Saturday, 5 January 2013

தமிழ் மணம்: வலைப்பதிவுகளின் தர வரிசை முதல் நூறு (1 - 100) பட்டியல்((Traffic Rank-2012)அண்மையில் தமிழ்மணம்  திரட்டியில் கடந்த மூன்று மாத காலத்தில் Traffic Rank - இல் இருந்த  பட்டியலில் உள்ள முதல் நூறு பதிவுகளுக்கு மட்டும் அவற்றின் இணையதள முகவரிகளை இணைத்து ஒரே பதிவில் தந்துள்ளேன்.

எனது வலைப் பதிவு 83-ஆவது இடத்தில் வருகிறது. அனைத்து வலைப் பதிவர்களுக்கும் எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு 2013  நல் வாழ்த்துக்கள்!

நன்றி! :தமிழ்மணம்


5.பதிவின் பெயர் : அரசர் குளத்தான்
   Ramani
    பொறுப்பாசிரியர்: சீனா ..... ( Cheena )
     Sara
     வருண்
      DrPKandaswamyPhD
      ராஜி
14.பதிவின் பெயர் : அதிரடி ஹாஜா
      NKS.HAJA MYDEEN
      sasikala
    www.gunathamizh.com
20.பதிவின் பெயர் :  அவர்கள் உண்மைகள்
      மதுரைத் தமிழன்
      kuttan
      கணேஷ்
      www.bloggernanban.com
      Abdul Basith
      அரசன்
      www.jackiesekar.com
      [No Data]
      AROUNA SELVAME
      www.nambalki.com
     Prabu Krishna
36. பதிவின் பெயர் : ஆத்மா(சிட்டுக்குருவி)
      ஆத்மா
     www.anbuthil.com
     ANBUTHIL
     ஒசை.
      http://dindiguldhanabalan.blogspot.com
     Jayadev Das
     தருமி
      www.sangkavi.com
      சங்கவி
      ஜோதிஜி
      Lakshmi
      Jaleela Kamal
      www.bladepedia.com
     சிவா
      www.nanparkal.com
      K.s.s.Rajh
      Reverie
65. பதிவின் பெயர் : பசுமைப் பக்கங்கள்
      அருள்
      G.M Balasubramaniam
      www.vinavu.com
      வினவு!
      ஹேமா
      www.thanimaram.org
74.பதிவின் பெயர் : அதிஷா
      அதிஷா
      www.rvsm.in
      RVS
      Star
78.பதிவின் பெயர் : என் ரசனையில்
79.பதிவின் பெயர் : கடவுளின் கடவுள்
       Philosophy Prabhakaran
     Raj.K
82.பதிவின் பெயர்   வே.மதிமாறன்:

85.பதிவின் பெயர் : நான் வாழும் உலகம்
     Riyas
86..பதிவின் பெயர் : மைந்தனின் மனதில்
      Jeeves
      R.Puratchimani
     Vijayakumar
93.பதிவின் பெயர் : படலை
     www.padalay.com
     ஜேகே
94.பதிவின் பெயர் : மிராவின் கிச்சன்
      ஸாதிகா
     காவிரி மைந்தன்
     ananthu(குறிப்பு: மேலே சொன்ன பதிவுகளை பார்வையிட அவற்றின் இணையதள முகவரிகளை சொடுக்கவும் (CLICK செய்யவும்)
47 comments:

 1. தங்களைப் போன்றோர்களின் தொடர்ந்த
  உற்சாகமூட்டும் பின்னூட்டங்களால்தான்
  முதல் பத்தில் நிலைக்க முடிந்தது
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 2. மறுமொழி > Ramani said... (1, 2)
  கவிஞர் ரமணி அவர்களுக்கும் தமிழ் மணத்திற்கும் நன்றி!

  ReplyDelete

 3. பதிவில் என் பெயரையும் கண்டேன்!நன்றி பொதுவாக நான் இதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை ! வலையில் போடுவதும் இல்லை!

  ReplyDelete
 4. நானும் புலவர் ஐயா அவர்களும் நினைப்பது ஒன்றுதான்

  பதிவில் என் பெயரையும் கண்டேன்!நன்றி பொதுவாக நான் இதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை ! வலையில் போடுவதும் இல்லை!

