Sunday, 13 January 2013

இலக்கியப் பொங்கல்!


அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல்  நல் வாழ்த்துக்கள்! இலக்கியப் பொங்கலாக சில மேற்கோள் வரிகளைக் கீழே  தந்துள்ளேன்!




பொலிவு பொங்கிடும்
பொங்கற் புதுநாளில்
மகிழ்வு பொங்கிடும். நின்
மனையுளார் அனைவர்க்கும்,
என்வாழ்த்து தனை அதற்குத்
தேனாக்கிக் கலப்பதற்கு
வழங்கி மகிழ்கின்றேன்.
வாழியநீ என்றென்றும்,
வாழ்வும் வளமும் மங்காத
தமிழ் என்பார்!
தமிழ்வாழ நாம் வாழ்வோம்.
அறிவாய் நன்றாய்!
நாம்வாழ் வில்பெறும் இன்பம்
கரும்பாகிடல் வேண்டும்
நாட்டி னோர்க்கு.
'தை' அதனில் காணும் செல்வம்
தமக்கென்றே கொண்டனரோ
உழவர், மேலோர்!!
தாரணிக்கு நாம்அளிக்கச்
செல்வம் காண்போம்.
நல்லறம் இஃதெனக் கண்ட 'நம்பி'
நான் வாழ்த்துகின்றேன், உன்
வெற்றிக்காக!
-         அறிஞர் அண்ணா (திராவிட நாடு - 1963)
-         நன்றி: http://www.annavinpadaippugal.info


பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
என்றுபா டுங்கள்
மன்றிலா டுங்கள்
எங்கள்நா டெங்கள்
அன்புநா டென்று
நன்றுபா டுங்கள்
பொங்கியா டுங்கள்
பொங்கலோ பொங்கல்
பொங்கிற்றுப் பாலே!     
                     - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்  (பொங்கல் வாழ்த்துக் குவியல்)


தமிழ் நாட்டிலே பல சாதிகள் உண்டு; பல சமயங்கள் உண்டு. ஆயினும், ’தமிழர் அனைவருக்கும் பொங்கல் நாள் ஒரு புனித நாள். அந்த நாளில், வீடுதோறும் சுதையின் விளக்கம்; வீதிதோறும் மங்கல முழக்கம்; ‘பொங்கலோ பொங்கல்என்பதே எங்கும் பேச்சு.”
       - டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை , தமிழ் இன்பம், பக்கம்  52                          
 


பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
                                                - கவிஞர் கண்ணதாசன் (படம்: துலாபாரம்)




 





23 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பொங்கல் நல்நாளில் பெரியோர்களின் பொங்கல் பாடல்களைப் பகிர்ந்தது சிறப்பு.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete


  4. உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete

  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. மறுமொழி > கே. பி. ஜனா... said...
    எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களின் வருகைக்கும் பொங்கல் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  7. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said..
    தங்களின் அன்பிற்கு நன்றி! சில நாட்களாக உங்கள் பதிவின் பக்கம் வர இயலவில்லை. மன்னிக்கவும். நீங்கள் சொல்லியபடி மேலே பதிவில் உள்ள புகைப்படத்தில் போட்டோ ஸ்கேப் ( Photo Scape ) மென்பொருளை பயன்படுத்தி எழுதியுள்ளேன். நன்றி1

    ReplyDelete
  8. மறுமொழி > Ranjani Narayanan said..
    சகோதரி திருவரங்கம் ரஞ்சனி நாராயணன் அவர்களின் வாழ்த்திற்கு நன்றி!

    ReplyDelete
  9. மறுமொழி > semmalai akash said...
    சகோதரர் செம்மலை ஆகாஷ் அவர்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > புலவர் சா இராமாநுசம் said...
    புலவர் அய்யாவின் வாழ்த்திற்கு நன்றி!

    ReplyDelete
  11. அருமை அருமை
    எதையும் வித்தியாசமாகவும் அருமையாகவும் செய்வது
    எப்போதும் உங்கள் பாணி.
    பெரியவர்களின் வாழ்த்துக்களுடன்
    பொங்கல் வாழ்த்துச் சொல்லியவிதம் அருமை
    ,
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    subbu rathinam

    ReplyDelete
  13. அன்புள்ள ஐயா, வணக்கம்.

    இனிய பொங்கல் நல் வாழ்த்துகள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  14. இனிய இணைய பொங்கல் வாழ்த்துக்கள்
    அறிஞர்களின் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்தது நன்று.

    ReplyDelete
  15. மறுமொழி > Ramani said... (1,2)
    // எதையும் வித்தியாசமாகவும் அருமையாகவும் செய்வது எப்போதும் உங்கள் பாணி. //
    கவிஞரின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!



    ReplyDelete
  16. மறுமொழி > sury Siva said...
    உங்கள் அன்பிற்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > T.N.MURALIDHARAN said...
    மூங்கில் காற்று முரளீதரன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  18. தமிழ் அறிஞர்களின் பொங்கல் வாழ்த்துகளை தொகுத்துத் தந்தமைக்கு நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. மறுமொழி > வே.நடனசபாபதி said...
    தங்களின் வருகைக்கும் பொங்கல் நல்வாழ்த்திற்கும் நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

    வெளியூர், பொங்கல் என்று அலைச்சல் காரணமாக வலைச்சரம் பக்கம் சரியாக வர முடியவில்லை. எனது பதிவு ஒன்றினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said..
    சகோதரிக்கு நன்றி!.

    ReplyDelete