கவில்லை. வேலையிலிருந்து ஓய்வு பெறும்போதே அந்த உத்தியோக தோரணைகளை எல்லாம் அலுவலக வாசலிலேயே கழட்டிப் போட்டுவிட்டுத்தான் வீட்டிற்கு வந்தேன். மறுநாள் முதல் வேலையாக, பென்சன் புஸ்தகத்தைத் தவிர எல்லா ஆபீஸ் சமாசாரங்களையும் பழைய சாமான் கடையில் போட்டேன்.

  பழைய ஆபீசில் பென்சன் செக்ஷனுக்குத் தவிர வேறு எந்த செக்ஷனுக்கும் போவதில்லை என்று முடிவெடுத்தேன். இன்று வரை அப்படியே இருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன்.

  ReplyDelete
 30. மறுமொழி > பழனி. கந்தசாமி said...

  // ரசித்தேன். //

  எனது பதிவினை ரசித்த மூத்த பதிவரான உங்களுக்கு நன்றி!

  // நான் இப்படி முட்டாள்தனமாக நடக்கவில்லை. வேலையிலிருந்து ஓய்வு பெறும்போதே அந்த உத்தியோக தோரணைகளை எல்லாம் அலுவலக வாசலிலேயே கழட்டிப் போட்டுவிட்டுத்தான் வீட்டிற்கு வந்தேன். மறுநாள் முதல் வேலையாக, பென்சன் புஸ்தகத்தைத் தவிர எல்லா ஆபீஸ் சமாசாரங்களையும் பழைய சாமான் கடையில் போட்டேன். //

  தங்கள் பதிவுகளைப் படிக்கும்போதே உங்களுடைய கட்டுப்பாடான உயரிய குணங்களை தெரிந்து கொண்டேன், அய்யா!

  // பழைய ஆபீசில் பென்சன் செக்ஷனுக்குத் தவிர வேறு எந்த செக்ஷனுக்கும் போவதில்லை என்று முடிவெடுத்தேன். இன்று வரை அப்படியே இருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். //

  நானும் உங்களைப் போலத்தான் அய்யா! வங்கியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றதும் நான் பணிபுரிந்த வங்கிக்கோ அல்லது மற்ற கிளைகளுக்கோ அடிக்கடி செல்வது இல்லை. ATM வசதியை பயன்படுத்திக் கொள்வேன். வங்கிக்கு போக நேர்ந்தாலும் மற்றவர்களைப் போல கியூவில்தான் செல்வேன்.

  தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!  ReplyDelete
 31. உவமையும் உதாரணமுமாக ஆரம்பிக்கிறதே என்ன விஷயமாக இருக்கும்னு யோசித்துக்கொண்டே தான் தொடர்ந்தேன் சார். சரியா நினைத்தது போலவே தான்.. ரிட்டையர் ஆனப்பின்பும் மிடுக்கும் , மீசை முறுக்கும் குறையவோ மாறவோ அவசியமில்லை. ஆனால் வயது ஏற ஏற நமக்குள் பக்குவமும் கூட வேண்டும். இன்னமும் இப்படித்தான் இருப்பேன் என்ற வரட்டு பிடிவாதம் நம்மில் இருந்து அடுத்த ஜெனரேஷனை தள்ளி வைத்துவிடும்... பக்குவமான பண்பட்ட மனதுடனான நம் செயல்கள் தான் நம்மை முன்னோக்கி அடியெடுத்து வைக்கவும் உதவும்... அருமையான அனுபவ பகிர்வு சார்.

  ReplyDelete
 32. பதவி ஓய்வு பெற்றவர்களில் பழைய நினைப்போடு வாழ்பவர்கள் பெரும்பாலும் அரசில் உயர் பதவி வகித்தவர்கள்தான். பழைய நினைப்போடு வாழட்டும்.ஆனால் பழைய அதிகாரம் இருப்பதாக நினைத்துக்கொண்டு வாழக்கூடாது.

  பச்சை மசியில் கையொப்பம் இடுவது என்பதே சரியல்ல என்பது எனது கருத்து. பதிவை இரசித்தேன்.