  ReplyDelete
 5. ஆமாம் இதனால் என்ன பயன் என்று எனக்கும் இதுவரை தெரியவில்லை. ஆனாலும் தங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

  ReplyDelete
 6. மறுமொழி > புலவர் சா இராமாநுசம் said...

  // பொதுவாக நான் இதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை ! வலையில் போடுவதும் இல்லை!//

  புலவர் அய்யாவின் கருத்துக்கு நன்றி! நானும் எனது பதிவின் வரிசை எண் பற்றி கவலைப்படுவது இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட பதிவர்களின் தளங்களை கடந்த இரண்டு நாட்களாக நான் பார்வையிட்டதால் வந்தது இந்த தொகுப்பு.
  ReplyDelete
 7. மறுமொழி > Avargal Unmaigal said...

  தங்கள் வருகைக்கு நன்றி! மேலே புலவர் அய்யாவுக்கு தந்த மறுமொழியையே இங்கும் சொல்லிக் கொள்கிறேன்.

  ReplyDelete
 8. மறுமொழி > Sasi Kala said...
  //ஆமாம் இதனால் என்ன பயன் என்று எனக்கும் இதுவரை தெரியவில்லை.//

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! இதனால் தமிழ்மணத்தில் இணைந்துள்ள அடிக்கடி பதிவை எழுதும் சக பதிவர்களை ஒரே சமயத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 9. தரவரிசை தரத்தின் வரிசையாகாது எனினும், எழுதுவோருக்கு உத்வேகம் கொடுக்கும், நிச்சயம். உங்கள் பதிவூடாகவே எம் தள தரவரிசையையும் கண்டு கொண்டேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்,பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 10. பதிவு எழுதுவோருக்கு பாராட்டுதல்கள் கொடுக்கும் உத்வேகம் சொல்லில் அடங்காது.

  அதைப் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சியும் கிடைக்கும்.
  இதுதான் பலன். இதனால் சந்தோஷம் இல்லை என்று சொல்ல முடியுமா?

  தமிழ்மணம் தள வரிசையில் 1௦௦ க்குள் ஒரு இடம் பிடித்ததற்குப் பாராட்டுக்கள்!

  ReplyDelete
 11. மறுமொழி > இக்பால் செல்வன் said...

  // தரவரிசை தரத்தின் வரிசையாகாது எனினும், எழுதுவோருக்கு உத்வேகம் கொடுக்கும், நிச்சயம். //

  நீங்கள் சொல்வது சரிதான். உதாரணமாக, பலருடைய அபிமானத்திற்குரிய வலைப்பதிவர் சென்னை பித்தன் அவர்கள் நூறாவதாக இருக்கிறார். அவரது தரம் முதல் தரமானது என்பது எல்லோருக்கும் தெரியும். வலைப்பதிவுகளின் தர வரிசை என்பது குறித்து எப்போதுமே விமர்சனம் உண்டு.அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை.

  ReplyDelete
 12. தி.தமிழ் இளங்கோ சார்,

  ஏதோ ஒன்றிலிருந்து நூறு வரைக்கும் நம்பர் போட்டு இருக்கீங்கன்னு மட்டும் புரியுது :-))

  //வலைப்பதிவர் சென்னை பித்தன் அவர்கள் நூறாவதாக இருக்கிறார். அவரது தரம் முதல் தரமானது என்பது எல்லோருக்கும் தெரியும். //

  ஒன்னு பெருசா நூறு பெருசா, ஒரு ரூபா சம்பளமா கொடுத்தா வேலைக்கு வருவாங்களா(அம்மையார் போல எல்லாரும் ஒரு ரூபா சம்பளம் வாங்க ஒத்துக்க மாட்டாங்க), நூறு ரூபா சம்பளமா கொடுத்தா வேலைக்கு வருவாங்களா?

  ஹி..ஹி எனவே நீங்க சொன்னது தான் சரி!

  தமிழ் பண்பாட்டின் படி அனைவருக்கும் வாழ்த்துக்களும் சொல்லிடுவோம்!

  ReplyDelete
 13. மறுமொழி > Ranjani Narayanan said...

  // பதிவு எழுதுவோருக்கு பாராட்டுதல்கள் கொடுக்கும் உத்வேகம் சொல்லில் அடங்காது.அதைப் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சியும் கிடைக்கும்.இதுதான் பலன். இதனால் சந்தோஷம் இல்லை என்று சொல்ல முடியுமா? //

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! பதிவு எழுதுவோருக்கு பாராட்டுக்கள் என்பவை உற்சாகம் தருபவை என்பதில் சந்தேகமே இல்லை.

  ReplyDelete
 14. மறுமொழி > வவ்வால் said...
  வவ்வால் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 15. நன்றி தமிழ்.

  பயனுள்ள செயல்.

  பாராட்டுகள்.

  ReplyDelete
 16. மறுமொழி > பசி பரமசிவம் said...

  கல்வித் துறையில் பணியாற்றும் பசி.பரமசிவம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 17. இதனால என்ன பயன் என்றும், நாளைக்கு நாற்பது தரம் ரேன்க்கை பார்க்கும் ஆள், "இங்க வந்து தான் என் வரிசையே தெரிஞ்சது" என்பதும் கபடமாகவே எனக்குத் தோன்றுகிறது. எல்லோரும் சீ... சீ... இந்த பழம் புளிக்கும் என்று சீன போட்டாலும் ஒவ்வொருத்தர் கண்ணும் இந்த நம்பர்களின் மேல்தான். தாங்கள் வழங்கியதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 18. எனக்கு இப்போது தான் தெரிந்தது. மிக்க நன்றி.

  ReplyDelete
 19. இதை ஒரு அங்கீகாரம் என்றே மனம் ஏற்றுக் கொள்ளவிரும்புகிறது. உற்சாகம் கொடுக்கும் எண்கள்.
  இந்த தர வரிசையை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 20. மறுமொழி > Jayadev Das said...
  சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 21. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
  தங்களின் வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 22. மறுமொழி > வல்லிசிம்ஹன் said...
  // இதை ஒரு அங்கீகாரம் என்றே மனம் ஏற்றுக் கொள்ளவிரும்புகிறது. உற்சாகம் கொடுக்கும் எண்கள்.//

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 23. தர வரிசை பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 24. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!


  ReplyDelete
 25. மறுமொழி > மாதேவி said...
  சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

  ReplyDelete
 26. பதிவர்களின் தர வரிசையை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 27. அனைவருக்கும் வாழ்த்துகள். இது நல்லதொரு பயனுள்ள சேவை. தங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 28. மறுமொழி > வே.நடனசபாபதி said...
  தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 29. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  திரு VGK அவர்களுக்கு நன்றி! நீங்கள் ஏன் உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைப்பதில்லை என்று தெரியவில்லை. இந்த ஆண்டு உங்கள் பதிவுகளை இணைக்கவும். நீங்கள் இந்த ஆண்டு தமிழ் மணத்தில் முதல் இடத்தைப் பெறவேண்டும் என்பது எனது ஆசை. எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 30. // திரு VGK அவர்களுக்கு நன்றி!//

  திரு. தி. தமிழ் இள்ங்கோ ஐயா அவர்களே,

  தங்கள் நன்றிக்கு என் நன்றிகள்.

  //நீங்கள் ஏன் உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைப்பதில்லை என்று தெரியவில்லை.//

  அது தெரியாமல் இருப்பதே நல்லது.

  இது சம்பந்தமாக நான் நிறைய முறை என் பதிவுகளின் பின்னூட்டங்களில், நிறையவே பேசிவிட்டேன்.

  இதோ சமீபத்திய என் பேச்சு [வலைச்சரப் பின்னூட்டத்தில்] என் அருமை நண்பர் திரு. ரியாஸ் அஹ்மது அவர்களுக்காக கொடுத்துள்ளேன்.

  http://blogintamil.blogspot.in/2013/01/2515.html

  >>>>>>>

  ReplyDelete
 31. [2]

  நான் இது சம்பந்தமாக மேலும் பேசினால் பலரின் மனக்கசப்புகளுக்கு ஆளாக நேரிடும்.

  எங்கும் ஊழல் எதிலும் ஊழல் போல இதிலும் உள்ளது ஐயா.

  அதைப் பற்றியெல்லாம் நான் பிறகு தங்களுடன் நேரில் நாம் சந்திக்கும் போது தனியாக பேசுவேன்.

  >>>>>>>>

  ReplyDelete
 32. [3]

  // இந்த ஆண்டு உங்கள் பதிவுகளை இணைக்கவும். //

  மாட்டேன் ஐயா, மாட்டேன். நானாக எதையும் எங்கும் இணைக்கவே மாட்டேன்.