  ReplyDelete
 33. பதவி ஓய்வு பெற்றவர்கள் பணிக்கால நினைவோடு இருப்பதில் தவறில்லை, ஆனால் அதிகாரம் செலுத்துதல் தவறுதானே? பச்சை மை குறித்த ஒரு அரசானை இருக்கின்றது. அருமையான பதிவு நன்றி ஐயா

  ReplyDelete
 34. மறுமொழி > Manjubashini Sampathkumar said...
  // உவமையும் உதாரணமுமாக ஆரம்பிக்கிறதே என்ன விஷயமாக இருக்கும்னு யோசித்துக்கொண்டே தான் தொடர்ந்தேன் சார். சரியா நினைத்தது போலவே தான்.. //

  சகோதரி மஞ்சுபாஷினி சம்பத்குமார் கருத்துரைக்கு நன்றி!


  // ரிட்டையர் ஆனப்பின்பும் மிடுக்கும் , மீசை முறுக்கும் குறையவோ மாறவோ அவசியமில்லை. //

  நீங்கள் சொல்வது சரிதான். பதவியும் பகட்டும் நிரந்தரமானது அல்ல என்பதற்காக மேற்படி உதாரணாங்களைச் சொன்னேன்.

  // ஆனால் வயது ஏற ஏற நமக்குள் பக்குவமும் கூட வேண்டும். இன்னமும் இப்படித்தான் இருப்பேன் என்ற வரட்டு பிடிவாதம் நம்மில் இருந்து அடுத்த ஜெனரேஷனை தள்ளி வைத்துவிடும்... பக்குவமான பண்பட்ட மனதுடனான நம் செயல்கள் தான் நம்மை முன்னோக்கி அடியெடுத்து வைக்கவும் உதவும்... அருமையான அனுபவ பகிர்வு சார். //

  உங்களுடைய ஆழமான கருத்துரைக்கு நன்றி!


  ReplyDelete
 35. மறுமொழி > வே.நடனசபாபதி said...
  // பதவி ஓய்வு பெற்றவர்களில் பழைய நினைப்போடு வாழ்பவர்கள் பெரும்பாலும் அரசில் உயர் பதவி வகித்தவர்கள்தான். பழைய நினைப்போடு வாழட்டும்.ஆனால் பழைய அதிகாரம் இருப்பதாக நினைத்துக்கொண்டு வாழக்கூடாது. //
  அன்பு அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!

  // பச்சை மசியில் கையொப்பம் இடுவது என்பதே சரியல்ல என்பது எனது கருத்து. பதிவை இரசித்தேன்.//

  பச்சை மையில் கையொப்பம் பற்றி தனியாக எழுத்லாம் என்று இருக்கிறேன்.


  ReplyDelete
 36. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
  // பதவி ஓய்வு பெற்றவர்கள் பணிக்கால நினைவோடு இருப்பதில் தவறில்லை, ஆனால் அதிகாரம் செலுத்துதல் தவறுதானே? பச்சை மை குறித்த ஒரு அரசானை இருக்கின்றது. அருமையான பதிவு நன்றி ஐயா //

  சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! பச்சை மை குறித்த அரசாணை இருப்பின் தெரியப்படுத்தினால் நல்லது. மேலும் இங்கு கேள்வி என்னவென்றால் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பொது இடங்களில் பச்சை மையில் கையெழுத்து இடலாமா? என்பதுதான்.


  ReplyDelete
 37. பழைய நினைப்பு, பழைய அனுபவங்கள் என்றுமே இனிமைதான்!! நடைமுறைக்கு சிலர் தன்னை சரிப்படுத்திக்கொன்டாலும் நிறைய பேர் பழைய நினைவுகளில் தான் வாழ்கிறார்கள்.

  படைப்பு மிக அருமை!!