  தேவைப்பட்டால் “தமிழ்மணம் நிர்வாகம்” அவர்களாகவே முன்வந்து இணைத்துக் கொள்ளட்டும்.

  >>>>>>>>

  ReplyDelete
 33. [4]

  //நீங்கள் இந்த ஆண்டு தமிழ் மணத்தில் முதல் இடத்தைப் பெறவேண்டும் என்பது எனது ஆசை. //

  தாங்கள் என் மீதும் என் எழுத்துக்கள் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையினால் இதுபோல ஆசைப்படுகிறீர்கள். அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  ஆனால் எனக்கு அந்த ஆசை ஏதும் இல்லை ஐயா.

  சென்ற ஆண்டு [2011 இல்] எனக்கு சிறப்பானதோர் இடம் அவர்களாகவே முன்வந்து தந்தார்களாம் ஐயா.

  அதாவது தமிழ்மணத்தில் 15th Rank of 2011 out of 100 for the year 2011 என்று சொன்னார்கள்.

  இது நம் அன்புக்குரிய திரு ரமணி சார் சொல்லித்தான் எனக்கே தெரிய வந்தது.

  http://gopu1949.blogspot.in/2011/12/2011.html
  200 ஆவது பதிவு

  “நான் ஏறி வந்த ஏணி தோணி கோணி”

  என்ற என் பதிவினில், திரு ரமணி சாரும் வேறு மூவரும் சேர்ந்து அடுத்தடுத்து ஒரே மாதியாக எழுதியுள்ள பின்னூட்டங்களுக்கு, நான் எழுதியுள்ள என் பதில்களை தயவுசெய்து பாருங்கள், ஐயா.

  கடைசியாகத் தாங்கள் கொடுத்துள்ள தங்கள் பின்னூட்டத்திற்கு மேலே ஒரு 10 பின்னூடங்களுக்கும் அது இருக்கும் ஐயா.

  >>>>>>>>

  ReplyDelete
 34. [5]

  2011ம் ஆண்டில் என்னை ஒரு வாரம் 07.11.2011 முதல் 13.11.2011 வரை தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராகவும் ஆக்கி கெளரவித்தார்கள் ஐயா.

  அந்த ஒரு வாரம் என்னால் கொடுக்கப்பட்ட 28 சிறப்புப்பதிவுகளும் முன்னனியில் வந்ததாகவும், அந்த வார HOT RELEASES களில் எனக்கு FIRST RANK கொடுத்திருந்ததாகவும் பிறர் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன், ஐயா.

  http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html

  இதில் Mr. Philosophy Prabhakaran என்பவரின் பின்னூட்டதையும், அதற்கான என் பதிலையும் தயவுசெய்து படித்துப்பாருங்கள், ஐயா.

  >>>>>>>>

  ReplyDelete
 35. [6]

  2011 நவம்பருக்குப் பிறகு தான், நானே தமிழ்மணத்தில் வோட் அளிப்பது என்றால் என்ன, பிறர் நமக்கு வோட் அளிப்பது என்றால் என்ன? அதனால் நமக்கு என்ன தனிச்சிறப்பு? அதனால் நமக்குக் கிடைக்கும் லாபமோ சந்தோஷங்களோ என்ன என்றெல்லாம் என் நண்பர்கள் சிலரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன் ஐயா.

  அப்போது தான் இதில் நடக்கும் பல்வேறு தில்லுமுல்லுகளும் என் கவனத்திற்கு, என் நண்பர்கள் சிலரால் மின்னஞ்சல் மூலம் கொண்டுவரப்பட்டன, ஐயா.

  >>>>>>>>>

  ReplyDelete
 36. [7]

  நீங்கள் கூட கவனித்திருக்கலாம். சிலரின் பதிவுகள் வெளியிடப்பட்ட, ஒருசில மணித்துளிகளுக்குள், அவர்களுக்கு ஏதும் பின்னூட்டங்களே வராத நிலையிலும், அவர்களுக்கு 7 வோட்டுக்கு மேல் 20 வோட்டுக்கள் வரை வந்து குவிந்து விடும். [உண்மையில் குவிக்கப்படும்.]

  ஏனென்றால் குறைந்தது 7 வோட்டுக்களாவது பெற்றால் அது மிகச்சிறந்த படைப்பாக தமிழ்மணத்தால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விளம்பரப் படுத்தப்படும்.

  உண்மையில் வோட் அளித்த பதிவர் யார்?
  அவரின் வலைத்தளம் எது?
  அவருக்குத் தனியே ஏதும் வலைத்தளம் என்று உள்ளதா?
  அதில் அவர் ஏதேனும் படைப்புகள் இதுவரை வெளியிட்டுள்ளாரா?

  என்ற தகவல்களும் தமிழ்மணத்தால் வெளியிடப் படுமானால், இதில் உள்ள மர்மங்கள் வெளிப்படும் வாய்ப்பு உண்டு.

  >>>>>>>>

  ReplyDelete
 37. [8]

  நானும் நீங்களும் எதைப்பற்றி வேண்டுமானாலும், சுவையாக, தெளிவாக, திறமையாக, பிறர் ரஸிக்கும் படியாக, பின்னூட்டம் இட்டு நம்மை மகிழ்விக்கும் விதமாக, நம்மால் இன்றும் எழுத முடியும்.

  ஆனால் பிறரை வோட் அளிக்கக் கட்டாயப்படுத்தியோ அல்லது நமக்கு நாமே பல வோட்டுக்கள் அளித்துக்கொண்டோ நாம் முன்னனியில் வர வேண்டும் என்று நினைத்து, நம்மால் பிற வழிகளுக்கு [Out of the Way] செல்ல நம் மனம் என்றுமே விரும்பாது, தானே, ஐயா.

  >>>>>>>>

  ReplyDelete
 38. [9]

  மேலும் சிலர், தங்களின் பதிவுகள் மூலமும், தனி மெயில் மூலமும், ”வாருங்கள் கருத்துக்கூறுங்கள், மறக்காமல் வோட் அளியுங்க்ள்” என்று நம்மைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வதையும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  நம்மால் இதுபோலெல்லாம் பிறரைக் கெஞ்ச முடியுமா .... ஐயா?

  நம்மால் கெஞ்சிக்கூத்தாடவும் முடியாது,
  நாமினி பெயரில் வலைப்பதிவுகள் பலவற்றை வைத்துக்கொண்டு, கள்ள வோட்டுப்போடவும் முடியாது அல்லவா!

  >>>>>>>>>

  ReplyDelete
 39. [10]

  இந்த எழுத்துலகத்தில் இது போலெல்லாம் புகழின் உச்சியை அடைய உழைக்கத்தெரிந்தால் மட்டும் போதாது ஐயா ....... பிழைக்கவும் வழி தெரிய வேண்டும்.

  அந்தப்பிழைப்பு நமக்கு வேண்டாம் என்று தான் தமிழ்மணத்திலிருந்தும், இன்ட்லியிலிருந்தும் என்னை நான் 01.01.2012 முதல் விலக்கிக்கொண்டு விட்டேன், ஐயா.

  >>>>>>>>>

  ReplyDelete
 40. [11]

  உலகளவு விளையாட்டுப்போட்டி பந்தயங்களில், முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் வாங்கியும், சிலரை அதன் பிறகு மருத்துவப்பரிசோதனை செய்து, ஊக்க மருந்தும், உற்சாக பானமும் அருந்தி, போதை ஏற்றிக்கொண்டு, தவறான முறையில் தங்கப்பதக்கம் வென்று உள்ளார்
  என்று சொல்லி அதைத்தட்டிப் பறிப்பதும், அவமானப்படுத்துவதும் உண்டல்லவா.

  அதன் பிறகு அவர்களை இதுபோன்ற பந்தயங்களிலேயே கலந்து கொள்ள முடியாதபடி செய்து விடுவதும் உண்டல்லவா.

  அதே போலவே சிலரை தமிழ்மணமும் தண்டித்துள்ளதாகவும் அறிகிறோம், ஐயா.

  சென்ற காலங்களில் முதல் இடம் பெற்ற சிலர் இப்போது சுத்தமாகக் காணாமலே போய் இருக்கிறார்கள், தானே?

  >>>>>>>>>>

  ReplyDelete
 41. [12]

  இன்று தங்களின் இந்தப்பதிவினில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுமே மிகவும் கடுமையாக உழைத்தே தங்கள் இடத்தினை பலத்த போட்டாப் போட்டியில் தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள்.

  அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

  இவர்களில் 80% உழைக்கத்தெரிந்தவர்களாகவும்,
  மீதி 20% பிழைக்கத் தெரிந்தவர்களாகவும் இருக்கக்கூடும் என்பது என் கருத்து.

  தங்கமான இந்தப்பதிவர்களை நிறுத்து எடை போட்டு நமக்குத்தரும் தராசு தான் சரியாக இல்லை;

  அது மிகத்துல்லியமாக எடை காட்டுவது இல்லை,

  அதில் சில LOOP HOLES உள்ளன என்பதே என் ஆதங்கம்.

  >>>>>>>>

  ReplyDelete
 42. [13]

  இத்தகைய LOOP HOLES பல உள்ளதனாலேயே உங்களுக்கு 83 என்ற இடம் இதில் கிடைத்துள்ளது.

  இருப்பினும் நம் எழுத்துக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்து 100 க்குள் வந்துள்ளோமே என நீங்கள் உண்மையிலேயே மகிழ்ந்து கொள்ளலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  101 முதல் 120 க்குள் உள்ள தரமான பதிவர்கள் சிலர், அதாவது இந்த அழகான விமானத்தில் இடம்பெற வாய்ப்பு கிடைக்காமல் செய்யப்பட்ட சிலர், மட்டுமே துரதிஷ்டசாலிகள்.

  அவர்களே உழைக்க மட்டுமே தெரிந்து பிழைக்கத்தெரியாதவர்கள்.

  இது சம்பந்தமாக மேலும் பேச நான் விரும்பாததால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன், ஐயா.

  அன்புடன்
  VGK

  ooooooooo

  ReplyDelete
 43. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  திரு VGK அவர்களுக்கு வணக்கம்!

  //நீங்கள் இந்த ஆண்டு தமிழ் மணத்தில் முதல் இடத்தைப் பெறவேண்டும் என்பது எனது ஆசை//

  என்று எனது சிறிய விருப்பத்தை சொல்லி இருந்தேன். நீங்கள் தந்த நீண்டதொரு பதிலைக் கண்டபிறகு இதில் இவ்வளவு விஷயங்களா என்று ஆச்சரியப்பட்டேன்.

  தமிழ்மணம் ஒரு நல்லெண்ணத்தின் அடிப்படையில் வலைப் பதிவுகளை தரவரிசைப் படுத்துகிறது. இதில் தொழில் நுட்பத்தைப் (LOOP HOLES) பயன்படுத்தி பிரபலமாகும் சில கில்லாடி பதிவர்கள் குறித்து என்ன சொல்வது? தங்கள் பதிலுக்கு நன்றி!


  ReplyDelete
 44. வணக்கம்... இன்றைய வலைச்சரம் மூலம் (http://blogintamil.blogspot.in/2013/02/7.html) இந்தப் பதிவை அறிந்தேன்... தமிழ்மணம் பற்றி சொல்வதென்றால் அதுவும் ஒரு திரட்டி... அவ்வளவே... அதைப்பற்றி சில தகவல்கள், திரு. ரமணி ஐயா சென்னை விழாவில் சந்தித்த போது தான் தெரிந்தது... பிறகு அதைப்பற்றி ஆராய்ந்தால்-அதுவும் ஒரு திரட்டி... அவ்வளவே...

  வலைச்சரத்தில் உங்களிடம் சொன்னது போல் (http://blogintamil.blogspot.in/2013/02/3.html) ஒரு பகிர்வும், நான் கண்ட பட்டியல் பகிர்வும் வரும்... அதில் இதை சம்பந்தப்படுத்தி புரிந்தும் கொள்ளலாம்...

  பட்டியல் உழைப்பிற்கு நன்றி ஐயா... நான் எந்த இடத்தில் உள்ளேன் என்றும் தெரிந்து கொண்டேன்... ஆனால் கொடுத்துள்ள இணைப்பு வேறு தளம் truetamilans உள்ளது... கவனிக்கவும்... நன்றி...

  ReplyDelete
 45. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  மன்னிக்கவும்! தாங்கள் சுட்டி காட்டிய தவற்றினை சரி செய்து உங்கள் வலைத்தள முகவரியையும் இணைத்து விட்டேன். மேலும் குழப்பம் வராமல் இருக்க, இந்த பதிவினையும் மாற்றி எழுதியுள்ளேன். நன்றி!

  ReplyDelete