  ReplyDelete
 38. உங்களது விருப்பப்படி நான் ' முதற்பதிவின் சந்தோஷம்' தொடர் பதிவை எழுதியிருக்கிறேன். வந்து படித்துப்பார்த்து அபிப்பிராயம் சொல்வீர்களென்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 39. மறுமொழி > மனோ சாமிநாதன் said... ( 1 )
  // பழைய நினைப்பு, பழைய அனுபவங்கள் என்றுமே இனிமைதான்!! நடைமுறைக்கு சிலர் தன்னை சரிப்படுத்திக்கொன்டாலும் நிறைய பேர் பழைய நினைவுகளில் தான் வாழ்கிறார்கள். படைப்பு மிக அருமை!! //

  சகோதரி மனோ சாமிநாதன் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

  ReplyDelete
 40. மறுமொழி > மனோ சாமிநாதன் said... ( 2 )

  // உங்களது விருப்பப்படி நான் ' முதற்பதிவின் சந்தோஷம்' தொடர் பதிவை எழுதியிருக்கிறேன். வந்து படித்துப்பார்த்து அபிப்பிராயம் சொல்வீர்களென்று நினைக்கிறேன். //

  எங்கள் வீட்டு ” ஜாக்கி “ மறைந்த சோகம், கடந்த பத்து நாட்களாக வலைப்பக்கம் சரியாக வர இயலாத சூழ்நிலை. அதில் உங்களின் பதிவு படிக்க இயலாமல் விட்டுப் போனது. எனவே மன்னிக்கவும். உங்கள் பதிவைப் படித்து கருத்துரையும் தந்து விட்டேன். நினைவூட்டலுக்கு நன்றி!

  ReplyDelete
 41. வணக்கம் ஐயா,

  இன்றைய [15.10.2013] வலைச்சர அறிமுகத்தில் தங்கள் தளத்தினைக்கண்டேன். மிக்க மகிழ்ச்சி கொண்டேன். மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான வாழ்த்துகள், ஐயா.

  அன்புடன் VGK

  ReplyDelete
 42. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
  அன்புள்ள VGK அவர்களின் அன்புக்கு நன்றி!

  ReplyDelete
 43. தங்களது எழுத்து நடை மனம் கவர்கின்றது. பழைய நினைப்பு - சில சமயங்களில் நம்மை மேல் நிலைக்கு உயர்த்துவதும் உண்டு.. ஆனால் - இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்கள் அவர்களுடைய முதிர்ச்சிக்குப் பொருந்தாதவைகளாகத் தென்படுகின்றன.

  ReplyDelete
 44. மறுமொழி > துரை செல்வராஜூ said..

  சகோதரர் துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நான் பணியில் இருந்தபோது நடந்த ஒரு சம்பத்தை வைத்து நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவு இது. குறிப்பிட்ட யாரையும் அல்லது எந்த உத்தியோகத்தையும் நினைத்து எழுதவில்லை.  ReplyDelete
 45. இப்படி நிறைய பேர் இருக்காங்கப்பா. எனக்கு தெரிந்த ஒரு நர்ஸ், ஓய்வு பெற்ற பின் ஓடோடி போய் எல்லோருக்கும் வைத்தியம் பார்ப்பாங்க, சின்ன பிள்ளையா இருந்தப்ப நான் அவங்களை டாக்டர் என்றே நம்பினேன். எங்க ஊருக்குப் பக்கதுல் ஒரு பட்டாளக் காரரும் இப்படித்தான் பச்சை உடுப்பை போட்டுக்கிட்டும், குஸ்தி எல்லாம் பண்ணிக்கிட்டு ஒரே அழிச்சாட்டியம். இந்த பதவி அடையாளத்தை நம்மில் பலர் விடுவதே இல்லை. எங்க முப்பாட்டான் பலரும் சித்தா, மந்திரீகம் படிச்சவங்க ஆனா எங்க தாத்தாவுக்கு அது ஒன்னும் தெரியாது ஆனாலும் நிறைய புக் எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டு ஜோசியம் பார்க்கிறேன், மந்திரம் பண்றேன் மருத்துவம் செய்யுறேன் என சொல்லிக்கிட்டே திரிவாரு! இப்போ எல்லாத்தையும் மூட்டைக் கட்டி விட்டு கிடக்கார். :)

  ReplyDelete
 46. மறுமொழி > விவரணன் நீலவண்ணன் said...

  தம்பி விவரணன் நீலவண்ணன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete